1. கலைஞர் என்றும் கதிராய் ஒளிர்வார் !– பழ.தமிழாளன் +++ 2. இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 2 +++ 3. தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 342 – 344

16 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Aug 6, 2022, 5:14:22 PM8/6/22
to thiru thoazhamai, தமிழ் மீட்சிப் பாசறை, 119maa27s...@gmail.com, Raghavendra A, Headmaster - MM Higher secondary school, Thirunagar, 40. Anuragam Kalaignaan, ap.a...@gmail.com, ayyanathan k, Balakrishnan Thirugnanam, Bharathy S, sivakumar pandari, Sivakumar P, Chandra Sekar, தமிழ் யாப்பியல் ஆய்வாளர் பேரவை, World Tamil Forum, kavia...@yahoo.co.in, Chandar Subramanian, kalvettu, ymha.vaddukoddai, Kanagu Chandran, manjula.k, mkindu, Mumbai Kumanarasa Lemuriya Publications, lankasri, ne...@tamilwin.com, online...@thehindutamil.co.in, Newsofthe Transtamils, poongundran, kunathogai kunathogai, SENTHIL KUMARAN, Dhinasari, drtami...@gmail.com, Gnanam Magazine - ஞானம், hills...@gmail.com, IE Tamil, Murugesan M., in...@tyouk.org, jeyamohan....@gmail.com, kambane kazhagam, Kanaga Dharshini, Karthikasa...@gmail.com, 156. karu Murugesan, KaviMari Kaviarasan, kavitha directions, Kaviyodai, kovai...@gmail.com, Lakshmi Kumaresan, manaa lakshmanan, me...@tyouk.org, mgayat...@gmail.com, Mu.ilangovan ??.?????????, mullaicharamtamil, nagg...@yahoo.com, Vairamuthu, pandiya raja, puduvaibloggers kuzhu, tamil_ulagam kuzhu, kuzhu, tamilmanram kuzhu, தமிழ் சிறகுகள், thamizh...@googlegroups.com, theyva-thamizh, வல்லமை, pulavar...@gmail.com, puviya...@hindutamil.co.in, r.divyar...@gmail.com, Sarala M.S, Seetha Ramachandran, Arivukkarasu Su, tamizham...@gmail.com, Thakatuur Sampath, thamizhmu...@gmail.com, thi...@journalist.com, vidutha...@gmail.com, vaiyai...@gmail.com, Vijaya Raghavan, riaz66...@gmail.com, vrtami...@gmail.com, பொழிலன், p.kalai...@gmail.com, poova...@gmail.com, pon malar, yuvar...@gmail.com, ldml...@gmail.com, vydh...@yahoo.com, esukur...@gmail.com, drkadavur...@gmail.com, lalithas...@gmail.com, vathi...@gmail.com, josephse...@gmail.com, gganesh....@gmail.com, advocate....@gmail.com, gitasr...@gmail.com, ilakkanat...@gmail.com, mint...@googlegroups.com, thilagav...@gmail.com, shankar...@gmail.com, arunch...@gmail.com, pondhan...@yahoo.com, vaani...@gmail.com, kani...@sansad.nic.in, kanimo...@gmail.com, muraso...@gmail.com, rajeswari...@gmail.com, makizh....@gmail.com

கலைஞர் என்றும் கதிராய் ஒளிர்வார் !– பழ.தமிழாளன்

 அகரமுதல






கலைஞர்   என்றும்  கதிராய்   ஒளிர்வார் !

1.

திருக்குவளை  எனுமூரில்   அஞ்சுகத்தாய்

                  முத்துவேலர்  அன்பால் ஒன்றி

  ஆற்றலுருக்  கொண்டாரை  அருமைந்

            தாய்க்  கலைஞரையே  ஈன்றெடுத்தார்

திருவாகும்  கல்வியினைத் தேடுகையில்

                செந்தமிழிற்    பற்றுக்  கொண்டும்

     ஈரோட்டுப்  பெரியாரின்  ஈடில்லாப்

        பகுத்தறிவின் ஊற்றங் கொண்டும்

பெருமைமிகு  அண்ணாவின் பீடுநிறை

     உணர்வதனைப் பெற்றுக் கொண்டும்

    பைந்தமிழ   நாடதனில்  பாங்குறவே

                    ஐந்துமுறை  முதல்வ  ராகி

இருளடிமைத்  தீவீழ்ந்த  இனமதனை

        எழுகதிராய்  எழவும்  வைத்தோர்

    ஈடிணையும்  இல்லாதே  இசைபூக்க

          ஆண்டவரும்  கலைஞ  ரன்றோ?

2.

ஊற்றெடுக்கும்  எண்ணவழி  ஒண்டமிழர்

                 உலகத்தில் சிறந்தே  ஓங்க

     ஓயாது  பணியாற்றி  உயர்நிலையே

         அடைவதற்கு   வழியுங்  கண்டார்

கூற்றொக்கும் தமிழ்ப்பகையின் கூரழித்

           து  மூலையிலே படுக்க வைத்தார்

    கூன்விழுந்த  தமிழினத்தைக்  கொற்ற

            மதில்  ஏற்றிவைத்து  ஆளச்  செய்தார்

ஆற்றோர  மரம்போன்ற  அரசவாழ்வே

                 அற்றிடினும்  ஊக்கங்  குன்றா

     ஆண்மையுடன் தமிழினத்தை  ஆக்க

          முறச்   செய்வதனைக்  குறியாய்க்    கொண்டார்

வேற்றுநில  ஆட்சியரும்  வியப்புறவே

         தமிழ்நாட்டின்  வளர்ச்சி  கண்டார்

     வேந்துக்கே  வேந்தாகும்  வெல்கலை

            ஞர்க்(கு)  ஒப்பாவோர்  உண்டோ      பாரில்  ?

                 புலவர் பழ.தமிழாளன்,

          இயக்குநர்–பைந்தமிழியக்கம்,

                       திருச்சிராப்பள்ளி.

++

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 2

 அகரமுதல



(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 1 தொடர்ச்சி)

1. மொழியின் சிறப்பு  தொடர்ச்சி

  “அம்மா” என்று, மக்களுடன் நெருங்கிப் பழகும் விலங்குகளாம் பசுவும் எருமையும் ஆடும் கூப்பிடக் காண்கின்றோம். தமிழில்தான் அம்மா எனும் சொல் முழு உருவுடன் ஒலிக்கப்படுகின்றது. ஆதலின் தமிழே இயற்கையை ஒட்டி எழுந்த உலக முதன்மொழியென்று கூறுதல் சாலும்.

  கடலிடையிட்டும் காடிடையிட்டும் மலையிடையிட்டும் வாழ நேர்ந்த காரணத்தால் ஒரு கூட்டத்தினர்க்கும் இன்னொரு கூட்டத்தினர்க்கும் தொடர்பின்றி அவரவர் போக்கில் கருத்தை அறிவிக்கும் மொழியாம் கருவியை உருவாக்கிக் கொண்டனர் மக்கள்.

  பேச்சுமொழியை நிலைக்கச் செய்யவும், பேசுவோர் நேரிலின்றிப் பேச்சைக் கேட்கவும் துணைபுரியப் படைத்துக் கொண்ட எழுத்துமொழி பற்றிப் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன.

  கருத்தை அறிவிப்பதற்கு முதலில் ஓவியங்களை வரைந்தனர் என்றும், அவ்வோவியங்களிலிருந்தே பின்னர் எழுத்துமுறை தோன்றிற்று என்றும் ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். தமிழிலும் கண்ணெழுத்து என்னும் பிரிவு சித்திர எழுத்தையே குறிக்கும் என்பர் சிலர்.

  மெசொபொடாமியாவின் சுமேரியரும் நீல ஆற்றுச் சமவெளி யின் எகிப்தியரும் பண்டைச் சீனர்களும் ஓவிய எழுத்துமுறையை நன்கு வளர்த்தனர். ஆனால் அவர்கள் பயன்படுத்திய கருவிகள் வெவ்வேறு தன்மையன. சுமேரியர்கள் பசுங் களிமண்ணில் முளைபோன்ற கருவிகளைப் பதித்து எழுத்துகளை உருவாக்கினர். ஆதலின் அது முளை வடிவ எழுத்துமுறை என அழைக்கப்பட்டது. எகிப்தியர்கள்  கல்லில் உளிகொண்டு செதுக்கி எழுத்துகளை அமைத்தனர்; அதனைத் திருக்கல் எழுத்துமுறை (Hieroglyph=Sacred Stone) என்றனர். பின்னர்த் துகிலிகையால் பேபிரசு எனப்படும் பொருளில் எழுதத் தொடங்கினர். ஐரோப்பிய நாடுகளில் கல்லிலும் அரக்குப் பாளத்திலும் எழுத்தாணி போன்ற கூரிய கருவியால் எழுதினர். பின்னர் ஆட்டுத் தோலிலும், மரப்பட்டையிலும் பறவை இறகின் அடி முனையால் மைதொட்டு எழுதத் தொடங்கினர். தமிழர்கள் கூரிய முனையுள்ள எழுத்தாணியால் பனையேட்டில் எழுதினர்.

  முதலில் தோன்றிய ஓவிய எழுத்து என்பது பொருளைக் குறிக்க ஓவியம் வரைந்த முறையாகும். ஞாயிற்றைக் குறிக்க ஒரு வட்ட வடிவத்தையும், மதியைக் குறிக்க ஒரு பிறை வடிவத்தையும், மரத்தைக் குறிக்க கிளைகளோடு கூடிய அடி மரத்தையும் வரைந்து காட்டினர். வடிவங்களைப் புலப்படுத்தவே முதலில் வரைந்தனர். பின்னர்ச் செயலைக் குறிப்பதற்கு வடிவம்  வரையத் தலைப்பட்டனர். நடப்பது போன்ற நிலையிலுள்ள மனித வடிவம்  போதலையும், வாயினிடம் உணவு  கொண்டு வரும் கை வடிவம் உண்ணுதலையும் குறிக்குமாறு வரைந்தனர். சீனர்கள் நன்மை யைக் குறிப்பதற்கு ஒரு பெண்ணையும், குழந்தையையும் வரைந்தனர்; கிழக்கைக் குறிப்பதற்கு ஞாயிற்றையும் மரத்தையும் வரைந்தனர். (ஞாயிறு தோன்றுங்கால் மரங்களுக்கு மேலே தோன்றி வரும் என்பதாம்.) சீனர்கள் இம்முறையை மேலும் வளர்த்து ஓவியங்களை மாறி மாறிச்  சேர்த்துக் கருத்துகள் புலப்படுத்துவதில் வெற்றி கண்டனர். இன்னும் இம் முறையை பயன்படுத்துகின்றனர். உருவப் பொருள்களைக் காட்டும் ஓவியங்கள் சிலவற்றை மாறி மாறிச் சேர்ப்பதால் நாற்பதாயிரம் கூட்டெழுத்துகளைப் பெற்றுள்ளனர். இம்முறையால் சீனநாட்டின் பல பகுதிகளில் உள்ள மக்கள் பேச்சுமுறை வேறுபடப் பேசினாலும், வரிவடிவம் ஒன்றாகவே அமைந்துள்ளது. இப்பொழுது நாம் 9 என்று எழுதி ஒன்பது என்று தமிழரும், தொம்மிதி என்று தெலுங்கரும், நவம் என்று வடமொழியாளரும், நவ் என்று இந்தி மொழியினரும், நயின் என்று ஆங்கில மொழியாளரும் கூறுவது போன்று சீனரின் வரிவடிவ மொழியும் ஒலிவடிவ மொழியும் வேறுபட்டுள்ளன. ஒரு பகுதியில் உள்ள சீனர் இன்னொரு பகுதியில் உள்ள சீனர் பேசுவதை விளங்கிக்கொள்ள மாட்டார்; ஆனால் எழுதுவதை அறிந்து கொள்வார்.

  மேல் நாட்டில் எழுத்துமுறை தோன்றி வளர்ந்தது இதனின்றும் வேறுபட்டதாகும். சில காலம் பண்டை மக்கள் ஓவியத்தாலும் ஓவியக்கலப்பு முறையாலும் கருத்துகளை அறிவித்து வந்தனர். எனினும் செமிட்டிக்கு இனத்தவர் ஓவிய அடையாளங்களைக் கருத்துகளைப் புலப்படுத்துவதற்குப் பயன்படுத்தாமல் பேச்சுமொழி ஒலிகளை அறிவிக்கப் பயன்படுத்தினர். இம்முறை எழுத்துமுறையிலேயே ஒரு பெரும் புரட்சியை உண்டு பண்ணிவிட்டது. வீட்டைக் குறிப்பதற்கு முதலில் வீட்டையே எழுதிக் காட்டினர். பின்னர் அவ்வீட்டு வடிவம் வீடு என்னும் பொருளைக் குறிக்காமல் வீடு என்னும் சொல்லின் முதல் ஒலியைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டது. A,B என்னும் ஆங்கில எழுத்துகள் இவ்வாறே பொருளின் வடிவங்களிலிருந்தே தோன்றியனவாம்.  B என்பது எருதின் தலையைக் குறிக்க எழுதப்பட்ட ஒவியத்திலிருந்து  தோன்றியதாகும்.

 எழுத்து முறையானது செமிடிக்கு இனத்தவரிடமிருந்து கிரேக்கரிடம் சென்றது. பின்னர் கிரேக்கரிடமிருந்து உரோமானியரிடம் சென்றது. உரோமானியர் வடிவங்களில் சில மாறுதல்களைச் செய்தும் புதிய வடிவங்களைச் சேர்த்தும் எழுத்துமுறையைச் செம்மைப்படுத்தினர். இன்று மேலைநாட்டார் பயன்படுத்தும் எழுத்துமுறை உரோமானியரால் உண்டுபண்ணப் பட்ட முறைதான் என்பர். ஆனால் அவரவரும் அவரவர்க்கு  வேண்டும் சில வடிவ வேறுபாடுகளைச் செய்து கொண்டுள்ளனர். ஆதலால்தான் பிரெஞ்சு, செருமன், அங்கேரியன் முதலிய மொழிகள் உரோமானிய எழுத்து முறையையே மேற்கொண்டிருந்த போதிலும் வரிவடிவ வேறுபாடுகள் அம்மொழிகளில் நிலவக் காணலாம்.

 பழைய  செமிடிக்கு எழுத்துமுறை வலப் பக்கத்திலிருந்து இப்பக்கத்திற்குச் செல்லும் முறையில் எழுதப்பட்டது. ஈபுரு மொழியும், அராபிய மொழியும் இம்முறையில்தான் இன்றும் எழுதப்படுகின்றன. எழுத்து முறையைப் பண்டைய செமிடிக்கு இனத்தவரிடமிருந்து கடன் பெற்ற பண்டைக் கிரேக்கர்கள் எம்முறையில் எழுதுவது என்று உறுதிப்பாடு கொள்ளாமல் வலமிருந்து இடமும் இடமிருந்து வலமும் மாறிமாறி எழுதி வந்தனர். இம்முறையையே எருது உழும் முறை என்று அழைத்தனர். வயலில் ஏர் உழுங்கால் படைச்சால் மாறிமாறி வருவதை அறிவோம்  அன்றோ?  அப் படைச்சால் போன்று வலப்பக்கமிருந்து இடப்பக்கம் எழுதிச் சென்று பின்னர் அவ்விடப்  பக்கத்திலிருந்து திரும்பி வலப்பக்கம் வந்து, பின்னர் அவ்வலப் பக்கத்திலிருந்தே இடப்பக்கம் செல்லுவது ஆகும். பின்னர் இம்முறையை விட்டு இடது பக்கமிருந்து வலது பக்கம் செல்லும் முறையையே நிலையாகக் கொண்டுவிட்டனர். உரோமானியர்கள் இம்முறையையே ஏற்றுக்கொண்டனர். அவர்களிடமிருந்து ஆங்கிலேயரும் பிறரும் கற்றுக்கொண்டனர்.

 கிரேக்கர்கள் தமக்குரிய வரிவடிவ முறையொன்றையே கொண்டுள்ளனர்; உருசியமும், சிலேவியரும் (Slavic people) கிரேக்கரிடமிருந்தே எழுத்துமுறையைக் கற்றுள்ளனர்.

(தொடரும்)

பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார், பழந்தமிழ்

++

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 342 – 344

 அகரமுதல





(தமிழ்ச்சொல்லாக்கம்: 340 – 341 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 342-344

(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

342. நவநீதகிருட்டிணன் – வெண்ணெய்க்கண்ணன்

இது மகா-ள-ள-சிரீ பிரசங்க வித்துவான் நவநீதகிருட்டிண பாரதியென்றும் கண்ணபுரத்துக் கவுணிய வெண்ணெய்க் கண்ணனார் இயற்றியது.

நூல்      :           சத்திய அரிச்சந்திரப் பா (1916 பக்கம் – 4.

நூலாசிரியர்      :           மதுரை, தல்லாகுளம் சி. முத்திருள முதலியார்.

நூலைப் பரிசோதித்தவர் :           பிரசங்க வித்துவான் நவநீத கிருட்டிண பாரதியார்.

343. தரித்திரம் – நல்கூர்வார்

இலர்பல ராகிய காரணம் நோற்பார்

சிலர்பலர் நோலா தவர் என்னும் இக்குறளைக் கவனியுங்கள். உலகத்தில் செல்வர்கள் சிலராக, நல்கூர்வார் (தரித்திரர்) பலராதற்குக் காரணம் யாதென் றாராய்ந்துழி; அது தவஞ்செய்வார் சிலராகவும் செய்யாதார் பலராதலும் போல வென்றார்.

நூல்      :           தவம் (1917) பக்கம் – 4.

நூலாசிரியர்      :           ச. தா. மூர்த்தி முதலியார் (தமிழ் நாட்டில் தமிழனே ஆளவேண்டும்; தமிழ்க்கொடி பறக்கவேண்டும் என்று முதன்முதல் கவிதை பாடியவர்)

344. களந்தை கிழான்

சைவ சித்தாந்த சமாசத்தின் பன்னிரண்டாவது அண்டுவிழா இச்சமாசத்தின் பன்னிரண்டாவது ஆண்டு நிறை விழா 1917ஆம் வருடம் திசம்பர் ௴ 23, 24, 25ஆம் தேதிகளில் சென்னைக்கடுத்த பிரம்பூர் செம்பியத்தில் அமைத்துள்ள ஓர் நாடகக் கொட்டகையில் கூடி சமாசத்தின் நிருவாக சபை அங்கத்தவரில் ஒருவராய் வெம்பியம் கிராம முனிசீப் சிரீமான் – பண்டிதரத்தினம் புழலை – திருநாவுக்கரசு முதலியாரவர்கள் (Honorary Magistrate) பெரு முயற்சியாய் மிகச் சிறப்பாக நடைபெற்றது. சித்தாந்த சரபம் – அட்டாவதானம் சிவபூ கலியான சுந்தர யதீந்திர சுவாமிகள் அத்திராசனம் வகித்து விழாவை அணிபெற நடத்தினர்.

களந்தை கிழான் (கி. குப்புச்சாமி)

இதழ்   :           சித்தாந்தம் (1918 சனவரி) தொகுதி – 7, பகுதி – 1, பக்கம் – 17,

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்









--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

தேமொழி

unread,
Aug 8, 2022, 1:25:30 AM8/8/22
to மின்தமிழ்
செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம்

ஒளவை நடராசன்
மேனாள் துணைவேந்தர்

தொல்காப்பியப் பூங்கா !

இந்த இதழ் படிக்கும் போது நம் கண்கள் ஈரமாகிறது .

நம் கலைஞர் பெம்மானின் நான்காண்டு நினைவு நம் முன் நிற்கிறது - நம் முதலமைச்சர் உள்ளம் உருகி நெகிழ்ந்து எழுதிய கண்ணீர் மடல் நம்மை நெக்குருகச் செய்கிறது .

நம் இதயத்துடிப்பாக விளங்கி, இயக்கத்தை எப்போதும் வழி நடத்துவதற்கும், தமிழ்நாட்டின்
முன்னேற்றத்திற்கான திட்டங்களை முறையாகச் செயற்படுத்துவதற்கும் முழுப்பேராற்றலாக விளங்கும் நம் உயிர்நிகர் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு ஆகஸ்ட் 7 அன்று நான்காம் ஆண்டு நினைவு நாள்.

நம்மை அவர் விட்டுச் சென்று நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டனவா என நினைத்தபோது இதயம் ஒரு நொடி நின்றுவிட்டது.

 அவரா ? நம்மை விட்டுப் பிரிவதா ? கணப் போதும் அகலாமல், நெஞ்சமெல்லாம் நிறைந்திருந்து, நம்மை உயிர்ப்போடு இயக்கிக் கொண்டிருப்பவரே முத்தமிழறிஞர் கலைஞர் தானே என்று நினைத்ததும், நின்றுபோன இதயம் அடுத்த நொடியிலிருந்து மீண்டும் துடித்தது.

ஆம்... தலைவர் கலைஞர்தான் ஒவ்வொரு நொடியும் நம் நினைவெல்லாம் நிறைந்திருக்கிறார்.

நமக்கு நிழல் தரும் பசுஞ்சோலையாக விரிந்து நிற்கிறார்.

உங்களில் ஒருவனான என் தலைமையிலான நமது ஆட்சியின் மகத்தான சக்தியாக எப்போதும் விளங்குகிறார் .
 
அணுகுவதற்கும் - தொடுவதற்கும் பயந்து விலகிய தொல்காப்பியத்தைப் பூங்காவாகப் படைத்து மெல்லிய தென்றலாகக் காட்சிகளைக் காட்டுவதை இன்று நினைத்தால் நம் நெஞ்சம் பாகாய் உருகுகிறது .

காலவெள்ளத்தால் கரையாது கலங்கரை விளக்கென நிமிர்ந்து நிற்கும் ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியம் என்னும் தமிழிலக்கண நூலுக்கு உரை வரைந்தோர் பலர்; விரிவும் விளக்கமும் தோன்ற அந்நூலை ஆய்ந்தோர் பலர்.

இப்பெருநூலை எளிய கல்வியினரும் விளங்கிக் கொள்ளும்
வகையில் எடுத்துரைக்க இயலுமா ?

இலக்கியச் சுவைகளை எடுத்தியம்புதல் போல் இவ்விலக்கண நூற்கருத்துகளைக் கேளாரும் வேட்ப மொழிதல் கூடுமா ? என்ற வினாக்கள் அறிஞர்களிடையே நிலவின.

மேனிலை வகுப்புகளிற் பாடம் சொல்லலாம். எளியவர்க்குப் படம் போல் எடுத்துக் காட்ட முடியுமா ? ஆய்வு நிகழ்த்தலாம்.

அனைவரையும் தோய்வு கொள்ளுமாறு கூறமுடியுமா என எண்ணி மயங்கியது புலமை
உலகம்.

ஆனால் தொல்காப்பியப் பூங்கா என்னும் இந்த அரிய இலக்கணத் திறனாய்வு வழியாக இவ்வரும் பணியைச் செய்ய முடியும் என்று காட்டியுள்ளார் தமிழவேள் முத்தமிழ் அறிஞர் நம் கலைஞர். '

இதனைப் படிப்பார்க்கு இனி இலக்கணம் வேம்பெனக் கசக்காது: கரும்பு தந்த தீஞ்சாறாய் இனிக்கும்.

 இனி எதிர்காலக் கல்வி உலகம் இலக்கணத்தைக் கலைஞர் போல் எளிமையும் சுவையும் பொருந்த எடுத்துரையுங்கள் ! ' என்று நமக்குக் கூறப் போகிறது.

ஆய்தத்தை நிழல் என்று கூறும் நுட்பம், முப்பது முதல் எழுத்துகளை நினைவிற்கொள்ளும் உத்தியின் அழகு, மெய் உயிரோடும் இயங்கும் பெற்றிக்கான உவமையின் வளம், தமிழ் என்னும் பெயரே இன ஒற்றுமை காட்டுவது என உரைக்கும் நயம், அகத்தெழு வளியிசை பற்றிய கருத்துரைத்தோர் அறிவுசால் தமிழ்ப் பெரியார் என்று காட்டும் புலமைத் திறம், வாணிகப் பேச்சினர் இடமறிந்து எதிர்பாரா முத்தத்தையும் தமிழச்சியின் கத்தியையும் எடுத்தாள்வது காட்டும் நகை நமை, உவமையின் சிறப்பையும் உள்ளுறையின் நுட்பத்தையும் உணர்த்தும் பாங்கு என இந்தத் தொல்காப்பியப் பூங்காவில் கலைஞர் வரைந்த முதற் காட்சியை இனிக் காணலாம் .

தொட்ட இடமெல்லாம் கண்ணில் தட்டுப்படும் பொருட்சிறப்பும் கருத்துப் புலப்பாட்டுத்திறனும் நம் நெஞ்சை அள்ளுமின்றன,

பெரும்புகழ்த் தொல்காப்பியர். ' எழுத்து ' என ஓலையில் தலைப்பு எழுதிவிட்டுச் சிந்தனை உறக்கத்தில் ஆழ்ந்தார்.

அவர் எழுதப்போகும் இலக்கண இலக்கியக் கருவூலத்திற்கான கனவில் மிதக்கத் தொடங்கினார்.

இமைகள் மூடியிருந்தன எனினும், நெடுநேரம் மழை நீரில் ஊறிய நெல்லுக்குள்ளிருந்து அரிசி தலை காட்டுவது போல, வெள்ளை விழிகள் இமைகளின் இடுக்குகளில் ஒளி காட்டிய வண்ணமிருந்தன.

ஏட்டில் பதிந்து உழவு செய்வதற்கு முன்பு கையிலிருந்த எழுத்தாணியைக் காத்திருக்கச் செய்துவிட்டு அவர் இதயத்தில் ஆழ உழுதிடும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

செதுக்கிச் சிலை வடிக்க உளியும், ஓவியம் தீட்டத் தூரிகையும் போல எழுத்துத் தேவையன்றோ நூல் படைக்க !

எல்லா மொழிகளுக்கும் ஒலிதான் மூலம் என்பதாலும், இஃது எழுத்ததிகாரம் என்பதாலும், முதல் நூற்பா எழுத்து எனத் தொடங்குகிறது.

தொல்காப்பியரைப் பின்பற்றித்தான் போலும் அய்யன் வள்ளுவரும் " அகர முதல எழுத்தெல்லாம் " என்று திருக்குறளை எழுத்திலேயே தொடங்கியிருக்கிறார்.

தமிழ் மொழியில் உள்ள பல்லாயிரக்கணக்கான சொற்களை அலசி ஆய்ந்து பார்க்கும் போது, அவையனைத்தும் முப்பது எழுத்தொலியில் அடங்கிடும் என்ற வரம்பு, தொல்காப்பியக் காலத்திற்கு முன்பே வழி வழியாக வந்த ஒன்றாகும்.

அதனால்தான் காப்பியரின் அந்தக் கனவில் ஒலியெழுப்பியவாறு எழுத்துகள் அணிவகுத்து வீறுநடை போட்டு வந்து கொண்டிருந்தன.

ஒவ்வொரு முதலெழுத்தும் அவர் முன் நடந்து வந்து, வணக்கம் தெரிவித்துவிட்டு, வரிசையில் நின்றன.

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள என ஒரு முன் வரிசை அமைந்தது.

 பின் வரிசையில்

 க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற்,ன் ஆகிய எழுத்துகள் அணி வகுத்தன.

அப்போது சுவர் ஓரமாக ஒரு நிழல் தென்பட்டது.

அதைத் தொடர்ந்து இன்னொரு நிழலும் தென்பட்டது.

அந்த இரு நிழல்கள் எழுப்பிய ஒலி சற்றுக் குறுகியதாகக் கேட்டமையால், அந்த வேறுபாட்டை உணர்ந்த தொல்காப்பியர் விழி திறந்து நோக்கினார்.

ஒரு நிழல், என் பெயர் ' இ 'கரம் என்றது !
இன்னொரு நிழல், என் பெயர் ' உ 'கரம் என்றது !

தொல்காப்பியர் அந்த நிழல்களைப் பார்த்து, " நீங்கள் குற்றியலிகரம் குற்றியலுகரம் என்ற வரிசையில்தான் இடம் பெறுவீர்கள்.

 உங்களை முதல் எழுத்துகள் முப்பதன் வரிசையில் வைக்க முடியாது ! " என்று கண்டிப்பாகக் கூறிவிட்டார்.

அப்போது கையில் ஒரு கம்புடன் ஒரு புதுமையான எழுத்துருவம் அங்கே தோன்றி, " இந்த முப்பதோடு என்னை இணைக்க ஒப்புகிறீர்களா ? " என்று கேட்டது.

உடனே தொல்காப்பியர், " என்ன, என்னை மிரட்டுகிறாயா ? நீ ஆயுதமேந்தி ஆய்த எழுத்தாக வந்தால், நான் அஞ்சி நடுங்கி உன்னை முதல் எழுத்துகள் வரிசையில் நிற்க வைத்து விடுவேன் என்ற நினைப்பா ? "

அவரது சீற்றம் உணர்ந்த ஆய்த எழுத்து, " அய்யனே ! என்னைத் தங்கள் விருப்பம் போல் அமர வைக்கலாம்.

முதல் எழுத்து வரிசையில் எனக்கு இடமளிக்காவிடினும், தேவைப்படும் முக்கியமான சமயங்களில் நான் உதவிக்கு வருவேன் ! " என்று அடக்கமாகக் கூறியது , தொல்காப்பியர் கேலியாகச் சிரித்துக்கொண்டே, எழுத்ததிகாரத்தின் முதல் நூற்பாவை எழுதி முடித்துவிட்டு, “ நீ எனக்கு உதவிட வருகிறேன் என்கிறாய்; நல்ல வேடிக்கை ! " என்று புன்னகை புரிந்தவாறு கூறினார்.

" ஆமாம் ! தாங்கள் எழுதிய முதல் நூற்பாவிலேயே எனக்கு இடம் கொடுத்து விட்டார்களோ என் திறமையைப் பார்த்தீர்களா ? ” என்று ஆய்த எழுத்து மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தது.

 தொல்காப்பியர், அவர் எழுதியதைத் திரும்பப் படித்துப் பார்த்தார்.

" எழுத்தெனப் படும்
  அகர முதல் னகர விறுவாய்
  முப்பல் தென்ப
  சார்ந்து வரன் மரபின் மூன்றலங் கடையே "

                                                                      ( எழுத்ததிகாரம் - நூல் மரபு - 1 )

முப்பஃதென்ப ” என்னும் தொடரில் ஆய்த எழுத்து வந்து அமர்ந்து கொண்டதை அவரும் வியப்புடன் நோக்கி நிறைவான மகிழ்ச்சி கொண்டார்.

தமிழ் எழுத்துக்கள் ' அ ' முதல் ' ன இறுதியாக முப்பது எழுத்துகள் எனக் கூறுவர்; சார்பு எழுத்துகளான குறுகிய ஒலியுடைய இகரம் குறுகிய ஒலியுடைய ' உ 'கரம், ஆய்த எழுத்து ஆகிய மூன்றும் இல்லாமல் முப்பது எழுத்துகள்.

" அவை தாம்
  குற்று இயல் இகரம், குற்று இயல் உகரம், ஆய்தம் என்ற முப்பால் புள்ளியும் எழுத்து ஓர் அன்ன ”
                                                                                                                                                                          ( நூற்பா :2 )
அலங்கடை = அல்லாத இடத்து

குறிப்பு மூன்று எழுத்துகள் இல்லாமல் முப்பது எழுத்துகள் தமிழின் முதல் எழுத்துகள் என்பதால், அவ்வாறு விடப்படும் அந்த மூன்று எழுத்துகளைக் குற்றியல் இகரம் என்றும் குற்றியல் உகரம் என்றும் ஆய்த எழுத்து என்றும் இந்த நூற்பா குறிப்பிடுகிறது.

தொடர்புக்கு :
thamiz...@gmail.com
Reply all
Reply to author
Forward
0 new messages