செவ்வேங்கை மரம் (Pterocarpus santalinus)

186 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Apr 12, 2015, 10:33:49 AM4/12/15
to mint...@googlegroups.com, thami...@googlegroups.com, Santhavasantham, housto...@googlegroups.com, tiruva...@googlegroups.com, panb...@googlegroups.com, vallamai
இப்பொழுது செம்மரம் என்று அழைக்கப்படும் மரம் உண்மையில் பார்த்தால்
செவ்வேங்கை மரம். வேங்கை மரங்களில் ஓர் இனம் செவ்வேங்கை.
கருநாடக மாநிலத்தில் செவ்வேங்கை மரம் பற்றிய செய்தி,

வேங்கையும் (Pterocarpus marsupium), செவ்வேங்கையும் மிகுந்த நாடு வேங்கைநாடு (ஆந்திரா):
வேங்கைநாடு vēṅkai-nāṭu , n. < வேங்கை +. The Vēṅgi country, comprising the Godavari and the Kistna districts, ruled by the Cōḻas in the 10th and 11th C.; கோதாவரி கிருஷ்ணா ஜில்லாக்களைச் சேர்ந்ததும் பத்துப்பதினொ ராம் நூற்றாண்டுகளில் சோழமன்னவரால் ஆட்சி செய்யப்பட்டுவந்ததுமான ஓர் நாடு. வேங்கைநாடு மீட்டுக்கொண்டு (Insc.).

ஆந்திரா வெப்ப நாடு. எனவே வெம்மையான வேங்கை மரங்கள் வளர்கின்றன.
வெப்புள் veppuḷ , n. < வெம்பு¹-. Heat; வெம்மை. வெப்புள் விளைந்த வேங்கை (புறநா. 120)

செவ்வேங்கை மரம் (Pterocarpus_santalinus)
செவ்வேங்கை மரத்தில் செய்த செஸ் சின்னங்கள்,


நேமிசந்தனம் - செவ்வேங்கை.
இவ்வகை மரங்கள் சக்கரம் ( = ஆழி. Cf. அறவாழி - தீர்த்தங்கரரின் தருமசக்கரம் - குறள்)
செய்யப் பயன்பட்டிருக்க வேணும். எனவே, நேமிசந்தனம்.

சந்தனப் பெயர் வருதல் சந்தனம் போன்ற நிறத்தை அணுகுவதால்.
சந்தனமும் வேங்கையும் வேமே (நாலடி, 180).
நாலடியில் சந்தனம் என்பது செஞ்சந்தனம் ஆகவும் இருக்கலாம்.

பழங்காலத்திலேயே செவ்வேங்கை சீனாவை அடைந்திருக்க வேண்டும்
- கடல் வழியே. ஏனெனில் உலகத்திலேயே வேங்கைநாட்டிலும், கருநாட்டிலும்,
தமிழக வடவெல்லையிலும் மட்டும் வளரும் செவ்வேங்கை மரத்தில்
செய்த கட்டில்கள், இருக்கைகள் சீனாவில் இன்றும் கிடைக்கிறன.

பல நூறு ஆண்டுகள் எடுத்து மெள்ள வளரும் செவ்வேங்கை மரங்கள்
அழிந்து போகும். மரம் பிழைக்குமானால், நன்கு முற்றிய மரங்கள் இனிக் கிடைக்கா.
இளந்தரமானவையே இந்தியாவில் இனிமேல் கிட்டும்.

நா. கணேசன்

செவ்வேங்கை ((Pterocarpus_santalinus) Furniture:





















































ஈட்டியிலும், செவ்வேங்கையிலும் செய்த ஃபர்னிச்சர் (சீனாவில்):

The rare red sandal wood


Updated: 2011-02-24 14:48

By Si Xiangnan (Chinaculture.org)


Red sandalwood is one of the most valuable timbers in the world. Native to Southeast Asia, red sandal trees are categorized among evergreen mesophanerophytes. The mature red sandal trees are very tall, but scarce. That is because they need several hundred years to grow thick. When the trunks are thick enough, however, they usually get hollow. The red sandal wood takes on a color of purplish brown, and is so dense that any piece of it placed in water will sink immediately. Even in harsh temperatures and humidity, the wood seldom becomes deformed. That is probably because the tree grows very slow, so its texture is very dense. Though the timber is very hard, it is smooth when cut. This character enables exquisite sculptures be made from it.

The rare red sandal wood

The Chinese understanding and use of the red sandal wood can be traced back to the late East Han Dynasty (25-220), but its popularization did not come until the Ming Dynasty (1368-1644). The royalty members of that dynasty valued red sandal wood very much, so they ordered that sandal wood be collected from any possible place for their use. The officials then looked for and cut down red sandal trees extensively at home and abroad. This nearly led to the extinction of mature sandal wood. When time came to the late Ming and early Qing Dynasty (1644-1911), most of the logs and products of red sandalwood around the world had all been stored in China. The extinction of mature wood, resulting from excessive harvesting, makes the red sandal articles priceless today.

The rare red sandal wood

Westerners treasure red sandals even more. Before they came to China, they believed that sandal trees were all slender; but afterwards, they were amazed by the big wares made from this timber. Realizing that all excellent works of red sandal wood were in China, westerners purchased a lot of them and got them shipped back to their countries.

Different Categories of Red Sandal Wood

Generally, people call the sandal trees which have bigger leaves “rosewood” and those with smaller leaves “red sandals”. The latter kind, whose veins are hardly seen, is more precious. Renowned varieties of red sandals include cow-hair sandals, chicken-blood sandals and shining-star sandals.

Cow-hair sandals have a fur-like texture. With fine and curvy veins, they are usually made into furniture.

Chicken-blood sandals are rarely seen, and their rich deep red color is their most impressive characteristic. In the sapwood of this kind, there are usually zebra patterns.

Shining-star sandals are the most valuable of all kinds of sandal woods. The shining stars actually refer to the colloid crystallization of the wood fibers. After polishing, the wood will shine like silk in the sunlight, while its color remains an elegant purple-brown.

How to Identify Good Red Sandal Wood

Firstly, the density of red sandals is greater than water. The wood will sink in the water very quickly.

Also, when cut, the inner wood will be found to be redder than its surface. That is because the outer wood will have a deeper color owing to oxidization.

The rare red sandal wood

Thirdly, if one rubs alcohol on the wood, its color will also turn deeper.

In addition, the carvings need not to be lacquered on. It will bring out its glossiness again after being buffed.

Lastly, little leaf red sandals give off a fragrance of incense.

------------------------------


ஆண்டுக்கு ரூ. 600 கோடி அளவுக்கு கடத்தப்படும் செம்மர கட்டைகள்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper






















ஆந்திராவில் வனப்பகுதியில் 20 தமிழர்கள் இன்று பலியாக காரணமாக இருந்த செம்மரக்கட்டைகளுக்கு இத்தனை கெடுபிடி, மவுசு ஏற்பட காரணம் என்ன? இதன் பின்னணியை பற்றி தெரிந்தால்தான் செம்மரக் கட்டைகளுக்கு சந்தையில் ஏற்பட்டுள்ள மவுசு பற்றியும், இதனை கடத்துவதற்கு ஏராளமான கும்பல்கள் பல்வேறு வழிகளையும் கையாளுவதும் நமக்கு தெரியவரும்.செம்மரம் என்பது வேங்கை மரத்தில் ஒரு பிரிவாகும். இந்த மரம் தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட வனப்பகுதிகளில் ஏராளமாக காணப்படுகிறது. ஒரு வகையில் சிவப்பு சந்தன மரங்கள் என்று அழைக்கப்படும் இந்த மரங்களின் உறுதியும், பளபளப்பும் தேக்கு மரங்களுக்கு இணையானவையாக சொல்லப்படுகிறது. 

கடந்த காலங்களில் சுதந்திரத்திற்கு முன்பு பர்மா, இலங்கை, மியான்மர் போன்ற நாடுகளில் காணப்பட்ட தேக்கு மரங்களுக்கு நல்ல கிராக்கி காணப்பட்டது. பர்மா தேக்கால் செய்யப்பட்டது என்றால் அதனை ஒரு கவுரவமாகவே கருதும் போக்கு இன்றைக்கும் ஆசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் உள்ள பொருட்களுக்கு உள்ளது. அதே போல் தற்போது நவீன காலத்தில் செம்மரக்கட்டைகளுக்கு உலக அளவில் மிகுந்த கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனைக் கொண்டு இசைக்கருவிகள், கைவினைப் பொருட்கள், பாரம்பரிய பொருட்கள் உள்ளிட்டவற்றை சீனா, ஜப்பான், மியான்மர் போன்ற நாடுகளில் செய்யப்படுகின்றன. 

சமீபகாலத்தில் இந்த செம்மரக்கட்டைகள் மிகுந்த வலிமையுடன் மட்டுமின்றி இதன் பளபளப்பு பல நூறு ஆண்டுகளுக்கு குறையாது என்றும் கூறப்படுகிறது. மேலும் அணு உலையில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சை கட்டுப்படுத்தும் தன்மை செம்மரத்திற்கு உண்டு என்பதால் ஜப்பான் நாட்டில் இந்த வகை மரங்களுக்கு பெரிதும் கிராக்கி உள்ளது.  ஆசியாவில் தமிழகம், ஆந்திரா போன்ற ஒரு சில பகுதிகளின் சீதோஷ்ண நிலையில் மட்டுமே இந்த வகை மரங்கள் செழித்து வளர்கின்றன. இவை முழுமையான மரங்களாக மாறுவதற்கு 50 ஆண்டுகள் பிடிக்கும் என்றும் சொல்லப்படுகிறது. எனவே செம்மரங்கள் இப்பகுதிகளின் சிறப்பு வகை தாவரமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பூண்டி ஏரி தொடங்கி ஆந்திரா, கர்நாடக வனப்பகுதிகளில் கடப்பா வரையிலான பகுதிகளில் இந்த செம்மரங்கள் செழித்து வளர்ந்துள்ளன. மிகவும் அடர்ந்த வனப்பகுதிகளில் வளர்ந்துள்ள இந்த செம்மரங்கள் கடந்த ஆண்டுகளில் யாருடைய கண்களுக்கும் தட்டுப்படாமல் காணப்பட்டது.ஆந்திர வனப்பகுதிகளில் நக்சலைட்கள் நடமாட்டம் காரணமாக யாரும் அப்பகுதிக்குள் ஊடுருவ அச்சம் அடைந்திருந்தனர். நக்சலைட்கள் செல்வாக்கு குறைந்த பிறகு தர்மபுரி, கிருஷ்ணகிர், சத்தியமங்கலம், சித்தூர், திருப்பதி உள்ளிட்ட வனப்பகுதிகளில் உள்ள தேக்கு, சந்தன, செம்மரக் கட்டைகள் மட்டுமின்றி வன விலங்குகள் வேட்டைக்கும் கடத்தல்காரர்களுக்கு வழியேற்பட்டது. மேலும் இரு மாநில எல்லை பகுதி என்பதால் எந்த மாநில போலீசாருக்கும் உடனடியாக சென்று நடவடிக்கை எடுக்க முடியாமல் இருக்கும் சூழல் கடத்தல்காரர்களுக்கு மிகவும் வசதியாக போனது. கடந்த 2010ம் ஆண்டு ஆந்திர அரசு நடத்திய என்கவுன்டருக்கு பிறகு இந்த செம்மரங்களுக்கு இருக்கும் கிராக்கி வெளியுலகிற்கு தெரியவந்தது.

தற்போது வெளிநாடுகளில் ஏற்பட்டுள்ள கடுமையான கிராக்கியும் செம்மரக்கட்டைகளை இங்கிருந்து கடத்தி செல்வதற்கு முக்கியமான ஒன்றாக மாற்றியுள்ளது. நன்றாக வலிமை பெற்ற செம்மரங்கள் டன் ஒன்றிற்கு சுமார் ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் போது இவற்றின் விலை இன்னும் எகிறி கோடிகளை தொடுகின்றன. நம் நாட்டில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் இருந்து மரங்களை வெட்டி கடத்துவது சட்டப்படி கிரிமினல் குற்றமாகும். ஆந்திராவில் செல்வாக்கு பெற்ற அரசியல் புள்ளிகள் மற்றும் உயர் மட்ட வனத்துறை அதிகாரிகள் தயவுடன் இந்த கடத்தல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதற்காக இந்த கும்பல்கள் பல்வேறு வழிகளையும் கையாள்கிறார்கள். லாரிகளில் வெளிப்படையாக கடத்தி சென்றால் சிக்கிக் கொள்வோம் என்பதால் கார்களில், வேன்களில் கூட கடத்தி செல்கின்றனர். 

தமிழகத்தில் உள்ள திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி போன்ற பகுதிகளில் உள்ள பின்தங்கிய கிராமங்களில் கூலி வேலைக்கு செல்லும் ஏழை தொழிலாளர்களை இந்த கடத்தல் கும்பல்கள் குறிவைத்து பிடிக்கின்றன.  இங்கு வசிக்கும் மக்களுக்கு, விவசாயமும், மரத்தை வெட்டி விறகாக விற்பதும்தான் தொழில்.  அவர்களிடம் புரோக்கர்கள் மூலம் நைசாக பேசி அதிக கூலி, சாப்பாடு, சென்று வர வாகன வசதி என்று ஆசை வார்த்தை காட்டி அழைத்து செல்கின்றனர்.வாழ்வாதாரத்துக்கு வழியில்லாமல் தவித்த மலைக் கிராம இளைஞர்களை குறிவைக்கத் தொடங்கியது செம்மரக்கட்டை கடத்தல் கும்பல். அதன்படி, சென்னையில் இருந்து செல்லும் ஒரு கும்பல், இளைஞர்களை ஆந்திர மாநில வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று செம்மரங்களை வெட்ட பயன்படுத்துவதாக மலைக் கிராமங்களின் பிரமுகர்கள் கூறுகின்றனர்.

மரம் வெட்டும் இளைஞர்களை, நாள் ஒன்றுக்கு 300 ரூபாய் சம்பளத்தில்15 நாட்களுக்கு கடத்தல் கும்பல் ஒப்பந்தம் செய்கிறது. இதில், முன்பணமாக 5 ஆயிரம் ரூபாய் அந்த இளைஞர்களின் பெற்றோரிடம் வழங்கப்படுகிறது. பின்னர், அந்த இளைஞர்கள், லாரிகள் மூலம் ஆந்திர வனப்பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.இதில் பெரும்பாலான படிப்பறிவு இல்லாத அப்பாவி கிராம மக்கள் புரோக்கர்களின் ஆசை வலையில் விழுகின்றனர். கொஞ்சம் விவரம் தெரிந்த ஆட்கள் இருந்தால் அவர்களுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து பேச விடாமல் செய்து விடுகின்றனர்.

இதனால் இந்த கடத்தல் சம்பவங்களால் ஆந்திராவுக்கு கொண்டு செல்லப்பட்டு இரையானவர்களில் தமிழக தொழிலாளர்கள்தான் ஏராளம். கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 1400க்கும் அதிகமானோர் இது போன்ற செம்மரக்கட்டைகள் கடத்தல் சம்பவங்களில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்கிறது அதிர்ச்சி தகவல்கள்.கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் சுமார் ரூ.500 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை வனத்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இது மொத்தமாக கடத்தப்பட்டதில் வெறும் 20 சதவீதம் என்றால், மொத்த அளவு ரூ.2500 கோடி என கணக்கிடும் போது நம் தலை சுற்றும்.சிறைத்தண்டனை, துப்பாக்கி சூடு, அரசு துறைகளின் கெடுபிடி,  சோதனைச்சாவடி சோதனைகள், கடல் வழி அச்சங்கள் இவை அனைத்தையும் தாண்டி இந்த சிவப்பு தங்கம் எனப்படும் செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவதற்கு முக்கிய காரணம் இதில் கிடைக்கும் கணக்கில் வராத லாபம் மட்டுமே.

ஆந்திராவில் மணல் மாபியா, கிரானைட் மாபியாக்களுக்கு அடுத்தபடியாக இந்த செம்மரக்கட்டைகள்தான் அங்குள்ள அரசியல் புள்ளிகளுக்கு வளம் கொழிக்கும் அட்சயபாத்திரமாகும்.எனவே இவ்வகை மரங்களை கடத்துவதற்கு என்று தனியாக ஒரு சங்கிலி தொடர் கும்பலே செயல்பட்டு வருகிறது. கடத்துவதற்கு ஒரு குழு, வெட்ட ஒரு குழு, விற்பனைக்கு கொண்டு செல்ல ஒரு குழு, ரகசியமாக கடல் வழி ஏற்றுமதிக்கு ஒரு குழு என இவற்றின் நடவடிக்கைகள் மர்மமாகவே தொடரும். ஒன்றுக்கொன்று தொடர்பு இருப்பது போலவே காட்டிக் கொள்வது கிடையாது.

இவ்வாறு வெட்டப்படும் மரங்கள் தோல் தொழிற்சாலைகள் அதிகம் உள்ள ஆம்பூர், வாணியம்பாடி, ராணிபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பதுக்கப்படுகின்றன. இதற்காக அங்குள்ள கிடங்குகளுக்கு சுமார் ரூ.20 ஆயிரத்திற்கும் அதிகமாக வாடகை கொடுக்கப்படுகிறது.பின்னர் இவை லாரிகளில் ரகசியமாக அடுக்கப்பட்டு அவற்றை தோல் பொருட்களை கொண்டு செல்வது போல மூடி வைத்து எடுத்துச் செல்கின்றனர். ஒரு கும்பலில் உள்ள சிலர் சோதனை சாவடிகளை சமாளிக்கும் பின்னர் இவை அனைத்தும் சென்னை துறைமுகத்திற்கு கொண்டு வந்து சேர்க்கப்படுகின்றன. அந்த கும்பலுக்கு பணி அத்துடன் முடிந்துவிடும். பின்னர் மற்றொரு கும்பல் சுங்க இலாகா அதிகாரிகளின் கண்களில் மண்ணை தூவி விட்டும், வெட்டுவதை வெட்டி விட்டும் அப்படியே கப்பலில் ஏற்றுகின்றனர்.

 இந்த கும்பலுக்கு பணி அத்துடன் முடியும். இதே போல் மற்றொரு கும்பல் விசாகபட்டினம் துறைமுகத்தையும், கேரளாவில் உள்ள துறைமுகத்தையும் பயன்படுத்துகின்றனர்.பின்னர் சீனா, மியான்மர், தாய்லாந்து, ஜப்பான் போன்ற நாடுகளில் இருந்து வரும் வெளிநாட்டு தரகர்கள் வசம் இவை சிக்கிக் கொண்டவுடன் நடுக்கடலிலேயே இதன் பேரம் மேலும் அதிகரிக்கும். பின்னர் இவை எங்கெங்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதை இவர்கள் தீர்மானித்து அந்தந்த நாடுகளில் கிராக்கி உள்ள பார்ட்டிகளுக்கு அனுப்பி வைப்பர்.இந்த கும்பலுக்கும் வேலை அத்துடன் முடிந்து விடும். ஏறக்குறைய ஒரு தமிழ் சினிமா பாணியில் சர்வதேச அளவுக்கு கடத்தல் நடைபெறும் ஒரு தொழிலாக செம்மரக்கட்டைகள் வர்த்தகம் சக்கை போடு போடுகின்றன.

இவற்றில் எந்த ஒரு இடத்திலும் பிசிறு நடந்தால் தொழிலை நடத்தி செல்லும் கில்லாடி தொழில் அதிபர்கள் ஆந்திராவில் ஏராளம் பேர் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் அரசியல்வாதிகளின் பின்புலமும், ஆசியும் எப்போதும் உள்ளன. இதனால் இதில் சிக்கி தங்களது உயிர், பொருள், ஆவி வரை இழப்பது தமிழக மரம் வெட்டும் கூலித் தொழிலாளர்கள் மட்டுமே.இவ்வாறு கடத்தல் கும்பல்களின் ஆசை வார்த்தையில் சிக்கிய தமிழக இளைஞர்களுக்கு, தாங்கள் வெட்டுவது செம்மரங்கள் என்பதும், அவை வெளிநாட்டுக்கு கடத்தப்படுகிறது என்பதும் கடைசிவரை தெரிவதில்லை என்கின்றனர் பாதிக்கப்பட்டவர்கள்.

தமிழக கிராம இளைஞர்களின் இந்த அறியாமையை பயன்படுத்திக் கொள்ளும் கடத்தல் கும்பல், கோடிக்கணக்கில் கொள்ளை லாபம் சம்பாதித்துக் கொண்டு இருக்கின்றன. ஆனால், குற்ற வழக்குகளில் சிக்கிக் கொள்ளும் தமிழக இளைஞர்கள், பல ஆண்டுகள் சிறைத்தண்டனைக்கு ஆளாகின்றனர். அதன்படி, கேரளா மற்றும் ஆந்திர மாநிலச் சிறைகளில் சுமார் 2 ஆயிரத்து 500 தமிழக இளைஞர்கள் அடைக்கப்பட்டுள்ளதாக திருவண்ணாமலை, வேலூர் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் பல சம்பவங்களில் வழக்குகளே பதிவு செய்யப்படாமல் ஆந்திர வனப்பகுதிகளில் மாயமான தமிழக இளைஞர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகம் என்றும் அதிர்ச்சி தகவலை இப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் கண்ணீருடன் தெரிவிக்கின்றனர்.இந்த வலைப்பின்னலின் ஒட்டு மொத்த தலைகளையும் பந்தாடி, இந்த பிரச்னைக்கு ஆந்திர, தமிழக அரசுகள் நிரந்தர தீர்வு காண முன்வருமா என்பதே அப்பாவி மக்களின் கேள்வியாக உள்ளது.


தேமொழி

unread,
Apr 13, 2015, 12:48:43 AM4/13/15
to mint...@googlegroups.com
மிக நல்ல பகிர்வு, பல தகவல்கள் அறிந்தேன். நன்றி. 


\\\\\The wood will sink in the water very quickly.\\\\

இன்றுவரை நீரில் மூழ்கும் மரமும் இருக்கிறது என்பது எனக்குத் தெரியாது.



தேவையற்ற தகவல்கள்  வாட்ஸப்பின் வழியாக எளிதில் பரவுகிறது.  

இக்காலத்தில் கைபேசி இல்லாத மனிதர்கள் இல்லை. 

செம்மரம் வெட்டச்  செல்வதால் உயிரிழக்கும் வாய்ப்புள்ளது என்பதை கல்லூரி  மாணவர்கள் அல்லது சமூக ஆர்வலர்கள்  இரண்டு நிமிடம் குறும்படம் போல எடுத்து வாட்ஸ்அப் வழி பரப்பலாம்.

வேறுபல சமூகநல்வழிகாட்டுதல்களையும் குறும்படங்கள் எடுத்து பரப்பலாம்.  ராமலக்ஷமி புகைபிடிப்பதைப் பற்றிய குறும்படம் ஒன்றைப் பகிர்ந்திருந்தார் அது போன்று படங்களை எடுத்து பரப்ப எவ்வளவு நேரம் ஆகும் ?  தொழில்நுட்பம் அனைவர் கைவசத்திலும் இருக்கிறது. 

எல்லாவற்றிற்கும் "புள்ளிராஜாவுக்கு எயிட்ஸ் வருமா?"  என்பது போல அரசு படம் எடுத்துதான் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற   நிலை மாற வேண்டும்.

..... தேமொழி 

Geetha Sambasivam

unread,
Apr 13, 2015, 7:50:49 AM4/13/15
to மின்தமிழ்
மரங்களைப் பதப்படுத்த அவற்றை வெட்டிக் குளங்களில் தான் மூழ்க வைத்திருப்பார்கள் தேமொழி.  தாங்கள் அறியாதிருக்க முடியாது.  பல நாட்கள் ஊறிய மரத்தைத் தான் மரவேலைகள் செய்ய வெட்டுவார்கள். தண்ணீரில் ஊறிய மரம் வெயிலிலும் காய வேண்டும்.  அப்போது தான் தடப் வெப்ப நிலைக்கு ஏற்றவாறு மரத்தில் செய்யப்படும் பொருட்கள் நிலைத்து நிற்கும். உதாரணமாகச் சரியாக ஊறாத, வெயிலில் காயாத மரம் எனில் அதில் செய்யப்பட்ட கதவுகள் காலநிலைக்கு ஏற்ப  மாறுவதால் சரியாகச் சார்த்த முடியாமல் போகும். வெயில் காலத்தில் மாறுபடும்.

N. Ganesan

unread,
Apr 13, 2015, 9:57:15 AM4/13/15
to mint...@googlegroups.com, vallamai, Santhavasantham, housto...@googlegroups.com


On Sunday, April 12, 2015 at 9:48:43 PM UTC-7, தேமொழி wrote:
மிக நல்ல பகிர்வு, பல தகவல்கள் அறிந்தேன். நன்றி. 

நன்றி, தேமொழி. சிவகங்கை என்ற ஊர்ப்பெயர் செவ்வேங்கை என்னும் இம்மரப் பெயரால் ஏற்பட்ட
ஊர்ப்பெயரின் திரிபுதான். 

பூவணம் - ஊரில் செம்மண்ணா? திரு காளைராஜன் அறிவார்.

செவ்வேங்கைக்கு இன்னொரு பழைய பெயர் உதிரவேங்கை. அரிவாள் (அ) பாளைக்கத்தியால்
வெட்டினால் அரத்தம் (> ரக்த) போல் வடியும். இது பிரிட்டிஷ் காலத்தில் நிறைய ஏற்றுமதி ஆன பொருள்.
சென்னைப் பல்கலை அகராதியில் செஞ்சந்தனம் - சந்தனமரவகை என்று போட்டிருக்கிறது.
ஆனால், செஞ்சந்தனம் வேங்கை மரவகை. சந்தன மரக் குடும்பம் வேறு. செவ்வேங்கைக்குச்
சற்றும் தொடர்பில்லை. செவ்வேங்கையின் உதிரப்பால் தரும் பொடியை சந்தனப் பொடி
போல பண்டைத்தமிழர் பயன்படுத்தினர். எனவே, செஞ்சந்தனம். ஆனால் சந்தன மரக் குடும்பம் அல்ல.

வேங்கை ambidextrous like all other big cats என்ற 1905-ஆம் வருஷத்தைய விஞ்ஞான நூல் பார்த்தோமே.
சங்க இலக்கியத்தில் வேங்கை (புலி) - களிறு பொருத காட்சிகள் நிறைய. வெம்மையான நிலங்களில்
(Bezwada or Blazewada என்பர் மேலைநாட்டவர்) விளையும் வேங்கை மரங்களை புலி என நினைத்து
யானை போர் புரியும் காட்சிகள் சங்க இலக்கியத்தில் மிகுதி. இவை அனேகமாக இந்த உதிரவேங்கை
இன மரங்களாக இருக்கும். ஏனெனில் கொம்பில் குத்த, அரத்தம் (> ரத்தம்) வழிய, மேலும் சாய்க்க
என போர் நிகழும். இந்த ரத்தம் வடியும் வேங்கை பின்னர் இலக்கியங்களில் பயன்படுகிறது.
இளங்கோ அடிகள் எழுதிய சிலம்பில் கண்ணகி வேங்கை மர நீழலில் தெய்வாம் ஆக நிற்கிறாள் உலகு தொழ.
கண்ணகி வாழ்க்கையில் கஷ்டப்பட்டவள். உதிரம் ஒழுகும் மரத்தடி நீழலில் நிற்பது பொருத்தந்தானே.
வள்ளியை மயக்க கந்தபுராணத்தில் முருகன் வேங்கை மரமாகிறான். வள்ளியின் அண்ணன்மார்
அம்பு எய்ய வேங்கை மரத்தில் ரத்தம். வள்ளி திகைத்து தழுவுகிறாள். உதிர வேங்கையாய் முருகன்!

பிற பின்!

நா. கணேசன்

Nagarajan Vadivel

unread,
Apr 13, 2015, 10:33:17 AM4/13/15
to மின்தமிழ்
வரலாறு
​ ஆய்வுலகில் தமிழுக்கு மூன்று நிலைகள்
1. சரியான கால அடிப்படையில் இலக்கிய அகழ்வாய்வு கல்வெட்டு செப்புப்பட்டய அடிப்படையில் எழுதப்படும் ஆய்வு.  தரத்தில் உயர்ந்தத்து ஆனால் அதிகம் இல்லை

2. உண்மையும் புனைவும் கலந்து தொன்மையும் கற்பனையும் விரவி வரும் ​
வரலாறுபோன்ற
​ தோற்றமளிக்கும் கட்டுரைகள்.  இணையத்தில் இவையே அதிகம்

3. வரலாற்று நிகழ்வுகளைக் கற்பனைப் பாத்திர்ங்களைப் படைத்து புதினமாக நாடகமாக நடனமாகப் படைத்தல்.  விரைவில் வளரும் தளம்​


மூன்றையும்
​ போட்டுக் குழப்பாமல் மூன்று நிலைகளிலும் கருத்தை வழங்குவதே சிறந்தது
இணையவேள்​


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Apr 13, 2015, 10:49:07 AM4/13/15
to mint...@googlegroups.com


On Monday, April 13, 2015 at 7:33:17 AM UTC-7, இணையவேள் wrote:
வரலாறு
​ ஆய்வுலகில் தமிழுக்கு மூன்று நிலைகள்
1. சரியான கால அடிப்படையில் இலக்கிய அகழ்வாய்வு கல்வெட்டு செப்புப்பட்டய அடிப்படையில் எழுதப்படும் ஆய்வு.  தரத்தில் உயர்ந்தத்து ஆனால் அதிகம் இல்லை

ஆமாம். யாருடைய உதவியும் இல்லாமல் தான் படித்த இந்தியாவின் செம்மொழிகள் இரண்டையும்
ஒப்பிட்டு எழுதிவரும் பேரா. ஜார்ஜ் ஹார்ட் போன்றோர் கட்டுரைகள் ஆய்வுக்கு வலுவூட்டி வருகின்றன.
 
 
2. உண்மையும் புனைவும் கலந்து தொன்மையும் கற்பனையும் விரவி வரும் ​
வரலாறுபோன்ற
​ தோற்றமளிக்கும் கட்டுரைகள்.  இணையத்தில் இவையே அதிகம்

அயோத்திதாசர் சம்ஸ்கிருதம் படித்தவர் என்பன போன்று நாம் படிக்கிறோம். 

3. வரலாற்று நிகழ்வுகளைக் கற்பனைப் பாத்திர்ங்களைப் படைத்து புதினமாக நாடகமாக நடனமாகப் படைத்தல்.  விரைவில் வளரும் தளம்​

யுட்யூப் விடியோக்கள் நீங்கள் அளிப்பதைப் பார்க்கிறேன். இத்துறையில்  வளர்ச்சி பற்றி எழுதுங்கள்.

நா. கணேசன் 


மூன்றையும்
​ போட்டுக் குழப்பாமல் மூன்று நிலைகளிலும் கருத்தை வழங்குவதே சிறந்தது
இணையவேள்​

அப்படி நீங்கள் எழுதியுள்ள  ஆராய்ச்சிக் கட்டுரைகளை படிக்க ஆவல் கொண்டுள்ளேன். 

Nagarajan Vadivel

unread,
Apr 13, 2015, 11:06:00 AM4/13/15
to மின்தமிழ்

2015-04-13 20:19 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

///ஆமாம். யாருடைய உதவியும் இல்லாமல் தான் படித்த இந்தியாவின் செம்மொழிகள் இரண்டையும்
ஒப்பிட்டு எழுதிவரும் பேரா. ஜார்ஜ் ஹார்ட் போன்றோர் கட்டுரைகள் ஆய்வுக்கு வலுவூட்டி வருகின்றன.///

இதைக் கேட்டு சேசாத்திரியார் வாய்பொத்திச் சிரிக்கிறார்.  செம்மொழி என்ன என்று அவர் ராஜம் அம்மையார் சொல்ல தகுதிகளைத் தொகுத்து எழுதினார் என்று சொல்லிவருகிறாரே. எங்க ஊர் முருகன் மட்டுமே தமிழை சுயம்புவாகப் பேசினார் என்று எங்கள் பாட்டி சொல்வதுண்டு இப்ப ஜார்ஜ் பெருமானையும் சேர்த்துக்கொள்வோமாக
அயோத்திதாசர் சம்ஸ்கிருதம் படித்தவர் என்பன போன்று நாம் படிக்கிறோம்.​

இப்போதுதான் அயோத்திதாசர் பற்றி எழுத ஒரு புதியவர் வந்திருக்கிறார் அவர் இந்தக்கேள்விக்குத் தக்க பதில் அளிப்பார்

//அப்படி நீங்கள் எழுதியுள்ள  ஆராய்ச்சிக் கட்டுரைகளை படிக்க ஆவல் கொண்டுள்ளேன்.//

ஆதியில் இருந்தே ஆராய்ச்சி இதழ்கள் பதிப்பதே முதன்மைத் தொழில்.  நான் தமிழ் ஆராய்ச்சியாளன் என்றும் எனக்கு சங்கதம் தெரியும் என்று எவ்வளவு பெரிய கருணையுடன் தொடர்ந்து கூறிவருகிறீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன்.  நான் இந்த இரண்டு துறைகளிலும் ஆய்வு செய்தவன் அல்ல என்பது எனக்கு நன்கு தெரியும்

இணையவேள்

N. Ganesan

unread,
Apr 13, 2015, 11:11:15 AM4/13/15
to mint...@googlegroups.com


On Monday, April 13, 2015 at 8:06:00 AM UTC-7, இணையவேள் wrote:

2015-04-13 20:19 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

///ஆமாம். யாருடைய உதவியும் இல்லாமல் தான் படித்த இந்தியாவின் செம்மொழிகள் இரண்டையும்
ஒப்பிட்டு எழுதிவரும் பேரா. ஜார்ஜ் ஹார்ட் போன்றோர் கட்டுரைகள் ஆய்வுக்கு வலுவூட்டி வருகின்றன.///

இதைக் கேட்டு சேசாத்திரியார் வாய்பொத்திச் சிரிக்கிறார்.  செம்மொழி என்ன என்று அவர் ராஜம் அம்மையார் சொல்ல தகுதிகளைத் தொகுத்து எழுதினார் என்று சொல்லிவருகிறாரே.

சேசாத்திரி எழுதிய மடலை நான் படிக்கவில்லை. அம்மடல் உங்களிடம் இருக்கிறதா?

நா. கணேசன்
 
எங்க ஊர் முருகன் மட்டுமே தமிழை சுயம்புவாகப் பேசினார் என்று எங்கள் பாட்டி சொல்வதுண்டு இப்ப ஜார்ஜ் பெருமானையும் சேர்த்துக்கொள்வோமாக
அயோத்திதாசர் சம்ஸ்கிருதம் படித்தவர் என்பன போன்று நாம் படிக்கிறோம்.​

இப்போதுதான் அயோத்திதாசர் பற்றி எழுத ஒரு புதியவர் வந்திருக்கிறார் அவர் இந்தக்கேள்விக்குத் தக்க பதில் அளிப்பார்

//அப்படி நீங்கள் எழுதியுள்ள  ஆராய்ச்சிக் கட்டுரைகளை படிக்க ஆவல் கொண்டுள்ளேன்.//

ஆதியில் இருந்தே ஆராய்ச்சி இதழ்கள் பதிப்பதே முதன்மைத் தொழில்.  நான் தமிழ் ஆராய்ச்சியாளன் என்றும் எனக்கு சங்கதம் தெரியும் என்று எவ்வளவு பெரிய கருணையுடன் தொடர்ந்து கூறிவருகிறீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன்.  நான் இந்த இரண்டு துறைகளிலும் ஆய்வு செய்தவன் அல்ல என்பது எனக்கு நன்கு தெரியும்.

செம்மொழிகள் அறிந்து எழுதுபவர்கள் ஆராய்ச்சிக் கட்டுரைகளை படிக்கும் மாணவன் நான். என் ஆய்வுக் கட்டுரைகள்
ஆய்வேடுகளில் வெளியாகியுள்ளன.  

புலமை சான்ற உங்கள் ஆராய்ச்சிகளை ஆய்வேட்டுக் கட்டுரைகளில் வெளியானவை தந்தால்
மாணவர்கள் படிப்பார்கள்.

நா. கணேசன்

 

இணையவேள்

N. Ganesan

unread,
Apr 13, 2015, 11:30:57 AM4/13/15
to mint...@googlegroups.com


On Monday, April 13, 2015 at 7:33:17 AM UTC-7, இணையவேள் wrote:
வரலாறு
​ ஆய்வுலகில் தமிழுக்கு மூன்று நிலைகள்
1. சரியான கால அடிப்படையில் இலக்கிய அகழ்வாய்வு கல்வெட்டு செப்புப்பட்டய அடிப்படையில் எழுதப்படும் ஆய்வு.  தரத்தில் உயர்ந்தத்து ஆனால் அதிகம் இல்லை

2. உண்மையும் புனைவும் கலந்து தொன்மையும் கற்பனையும் விரவி வரும் ​
வரலாறுபோன்ற
​ தோற்றமளிக்கும் கட்டுரைகள்.  இணையத்தில் இவையே அதிகம்

3. வரலாற்று நிகழ்வுகளைக் கற்பனைப் பாத்திர்ங்களைப் படைத்து புதினமாக நாடகமாக நடனமாகப் படைத்தல்.  விரைவில் வளரும் தளம்​


மூன்றையும்
​ போட்டுக் குழப்பாமல் மூன்று நிலைகளிலும் கருத்தை வழங்குவதே சிறந்தது
இணையவேள்​

பேராசிரியர் நாகராஜன் ஐயா,

இணையத்தில் சிறப்பான நெறிமுறைகளை தங்களைப் போன்றவர்கள் வகுத்தளிப்பது 
தமிழின் பெருமை. ஜெயகாந்தன் “தமிழையும் படியுங்கள், தமிழுக்கு நல்லது” என
தன் கடைசி இண்டெர்வியூவில் சொல்லிச் சென்றார். நல்ல தமிழில் எழுதி
ஆராய்ச்சிகளுக்கு இளந்தலைமுறையினரை ஆற்றுப்படுத்த உங்களை முன்மாதிரியாய்
வைத்து பல பேராசிரியர்களும் இந்தியா, மற்றும் உலக நாடுகளில் இருந்து
எழுதினால் நன்மை பயக்கும். தற்கால மாணவர்களுக்கு ஓர் உத்வேகம் கிடைக்கும்.

Journal of Tamil Studies ஆய்வேட்டில் செவ்வேங்கை மரம், அதனால் வரும் இடப்பெயர்,
சங்க இலக்கியத்தில் வேங்கை மரம், பிற்காக்லத்தில் கண்ணகி (< கர்ணகீ) நாவலில்
இளங்கோ ஏன் வேங்கை நிழலில் நிற்கச் செய்தார் என்பதற்கான குறிப்பு, முருகன்
வேங்கையாய் நின்றது (கந்தபுராணம்) - பற்றிய செய்திகள் கட்டுரை எழுத முயற்சி இது
மதறாஸ் லெக்ஸிகனில் செஞ்சந்தனம் பற்றி தவறாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது  அதுபற்றி எழுதவே
இவ்விழை தொடங்கினேன். அதற்கு இவ்விழையைப் பயன்படுத்தி செவ்வேங்கை பற்றிய
ஆராய்ச்சி செய்திகளை சொல்லுங்கள். படிக்கக் காத்துள்ளேன். நன்றி பல.

அன்புடன்
நா. கணேசன்

Nagarajan Vadivel

unread,
Apr 13, 2015, 11:41:16 AM4/13/15
to மின்தமிழ்

2015-04-13 21:00 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
அதற்கு இவ்விழையைப் பயன்படுத்தி செவ்வேங்கை பற்றிய
ஆராய்ச்சி செய்திகளை சொல்லுங்கள். படிக்கக் காத்துள்ளேன். நன்றி பல.


செவ்வேங்கை
​ பற்றிய தகவல் கட்டாயம் தருவேன்.  சென்னையில் செவ்வேங்கை மரத்தை ஜப்பானுக்கு நேரடியாக ஏற்றுமதி செய்தவரையும் நிழல் உலகில் அரசியல்வாதிகள் அதிகாரிகள் துணையுடன் மரக்கடத்தல் செய்தவரையும் சந்தித்துள்ளேன்

காடுகள் நிறைந்த ஊரில் பிறந்து காடுகள் நிறைந்த ஊரில் மணம் புரிந்து ​
காடுகள்
​ நிறைந்த நாட்டில் மகள் புலம் பெயர்ந்து வாழ​ நானோர் காட்டான் கட்டாயம் தகவல் தருவேன்​

சென்னைப் பல்கலைக்கழகப் பேராதியில் உள்ள குறைகளை 53 பக்கங்களுக்குமிகாமல் சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு 1953-ல் பாவாணர் எழுதிய கடிதம் பல்கலைக்கழகத்தில் கிடைக்கும்

இணையவேள்

Nagarajan Vadivel

unread,
Apr 13, 2015, 1:07:09 PM4/13/15
to மின்தமிழ்

2015-04-13 21:00 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
செவ்வேங்கை மரம், அதனால் வரும் இடப்பெயர்,
சங்க இலக்கியத்தில் வேங்கை மரம், பிற்காக்லத்தில் கண்ணகி (< கர்ணகீ) நாவலில்
இளங்கோ ஏன் வேங்கை நிழலில் நிற்கச் செய்தார் என்பதற்கான குறிப்பு, முருகன்
வேங்கையாய் நின்றது (கந்தபுராணம்) - பற்றிய செய்திகள் கட்டுரை எழுத முயற்சி

அன்புடை
​ கணேசர் ஐயா
நடிகர் திலகம் அவரின் இளமைக் காலத்தில் வேட்டைப் பிரியர்.  வேட செந்தூர் முத்துமாணிக்கத்துடன் சேர்ந்து அங்கு புலிவேட்டை ஆடுவதுண்டு.  அவர் சுட்டு வீழ்த்திய பெரிய புலியின் பாடம் செய்த உருவம் அவரது வீட்டு வரவேற்பறையில் இருக்கும். அவர் வேட்டையாடிய இடம் சேர நாடு.  சேரர்களின் சின்னம் புலி எனவே சேரநாட்டுக் காடுகளில் செவ்வேங்கை மரம் இருந்திருக்கவேண்டும் புலிகளும் இருந்திருக்க வேண்டும்.  கண்ணகி வேங்கை மர நிழலில் நின்றது முருகன் வேங்கைமரமாக நின்றது எல்லாம் சேர நாட்டின் கொங்குப்பகுதியில் அல்லவா?

இணையவேள்

Oru Arizonan

unread,
Apr 13, 2015, 1:19:35 PM4/13/15
to mintamil
//சேரர்களின் சின்னம் புலி //

வில்-அம்பு என்று நான் கேள்விப்பட்டது தவறா?

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

Tthamizth Tthenee

unread,
Apr 13, 2015, 1:29:59 PM4/13/15
to mint...@googlegroups.com
புலிக்கொடி   சோழர்களுடையதல்லவோ

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net



Tthamizth Tthenee

unread,
Apr 13, 2015, 1:32:03 PM4/13/15
to mint...@googlegroups.com
புலிக்கொடி   சோழர்களுடையதல்லவோ

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net




2015-04-13 10:19 GMT-07:00 Oru Arizonan <oruar...@gmail.com>:

Nagarajan Vadivel

unread,
Apr 13, 2015, 1:42:13 PM4/13/15
to மின்தமிழ்
குழப்பத்துடன் பின்னூட்டம் இட்டுவிட்டேன். 

காடுறை உலகம் என்பது குறிஞ்சியும் முல்லையும் சேர்ந்ததா அல்லது மருதமும் முல்லையும் சேர்ந்ததா என்ற குழப்பத்தில் எழுந்தது

இணையவேள்

Dev Raj

unread,
Apr 13, 2015, 1:42:46 PM4/13/15
to mint...@googlegroups.com
On Monday, 13 April 2015 06:57:15 UTC-7, N. Ganesan wrote:
......சிவகங்கை என்ற ஊர்ப்பெயர் செவ்வேங்கை என்னும் இம்மரப் பெயரால் ஏற்பட்ட
ஊர்ப்பெயரின் திரிபுதான். 
 

செவ்வேங்கை மரத்தை இலக்கியம் சொல்கிறதா ?
புத்துருவாக்கப் பெயரா ?
இலக்கியத்தில் இருக்கும் பெயர் எனில்
எந்த இலக்கியம் செவ்வேங்கை மரத்தைச் சொல்கிறது ?


தேவ்

N. Ganesan

unread,
Apr 13, 2015, 2:32:26 PM4/13/15
to mint...@googlegroups.com, vallamai, housto...@googlegroups.com


On Monday, April 13, 2015 at 10:32:03 AM UTC-7, தமிழ்த்தேனீ wrote:
புலிக்கொடி   சோழர்களுடையதல்லவோ

அன்புடன்
தமிழ்த்தேனீ


ஆம், தமிழ்த் தேனீ ஐயா அவர்களே. முனைவர் இரா. கிருஷ்ணமூர்த்தி சிந்து சமவெளியின் விடங்கர்-கொற்றி வழிபாடு தமிழகம் சங்ககாலம் வந்தடைந்தது பற்றிய ஆராய்ச்சிச் சொற்பொழிவுக்கு வந்திருந்தார்.அவர் தான் சங்க காலம் காட்டும் கிரேக்க, ரோமானிய நாணயங்களை வெளியிட்டு சங்கப் பழமையை நிலைநிறுத்தினவர். ஹெர்மன் டீக்கன் என்பவர் சங்ககாலம் 9-ஆம் நூற்றாண்டு என எழுதிவருவது ஆதாரம் இல்லை என சங்கக் காசுகளை வைத்தே காட்டினவர். அவரிடம் சங்கச் சோழர் நாணன்யங்கள் பல உள்ளன. எல்லாவற்றிலும் சோழர் சின்னம் புலிதான்.

In the important Peruvazhuti coins of earliest Sangam period Madurai kings, the Makara viDangar worship is shown. wrote an article on that subject in Vallamai and OmSakthi Deepavali Malar. can write in JTS, IJDL, ....
http://nganesan.blogspot.com/2013/10/pandya-peruvazuti-coin.html

N. Ganesan
http://nganesan.blogspot.com/2013/10/pandya-peruvazuti-coin.html
 

N. Ganesan

unread,
Apr 13, 2015, 8:22:41 PM4/13/15
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, housto...@googlegroups.com
செவ்வேங்கை (அ) உதிரவேங்கை வெட்டு, கொலை பற்றி செய்திகள் பார்க்கிறோம்.

செம்மரக் கடத்தலின் பின்னணி http://www.bbc.co.uk/tamil/india/2015/04/150412_redwoodpkg

ஆழிநாதன் - ஈழத்தில் செய்தி:

ரத்தம் சிந்த வைக்கும் செம்மரம்


திருப்பதியிலிருந்து கடல் தாண்டும் செம்மரங்கள்- ஜப்பான், சீனா, மலேசியா, சிங்கப்பூருக்கு ஏற்றுமதி

http://tamil.thehindu.com/india/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF/article6042448.ece

வயாகராவுக்கு பயன்படும் செம்மரங்கள்

(உதிரம் கேட்கும் உதிரவேங்கை!)
4 ஆண்டுகளில் 1400 பேர் சாவு... மனிதப் பலி கேட்கும் செம்மரக்காடு!

அப்படியென்ன இருக்கிறது செம்மரத்தில்?

செம்மரம் கடத்தல் நடப்பது எப்படி? 

India orders investigation into red sandalwood killings


Why India's 'fake encounters' are shockingly common

Reply all
Reply to author
Forward
0 new messages