It is human to err - தவறு இழைப்பது மனித இயல்பு

17 views
Skip to first unread message

Pandiyaraja

unread,
Jul 25, 2024, 3:45:34 AM (2 days ago) Jul 25
to மின்தமிழ்
சில மாதங்களுக்கு முன்னர், அன்பர் ஒருவர் திருக்குறள் தொடரடைவுப் பகுதியில் ஒரு பிழைi இருப்பதாகச் சுட்டிக்காட்டியிருந்தார்.

அது : குறளில் 92-ஆம் அதிகாரம் 3-ஆவது குறளில் பொய்மை என்ற சொல் இருக்கிறது. அது பொய்ம்மை என்று இருக்கவேண்டும்

 நான் தொடரடைவுகள் உருவாக்கி முடித்த புத்தகங்கள் எல்லாம் அலமாரியை அடைத்துக்கொண்டு இருந்ததால், அவற்றில் பெரும்பகுதியை மதுரைக்கு எடுத்துச்சென்றுவிட்டேன்.

எனவே இப்பொழுது சென்னையில் கைவசம் இருக்கும்  திருக்குறள் தெளிவுரையில் (ஐயா தமிழண்ணல் அவர்கள் எழுதியது - அவரே எனக்குத் தன் கையெழுத்துடன் அன்பளிப்பாக அளித்தது - 16-06-2009)
சரிபார்த்தேன். அதில் பொய்ம்மை என்றே இருந்தது. எனவே அதனைத் திருத்தி, தொடரடைவிலும் தேவையான மாற்றங்களைச் செய்தேன்.

அப்புறம் வந்தது இந்த ஐயம். இதைப் போல் வேறு பிழைகள் இருக்கலாம் அல்லவா!

எனவே திருக்குறள் முழுவதையும் ஆராயும் பணியில் ஈடுபட்டேன்.  நான் எதிர்பார்த்தது போலவே சில பிழைகள் இருந்தன. சொற்பிரிப்புகளிலும் சில மாற்றங்கள் தேவைப்பட்டன.

 முதலில் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, திருக்குறள் முதல் அடி வழியாக அந்தக் குறளைக் காணும் ’குறள் - தேடல்’ பகுதியையும் உருவாக்கினேன்.

திருக்குறள் முழுவதையும் சரிபார்த்த பின்னர், திருத்தப்பட்ட நூலுக்குத் தொடரடைவு உருவாக்கியுள்ளேன்.

நீங்கள் இப்போது காண்பது புதிய - திருத்தப்பட்ட - தொடரடைவு.

காணும் இடம் - tamilconcordance.in

நன்றி,

ப.பாண்டியராஜா
Reply all
Reply to author
Forward
0 new messages