தமிழில் கலைச்சொற்கள் உருவாக்கும் முயற்சிகள்

13 views
Skip to first unread message

தேமொழி

unread,
Jan 22, 2026, 5:45:30 PM (4 days ago) Jan 22
to மின்தமிழ்

kalaichol.jpg
கலைச்சொற்கள் உருவாக்கும் முயற்சிகள் குறித்து  மலையாள வழக்கத்தையும் தமிழ் வழக்கத்தையும் ஒப்பிடுகிறார் தோழர்  ஒருவர். உரை மலையாளத்தில் . . . 

தேமொழி

unread,
Jan 22, 2026, 5:49:44 PM (4 days ago) Jan 22
to மின்தமிழ்

manavi.jpg
அறிவியல் தமிழ்த் தந்தை - மணவை முஸ்தபா

உலகின் பல இளைய மொழிகள் தங்களுக்குத் தேவைப்படும் சொற்களை அவ்வப்போது மொழியியலறிஞர்களின் குழு அமைத்து புதிய சொற்களை உருவாக்கிக் கொள்கிறார்கள். ஆனால் பல்லாயிரமாண்டு பழமையான மொழியான தமிழுக்கு அப்படியொரு தேவையில்லை.

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி' திட்டத்தின்படி, தமிழ் மொழியில் சுமார் 6,00,000 (6 லட்சம்) சொற்கள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட தமிழ்ப் பேரகராதியில் (Tamil Lexicon) சுமார் 1,24,405 சொற்கள் பதிவாகியுள்ளன. தமிழின் தனித்தன்மையே அதுவொரு ஒட்டுநிலை மொழி என்பதால், ஒரு வேர்ச்சொல்லிலிருந்து பல புதிய சொற்களை உருவாக்க முடியும். இதனால் தமிழின் சொல் வளம் முடிவில்லாதது. இதிலொரு வேதனை தமிழிலிருந்து சொற்களைக் கடன் பெற்றவர்கள் தமிழ் உச்சரிப்பிலில்லாத எழுத்துக்களை உள்ளீடு செய்து புதிய சொற்களை உருவாக்கிக்கொண்டதால் நாமே சிலவற்றை வடமொழிச்சொல் எனக்கூறிக்கொண்டிருக்கும் அவலமும் இருக்கிறது.

இந்தியை தூக்கிப்பிடிக்கும் வடக்கத்தியர்களும் மொழிவெறிக்கு பெயர் போன சில கன்னட அரசியல்வாதிகளும் கூட Phone, Computer, TV, Police போன்ற ஆங்கிலச் சொற்களை அதனதன் பயன்பாட்டிற்கு அப்படியே பேசவும் எழுதவும் செய்வார்களே தவிர அவற்றுக்கான தங்கள் மொழிச் சொல்லினை உருவாக்கமாட்டார்கள். இந்தியாவில் மட்டுமல்ல உலகளவிலும் கூட தமிழ் போல
Technical Terminology எனப்படும்
கலைச்சொல்லுருவாக்கும் முறைமைகள் பல நாட்டு மொழிகளுக்குக் கிடையாது.

WhatsApp, Facebook, YouTube போன்ற இணையவழி தொடர்பான சொற்களுக்கும் தமிழ்ப்படுத்தப்பட்ட சொற்களை உருவாக்கப்பட்டுள்ளது தமிழில் மட்டும் தான். அதனை ஆங்கிலத்தில் Neologism - புதிய சொல்லுருவாக்கம் என்பார்கள்.
தமிழ்நாட்டில் நியோலாஜிஸத்தின் தந்தை என்றால் அது மணவை முஸ்தபா அவர்களாகத்தான் இருக்கமுடியும்.

மணவை முஸ்தபா அவர்களின் பூர்வீகம் திண்டுக்கல் என்றாலும் அவர் பிறந்தது மணப்பாறை அடுத்த இளங்காகுறிச்சி எனும் சிற்றூர் ஆகும். பள்ளிப்படிப்பினை முடித்தபிறகு திருச்சி ஜமால் முகமது கல்லூரியிலும் பின்னர் அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும் பட்டப்படிப்புகளை முடித்துள்ளார். எழுத்து ஊடகம், பத்திரிகை துறை, எழுத்தாளர், சினிமா தணிக்கை ஆய்வாளர், யுனெஸ்கோவின் கூரியர் பத்திரிகையின் தமிழ் பதிப்பிற்கான ஆசிரியர், தென்னிந்திய மொழிகள் புத்தக டிரஸ்ட்டில் தலைமை மேலாளராக நாற்பது வருடப்பணி என பல இடங்களில் பணியாற்றியுள்ளார்.

தமிழ் மீதிருந்த தீராப்பற்றால் மணவை முஸ்தபா அவர்கள் சுமார் பத்து லட்சத்திற்கும்
மேற்பட்ட புதிய கலைச்சொற்களை உருவாக்கிய பெருமைக்குரியவர். மருத்துவம், பொறியியல், கணினி என எட்டு துறைகளுக்காகத் தனித்தனியான கலைச்சொல் அகராதிகளை அவர் வெளியிட்டுள்ளார்.

அவர் 'அறிவியல் தமிழ்' என்ற கருத்தாக்கத்தை வலுப்படுத்தினார். மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம், கணினிக் கலைச்சொல் களஞ்சியம் போன்றவை அவரது மிகச்சிறந்த படைப்புகளாகும். ஒரு எழுத்தாளராக 31 புத்தகங்களும், ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்த ஏழு நூல்களும், மலையாளத்திலிருந்து தமிழுக்கு மூன்று நூல்களும், சிறுகதைகள், காசிம் புலவர் திருப்புகழ் உள்ளிட்ட மூன்று இதர நூல்களும் எழுதி தனது 81 வயது வரை தமிழுக்காகவே வாழ்ந்தவர்.

கலைஞரின் ஆட்சிக் காலத்தில், மணவை முஸ்தபாவின் அறிவியல் தமிழ்ப் பணிகளைப் பாராட்டி அவருக்கு 'திரு. வி. க. விருது' (1989) உள்ளிட்ட மாநில அரசு விருதுகள் வழங்கப்பட்டன. அறிவியல் தமிழ் வளர்ச்சிப் பணிக்காக அவருக்கு 1985 ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருது வழங்கப்பட்டது. தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தேவையான 11 தகுதிகளைப் பட்டியலிட்டு கலைஞரிடம் வழங்கியவர் மணவை முஸ்தபா. இதனை கலைஞர் அவர்கள் பல மேடைகளில் நன்றியுடன் நினைவு கூர்ந்துள்ளார்.

அறிவியல் தமிழ் அறிஞர் மணவை முஸ்தபா அவர்களின் தமிழ் தொண்டினைப் பாராட்டி முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் , 2010 ஆம் ஆண்டு மார்ச் 31 அன்று, மணவை முஸ்தபா எழுதிய அனைத்துப் படைப்புகளையும் தமிழக அரசு நாட்டுடைமை ஆக்குவதாக அறிவித்தார். அவரது நூல்களை நாட்டுடைமை ஆக்கியதற்காக தமிழக அரசின் சார்பில் 10 லட்ச ரூபாய் இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டது. அறிவியல் தமிழ்த் தந்தை மணவை முஸ்தபா
என்று கலைஞரால் பெரிதும் மதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மணவை முஸ்தபா அவர்களின் பிறந்த நாளான ஜூன் 15 ஆம் நாளினை தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாவட்ட அளவில் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சி, செய்தித்துறை அமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார். அவர் வாங்கிய விருதுகளை பட்டியலிட்டால் இங்கே படிப்பவர்கள் களைத்துப்போவார்கள்.

மணவை முஸ்தபா அவர்களால் உருவாக்கப்பட்ட அகராதிகளின் தொகுப்புகளை தமிழக அரசின் அதிகாரப்பூர்வத் தளமான செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் இணையதளத்தைப் பார்க்கலாம். இந்த இணையம் மணவை முஸ்தபா போன்ற அறிஞர்கள் காட்டிய வழியில் தற்காலப் புதுச் சொற்களைத் தொகுத்து வருகிறது.

இந்தியாவிலேயே புதிய சொல்லுருவாக்கம் மற்றும் அறிவியல் தமிழ்ச் சொல்லுருவாக்கம் செய்யும் துறை தமிழ்நாட்டில் தமிழ்மொழிக்கு மட்டுமே உள்ளது என்பதையும் நாம் இங்கே தெரிந்துகொள்ள வேண்டும்.
Reply all
Reply to author
Forward
0 new messages