அவியல் - நாள் நல்ல நாள்

1,617 views
Skip to first unread message

V, Dhivakar

unread,
Feb 14, 2009, 3:47:46 AM2/14/09
to minT...@googlegroups.com
நம் வைரம் சரியான நாளைத் தேர்ந்தெடுத்து சரியான கவிதையைத்தான் போட்டிருக்கிறார். சபாஷ்!

http://karkanirka.wordpress.com/2009/02/14/patinathar_2

திவாகர்

Kannan Natarajan

unread,
Aug 9, 2009, 3:29:56 AM8/9/09
to minT...@googlegroups.com
கம்பன் அடிப்பொடியின் நூற்றாண்டு விழாவை ஒட்டி கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட "கம்பன் அடிப்பொடி" கலைக்களஞ்சியம் என்கிற புத்தகத்தை உமா பதிப்பகம் லெட்சுமணன், நான் நெய்வேலி புத்தகக் கண்காட்சிக்குச் சென்றபோது பரிசாக அளித்தார்.

இப்போது ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில் நடத்தப்படும் புத்தகத் திருவிழாவுக்குப் பயணமானபோதுதான் அதை முழுமையாகப் படித்துத் துய்க்க முடிந்தது. தொகுப்பாசிரியர் "கம்பன் அடிசூடி" பழ.பழனியப்பனுக்கு ஒரு பாராட்டு விழாவே நடத்தி கெளரவித்தாலும் தகும்.

எத்தனை எத்தனை தகவல்கள். கிடைத்தற்கரிய புகைப்படங்கள். அற்புதமான கட்டுரைகள் என்று கடந்த நூற்றாண்டு தமிழகச் சரித்திரத்தையே உள்ளடக்கிய ஓர் ஆவணமாக உருவாக்கியிருக்கிறார் பழ.பழனியப்பன். ஓவியர் எஸ்.கே.அய்யாவின் துணையோடு சா.கணேசன் முதன் முதலில் கம்பனுக்கு அமைத்த உருவப்படம், "சிற்ப சாகரம்" ம.வைத்தியநாத ஸ்தபதியார் வடிவமைத்த தமிழ்த்தாயின் ஐம்பொன்சிலை மற்றும் காரைக்குடி கம்பன் மணிமண்டபத் தமிழ்த்தாய் திருக்கோயிலில் கொலுவீற்றிருக்கும் "சிற்பகுரு" வை.கணபதி ஸ்தபதியார் வடிவமைத்த தமிழ்த்தாயின் சிலை ஆகியவற்றின் புகைப்படங்களை இணைத்திருப்பது அதனினும் சிறப்பு.

"கம்பன் அடிப்பொடி" எழுதிய "பிள்ளையார்பட்டி தலவரலாறு" தொடங்கி, அவரது கட்டுரைகள் மற்றும் சொற்பொழிவுகள் பல இந்தப் புத்தகத்தில் இணைக்கப்பட்டுள்ளன. நாலாயிரதிவ்யப்பிரபந்தத்தை அடியொற்றி கம்பன் அடிப்பொடி இயற்றிய "ஏதேனும் ஆகேனோ" தொடங்கி அவரது கவிதைகளும் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

சுதந்திரப் போராட்ட வீரராகத் தலைமறைவாக வாழ்ந்தவர் சா.கணேசன். அலிபூர் சிறையில் அடைக்கப்பட்டவர். 1962இல் சுதந்திராக் கட்சியின் சார்பில் தமிழகச் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர். இடுப்பில் கட்டிய வேட்டியும் மேல் துண்டுமாக சட்டை அணியாமல் சட்டப் பேரவைக்குள் அவர் நுழையும்போது, ஒரு முதல்வருக்குத் தரப்படும் மரியாதை சக உறுப்பினர்களால் தரப்பட்டது என்பதிலிருந்து அந்த மாமனிதனின் ஆற்றலை நாம் உணரமுடிகிறது.

திருநெல்வேலியில் சா.கணேசனால் தொடங்கப்பட்ட கம்பன் விழா, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு காரைக்குடிக்கு இடம் பெயர்ந்தது. அன்றுமுதல் இன்றுவரை காரைக்குடியில் "கம்பன் விழா" தொடர்ந்து நடைபெறுகிறது என்பது மட்டுமல்ல, தமிழகத்தின் முக்கிய நகரங்களில் எல்லாம் "கம்பன் அடிப்பொடி"யின் அடியொற்றி ஆங்காங்கே கம்பன் கழகங்கள் தோன்றி, கம்பநாட்டாழ்வானின் புகழைப் பரப்பிய வண்ணம் இருக்கின்றன.

கம்பன் புகழ் பரப்பியதுடன் நின்றுவிடவில்லை சா.கணேசனின் தமிழ்த்தொண்டு. அவர் தமிழுக்கும், தமிழ்ச் சமுதாயத்திற்கும் அளித்திருக்கும் இன்னொரு கொடை தமிழக தொல்பொருள் ஆராய்ச்சி.  "குருதேவர்" தெ.பொ.மீனாட்சிசுந்தரனாருடன் கைகோர்த்து, அன்றைய முதல்வர் பக்தவத்சலத்தை வற்புறுத்தி அமைத்துத்தந்த துறைதான் தமிழ் நாட்டுக்கென்று தனியாக ஒரு தொல்பொருள் ஆராய்ச்சித்துறை.

1966
இல் இதற்காக ஒரு கல்வெட்டுக் கருத்தரங்கம் கூட்டியவரும் சா.கணேசன்தான். சா.கணேசனின் "கல் சொல்லும் கதை" தொடர் தொகுப்பில் இடம்பெற்றிருப்பது சிறப்பிலும் சிறப்பு. கலைக்களஞ்சியத் தொகுப்பைப் படிப்பதற்கு முன்னால் "கம்பன் அடிப்பொடி" மீது மதிப்பும் மரியாதையும் இருந்தது.

படித்த பிறகு? பிரமிப்பு...பிரமிப்பு...பிரமிப்பு...!

கலாரசிகன்

நன்றி:- தினமணி

Kannan Natarajan

unread,
Aug 15, 2009, 6:38:04 PM8/15/09
to minT...@googlegroups.com
"மக்கள் சிந்தனைப் பேரவை" என்கிற அமைப்பை ஈரோட்டில் ஏற்படுத்தி, அடுத்த தலைமுறையினரின் வளர்ச்சிக்கும், எழுச்சிக்கும் அடித்தளம் இட்டிருக்கும் ஸ்டாலின் குணசேகரனுக்குக் கொங்கு மண்டலமே நன்றிக் கடன் பட்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

தொடர்ந்து
5 ஆண்டுகளாக மக்கள் சிந்தனை இயக்கம் "ஈரோடு புத்தகத் திருவிழா" நடத்துவதில் அல்ல சிறப்பு. அதை அவர்கள் நடத்தும் விதத்தில்தான், அந்தப் புத்தகத் திருவிழாவின் சிறப்பே அடங்கி இருக்கிறது. 

12
நாள்கள் நடைபெறும் ஈரோடு புத்தகத் திருவிழாவில் சுமார் 170 அரங்குகள் அமைக்கப்பட்டு, தமிழகத்தின் தலைசிறந்த பதிப்பாளர்கள் அனைவரும் அதில் தங்களது புத்தகங்களை விற்பனைக்கு வைக்கிறார்கள். சுமார் 6
லட்சம் மக்கள் புத்தகக் கண்காட்சிக்கு வருகிறார்கள். 4.5 கோடி ரூபாய்க்கும் அதிகமான புத்தகங்கள் ஆண்டுதோறும் விற்பனையாகின்றன.   

ஒவ்வொரு நாளும் ஒரு சிறந்த படைப்பாளியை கெ
ரவிப்பதும், இலக்கிய உலகின் முன்னோடிகளில் இருவரை மக்கள் மன்றத்தில் உரையாற்ற அழைப்பதும் இன்னொரு சிறப்பம்சம்.  தமிழகத்தின் முன்னோடி இலக்கியவாதிகள் பேசுவதைக் கேட்க தினந்தோறும் மாலையில் 5000க்கும் அதிகமானவர்கள் புத்தகத் திருவிழாத் திடலில் கூடுவது என்பதே மலைப்பை ஏற்படுத்தும் விஷயம்.  

வெறும் ஐந்து ரூபாய்க்கு புத்தகத் திருவிழாவிற்கு வரும் மாணவ, மாணவியருக்கு ஆண்டுதோறும்
10,000க்கும் அதிகமான உண்டியல்கள் தரப்படுகின்றன. ஆண்டு முழுவதும் அவர்கள் உண்டியலில் சேமிக்கும் பணம், புத்தகத் திருவிழாவில் உடைத்து எண்ணப்படுகிறது. ஒரு சில பதிப்பகங்கள் மட்டுமல்லாமல், பல வர்த்தக நிறுவனங்களும், கல்வி நிறுவனங்களும், நகரப் பிரமுகர்களும் இந்த மாணவ, மாணவியருக்குத் தங்கள் பங்காகவும் ஒரு தொகையை அளிக்கிறார்கள்.  

ஈரோடு மாவட்டம் மட்டுமல்லாது,
  • கோவை
  • நீலகிரி
  • திருப்பூர்
  • நாமக்கல்
  • சேலம்
என்று கொங்கு மண்டலமே ஈரோடு புத்தகத் திருவிழாவில் கலந்து கொள்ளும் அதிசயத்தை என்னவென்று சொல்ல?

இங்கே இன்னொரு புதுமையையும் நிகழ்த்திக்காட்டுகிறார் ஸ்டாலின் குணசேகரன்.

கொங்கு மண்டல அளவில் உள்ள கல்லூரிகளில் பேச்சுப் போட்டி நடத்தி, புத்தகத் திருவிழா கருத்தரங்கு நிகழ்ச்சியில் வெற்றி பெறும் மாணவ, மாணவியருக்குப் பரிசுகள் வழங்குகிறார்.  

இந்த ஆண்டு நிறைவு நாள் நிகழ்ச்சியில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கலந்து கொண்டு பேசியது, மக்கள் சிந்தனைப் பேரவைக்கும், ஈரோடு புத்தகத் திருவிழாவுக்கும் கிடைத்திருக்கும் மிகப்பெரிய அங்கீகாரம்.   

மாவட்டம் தோறும் மக்கள் சிந்தனைப் பேரவையின் உண்டியல் சேமிப்புத் திட்டம் பரவி, இளைய சமுதாயத்தினர் மத்தியில் புத்தகம் படிக்கும் ஆர்வம் ஏற்படுத்தப் படவேண்டும். அதற்கும் ஸ்டாலின் குணசேகரன் வழிகாட்ட வேண்டும்!

Kannan Natarajan

unread,
Aug 15, 2009, 6:46:13 PM8/15/09
to minT...@googlegroups.com
இலக்கியம் என்பது அடிப்படையில் ஒரு சமுதாயத்தின் பிரதிபலிப்பு. 

அந்தந்தக் காலகட்டத்தில், ஒரு சமுதாயம்
  • எப்படி இருந்தது
  • அதன் மனநிலை
  • வாழ்க்கைமுறை
  • அரசியலமைப்பு
  • மக்களின் லட்சியம்
போன்ற அனைத்து விஷயங்களையும் அப்போதைய படைப்புகள் பிரதிபலிப்பவை என்பதால்தான் சரித்திரமே இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டு, அதற்குப் பிறகு அதற்கான சான்றுகளை அடையாளம் கண்டு உறுதிப்படுத்தப்படுகிறது. 

உலகிலுள்ள ஏனைய நாகரிகங்களைவிட ஒரு உன்னதமான நிலையில் தமிழ்ச் சமுதாயம் இருந்தது என்பதற்கான ஆதாரமாக நமக்குக் கிடைத்திருப்பவை தான் சங்க இலக்கியங்கள்.

ஏதோ வாழ வேண்டுமே என்று வாழாமல், இப்படித்தான் வாழ வேண்டும் என்கிற வரைமுறைகளை வகுத்துக்கொண்டு வாழ்ந்திருக்கிறார்கள் சங்ககாலத் தமிழர்கள் என்பதை அன்றைய இலக்கியங்கள் தெளிவுபடுத்துகின்றன. 

அன்றைய தமிழ்ச் சமுதாயத்துக்கும் இன்றைய தமிழர்தம் நிலைக்கும், மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு அல்லவா காணப்படுகிறது. 

வயிற்றுப்பிழைப்புக்காகவும், வாழ்க்கை வசதிக்காகவும் நாயினும் கீழாய் அண்டிப்பிழைக்கும் பண்பு ஏன் வந்தது?
  • சுயநலம்
  • தகாதன செய்தல்
  • பழிக்கு அஞ்சாமை
போன்ற குணநலன்கள் தமிழர் தம் நாகரிகத்துக்கே ஒவ்வாத ஒன்றாயிற்றே? 

கடலுள் மாய்ந்த இளம்பெரும்வழுதி என்கிற பாண்டிய மன்னன் எழுதிய புறநானூற்றுப் பாடலொன்று தமிழர் தம் சிறப்பைப் பட்டியலிடுகிறது.

இந்தப் பாடலைப் படிக்கும் போதெல்லாம், தமிழனின் இன்றைய நிலை ஏன் தாழ்ந்து தலைகுனிவை ஏற்படுத்துகிறது என்று எண்ணி எண்ணி நெஞ்சம் குமுறுகிறது. 

அன்றைய தமிழன் எப்படி வாழ்ந்தானாம் தெரியுமா?

"பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
 தொகுத்தவற்றுள் எல்லாம் தலை
."

என்று வள்ளுவப் பேராசான் கூறியதைப்போல, இந்திரலோகத்து அமுதமே வாய்ப்பினும் அதைப் பலருக்கும் கொடுத்துத் தானும் உண்பார்களே தவிர, தனித்து உண்டு களிக்க மாட்டார்கள். தேவையில்லாமல் கோபப்படுவது என்பது அவர்கள் அறியாத ஒன்று.

"சாத்வீகம்" என்பதுதான் தமிழனின் அடிப்படைக் குணமே. அதே போல ஏதாவது ஒரு செயலை எடுத்துக் கொண்டால் அதைச் செய்து முடிப்பது வரை உறங்க மாட்டார்கள். அந்த அளவுக்குக் கருமமே கண்ணெனப்போற்றிச் செயல்படுபவர்கள். 

பழிச்சொல்லுக்கு அஞ்சுவார்கள் என்பதால் தகாதன செய்தல் என்பது, தமிழர் தம் எண்ணத்தில் கூட உதிக்காத விஷயமாக இருந்ததாம். தவறு இழைத்துவிட்டாலோ, தங்களது உயிரையே மாய்த்துக் கொள்வார்களாம். பழிக்கு ஆளாக நேரும் இழிசெயலைச் செய்வதற்காக இந்த உலகத்தையே தந்தாலும் அதை வெறுத்து ஒதுக்கும் மனத்திண்மை கொண்டவர்களாக இருந்தனராம் தமிழர். 

  • சோர்வே இல்லாமல் உழைப்பதும்
  • பகிர்ந்து உண்டு வாழ்தலும்
  • தன்னலம் கருதாமல் பிறருக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொள்ளலும்
தமிழர்தம் மாண்புகளாக இருந்ததால்தான், அந்தச் சமுதாயம் உலக சரித்திரத்தில் தலைநிமிர்ந்து நின்றது.  

அதேபோல, இன்றைய தமிழ்ச் சமுதாயத்தைப் பற்றி சரித்திரம் பதிவு செய்யுமா, அதற்குத் தகுதியானவர்களாக நாம் இருக்கிறோமா என்று நம்மைச் சிந்திக்கவைக்கும் கடலுள்மாய்ந்த இளம்பெரும்வழுதியின் புறநானூற்றுப் பாடல் இதுதான்!

"உண்டால் அம்மஇவ் உலகம் - இந்திரர்
 அமிழ்தம் இயைவது ஆயினும், "இனிது"; எனத்
 தமியர் உண்டலும் இலரே; முனிவு இலர்;
 துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சிப்
 புகழ் எனின், உயிரும் கொடுக்குவர், பழிஎனின்
 உலகுடன் பெறினும் கொள்ளலர், அயர்விலர்;
 அன்னமாட்சி அனையர்ஆகித்
 தமக்கு என முயலா நோன்தாள்,
 பிறர்க்குஎன முயலுநர் உண்மையானே
." - புறநானூறு - 182

Kannan Natarajan

unread,
Aug 15, 2009, 6:49:47 PM8/15/09
to minT...@googlegroups.com
கவிதை என்பது எது?

ஆர்.தேவகி எழுதிய "மூங்கில் கனவு" கவிதைத் தொகுப்புக்குக் கவிஞர் நா.காமராசன் எழுதி இருக்கும் அணிந்துரையில் நல்லதொரு விளக்கம் தருகிறார்.

"எப்படி எழுதப்பட்டாலும் மரபோ, புதுசோ, நவீனமோ, உருவம் எதுவாகவும் இருக்கட்டும் - 
 உள்ளடக்கத்தில் கவித்துவம் இருக்க வேண்டும், அதுதான் கவிதை!" 


"ஆர்.தேவகி கவிஞரே, கவிஞரே..." என்கிற நா.காமராசனின் கருத்தை அடியேனும் அட்சரம் பிசகாமல் ஆமோதித்து வழிமொழிகிறேன்.

"மூங்கில் கனவு" புத்தகத்தில் இருந்து ஒரு கவிதை.

முதியோர் இல்லத்தில்

அம்மாவைப் பார்த்துத் திரும்புகையில்

என் மகன் சொன்னான்:-

"நானும் பெரியவனானதும்
 உன்னையும் வாராவாரம்
 தவறாமல் வந்து பார்ப்பேன்
!"

Kannan Natarajan

unread,
Aug 22, 2009, 11:51:37 PM8/22/09
to minT...@googlegroups.com
இலங்கை ஜெயராஜின் பேச்சைக் கேட்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. ஆனால் என்ன காரணத்தாலோ, அவருடைய பேச்சைக் கேட்க முடியாமல் ஏதாவது தடை ஏற்பட்ட வண்ணம் இருந்தது. 

சென்னை கம்பன் கழகத்தின் சார்பில் நடந்த இந்த ஆண்டு விழாவில், கடந்த ஞாயிறன்று அவர் பேசுகிறார் என்றதும், எல்லா வேலைகளையும் ஒதுக்கிவிட்டு அவரது பேச்சைக் கேட்க ஓடிவிட்டேன்.

அடேயப்பா, மடை திறந்தாற்போல, ஒன்றன் பின் ஒன்றாக வந்து விழும் விளக்கங்களும், அதைச் சொல்லும் நேர்த்தியும் நொடிக்கு நொடி கைதட்ட வைத்தது.  ஒன்பது மணி நிகழ்ச்சிக்கு
ராஜேஸ்வரி கல்யாண மண்டபம் நிறைந்து வழிந்தது.

இலங்கை ஜெயராஜின் சொற்பொழிவைத் தொடர்ந்து தெ. ஞானசுந்தரம் தலைமையில் பட்டிமன்றம். இலக்கியக் கூட்டத்திற்கு இன்னும் வரவேற்பு குறையவில்லை என்பதற்குக் கம்பன் கழகம் சார்பில் நடந்த விழாவை விட வேறென்ன சான்று வேண்டும்?

நீதிபதிகள் இஸ்மாயில், மகாராஜன் போன்றவர்களின் முயற்சியும், உழைப்பும் வீண் போகவில்லை.
ரசிகமணியும், கம்பனடிப் பொடியும் இப்போது இருந்திருந்தால், மகிழ்ச்சியில் திளைத்திருப்பார்கள். 

தனது உரையில் இலங்கை ஜெயராஜ் குறிப்பிட்ட ஒரு விஷயத்தை நினைத்து நினைத்து வியக்கிறேன். "பிறவிப் பெருங்கடல்" என்று வள்ளுவப் பேராசானும், ஏனைய புலவர்களும் வாழ்க்கையை ஏன் கடலுக்கு உவமை கூறுகிறார்கள் தெரியுமா?

ஜெயராஜ் தந்த விளக்கம் - "ஒரு அலை எழும்பி ஓயும்போது, அடுத்த அலை எழும்பி விடுகிறது. இப்படி அலைக்குப்பின் அலைபோல, மீண்டும், மீண்டும் பிறவிக்குப் பின் பிறவி எடுப்பதால்தான் பிறவியைக் கடலுக்கு ஒப்பிடுகிறார்கள்" என்பது இலங்கை ஜெயராஜின் விளக்கம்.

Kannan Natarajan

unread,
Aug 22, 2009, 11:56:13 PM8/22/09
to minT...@googlegroups.com
சிலருடைய எழுத்துக்களில் காந்த சக்தி உண்டு. படிக்கத் தொடங்கினால் படித்து முடித்துவிட்டுத் தான் அந்தப் புத்தகத்தைக் கீழே வைக்கத் தோன்றும்.

நாவல்களில் வாசகர்களை ஈர்த்து ஒன்றிவிடச் செய்ய ஆவலைத் தக்க வைக்கும் நீரோட்டமாகக் கதை இருக்கும்.

ஆனால், விமர்சனக் கட்டுரைகளைக் கவர்ச்சியாக எழுதுவது எப்படி?

இந்தக் கலையை ஆதி அந்தம் கரைத்துக் குடித்த எழுத்தாளர்கள் ஒரு சிலரே.

அவர்களில் ஒருவர், எனக்குத் தெரிந்தவர் அன்று கல்கி; இன்று பழ.கருப்பையா. 

கல்கியிடம் நகைச்சுவை இருக்கும். கருப்பையாவிடம் இலக்கிய
ரசனையுடன் கூடிய நையாண்டி இருக்கும்.

பழ. கருப்பையா ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டால் கடுகு வெடிப்பதுபோல வெடித்து, நம்மை அறியாமல் கடகடவெனச் சிரிக்க வைத்து, சிந்திக்கவும் வைத்துவிடுவார். 

பழ.கருப்பையா எழுதி விஜயா பதிப்பகம் வெளியிட்டிருக்கும், "கண்ணதாசன் காலத்தின் வெளிப்பாடு" என்கிற புத்தகத்தைக் கையில் எடுத்துப் படிக்கத் தொடங்கி அதை யாராவது பாதியில் மூடி வைத்துவிட்டுப் போனால் நிச்சயமாக அந்த நபர் இலக்கிய
ரசனையும், நகைச்சுவை உணர்வும் இல்லாதவராகத்தான் இருப்பார். 

இந்தக் குறிப்பிட்ட புத்தகத்தின் தனிச்சிறப்பு என்னவென்றால், கண்ணதாசனைக் கருப்பொருளாக எடுத்துக் கொண்டு பழ.கருப்பையா தான் சொல்ல நினைக்கும் கருத்துக்களை எல்லாம் பக்கத்துக்குப் பக்கம் தூவி இருக்கிறார் என்பதுதான்.

அதற்காகக் கவியரசு கண்ணதாசனைப் பற்றி ஆய்வில் ஏதாவது தொய்வுண்டா என்றால், அதுவும் இல்லை. 

"பாரதிதாசன் திராவிட இயக்கத்தின் கருதுகோள்; கண்ணதாசன் எதிர்கோள்"  என்றும்,

"பாரதி தேசிய மரபுக்குத் தோற்றுவாய் என்றால் திராவிட மரபுக்குத் தோற்றுவாய் சுந்தரம் பிள்ளை! ஆகவே, பாரதி, பாரதிதாசன், கண்ணதாசன் என்னும் வரிசை, புகழ் வரிசையே தவிரத் தர வரிசையன்று!" என்றும்

பழ. கருப்பையா கூறியுள்ளதை மறுப்பது எங்ஙனம்? 

கண்ணதாசனின் படைப்புகளில் பல முன்னுக்குப் பின் முரணாக இருக்கிறது என்கிற குற்றச்சாட்டை பழ. கருப்பையா எதிர்கொண்டு அதை நியாயப்படுத்துகிறார். மாற்றம் கண்ணதாசனுக்கு மட்டும் நேரிடுவதில்லை. உணர்வும் வளர்ச்சியும் உடைய எந்த மனிதனுக்கும் நேரிடுவதுதான் என்று காரண, காரியங்களுடன் பழ. கருப்பையா விளக்கும்போது, "சபாஷ்" போடவேண்டும் போலிருக்கிறது.

அவர் கூறுகிறார் - "மாற்றம் பிழையில்லை. மாறுவதற்கான காரணம் காலத்தேவைக்கேற்றபடி சரியானதுதானா என்பது மட்டுமே கவனத்துக்குரியது". 

"காலத்தின் வெளிப்பாடு" என்கிற கடைசி கட்டுரையைக் கிழித்து வைத்துக் கொள்ள வேண்டும். அது ஒரு முனைவர் பட்டத்துக்கான ஆய்வுக்கு நிகர். "வரலாற்றாசிரியர்களுக்குக் கண்ணதாசன் ஒரு கலங்கரை விளக்கம். ஐநூறு ஆண்டு கழித்து வரலாற்றை அலசுவோர், பல தலைவர்களின் முகங்களைக் கண்ணதாசனின் பாடல்களில்தான் பார்ப்பர்!" என்கிற பழ. கருப்பையாவின் ஆய்ந்த முடிவு, நூற்றுக்கு நூறு உண்மை!

Kannan Natarajan

unread,
Aug 23, 2009, 12:05:34 AM8/23/09
to minT...@googlegroups.com
என் கைகளைப் பற்றித் தரதரவென்று இழுத்துக் கொண்டு போய் அருகிலிருந்த புத்தகக் கடையிலிருந்து தான் எழுதிய "மரணத்தின் நட்சத்திரங்கள்" என்கிற கவிதைத் தொகுப்பை எனக்குப் பரிசளித்தார் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றச் செயலர் கவிஞர் இளையபாரதி. 

கவிஞர் இளையபாரதி எனது கரங்களைப் பற்றியபோது, கால் நூற்றாண்டுக்கு முன்னால் தியாகராய நகர்
ரங்கநாதன் தெருவில் எட்டடிக்கு ஆறடி அறையில் நாங்கள் ஆறு பேர் ஒண்டுக் குடித்தனம் நடத்திய காலம் நினைவில் நிழலாடியது. அன்றைக்கு இருந்த அதே கவிதை தாகம் இன்றைக்கும் எள்ளளவும் குறையாமல் எனது நண்பன் இளையபாரதியிடம் இருப்பதைப் பார்த்து மெய் சிலிர்த்தேன்.

உண்மை. 

கவிஞர் இளையபாரதியை அடியேன் பாராட்டினால் அது சுய தம்பட்டத்துக்கு இணையானதாகக் கருதப்படும். அதனால், "மரணத்தின் நட்சத்திரங்கள்" கவிதைத் தொகுதியில் இடம் பெற்றிருக்கும்

"தந்தங்களும்.... ரோமங்களும்..." கவிதையிலிருந்து சில வரிகளை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

நீங்களே எடைபோட்டுக் கொள்ளுங்கள்!

வேந்தர்களோடு போயிற்று
வேழத்தின் காலம்.

பட்டத்து யானைகள்
தட்டழிகின்றன
பட்டணக் கரைகளில்!

காட்டுவாசியிடம்
கேட்டுத் தெரிந்துகொள்
கூட்டத்திலிருந்து பிரிந்த
ஒற்றை யானையின் துயரம்!

வனத்தில் பார்க்க வேண்டும்
அச்சமற்றுத் திரியும்
அந்தக்கருப்பு கம்பீரங்களை.

உயிர் வாதை புரியாது
ஒரு பாவமும் அறியாது!
காற்றுக்கு அசையும் மூங்கில் புதர்போல
காட்டுக்குள் அலையும் சைவப்புதிர் இது!

நகரத்தில் யானைகள்
குற்றமிழைக்காத
ஆயுள்தண்டனைக்கைதிகள்.

பிரியமானவர்களின் முகங்களைச்
சிறைக் கம்பிகளுக்குப் பின்னோ
மருத்துவமனைப் படுக்கையிலோ
பார்க்க நேர்வதைப் போலத் துயரமானது
நகரத் தெருக்களில் யாசிக்கும்
யானைகளைப் பார்ப்பது!

இருந்தாலும் ஆயிரம் பொன்
இறந்தாலும் ஆயிரம் பொன்
யானை நடக்கிறது தன்பலம் அறியாமல்!
ஆசைகளுக்குத் தந்தங்களையும்
அதிர்ஷ்டங்களுக்கு வால்மயிரையும்
பறிகொடுத்து நிற்கும்
யானைக்கும் ஒரு நாள் மதம் பிடிக்கும்!

V, Dhivakar

unread,
Aug 24, 2009, 8:53:00 AM8/24/09
to mint...@googlegroups.com
அவ்வை கண்ணன் அவர்களே!
 
இந்தப் புத்தகம் ஒரு அருமையான காலக் கண்ணாடி. கண்ணதாசனைப் போற்றவும் செய்கிறது. தூற்றவும் செய்கிறது. குறிப்பாக ராஜாஜியவர்களின் மறைவின் போது எழுதப்பட்ட கண்ணதாசனின் இரங்கல் பாடலுக்கு, பாராட்டு மழை பொழிந்தவுடன், பழ கருப்பையா அவர்கள் இவ்வாறு எழுதியிருப்பார்கள் "இந்த ஒரு பாடலைப் படிப்பதற்காகவாவது ராசாசி ஒருமுறை உயிர் பிழைத்து எழுந்துவரக் கூடாதா"
 
(ஏனெனில் ராஜாஜி அவர்களை ஒரு காலத்தில் தூற்றி எழுதியவர் கண்ணதாசன்)
 
ஆனால் கண்ணதாசன் பரமாச்சாரியரோடு தொடர்பு கொண்டதிலும், கவியரசரின் 'அர்த்தமுள்ள இந்துமதம்' புத்தகங்களும், பழ கருப்பையா அவர்களின் கடும் விமர்சனத்துக்குள்ளாயின. ஆதிசங்கரரின் பஜகோவிந்தம பாடலுக்கும், கனகதாரா தோத்திரத்திற்கும் தமிழாக்கப் பாடல்கள் கண்ணதாசனால் இயற்றப்பட்டன. உண்மையில் பஜகோவிந்தம் பாடலுக்கான கண்ணதாசனின் தமிழாக்கம், ஆதிசங்கரரின் வடமொழி ஆற்றலையும் மீறிய ஒரு ஆக்கம். அவர் ஒரு நான்கு வரிப்பாடலுக்கு எளிமையான, அதே சமயம் மிகப் பொருத்தமான பாடல் வர்களை எழுதியதோடு மட்டுமல்லாமல், ஒவ்வொரு பாடலின் முடிவிலும் 'கண்ணனைப் போற்றுக' என முடித்திருப்பார்.ஆனால் இவைகளை அவர் (பழ கருப்பையா) பாராட்டவில்லை. பஜகோவிந்தம் போன்ற வேதாந்தப் பாடலைப் பாடிய ஆதிசங்கரர் ஏன் கனகதாரா போன்ற லௌகீகப் பாடலைப் பாடவேண்டும், அவற்றை இவர் ஏன் தமிழில் எழுதவேண்டும் என்று கேட்டிருப்பார் பழ கருப்பையா.
 
அதற்கான பதிலாக அந்தச் சமயத்தில் பழ கருப்பையாவுக்கு ஒரு கடிதம் நான் எழுதியுள்ளேன். அந்தக் கடிதத்தில் கண்ணதாசனையும் ஆதிசங்கரரையும் மட்டுமே சம்பந்தப்படுத்திய வரிகளையும் பதிவு செய்துள்ளேன்.
 
 
 
ஆனாலும் கண்ணதாசன் மேல் எத்தனை பற்றிருந்தால் இத்தனை உயிரோட்டமாகவும், உரிமையோடும் இந்தப் புத்தகத்தை பழ கருப்பையா அவர்கள் எழுதி இருப்பார்கள் என்றே கடைசியில் தோன்றும். கண்ணதாசனை மட்டுமல்லாமல், அவர் பழகிய சூழ்நிலை, கழகத்தின் கொள்கை வேஷங்கள், ராஜாஜி என்கிற அரிய மனிதரின் உன்னதமான உயரிய கொள்கைகள் என பரந்து விரியும் புத்தகம் இது.
 
திவாகர்

Kannan Natarajan

unread,
Aug 25, 2009, 2:58:42 PM8/25/09
to mint...@googlegroups.com
அருமையானப் பாராட்டுரைக்கு மிக்க நன்றி திவாகர் அவர்களே.

>ஆனாலும் கண்ணதாசன் மேல் எத்தனை பற்றிருந்தால் இத்தனை உயிரோட்டமாகவும், உரிமையோடும்
>இந்தப் புத்தகத்தை பழ கருப்பையா அவர்கள் எழுதி இருப்பார்கள் என்றே கடைசியில் தோன்றும்.

>திவாகர்

Kannan Natarajan

unread,
Aug 30, 2009, 5:40:45 AM8/30/09
to minT...@googlegroups.com
எழுத்துக்கும், எழுத்தாளர்களுக்கும் அங்கீகாரம், ஜனரஞ்சகப் பத்திரிகைகளில் எழுதுவதால் மட்டும்தான் கிடைக்கும் என்பதில்லை. வியாபார சஞ்சிகைகளில் எழுதாமல் இருந்திருந்தாலும்,
  • புதுமைப் பித்தனும்
  • தி.ஜானதிராமனும்
  • ஜெயகாந்தனும்
பிரபலமாகி இருப்பார்கள் என்பதில் சந்தேகம் என்ன?

மேலே சொன்ன வரிசையில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டிய இன்னொரு பெயர் கு.சின்னப்ப பாரதி.

வேடிக்கை என்னவென்றால், உலக அரங்கில் அறியப்படும் இந்தத் தமிழ் எழுத்தாளர் இன்றுவரை வியாபார சஞ்சிகைகளின் நிழலில் கூட ஒதுங்கியது இல்லை என்பதுதான்.

வாசகர்களைத் திருப்திபடுத்தவும், பத்திரிகைகளின் விற்பனையை அதிகரிக்கவும் எழுதுவதைத் தவிர்த்து, எழுத்தை ஒரு தவமாகவும், சமுதாயக் கடமையாகவும் கொண்ட எழுத்தாளர்களின் பட்டியலில் முன்நிலை வகிப்பது யார் என்று கேட்டால், விவரமறிந்தவர்கள் கு.சி.பா. என்றுதான் கூறுவார்கள்.

கு.சின்னப்ப பாரதியா?

யார் அந்த எழுத்தாளர் என்று கேட்பவர்கள் அவரைப் பற்றிய விவரங்களைக் கேட்டால் மூர்ச்சையடைந்து விடுவார்கள்.

இவரது,
  • தாகம்
  • சங்கம்
  • சர்க்கரை
  • பவளாயி
ஆகிய நாவல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ஒரு மிகப்பெரிய தாக்கத்தை உலக இலக்கிய அரங்கில் ஏற்படுத்தி இருக்கின்றன.

இவரது "சங்கம்" என்கிற நாவல் ஆங்கிலம் தவிர ஹிந்தி, வங்காளி, குஜராத்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராட்டி, பிரெஞ்சு என்று மொழிபெயர்க்கப்பட்டு இலக்கிய விமர்சகர்களின் ஒட்டுமொத்தப் பாராட்டையும் அள்ளிக் குவித்திருக்கிறது.

"என்னைப் பொருத்த மட்டில் எழுத்து என்பதை பணம் சேர்க்கும், புகழ் ஈட்டும் சாதனமாக நான் கருதவில்லை. சாதாரண மக்களைப் பாதிக்கும் வறுமை, பசி, பட்டினி, வேலையின்மை ஆகியவற்றுக்கு எதிராகவும் கெ
ரவமான ஒரு வாழ்வை உருவாக்கவும் போராடும் மக்கள் திரளுக்கு உதவக் கூடியதாக இருக்கும் வகையில் பயன்பட வேண்டுமெனக் கருதுகிறேன்" என்று கூறும் கு.சி.பா.வின் நாவல்கள் ஏனோ தானோ என்று எழுதப்படுவன அல்ல என்பதுதான் அவற்றின் தனிச் சிறப்பு.

ஒரு நாவலை எழுத அவர் மூன்று முதல் எட்டு ஆண்டுகள்கூட எடுத்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் அவரது "சுரங்கம்" நாவலைப் படித்துவிட்டு ஒரு சில மணித் துளிகள் பிரமை பிடித்ததுபோல அமர்ந்து விட்டிருந்தேன்.  மேற்கு வங்காளம் அசன்சாவில் உள்ள நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களுடன் பல மாதங்கள் தங்கி இருந்து, சுரங்கங்களில் நேரடியாகப் பார்த்த அனுபவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட நாவல்தான் "சுரங்கம்".

சுரங்கத் தொழிலாளர்கள் படும் மரண அவஸ்த்தையைத் தத்ரூபமாகப் படம் பிடித்துக் காட்டும் "சுரங்கம்" நாவலின் தனிச் சிறப்பு என்ன தெரியுமா?

நிலக்கரிச் சுரங்கத்தை அடிப்படையாக வைத்து உலகில் எழுதப்பட்ட ஒரே ஒரு வர்க்கப் போராட்ட நாவல் சுரங்கமாகத்தான் இருக்கும்.

"இன்று சித்தாந்த உள்ளடக்கம் கொண்ட படைப்புகள் அருகிப் போய்விட்டன. சுதந்திரப் போராட்ட காலத்தில் அப்படிப்பட்ட படைப்புகளே இந்திய அளவில் மேலோங்கியிருந்தன" என்கிற கு.சி.பா.வின் கருத்தை முற்றுமாக வழிமொழிபவன் நான்.

சமுதாயச் சிந்தனை என்பது முற்றிலுமாக அழிந்து, சுய சிந்தனையும், தனிமனித மன உணர்வுகளும் மட்டுமே எழுத்துகளில் பிரதிபலிக்கும் துர்ப்பாக்கியம் மனதைப் பிசைகிறது. உலகமே போற்றிப் பாராட்டும் ஒரு படைப்பாளி நமக்கு மத்தியில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளக்கூட விரும்பாமல் இருக்கிறாரே என்பதில் எனக்குள்ள ஆதங்கம் கொஞ்சம் நஞ்சமல்ல.

கு.சி.பா.விடம் கேட்டால், அவர், "என்னைத் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? எனது எழுத்துகள் அல்லவா மக்களைப் போய்ச் சேர வேண்டும்?" என்று எதிர்க் கேள்வி எழுப்புவார்.

இதுவரை நீங்கள் கு.சின்னப்ப பாரதியின் படைப்புகள் எதுவும் படிக்காமல் இருந்திருந்தால், தயவுசெய்து உடனே பாரதி புத்தகாலயத்துக்கு ஓடுங்கள். இல்லையென்றால் சமகாலத் தமிழ் இலக்கியம் பற்றிய உங்களது கணிப்பு முழுமையானதாகாது.

எனக்கு இன்னொரு ஆதங்கம். உலகம் போற்றும் இந்த மாபெரும் எழுத்தாளரின் படைப்புக்கு "ஞானபீடம்" விருது தரப்பட வேண்டாமோ?

குறைந்த பட்சம் சாகித்திய அகாதெமி விருது கூடத் தரப்படவில்லையே, ஏன்?

விருதுகளின் மீதான மரியாதை இதனால்தான் குறைகிறது!

Kannan Natarajan

unread,
Aug 30, 2009, 5:45:14 AM8/30/09
to minT...@googlegroups.com
துறுதுறுப்பான இளைஞர் தி.பாலாஜி "சிகரம்" அமைப்பின் தூண்களில் ஒருவர்.

"தமிழன் வாழ்ந்தால் தட்டிக் கொடு; தமிழன் வீழ்ந்தால் முட்டுக் கொடு!"

என்பதை முத்திரை வாக்கியமாகக் கொண்டு செயல்படும் இந்த இளைஞர், புதிய தலைமுறை மாணவர் பட்டாளத்தின் பிரதிநிதி.

மாணவர்கள் சிலர் ஒரு தீபாவளித் திருநாளின்போது ஒன்றுகூடிப் பேசினார்கள். பேச்சு விவாதமானது. அப்போதுதான் தெரிந்தது, அவர்களுக்குள் அக்கினிக் குஞ்சாகக் கனன்று கொண்டிருந்த சமுதாய தாகம் அவ்வப்போது கவிதையாகப் பொங்கி எழுந்தது என்பதை.

தங்களது நோட்டுப் புத்தகத்தில் இருந்த எண்ணச் சிதறல்களைத் தொகுத்து ஒரு கவிதைத் தொகுப்பாக வெளியிட்டால் என்ன என்று தோன்றியதாம்.

விளைவு?

"அநீதி அகதி அமைதி" என்கிற கவிதைத் தொகுப்பு.

சேலம் மகாராஜா பொறியியற் கல்லூரியில் இளங்கலைப் பொறியியல் படிக்கும் கு.பிரபாகரன் எழுதிய "பிஞ்சுக்கு நீதி" என்கிற தலைப்பிலான கவிதை ஒன்று அந்தத் தொகுப்பில் காணப்படுகிறது.

அதிலிருந்து சில வரிகள்,

தாய் 
தந்தை அற்றவன் - மட்டும்
அல்ல - தன் நாட்டில்
வாழ கதியற்று - கலங்கி
நிற்பவனும்
அநாதை தான்! 

கேள்விப்பட்டேன்! 
அங்கேயும் 
மக்கள் ஓடி விளையாடுகிறார்கள் 
ஆனால் 
துரத்துவது துப்பாக்கி தோட்டாக்கள் 
என்று! 

கள்ளத் தோணியில் ஏறி 
கடிகார முள்ளை விட 
வேகமாக 
நாடு கடந்து அமைதியற்ற 
அகதியாகத் தமிழன் 
வருவதென்ன நீதி!

விஜயராகவன்

unread,
Aug 30, 2009, 5:50:32 AM8/30/09
to மின்தமிழ்
On Aug 30, 10:45 am, Kannan Natarajan <thara...@gmail.com> wrote:
> கள்ளத் தோணியில் ஏறி
> கடிகார முள்ளை விட
> வேகமாக
> நாடு கடந்து அமைதியற்ற
> அகதியாகத் தமிழன்
> வருவதென்ன நீதி!

பெரும்பான்மையாக , அகதியாக சென்றவர்களுக்கு பல நாடுகளில் குடிமகன்
அந்தஸ்து கிடைத்து விட்டது என நினைக்கிறேன். அதனால் அகதியாக
சென்றவர்களில் 90% பேர்கள் , இப்போது அகதிகள் இல்லை என நம்புகிறேன்.

விஜயராகவன்

Kannan Natarajan

unread,
Aug 30, 2009, 6:14:23 AM8/30/09
to mint...@googlegroups.com
> 90% பேர்கள்

பல நாடுகளில் குடிமகன் அந்தஸ்து கிடைப்பதில் தான் மகிழ்ச்சி என்று பலர் நினைக்கலாம். ஆனால், தோணியில் ஏறி நாடு கடப்பது என்பது நிரந்திர post traumatic stress disorder/migrant psychosis.

எளிதாகச் சொல்லிவிட்டீர்! ஆனால் அப்படியானா அகதிகளின் கடுந்துயரிலும், மறவாத விருந்தோம்பல். மற்ற நாட்டு தமிழர்கள் அனைவருக்கும் நம் மனம் வேண்ட(டுத)ல்.

விஜயராகவன்

Sri Sritharan

unread,
Aug 30, 2009, 6:50:21 AM8/30/09
to mint...@googlegroups.com
கு. சின்னப்ப பாரதி பற்றிய விக்கிக் கட்டுரை.
 
 
விஜயராகவன் அவர்களுக்கு, இக்கட்டுரையில் ஏதாவது தனித்தமிழ் சொற்கள் இருந்தால் திருத்தி உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்:).
 
அன்புடன்
சிறீதரன்
----- Original Message -----
Sent: Sunday, August 30, 2009 7:40 PM
Subject: [MinTamil] அவியல் - நாள் நல்ல நாள்

எழுத்துக்கும், எழுத்தாளர்களுக்கும் அங்கீகாரம், ஜனரஞ்சகப் பத்திரிகைகளில் எழுதுவதால் மட்டும்தான் கிடைக்கும் என்பதில்லை. வியாபார சஞ்சிகைகளில் எழுதாமல் இருந்திருந்தாலும்,
  • புதுமைப் பித்தனும்
  • தி.ஜானதிராமனும்
  • ஜெயகாந்தனும்
பிரபலமாகி இருப்பார்கள் என்பதில் சந்தேகம் என்ன?

விஜயராகவன்

unread,
Aug 30, 2009, 6:51:25 AM8/30/09
to மின்தமிழ்
On Aug 30, 11:14 am, Kannan Natarajan <thara...@gmail.com> wrote:
> > 90% பேர்கள்
>
> பல நாடுகளில் குடிமகன் அந்தஸ்து கிடைப்பதில் தான் மகிழ்ச்சி என்று பலர்
> நினைக்கலாம். ஆனால், தோணியில் ஏறி நாடு கடப்பது என்பது நிரந்திர post traumatic
> stress disorder/migrant psychosis.

எழுதியவர் தமிழ்நாட்டில் வளர்ந்து, வசிப்பவர். அதனால் அனுபவம் இல்லாதவர்
தோணி ஏறுதல்,
migrant psychosis இவற்றை பற்றி எழுதினால், அதற்கு அவ்வளவு க்ரெடிபிலிடி
இல்லை.

மேலும், பல நாடுகள் அகதிகளுக்கு குடிமகன் அந்தஸ்து கொடுப்பத்தை
இளக்காரமாக பார்ப்பது சரியில்லை. அந்த விஷயத்தில் இந்தியா, ஸ்ரீலங்கா
அரசுகளே பெரும் குற்றவளிகள்; முக்கியமாக ஸ்ரீலங்கா அரசு. லட்சக்கணக்கான
தோட்டத்தமிழர்களை திரிசங்கு சுவர்கத்தில் வைத்துள்ளது. இந்திய அரசும் ஈழ
அகதிகளுக்கு குடிமகன் நிலை கொடுக்காமல், முகாம்களில் வைத்துள்ளது.


> எளிதாகச் சொல்லிவிட்டீர்! ஆனால் அப்படியானா அகதிகளின் கடுந்துயரிலும், மறவாத
> விருந்தோம்பல். மற்ற நாட்டு தமிழர்கள் அனைவருக்கும் நம் மனம் வேண்ட(டுத)ல்.


கடந்த 60 வருட காலங்களில் 100-150 மில்லியன் மக்கள் உலகெங்கிலும் அகதிகளக
சென்று , வாழும் நாட்டை மாற்றினர் . அதனால் உலகம் எப்படி அகதிப்
பிரச்சினையை சமாளிப்பது என்பதில் அனுபவம் கொண்டுள்ளது. அகதிகளாகவோ, சுய
விருப்பத்துடன் சென்றனரோ, அந்தந்த நாட்டில் குடிமகன்களாக ஆனவர்கள் ,
வாழ்க்கையில் சுபிட்சம் அடைவார்கள் என நம்புவோம்.

விஜயராகவன்

விஜயராகவன்

unread,
Aug 30, 2009, 7:03:52 AM8/30/09
to மின்தமிழ்
On Aug 30, 11:50 am, "Sri Sritharan" <kstha...@bigpond.com> wrote:
> கு. சின்னப்ப பாரதி பற்றிய விக்கிக் கட்டுரை.
>
> http://tinyurl.com/ktj2v6
>
> விஜயராகவன் அவர்களுக்கு, இக்கட்டுரையில் ஏதாவது தனித்தமிழ் சொற்கள் இருந்தால் திருத்தி உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்:).
>


சிறீதரன்

நீங்கள் அங்குள்ள பெயர்களையும் , மற்ற சொற்களையும் விகி கொள்கைப்படி
Current Tamil Usage, Reliable primary/ secondary sources ஒத்து போகும்
படி எழுதினால், அது தவறு ஒன்றும் இல்லை என நினைப்பேன். நீங்களே, அதை
நிச்சயப் படுத்திக் கொள்ளலாம்.

நீங்கள் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் என குறிப்பிட்டது சரிதான்,
நீங்கள் கம்யூனிஸ்டை பொதுவுடமை என எழுத வேண்டும் என அடம் பிடிக்காதது
நல்லது.

விஜயராகவன்

Kannan Natarajan

unread,
Aug 30, 2009, 7:06:30 AM8/30/09
to mint...@googlegroups.com
> எழுதியவர் தமிழ்நாட்டில் வளர்ந்து, வசிப்பவர். தோணி ஏறுதல், migrant psychosis இவற்றை
> பற்றி எழுதினால், அதற்கு அவ்வளவு க்ரெடிபிலிடி இல்லை.

எழுதியவர் தமிழ்நாட்டில் வளர்ந்து, வசிப்பவராக இருந்தாலும், இக்கவிதைகளைப் படிப்பவர்கள் பல நாடுகளில் பல்லின மக்களோடு வாழ்வோர். இலங்கை மட்டுமின்றி இப்படியனக் கலவர நாடுகளில் இருந்து வந்தோரின் உளநிலை அறிந்தோர் சிலர், அதிலும் அவர்களின் migrant psychosis உணர்ந்தோர் பலர். நம்பக்கூடிய தன்மையற்றோர் உண்மையை அறிய முற்படோர், அதற்கு க்ரெடிபிலிடி (நம்பக்கூடிய தன்மை) இல்லை தான்.

PENNESWARAN KRISHNA RAO

unread,
Aug 30, 2009, 11:59:43 AM8/30/09
to mint...@googlegroups.com
கு.சின்னப்ப பாரதி போன்ற மிகவும் தரமான உயரந்த சிந்தனை கொண்ட படைப்பாளிகளை இங்கே நினைவு கூர்வதும் அவரைப் பற்றிப் பேசுவதும் மெத்த மிக்ழ்ச்சியைத் தருகிறது.
 
பென்னேஸ்வரன்

2009/8/30 Kannan Natarajan <thar...@gmail.com>

Kannan Natarajan

unread,
Sep 5, 2009, 6:18:30 PM9/5/09
to mint...@googlegroups.com
மிழ் அகராதிகள் உருவாக்கத்தில் ஐரோப்பியர்களின் பங்கு கணிசமானது. ஐரோப்பியர்களுக்கு முன்பே 1592இல் "சிதம்பர ரேவணசித்த"ரின் அகராதி முறையிலான அகராதி நிகண்டு உருவாகிவிட்டது. அதை உ.வே.சா. நூலகம் பதிப்பித்துள்ளது. அகராதி முறையில் தொகுக்கப்பட்ட முதல் அகராதி எனக் கூறப்படும் இத்தாலி மொழி அகராதியின் ஆண்டு 1612 என்பதைக் காணும்போது, அதற்கு முன்பே அகராதி முறையில் அகராதி நிகண்டு உருவாகிவிட்டது என்கிறார் பேரா.பசுபதி. ஆயினும், பின்னாளில் பல்வேறு தமிழ் அகராதிகளை உருவாக்கியதில் ஐரோப்பியத் தமிழறிஞர்களுக்குக் கணிசமான பங்கு உண்டு.
 
வியாபாரத்தைப் பெருக்க வந்த ஐரோப்பியர்கள், தமிழ் மொழியின் சிறப்பால் ஈர்க்கப்பட்டனர் என்பதில் அதிசயம் எதுவும் இல்லை. தமிழைப் பிழையறக் கற்றதுடன் நின்றுவிடாமல் இலக்கிய இலக்கணங்களிலும் பலர் தேர்ச்சி பெற்றதுதான் ஆச்சரியம்.
 
  1. அந்தைம் டி.புரொயன்சா (1679)
  2. பெப்ரீசியஸ்(1779)
  3. ஜே.பி.இராட்லர் (1834)
  4. ஜி.யு.போப்.(1859)
  5. எம்.ஏ.லேப் (1886)
  6. வின்சுலோ(1862)
போன்றோர் பங்களிப்பைத் தமிழர்கூறு நல்லுலகம் மறந்திட இயலாது.

ஐரோப்பியர் தமிழுக்குத் தந்த மிகப்பெரிய கொடை அகராதிகளைத் தொகுத்தளித்ததுதான் எனலாம். சொற்களைப் பாதுகாக்கும் கருவூலமாக அகராதிகள்தான் செயல்படுகின்றன.

 
1732
இல் வீரமாமுனிவர் தொகுத்தளித்த சதுரகராதியில் தொடங்கி, இன்றுவரை தமிழில் பல அகராதிகள் வெளியிடப்பட்டுள்ளன. ஒரு மொழி அகராதிகளாகவும், இருமொழி அகராதிகளாகவும் இவை பயன்பாட்டில் உள்ளன. ஒரு மொழி அகராதிகளின் வரலாற்றில் நிகண்டுகள் முதலிடம் வகிக்கின்றன. ஐரோப்பியர்களின் வருகைக்குப் பின்னர் பல புதிய நெறிமுறைகளால் பழைய நிகண்டு முறைகளிலிருந்து மாறி, புதிய வடிவங்களையும், வரிசைகளையும் தமிழ் அகராதிகள் பெற்றுவிட்டிருக்கின்றன.
 
முனைவர் சரளா
ரங்கநாதன் தனது முனைவர் பட்ட ஆய்விற்காகத் தேர்ந்தெடுத்துக் கொண்ட கருப்பொருள் "தமிழ் ஒரு மொழி, இருமொழி அகராதிகளின் அமைப்பு நிலையின் வளர்ச்சிப் போக்கு" என்பது. அந்த ஆய்வு சில மாற்றங்களுடன் இப்போது "தமிழ் அகராதிகளின் வளர்ச்சிப் போக்கும் அமைப்பு வேறுபாடும்" என்கிற தலைப்பில் புத்தகமாக வெளிவந்திருக்கிறது.
 
தமிழ் அகராதிகளின் அமைப்பு மற்றும் உள்ளடக்கம் பற்றிய ஒப்பாய்வை விரிவாகத் தந்திருப்பதுடன், ஆய்வின் பயனாய்க் கண்டறிந்த பல உண்மைகளையும் வெளிப்படுத்தி இருக்கிறார். தமிழ் அகராதியியல் வளர்ச்சியை அறிந்து கொள்ள உதவும் அரிய ஆய்வு நூல் இது!
 
500
பக்கங்கள் கொண்ட இந்த நூலில் சொல்லடைவு இல்லாமை ஒரு குறையாகவே உள்ளது. அடுத்தப் பதிப்பில் இதில் கவனம் செலுத்தினால் நன்று!

Kannan Natarajan

unread,
Sep 5, 2009, 6:22:31 PM9/5/09
to mint...@googlegroups.com
மகால எழுத்தாளர்கள் மற்றும் பேச்சாளர்கள் பட்டியலை நான் தயாரிக்க நேர்ந்தால், அதில் முதல் பத்து பேர்களில் ஒருவராக நிச்சயம் தமிழருவி மணியன் இருப்பார். அதற்குக் காரணம் அவரும் ஒரு பாரதிப் பைத்தியம், கண்ணதாசனின் இரசிகர், காந்திய நெறிகளின் அன்பர் என்பது மட்டுமல்ல, அவரது மொழி ஆளுமையும், வார்த்தை வித்தகமும் கூட!
 
"தில்லானா மோகனாம்பாள்" சண்முக சுந்தரத்தைப் போல மறைந்திருந்து கேட்க வேண்டிய அவசியம் நேரிடவில்லை என்றாலும், சற்று தொலைவில் இருந்து மட்டுமே தமிழருவி மணியனின் மனதை மயக்கும் மேடைப்பேச்சுகளை என்னால் கேட்க முடிந்திருக்கிறது. தமிழருவி மணியன் கேட்டு இரசிக்க வேண்டியவர்தானே தவிர பார்த்து இரசிப்பதற்கு அவர் ஒன்றும் சினிமா நடிகரோ, துணிக்கடை ஷோரூம் பொம்மையோ அல்லவே...
 
நண்பர் மை.பா.நாராயணனின் தென்திசைப் பதிப்பகம் வெளியிட்ட "கனவு மெய்ப்பட வேண்டும்" புத்தகத்தைப் படித்தபோதே, தமிழருவி மணியனைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்தேன். இப்போது சமீபத்தில் கற்பகம் புத்தகாலயம் வெளியிட்டிருக்கும் "அடிமனத்தின் சுவடுகள்" புத்தகத்தைப் படித்த பிறகும் தள்ளிப்போட மனம் ஒப்பவில்லை.
 
தனது நினைவில் கோலோச்சும் சம்பவங்களை, மனதின் அடித்தளத்தில் கனத்த பாறாங்கல்லாக நிலைத்துவிட்ட நினைவுகளை வார்த்தை வடிவங்களாக்கிக் கட்டுரைகளாய் உலவ விட்டிருக்கிறார் மணியன். அவரது அடிமனத்தின் ஆழத்தில் சுவடுகளாய் நிலைத்துவிட்ட கவியரசர் கண்ணதாசன் மற்றும் எழுத்தாளர் ஜெயகாந்தனின் தாக்கம் வார்த்தைக்கு வார்த்தை, வரிக்கு வரி, பக்கத்துக்குப் பக்கம் பளிச்சிடுகிறது!
 
தன்னை எழுத வைத்தவன் என்று பகிரங்கமாகப் பிரகடனம் செய்து, தனது முதற்காதல் எந்தப் பெண்ணோடும் அல்ல, அந்தக் கவிஞனின் எழுத்தோடுதான் என்று வாக்குமூலம் அளித்துக் கவியரசு கண்ணாதாசனைப் பற்றி தமிழருவி மணியன் கொடுத்துள்ள பதிவு என்ன தெரியுமா?

"தமிழுக்குக் கைகட்டிப் பலர் சேவகம் செய்தனர். ஆனால், தமிழ் கண்ணதாசனிடம் கைகட்டிச் சேவகம் செய்தது!" என்பதுதான்.
 
"ஜெயகாந்தனின் சிறுகதைகள், நாவல்கள், குறுநாவல்கள், கட்டுரைகள், அரசியல் விமர்சனங்கள் அனைத்தையும் படித்தவர்களுக்குத்தான் இப்போது எழுதுகிற படைப்பாளிகளின் மேம்போக்கான மேதாவிலாசம் பளிச்சென்று தெரியும்" என்கிற தமிழருவி மணியனின் கருத்தைக் கொட்டை எழுத்துக்களில் எழுதித் தெருவெல்லாம் ஒட்ட வேண்டும் போலிருக்கிறது. குப்பைகளைப் படிப்பதில் நம் விலைமதிப்புள்ள நேரம் வீணாகிறது என்பது நிஜம்.. நிஜம்.. நிஜம்..
 
அடிமனத்தின் சுவடுகளாக நிலைத்துவிட்ட தனது காதலியின் நினைவுகள் வார்த்தைகளாகிப் பெருக்கெடுத்து ஓடிப் பிரவாகமாக வந்து விழும் வேகம்.. அசர அடிக்கிறது. அதை அதிகம் சிதைக்காமல் அப்படியே தரும்போதுதான் அதன் ஆழமும் அழகும் புரியும்.

"உண்மையிலேயே அவள் என்னை மறந்திருப்பாளா? அந்த அழகிய நினைவுகளும் அவளுள் அடியோடு அழிந்திருக்குமானால், அவளது நேசம், அன்பு, காதல், கண்ணீர், பாஷை அனைத்தும் பொய்யென்றுதானே பொருள்படும்?
 
அவள் என்னுடன் நடந்ததும், என் மார்பில் படர்ந்ததும், என் மடியில் கிடந்ததும், மனம்விட்டு மகிழ்ந்ததும், கண்ணீரில் கரைந்ததும், கண்களாய் பொழிந்ததும் வெறும் நாடக வேடந்தானா?
 
என் காதலி... இப்பொழுது எங்கிருக்கிறாள்....? ஆன்மாவைக் காயப்படுத்திவிட்டு அவசரம் அவசரமாகப் பிரிந்து சென்ற பின் இப்போது யாருடைய தோள்களில் மாலையாகத் தவழ்ந்து கொண்டிருக்கிறாள்?
 
மரணம் வரை மறக்க முடியாத அந்தக் காதல் நினைவுகளை மனம் இப்போதுகூட ஒரு மயக்கத்துடன் அசை போடுகிறது..."
 
இப்போதெல்லாம் கவிதை என்கிற பெயரில் கட்டுரை எழுதுகிறார்கள். வசனங்களில்தான் விசனங்கள் வெளிப்படும் என்று அழிச்சாட்டியம் செய்கிறார்கள். அவரவர் விருப்பம் அவரவருக்கு... தமிழருவி மணியன் உரைநடை கூடக் கவிதையாக இருக்கிறதே, கவனித்தீர்களா!
 
இத்தனையையும் எழுதிவிட்டு ஒரு இரகசியத்தையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் நேரில் சந்திக்க விரும்பும் நல்ல தமிழ் எழுத்தாளர்களில் தமிழருவி மணியனும் ஒருவர்!

Kannan Natarajan

unread,
Sep 5, 2009, 6:25:51 PM9/5/09
to mint...@googlegroups.com

மீபத்தில் எழுத்தாளர் ஆர்.வியின் முதலாம் நினைவுநாள் விழா முடிந்து வெளியே வரும்போது நண்பர் "சொல்கேளான்" ஏ.வி.கிரி அன்புப் பரிசாக அவர் எழுதிய "சிந்திக்க வேண்டுகிறேன்..." கவிதைத் தொகுப்பைப் பரிசளித்தார்.

http://www.dinamani.com/Images/article/2009/9/6/ed.jpg

"சமுதாய சீர்கேடுகளாலும் அவலங்களாலும் பாதிக்கப்படாவிட்டால், அவன் என்ன கவிஞன்?

தன்னுணர்வு மட்டுமே கவிதை என்று தனக்காகத் தன்னைப் பற்றியே எழுதக் கொள்ளும் கவிதையை அவர் தனக்குத் தானே படித்துக் கொள்ளட்டும்" என்கிற சமூகப் பிரக்ஞையுடன் எழுதப்பட்ட கவிதைகள் ஏ.வி. கிரியுடையது.

  தேவாரம் திருவாசகம்
  தெரியாது
  இராமாயணம்... மகாபாரதம்
  பைபிள் குர்ரான்
  திருப்பாவை திருவெம்பாவை
  கந்தர் சஷ்டி... சுப்ரபாதம்
  பெரியபுராணம்
  ஆழ்வார் பாசுரம்
  எதுவும் எனக்குத்
  தெரியாது
  ஒன்றுமட்டும்
  தெரியும்
  "தீதும் நன்றும்
  பிறர் தர வாரா..."

Kannan Natarajan

unread,
Sep 19, 2009, 8:31:27 PM9/19/09
to mint...@googlegroups.com
பிளாட் பாரத்தில் கண் தெரியாத கணவன், மனைவி, இரு குழந்தைகள் -  உலகமே அந்தத் தம்பதியர்க்கு இருட்டு - அந்தப் பக்கம் போகும்போதெல்லாம் அவர்கள் சிரித்து மகிழ்ந்து பேசிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறேன்; அடுத்தவேளை அவர்களுக்கும் அந்தக் குழந்தைகளுக்கும் யார் மூலம் என்ன கிடைக்கும் என்று எந்த நிச்சயமும் இல்லாத நிலையில்கூட!

"கருத்துக் குருடர்கள்" என்கிற தலைப்பில் ஹேமலதா பாலசுப்ரமணியம் எழுதியுள்ள "தூறல்கள்" என்கிற புத்தகத்தில் உள்ள ஒரு பதிவுதான் மேலே குறிப்பிடப்பட்டவை.

http://www.dinamani.com/Images/article/2009/9/20/20week.jpg

ஒரு கணவன், தனது மனைவியை எந்த அளவுக்கு நேசிக்க முடியும்?

இதற்கு யாரும் ஷாஜகான்களைத் தேடி அலைய வேண்டாம். தனது மனைவியின் மரணத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் தற்கொலை செய்துகொண்ட எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸ் ஒரு சமீபத்திய உதாரணம்.

எழுத்தாள அன்பர் கே.ஜி.ஜவகர் ஆண்டுதோறும் தமது மனைவியின் நினைவு நாளன்று, தனது உற்ற நண்பர்களை எல்லாம் தனது வீட்டுக்கு அழைத்து விருந்தளித்து உபசரிக்கிறார். மனைவியே அன்று விருந்து கொடுப்பதாக அவருக்கு மன நிறைவு.

அந்த வரிசையில் பாலசுப்ரமணியம் சற்று வித்தியாசமானவர். பாலசுப்ரமணியம் ஹேமலதா என்று மனைவியின் பெயரைச் சேர்த்துதான் கையொப்பம் இடுகிறார். "பாஹே" என்கிற புனைப்பெயரில் தான் எழுதுகிறார். தனது மனைவியின் பெயரால் பல அறப்பணிச் சேவைகளைத் தொடர்ந்து செய்து வருகிறார். எல்லோரும் "இராமஜெயம்" எழுதுகிறார்கள் என்றால், இவர் "ஹேமஜெயம்" என்று தான் வார்த்தைக்கு வார்த்தை முணுமுணுக்கிறார்.

ஈரமுள்ள நெஞ்சத்தில்தான் காதல் துளிர்க்கும். காதலிக்கத் தெரிந்தவர்களிடம் தான் இரசனை இருக்கும். இரசனை இருந்தால் மட்டுமே எழுத்தாளனாக முடியும். மறைவுக்குப் பிறகும் தனது மனைவியை நேசிக்கத் தெரிந்த மனிதனின் எண்ணத்தில் தூய்மையும், எழுத்தில் ஈர்ப்பும் இல்லாமலா போய்விடும்!

Kannan Natarajan

unread,
Sep 19, 2009, 8:36:14 PM9/19/09
to mint...@googlegroups.com
வரலாறு என்பது ஒருதலைப் பட்சமாகவே இருந்து வருகிறது.

வரலாறை எழுதி வைக்கும் காலம், நபர், அன்றைய சூழல் போன்றவை கூட வரலாற்றில் பல தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்தி விடுகிறது.

வெள்ளையர் ஆட்சிக்கு எதிரான இந்திய தேசிய உணர்வு, ஒரு சில ஆட்சி எதிர்ப்பாளர்களின் நிறைகளையும், நல்ல பல செய்கைகளையும் ஒட்டுமொத்தமாக மறைத்துவிட்டது என்பது மறுக்க முடியாத உண்மை.

அதற்கு ஓர் உதாரணம், எட்டயபுரம் சமஸ்தானம்.

எட்டயபுரம் பற்றிய வரலாற்றையும், கணிப்பையும் நாம் பாஞ்சாலங்குறிச்சிப் போருடனும், வீரபாண்டிய கட்டபொம்முவின் வீர மரணத்துடனும் மட்டுமே சம்பந்தப்படுத்திப் பார்க்கலாகாது, மதிப்பிடலாகாது.

எட்டயபுரம் சமஸ்தானத்துக்கு இன்னொரு முகம் இருக்கிறது. அது கலை மற்றும் இலக்கியம் சார்ந்த முகமும். இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களைப் போலவே, எட்டயபுரம் சமஸ்தானத்தினரும் தமிழ்ப் புலவர்களையும், கலைஞர்களையும் ஆதரிப்பதில் முன்னிலை வகித்தனர்.

1868
ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் தேதி முதல் 1878ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி வரையிலான எட்டயபுரம் சமஸ்தானத்தின் சரித்திரத்தை "வம்சமணி தீபிகை" என்கிற பெயரில் அன்றைய சமஸ்தான அதிபதி ஜெகவீரராம குமார எட்டப்பரின் விருப்பப்படி, அப்போதைய சமஸ்தான சம்ஸ்கிருதப் பண்டிதர் கவிகேசரி சாமி தீட்சிதர் என்பவர் எழுதி இருக்கிறார்.

இதில் பாஞ்சாலங்குறிச்சிப் போர், வீரபாண்டிய கட்டபொம்மு ஜாக்சன் துரையையும், பானர்ஜி துரையையும் எதிர்கொண்ட விவரங்கள் போன்றவை குறிக்கப்பட்டுள்ளன. எட்டயபுரம் ஜமீனுக்கு கும்பெனி கவர்னர் மற்றும் துரையிடமிருந்து வந்த செய்திகள், உத்தரவுகள், மானியங்கள் போன்றவை கூடக் குறிப்பிடப்படுகின்றன.


1919
ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி மகாகவி சுப்பிரமணிய பாரதி எட்டப்ப நாயக்கருக்கு ஒரு விண்ணப்பம் வைக்கிறார். "முன்பு கவிகேசரி ஸ்ரீஸ்வாமி தீக்ஷிதரால் எழுதப்பட்ட "வம்சமணி தீபிகை" என்ற எட்டயபுரத்து இராஜவம்சத்தின் சரித்திரம் மிகவும் கொச்சையான தமிழ் நடையில் பலவிதமான குற்றங்களுடன் இருப்பது சன்னிதானத்துக்குத் தெரிந்த விஷயமே. அதைத் திருத்தி நல்ல, இனிய, தெரிந்த தமிழ் நடையில் நான் அமைத்துத் தருவேன். இதனால் இராஜ குடும்பத்துக்கு அழியாத கீர்த்தியும், தமிழ் மொழிக்கொரு மேன்மை பொருந்திய சரித்திர நூலும் அமையும்" என்பது பாரதியாரின் விருப்பம்.

பாரதி பதிப்பிக்க நினைத்த அந்த நூலை,
  • இளசை மணியன்
  • தொ.மு.சி.இரகுநாதனின்
அறிவுரைப்படி எந்தவிதத் திருத்தமும் செய்யாமல் அப்படியே மூலத்தை வெளியிட்டிருக்கிறார்.

எத்தனையோ சரித்திர நாவல்கள் படித்திருக்கிறோம். இது நாவல் அல்ல. சரித்திரம். நிஜக் கதையைவிட சுவாரசிமானது.

ஆ.சிவசுப்பிரமணியன் தனது முன்னுரையில் குறிப்பிட்டிருப்பதுபோல, முற்றிலும் ஜமீன் சார்புடன் இந்நூல் எழுதப்படிருந்தாலும், இதிலுள்ள செய்திகள் வரலாற்று ஆவணங்கள் என்பதில் சந்தேகமில்லை. எட்டப்பனின் பார்வையில் வீரபாண்டிய கட்டபொம்மு வித்தியாசமாக அல்லவா தெரிகிறார்?

N. Kannan

unread,
Sep 19, 2009, 9:02:34 PM9/19/09
to mint...@googlegroups.com
2009/9/20 Kannan Natarajan <thar...@gmail.com>

>
> ஈரமுள்ள நெஞ்சத்தில்தான் காதல் துளிர்க்கும். காதலிக்கத் தெரிந்தவர்களிடம் தான் இரசனை இருக்கும். >இரசனை இருந்தால் மட்டுமே எழுத்தாளனாக முடியும். மறைவுக்குப் பிறகும் தனது மனைவியை நேசிக்கத் >தெரிந்த மனிதனின் எண்ணத்தில் தூய்மையும், எழுத்தில் ஈர்ப்பும் இல்லாமலா போய்விடும்!

ஆகா! இன்றைய நற்சிந்தனையாக இதை நான் காண்கிறேன்!!

க.>

PENNESWARAN KRISHNA RAO

unread,
Sep 20, 2009, 2:50:25 AM9/20/09
to mint...@googlegroups.com
இன்றைய நற்சிந்தனையாக கண்ணன் இதை அடையாளம கண்டு கொண்டதால் இன்று நான் எந்த அதிகப் பிரசங்கத்தயும் செய்யப் போவதில்லை.
 
இன்று பதிவாகி இருக்கும் விஷயங்கள் உண்மையிலேயே நெஞ்சத்தைத் தொடுகின்றவை.
 
இதற்கு எதிர்மாறாக நடந்து கொண்ட சிலரைப் பற்றியு் சொல்லியாக வேண்டும்.  அதை நாளைக்கு சொல்லலாம் என்று இருக்கிறேன்.
 
இன்று அதைப் பற்றிப்பேசினால் இன்று பேசப்பட்ட நல்லவர்களை அவமதித்தது போல ஆகிவிடும்.
 
பென்னேஸ்வரன்
 
 
2009/9/20 N. Kannan <navan...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
Sep 20, 2009, 4:33:30 AM9/20/09
to mint...@googlegroups.com
ஒரு  திரைப்படத்தில் 
 
 
இயக்குனர் பாக்கியராஜ்  அவர்கள்  கேட்பார்
 
 
 
சிறந்த   பத்தினி    யார் என்று கேட்டால்
 
 
உங்களுக்கெல்லாம்     நளாயினி, சீதை, கண்ணகி  இவர்கள்  பெயர்கள் தான்   நினைவுக்கு  வருமா
 
உங்கள்  மனைவியின் பெயர்  நினைவுக்கு  வராதான்னு 
 
 
 
 
அது போலத்தான்  நாமெல்லோரும்
 
 
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
 
 
 
 
 
 

 
2009/9/20 N. Kannan <navan...@gmail.com>

N. Kannan

unread,
Sep 20, 2009, 4:47:58 AM9/20/09
to mint...@googlegroups.com
யப்பாவோ!

இது எங்கேயோ போயிடும் போலருக்கே. அதிலே நான் கட் பண்ண விட்டுப்போன
வரிகளையும் சேர்த்தால் இவ்வளவுதான் :

> ஈரமுள்ள நெஞ்சத்தில்தான் காதல் துளிர்க்கும். காதலிக்கத் தெரிந்தவர்களிடம் தான் இரசனை இருக்கும். >இரசனை இருந்தால் மட்டுமே எழுத்தாளனாக முடியும்.

இதிலேயும் வம்பு வருமோ?

க.>

2009/9/20 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:

--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..

Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

Venkatachalam Subramanian

unread,
Sep 21, 2009, 12:34:12 AM9/21/09
to mint...@googlegroups.com
ஓம்.
தமிழ் அகராதிகளும் அவற்றை உருவாக்கியவர்களும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
  1. சதுரகராதி:-இதை உருவாக்கியவர் வீரமா முனிவர்.1732-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
  2. பெப்ரியசு அகராதி:- பெப்ரியசு. 1779-ஆம் ஆண்டு வெளிவந்தது.
  3. ராட்லர் தமிழ் அகராதி- பாகம் 1:- இதை தொகுத்தவர் ராட்லர்.1834
  4. ராடர் தமிழ் அகராதி- பாகம் 2:-1837-இல் வெளிவந்தது.
  5. ராட்லர் தமிழ் அகராதி-பாகம் 3:-1839-இல் வந்தது.
  6. ராட்லர் தமிழ் அகராதி- பாகம் 4:-1841-இல் வந்தது.
  7. மானிப்பாய் அகராதி:- இதை உருவாக் கியவர் இருவர்.. யாழ்ப்பாணம் சந்திரசேகர பண்டிதர் மற்றும் சரவணமுத்துப் பிள்ளை. 1834-ஆம் ஆண்டு வெளிவந்தது.
  8. சொற்பொருள் விளக்கம்:- களத்தூர் வேதகிரி முதலியார்.1850-இல் வெளிவந்தது.
  9. போப்புத் தமிழ் அகராதி:- உருவாக்கியவர் ஜி.யுபோப்.1869-ஆம் ஆண்டு வெளிவந்தது.
  10. அகராதிச் சுருக்கம்:-இதை உருவாக்கியவர் விஜயரங்க முதலியார். 1883-இல் வெளிவந்தது.
  11. பேரகராதி:- இதை உருவாக்கியவர் காஞ்சிபுரம் இராமசாமி நாயுடு. 1893-ஆம் ஆண்டு வெளிவந்தது.
  12. தரங்கம்பாடி அகராதி:-  பெரியசு அகராதியின் விரிவு இது. 1897-ஆம் ஆண்டு வெளிவந்தது.
  13. தமிழ்ப் பேரகராதி:-இதனை உருவாக்கியவர் யாழ்ப்பாணம் கதிரைவேற் பிள்ளை. 1899-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
  14. தமிழ்ப் பேரகராதி:- இதுவும் யாழ்ப்பாணம் கதிரைவேற்பிள்ளை. 1901-ஆம் ஆண்டு வெலளிவந்தது.
  15. தமிழ்ச் சொல்லகராதி:- இதனை உருவாக்கியவரும் யாழ்ப்பாணம் கதிரைவேற்பிள்ளை.1904-ஆம் ஆண்டு வெளிவந்தது.
  16. சிறப்புப் பெயர் அகராதி:- இதை உருவாக்கியவர் ஈக்காடு இரத்தினவேல் முதலியார்.1908-ஆம் ஆண்டு வெளிவந்தது.
  17. இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அகராதி:- இதை உருவாக்கியவர் பி.ஆர். இராமநாதன். 1909-ஆம் ஆண்டு வெளிவந்தது.
  18. அபிதானசிந்தாமணி:-- இதை உருவாக்கியவர் ஆ.சிங்காரவேலு முதலியார். 1910-ஆம் ஆண்டு வெளிவந்தது.
  19. தமிழ்ச் சொல் அகராதி, முதல் தொகுதி:- உருவாக்கியவர் யாழ்ப்பாணம் கதிரைவேற் பிள்ளை 1910-ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச் சங்கம் வெளியிட்டது.
  20. தமிழ்ச் சொல் அகராதி, இரண்டாம் தொகுதி:- உருவாக்கியவர் யாழ்ப்பாணம் கதிரைவேற் பிள்ளை 1912-ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச் சங்கம் வெளியிட்டது.
  21. தமிழ்ச் சொல் அகராதி, மூன்றாம்  தொகுதி:- உருவாக்கியவர் யாழ்ப்பாணம் கதிரைவேற் பிள்ளை 1923-ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச் சங்கம் வெளியிட்டது.
  22. தமிழ் மொழி அகராதி:- இதனை உருவாகியவர் காஞ்சி நாகலிங்க முனிவர். 1911-ஆம் ஆண்டு வெளிவந்தது.
  23. இலக்கியச் சொல் அகராதி:-இதை  உருவாக்கியவர்  கன்னாகம் அ. குமாரசாமி பிள்ளை. 1914-ஆம் ஆண்டு இது வெளிவந்தது.
  24. மாணவர் தமிழ் அகராதி:- இதை உருவாக்கியவர் எஸ். அனவரத விநாயகம் பிள்ளை. 1921-ஆம் ஆண்டு வெளிவந்தது.
  25. சொற்பொருள் விளக்கம்:- சு.சுப்பிரமணிய சாஸ்திரி. 1924-ஆம் ஆண்டு வெளி வந்தது.
  26. தற்காலத் தமிழ்ச் சொல் அகராதி:- இதை உருவாகியவர் ச. பவானந்தம் பிள்ளை.1925-ஆம் ஆண்டில் வெளிவந்தது.
  27. இளைஞர் தமிழ்க் கையகராதி:- இதை உருவாக்கியவர். மே.வீ. வேணுகோபாலபிள்ளை.. 1928-இல் இது வெளியிடபட்டது.
  28. ஜுபிலி தமிழ் அகராதி:- இதை உருவாக்கியவர் எஸ். சங்கரலிங்கமுதலியார். 1935-ஆம் ஆண்டு வெளிவந்தது.
  29. ஆனந்தவிகடன் அகராதி:- இதை ஆனந்த விகடன் பத்திரிக்கை ஆசிரியர் குழு உருவாக்கியது. 1935-ஆம் ஆண்டு இது வெளி வந்தது.
  30. நவீன தமிழ் அகராதி. இதை உருவாக்கியவர் சி.கிருஷ்ணசாமி பிள்ளை. 1935-ஆம் ஆண்டு இது வெளிவந்தது.
  31. மதுரைத் தமிழ்ப் பேரகராதி:- இதை உருவாக்கியவர்கள் மதுரை இ.மா. கோபாலைருஷ்ணக்கோனார் மற்றும் பண்டிதர் பார். 1937-ஆம் ஆண்டு கோனார் நிறுவனம் வெளியிட்டது.
  32. சொற்பிறப்பு ஒப்பியல் தமிழ் அகராதி:- இதைஉருவாக்கியவர் சுவாமி ஞானப் பிரகாசம்.1038-ஆம் ஆண்டு இது வெளிவந்தது.
  33. தமிழறிஞர் அகராதி:- இதை இயற்றியவர் சி. கிருஷ்ணசாமிப் பிள்ளை. 1839-ஆம் ஆண்டு இது வெளி வந்தது.
  34. தமிழ் அமிழ்த அகராதி:- இதை உருவக்கியவர் சி.கிருஷ்ணசாமிப்பிள்ளை. 1939-ஆம் ஆண்டு இது வெளிவந்தது.
  35. விக்டோரியா தமிழ் அகராதி:- இதை உருவாக்கியவர் எஸ். குப்புஸ்வாமி. 1939-ஆம் ஆண்டு இது வெளியானது.
  36. தமிழ் லெக்ஸஸிகன்:- 1939-இல் சென்னைப் பல்கலைகழகம் .உருவாக்கி வெளியிட்டது.
  37. கழகத் தமிழ் அகராதி:- இதைச் சேலை சகாதெவ முதலியார் மற்றும் காழி சிவகண்ணுச் சாமி பிள்ளை ஆகிய இருய்வரும் உருவாக்கினர். 1940-ஆம் ஆண்டு இது வெளிவந்தது.
  38. செந்தமிழ் அகராதி:- இதை உருவாக்கியவர் ந.சி. கந்தையாப் பிள்ளை. இது 1950-ஆம் ஆண்டு வெளியானது.
  39. கமபர் தமிழ் அகராதி:- இதை உருவாக்கியவர் வே. இராமச் சந்திர சர்மா. 1951-ஆம் ஆண்டு வெளிவந்தது.
  40. சுருக்கத் தமிழ் அகராதி:- இதை 1955-ஆம் ஆண்டு கலைமகள் பத்திரிக்கை அலுவலகம் வெளியிட்டது.
  41. கோனார் தமிழ்க் கையக:-இதை உருவாக்கியவர் ஐயன் பெருமாள்க் கோனார். 1955-ஆம் ஆண்டு வெளிவந்தது.
  42. தமிழ் இலக்கிய அகராதி:- இதை உருவாக்கியவர் பாலூர் து. கண்ணப்ப முதலியார். 1957-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
  43. கழகத் தமிழ் அகராதி:- இதைக் ம்கழகப் புலவர் உருவாக்க, 1964-ஆம் ஆண்டு சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்டது.
  44. லிஃப்கோ தமிழ்- தமிழ் அகராதி:- இதை 1969-ஆம் ஆண்டு லிஃப்கோ புத்தக நிறுவனம் வெளியிடப்பட்டது.
  45. தமிழ்ச் சுருக்கெழுத்து அகராதி:- இதை உருவாக்கியவர் அனந்தநாராயணன். இது 1980-இல் வெளிவந்தது.
  46. தமிழ்-அகர முதலி:-இதை உருவாக்கியவர் மு சண்முகம் பிள்ளை. 1984-இல் வெளியானது.
  47. செந்தமிழ் சொற்பியல் பேரகர முதலி:- இதை உருவாக்கியவர் தேவநேயப்பாவாணர். 1984-இல் வெளிவந்தது.
  48. பழந்தமிழ் சொல் அகராதி:- (5-தொகுதிகள்). இதை உருவாக்கியவர் புலவர் த கோவேந்தன். 1985-இல் வெளிவந்தது.
  49. திருமகள் கையகராதி:- இதை உருவாக்கியவர் புலவர் த. கோவிந்தன் மற்றும் கீதா ஆகிய இருவர். 1995-இல் வெளிவந்தது.
  50. மலேசியச் செந்தமிழ் அகராதி:-இதை உருவாக்கியவர் டாக்டர் ஜி.பி. இலாசரஸ். 1997-ல் வெளிவந்தது.
  51. வசந்தா தமிழ் அகராதி:- இதை உருவாக்கியவர் புலவரேறு அரிமதி தென்னகன். .2000இல் வெளியானது.
  52. 52 நர்மதா பதிப்பகத்தின் புலவர் குழு உருவாக்கி 2003-ல் வெளிவந்து தமிழக அரசின் முதற்பரிசு பெற்றது.-=-=-=-=-=-=--=-=-=-=-=-==

  1. இந்தப்பட்டியலினால் யாருக்கு என்ன பயன் என்று எண்ணுவதா? அவர்கள் நேரத்தை வீணடிக்கிறோமா?  புளியமரத்தை நட்டவனைக் கேலிசெய்தார்களாம். அதிவேக உணவு விரும்பப்படுவது போன்று இது பலனளிக்குமா? தெரியவில்லை.
  2. அன்பன் வெ.சுப்பிரமணியன் ஓம்.
2009/9/6 Kannan Natarajan <thar...@gmail.com>

srirangammohanarangan v

unread,
Sep 21, 2009, 1:01:55 AM9/21/09
to mint...@googlegroups.com
நிரல்   உபயோகமானது.    சில  அகராதிகள்   (என்னைச்  சொல்லவில்லை!)   விடப்பட்டிருக்கின்றன.   உதாரணம்     தஞ்சைத்  தமிழ்ப்  பல்கலைக் கழகம்    பதிப்புகள்  சில.   அவை   மற்றவர்கள்    இட்டு  நிரப்பலாம்.   ஆனால்   இவற்றில்  சில   மீண்டும்  இப்பொழுது   மறுபதிப்பு   ஆகியிருக்கிறது.    நண்பர்கள்    அந்த  விவரங்களையும்    பின்னூட்டமாக  இணைத்தால்    நல்ல  பயன்  உண்டு.   
 
ஆமாம்   ஓர்  உதவிக்கருத்து!      அந்தக்  காலத்தில்    அகராதி  தொகுப்பு  பெரும்    சிரமமானது.  இப்பொழுது   போகிற  போக்கில்   விளையாட்டாக    ஓர்  இழை  அகராதி  இழை  என்று   திறந்துவிட்டு    வரிசையாக    சொற்களை   எடுத்து    அவரவர்கள்    பல  shades   of  meaning   கொடுத்துக்கொண்டே    போவது.     இப்படித்தான்    பொருள்  கொள்ள  வேண்டும்   என்று   normative   வகையாக   இல்லாமல்    பலவித  பயன்பாட்டுக்  குழுவினரையும்    உள்ளடக்கி,   வட்டாரக் குழுக்கள்,  இன  வகை  வேறுபாடுகள்,  அதன்   காரணமாக   எழும்    பொருள்  வேறுபாடுகள்   என்று     கரைகட்டாக்  காவிரி  போல்   ஓர்   அகராதி   முயற்சி,   அதாவது   உள்ளது  உள்ளபடி   descriptive  வகையாக     செய்தால்    நன்றாக    இருக்கும்  போல்    தோன்றுகிறது.   பெரும்  பெரும்   திறமையாளர்கள்  --   தேவ்,   வினோத்,   நா கணேசன்,   கண்ணன்,   தி  வா,   கண்ணன்  நடராஜன்,     நரசய்யா,    ஹரிகிருஷ்ணன்,   ழான்,   இன்னும்   பலர்  இருக்கும்  போது    சுவைக்கும்   பயனுக்கும்  குறைவிருக்காது  தானே!   
ஓம்  சுப்ரமண்யனுக்கு   நன்றி. 
 
ஸ்ரீரங்கம்  வி  மோகனரங்கன்
 
On 9/21/09, Venkatachalam Subramanian <v.dot...@gmail.com> wrote:
ஓம்.
தமிழ் அகராதிகளும் அவற்றை உருவாக்கியவர்களும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
  1. சதுரகராதி:-இதை உருவாக்கியவர் வீரமா முனிவர்.1732-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
  1. பெப்ரியசு அகராதி:- பெப்ரியசு. 1779-ஆம் ஆண்டு வெளிவந்தது.
  1. ராட்லர் தமிழ் அகராதி- பாகம் 1:- இதை தொகுத்தவர் ராட்லர்.1834
  1. ராடர் தமிழ் அகராதி- பாகம் 2:-1837-இல் வெளிவந்தது.
  1. ராட்லர் தமிழ் அகராதி-பாகம் 3:-1839-இல் வந்தது.
  1. ராட்லர் தமிழ் அகராதி- பாகம் 4:-1841-இல் வந்தது. ..............,,,,,,,

N. Kannan

unread,
Sep 21, 2009, 5:13:27 AM9/21/09
to mint...@googlegroups.com
ரங்கன்:

சூப்பர் ஐடியா!

நமது விக்கி உருவானவுடன் உங்கள் தலைமையிலேயே தற்காலத் தமிழ் அகராதி
(உள்ளது உள்ளபடி) தயாரிக்க ஆரம்பிக்கலாம்.

க.>

2009/9/21 srirangammohanarangan v <ranga...@gmail.com>:

--

srirangammohanarangan v

unread,
Sep 21, 2009, 5:27:12 AM9/21/09
to mint...@googlegroups.com
நன்றி  கண்ணன்.   ஆனால்  நான்  குறிப்பிட்டது   உள்ளது  உள்ளபடி   என்று   தற்காலத்   தமிழ்  அகராதி   வகையை  அன்று.  எந்த  வித    முன்   பிடிவாதமோ,  அல்லது  கட்சிக்கறையேறிய    வாதமோ  கொள்ளாமல்   தமிழ்   அதன்   பயன்படுத்துநரால்    எங்ஙனம்    பொருள்  கொள்ளப் -- தரப்  பட்டிருக்கிறது   என்றபடியான    தத்ரூபமான   ஒரு  பிரதிபலிப்பு   வகையைக்  குறிப்பிட்டேன்.   நான்  இதற்குத்   தகுதியான    திறமை  உள்ளவன்   அன்று.   வேறு  யாரேனும்  தான்   தலைமை    ஏற்றல்  வேண்டும்.

N. Kannan

unread,
Sep 21, 2009, 8:48:57 AM9/21/09
to mint...@googlegroups.com
நானும் அப்பொருளில்தான் சொன்னேன்.

விக்கி என்றால் எல்லோரும் தேர் இழுப்பதுதானே! பயமற்க.

க.>

2009/9/21 srirangammohanarangan v <ranga...@gmail.com>:

Kannan Natarajan

unread,
Sep 27, 2009, 6:31:08 AM9/27/09
to mint...@googlegroups.com
மெய்கண்டார் "சிவஞானபோதம்" இயற்றுவதற்கு முன்பே "சைவ சித்தாந்தம்" என்பது தமிழரது வாழ்க்கை நெறியாகவே இருந்தது என்பது தெளிவு.

மெய்கண்டாருக்கு முற்பட்டு வழங்கிய சாத்திர நூல்களுள் "ஞானாமிர்தம்" குறிப்பிடத்தக்கது. சிவஞானபோதத்திற்கு உரையெழுதிய சிவஞான முனிவர் ஞானாமிர்தத்திலிருந்து பல இடங்களில் மேற்கோள் காட்டுவதிலிருந்து இந்த நூல் சிவஞானபோதத்திற்கு முற்பட்டது என்று கருதலாம். 

சைவ சித்தாந்த சாத்திரங்கள் 14.

இவற்றை வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு ஆசிரியர்கள் முன் வைத்திருக்கின்றனர்.

ஆனால், இவற்றுள் தலையாய சாத்திரம் எது என்று வினவினால் மெய்கண்டார் அருளிய சிவஞானபோதம்தான் என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை. 

திருவெண்ணைநல்லூருக்கு விஜயம் செய்த பரஞ்சோதி முனிவர், அங்கே மாமன் வீட்டுக்கு விருந்தினராக வந்திருந்த சுவேதனப் பெருமாள் என்கிற இளைஞரைக் காண நேர்ந்தது. சுவேதனப் பெருமாளுக்கு சைவ சித்தாந்தத்தின் நுண்பொருளைப் பரஞ்சோதி முனிவர் உபதேசித்து தீட்சைத் திருப்பெயராக மெய்கண்டார் எனும் பெயரையும் சூட்டினார். 

மெய்கண்டார் சிவஞானபோதம் எனும் நூலை இயற்றியதுடன் அதற்கு வார்த்திகப் பொழிப்புரையும் அருளிச் செய்தார். சிவஞானபோத நுண்பொருளை மெய்கண்டாரிடம் கேட்டுத் தெளிந்தோர் 49 பேர். அந்த நாற்பத்தொன்பதின்மரது பரம்பரை வாயிலாகவே சைவத் திருமடங்கள் நிறுவப்பட்டன. 

முதல் மாணவர் பரம்பரையில் வந்த ஸ்ரீநமசிவாய தேசிகரால் நிலைபேறு எய்திய மடம் திருவாவடுதுறை ஆதீனமாகும்.

அதே பரம்பரையில் வந்த ஞானசம்பந்த தேசிகரால் நிறுவப்பட்டதுதான் தருமபுர ஆதீனம். 

சிவஞானபோதம் ஒன்றுதான் சைவ சாத்திரக் கருத்துகளைச் சூத்திரம் மூலமாக உணர்த்தும் தலையாய நூல். இதிலுள்ள சூத்திரங்கள் 12. சூரியன் ஒன்று தான் என்றாலும் ஒவ்வொரு மாதமும் சூரியன் ஒவ்வொரு
ராசியில் உதிப்பதால் ஆதித்தர்கள் பன்னிருவர் என்று சொல்வது மரபு. அதனால் சிவஞானபோதம் 12 சூத்திரங்களால் ஆனது என்பது குறிப்புணர்வு. 

முதல் ஆறு சூத்திரங்களும் "பொது அதிகாரம்" எனப்படும். பின் ஆறும், "உண்மை அதிகாரம்" எனப்படும்.

அதுமட்டுமல்ல, சிவஞானபோதம் "பிரமாண இயல்", "இலக்கண இயல்", "சாதன இயல்", "பயன் இயல்",என நான்கு இயல்களாக, ஒவ்வொரு இயலிலும் மூன்று சூத்திரங்களைக் கொண்டதாக உள்ளது. 

மெய்கண்ட தேவரின் சிவஞானபோதம் வடமொழிச் சிவஞானபோதத்தின் மொழிபெயர்ப்பு என்று பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. சிவஞானபோதத்திற்கு மிகச் சிறந்த உரையை எழுதிய மாதவச் சிவஞான முனிவரும் இந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டு அதன் அடிப்படையில் உரை வரைந்துள்ளார். பிற்காலத்தில் சிவஞானபோதத்திற்கு உரை எழுதிய வ.உ.சிதம்பரம் பிள்ளையும் வடமொழிச் சிவஞானபோதத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதாகச் கொள்ளப்படும் 6ஆம் நூற்பாவையே சரியானது என்று ஏற்றுக்கொண்டு அதன் அடிப்படையில் தமது உரையை அமைத்துள்ளார். 

"கப்பலோட்டிய தமிழன்", "செக்கிழுத்த செம்மல்" வ.உ.சி.யின் தமிழ்த்தொண்டு அளப்பரியது. அவர் ஒரு படைப்பாசிரியராகவும், உரையாசிரியராகவும், பதிப்பாசிரியராகவும், மொழிபெயர்ப்பாசிரியராகவும், கவிஞராகவும் திகழ்ந்தவர். அவர் முழுநேர அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பு வரை சைவ சித்தாந்த சபையில் முக்கியமான பங்கு வகித்திருக்கிறார். பிற்காலத்தில் வ.உ.சி. சிவஞானபோத உரை எழுதுவதற்குக் தொடக்கப்புள்ளியாக அமைந்ததேகூட தூத்துக்குடி சைவ சித்தாந்த சபையில் அவர் நிகழ்த்திய உரைகள் தான் எனலாம். 

1934-35களில் சிவஞானபோத உரையின் முன்வடிவை, அப்போது புதிதாகத் தொடங்கப்பட்டிருந்த தினமணி நாளிதழின் வருஷ அனுபந்தத்தில் தான் வ.உ.சிதம்பரம் பிள்ளை எழுதினார். பிறகு அந்த உரை, நூல் வடிவில் தூத்துக்குடி எட்டையபுரம் நெடுஞ்சாலையிலுள்ள குறுக்குச் சாலையில் அரங்கேற்றம் செய்யப்பட்டது. 

http://www.dinamani.com/Images/article/2009/9/27/27dedtia3.jpg


வ.உ.சி. பற்றிய 14 நூல்களை ஏற்கெனவே வெளியிட்டுத் தமிழ்த்தொண்டு புரிந்திருக்கும் செ.திவான் இப்போது வ.உ.சி.யின் சிவஞானபோத உரையையும் மறுபதிப்புச் செய்து வெளியிட்டிருப்பதல்லாமல், வ.உ.சி.யின் சைவ சித்தாந்த கலைத் தொடர்பு பற்றிய அரிய செய்திகளையும் இந்த நூலில் தொகுத்து வழங்கி இருப்பது அதனினும் சிறப்பு!


புலம்பெயர் படைப்பாளிகளின் கவிதைகளில் காணப்படும் கோபமும், ஆவேசமும் அவர்களது மனதில் வெடித்துச் சிதறும் பூகம்பங்களையும், கொந்தளிக்கும் கடலையும் அவை உமிழும் எரிமலைகளையும் நமக்கு வெளிச்சம் போடுகின்றன.

மனிதாபிமானமே இல்லாமல் ஓர் இனப் படுகொலையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் மனிதர்களின் முகத்திரையைக் கிழித்தெறியும் கோபக் கனல்கள் அவை. 

தாயகத்திலிருந்து இடம் பெயர்ந்து அந்நிய நாட்டில் பழைய நினைவுகளுடன், நடைப்பிணமாக வாழும் பல
லட்சம் ஈழ இளைஞர்களில் கவிஞர் கவிதாவும் ஒருவர்.

இவர் யார், எந்த ஊரில் வாழ்கிறார் என்றெல்லாம் தெரியாது.

"யுகமாயினி" சித்தன் சமீபத்தில் "தொட்டிப்பூ" என்கிற கவிதை நூலை வெளியிட்டு, விமர்சனத்துக்காக இரண்டு பிரதிகளையும் அனுப்பி வைத்திருந்தார்.

அதில் ஒரு கவிதையைப் படித்தேன்... அதிர்ந்தேன்... 

இதைவிட வலிமையாக மன உணர்வுகளை வெளிப்படுத்த முடியாது என்று தோன்றுகிறது.

இதோ உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

கவிதையின் தலைப்பு "அஞ்சலி".

எந்த விதியின் கீழ்
எழுதப்பட்டது
இந்தத் தீர்ப்பு?

கொலைக் களங்களில்
தீர்ந்து போன
எங்கள் கவிதைகளுக்கு
யார் தலைப்பு?

முகாம் இடுக்குகளில்
உடைந்து போன
எங்கள் வானத்தின் வெடிப்பு
எங்கே தொடங்கியது?

துப்பாக்கிகள்
பறித்த பின்னும்
துகிலுரியும் இராணுவத்தை
மனிதப் பிறவிகளில்
யார் சேர்த்ததிங்கு?

காலத்தையும்
களங்கத்தையும்
திருத்தி எழுதமுடியாத
என் பேனா
இருந்தென்ன
இனி எழுந்தென்ன?

Kannan Natarajan

unread,
Oct 3, 2009, 7:05:55 PM10/3/09
to mint...@googlegroups.com

மிழ் நாடக இயலுக்கு சங்கரதாஸ் சுவாமிகள் ஆற்றியிருக்கும் பங்களிப்பு வார்த்தையில் அடங்காது. தமிழ் நாடகம் என்பது பல அவதாரங்களை எடுத்து, பல்வேறு தாக்கங்களுக்கு உள்பட்டு நாளும் பொழுதும் மாற்றங்களை ஏற்றுக்கொண்டு வளர்ந்த ஒரு கலையாக நம்முன் காட்சி அளிக்கிறது.

சென்னை பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறை பேராசிரியர் வீ.அரசு குறிப்பிடுவதுபோல, தமிழ் அரங்க மரபு என்பது,

  • நாட்டார் மரபு சார்ந்த கூத்து வடிவம்
  • சம்ஸ்கிருத சொல்லாக்கம் பெற்ற வடிவம்
  • கீர்த்தனை வடிவம்
  • விலாசம் போன்ற வடிவங்கள்
ஆகியவற்றின் தொடர்ச்சியாகச் செயல்பட்டு வந்தது.

19
ஆம் நூற்றாண்டில் உருவான பார்சி மரபையும் உள்வாங்கிச் செயல்படத் தொடங்கியது. பிரித்தானியர்களின் விக்டோரியன் நாடக மரபின் இந்திய வடிவமாகப் பார்சி மரபைப் புரிந்து கொள்ள முடியும்.

மேற்குறித்த பின்புலத்தில்தான் சங்கரதாஸ் சுவாமிகள் நாடக ஆசிரியராக உருப்பெறுகிறார்.

இவரை
19ஆம் நூற்றாண்டு தமிழ் நாடகத்தின் புதிய வெளிப்பாடு என்று கொள்ளலாம்.

கூத்தில் உள்ள ஆட்ட மரபு மற்றும் உரையாடல் மரபைச் சுவாமிகளின் நாடகம் தன்வயப்படுத்தி இருப்பதைக் காணலாம்.


ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏற்பட்ட நிகழ்வுகளைப் பதிவு செய்யவும், அன்றைய படைப்புகளைப் பிற்காலத்தில் ஆர்வலர்கள் ஆய்வு செய்யவும், தொகுப்புகள் அவசியம் தேவை. பல அரிய படைப்புகள் அழிந்து விடாமலும், தொலைந்து விடாமலும் பாதுகாக்க அரிய படைப்புகள் அனைத்தும் தொகுக்கப்பட்டே தீரவேண்டும். இந்த வகையில், சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகங்கள் தொகுக்கப்படுவது அத்தியாவசியத் தேவை. இந்த நாடகங்களின் மூலம் இல்லாமல் நாளைய தலைமுறையினர் தமிழ் நாடகங்களைப் பற்றி ஆய்வுகள் செய்வது எங்ஙனம்?

பழைய புத்தகக் கடைகளில் தேடியும், அன்பர்களிடமிருந்து கேட்டு வாங்கியும் சங்கரதாஸ் சுவாமிகளின்
18 பனுவல்களைத் தொகுத்து அளித்திருக்கும் வீ.அரசுக்கும், புதுச்சேரி "வல்லினம்" பதிப்பகத்தாருக்கும் நாடகக் கலைஞர்களும், தமிழ் ஆர்வலர்களும் ஒரு பாராட்டு விழா எடுத்தாலும் தகும்.

http://www.dinamani.com/Images/article/2009/10/4/tmani.jpg

18
பனுவல்கள் அடங்கிய "சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகத் திரட்டு" என்கிற நூலில் நம்மைக் கவர்ந்த விஷயம் - ஒவ்வொரு நாடகத்துக்கும் பதிப்பாசிரியர் தந்திருக்கும் முன்னுரை!

Kannan Natarajan

unread,
Oct 3, 2009, 7:10:23 PM10/3/09
to mint...@googlegroups.com

துரை செல்லும் போதெல்லாம் தமிழண்ணலை நேரில் சந்தித்து அளவளாவ வேண்டும் என்று பலமுறை நினைத்தும் நடக்கவில்லை. எனது எண்ணம் சமீபத்தில் அன்பர் அகமுடைநம்பியால் நிறைவேறியது. அவர் எழுதிய "பாரதி பாவலன்" நூல் வெளியீட்டு விழாவில் தமிழண்ணலைச் சந்தித்து அளவளாவ முடிந்தது அடியேன் பெற்ற பாக்கியம்.

முனைவர் இராம.பெரியகருப்பன் என்று சொன்னால் தெரியாதவர்களுக்கும் கூட "தமிழண்ணல்" என்று சொன்னால் சட்டெனத் தெரியும். தமிழண்ணலைத் தெரிந்தவர்களுக்கோ "வாழும் நக்கீரன்" என்று அவரை அழைப்பதில் அலாதி இன்பம். தவறு கண்டால் சுட்டிக் காட்டும் தமிழண்ணல், தவறுகளைத் திருத்துவதிலும் முனைப்புக் காட்டுபவர்.

செம்மொழி ஆய்வு மையம் மைசூரிலிருந்தபோது, அதன் கருத்துரைஞர் குழு உறுப்பினர்களில் தமிழண்ணலும் ஒருவர். அப்போது, தொல்காப்பியம், திருக்குறள், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, இரட்டைக் காப்பியம் உள்ளிட்ட 41 பழந்தமிழ் நூல்களுக்கு "மரபு வழிப் பதிப்பு" கொணர்வது என்று முடிவெடுத்தது அந்தக் கருத்துரைஞர் குழு.

அற்புதமான முயற்சி அல்லவா?

அது காலத்தின் கட்டாயம் அல்லவா?

இத்தனை நாள்கள் செய்யாமல் விட்டதே தவறல்லவா?

அது என்ன "மரபு வழிப் பதிப்பு" என்றுதானே கேட்கிறீர்கள்?

பழந்தமிழ் நூல்கள் அனைத்தும் இன்று எழுத்துப் பிரித்துப் பதிப்பிக்கப்படுகின்றன. இந்தப் பதிப்புகள் பலவும் தவறாகவும் உள்ளன. மக்களுக்குப் போய்ச்சேர வேண்டும் என்பதற்காக பதம் பிரித்து வெளியிடப்படுவதில் தவறில்லை. அதற்கு, மூலம் எப்படி இருக்கிறது என்பது தெரியவேண்டியது அவசியமாகிறது.

உதாரணத்திற்கு, "கொழுநன் தொழுதெழுவாள்" என்றுதான் பரவலாகக் குறள் பதிப்பிக்கப்படுகிறது. ஆனால் மூலம் "கொழுநந்றொழுதெழுவாள்" என்றுதான் இருக்கிறது. ஆகவே, மூலமும் ஆவணப்படுத்தப்பட்டால் மட்டுமே உண்மைப் பொருள் நிலைபெறும் என்பது தமிழண்ணலின் கருத்து மட்டுமல்ல, தமிழ்மொழி சிதைந்துவிடக் கூடாது என்று நினைக்கும் அவரின் கருத்தும் கூட.

இப்படியே போனால் பதம் பிரித்து, பதம் பிரித்து மூலம் சிதைந்துவிடும் அபாயம் நிச்சயமாக உண்டு. எதிர்கால மக்களுக்கு ஏடுகளைத் தேடிப்போக முடியாத நிலையில், அதே வடிவில் பதிப்பித்து காலாகாலத்திற்குப் பழைய பதிப்பை அளிப்பதே இதன் நோக்கம். இதன் மூலம், பிரித்துப் பதிப்பித்தவை சரியா தவறா என தெளிவுபடுத்திக்கொள்ள முடியும்.

ஏடுகள் சிதைந்த நிலையில் இப்பதிப்புகள் ஏடுகளின் வழிப்பட்ட மீட்டுருவமாக என்றென்றும் நிலைபெறும். ஏடுகளில் உள்ளபடியே, சிறிதும் பிரிக்காமல் எப்படி இருந்திருக்குமோ அதேபோல பதிப்பிப்பதும், அதன்மூலம் அவற்றை ஆவணப்படுத்துவதும்தான் மரபு வழிப் பதிப்பின் நோக்கம்.

41 பழந்தமிழ் நூல்கள் ஏறத்தாழ ஓராண்டு காலம் உழைத்து தமிழறிஞர் பலரால் உருவாக்கப்பட்டு அச்சுக்கு ஆயத்தமாய் உள்ளன என்கிறார் தமிழண்ணல். மேலும், தமிழண்ணல் கூறுவதுபோல, இதுபோன்ற "மரபு வழிப் பதிப்பு" அரசால் மட்டுமே கொணரப்பட வேண்டும். அப்போதுதான் அரசு "அங்கீகார இசைவு" பெற்ற நூலாகவும் அது அமையும். அதன்மூலம், அவரவர் கண்டபடி திருத்துவது தவிர்க்கப்படும்.

தமிழண்ணலின் கருத்துதான் இந்த விஷயத்தில் அடியேனின் கருத்தும். இனியும் தாமதிக்காமல், உலகத் தமிழ் மாநாட்டில் தொல்காப்பியம், திருக்குறள், பத்துப்பாட்டு, இரட்டைக் காப்பியம், பதினெண் கீழ்க்கணக்கில் 17 நூல்கள், முத்தொள்ளாயிரம் உள்ளிட்ட 41 நூல்கள் "மரபு வழிப் பதிப்"பாக வெளியிடப்பட வேண்டும். தேவைப்பட்டால் ஒரு பதிப்பாசிரியர் குழு அமைக்கப்பட்டு இந்த முயற்சி விரைவுபடுத்தப்பட வேண்டும்.

Kannan Natarajan

unread,
Oct 3, 2009, 7:12:45 PM10/3/09
to mint...@googlegroups.com

கால் நூற்றாண்டு காலத்துக்கு முன், தங்களது பேச்சாலும், எழுத்தாலும், நட்பு நாடிக் கரம்கோர்த்த விதத்தாலும் என்னைக் கவர்ந்தவர்கள் இருவர்.

ஒருவர், அப்போது இயக்குநர் பாரதிராஜாவின் உதவியாளராக இருந்த கவிஞர் திருமலைராஜன். அவருடைய தொடர்பு இப்போது அறவே இல்லை.

இன்னொருவர், கவிஞர் கிருஷ்ணன் பாலா.

எனது புத்தகக் குவியலை அவ்வப்போது தூசி தட்டி ஒழுங்குபடுத்துவது வழக்கம்.

அப்படி ஒழுங்குபடுத்தும்போது ஆகஸ்ட் 19, 1989இல் கவிஞர் கிருஷ்ணன் பாலா கையொப்பம் இட்டு எனக்குப் பரிசளித்த "இந்த ராஜபாட்டையில்" என்கிற கவிதைத் தொகுப்பு கண்ணில்பட்டது.  

கவிஞர் கிருஷ்ணன் பாலாவின் கவிதைத் தொகுப்பில் "மேய்ப்பன் இல்லாத ஆடுகள்" என்கிற கவிதையை இப்போது படித்தாலும் பொருத்தமாக இருக்கிறது.

அந்தக் கவிதையிலிருந்து ஒரு சில வரிகள்...

எளிமையைப்
போதித்த
எங்கள்
அண்ணலின்
கொள்கைகளை
நமது
தலைவர்கள்
ஏ.ஸி. கார்களில்
ஏந்திப்
பரப்புகிறார்கள்...

சுதேசி வேகம்
போய் -
அந்நிய மோகம்
ஆட்கொண்டு விட்டதால்
எங்கள்
காந்தியைக் கூட
அந்நியன்
காட்டும்போதுதான்
"ஆகா, அருமை, அற்புதம்"
என்கிறோம்...

Kannan Natarajan

unread,
Oct 3, 2009, 7:36:13 PM10/3/09
to mint...@googlegroups.com
ஒரு பெரிய நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக இருந்துவிட்டு, அதை ஒரு நாள் உதறி எறிந்துவிட்டு முழுநேர எழுத்தாளராக மாறியவர் குருசரண் தாஸ். 

மகாபாரதம் குறித்த தமது ஏழாண்டுக் கால ஆராய்ச்சியை அடித்தளமாக வைத்துக் கொண்டு, "த டிஃபிகல்ட்டி ஆஃப் பியிங் குட்" (The Difficulty of being Good) என்று தாம் எழுதிய நூலை வெளியிட்டிருக்கிறார்.

சிவசங்கரி - நந்திதா கிருஷ்ணா இருவருடனும் நூலைப் பற்றிக் கலந்துரையாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார் குருசரண் தாஸ். (சிவசங்கரியும் நந்திதா கிருஷ்ணாவும் குருசரணுடன் உரையாடவில்லை என்றாலும், தங்கள் கருத்தைத் தனித்தனியே உரையாக வெளிப்படுத்தினார்கள்)

ஏற்கனவே "இந்தியா அன்பவுண்ட்" (India Unbound) என்ற இவரது முந்தைய நூல், தாராளமயமாக்கலுக்குப் பிறகு இந்தியா பொருளாதாரச் செழுமையைக் காணப்போவதை முன்னதாகக் கூறியது.

செழிப்பு ஏற்பட்டது. ஆனால் திருப்தியும் மகிழ்ச்சியும் உண்டாயிற்றா?

அரசுப் பள்ளிகளில் நான்கில் ஒன்றுக்கு ஆசிரியர்களே வருவதில்லை. ஆரம்ப சுகாதார மையங்கள் ஐந்தில் இரண்டில் மருத்துவர்கள் வருவதில்லை. இவை என் மனத்தை உறுத்தின. நான் விடை காண மகாபாரதத்தை நாடினேன்.

வியாசரின் மூல நூல் சமஸ்கிருதத்தில் இருந்ததால், நான் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்த என் சமஸ்கிருத மொழி அறிவைச் சற்றுக் கூர்மையாக்கிக் கொண்டேன்! என்று தம்மை அறிமுகம் செய்துகொண்டார்.

ராஜாஜியின் மகாபாரதத்தையும் படித்துப் பார்த்தாராம். "நான் ஒன்றும் புதிதாக விளக்கம் சொல்லி விடவில்லை. மகாபாரதமே பேசுகிறது. அது ஒன்றும் சுய முன்னேற்ற நூல் அல்ல. நமக்கு எதிரே ஒரு கண்ணாடியை வைத்துவிட்டு, பார்க்கச் சொல்கிறது. நாம் நம்மையே எப்படி ஏமாற்றிக் கொள்கிறோம் என்பதைப் புரிய வைக்கிறது. தர்மங்களில் நாம் எங்கெங்கே தோற்றுப் போயிருக்கிறோம் என்பதை வெளிச்சம் போட்டுக் காண்பித்தது.                       

உறவினர்களுக்குள் பொறாமையை அம்பானி சகோதரர்களின் பிளவு சொல்லியது. திருதிராஷ்ட்ரனின் மகன்கள் மீது அவனுக்கிருந்த அதீத அன்பை
ராமலிங்கராஜுவின் பேராசை சுட்டிக் காட்டியது.

நம் வாழ்க்கையில் பழி வாங்குதல் முக்கிய இடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிறது.

தன்னைக் கண்டுகொள்ளவில்லை என்ற காரணத்துக்காக அண்ணன் பிரமோத் மகாஜனைக் கொன்றார் அவர் சகோதரர். பழிவாங்குவதை விட, மன்னித்து விட்டு விடுவதற்கு அதிக வாய்ப்பு இருக்க வேண்டும் என  நினைக்கிறேன்.

குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு ஒரு பத்திரிகையின் வாயிலாகத் திறந்த கடிதம் எழுதினேன். முஸ்லிம்களிடம் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்டு விடுங்கள் என்றேன். கோத்ரா நிகழ்வுகளுக்காக முஸ்லிம்கள் மன்னிப்பு கேட்கட்டும் என்றேன். அவர்கள் கேட்டார்கள்; ஆனால் மோடியிடமிருந்து எந்த பதிலும் இல்லை! என்றார் குருசரண் தாஸ்.

"அருமையான படைப்பு. ஆனால் இரண்டு நாள், மூன்று நாள்களில் படித்து முடித்துவிட முடியாது!" என்றார் சிவசங்கரி. கூடவே நம் கல்வி நிலை பற்றி அரசாங்கம் எப்படி செயல்படுகிறது என்று விளக்க ஒரு குட்டிக் கதை சொன்னார். (வில்லை உடைத்தது யார்? என்று பள்ளிக்கூட இன்ஸ்பெக்ஷனுக்கு வருபவர் கேட்க, பையன் விழிக்க, அவன் நல்ல பையன், அப்படி எல்லாம் செய்ய மாட்டான் என்று ஆசிரியர் கூற, அதிர்ந்து போன இன்ஸ்பெக்டர் தலைமை ஆசிரியரைக் கேட்க, அவரும் ஆசிரியரை ஆதரிக்க, கடைசியில் விஷயம் அரசாங்க கல்வி இலாகாவுக்குப் போய், அவர்கள் வில்லை உடைத்த விஷயம் பற்றி விசாரிக்க ஒரு கமிஷனை நியமிப்பதுதான் குட்டிக் கதையின் சாரம்!)

நந்திதா கிருஷ்ணா,"நீங்கள் எப்படி பீஷ்மரை நல்லவர் என்று கூறலாம்? அவர்தான் சரியான வில்லன். மூன்று பெண்களைக் கவர்ந்து கொண்டு போய், தன் சகோதரன் விசித்திர வீர்யனுக்குத் திருமணம் செய்து வைக்க முயல்கிறாரே, அவர் எப்படி நல்லவராக இருக்க முடியும்?" என்று ஒரு மாறுபட்ட கோணத்தைக் காண்பித்தார்.

பென்குவின் பதிப்பக நிர்வாகியும் அமெரிக்க தூதரக அலுவலக அதிகாரியும் செய்த வரவேற்புரையும் அறிமுக உரையும் கச்சிதமாகப் பேசுவது எப்படி என்பதற்கு மிகச் சரியான உதாரணங்கள்.

சாருகேசி

நன்றி:- ஞாயிறு கொண்டாட்டம் (தினமணி)

Kannan Natarajan

unread,
Oct 10, 2009, 5:27:56 PM10/10/09
to mint...@googlegroups.com
கடந்த வாரம் எழுதும்போது, இயக்குநர் பாரதிராஜாவின் உதவியாளராக இருந்த கவிஞர் திருமலைராஜனைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். தொடர்பு விட்டுப்போய்விட்ட அந்த நண்பரைப் பற்றிய தகவலை அன்பர் அ. நீலகண்டன் மதுரையிலிருந்து தெரிவிக்கிறார்.

மதுபோதைக்கு அடிமையாகி, தான் யார் என்பதையே மறந்துவிட்ட நிலையில், மதுபோதை மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காகச் செயல்படும் ஒரு அறக்கட்டளையின் தொழிற்பயிற்சி மையத்தில் சிகிச்சை பெற்று வந்தாராம் திருமலைராஜன்.

"அவரிடம் நான் பேசினேன். பழைய நினைவுகள் ஏதும் அவரிடம் இல்லை. தான் பாரதிராஜாவிடம் உதவியாளராக இருந்தது, கவிதைப் புத்தகங்கள் எழுதியது போன்ற விவரங்கள் கூட மற்றவர்கள் சொல்லித்தான் தனக்குத் தெரியும் என்றும், தனக்கு நினைவு இல்லை என்றும் தெரிவித்தார். அவர் எழுதிய இரண்டு கவிதைத் தொகுப்புகளான "பாலைவன இராத்திரிகள்", "ஒரு புயலின் ஆரம்பம்" ஆகியவற்றையும், திரையுலகம் பற்றிய "திரைக்கலை - சில சிந்தனைகள்" என்கிற புத்தகத்தையும் என்னிடம் தந்து, இவையெல்லாம் நான் எழுதியதாக உறவினர்களும், நண்பர்களும் தந்தவை என்றும் கூறினார்.

தற்போது கையெழுத்துப் போடவே தடுமாறும் இவரா இவ்வளவு அருமையான படைப்புகளைப் படைத்துள்ளார் என்று ஆச்சரியமாக இருந்தது. கனவுத் தொழிற்சாலையில் தனது கனவுகளையும், வாழ்க்கையையும் தொலைத்தவர்களில் இவரும் ஒருவர் என்பது புரிந்தது. தற்போது, திருமலைராஜன் நல்ல உடல் நலம் மற்றும் மனநிலையோடு புத்துயிர் பெற்று மதுரை அழகர்கோயில் அருகில் உள்ள சேவா நிலையத்தில் இருந்து வருகிறார். அவருக்குப் பழைய நினைவுகள் எதுவும் இல்லை" என்று எழுதியிருக்கிறார் அன்பர் நீலகண்டன்.

அன்பு நண்பா! உனக்கு எங்களைப் பற்றிய நினைவுகள் அழிந்து போயிருக்கலாம். ஆனால், எங்களுக்கு உன்னுடன் அளவளாவி மகிழ்ந்த நாட்கள் பசுமையாகவே நினைவிருக்கின்றன.

கலாரசிகன்

நன்றி:- தினமணி

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Kannan Natarajan

unread,
Oct 10, 2009, 5:32:21 PM10/10/09
to mint...@googlegroups.com
மிகப் பழமையான, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நல்ல நூல்கள் பொதுமக்களைச் சென்றடைய வேண்டும் என்பதற்காக தமிழக அரசு மறுபதிப்புத் திட்டம் ஒன்றைச் செயல்படுத்தி வருகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டிருக்கும் ஓர் அற்புதமான நூல் "ஸ்ரீதிலகர் விசாரணை" அல்லது
1908ம் வருஷத்துக் "கேசரி" "இராஜ நிந்தனைக் கேஸ்" என்கிற புத்தகம்.

சுதந்திரப் போராட்டத்தின் வேகம் அதிகரித்து வந்த நேரம் அது. அன்றைய காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவர் பாலகங்காதர திலகர். அவர் தனது "கேசரி" பத்திரிகையில் எழுதிய கட்டுரைகள் சிலவற்றில் இராஜ துவேஷக் குற்றமுடைய கருத்துகள் இடம்பெற்றதாகக் கூறி அவர் கைது செய்யப்பட்டார். அந்த வழக்கு விசாரணை மிகவும் பரபரப்பாக பம்பாய் உயர் நீதிமன்றத்தில்
1908 ஜூலை 13ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடந்தது.

அந்த வழக்கு விசாரணையில் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்து நீதிமன்றத்தில் தானே மிகத் திறமையுடன் வாதிட்டார் லோகமான்ய திலகர். அவர்
21 மணி 10 நிமிடங்கள் தொடர்ந்து தனது தரப்பு வாதத்தை நீதிமன்றத்தில் முன்வைத்தார். வழக்கு முடிவில் திலகருக்கு ஆறு ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது.

"கேசரி" பத்திரிகையில் தொடர்ந்து வெளிவந்த திலகர் வழக்கு விசாரணை தொடர்பான விவரங்களைத் தமிழிலும், ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்த "சுதேசமித்திரன்" துணை ஆசிரியர் தி.சி. வில்வபதி செட்டியார் தொகுத்து
1909இல் ஒரு நூலாக வெளியிட்டார். அப்போது அந்த நூலின் விலை வெறும் 12 அணா. அதாவது, முக்கால் ரூபாய். இன்றைய கணக்கில் சொல்வதாக இருந்தால் 75 காசுகள்.

தமிழ்நாட்டு ஆவணக் காப்பகத்தின் உதவியுடன் இந்த நூலை நல்லி குப்புசாமி செட்டியார் சார்பில் மறுபதிப்புச் செய்திருக்கிறார்கள் ஸ்ரீபுவனேஸ்வரி பதிப்பகத்தார். இந்தப் புத்தகத்தில் காணப்படும் திலகருடைய வாதங்கள் அவரைப் பற்றிய பிரமிப்பை மேலும் அதிகப்படுத்துகின்றன.

திலகருக்குத் தண்டனை அளிப்பதற்கு முன்னால், "நீங்கள் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?" என்று நீதிபதி தேவார் கேட்டபோது திலகர் அளித்த பதில் என்ன தெரியுமா?

"எல்லாம் கடவுள் செயல். என் நாட்டார் படும் அவதிகளைக் கண்டு புண்ணாக வெந்து கதறிக் கொண்டிருப்பதைப் பார்க்கிலும் கண்மறைவாகக் கஷ்டப்பட்டுக் கொண்டாயினும் சிறையில் கிடப்பதே மேலாகும்.

ஹிந்து - மகமதியர்கள் நீரும் நெருப்புமானாலும் இரண்டும் ஒன்றுகூடி எப்படி உலகத்தை ஒன்றுபடுத்தி வருகிறதோ, அவ்வாறே இவ்விரு வகையினரும் ஒன்றுகூடியேதான் இந்தியா உயர வேண்டும் என்பதை இன்னும் அறியாதிருப்பது மிக்க விசனகரமானதே!"

திலகர் ஒரு தீர்க்கதரிசி என்பதற்கு இதைவிட மேலான ஒரு சான்று தேவையா?

Kannan Natarajan

unread,
Oct 10, 2009, 7:34:17 PM10/10/09
to mint...@googlegroups.com
தமிழகத்தில், பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் பெருமைகளை கூறும் மிகப்பழமை வாய்ந்த நூல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த,  கல்வெட்டு ஆய்வாளர் தமிழரசன் கூறியதாவது:-

சமயக்குரவர் நால்வரின் தேவாரம், திருவாசகம் போன்ற தெய்வப் பாமாலைகளை பெற்ற திருத்தலம் திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில்.

அருணகிரிநாதரின் திருப்புகழ் மற்றும் வடலூர் வள்ளலாரின் பாடல்களையும் இத்தலம் பெற்றுள்ளது.

இது தவிர, இத்தலம் பற்றி கி.பி.,
14ம் நூற்றாண்டில் விஜயநகர அரசாட்சியின்போது "உத்தண்ட வேலாயுத பாரதி" என்பவரால், "வீரட்டானேஸ்வரர் கலம்பகம்" என்ற நூல் எழுதப்பட்டுள்ளது.

1881
ம் ஆண்டில் சிவ சிதம்பர முதலியார் என்பவர், "திருவதிகை மான்மியம்" என்ற நூலை எழுதியுள்ளார்.

1902
ம் ஆண்டு அப்பாவையார் என்கிற வாகீச பக்த நாவலர் என்பவரால்,  "திருவதிகை புராணம்," "திருவதிகை உலா" என்ற நூல்கள் எழுதப்பட்டுள்ளன. அனைத்து நூல்களுமே பாடல்களால் எழுதப்பட்டவை. இவற்றில் சில நூல்கள் காலப்போக்கில் மறைந்து விட்டன.

இதுபோன்று மறைந்த நூல்களில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நூல், "திருவதிகை சைவ சிந்தாந்த பதிற்றுப் பத்தந்தாதி" என்னும் பெயர் கொண்டதாகும். இந்நூல் கி.பி.
15ம் நூற்றாண்டில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. பல பாவின வகைகளில், அந்தாதி நடையில் நூறு பாடல்கள் இந்நூலில் அமைந்துள்ளன. நூலின் ஆசிரியர் பெயர்  தெரியவில்லை.

திருவதிகை பாலூர் சாலையைச் சேர்ந்த வேங்கடத்தான் மற்றும் அவரது மகன் செங்கல்வராயன்  பாதுகாத்து வைத்திருந்த இந்த நூல் பெறப்பட்டுள்ளது. கடந்த
1872ம் ஆண்டில் இந்த நூல் அச்சிடப்பட்டதாகவும், இதற்கு முன் இந்நூல் ஓலைச்சுவடியில் இருந்ததாகவும், தற்போது ஓலைச்சுவடிகள் மக்கிபோய் உதிர்ந்து விட்டதாக அம்மரபினர் கூறுகின்றனர். தற்போது கிடைத்துள்ள அந்தாதி நூலை ஆய்வு செய்து விளக்க உரையோடு வெளியிடப்படும்.

இவ்வாறு பண்ருட்டி தமிழரசன் கூறினார்.

நன்றி:- தினமலர்

Kannan Natarajan

unread,
Oct 10, 2009, 7:41:24 PM10/10/09
to mint...@googlegroups.com
தமிழகத்தில்,உடுமலை அருகே திருமூர்த்திமலை அருவிக்கு செல்லும் வழியில் உள்ளது தளி பேரூராட்சி, ஊர் தான் சின்னது. ஆனால், வரலாற்று சம்பவம் புதைந்த பூமியாக விளங்குகிறது. இந்த பகுதியை "பாளையக்காரர்கள்" செல்வ செழிப்புடன் ஆட்சி செய்துள்ளனர். இதற்கு ஆதாரமாக இன்றும் பல்வேறு சிலைகளும், பழங்கால பொருட்களும் உள்ளன.

"யானை கட்டி போரடித்த களம்" இன்றும் இப்பகுதியில், பழமை மாறாமல் உள்ளது. தளி பொன்னாலம்மன் சோலை பகுதி ஆங்கிலேயர்களையே எதிர்த்த "தளி பாளை பட்டு" தலைமையிடமாக இருந்தது.

பாளையக்காரர்கள் வேட்டைக்கு செல்வதற்கு இப்பகுதியை தான் பயன்படுத்தியுள்ளனர்.

இப்பகுதிக்கு பொன்னாலம்மன் கோவிலுக்கு செல்வதாக இருந்தாலும்; வேட்டைக்குச் செல்வதாக இருந்தாலும், யானைகள் மேல் சவாரி செய்து வருவது பாளையக்காரர்கள் வழக்கம். விளையும் தானியப்பொருட்கள், மலைப்பகுதியிலுள்ள நெல்லிக்காய், தேன், மாங்காய் உள்ளிட்ட பொருட்களை எடுத்து செல்லவும் யானைகளே பயன்படுத்தப்பட்டது.

இப்பவெல்லாம், யானைகளை கட்டிவைக்க தூண்களும், மரங்களும் தான் பயன்படுகிறது. ஆனால், பாளைராஜாக்கள் அப்படியில்லை. தட்டை பாறைகளை "அல்வா" போல் குடைந்து இரண்டு பக்கமும் துவாரம் போன்று அதன் மூலம் சங்கிலி பிணைத்து யானைகளில் கால்களில் கட்டியுள்ளனர். விளையும் தானியங்களை பாறைகளில் காய வைத்து, தானியங்களை பிரிக்கவும் யானைகளை பயன்படுத்தியுள்ளனர். இதற்காக, யானைகளை கட்டும் வகையில், நான்கு இடங்களில், குழிகள் அமைக்கப்பட்டது. தோற்றத்தில், யானைகளின் முகத்தை போல் இக்குழிகள் உள்ளன. இதை "யானை கட்டும் பாறை" என அழைக்கப்படுகிறது.

பாளையக்காரர்கள் ஆட்சிக்காலத்தில், பயன்படுத்தப்பட்ட இப்பாறை காலப்போக்கில், குடியிருப்பாக மாறியுள்ளது. ஆனாலும், யானை கட்டுவதற்காக அமைக்கப்பட்ட தட்டை பாறை குழிகள் மட்டும் இன்றும் அழியாமல் அப்படியே உள்ளன.

Venkatachalam Subramanian

unread,
Oct 11, 2009, 12:50:31 PM10/11/09
to mint...@googlegroups.com
ஓம்.
அந்த திருமூர்த்திமலைக்கு பலமுறை சென்றிருக்கிறேன்.
ஆங்குள்ள அழகிய முருகன் கோயில் ஒன்று சிறப்புடையது. அன்னதானம் செய்வது சிலருக்கு வேண்டுதலாக இருக்கும். அவர்க்ள் இந்தக் கோயிலுக்கு வந்து முருகனுக்கு வழிபாடு செய்துவிட்டு அங்கேயே பெரும் பெரும் பாத்திரங்களில் சமையல் செய்வார்க்ள்.

            நான் சென்றிருந்த வேளை அந்தக் கோயிலின் முன்னர் அவ்வாறு அன்னதானத்துக்காக சமையல் நடந்து கொண்டிருந்தது. அடுப்பையும் உலையையும் பிரம்மாண்டமன பாத்திரங்களையும் பார்த்தபோது குறைந்தது அறு நூறு பேருக்கு உணவு கிடைக்கும் அளவு தயாரிக்கப்பட்டது. கோயில் பூசாரியும் இரண்டொரு நபர்களும் சமையல் செய்பவர் மட்டுமே அங்கிருந்தனர்.

ஏதோ பெரும் அளவில் சாப்பாடு மீந்துபோய் விரையம் ஆகுமே!. அன்னதானப் பலன் கிட்டாமல் அந்த அன்பர் அல்லலுறுவாறோ என்று ஆதங்கத்துடன் இருந்தேன்.

ஆனால், நடந்தது வேறு.

அடுப்பின் புகை தெரிந்தவுடன் மலையின் உயர் பகுதியிலிருந்தும் பிற இணைப்பு வழிகளினின்றும் சாரி சாரி யாகப் பழங்குடியினர் அங்கு வந்து குவிந்தனர்.

பெயர் சொல்லத் தெரியாத , கண்டறியாத அருமையான மூலிகைகள் சகிதம் அவர்கள் வந்து உண்டு மகிழ்ந்து இயல்பான நடனக் காட்சிகள் வாத்திய முழக்கங்களுடன் அவர்களுக்கே உரித்தான முறையில்  தந்துவிட்டு மூலிகைவளம் பற்றிய அனுபவபூர்வ விவரங்களுடன் , நம்பிக்கையுடன்  தேவைப் பட்டவர்களுக்கு வைத்தியமும் செய்து சென்றார்கள்.
அந்த மலை அன்ன தானத்திறென்றே சிறப்புத் தலம் என்பதை அன்று கண்கூடாகக் கண்டேன்.

சற்று புறவழி வாயிலாக மலையின் அடிவாரத்தில் ஏறி உட்சென்றால் வெள்ளிக்கட்டியாய் இழையோடும் பெருவோடை போன்ற நதி ஒன்று மலையினின்றும் இறங்குகிறது.
இறங்கி அருவியாக வீழும் இடத்தில் பஞ்ச லிங்கங்கள் கொண்ட ஒரு சிறு பீடம் கண்ணுக்குத் தெரியுமாறு பாறைகளில் அமைக்கப்பட்டிருக்கிறது.

அந்த லிங்கங்களை அருகில் சென்று பார்ப்பதானால் நீரினுள் மூழ்கி நுழைந்து குகை வாயிலை மூச்சைப் பிடித்துக் கொண்டு தாண்டிச் செல்ல வேண்டும். அருமையான அனுபவம்.

ஓம். வெசுப்பிரமணியன் ஓம்


2009/10/11 Kannan Natarajan <thar...@gmail.com>

Kannan Natarajan

unread,
Oct 24, 2009, 5:46:18 PM10/24/09
to mint...@googlegroups.com
தமிழ் வளர்ச்சிக்கு உகந்த படைப்புகள் வெளிவர நிதி ஒரு தடையாக இருக்கக் கூடாது. இதற்காக, வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள எழுத்தாளர்களின் படைப்புகளை அச்சிட்டு வெளியிட தமிழ் வளர்ச்சித் துறை நிதி உதவி அளித்து வருகிறது.     

தமிழ் வளர்ச்சித் துறையின் தர விதிகளுக்கு உள்பட்டு தகுதியுடைய எழுத்தாளர்களின் படைப்புகள் நிதி உதவி பெறுவதற்குத் தேர்வு செய்யப்படுகின்றன. ஆண்டுக்கு சராசரியாக 25 எழுத்தாளர்களின் படைப்புகள் இதன் மூலம் வெளியிடப்படுகின்றன. 

அதேபோல, தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக, ஒவ்வோர் ஆண்டும் முப்பது துறைகளில் சிறந்த நூல்களைத் தேர்வு செய்து பரிசுகளும் வழங்கப்படுகின்றன. இந்த நூல்களுக்கு வழக்கமான நூலக ஆணைகள் தவிர, பொது நூலகங்களுக்குச் சிறப்பாணைகளாகவும் கூடுதல் எண்ணிக்கையில் பரிசு நூல்களின் பிரதிகள் வாங்கப்பட்டு வந்தன.

ஆனால், கடந்த 2007ஆம் ஆண்டு முதல் தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசுகள் வழங்கப்பட்ட நூல்களுக்குக்கூடப் பொது நூலகத் துறையில் நூலக ஆணை விடுபட்டுள்ளன.  தரமான நூல்கள் என, தமிழ்வளர்ச்சித் துறையால் தேர்வு செய்யப்பட்டு, நிதி உதவி அளிக்கப்பட்டு, அதன் மூலம் வெளியாகும் நூல்களில் பல நூல்கள் நூலகத்துறையால் தேர்வு செய்யப்படுவதில்லை.  நிதி உதவி அளிக்க, நாங்கள் தேர்வு செய்ததாலேயே அந்த நூல்களை நூலகத்துறை வாங்க வேண்டும் என்று கட்டாயம் எதுவும் இல்லை என்கிறது தமிழ் வளர்ச்சித் துறை. 

தமிழ்வளர்ச்சித் துறை நிதி உதவி மூலம் வெளியானவை என்று நூல்களுக்கு முன்னுரிமை அளிக்கும் நடைமுறைகள் இல்லை என்கிறார்கள் நூலகத்துறையினர்.  தரமானவை என்று தமிழ் வளர்ச்சித் துறை தேர்வு செய்து, நிதி உதவி அளிக்கும் படைப்புகளும், சிறந்த நூல்கள் என்று தேர்ந்தெடுத்துப் பரிசு வழங்கப்பட்ட நூல்களும் நூலகத் துறையால் நிராகரிக்கப்படுவது எந்த விதத்தில் நியாயம் என்கின்றனர் படைப்பாளர்கள்.  நல்ல நூல்கள் நூலகங்களுக்குச் சென்றடைந்தால்தானே மக்களுக்குப் பயன்படும்!

Kannan Natarajan

unread,
Oct 24, 2009, 5:52:19 PM10/24/09
to mint...@googlegroups.com
சிறந்த பாடல்களைக் காப்பதும் தொகுப்பதும் அடுத்த தலைமுறைக்கு அவற்றைச் சேர்ப்பதும் கற்றவர் செய்ய வேண்டிய பணிகள் என்ற எண்ண ஓட்டம் முன்பே இருந்தது கண்டு வியக்க வேண்டி உள்ளது.

சொல்லப்போனால், சங்க இலக்கியமே கூட ஒரு தொகைநூல் தானே! 

அப்படிப்பட்ட ஒரு பணியைத்தான் சைவ சமயத்துக்கு நம்பியாண்டார் நம்பி செய்தார். பன்னிரு திருமுறைகள் தொகுப்பில் பதினோரு திருமுறைகள்வரை அவர்தான் தொகுத்தார். அவருக்குப் பின்னால் வந்த சேக்கிழார் பாடிய திருத்தொண்டர் புராணத்தைப் பன்னிரண்டாவதாகச் சேர்த்து அதைப் பிற்காலச் சான்றோர் நிறைவு செய்தனர். 

பன்னிரு திருமுறைகள் வரிசையில் முதல் மூன்றும் சம்பந்தர் பதிகங்கள்.

நான்கு, ஐந்து, ஆறு ஆகிய திருமுறைகள் நாவுக்கரசரின் பதிகங்கள்.

ஏழாவது சுந்தரர் பாடியது.

ஏறக்குறைய எட்டாயிரம் பாடல்களைக் கொண்ட இந்த மூவர் பதிகங்களே "தேவாரம்" எனப்படும். 

மாணிக்கவாசகர் பாடிய திருவாசகமும், திருக்கோவையாரும் எட்டாவது திருமுறையுள் வைக்கப்பட்டன.

பத்தாம் திருமுறை என்று போற்றப்படும் திருமூலர் பாடிய திருமந்திரம்,

பன்னிரண்டாம் திருமுறையாகிய சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணம்,

இரண்டும் தனியாசிரியர்கள் பாடிய தனி நூல்கள் என்ற சிறப்பிடம் பெற்றுள்ளன. 

ஒன்பதாம் திருமுறையும், பதினோராம் திருமுறையும் தனியான அருளாளர்கள் பாடியவை அல்ல.

பலருடைய பாமாலைகளின் தொகுப்புகளாக உள்ளன. 

ஒன்பதாம் திருமுறையின் ஆசிரியர்கள் ஒன்பதின்மர்.

அவர்கள்,
  1. திருமாளிகைத் தேவர்
  2. சேந்தனார்
  3. கருவூர்த்தேவர்
  4. பூந்துருத்திநம்பி காடநம்பி
  5. கண்டராதித்தர்
  6. வேணாட்டடிகள்
  7. திருவாலியமுதனார்
  8. புருடோத்தம நம்பி
  9. சேதிராயர்
முதலியோர் ஆவர். 

ஒன்பதாம் திருமுறை, திருவிசைப்பா, திருப்பல்லாண்டு எனப் போற்றப்படுகிறது.

இந்நூலுள் 28 திருவிசைப்பா பதிகங்களும் ஒரு திருப்பல்லாண்டுப் பதிகமும் அடங்கியுள்ளன.

பாடல்கள் மொத்தம் 301. பாடப்பட்ட தலங்கள் 14.

இதில் உள்ள 28 பதிகங்களும் 10 அகத்துறையில் அமைந்தவை.

மூன்றில் ஒரு பங்கு பதிகங்கள் (10) கருவூர்த்தேவரால் பாடப்பட்டவை. 

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இருந்து "இராமலிங்கம் அபிராமி" அறக்கட்டளைச் சொற்பொழிவுக்காக முனைவர் கி.சுப்பிரமணியன் (ஐ.கே.எஸ்.), ஒன்பதாம் திருமுறையை எடுத்துக் கொண்டார். அந்த உரைகள் இப்போது தொகுக்கப்பட்டு "நீறணி பவளக் குன்றம்" என்கிற பெயரில் புத்தகமாக வெளியிடப்பட்டிருக்கிறது. பத்து தலைப்புகளில் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

இது வெறும் ஒன்பதாம் திருமுறை ஆய்வு நூல் அல்ல. அப்படியே சாறு பிழிந்து தரப்பட்டிருக்கும் கையேடு!

Kannan Natarajan

unread,
Oct 24, 2009, 5:58:44 PM10/24/09
to mint...@googlegroups.com
புதிய தீபாவளி மலர்களைப் புரட்டிக் கொண்டிருந்தபோது, சில கவிதைகளைப் படிக்க நேர்ந்தது.

ஏதோ குறைகிறதே என்று நெஞ்சில் ஒரு நெருடல்.

இந்த வருடம் "கல்கி" தீபாவளி மலர் வரவில்லையே என்கிற ஆதங்கம்தான் அந்த நெருடலுக்குக் காரணம். 

"கல்கி" தீபாவளி மலர் என்று சொன்னதும் பொறி தட்டியது.

15 ஆண்டுகளுக்கு முந்தைய "கல்கி" தீபாவளி மலரில் பொன்மணி வைரமுத்து, "வாசிப்பு" என்கிற தலைப்பில் ஒரு கவிதை எழுதியிருந்தார்.

அந்தக் கவிதை நினைவில் நிற்கிறது.

அதற்கு ஓவியர் ஜெயராஜ் வரைந்திருந்த படமோ கண்ணில் நிற்கிறது. 

பொன்மணி அவரது பெயர் மட்டுமல்ல. அவர் எழுதியிருந்த கவிதையின் ஒவ்வொரு எழுத்தும் பொன்மணி!

http://www.dinamani.com/Images/article/2009/10/25/25tamil2.jpg

அந்தக் கவிதையிலிருந்து சில வரிகள் இதோ;

நானொன்றும்
நாதஸ்வரம் வாசிக்கவோ
புல்லாங்குழல் வாசிக்கவோ
பிரியப்படவில்லை -
நூல் வாசிக்கும் ஆசைமட்டும்
நாள்தோறும் வளர்கிறது.

கதை
கவிதை
கட்டுரை
எதுவாயிருப்பினும்
மகிழ்ச்சி -
சிறகுகட்டிக்கொள்ளும்
மகிழ்ச்சி!

சற்றுமுன் தின்ற பசும்புல்லை
ஆசுவாசமாய் அசைபோடும்
பசுவைப்போல்
படித்ததை நினைக்க நினைக்க
ஆனந்தம் பிறக்கிறது.

நூல் ஒரு விநோதம் -
படைத்தவன்
சொன்னதைச் சொல்லும்;
சொல்லாததையும் சொல்லும்.

வாசிப்பு
புறத்தில் மறப்பு
அகத்தில் விழிப்பு!

வாசிப்பு -
தனிமைத்தவம்
தாய்மடி
வானமழை
ஆழ்கடல்
ஊன்றுகோல்
ஞானதீபம்
தேவகானம்
தலைதொட்டு ஆசீர்வதிக்கும்
தும்பிக்கை!

வாசலுக்கு வெளியேவிரியும் நீலவானம்;
என்
விருப்பத்திற்குரிய வேப்பமரம்;
ஒருகையில் தேநீர்
இன்னொருகையில் புத்தகம் -
இதைவிடவா ஒரு வாழ்க்கை?!


Kannan Natarajan

unread,
Oct 31, 2009, 4:51:13 PM10/31/09
to mint...@googlegroups.com
கடலிலிருந்து குதித்தெழும் கதிரவனையும், குளித்தெழும் குளிர் நிலவையும் குமரிமுனையில் கண்டு களித்தபோது, மனிதனாக, இந்தியனாக, அதிலும் குறிப்பாகத் தமிழனாகப் பிறக்க என்ன தவம் செய்தேனோ என்று மனதில் நெகிழ்ந்தேன்.

கடலில் கால் நனைத்தது ஒருபுறம் இருக்கட்டும். "காலச்சுவடு" அலுவலகத்தில் தமிழில் எனைக் கரைத்த அனுபவத்தை சொல்லாமல் விட்டால் எப்படி?

சுந்தர ராமசாமியின் இல்லத்தில், அவரது நூலகத்தில் நுழைந்தபோது ஏற்பட்ட பிரமிப்பு இன்னும் அகலவில்லை.

பழைய ஞானபானு, "கணையாழி", தீபம், மணிக்கொடி போன்ற இதழ்கள் பத்திரமாகப் பாதுகாக்கப்படும் விதம்; க.நா.சு., புதுமைப்பித்தன் போன்றவர்கள் சேகரித்த புத்தகங்களும், சுந்தர ராமசாமியின் புத்தகங்களும் தனி நூலகமாகப் பராமரிக்கப்படும் நேர்த்தி - கண்ணனுக்கு நன்றி!

ஆராய்ச்சி மாணவர்களுக்கு பயன்படும் விதமாக அந்த நூலகத்தின் நகல் எடுப்பு இயந்திரம் வைக்கப்பட்டிருப்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

ஒரு தனிநபர் நூலகம் இவ்வளவு நேர்த்தியாகப் பராமரிக்கப்படுவது வியப்பைத் தந்தது.

அப்பாடா, எனது காலத்துக்குப் பிறகு, நான் சேகரித்து வைத்திருக்கும் நூல்களை யாரிடம் ஒப்படைப்பது என்கிற கவலை விட்டது...

Kannan Natarajan

unread,
Oct 31, 2009, 4:54:00 PM10/31/09
to mint...@googlegroups.com
நாகர்கோயில் வரை சென்றுவிட்டு எழுத்தாளர் பொன்னீலனை சந்திக்காமல் திரும்பினால் எப்படி?

அழகிய நாயகியம்மாள் கர்ப்பத்திலேயே இலக்கிய உணர்வை ஊட்டி வளர்த்த அழகுதமிழ் எழுத்து, மகன் வாழும் மணிக்கட்டிப் பொட்டல், நாகர்கோயிலை ஒட்டிய அழகிய கிராமம்.

அங்கே ஓர் இயற்கை எழில் கொஞ்சும் காணி நிலத்திலேயே தமக்கென ஓர் உலகம் அமைத்து வாழ்ந்து வருகிறார் அந்த சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர்.

"தும்மினால் குறுநாவல், இருமினால் முழுநாவல்" என்று எழுதித் தள்ளும் நமது பட்டணத்து எழுத்தாளர்களுக்கும் பொன்னீலனுக்கும் தான் எத்தனை வித்தியாசம்?

கடந்த எட்டு ஆண்டுகளாகத் தனது அடுத்த படைப்பை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் அவர்.


1982
இல் குமரி மாவட்டத்தில் நடந்த கலவரம்தான் அவரது "மறுபக்கம்" நாவலின் கதைக் களம்.எழுத்தாளர் பொன்னீலனிடம் ஒரு சிறப்பான குணமுண்டு. தன்னைப் பற்றி அவர் பேசுவதை விட, சக படைப்பாளிகளைப் பற்றித்தான் அதிகம் சிலாகித்துப் பேசுவார்.

சின்னப்ப பாரதியின், "தாகம்" பற்றிய பேச்சு வந்தவுடன் அவர் துள்ளித் குதிக்காத குறை. உற்சாகமாக அந்த நாவலின் கதாபாத்திரங்களைப் பற்றியும், கதைக் களத்தைப் பற்றியும் பொன்னீலன் பாராட்டியபோது, ஒரு விஷயம் புரிந்தது.

நிறைகுடம் தளும்பாது!

குறும்பனை சி.பெர்லின் எழுதிய "நீந்திக் களித்த கடல்" என்கிற சிறுகதைத் தொகுப்பு பற்றி பொன்னீலன் குறிப்பிட்டார். மொழி ஆளுமை அற்புதமாக இருப்பதாகச் சொன்னார்.

எனக்கு யாராவது "நீந்திக் களித்த கடல்" கிடைத்தால் வாங்கி அனுப்புங்களேன்...

Kannan Natarajan

unread,
Oct 31, 2009, 5:00:02 PM10/31/09
to mint...@googlegroups.com
சமீபத்தில் என்னைப் பிரமிக்க வைத்த எழுத்து எது என்று கேட்டால், நிச்சயமாக நான் அது கனிமொழியுடைய எழுத்து என்று தயங்காமல் சொல்வேன். 

முதல்வர் கருணாநிதியின் மகளாக இல்லாமல், மாநிலங்களவை உறுப்பினர் என்கிற அரசியல் அரிதாரம் பூசிக் கொள்ளாமல் கனிமொழி ஒரு கவிஞராக மட்டுமே இருந்திருந்தால், இன்றைய முன்வரிசைப் பெண் கவிஞர்கள் அவருக்குப் பின்னால் தள்ளப்பட்டிருப்பார்கள்.

கனிமொழியின் "சிகரங்களில் உறைகிறது காலம்" என்கிற கவிதைத் தொகுப்பைப் படித்த பிறகு ஏனைய சில கவிதாயினிகளின் படைப்புகள் இலுப்பைப் பூக்களாகத் தெரிகின்றன. 

இந்தப் பெண்ணிடம் இத்தனை கவித்துவமா?

இப்படி ஒரு மொழி ஆளுமையா?

இவ்வளவு யதார்த்தமான நுண்ணிய உணர்வுகளா? 

கனிமொழி பற்றி வெங்கட் சுவாமிநாதன் செய்திருக்கும் பதிவு பற்றி தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம.
ராஜேந்திரன் ஒரு முறை குறிப்பிட்டார்.

"இன்றைய தமிழ் இலக்கியத்துக்குப் புதிய வருகையான கனிமொழி கருணாநிதி எனக்கொரு புதிரான விளைச்சலாகத் தோன்றுகிறார். அவரது கவிதையின் எந்த அம்சத்தையும் நான் பிதுரார்ஜிதமாகவோ, சூழலின் பாதிப்பிலோ பெற்றதாகக் கருத முடியவில்லை" என்கிற வெங்கட் சுவாமிநாதனின் கருத்தை நான் அட்சரம் பிசகாமல் வழிமொழிகிறேன். 

அந்தக் கவிதைத் தொகுப்பில் உள்ள "எப்போதாவது யாரையாவது", "நிவர்த்தி", "தேடுகிறேன்" போன்ற கவிதைகளைப் பலமுறை மீண்டும் மீண்டும் படித்துப் படித்து
ரசிப்பதுடன் நில்லாமல், நண்பர்களுக்குப் படித்துக் காட்டியும் மகிழ்கிறேன்.

"நிவர்த்தி"யின் கடைசி வரிகளில் நெகிழ்கிறேன். "சந்ததி" என்றொரு கவிதை. கனிமொழியின் சமுதாயப் பிரக்ஞைக்கு எடுத்துக்காட்டு இந்தக் கவிதை என்பதைவிட, நம்மில் பலருடைய மனதில் தகித்துக் கொண்டிருக்கும் கேள்விகளின் பிரபதிபலிப்பு என்றுதான் சொல்ல வேண்டும்.

உனக்கென எதைவிட்டுப்
போகிறேன் -
நாங்கள் தலைமுறைகளாய்ச்
சுரண்டி
சக்கையாய்த் துப்பிய
பூமியை!

குயில்களின் கானங்கள்!
நெரிக்கப்பட்ட
மகரந்தமற்ற சோலைகளை!
தூக்கி எறியப்படும்
துண்டு மாமிசங்களுக்காக
கூண்டுக்குள் கர்ஜிக்கும்
களைத்த சிங்கங்களை!

பிடுங்கி நடப்படும்
மலட்டுக் காடுகளை!
வீரத்தின் கரைகளில்
சரித்திரம் வீசியுள்ள
புதைக்கப்படாத பிணங்களை!

கனவிலும் உன்னை
அச்சுறுத்தத் துடிக்கும்
ஏவுகணைகளை!
கானலற்று விரியும்
இந்தப் பாலைவனங்களில்
திக்கற்று எரிந்து அடங்கும்
சாம்பலில் இருந்து
நீயேனும் எழுவாயா!

------------------------------------

Kannan Natarajan

unread,
Oct 31, 2009, 5:54:26 PM10/31/09
to mint...@googlegroups.com
தமிழக அரசு அலுவலகங்களில் ஆங்கில கலப்பின்றி தமிழ்ச் சொற்களை பயன்படுத்துவதில் மதுரை, திருநெல்வேலி மாவட்டங்கள் முதலிடம் வகிக்கிறது. மாவட்டந்தோறும் தமிழக அரசு தமிழ் வளர்ச்சித்துறை அமைத்து, அலுவலகங்களில் தமிழ்ச் சொற்களை பயன்படுத்த வலியுறுத்தி வருகிறது. அதிகாரிகள் ஒரு மாதத்தில் குறையாமல் 10 அரசு அலுவலகங்களில் ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கின்றனர்.

செயலகத்துறையில் உள்ள
35 துறை அலுவலகங்களில் தமிழ் வளர்ச்சித்துறை ஆய்வு செய்கிறது. இதில், கோப்புகளில் ஆங்கில சொற்கள் பயன்படுத்தக் கூடாது. அறிவிப்புகள் தமிழில் இருக்க வேண்டும். இதை பல அரசு அலுவலகங்கள் முழுமையாகச் செயல் படுத்துவதில்லை. மாவட்டந்தோறும் தமிழ் வளர்ச்சித்துறை வெளியிடும் ஆய்வு அறிக்கை அடிப்படையில் முதலிடம் பெறும் அலுவலகங்களுக்கு, அரசு பாராட்டுச் சான்று வழங்கி வருகிறது.

தமிழ்ச் சொற்களை பயன்படுத்துவதில் பின் தங்கியுள்ள அரசு அலுவலகங்களில் தமிழ் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தென் மாவட்டங்களில் மதுரை, திருநெல்வேலி மாவட்டங்கள் தமிழ் பயன்படுத்துவதில் முதலிடம் வகிக்கிறது. வட மாவட்டங்கள், தமிழ்ச் சொற்கள் பயன்படுத்துவதில் பின்தங்கியுள்ளன.

தமிழ் வளர்ச்சித் துறை அதிகாரி கூறுகையில், "ஆங்கில கலப்பின்றி தமிழ்ச் சொற்கள் பயன்படுத்தும் அரசு அலுவலகங்களை ஆய்வு செய்ததில், விருதுநகரில் போலீஸ் (காவல்) துறை தமிழைப் பயன்படுத்துவதில் கடைசி இடமும், தீயணைப்புத்துறை முதலிடமும் வகிக்கிறது. கடந்தாண்டு கைத்தறித்துறை முதலிடம் வகித்தது. தென் மாவட்டங்கள் தான் அலுவலகங்களில் தமிழ்ப் பயன்படுத்துவதில் முதலிடம் வகிக்கிறது. மதுரை, திருநெல்வேலி மாவட்டங்கள் தமிழ் மொழியை ஆங்கில கலப்பின்றி பயன்படுத்துகின்றன,"என்றார்.

meena muthu

unread,
Nov 1, 2009, 2:13:20 AM11/1/09
to mint...@googlegroups.com
வர வர அவியலின் ருசி கூடிக்கொண்டே போகிறது!

ஒவ்வொரு தகவல்களும் தனி தனி மடல்களாக போட்டிருப்பது மேலும் சிறப்பு!நன்றி.

2009/11/1 Kannan Natarajan <thar...@gmail.com>

Kannan Natarajan

unread,
Nov 2, 2009, 5:53:28 AM11/2/09
to mint...@googlegroups.com
காபி பிரியரான தமிழறிஞர் "கஜாரண்ய திராவிடக் கவிமணி" வே.முத்துசாமி ஐயர், தம் நண்பர் ராமகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்றபோது, அவர் இரண்டாம் முறையாக இன்னொரு காபி சாப்பிடுகிறீர்களா? என்று கேட்டாராம்.

உடனே முத்துசாமி ஐயர் தன் பதிலை ஒரு வெண்பா மூலம் தெரிவித்தாராம்:-

முக்கனியும் சர்க்கரையும் மொய்ம்மலர் போல்
தோசைகளும் தக்கமிள காய்ப்பொடியும் சட்னியும் - ஒக்க
அன்பால் சாப்பிடுங்கள் என்றதரு
ராமகிருஷ்ண அன்ப,
காப்பிக்கும் உண்டோ கணக்கு!

யார் இந்த "கஜாரண்ய திராவிடக் கவிமணி" வே முத்துசாமி ஐயர்?

தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யரின் மாணாக்கர்.

கி.வா.ஜகன்னாதனின் நண்பர்.

http://www.dinamani.com/Images/article/2009/11/1/01kon1.jpg

அமரரான அவரது
125வது பிறந்த தினத்தையொட்டி சர்.சி.வி.
ராமன் சாலையில் உள்ள அவருடைய இல்லத்தில் இதற்கான விழா நடைபெறுகிறது.

முத்துசாமி ஐயர் அரங்கநாதபுரம் என்னும் ஊரைச் சேர்ந்தவர். இது திருக்காட்டுப்பள்ளிக்கு அருகே இருக்கிறது.

"
1920ல் என் தாத்தா சங்கர சத்குரு ஆற்றுப்படை பாடியபோது, காஞ்சிப் பெரியவர் அவரைப் பாராட்டிப் பொன்னாடை போர்த்தினார். மற்றொரு முறை அவர் பெரியவருக்குப் பாத பூஜை செய்து, சமஸ்கிருதத்தில் இருந்த பரமேசுவர தோத்திரத்தை, தமிழில் தெளிவாகப் பாடியதற்காக "கஜாரண்ய திராவிடக் கவிமணி" என்ற பட்டத்தைப் பெரியவர் கொடுத்தார்!" என்கிறார் அவர் பேரனும், ஓய்வுபெற்ற அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியருமான முத்துகிருஷ்ணன்.

இந்த ஆற்றுப்படைக்கு
ராவ்பகதூர் வ.சு.செங்கல்வராய பிள்ளை அவர்கள் முன்னுரை அளித்திருக்கிறார்.

  • தொல்காப்பியம் பொருளதிகார ஆராய்ச்சி
  • தனிப்பாக் கோவை
  • விநாயகர் - முருகன் துதிப்பாக்கோவை
  • மயூரநாதர் அந்தாதி
  • "பத்மினி" என்ற புனைகதை
என ஏராளமான நூல்களின் ஆசிரியர் முத்துசாமி அய்யர்.

இவர் சென்னையில் ஆசிரியர் பயிற்சி பெற்றபோது, இவருடைய அறைத் தோழராக டாக்டர் எஸ்.
ராதாகிருஷ்ணன் இருந்தாராம்.

இவருடைய அறுபதாம் ஆண்டு விழாவை ஒட்டி, தஞ்சை வெற்றிவேல் பதிப்பகம் வெளியிட்ட  சிறப்பு மலர் ஒன்றில்,
  • தேசிக வினாயகம் பிள்ளை
  • சுத்தானந்த பாரதியார்
  • சோமசுந்தர பாரதியார்
  • நாவலாசிரியர் கா.சி.வேங்கடரமணி
  • "திருப்புகழ் மணி" கிருஷ்ணசாமி அய்யர்
  • ராமநாதபுரம் மன்னர் ராஜராஜேசுவர சேதுபதி
  • சி.பி.ராமசாமி அய்யர்
  • அ.கி.பரந்தாமனார்
  • எழுத்தாளர் எஸ்.வி.வி.
  • பெ.நா.அப்புசாமி
ஆகியோரின் வாழ்த்துப் பாக்களும், வாழ்த்துச் செய்திகளும் தமிழில் இடம் பெற்றிருக்கின்றன.

ஆனால் மறைமலை அடிகள் மட்டும் ஆங்கிலத்தில் வாழ்த்துக் கடிதம் எழுதியிருப்பது வியப்பைத் தருகிறது!

முத்துசாமி அய்யர் பள்ளித் துணை ஆய்வாளராகப் பணி புரிந்தவர்.

அரங்கநாதபுரத்தில் சிவன் கோயில் கட்டிக் கொடுத்து, பராமரிப்புக்காக நாலு ஏக்கர் நிலத்தையும் எழுதி வைத்திருக்கிறார். பல கோயில்களுக்கு அன்றாடப் பூஜைக்கு நிதியுதவி செய்திருக்கிறார். பல இடங்களில் குளங்கள் வெட்டிக் கொடுத்து, குளங்களில் மக்கள் இறங்கித் தண்ணீர் எடுக்க வசதியாகப் படிக்கட்டுகள் கட்டிக் கொடுத்திருக்கிறார்.

"சிவராத்திரி தினத்தன்று காலையில் புறப்பட்டு, தஞ்சாவூர் சென்று மூன்று காலப் பூஜைகளில் மூன்று வெவ்வேறு சிவன் கோயில்களில் பங்கு கொண்டு விட்டு, இரவு அரங்கநாதபுரம் வந்து சிவன் கோயில் பூஜையில் கலந்து கொள்வாராம். திருவண்ணாமலை சென்றிருந்தபோது, பகவான்
ரமணரை தரிசனம் செய்திருக்கிறார். 

முத்துசாமி அய்யரின் மகன் பாலகவி மு.கோதண்டராமன்
70 வயதைக் கடந்தவர். ஓலைச் சுவடிகளைப் படித்துப் பாதுகாத்துப் பதிப்பிக்கும் பணியில் அயராது உழைத்தவர்.
  • உ.வே.சாமிநாதய்யர் நூலகம்
  • உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
  • ஆசிய விவகாரங்கள் நிறுவனம்
ஆகியவற்றில் இவர் பணி புரிந்தபோது, ஏராளமான ஓலைச் சுவடிகளைத் தேடி எடுத்துப் பதிவு செய்திருக்கிறார். இதற்கான பயிற்சி அளிக்கும் துறை ஒன்றை நிறுவப் பாடுபட்டிருக்கிறார்.

"மலையாள் மகாகவி ஜி.சங்கர குரூப் நினைவு ஓடக்குழல்" பரிசு, நாராயணீயத்தை இவர் தமிழில் மொழிபெயர்த்ததற்காக வழங்கப் பட்டது. இவரது பணிகள் பற்றி, "தமிழ்ச்சுவடிகளும் பதிப்பும்" என்ற நூலை சென்னையில் உள்ள சேகர் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.

சாருகேசி

annamalai sugumaran

unread,
Nov 2, 2009, 9:15:24 AM11/2/09
to mint...@googlegroups.com

சிவராத்திரி தினத்தன்று காலையில் புறப்பட்டு, தஞ்சாவூர் சென்று மூன்று காலப் பூஜைகளில் மூன்று வெவ்வேறு சிவன் கோயில்களில் பங்கு கொண்டு விட்டு, இரவு அரங்கநாதபுரம் வந்து சிவன் கோயில் பூஜையில் கலந்து கொள்வாராம்.

இந்த தகவலில் சற்று  தவறு இருப்பதாக நினைக்கிறேன் .
சிவராத்திரி அன்று  முதல் காலமே மாலையில்  தான் ஆரம்மித்து கடைசி காலம் மறுநாள் விடியலில் முடியும் .
எனவே காலையில் சென்று தரிசிப்பது என்ற தகவல் தவறானது என நினைக்கிறேன் .
சரியா தேவ் !
  .
அன்புடன் ,
ஏ சுகுமாரன்



 

2009/11/2 Kannan Natarajan <thar...@gmail.com>


"சிவராத்திரி தினத்தன்று காலையில் புறப்பட்டு, தஞ்சாவூர் சென்று மூன்று காலப் பூஜைகளில் மூன்று வெவ்வேறு சிவன் கோயில்களில் பங்கு கொண்டு விட்டு, இரவு அரங்கநாதபுரம் வந்து சிவன் கோயில் பூஜையில் கலந்து கொள்வாராம்.
--
A.Sugumaran ,
PONDICHERRY INDIA
MOBILE 09345419948

இதுவரை இல்லாததை அடைய எண்ணினால்
இது வரை செய்யாததை செய்யவேண்டும் !

devoo

unread,
Nov 2, 2009, 9:32:06 AM11/2/09
to மின்தமிழ்
சிவராத்ரி - மாலை அஸ்தமனம் தொடங்கி மறுநாள் உதயம் வரையான
நான்கு யாமப் பொழுதுகள் என்று சொல்லிக் கேட்டுள்ளேன்;
ஆலயத்திலேயே நான்கு யாம வழிபாடுகளையும் பார்த்து வழிபடுவர்;
உபவாஸம் காலையிலிருந்து தொடங்கி விடுவர்.

தேவ்

annamalai sugumaran

unread,
Nov 2, 2009, 9:47:40 AM11/2/09
to mint...@googlegroups.com

நன்றி திரு தேவ் ,
வழக்கமாக நான் இந்த நான்கு கால பூஜையையும் நான்  நான்கு கோவிலில் கழிப்பேன் .
சிவராத்திரிக்கும் சித்தர்மரபுக்கும் சம்பந்தம் உண்டு .
மேலும் புதுவைக்கு விசேஷ சம்பந்தம் உண்டு .
அன்றுதான் சிவபெருமான் தன கைப்பட திருச்சிற்றம்பலமுடையான் என கையெப்பம் இட்ட  திருவாசக  ஓலையை எடுத்து பூஜை செய்வார்கள் .
வருடம் ஒரு முறைதான் .
,புதுவையில் தான் அந்த ஓலை இருக்கிறது அம்பலதாடியர் மடத்தில்

அதனால் தான் காலையில் உபவாசம் தவிர விசேஷ பூஜைகள் சிவராத்த்திரிக்கு உண்டா என்ற என்றேன் .
அன்புடன் ,
ஏ சுகுமாரன் .

2009/11/2 devoo <rde...@gmail.com>

Kannan Natarajan

unread,
Nov 8, 2009, 3:16:25 AM11/8/09
to mint...@googlegroups.com
ஆசிரியர் சாவி ஒருமுறை தனது படைப்புகளைப் பற்றிக் கூறும்போது, தமக்குப் பிடித்த படைப்புகள் என்று குறிப்பிட்டவை,
  • நவகாளி யாத்திரை
  • சிவகாமியின் செல்வன் மற்றும்
  • வழிப்போக்கன்
ஆகிய மூன்றினையும் தான்.

http://www.dinamani.com/Images/article/2009/11/7/8kalarasikan.jpg

"வாஷிங்டனில் திருமணம்" ஒரு கூட்டு முயற்சி என்றும், அதில் "ஆனந்த விகடன்" ஆசிரியர் குழுவின் பங்களிப்பும் இருந்தது என்றும் அவரே பல முறை கூறியிருக்கிறார். 

"வழிப்போக்கன்" ஆசிரியர் சாவிக்குப் பிடித்திருந்ததற்குக் காரணம், அவரது சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட சில அனுபவங்களின் பின்னணியில் உருவான நாவல் அது என்பதுதான்!

"நவகாளி யாத்திரை", அண்ணல் காந்தியடிகளுடன் மிகவும் முக்கியமான பிரச்னைக்குரிய காலகட்டத்தில் பயணம் செய்த அனுபவத்தின் பதிவு. 

ஆசிரியர் சாவி எழுதிய, "சிவகாமியின் செல்வன்" காமராஜ் என்கிற மாமனிதரின் பல்வேறு பரிமாணங்களைப் படம் பிடித்துக் காட்டுவதுடன், சுதந்திர இந்தியாவின் மிகவும் முக்கியமான காலகட்டங்களான 1947 மற்றும் 1969 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற அரசியல் மாற்றங்களின் பின்னணிகளைப் பதிவு செய்யும் ஆவணமாகவும் விளங்குகிறது. 

"தினமணி" ஆசிரியர்கள் பற்றி காமராஜ் சொன்ன சில பதிவுகள் கூட இந்தப் புத்தகத்தில் இடம் பெறுகின்றன. "ஏ.என்.சிவராமன் கூட என்னோடு ஜெயிலிலே இருந்தவர்தான். 1930இல் அலிபுரம் ஜெயிலிலே நான், சிவராமன், சடகோபன், ஆர்.வெங்கட்ராமன் எல்லோரும் ஒரு பக்கம் அடைபட்டிருந்தோம். இலாகூர் வழக்கிலே ஈடுபட்டவங்க இன்னொரு பக்கம். சிவராமன் பெரிய, பெரிய சிக்கலான பிரச்னைகளையெல்லாம் எடுத்து, அலசி, ஆராய்ந்து கோர்வையாக எழுதுவார். பாமரர்களைவிடப் படிச்சவங்க அவர் தலையங்கத்தை ரொம்ப விரும்பிப்படிப்பாங்க. டி.எஸ்.சொக்கலிங்கமும், கல்கியும் பாமரர்களுக்கும் புரியும்படி எழுதுவாங்க..." 

காமராஜ் முதலமைச்சராகப் பதவி ஏற்றதால் அவருடைய வாழ்க்கைத் தரத்தில் பெரிய மாறுதல்கள் எதுவும் ஏற்பட்டுவிடவில்லை. அதே "முக்கா"க் கைச்சட்டை தான். அதே பழைய வீடு தான். 

"இப்படிக் கைக்கடிகாரங்கூட இல்லாமல் இருக்கிறீர்களே, எப்போதாவது நேரம் தெரியவேண்டுமானால் என்ன செய்வீர்கள்?" என்று அவரிடம் கேட்டேன். 

"கடிகாரம் எதற்கு? யாரைக் கேட்டாலும் நேரம் சொல்றாங்க!" என்று பதில் கூறினார் காமராஜ் என்று பதிவு செய்கிறார் ஆசிரியர் சாவி. 

"சிவகாமியின் செல்வன்" புத்தகத்தில் நேரு, இந்திரா காந்தி, இராஜாஜி, சத்தியமூர்த்தி போன்றவர்கள் பற்றிய பல குறிப்புகள் இடம் பெற்றிருப்பதுடன், 1969இல் ஏற்பட்ட காங்கிரஸ் பிளவு பற்றியும் காமராஜ் தமது கருத்துகளைத் தெளிவாக்கி இருக்கிறார்.  "காமராஜ் ப்ளான்" என்று பரவலாக அறியப்படும் மூத்த தலைவர்கள் பதவி விலகிக் கட்சிப்பணி ஆற்றும் திட்டம் ஏன் ஏற்பட்டது என்பதையும் காமராஜ் சொல்லி இந்தப் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர் சாவி. 

"காங்கிரஸ்காரர்கள் எல்லோரும் சர்க்காரையும், பதவியையுமே சுற்றிச் சுற்றி வர ஆரம்பித்து விட்டார்கள். காங்கிரஸ்காரர்கள் பலருக்குப் பதவி மேலே ஆசை வந்துட்டுது. பதவிங்கிறது மக்களுக்குச் சேவை செய்யறதுக்குத்தான் என்கிறதை மறந்துடுறாங்க. இதனாலே கட்சிக்கும், மக்களுக்கும் சரியான தொடர்பு இல்லாமல் போயிடுது. காங்கிரஸ்காரர்களைப் பதவியிலிருந்து வேறு பக்கம் திருப்பியாக வேண்டும். அதற்கு என்னைப் போன்றவர்கள் பதவியிலிருந்து விலகி வெளியே வந்தால் தான் சர்க்காரிலும், பதவியிலும் உள்ள கவர்ச்சி குறையும்", என்பது காமராஜ் தந்த விளக்கம். 

இதுக்காக நீங்கள் முதலமைச்சர் பதவியை இராஜிநாமா செய்ய வேண்டுமா?

அதனால் என்ன இலாபம்? 

"நாமே பதவியிலே தொடர்ந்து உட்கார்ந்துக்கிட்டிருந்தா நாம் செய்யறது சரியா, தப்பாங்கிறது நமக்குச் சரியாகப் புரியாது. பதவியிலிருந்து விலகிப்போய் பார்த்தாத்தான் சரியான "பெர்ஸ்பெக்டிவ்"வா இருக்கும்னு தோணிச்சு. கோபுரத்தின் உள்ளே இருந்து அதை அண்ணாந்து பார்க்கிறதை விட, வெளியே போய் தூர நின்னு பார்த்தால் "கரெக்ட் பெர்ஸ்பெக்டிவ்" கிடைக்கும் இல்லையா? அதுக்காகத்தான் இராஜிநாமா செய்தேன்". 

ஆசிரியர் சாவியும், பெருந்தலைவர் காமராஜும் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தேன் என்பதில் பெருமைப் படுகிறேன். அவர்கள் இருவருடனும் பேசவும் பழகவும் வாய்ப்புக் கிடைத்ததைப் பிறவிப் பயனாகக் கருதுகிறேன். "சிவகாமியின் செல்வன்"  புத்தகத்தைப் படிக்கும்போது அவர்களுடன் உலவும் உணர்வு...

Kannan Natarajan

unread,
Nov 8, 2009, 3:23:25 AM11/8/09
to mint...@googlegroups.com
புத்தக விமர்சனம் எழுதுவது எப்படி? என்பதற்குப் பாடம் நடத்தவா முடியும்?

சித்திரமும் கைப்பழக்கம் என்பதுபோல எழுத்தும்கூட கர்ப்பத்தில் கலந்துவிட்ட வரம் அல்லவா? 

ஆனாலும் புத்தக விமர்சனம் எழுதுவதற்கும் ஓர் இலக்கணம் இருக்க வேண்டுமே...

குறைந்த பட்சம், புத்தக விமர்சனத்துக்கு முன்னோடி என்பது போல ஏதாவது, யாராலாவது, எழுதப்பட்டிருக்க வேண்டுமே...

அது எது என்று நான் பல காலம், பல முறை யோசித்ததுண்டு.

விடை சமீபத்தில் கிடைத்தது. 

ஆ.இரா.வேங்கடாசலபதியைப் பதிப்பாசிரியராகக் கொண்டு "புதுமைப்பித்தன் கட்டுரைகள்" என்கிற தொகுப்பு வெளியாகி இருக்கிறது.

அதில், 1937 - 1938இல் "தினமணி" நாளிதழில் வெளிவந்த புதுமைப்பித்தனின் புத்தக விமர்சனங்கள் இடம் பெற்றிருக்கின்றன. 

பட்டுக் கத்தரித்தாற்போல நாசூக்காக அதேசமயம் சுருக்கமாகப் புத்தக விமர்சனம் எழுதும் உத்தியை புதுமைப்பித்தனிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும்.

அன்றைய மெட்றாஸ் இராஜதானியின் பிரதம மந்திரி இராஜகோபாலாச்சாரியாரே ஆனாலும், புதுமைப்பித்தனின் விமர்சனப் பேனா, "தினமணி"யின் நேர்கொண்ட பார்வையையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளையும் சற்றும் தளர்த்திக் கொள்ளவில்லை என்பதுதான் சிறப்பு. 

  • "இச்சிறு திரட்டில் பாரதிதாஸர், சுத்தானந்த பாரதி முதலியோர் முதல் சாமி சிதம்பரனார், குலாலன் முதலிய அனாமதேயங்கள் ஈறாக, பலர் ஒரு குறிப்பிட்ட இலட்சியத்துக்காகப் பாடப்பட்ட செய்யுள் குவியல்கள் காணப்படுகின்றன" என்று "மாதர் மறுமணப் பாடல் திரட்டு" நூலுக்கும்,
  • "இவ்வளவு பார்ப்பதற்கழகான பிரசுரம் பயனற்ற வேலையாய் முடிந்திருப்பது கண்டு மிகவும் வருந்துகிறேன்" என்று "நீதி நூல்கள் பத்து" என்கிற புத்தகத்திற்கும்,
  • "அரசியல் விஷயங்களும் இத்தனை காலம் போல் பகிஷ்கரிக்கப்படாமல் உள்ளே நுழைய அனுமதிக்கப்பட்டால் பத்திரிகையின் வளர்ச்சி ஒரு விதத்திலும் குறைவுபடாது" என்று தனது ஏழாவது ஆண்டில் காலடி எடுத்து வைத்த "கலைமகள்" மாத இதழ் பற்றியும்,
  • "மிகவும் தாராளமாக வியாக்கியானம் செய்து பார்த்தாலும் முகமதலி ஜின்னாவின் ஜீவிய சரிதம் என்று இந்தப் புத்தகத்தைக் கூற இயலாது. அவர் பெயரை வியாஜமாக வைத்து தொகுக்கப்பட்ட முஸ்லிம் லீக் கொள்கை பற்றிய பத்திரிகைத் துணுக்குகள்",
என்று "ஜனாப் முகமதலி ஜின்னா" என்கிற புத்தகம் பற்றியும்,  புதுமைப் பித்தனின் நறுக்குத் தெரித்தாற்போன்ற புத்தக விமர்சனங்களைப் படித்துப் பிரமித்தேன். 

பாரதியைப் போலப் புதுமைப்பித்தனும் காலனால் வஞ்சிக்கப்பட்டுவிட்டவர்.

ஆனாலும் தான் என்ன?

காலத்தைக் கடந்து நிற்கக் கூடிய தமிழ் இலக்கியகர்த்தாக்கள் அவர்கள் இருவர் மட்டும் தானே?

Innamburan Innamburan

unread,
Nov 8, 2009, 5:36:58 AM11/8/09
to mint...@googlegroups.com
உங்களை என் செய்வது என்பது என் ஆய்வு இப்போது. நான் எழுத விழைந்ததை கூறிவிட்டீர்களே. அதிலும், புதுமைப்பித்தனின் நையாண்டி சுவை பிரமாதம்.

இன்னம்பூரான்.

2009/11/8 Kannan Natarajan <thar...@gmail.com>



--
இன்னம்பூரான்

Suresh sundaresan

unread,
Nov 8, 2009, 9:41:35 AM11/8/09
to mint...@googlegroups.com
அற்புதம் 

படித்து மிகவும் ஆனந்தம் கிடைத்தது 

நன்றி 

சுந்தரேசன் 

2009/11/8 Kannan Natarajan <thar...@gmail.com>

Kannan Natarajan

unread,
Nov 14, 2009, 2:45:01 PM11/14/09
to mint...@googlegroups.com
எந்த ஊருக்குப் போனாலும் அங்கே நான் படித்த பள்ளியோ, கல்லூரியோ இருந்தால் தவறாமல் அந்தக் கல்விக் கோயிலுக்குள் நுழைந்து ஒரு சில நிமிடங்கள் மீண்டும் அந்தக் காற்றைச் சுவாசித்து, பழைய நினைவுகளை அசைபோட்டு மகிழ்வது என்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். பல ஊர்களில் பல கல்விச் சாலைகளில் படித்த அதிர்ஷ்டசாலி நான்.
 
1966இல் மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக இருந்த, பாரதியின் மீது தீராக் காதல் கொண்ட வி.ஜி.சீனிவாசனின் விடாமுயற்சியால் பாரதி சிலை நிறுவப்பட்டபோது, அவருடன் ஒரு அணிலாக உடனிருந்து களித்தவன் நான். பாரதி ஆசிரியராக வேலைபார்த்த பள்ளியில் படித்ததால், அவரது பாதம் பட்ட பூமியில் தடம் பதித்த பேறும் பெற்றேன்.

http://www.dinamani.com/Images/article/2009/11/14/15barathi.jpg

தற்போது தலைமை ஆசிரியராக இருக்கும் கோபாலனிடம், நான் கற்றுத் தேர்ந்த பள்ளி நூலகத்தைப் பார்க்கலாமா என்று அனுமதி கேட்டபோது அவருக்குத் தயக்கம். வேறு வழியில்லாமல் நூலகத்தின் கதவுகளைத் திறந்துவிட்டார்.

பழைய இடத்திலே தான் இப்போதும் நூலகம் இருக்கிறது என்பது மட்டுமல்ல, பழைய நிலையிலேயே இப்போதும் இருக்கிறது என்பது தான் வருத்தம் தரும் விஷயம். நூற்றாண்டு கண்டுவிட்ட பள்ளி. எத்தனை எத்தனையோ பழைய, அரிய நூல்களின் பொக்கிஷமான அந்த நூல் நிலையம் முறையான பராமரிப்பு இல்லாமல் இருப்பது எனக்கு அழுகையை வரவழைத்தது என்பதுதான் உண்மை.

பாவம், தலைமை ஆசிரியரும் நிர்வாகமும் தான் என்ன செய்துவிட முடியும்?

ஆண்டொன்றுக்கு நூலகக் கட்டணமாக வசூலிக்கப்படும் மூவாயிரம்
ரூபாயில், புத்தகம் வாங்குவது இருக்கட்டும், முறையாகப் பராமரிக்கத் தான் முடியுமா?

பள்ளிகளில் நூலகர் ஒருவரை நியமிக்க அரசு அனுமதி அளித்து சம்பளம் கொடுத்தால் தானே முறையாகப் பள்ளி நூலகங்கள் பராமரிக்கப்படும்?

பள்ளிக்கூடங்களில் நூலகங்கள் முறையாகப் பராமரிக்கப்பட்டு, மாணவர்களுக்குப் படிக்கும் பழக்கத்தையும், ஆர்வத்தையும் ஊட்ட வேண்டிய கடமை அரசுக்கு உண்டா, இல்லையா?

மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியின் நிலைமை தானே தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் நிலைமை?

அதைவிடக் கொடுமையான விஷயம் என்ன தெரியுமா?

இலவசமாக வழங்கப்படும் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளும், எரிவாயு அடுப்புகளும் வைக்கப்படும் பாதுகாப்பு அறையாகப் பல பள்ளிக் கூடங்களின் நூலகங்கள் பயன்படும் அவலத்தை யாரிடம் சொல்லி அழ?

என்னமோ போங்கள்.

நாட்டு நடப்பைப் பார்த்தால் சலிப்பும், வெறுப்பும் தான் மிஞ்சுகிறது. பாரதியாரின் சிலை முன்னால் கண்ணீர் மல்க நின்று "நெஞ்சு பொறுக்குதில்லையே..." என்ற பாடலை உரக்கப் பாட வேண்டும் போலிருந்தது...

Kannan Natarajan

unread,
Nov 14, 2009, 2:48:22 PM11/14/09
to mint...@googlegroups.com
சங்க இலக்கியம் என்றாலே அது சராசரி மனிதர்கள் தெரிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் முடியாத ஒன்று என்கிற தவறான கண்ணோட்டம் பரவலாக ஏற்பட்டிருப்பதன் காரணம், சங்க இலக்கியத்தைப் பாமரரும் புரியும் வகையில் எளிமைப்படுத்தி நாம் வழங்காமல் போனது தான். சமீபத்தில் படித்து மகிழ்ந்த ஒரு புத்தகம் "சங்க இலக்கியத் தேடல்".

சங்க இலக்கிய ஆய்வை ஒரு சிறுகதை படிக்கும் சுவாரஸ்யத்துடன் படிக்க வைத்திருக்கிறார் வாணி அறிவாளன்.

"சங்க இலக்கியத்தில் யானைகள்" என்று ஒரு கட்டுரை.

சங்க காலத்தில் யானைகள் ஒரு வீட்டு விலங்காக வளர்க்கப்பட்டு வந்தன என்பதையும், பயிற்சி அளிக்கப்பட்ட யானைகள் வீடுகளிலும், தினைப்புனங்களிலும் காணப்பட்ட குறிஞ்சி நில விலங்கினங்களில் ஒன்றாகத் திகழ்ந்தன என்பதையும் வாணி அறிவாளன் பதிவு செய்திருக்கும் விதம் அழகு!

குறவச் சிறுவர்கள் யானைக் குட்டிகளுடன் அச்சமின்றி ஓடிவிளையாடுவார்கள் என்று சொன்னால் நம்புவீர்களா?

"முழந்தாள் இரும்பிடிக் குழவி
  நறவுமலி பாக்கத்துக் குறமகள் ஈன்ற
 குறியிறைப் புதல்வரொடு மறுவந்து ஓடி."

என்கிற குறுந்தொகை (394:1  -7) வரிகள் அதற்குச் சான்று.

இன்னொரு கட்டுரை, பெண் புலவர்களுக்கே உரித்தான தனித்தன்மை பற்றியது. "பாம்பின் கால் பாம்பறியும்" தானே...?

14 கட்டுரைகள்.

அத்தனையும் ஒன்றுக்கு ஒன்று விஞ்சியதாக இருந்தாலும், படித்ததில் பிடித்தது என்று ஒன்று இருக்கத்தானே செய்யும்.

குறுந்தொகையில் தன்னுணர்ச்சிப் பாடல்கள் என்கிற கட்டுரை தான் அது.

அதற்கு வெள்ளிவீதியாரின் குறுந்தொகைப் பாடல்களை மிகச் சரியாகத் தேர்வு செய்திருக்கும் வாணி அறிவாளனுக்கு சபாஷ்!

சென்னை வள்ளியம்மாள் மகளிர் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றும் முனைவர் வாணி அறிவாளன், சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் க.ப.அறவாணனின் மருமகளாம்.

சும்மாவா சொன்னார்கள், கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் என்று...!

Kannan Natarajan

unread,
Nov 14, 2009, 2:50:56 PM11/14/09
to mint...@googlegroups.com
எந்தவித வசதியும் இல்லாமல் இருந்தும், எழுத்தார்வமும், மொழிப்பற்றும் மட்டுமே துணையாகக் கொண்டு நடத்தப்படும் சிற்றிதழ்கள்தான் உண்மையான இலக்கியப் பணி ஆற்றிக் கொண்டு வருகின்றன என்பது எனது தேர்ந்த முடிவு.

சமீபத்தில் என் கண்ணில் பட்ட ஒரு சிற்றிதழ் சொர்ணபாரதியை ஆசிரியராகவும், உதயை மு.வீரையனை சிறப்பாசிரியராகவும் கொண்டு சென்னை வியாசர்பாடியிலிருந்து வெளிவரும் "கல்வெட்டு பேசுகிறது" என்கிற மாத இதழ்.

எந்தவிதமான பின்னணியும் இல்லாமல் கடந்த 14 ஆண்டுகளாக இந்தச் சிற்றிதழை நடத்தி வருகிறார்கள் என்பதை அறியும்போது ஆச்சரியம் அதிகரிக்கிறது.

அக்டோபர், "கல்வெட்டு பேசுகிறது" இதழில் "நகரம்" என்றொரு கவிதை. எழுதியிருப்பவர் கவிஞர் அமுதகுணாளன். கவிதையைப் படித்ததும் அமுதகுணாளனின் தொகுப்பு ஏதாவது வெளிவந்திருக்கிறதா என்கிற தேடல் தொடங்கியது.

Kannan Natarajan

unread,
Nov 21, 2009, 5:55:41 PM11/21/09
to mint...@googlegroups.com
நண்பர் முத்தையா வெள்ளையன் நினைவுபடுத்தியபோது தான், அடடா, ஏப்ரல் மாதத்திலேயே வெளிவந்துவிட்ட "புத்தகம் பேசுது" சிறப்பு மலர் பற்றி எழுதாமல் விட்டதன் தவறு புரிந்தது. இந்தச் சிறப்பு மலருக்காகவே பாரதி புத்தகாலயத்தினருக்கு ஒரு பாராட்டு விழா எடுத்தால் தகும். 

19ஆம் நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க நிகழ்வு, அச்சு ஊடக வருகை. அதைத் தொடர்ந்து அந்த நூற்றாண்டில் பல புதிய மாற்றங்கள் நிகழ்ந்தன. குறிப்பிட்டுச் சொல்வதாக இருந்தால், பழந்தமிழ் இலக்கண, இலக்கியப் பிரதிகள், ஓலைச் சுவடிகளில் செல்லரித்துப் போய்க்கொண்டிருந்தன. இந்த அரிய பொக்கிஷங்கள் அச்சில் பதிப்பிக்கப்பட்டன. 

1800 முதல் 2000 வரையிலான 2 நூற்றாண்டு கால பதிப்புத்துறை பற்றிய சாதனைகளும், வேதனைகளும் கட்டுரைகளாகத் தொகுக்கப்பட்டு, புதிய புத்தகம் பேசுது சிறப்பு மலராக வெளிவந்திருக்கிறது.
  • ஆறுமுகநாவலர் பற்றி பொ.வேல்சாமியும்
  • சி.வை.தாமோதரம் பிள்ளை பற்றி ஜ.சிவகுமாரும்
  • ரா.இராகவையங்கார் பற்றி கா.அய்யப்பனும்
  • நான்காம் தமிழ்ச்சங்கம் பற்றி ப.தேவேந்திரபூபதியும்
எழுதியிருக்கும் கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை. 

பதிப்புத் துறையில் எந்த அம்சமும் விடுபட்டுப்போகாமல் தொகுக்கப்பட்டிருக்கும் இந்த மலர், மன்னிக்கவும், இந்த ஆவணப் பதிவு, ஒவ்வொரு நூலகத்திலும் கட்டாயம் இடம் பெற்றே தீர வேண்டும். தமிழ் ஆர்வலர்கள் படித்தே ஆக வேண்டும். 

இந்தச் சிறப்பு மலரில், ஆ.சிவசுப்பிரமணியன் - வ.உ.சி.யின் பதிப்புப்பணி பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் திருக்குறள் மீது வ.உ.சி. கொண்டிருந்த அழுத்தமான பற்று எத்தகையது என்பதை, வ.உ.சி.யின் கூற்றின் மூலம் வெளிக் கொணர்ந்திருக்கிறார்.

"செக்கிழுத்த செம்மல்" திருக்குறள் பற்றிக் கூறியிருப்பது இதுதான் -"தமிழர்கள் எல்லோரும் வள்ளுவர் குறளை உரையுடன் அறிந்து பாராயணம் செய்தல் வேண்டும். 1,330 குறளையும் பொருளுடன் உணர்ந்திலாத தமிழர் முற்றுந்துறந்த முனிவரேயாயினும், என்னைப் பெற்ற தந்தையேயாயினும், யான் பெற்ற மக்களேயாயினும் யான் அவரைப் பூர்த்தியாக மதிப்பதுமில்லை; நேசிப்பதுமில்லை!"

Kannan Natarajan

unread,
Nov 21, 2009, 5:59:04 PM11/21/09
to mint...@googlegroups.com
சென்னை கொடுங்கையூர் சாயி விவேகானந்த வித்யாலயா, ஒரு மிகப்பெரிய தமிழ்த் தொண்டைச் செய்து வருகிறது. அ.ச.ஞா. பெயரில் தமிழ் இலக்கிய மன்றம் தான் நடத்துவதுடன் நின்றுவிடவில்லை. இந்தப் பள்ளியில் ஏனைய கல்விச் சாலைகளுக்கு முன்னோடியாக ஒரு விஷயம்கூட நடைபெறுகிறது.  இந்தப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர், ஏனைய பாடங்களில் எத்தனை மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், நல்லொழுக்கக் கல்வியில் குறைந்தது 60 மதிப்பெண்களாவது பெறாவிட்டால், தேர்வில் வெற்றி பெற்றவர்களாகக் கருதப்படுவதில்லை. நல்லொழுக்கக் கல்வியில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்பட்டு, அவர்கள் தேறிய பிறகுதான் அடுத்த வகுப்புக்குச் செல்ல முடியும். 

ஆமாம், நல்லொழுக்கக் கல்விக்கு என்று பாடத்திட்டம், புத்தகம் வைத்திருக்கிறார்களா என்றுதானே கேட்கிறீர்கள்?

இருக்கிறது.

நர்மதா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கும் "தமிழர் நீதிநெறிக் கருவூலம்" தான் நல்லொழுக்கக் கல்வியின் பாடப் புத்தகம்.

"தமிழர் நீதிநெறிக் கருவூலத்தில்" இருப்பது என்னென்ன தெரியுமா?
  • ஆத்திசூடி
  • கொன்றைவேந்தன்
  • உலக நீதி
  • வெற்றிவேற்கை
  • மூதுரை
  • நல்வழி
  • நன்னெறி
ஆகியவற்றின் மூலமும், எளிய தமிழில் கருத்துரையும்.

தமிழ்ப் புலவர் அ.சா.குருசாமி தொகுத்திருக்கிறார். 

தமிழ்கூறு நல்லுலகிலுள்ள எல்லா பள்ளிகளும் இந்த முறையைப் பின்பற்றினால், நாம் நாளைய தலைமுறையினர் நலன் பற்றிக் கவலைப்பட வேண்டிய அவசியமே இருக்காதே...!

Kannan Natarajan

unread,
Nov 21, 2009, 6:02:59 PM11/21/09
to mint...@googlegroups.com
எழுத்தாளர் பொன்னீலனின் மோதிரக் கையால் குட்டுப்பட்ட குறும்பனை சி.பெர்லினின் "நீந்திக் களித்த கடல்" புத்தகத்தை யாராவது அனுப்பித் தாருங்களேன் என்று நான் கேட்டதுதான் தாமதம், ஒன்றுக்குப் பத்தாகப் புத்தகங்கள் வந்து குவிந்துவிட்டன.

பெர்லினுக்கு என்று ஒரு பெரிய
ரசிகர் வட்டமே இருப்பது தெரிகிறது. 
  • நெய்தல் கணியம்
  • விடியலை நோக்கி
  • கரவொலி
  • புதிய நெய்தல்
  • தேன் ஒளி
  • சமுதாய நண்பன்
  • செம்மலர்
போன்ற இதழ்களில் வெளிவந்த சிறுகதைகளைத் தொகுத்து "நீந்திக் களித்த கடல்" என்கிற தலைப்பில் வெளியிட்டிருக்கும் குறும்பனை சி.பெர்லினின் எழுத்தில் ஈரம் இருக்கிறது; கோபம் இருக்கிறது; சமுதாயப் பிரக்ஞை இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக யதார்த்தம் நீந்திக் களிக்கிறது. 

"கடலிலும் போராட்டம்; கரையிலும் போராட்டம்; அலைகளோடும் போராட்டம்; அரசுகளோடும் போராட்டம் என்று பல்வேறு பிரச்னைகளில் வாழ்க்கையே போராட்டமாகிப்போன மீனவர்களின் வாழ்வியலை வெளியே சொல்ல எந்தவித வழியும் இல்லை. மீனவர்களின் யதார்த்தங்களை, வாழ்வியல் சிக்கல்களை ஆவணப்படுத்தி பொதுப்பரப்பில் எடுத்து வைக்க வாய்ப்புகள் மிக மிகக் குறைவு" என்று தனது முன்னுரையில் குறிப்பிடும் பெர்லினின் ஒவ்வொரு சிறுகதையும், குமரிமுனை மீனவர் தம் வாழ்க்கையைத் தத்ரூபமாகப் படம்பிடித்துக் காட்டும் கண்ணாடி. 

  • "கடலுக்குள்ளே...கடலுக்குள்ளே..."
  • "கடலின் கருவறையில்..."
என ஏற்கெனவே இரண்டு சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கும் குறும்பனை பெர்லினின் "நீந்திக் களித்த கடல்" தொகுப்பில், "தூக்குக் கயிறு" என்று ஒரு சிறுகதை. 

ஒரு மூட நம்பிக்கையை விறுவிறுப்பான சிறுகதையாக்கி, பக்கென்று சிரிக்க வைத்து முடித்திருக்கும் பெர்லின், சிறுகதை இலக்கியத்தில் குறும்பனை அல்ல...நெடும்பனை!

Kannan Natarajan

unread,
Nov 21, 2009, 6:11:11 PM11/21/09
to mint...@googlegroups.com
தனது "குட்டி ஆலீஸும் கோடி நட்சத்திரங்களும்" கவிதைத் தொகுப்பின் இரண்டாவது பதிப்பை அனுப்பித் தந்திருக்கிறார் கவிஞர் டி.எல்.சிவகுமார். பிரித்ததும் பார்வையில் பட்ட கவிதை இது,

கடைவீதிக்குச் சென்று
பேரம்பேசிப்
பொருட்களை வாங்கும் போதெல்லாம்
அவளுக்குக்
கணவனின் ஞாபகம் தான்.
அதிக விலைக்கு
அவரை வாங்கியதால்!

Innamburan Innamburan

unread,
Nov 21, 2009, 8:25:23 PM11/21/09
to mint...@googlegroups.com
அவியல் இனிக்கிறதே, சுவை கூட, கூட.
இன்னம்பூரான்

2009/11/22 Kannan Natarajan <thar...@gmail.com>

Kannan Natarajan

unread,
Nov 28, 2009, 5:44:54 PM11/28/09
to mint...@googlegroups.com
தமிழ்​மொழி ஆய்​வா​ளர்​க​ளுக்கு பிரான்​சிஸ் ஒயிட் எல்​லிஸ் என்​கிற பெயர் நன்கு அறி​மு​க​மான ஒன்று. தமிழ்​மொழி மர​புக்​கேற்​பத் தமது பெயரை எல்​லீ​சன் என்று மாற்​றிக்​கொண்ட எல்​லிஸ் துரை,​ சென்னை அர​சாங்​கத்​தில் மாவட்ட ஆட்​சி​யர் உள்​பட பல உயர் பத​வி​களை வகித்​த​வர்.​​

செய்​யுள் இயற்​று​ம​ள​வுக்கு எல்​லிஸ் துரைக்​குத் தமி​ழில் பயிற்சி இருந்​தது. "நம​சி​வாய" என்​கிற ஐந்​தெ​ழுத்து மந்​தி​ரம் பற்றி இவர் ஐந்து பாடல்​களை இயற்றி இருப்​ப​தாக
ரா.பி.சேதுப்​பிள்ளை குறிப்​பி​டு​கி​றார். தமக்​குத் தமிழ் பயிற்​று​வித்த இரா​மச்​சந்​தி​ரக் கவி​ரா​யர் மீது எல்​லிஸ் துரை​யும்,​

"துரைத்​த​னம் கேளீர் துரை எல்​லீ​சன்" என்று இவர் மீது அவ​ரும் பாடல் இயற்றி இருக்​கி​றார்​கள்.​​

திருக்​கு​றளை ஆங்​கி​லத்​தில் மொழி​பெ​யர்த்த முன்​னோடி என்ற அள​வில் அவர் பர​வ​லாக அறி​யப்​ப​டு​ப​வர்.

ஆனால்,​ அதை​வி​டப் பெரிய பங்​க​ளிப்பு ஒன்றை இவர் தமி​ழுக்​குச் செய்​தி​ருக்​கி​றார். அதை ஆய்வு செய்து வெளி​யிட்​டி​ருப்​பது நம்​ம​வர்​கள் யாரு​மல்ல.

"திரா​விட உற​வு​முறை" என்ற புகழ்​பெற்ற நூலை எழு​திய அமெ​ரிக்க மிஷி​கன் பல்​க​லைக்​க​ழ​கப் பேரா​சி​ரி​யர் தாமஸ்.ஆர்.டிர​வுட்​மன்.​​

1856இல் கால்​டு​வெல் திரா​விட மொழி​க​ளின் ஒப்​பி​லக்​க​ணத்தை எழுதி வெளி​யி​டு​வ​தற்கு 40 ஆண்​டு​க​ளுக்கு முன்பே,​ "திரா​விட மொழிக் குடும்​பம்" என்​கிற கருத்​தாக்​கத்தை முன்​மொ​ழிந்​த​வர் எல்​லி​சன் எனப்​ப​டும் பிரான்​சிஸ் ஒயிட் எல்​லிஸ் ​(1777 - 1819).

http://www.dinamani.com/Images/article/2009/11/29/28tm.jpg

"திரா​வி​டச் சான்று" எல்​லி​சும், "திரா​விட மொழி​க​ளும்" என்​கிற தாமஸ். ஆர்.டிர​வுட்​ம​னின் நூல்,​ எல்​லி​சின் பரந்த மொழி​யி​யல் ஆய்​வுச் சாத​னை​களை ஆழ​மாக
ஆராய்​கி​றது.​ பிரிட்​டிஷ் ​ கால​னிய ஆய்​வ​கங்​க​ளில் புதைந்து கிடக்​கும் செய்​தி​க​ளைத் திரட்டி இருப்​ப​தோடு,​ ஏறத்​தாழ இரண்டு நூற்​றாண்​டு​க​ளாக எவ​ருமே பார்த்​தி​ராத
எல்​லி​சின் கையெ​ழுத்​துப் படி​க​ளை​யும் கண்​டெ​டுத்து,​ "திரா​வி​டச் சான்று" என்​கிற நூலை வெளி​யிட்​டி​ருக்​கி​றது கலி​போர்​னியா பல்​க​லைக்​க​ழ​கம்.​

18ஆம் நூற்​றாண்​டின் கடைப்​ப​கு​தி​யில் கோல்​கத்​தா​வில் ஆசி​யக் கழ​கம் நிறு​வப்​பட்​டது. இதன் ஒரு பகு​தி​யாக கீழை​தே​ய​வி​யல் அறி​ஞர்​கள் பங்​காற்​றி​னர். வில்​லி​யம் ஜோன்ஸ் என்​ப​வர் கிரேக்​கம்,​ இலத்​தீன்,​ பார​சீ​கம்,​ சம்ஸ்​கி​ரு​தம் ஆகிய மொழி​கள்,​ குடும்ப உற​வு​டை​யன என்​பதை ஒப்​பீட்டு மொழி​நூல் வழி நிறு​வி​னார்.

இந்​தி​யா​வைப் புரிந்​து​கொள்ள சம்ஸ்​கி​ரு​தம் மைய​மா​னது என்​றும்,​ இந்​திய மொழி​கள் அனைத்​தும் சம்ஸ்​கி​ருத மொழி​யில் இருந்தே கிளைத்​தவை என்​றும்
கோல்​கத்தா கீழைத்​தே​ய​வி​ய​லார் கரு​தி​னர்.​​ இக்​க​ருத்​தாக்​கத்தை சென்​னையை மைய​மா​கக் கொண்​டி​ருந்த எல்​லிஸ் தலை​மை​யி​லான அறி​ஞர்​கள்,​ அடிப்​ப​டை​யி​லேயே பிழை​யா​னது என்று புலமை ரீதி​யாக மறுத்​த​னர். இந்​தக் காலத்​தில் ​தான் எல்​லி​சின் "திரா​விட மொழிக் குடும்​பம்" என்ற கருத்​தாக்​கம் நிறு​வப்​பட்​டது.

1814இல் தெலுங்​கைத் தமி​ழின் "சகோ​தரி மொழி" என்​றும்,​ தமிழ்​தான் பிற திரா​விட மொழி​க​ளின் பெற்​றோர் என்​றும் துணிந்து சுட்​டிக்​காட்​டு​கி​றார் எல்​லிஸ்.​

1816இல் காம்​பெ​லின் தெலுங்கு இலக்​கண நூலுக்கு எழு​திய முன்​னு​ரை​யில்,​ தெலுங்​குக்​கும், சம்ஸ்​கி​ரு​தத்​துக்​கும் குடி உற​வில்லை என்​றும்,​ தமிழ்,​ தெலுங்கு,​ கன்​ன​டம்,​ மலை​யா​ளம்,​ துளு முத​லி​யன திரா​விட மொழிக் குடும்​பம் என்​றும்,​ இவற்​றுக்கு சொற்​கள் அள​வி​லான கொள்​வினை மட்​டும்​தான் சம்ஸ்​கி​ரு​தத்​து​டன் உண்டு என்​ப​தை​யும் எல்​லிஸ் தெளி​வு​ப​டுத்​து​கி​றார்.​

எல்​லி​சின் அகால மர​ண​மும்,​ அவ​ரு​டைய கையெ​ழுத்​துப்​ப​டி​க​ளும் நூல்​க​ளும் சிதைந்​தும், அழிந்​தும் சித​றி​யும் போன​தும்,​ அவ​ரு​டைய பங்​க​ளிப்பு வெளி​யில் தெரி​யா​மல் போய்​விட்​டது. எல்​லிஸ் முன்​மொ​ழிந்த "திரா​விட மொழிக் குடும்​பம்" என்ற கருத்​தாக்​கம் தான் கால்​டு​வெல்​லின் நூலில் விரி​வா​கக் கையா​ளப்​ப​டு​கி​றது.

எல்​லி​சின் முன்​னோடி பங்​க​ளிப்பை கால்​டு​வெல் இருட்​ட​டிப்பு செய்​தா​லும்,​ இரண்டு நூற்​றாண்​டு​க​ளுக்​குப் பிறகு,​ புலமை உல​கம் போற்​றும் பேரா​சி​ரி​யர் தாமஸ் டிர​வுட்​மன் உண்​மையை வெளிச்​சம் போட்​டுக் காட்​டி​யி​ருக்​கி​றார்.​​ ​

"திரா​வி​டச் சான்று -​ எல்​லீ​சும் திரா​விட மொழி​க​ளும்" என்​கிற அற்​பு​த​மான ஆவ​ணப் பதிவை பேரா​சி​ரி​யர் இராம.சுந்​த​ரம் தமி​ழில் மொழி​பெ​யர்த்து,​ வெளி​யிட்​டி​ருக்​கி​றார். இதில் ஒரு சிறப்பு உண்டு. ஆங்​கில மூல நூல் கலி​போர்​னியா பல்​க​லைக்​க​ழக வெளி​யீ​டாக வெளி​வ​ரும் முன்​னரே தமி​ழாக்​கம் வெளி​யாக வேண்​டும் என்​கிற கோரிக்​கையை பேரா​சி​ரி​யர் தாமஸ் டிர​வுட்​மன் ஏற்​றுக் கொண்​டார் என்​பது தான். ஆனா​லும்,​ வேறு பல கார​ணங்​க​ளால் அது சாத்​தி​யப்​ப​ட​வில்​லை​யாம்.

Kannan Natarajan

unread,
Nov 28, 2009, 5:48:50 PM11/28/09
to mint...@googlegroups.com
ரித்​தி​ரக்​கதை என்​றால் மன்​னர்​கள் காலத்​துக்​குத்​தான் போக​வேண்​டும் என்​ப​தில்​லையே..

கடந்த நூற்​றாண்​டின் தொடக்​கத்​தில்,​ பிரிட்​டிஷ் இந்​தி​யா​வையே உலுக்​கிய ஒரு சம்​ப​வம் 22.09.1914இல் எஸ்.எம்.எஸ்.எம்​டன் என்​கிற கப்​பல் சென்​னையைத் தாக்​கிக் குண்டு மழை பொழிந்த நிகழ்வு.

அந்த சரித்​திர நிகழ்​வைக் கதைக்​க​ள​மாக்கி,​ சரித்​தி​ரத்​தில் இருந்​தும் வில​கா​மல்,​ சுவா​ரஸ்​யத்​தி​லும் குறை​வில்​லா​மல் எழு​தப்​பட்​டி​ருக்​கும் வர​லாற்​றுப் புதி​னம்,​ எஸ்.எம்.எஸ்.எம்​டன்.

இந்த எம்​டன் கப்​பல் குண்டு மழை பொழிந்த நிகழ்வை,​ ஐம்​ப​து​க​ளில் வெளி​வந்த "குண்​டூசி" இத​ழில் எம்.ஜி.ஆர். பதிவு செய்​தி​ருந்​த​தாக நினைவு. தானும்,​ அண்​ணன் எம்.ஜி.சக்​ர​பா​ணி​யும் சிறு​வர்​க​ளாக சென்​னை​யில் இருக்​கும் போது எம்​டன் குண்டு போட்​ட​தால் ஏற்​பட்ட பீதி பற்றி அவர் குறிப்​பிட்​டி​ருப்​பார்.

அந்த குண்​டூசி இத​ழில் வெளி​வந்த கட்​டு​ரையை தேடி​ய​லைந்து தோற்​றேன்.

எம்​டன் கப்​பல் 1914 செப்​டம்​பர் 22 இரவு சென்​னை​யைத் தாக்​கி​யது. சுமார் 130 குண்​டு​களை சென்​னைத் துறை​மு​கத்​தில் இருந்த எண்​ணெய் டாங்​கு​கள் மீது வீசி​விட்​டுத்
திரும்​பி​விட்​டது. நிச்​ச​ய​மாக சென்​னை​யைத் தாக்கி எம்​டன் கப்​பல் அழித்​தி​ருக்க முடி​யும். ஏனோ செய்​ய​வில்லை.

இந்​தப் பின்​வாங்​க​லுக்கு என்ன கார​ணம் என்​றும் தெரி​ய​வில்லை.எம்​டன் கொடுத்த அனு​ப​வத்​தைத் தான் மறக்​கவே முடி​யாது என்று அப்​போ​தைய இந்​திய கவர்​னர் ஜென​ரல் ஹார்​டிங் பிரபு பதிவு செய்​தி​ருக்​கி​றார். இந்​தி​யக் கட​லோ​ரப் பகு​தி​க​ளில் எம்​டன் கப்​பல் பயங்​கர பதற்​றத்​தை​யும்,​ பயத்​தை​யும் ஏற்​ப​டுத்​தி​யது என்​றும் ஒரு பேட்​டி​யில் அவர் குறிப்​பிட்​டி​ருக்​கி​றார்.ஐம்​பது நாள்​க​ளுக்கு மேலாக இந்​திய கட​லோ​ரப் பகு​தி​க​ளைக் கலக்​கிய எஸ்.எம்.எஸ்.எம்​டன் என்​கிற ஜெர்​மா​னிய போர்க்​கப்​பல் கடை​சி​யில் கோகோ தீவு​கள் அரு​கில் சிட்னி என்​கிற ஆஸ்​தி​ரே​லிய கப்​ப​லால் தாக்​கப்​பட்டு மூழ்​க​டிக்​கப்​பட்​டது.

தரை தட்டி நின்ற எஸ்.எம்.எஸ்.எம்​டன் கப்ப​லில் இருந்த 131 பேர் மர​ண​ம​டைந்​த​னர்,​ 65 வீரர்​கள் காய​ம​டைந்​த​னர்.

இந்த எம்​ட​னின் சரித்​தி​ரப் பின்​ன​ணி​யு​டன் இந்து ஆகம விதி​மு​றை​கள்,​சிவா​சா​ரி​யார்​க​ளின்
ராஜ​பக்தி,​ துரை​மார்​கள் என்று பல கதா​பாத்​தி​ரங்​களை இணைத்து
அற்​பு​த​மான வர​லாற்​றுப் புதி​னம் ஒன்றை படைத்​தி​ருக்​கும் திவா​கர் உண்​மை​யி​லேயே மகா எம்​டன்!​

சொல்​லப்​போ​னால் எம்​ட​னுக்கு எம்​டன்!​

Kannan Natarajan

unread,
Nov 28, 2009, 5:51:43 PM11/28/09
to mint...@googlegroups.com
வி​ஞர் பேனா.மனோ​க​ரன்,​ தமி​ழக அர​சின் காவல் துறை​யில் சுமார் 30 ஆண்​டு​கள் பணி​யாற்றி,​ பணி நிறைவு பெற்​ற​வர்.

காக்​கிச் சட்​டைக்​குள் இருந்து கவிதை பிறக்​கி​றது என்​றால்,​ சற்றே வியப்​பா​கத்​தான் இருக்​கி​றது.

கல்​லுக்​குள் ஈரம் இருப்​பது போல...​​

வேப்​ப​ம​ரத்​தி​டம் விசா​ர​ணை​யும்,​ சிட்​டுக்​கு​ரு​வி​யி​டம் சந்​தோ​ஷ​மும்,​ மாந​க​ர​மும் நர​க​மும்
ரசிக்க வைத்​தன. ஒரு கவிதை என்னை மீண்​டும் ஒரு​ முறை படிக்​க​வைத்​தது. "தீ இனிது..."

உண்​மை​தான்.

​​கீழ்​வெண்​ம​ணி​யில்
ஏர்​வா​டி​யில்
தரு​ம​பு​ரி​யில்
கோத்​ரா​வில்
குடந்​தை​யில்
பானி​பட்​டில்
ஈழத்​தில்
ஈராக்​கில்
பூமிப்​பந்​தின்
எங்​கா​வது ஒரு மூலை​யில்
நிகழ்ந்து கொண்​டி​ருக்​கி​றது
மனித ஜீவி​தம்
எரி​த​லும் உயிர்த்​த​லும்!

Innamburan Innamburan

unread,
Nov 28, 2009, 6:02:14 PM11/28/09
to mint...@googlegroups.com
கதிரவனோடு எழுந்தது,. படிக்கலாம் என்று கணினியை திறந்தால், புத்த்ம்புதிய இலக்கிய செய்திகளை, கோர்வையாகத் தருகிறார், திவாகர். தாரகையும் மின்னுகிறது.
நற்காலையிது.
இன்னம்பூரான்

2009/11/29 Kannan Natarajan <thar...@gmail.com>

V, Dhivakar

unread,
Nov 29, 2009, 12:42:41 AM11/29/09
to mint...@googlegroups.com
கதிரவனோடு
திவாகர்
தாரகையும்
 
ம்ம்.. இதைக் காலையிலே  சொன்னவர்
 
சந்திரன்
 
தி
2009/11/29 Innamburan Innamburan <innam...@googlemail.com>
 எழுந்தது,. படிக்கலாம் என்று கணினியை திறந்தால், புத்த்ம்புதிய இலக்கிய செய்திகளை, கோர்வையாகத் தருகிறார், . மின்னுகிறது.
நற்காலையிது.
இன்னம்பூரான்

2009/11/29 Kannan Natarajan <thar...@gmail.com>
வி​ஞர் பேனா.மனோ​க​ரன்,​ தமி​ழக அர​சின் காவல் துறை​யில் சுமார் 30 ஆண்​டு​கள் பணி​யாற்றி,​ பணி நிறைவு பெற்​ற​வர்.

காக்​கிச் சட்​டைக்​குள் இருந்து கவிதை பிறக்​கி​றது என்​றால்,​ சற்றே வியப்​பா​கத்​தான் இருக்​கி​றது.

கல்​லுக்​குள் ஈரம் இருப்​பது போல...​​

வேப்​ப​ம​ரத்​தி​டம் விசா​ர​ணை​யும்,​ சிட்​டுக்​கு​ரு​வி​யி​டம் சந்​தோ​ஷ​மும்,​ மாந​க​ர​மும் நர​க​மும்
ரசிக்க வைத்​தன. ஒரு கவிதை என்னை மீண்​டும் ஒரு​ முறை படிக்​க​வைத்​தது. "தீ இனிது..."

உண்​மை​தான்.

​​கீழ்​வெண்​ம​ணி​யில்
ஏர்​வா​டி​யில்
தரு​ம​பு​ரி​யில்
கோத்​ரா​வில்
குடந்​தை​யில்
பானி​பட்​டில்
ஈழத்​தில்
ஈராக்​கில்
பூமிப்​பந்​தின்
எங்​கா​வது ஒரு மூலை​யில்
நிகழ்ந்து கொண்​டி​ருக்​கி​றது
மனித ஜீவி​தம்
எரி​த​லும் உயிர்த்​த​லும்!

கலாரசிகன்

நன்றி:- தினமணி






Kannan Natarajan

unread,
Dec 5, 2009, 8:11:44 PM12/5/09
to mint...@googlegroups.com
வி​ழுப்​பு​ரத்தி​லி​ருந்​து ​ என்​னைச் சந்​திப்​ப​தற்​கா​கவே கொட்​டும் மழை​யில் சிதம்​ப​ரம் வந்​தி​ருந்​தார் இள​வல் கோ.செங்​குட்​டு​வன்.

"இந்​தப் புத்​த​கத்​தைப் படித்​தி​ருக்​கி​றீர்​களா?" என்​ற​படி அவர் பரி​ச​ளித்த புத்​த​கத்​தைப் பார்த்​த​தும் வியந்​தேன் என்​ப​தை​விட அதிர்ந்​தேன் என்​ப​து​தான் உண்மை.

"பாவ​லர் சரித்​திர தீப​கம்" என்பது அந்​தப் புத்​த​கத்​தின் பெயர்.

ஜே.ஆர். ஆணல்ட் என்​கிற யாழ்ப்​பா​ணம் அ.சதா​சி​வம் பிள்​ளை​யால் தொகுக்​கப்​பட்​டது. 1886ஆம் ஆண்டு முதன் முத​லில் வெளி​வந்த இந்​தப் புத்​த​கத்​தின் ஏழா​வது
பதிப்​பைத்​தான் எனக்​குப் பரி​ச​ளிப்​ப​தற்​காக தேடிப்​பி​டித்து வாங்கி,​ எடுத்​துக்​கொண்டு வந்​தி​ருந்​தார் செங்​குட்​டு​வன்.

19ஆம் நூற்​றாண்​டில் ஆங்​கி​லம் படித்த ஒரு தலை​முறை தமி​ழ​கத்​தி​லும்,​ இலங்​கை​யி​லும் தோன்​றி​யது. இவர்​க​ளில் பல​ரும் ஐரோப்​பிய நாடு​களி​லி​ருந்து வந்த
கிறிஸ்​தவ பாதி​ரி​யார்​கள் நிறு​விய கல்​விச்சாலை​க​ளில் படித்​துத் தேறி​ய​வர்​கள்.

ஆங்​கி​லம் படித்த பல தமிழ் இளை​ஞர்​க​ளுக்கு ஆங்​கி​லத்​தில் உள்​ள​தைப் போல தமி​ழி​லும் நமது புல​வர்​க​ளின் வர​லா​றும்,​ தமி​ழின் பெரு​மை​யும் புத்​த​க​மாக்​கப்​பட வேண்​டும் என்​கிற ஆர்​வம் எழுந்​த​தில் வியப்​பென்ன இருக்​கி​றது?​

இந்தக் கால​கட்​டத்​தில் யாழ்ப்​பா​ணத்​தில் பல தமிழ் அறி​ஞர்​கள்,​ தமிழ்ப் பணி​யில் தங்​களை அர்ப்​ப​ணித்​துக் கொண்​ட​னர். அதில் ஒரு​வர் "சைமன் காசிச் செட்டி".

இவர் ஒரு பல்​துறை அறி​ஞர்.

கிரேக்க புல​வர்​கள் பற்றி தொகுக்​கப்​பட்ட "ப்ளூ​ராக்" என்​கிற வர​லாற்று நூல் போல தமிழ்ப் புல​வர்​க​ளின் வர​லாற்றை "தமிழ் ப்ளூ​ராக்" என்ற பெய​ரில் வெளி​யிட்​டார்.

சைமன் காசிச் செட்டி தொகுத்​த​ளித்த "தமிழ் ப்ளூ​ராக்" 196 புல​வர்​க​ளின் வர​லாற்றை மட்​டுமே தொகுத்​த​ளித்​தி​ருந்​தது. மேலும் அந்​தப் புத்​த​கம் ஆங்​கி​லத்​தில் இருந்​தது. அதைத் தமி​ழில் மொழி​பெ​யர்க்​கும் ஆசை​யு​டன் தனது பணி​யைத் தொடங்​கி​னார் அ.சதா​சி​வம் பிள்ளை. மொழி​பெ​யர்ப்​ப​தை​விட தானே ஏன் தமி​ழில் இந்​தப் புல​வர்​க​ளின் சரித்​தி​ரங்​களை தொகுத்து வழங்​கக் கூடாது என்று அவ​ருக்​குத் தோன்​றி​யது. சைமன் காசிச் செட்டி குறிப்​பிட்​டி​ருந்த 196 புல​வர்​கள் மட்​டு​மன்றி மேலும் 214 புல​வர்​கள்
மற்​றும் பெண்​பாற் புல​வர்​க​ளின் சரித்​தி​ரங்​க​ளை​யும் சேர்த்து 410 பேர்​க​ளின் சரித்​தி​ரக் குறிப்​பு​க​ளு​டன் யாழ்ப்​பா​ணம் அ.சதா​சி​வம் பிள்ளை 1886இல் உரு​வாக்​கிய நூல்​தான் "பாவ​லர் சரித்​திர தீப​கம்"!

"பூத உடம்பு இறந்​தும் புக​ழு​டம்பு இற​வாது வைத்​துப்​போன புல​வர்​க​ளின் சரித சங்​கி​ர​க​மொன்றை இது​வ​ரை​யும் யாரும் செய்​தி​ருக்​கக் காணோம்!​ காலஞ்​சென்ற செல்​வச் சீமா​னா​கிய சைமன் காசிச் செட்​டித் துரை ஒன்று தந்​த​ன​ரா​யி​னும் ஆங்​கில பாடை கற்​றார்க்​கன்றி மற்​றார்க்கு அது உப​யோ​கப்​ப​டாது போயிற்று. அன்​றி​யும் அவர் தந்​தது 196 பேர் சரி​தம் மாத்​தி​ரமே. ஆத​லி​னால் அன்றோ இப்​பா​வ​லர் சரித்​திர தீபத்தை ஏற்றி,​ அந்​த​காய கொப்​பா​யம் போர்த்து அஞ்​ஞாத வாசஞ்​செய்த பாவ​லர் நாமங்​களை தனித்​தனி ஒவ்​வொன்​றாய் துரு​விப் பொறுக்கி,​ அரி​வ​ரிப்​ப​டுத்தி,​ அச்​சீ​மான் தந்த தொகைக்கு மேற்​ப​டப் பின்​னும் 214 சேர்த்து மொத்​தம் 410 பாவ​லர் நாமங்​க​ளைத் தந்​தோம்" என்று தமது முன்​னு​ரை​யில் குறிப்​பி​டு​கி​றார் சதா​சி​வம் பிள்ளை.

http://www.dinamani.com/Images/article/2009/12/6/6tmani2.jpg

அ​கஸ்​தி​ய​ரில் தொடங்கி,​ சங்​கப் புல​வர்​கள்,​ நாயன்​மார்​கள்,​ ஆழ்​வார்​கள் என்று ஒரு​வ​ரைக்​கூட விட்டு வைக்​கா​மல் 18ஆம் நூற்​றாண்​டில் வாழ்ந்த வீர​பாண்​டி​யப் புல​வர்,​ காஞ்​சி​பு​ரம் வீர​ரா​கவ முத​லி​யார்,​ அஷ்​டா​வ​தா​னம் வீரா​சா​மிச் செட்​டி​யார்,​ யாழ்ப்​பா​ணம் சாவ​கச்​சேரி வெற்​றி​வே​லர் என்று ஒரு​வ​ரை​யும் விட்​டு​வைக்​கா​மல் "யார்?​ எவர்?​" என்​ப​தைத் தொகுத்து வெளி​யிட்​டி​ருக்​கும் யாழ்ப்​பா​ணம் சதா​சி​வம் பிள்​ளை​யின் தமிழ்ச்​சேவை பிர​மிக்க வைக்​கி​றது.

இந்​தப் புத்​த​கத்​துக்கு அணிந்​துரை வழங்​கி​யி​ருக்​கும் இந்​தூர் ​(ம.பி.) கன​டி​யன் மிஷன் பள்​ளித் தலை​மை​யா​சி​ரி​யர் ஆஸ்​பரி என்​கிற வெள்​ளைக்​கா​ரர் என்ன கூறி​யி​ருக்​கி​றார் தெரி​யுமா?​

"படித்த தமிழ்​ம​கன் எவ​னி​ட​மும் இந்​தப் புத்​த​கத்​தின் பிரதி இல்​லா​மல் இருக்​க​லா​காது என்று!"

Kannan Natarajan

unread,
Dec 5, 2009, 8:14:26 PM12/5/09
to mint...@googlegroups.com
கு​றள்​படி வாழ்​வது என்​பது தமி​ழ​னின் அடிப்​படை நாக​ரி​க​மா​கக் கரு​தப்​ப​டும் விஷ​யம்.

குறள் தெரி​யாத தமி​ழன் தன்​னைத் தமி​ழன் என்று கூறிக்​கொள்​வது இனத் துரோ​கம் என்று கரு​தப்​ப​டும் விஷ​யம்.

எ​தற்​காக இத்​தனை பீடிகை என்​று​தானே கேட்​கி​றீர்​கள்?​

"நிழல் காட்​டும் நிஜங்​கள்" என்​றொரு புத்​த​கம் மலர்க்​கொடி இரா​ஜேந்​தி​ர​னால் எழு​தப்​பட்​டி​ருக்​கி​றது.

திருக்​கு​றளை அடிப்​ப​டை​யா​கக் கொண்டு குட்​டிக்​க​தை​கள் பல புனைந்து அதைப் புத்​த​மாக்​கி​யி​ருக்​கும் மலர்க்​கொ​டி​யின் தமிழ்ப்​ப​ணி​யால் கவ​ரப்​பட்​ட​தன் விளை​வு​தான் மேலே குறிப்​பிட்ட விஷ​யங்​கள்.

தி​ருக்​கு​றள் கதை​கள் என்​பது புதிய விஷ​யம் ஒன்​றும் அல்ல. பல வார இதழ்​கள் திருக்​கு​றள் கதை​களை வெளி​யிட்​டி​ருக்​கின்​றன.

ஜெக​வீ​ர​பாண்​டி​ய​னார் 133 முது​மொழி வெண்​பாக்​கள் மூலம் குற​ளுக்​குக் கதை பகர்ந்து அசத்​தி​யி​ருக்​கி​றார். அந்த வரி​சை​யில்,​ மலர்க்​கொடி இரா​ஜேந்​தி​ரன் ஒரு புதிய
முயற்​சி​யில் தன்னை ஈடு​ப​டுத்​திக்​கொண்டு பெரும் வெற்​றி​யும் பெற்​றி​ருக்​கி​றார்.

அறத்​துப் பாலி​லும்,​ பொருட்​பா​லி​லும் உள்ள 108 அதி​கா​ரங்​க​ளில் உள்ள குறள்​க​ளைத் தேர்ந்​தெ​டுத்து,​ குழந்​தை​கள் சுவா​ரஸ்​யத்​து​டன் படிக்​கும் விதத்​தில் கதை​க​ளைப் புனைந்து படைத்​தி​ருப்​ப​து​ தான் அவ​ரது தனிச்​சி​றப்பு.

த​ய​வு​செய்து இந்​தப் புத்​த​கத்​தில் உள்ள கதை​க​ளை​யும், குற​ளை​யும் பள்​ளி​யில் ஆங்​கி​லம் படிக்​கும் குழந்​தை​க​ளைப் படிக்​க​வைத்து விட்டாலே போதும். அவர்​கள்
தமி​ழர்​க​ளாக இருப்​பார்​கள்.

த​மிழை நேசிப்​ப​வர்​க​ளுக்கு ஒரு வேண்​டு​கோள். குழந்​தை​க​ளுக்கு இனிப்​பு​கள் வாங்​கிக் கொடுப்​ப​தற்​குப் பதில் இந்​தப் புத்​த​கத்​தைப் பரி​சாக அளிப்​பது என்​கிற வழக்​கத்தை
மேற்​கொள்​ளுங்​கள். நமது குழந்​தை​கள் தமிழ் பேசும்!​ குறள்​வழி நடக்​கும்!​ தமிழ் வாழும்!​

Kannan Natarajan

unread,
Dec 5, 2009, 8:19:37 PM12/5/09
to mint...@googlegroups.com
சில கவி​தை​கள் ஏனோ மன​தில் பதிந்​து​வி​டு​கின்​றன. அடிக்​கடி நினை​வில் நிழ​லாடி இம்​சிக்​கின்​றன.

காகத்​தைப் பார்க்​கும்​போது,​ என்னை அறி​யா​ம​லேயே வைதீஸ்​வ​ரன் எழு​திய கவிதை ஒன்று ஞாப​கத்​துக்கு வரும்.

​​
என்
கர்ப்​பத் தடை மாத்​தி​ரையை
கவ்​விக் கொண்டு பறந்த
காக்​கையை பிடித்து
கார​ணம் கேட்​டேன் -​
"இன்று குடி​யி​ருக்க மரங்​கள்
குறைந்​து​விட்ட நக​ரத்​தில்,​
கூப்​பிட்டு சோறு போடும்
பழைய மர​பும் அழிந்த பின்பு நாங்​கள்
திரு​டு​வ​தற்கு உகந்​தது உங்​கள்
திட்​ட​மி​டும் மாத்​திரை தான்.
சாகட்​டும் எம்​வம்​சம்" - என்​கி​றதே!​​
​   

ம​ன​சைத் தொடு​வ​து​டன் நிற்​க​வில்லை. மன​சாட்​சி​யைச் சுடு​கி​றது.

சி.சு.செல்​லப்​பா​வி​ன் "எழுத்து" சிற்​றி​த​ழின் மூலம் புதுக்​க​வி​ஞ​ராக அறி​மு​க​மாகி,​ புதுக்​க​வி​தை​யின் மலர்ச்​சிக்​கும் வளர்ச்​சிக்​கும் குறிப்​பி​டத்​தக்க பங்​க​ளிப்பு செய்​தி​ருக்​கும் கவி​ஞர்​க​ளில் ஒரு​வர் வைதீஸ்​வ​ரன் என்​ப​தில் சந்​தே​கமே இல்லை.

இசை,​ ஓவி​யம்,​ நாட​கம் என்று இவ​ரது களம் விரிந்து பரந்​தது. ச​ம​கா​லத்தில் வாழும் இவ​ரைச் சந்​திக்க வேண்​டும் என்று ஏனோ தோன்​றி​யது. விசா​ரித்​தேன்.

நண்​பர் திருப்​பூர் கிருஷ்​ணன்,​ சில நாள்​க​ளுக்கு முன்​பு​தான் அவர் அமெ​ரிக்கா சென்​று​விட்​ட​தா​கத் தக​வல் தந்​தார்.

புதுக்​க​விதை விற்​பன்​னர்​க​ளி​டம் அடி​யேன் கேட்க விரும்​பும் கேள்வி ஒன்று நீண்ட நாள்​க​ளாக நெஞ்​சுக்​குள் தகித்​துக் கொண்​டி​ருக்​கி​றது.

புதுக்​க​வி​தைக்கு இலக்​க​ணம் தேவை​யில்லை.

சரி. சந்தி கூடாது என்று சட்​டமா,​ என்ன?​

Kannan Natarajan

unread,
Dec 5, 2009, 8:28:26 PM12/5/09
to mint...@googlegroups.com
ஐங்குறுநூற்றின் தனித்தன்மை

சங்க இலக்​கி​யத்​துள் அக இலக்​கி​யங்​களே மிகு​தி​யாக உள்​ளன. அவற்​றுள் மிகக்​கு​று​கிய அடி​க​ளால் அமைந்த அன்​பின் ஐந்​தி​ணை​யா​கிய குறிஞ்சி,​ முல்லை,​ மரு​தம்,​
நெய்​தல்,​ பாலை என்​னும் ஒவ்​வொரு திணைக்​கும் நூறு நூறு பாடல்​க​ளைக் கொண்ட ஐங்​கு​று​நூற்​றில் பல்​வ​கைப்​பட்ட சிறப்​பு​கள் கூறப்​பட்​டுள்​ளன.

சங்க இலக்​கி​யங்​களே தொகை நூல்​கள் எனப்​பட்​டன. அதா​வது,​ சான்​றோர் பல காலங்​க​ளில் பாடிய பாடல்​க​ளைச் சங்​கச் சான்​றோர்​கள் தேடித்​தொ​குத்​தவை.

இந்நூ​லி​னைத் தொகுத்​த​வர் "புலத்​துறை முற்​றிய கூட​லூர் கிழார்".

தொகுக்க உத​விய அர​சன்,​ யானைக்​கட்​சேய் மாந்​தி​ரஞ் சேரல் இரும்​பொறை என்று கூறு​வர்.​

மரு​தம் ஓரம் போகி,​ நெய்​தல் அம்​மூ​வன்,
​க​ரு​துங் குறிஞ்​சிக்​க​பி​லன்,​ கரு​திய
பாலை ஓத​லாந்தை,​ பனி​முல்லை பேயனே,​
நூ​லையோ தைங்​குறு நூறு​
​.

என்னும் பழம் பாடல்,​ இந்நூ​லில் உள்ள
  • மரு​தத்​தி​ணையை ஓரம் போகி​யா​ரும்
  • நெய்​தல் திணையை அம்​மூ​வ​னா​ரும்
  • குறிஞ்​சி​யைக் கபி​ல​ரும்
  • பாலையை ஓத​லாந்​தை​யா​ரும்
  • முல்​லை​யைப் பேய​னா​ரும்
இயற்​றி​னர் என்று கூறு​கி​றது.

இதற்​குப் பழ​மை​யான செறி​வு​மிக்க உரை​யொன்​றும் உண்டு.

ஐங்​கு​று​நூற்​றின் அமைப்​பில் தனிச்​சி​றப்​பா​கக் கீழ்க்​கண்​ட​வற்​றைக் கூறு​வர்.

ஒவ்​வொரு திணைக்​கும் நூறு, நூறு பாடல்​கள் ​(மொத்​தம் 500 பாடல்​கள்)​;​ ஒவ்​வொரு துறை அல்​லது தலைப்​பில் பத்​துப்​பா​டல்​கள்;​ அந்​தப் பாட​லும் தொடக்​கச் சொல்,​ தொடர்,​ ஈற்​றுச்​சொல்,​ கூற்​றுக்​கு​ரி​ய​வர்,​ கேட்​போர்,​ கருப்​பொ​ருள் முத​லா​ன​வற்​றுள் ஏதா​வது ஒன்​றால் பெயர் பெறு​தல்;​ திணை மயக்​கத்​திற்கு நிறைந்த இடம்
இங்​குள்​ளன;​ பிற நூலில் இல்​லாத புதிய கிள​வி​கள் ​(சொல் முறை​கள்)​ இதில் இடம் பெறு​தல்;​ புதிய சொற்​கள்,​ பண்​பாட்​டுக் கூறு​கள் இதில் இடம் பெறு​தல்;​ பின்​னர்
கீழ்க்​க​ணக்​கில் வந்​துள்ள ஐந்​திணை ஐம்​பது,​ ஐந்​திணை எழு​பது போன்ற நூல்​கள் தோன்ற வழி​காட்​டி​யாக அமைந்​துள்​ளது;​ பின்​னர் வந்​திட்ட பத்​துப் பத்​துப் பாடல்​க​ளுக்கு வழி​காட்​டிய பத்​துப் பாடல் கொண்ட பாங்கு ​(திருக்​கு​றள் போல)​;​ ஐங்​கு​று​நூற்​றில் அதிக அள​வில் உள்​ளுறை உவ​மை​யும்,​ இறைச்​சி​யும் இடம் பெற்​றுள்​ளன;​ இந்​நூல்
வழக்​கத்​திற்கு மாறாக மரு​தத்தை முன்​னர் கொண்​டுள்ள தனித்​தன்​மை​யும் எண்​ணத்​தக்​கது.

இவ்வாறு இந்​நூல் அமைப்​பி​லேயே பத்து சிறப்​பு​கள் பாங்​கு​டன் அமை​யக் காண​லாம். மேலும் பல சிறப்​பு​கள் உள்​ளன.

அவை:-​ இந்நூ​லின்​தான் "பசு" என்​னும் சொல் ​(271) ஆ,​ ஆன் என்ற பொரு​ளில் முதன் முத​லாக வந்​துள்​ளது;​ இந்​தி​ர​விழா இந்நூ​லில்​தான் முதன் முதல் கூறப்​ப​டு​கி​றது ​(62); பிற சங்க நூல்​கள் "குரீஇ" என்று கூறு​வதை இந்​நூல் "குருவி" என்றே கூறும் ​(295); சேர​நாட்​டின் தமிழ்​வ​ளம் காட்​டு​வது ​(180); பெண் குழந்தை வேண்​டித் தவம் செய்த செய்தி ​(257); வேறு​பட்ட வகை​யில் காத​ல​னு​டன் உடன்​போன தலைவி இடை​வ​ழி​யில் கண்​ட​வர்​க​ளி​டம் "யான் போவதை என் தாய்க்​குக் கூறுங்​கள்" என்று கூறு​த​லும்,​ தலை​வன் தேரில் செல்​லு​த​லும் ​(385); பிரிந்த தலை​வன் கார் காலத்​தில் வரு​தல் வேண்​டும் என பிற நூல் கூறிட,​ இது மட்​டும் கார் காலத்​தில் தலை​வன் பிரி​வ​தா​கப்
பாடு​தல் ​(427).

இவ்​வாறு,​ ஐங்​கு​று​நூ​றா​கிய அக இலக்​கி​யத்​தின் தனித்​தன்மை விரி​வா​கக் கூறப்​பட்​டுள்​ளது.

srirangammohanarangan v

unread,
Dec 5, 2009, 9:23:01 PM12/5/09
to mint...@googlegroups.com
அருமையான  செய்திகள்!   நன்றி  நண்பரே.    இப்பொழுதெல்லாம்  வீக்  எண்ட்  சிறப்பாக    கண்ணன்   நடராசனாரின்    அளிப்புகள்    அமைந்து  வருகிறது.)))

V, Dhivakar

unread,
Dec 6, 2009, 12:35:34 AM12/6/09
to mint...@googlegroups.com
ஔவை கண்ணனார்:
 
எழுத்துக்கள் பிரிந்து வருகிறது. கவனித்தீர்களா..
 
திவாகர்

 
On 12/6/09, Kannan Natarajan <thar...@gmail.com> wrote:

Kannan Natarajan

unread,
Dec 12, 2009, 7:34:48 PM12/12/09
to mint...@googlegroups.com
க​டந்த நூற்​றாண்​டில் தமி​ழுக்​குக் கிடைத்த மிகப்​பெ​ரிய பொக்​கி​ஷங்​கள் - மகா​கவி பார​தி​யா​ரும்,​​ "தமிழ்த் தென்​றல்" திரு.வி.க.வும் தான் என்​ப​தில் அறி​ஞர்
பெரு​மக்​கள் மத்​தி​யில் இரு​வேறு கருத்​தி​ருக்க நியா​ய​மில்லை.​
 
கோ.இள​வ​ழ​க​னின் ஊக்​க​மும், ஆத​ர​வும் இரா.இளங்​கு​ம​ர​னாரை "திரு.வி.க.​ தமிழ்க் கொடை" என்​கிற தலைப்​பில் தமிழ்த் தென்ற​லின் படைப்​பு​க​ளைத் தொகுத்து வெளி​யிட உதவி இருக்​கி​றது.​
 

70 அக​வை​கள் தமிழ் வாழ்வு வாழ்ந்த தமிழ்த் தென்​றல் திரு.வி.க.​ 54 நூல்​க​ளைப் பன்​மு​கப் பார்​வை​யு​டன் எழுதி,​​ தமிழ்​கூறு நல்​லு​ல​கத்​திற்கு அருந்​த​மிழ்க்
கரு​வூ​ல​மாக விட்​டுச் சென்​றார்.​
 
இவற்​றைக் கால வரி​சைப்​ப​டுத்தி,​​ பொருள் வழி​யா​கப் பிரித்து வெளி​யி​டு​வது என்​பது எளி​தான ஒன்றா?​
 
அந்​தச் சோத​னை​யில் தங்​களை அர்ப்​ப​ணித்து ஒரு மிகப் பெரிய சாத​னை​யைப் படைத்​தி​ருக்​கி​றார்​கள் இள​வ​ழ​க​னும்,இளங்​கு​ம​ர​னா​ரும்.​
  • த​மிழ் உரை​நடை வர​லாற்​றின் தந்தை
  • தமிழ் இத​ழி​யல் துறை​யின் முன்​னோடி
  • தொழிற்​சங்க இயக்​கத்​தின் ஆரம்​ப​கா​லத் தலை​வர்​க​ளில் ஒரு​வர்
  • இந்​திய விடு​த​லைப் போர்க்​க​ளத்​தின் முன்​ன​ணித் தலை​வர்​க​ளில் ஒரு​வர்
  • மேடைப் பேச்​சுக்கு இலக்​க​ணம் வகுத்த பெரு​ம​க​னார்
  • சதா​வ​தா​னம் நா.கதி​ரை​வேற்​பிள்​ளை​யின் மாணாக்​கர்
  • "கல்கி" கிருஷ்​ண​மூர்த்​தி​யின் "ஆசி​ரி​யர்"

இத்​தனை பெரு​மை​க​ளும் ஒருங்கே அமைந்த பெரு​ம​க​னார்​தான் திரு​வா​ரூர் வி.​ கலி​யா​ண​சுந்​த​ர​னார் அவர்​கள்.​

1908இல் திரு.வி.க.​ வரைந்த முதல் நூலான "சதா​வ​தா​னம் நா.கதி​ரை​வேற்​பிள்ளை அவர்​கள் சரித்​தி​ரம்" தொடங்கி,​​ அவ​ரது 54 நூல்​க​ளை​யும் 24 தொகு​தி​க​ளாக வழங்கி இருக்​கி​றார்​கள்.​ அது மட்​டு​மன்றி,​​ "திரு.வி.க.​ முன்​னு​ரை​கள்" மற்​றும் "திரு.வி.க.​ தமிழ்க் கொடை" அறி​மு​கம் ஆகிய இரு நூல்​க​ளை​யும் சேர்த்​தால் 26.​

இந்​தத் தொகுப்​பு​கள் கடந்த ஆறு மாதத்​துக்​கும் மேலாக என்​னி​டம் இருக்​கின்​றன.​
 
ஆழ்ந்து படித்​தேனா என்​றால் இல்லை.​
 
இன்​னொரு முறை படித்​தால் மட்​டும்​தான் தமிழ்த் தென்ற​லின் இனி​மையை முழு​மை​யாக உள்​வாங்க முடி​யும் போலி​ருக்​கி​றது.​
 
1925ஆம் ஆண்டு அண்​ணல் காந்​தி​ய​டி​க​ளின் பிறந்​த​நா​ளன்று "இளை​ஞர்​க​ளுக்கு ஒரு விண்​ணப்​பம்" என்ற தலைப்​பில் ஒரு கட்​டுரை எழுதி இருக்​கி​றார்.​
இன்​றும் பொருத்​த​மாக இருக்​கி​றது.​
 
1926இல் திரு.வி.க.​ தமிழ்​நாடு காங்​கி​ரஸ் கமிட்​டி​யின் உறுப்​பி​னர் பத​வியை இராஜி​நாமா செய்​தார்.​ அதற்கு அவர் கட்​சித் தலை​வ​ருக்கு எழு​திய கடி​தத்​தில்
கூறி​யி​ருக்​கும் விஷ​யம் என்ன தெரி​யுமா?​
 
"நாட்​டிற் கனன்​றெ​ரி​யும் வகுப்​புப் பிணக்​கைத் தணிக்​க​வல்​லது சன்​மார்க்​கத்தை அடிப்​ப​டை​யா​கக் கொண்​டுள்ள காந்​தி​ய​மெ​னும் தண்​பு​னல் என்​பதை எனது
மனச்​சான்​றெ​னும் கட​வுள் நன்கு அறி​வு​றுத்​து​கி​றது.​ அம்மனச்​சான்று வழி நின்று தொண்​டாற்ற வேண்​டு​மேல் காங்​கி​ரஸ் காரி​யக் கமிட்​டிக் கூட்​டத்​தில் அங்​கம் பெற்​றி​ருத்​தல் அற​மா​காது.​ ஆத​லின் அத​னின்​றும் விலக வேண்​டு​மென உறுதி கொண்​டேன்".​
 
அடடா,​​ அறம் சார்ந்து நின்ற அர​சி​யல் தலை​வர் இது​போல் ஒரு​வ​ரா​வது உண்டா?​
 
திரு.வி.க.வின் கவி​தை​கள்,​​ "நவ​சக்தி" இத​ழில் அவர் எழு​திய தலை​யங்​கங்​கள்,​​ ஏரா​ளம்,ஏரா​ளம் கட்​டு​ரை​கள் என்று 24 தொகு​தி​கள் அடங்​கிய இந்​தத் தொகுப்​புக்​குத் தவ​றா​கப் பெயர் வைத்​து​விட்​டார்​கள்.​ "திரு.வி.க.​ கொடை" என்​ப​தை​வி​டத் "திரு.வி.க.​ புதை​யல்" என்று வைத்​தி​ருக்​க​லாமோ?​
 
"பொதுக்​கூட்​டங்​க​ளில் தமி​ழர்​கள் தாய்​மொ​ழி​யி​லேயே பேசு​தல் வேண்​டு​மென்​றும்,​​ அயல்​மொ​ழி​யில் பேசு​தல் கூடா​தென்​றும்,​​ எவ​ரே​னும் அயல்​மொ​ழி​யில்
பேசப் ​ புகுந்​தால் அவ​ரைத் திருத்​தும் பொறுப்​பைப் பொது​மக்​கள் ஏற்​றல் வேண்​டு​மென்​றும் வலி​யு​றுத்​தி​னேன்.​ என் பேச்​சும் எழு​தும் தக்க பயனை விளைத்​தன.​ என் வாழ்​வில் நிகழ்ந்த முதல் புரட்சி இஃது ஆகும்" என்று குறிப்​பி​டு​கி​றார் தமிழ்த் தென்​றல் திரு.வி.க.​
 
மே​டைப் பேச்​சுக்​குத் தமி​ழ​கத்​தில் இலக்​க​ணம் வகுத்​த​வர் அவர்​தான் என்​றும்,​​ தம்​பட்​டம் அடித்​துக் கொள்​ளா​மல் தமிழ்த் தொண்​டாற்​றிய தலை​ம​கன் அவர்​தான் என்​றும் இன்​றைய தலை​மு​றை​யில் எத்​தனை பேருக்​குத் தெரி​யும்?​
 
அவர்​க​ளுக்​குத் தெரிய வைக்​கத் தங்​களை அர்ப்​ப​ணித்​துக் கொண்ட "தமிழ்​மண்" பதிப்​ப​கம் இள​வ​ழ​க​னை​யும்,இளங்​கு​ம​ர​னா​ரை​யும் அடி​யேன் தெண்​ட​னிட்டு
வணங்கி மகிழ்​கி​றேன்!​

Kannan Natarajan

unread,
Dec 12, 2009, 7:40:50 PM12/12/09
to mint...@googlegroups.com
க​வி​ய​ர​சர் கண்​ண​தா​ச​னின் பொது வாழ்க்​கையை மூன்​றா​கப் பிரிக்​க​லாம்.​
  • முதல் கட்​டம் அவ​ரது திரா​வி​டச் சார்பு.​
  • இரண்​டா​வது கட்​டம்,​​ அவ​ரது தேசி​யச் சிந்​தனை.​
  • மூன்​றா​வது கட்​டத்​தில்,​​ அவர் அர​சி​யல் போலித் தனத்தி​லி​ருந்து மெல்ல மெல்ல வில​கத் தொடங்கி,​​ ஆன்​மி​கத் தேட​லில் தன்னை ஈடு​ப​டுத்​திக் கொண்​டார் என​லாம்.​

1972லிருந்தே கவி​ய​ர​ச​ரின் எண்ண ஓட்​டத்​தில் பல மாறு​தல்​கள் ஏற்​பட்​டன.​ இந்​தக் கால கட்​டத்​தில் கவி​ய​ர​சர் "கண்​ண​தா​சன்" என்​கிற இலக்​கிய மாத இத​ழைத் தொடங்கி நடத்தி வந்​தார்.​ ​

"கண்​ண​தா​சன்" இத​ழில் வெளி​வந்த தலை​யங்​கங்​கள் அனைத்​துமே இன்​றைக்​கும்,​​ இன்​றைய சூழ்​நி​லைக்​கும் பொருத்​த​மாக இருப்​பது நம்மை ஆச்​ச​ரி​யப்​ப​டுத்​தும்.​
 
"இலங்​கைத் தமி​ழர் பிரச்​னையை இந்​திய அரசு அலட்​சி​யப்​ப​டுத்​தி​விட்​ட​தா​கத் தோன்​று​கி​றது.​ இலங்​கைத் தமி​ழர்​க​ளின் வேத​னை​யைத் தீர்ப்​ப​தற்கு ஒரு
சமிக்​ஞை​யைக் கூடக் காணோம்.​ இந்த அலட்​சி​யப் போக்கை நாம் சகிக்க முடி​யாது.​ தாய​கத் தமி​ழர்​கள் கட்சி வேறு​பா​டில்​லா​மல் இதில் ஒன்​று​பட வேண்​டும்" என்று மத்​திய ஆட்​சி​யில் இருந்த காங்​கி​ரஸ் கட்​சி​த் தலை​வர்களில் ஒருவ​ராக இருந்​தும் 1973இல் ஒரு தலை​யங்​கம் தீட்டி இருக்​கி​றார் கவி​ய​ர​சர்.​
 
  • நூல் நிலை​யங்​கள் பற்றி
  • ஜெய​காந்​தன் பற்றி
  • தமி​ழக அர​சின் பாடப் புத்​த​கங்​கள் பற்றி
  • "கல்கி" பத்​தி​ரிகை நிறுத்​தப்​பட்​டது பற்றி
  • நீதி​மன்​றத்​தில் தமிழ் பற்றி
  • பேர​றி​ஞர் வெ.சாமி​நாத சர்மா பற்றி
  • மகா​கவி பாரதி பற்றி
கவி​ய​ர​சர் கண்​ண​தா​சன் தனது கருத்​து​களை இந்​தத் தலை​யங்​கங்​க​ளில் பதிவு செய்​தி​ருப்​பது,​​ பிர​மிக்க வைக்​கி​றது.​
 
என்ன ஒரு சிந்​தனை.​ எத்​துணை தீர்க்க தரி​ச​னம்.​ மனத்​தின் அடித்​த​ளத்​தில் இருந்து எழும் ஆத்ம சுத்​தி​யு​டன் கூடிய ஆணித்​த​ர​மான கருத்​து​கள்.​
இ​ராம.​ கண்​ணப்​ப​னால் தொகுக்​கப்​பட்டு,​​ கண்​ண​தா​சன் பதிப்​ப​கத்​தா​ரால் வெளி​யி​டப்​பட்​டி​ருக்​கும் "கவி​ஞர் கண்​ண​தா​ச​னின் தலை​யங்​கங்​கள்" என்​கிற புத்​த​கம்
இது​வரை பத்து பதிப்​பு​க​ளைக் கடந்து விட்​டன.​ ஆயி​னும் கவி​ய​ர​ச​ரின் இரசி​கர்​கள் பலர் இந்​தப் புத்​த​கத்​தைப் பற்றி தெரிந்து வைத்​தி​ருக்​க​வில்லை என்​பதை
அறிந்​த​போது வேத​னை​யாக இருந்​தது.​
ப​ழைய இதழ்​க​ளைத் தேடிப் பிடித்​துத் தொகுப்பு வெளி​யி​டும் கலை​ஞன் பதிப்​ப​கத்​தார்,​​ கவி​ய​ர​ச​ரின் "தென்​றல்" மற்​றும் "கண்​ண​தா​சன்" இதழ்​க​ளின் தொகுப்பை
ஏன் இன்​னும் வெளி​யி​ட​வில்லை?​
 
சரி,​​ கண்​ண​தா​சன் பதிப்​ப​கம் சார்​பில் காந்தி கண்​ண​தா​சனே வெளி​யி​ட​லாமே...​
 
கவி​ய​ர​ச​ரின் இரசி​கர்​கள் சார்​பில் இப்​படி ஒரு வேண்​டு​கோளை நான் முன் வைக்க விரும்​பு​கி​றேன்.

Kannan Natarajan

unread,
Dec 12, 2009, 7:43:25 PM12/12/09
to mint...@googlegroups.com
பணம் கொடுத்​தால் எண்​ணிய அனைத்​தும் கிடைக்​கும் நக​ரத்​தில்,​​ என் பிறந்த மண் கிடைக்​குமா?​
 
புல்​லுக் கட்​டைச் சுமந்​த​வாறு என்​னோடு கதை​ய​ளந்து வந்த என் பாட்​டி​யின் பாசாங்​கற்ற மொழி கிடைக்​குமா?​
 
இவை​களை ஏன் இழந்து வந்​தேன்!​
 
என்று ஆதங்​கப்​ப​டும் பல​ரில் கவி​ஞர் பாரி கபி​ல​னும் ஒரு​வர் என்​பது அவ​ரது "களத்​து​மேடு" கவி​தைத் தொகுப்​பின் முன்​னு​ரை​யைப் படித்​த​போது புரிந்​தது.​
அட,​​ நம்​மைப் போல ஒரு​வர் என்று அந்த நொடி​யி​லேயே மான​சீக நட்பு மலர்ந்​தது.​
 
அவ​ரது கவிதை வரி​க​ளில் இனம்​பு​ரி​யாத ஈர்ப்பு விளைந்​தது.​ முகம் தெரி​யாத அவ​ரு​டன் கவி​தைப் பய​ணம் தொடங்கி விட்​டேன்.​
"அப்​பா​வின் தோள்​கள்" என்​றொரு கவிதை.​
 
சேர​னின் "தவ​மாய் தவ​மி​ருந்து" திரைப்​ப​டத்​தின் கரு இது​வாக இருந்​தால் நான் ஆச்​ச​ரி​யப்​பட மாட்​டேன்.​
 
அந்​தக் கவி​தையி​லி​ருந்து சில வரி​கள்.​

என்,​​ ஊர்ப் பய​ணத்​தில்
அப்​பா​தான் வாக​னம்
அவ​ருக்​குப் புழுதி
எனக்​குத் தோள்.​

அப்பா மன​சின்
உய​ரம் எண்​ணு​கை​யில்
மற்​ற​தெல்​லாம்
குள்​ள​மாய்த் தோன்​றும்.​

வழி​நெ​டு​கப்
பழக்​கப்​பட்ட வீடு​க​ளில்
தண்​ணீர் கேட்​டுத்
தீர்ந்​தது தாகம்
என்​னில்
அப்​பா​வின் தாகம் மட்​டும்
தீர​வே​யில்லை.​

Tirumurti Vasudevan

unread,
Dec 12, 2009, 9:58:07 PM12/12/09
to mint...@googlegroups.com
இதை மின்னாக்கம் செய்ய ஏற்பாடு செய்ய இயலுமா?
திவாஜி

2009/12/6 Kannan Natarajan <thar...@gmail.com>
வி​ழுப்​பு​ரத்தி​லி​ருந்​து ​ என்​னைச் சந்​திப்​ப​தற்​கா​கவே கொட்​டும் மழை​யில் சிதம்​ப​ரம் வந்​தி​ருந்​தார் இள​வல் கோ.செங்​குட்​டு​வன்.

"இந்​தப் புத்​த​கத்​தைப் படித்​தி​ருக்​கி​றீர்​களா?" என்​ற​படி அவர் பரி​ச​ளித்த புத்​த​கத்​தைப் பார்த்​த​தும் வியந்​தேன் என்​ப​தை​விட அதிர்ந்​தேன் என்​ப​து​தான் உண்மை.

"பாவ​லர் சரித்​திர தீப​கம்" என்பது அந்​தப் புத்​த​கத்​தின் பெயர்.
......


இந்​தப் புத்​த​கத்​துக்கு அணிந்​துரை வழங்​கி​யி​ருக்​கும் இந்​தூர் ​(ம.பி.) கன​டி​யன் மிஷன் பள்​ளித் தலை​மை​யா​சி​ரி​யர் ஆஸ்​பரி என்​கிற வெள்​ளைக்​கா​ரர் என்ன கூறி​யி​ருக்​கி​றார் தெரி​யுமா?​

"படித்த தமிழ்​ம​கன் எவ​னி​ட​மும் இந்​தப் புத்​த​கத்​தின் பிரதி இல்​லா​மல் இருக்​க​லா​காது என்று!"



--
My blogs: [all in Tamil]
http://anmikam4dumbme.blogspot.com/
http://chitirampesuthati.blogspot.com/ photo blog now with english text too!
http://kathaikathaiyaam.blogspot.com/

BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!

Kannan Natarajan

unread,
Dec 19, 2009, 9:07:32 PM12/19/09
to mint...@googlegroups.com
ம​கா​கவி பார​தி​யின் பிறந்​த​நாள் அன்று ஆண்​டு​தோ​றும் ஒரு புத்​த​கம் வெளி​யி​டு​வது என்​கிற
நல்​ல​தொரு வழக்​கத்​தைக் கடைப்​பி​டிக்​கும் தன வணி​கர் நல்லி குப்​பு​சாமி செட்​டி​யைப் பாராட்​டா​மல் இருப்​பது எங்​ங​னம்?​

இந்த ஆண்டு அவர் தொகுத்து வெளி​யிட்​டி​ருக்​கும் நூல் "காலந்​தோ​றும் பாரதி".​

பா​ரதி பற்றி யார், யார் என்​னென்ன கட்​டு​ரை​கள் எழு​தி​யி​ருக்​கி​றார்​கள் என்று தேடிப்​பி​டித்து,​​ அந்​தக் கட்​டு​ரை​கள் எந்​தெந்த வரு​டம்,​​
எந்த இத​ழில் வெளி​யா​னது என்​கிற தக​வ​லு​டன் கொடுத்​தி​ருக்​கி​றார்.​
  • மு.​ ராக​வை​யங்​கார்
  • ராஜாஜி
  • பரலி.சு நெல்​லை​யப்​பர்
  • வ.வே.சு.​ ஐயர்
  • சத்​தி​ய​மூர்த்தி
  • சுப்​பி​ர​ம​ணிய சிவா
  • பார​தி​தா​சன்
  • சோம​சுந்​தர பார​தி​யார்
  • உ.வே.சா.​
என்று பட்​டி​யல் நீள்​கி​றது.​

இவர்​கள் பார​தி​யு​டன் வாழ்ந்​த​வர்​கள்,​​ பழ​கி​ய​வர்​கள்.​

பார​திக்​குப் பிறகு வாழ்ந்த பல​ரு​டைய பதி​வு​க​ளும் இந்​தத் தொகுப்​பில் இடம் பெற்​றி​ருக்​கின்​றன.​

பா​ர​தி​யைப் பற்றி சுப்​பி​ர​ம​ணிய சிவா செய்​தி​ருக்​கும் பதிவு நம்மை நெகிழ வைக்​கி​றது.​

என்​ன​வொரு தேச​பக்தி!​

எப்​ப​டிப்​பட்ட சிந்​தனை!​

அப்​படி என்​ன​தான் சொல்​கி​றார் சுப்​பி​ர​ம​ணிய சிவா?​

"என்​னு​டைய மத​மா​கிய பார​தீய மதத்​துக்​குப் பார​தி​யின் நூல்​களை உப​நி​ஷத்​துப் போல் கரு​தி​யி​ருக்​கி​றேன்.​

எனது பையன்​க​ளுக்​குப் பார​தி​யின் நூல்​க​ளைக் கட்​டா​யப் பாட​மாக வைத்​தி​ருக்​கி​றேன்.​

பார​தி​யின் பாடல்​கள் யாவும் பாரத தேவி​யைக் குறித்​துத்​தான்.​

பாரத பூமி​யின் மூல​மா​கத்​ தான் உல​கத்​துக்கு மோட்​சம் என்று நான் மனப்​பூர்​வ​மாக நம்​பு​கி​றேன்.​

எங்கு பார்த்​தா​லும் பார​தி​யா​ரின் நூல்​க​ளைப் பரப்ப வேண்​டும்.​

நான் கட்ட உத்​தே​சித்​தி​ருக்​கும் பாரத மாதா கோயி​லில் பார​திக்கு ஒரு விக்​ர​ஹம் வைக்​கப் போகி​றேன்.​

பாரதி கூட்​ட​மென்று ஒரு கூட்​டம் கிளம்ப வேண்​டு​மென்​பது என்​னு​டைய ஆவல்!​"

இப்​படி ஒரு தொகுப்​பில் பாரதி வாழ்ந்த காலத்​தில் வாழ்ந்த,​​ அவ​ரு​டன் பழ​கிய இரண்டு முக்​கி​ய​மான பேர்​க​ளின் பதி​வு​கள்
இடம் பெறா​மல் போனது குறை​ தான்.​ பார​தியை "மாமா" என்று உரி​மை​யு​டன் அழைக்​கும் "கப்​ப​லோட்​டிய தமி​ழன்"
வ.உ.சி.யும்,​​ பார​தி​யின் சம​கால இத​ழி​ய​லா​ளர் "தமிழ்த் தென்​றல்" திரு.வி.க.வும் இந்​தப் பட்​டிய​லில் இடம் பெறா​மல்
போனதை எப்​படி கவ​னிக்​கா​மல் விட்​டார்​கள்?​

அடுத்த தொகுப்​பில் மறக்​கா​மல் சேர்த்​தால்​ தான் இந்த ஆவ​ணப் பதிவு முழுமை பெறும்.​

Kannan Natarajan

unread,
Dec 19, 2009, 9:10:20 PM12/19/09
to mint...@googlegroups.com
ஓ​வி​யர் ஜெ.பிர​பா​க​ருக்​குத்​தான் எத்​தனை முகங்​கள்?​

"எண்​ணங்​க​ளின் சங்​க​மம்" அமைப்​பின் மூலம் சமு​தா​யச் சிந்​தனை கொண்ட தன்​னார்​வத்
தொண்டு நிறு​வ​னங்​க​ளை​யும் அமைப்​பு​க​ளை​யும் ஒருங்​கி​ணைத்து ஆக்​க​பூர்​வ​மான பல
பணி​க​ளில் ஈடு​பட்டு வரும் ஓவி​யர் ஜெ.பி.​

ஒரு நூலா​சி​ரி​ய​ரா​க​வும் ஒரு புதிய பரி​மா​ணத்தை எடுத்​தி​ருக்​கி​றார்.​

மராட்​டிய மன்​னன் "சத்​ர​பதி" சிவா​ஜி​யின் குரு​வான சமர்த்த
ராம​தா​சர் பற்றி நமக்கு அதி​கம்
தெரிந்​தி​ருக்க நியா​ய​மில்லை.​

ராம​தா​சர் பற்றி இது​வரை கேள்​விப்​ப​டாத பல தக​வல்​க​ளைத் தேடிப் பிடித்து,​​
சுவா​ரஸ்​ய​மா​கப் படைத்​தி​ருக்​கும் பிர​பா​கர்,​​ தானே வரைந்​தி​ருக்​கும் ஓவி​யங்​கள் அதை​விட
அற்​பு​தம்.​

இந்​தப் புத்​த​கத்​தில் இடம் பெற்​றி​ருக்​கும் ஓவி​யர் "ஜெ.பி."யின் கேதார்​நாத் ஆல​யத்​தின் பட​மும்,​​
அனு​மன் பட​மும் அற்​பு​தத்​தி​லும் அற்​பு​தம்.​

சா​ணக்​கி​யர்...​ சமர்த்த
ராம​தா​சர்...​

இனி அடுத்​தது யாரைப் பற்​றிய புத்​த​கம் ஜெ.பி.?​

Kannan Natarajan

unread,
Dec 19, 2009, 9:13:35 PM12/19/09
to mint...@googlegroups.com
க​டந்த நூற்​றாண்​டில் வாழ்ந்த தமி​ழ​றி​ஞர்​க​ளில் தலை​ம​கன் என்​கிற பெரு​மைக்​கு​ரி​ய​வர் கா.சு.பிள்ளை
என்று பர​வ​லாக அறி​யப்​ப​டும் கா.சுப்​பி​ர​ம​ணிய பிள்ளை.​

சட்​டப் படிப்​பில் முது​க​லைப் பட்​டம் பெற்ற முதல் தமி​ழர் என்​கிற பெரு​மைக்​கு​ரி​ய​வர் இவர்.​

சட்ட வல்​லு​நர் என்​ப​தை​விட,​​ தமி​ழ​றி​ஞர் என்​ப​து​தான் கா.சு.பிள்​ளை​யின் சிறப்பு.​

அண்​ணா​ம​லைப் பல்​க​லைக்​க​ழ​கத்​தில் தமிழ்த் துறைத் தலை​வ​ராக இவர் பணி​யாற்​றி​ய​போது,​​ இவ​ரி​டம்
பணி​யாற்​றிய பெரும் புல​வர்​க​ளின் பட்​டி​யல் மிக​வும் பெரிது.​
  • பண்​டி​த​மணி கதி​ரே​சச் செட்​டி​யார்
  • மகா​வித்​து​வான் இரா.இரா​க​வை​யங்​கார்
  • ஒளவை சு.துரை​சா​மிப் பிள்ளை
  • வெள்​ளை​வா​ர​ண​னார்
  • வ.சுப.​ மாணிக்​கம்
  • சதா​சிவ பண்​டா​ரத்​தார்
என்று சொல்​லிக் கொண்டே போக​லாம்.​

நீங்​கள் ஒரு தமிழ் ஆர்​வ​லரா?​

தமிழ் மீதும் தமி​ழர் நாக​ரி​கம் மீதும் தீராக் காதல் கொண்​ட​வரா?​

"ஆம்" என்று யாரா​வது சொன்​னால் அவர்​க​ளி​டம் கேட்க வேண்​டிய அடுத்த கேள்வி,​​

"நீங்​கள் கா.சு.பிள்ளை எழு​திய "இலக்​கிய வர​லாறு" புத்​த​கத்​தைப் படித்​தி​ருக்​கி​றீர்​களா?​"

இ​தை ​விட எளி​மை​யா​க​வும்,​​ தெளி​வா​க​வும் தமிழ் இலக்​கிய வர​லாறு எழு​தப் பட்​ட​தும் இல்லை.​

எழு​த​வும் முடி​யாது.​

"தமிழ் மக்​கள் யார்?​" என்​ப​தில் தொடங்கி,​​
  • சங்க காலம்
  • சங்க கால நூல்​கள்
  • சங்க காலப் புல​வர்​கள்
  • மணி​வா​ச​கர் காலம்
  • சம​ணர் ஆட்​சிக் காலம்
என்று எதை​யும் விட்டு வைக்​கா​மல் இரு​ப​தாம் நூற்​றாண்டு வரை​யி​லான தமிழ் இலக்​கிய வர​லாறு
இவ​ரு​டை​யது.​

த​மிழ் மாண​வ​னி​டம் இந்த நூல் இல்​லா​மல் இருக்​க​லா​காது!​

Kannan Natarajan

unread,
Dec 19, 2009, 9:16:45 PM12/19/09
to mint...@googlegroups.com
சென்னை விவே​கா​னந்தா கல்​லூ​ரி​யின் முன்​னாள் முதல்​வர் வ.வே.சுப்​பி​ர​ம​ணி​யம் ஒரு பன்​மு​கப் பிர​மு​கர்.​

தாவர இயல் பேரா​சி​ரி​ய​ரான இவர்,​​ ஆங்​கில இலக்​கி​ய​மும்,​​ தமிழ் இலக்​கி​ய​மும் பேசிக் கேட்க வேண்​டும்.​

சம்ஸ்​கி​ரு​தத்​தி​லும் புலமை பெற்​ற​வர்.​

வ.வே.சு.​ என்​கிற புனை​பெ​ய​ரில் "மரத்​துப் போகாத மரங்​கள்" என்​கிற கவிதை இந்த ஆண்டு "அமு​த​சு​ரபி"
தீபா​வளி மல​ரில் வெளி​வந்​தி​ருக்​கி​றது.​ ​

இந்​தக் கவி​தை​யைப் படித்​த​போது என்னை அறி​யா​ம​லேயே "வால்ட் விட்​மனி"ன் "லீவ்ஸ் ஆப் கிராஸ்" ஞாப​கத்​துக்கு வந்​தது.​

ஏன் ஞாப​கத்​துக்கு வந்​தது என்​று​தானே கேட்​கி​றீர்​கள்.​

வசன கவி​தை​யின் முன்​னோ​டி​க​ளில் வால்ட் விட்​ம​னும் ஒரு​வர் என்​ப​தால் ​தான்.​

இனி மரத்​துப் போகாத மரங்​கள் கவி​தையி​லி​ருந்து சில வரி​கள்:-​​ ​ ​​​ ​

மரங்​கள் தங்​க​ளுக்​குள்​ ​
மவு​ன​மாய்ப் பேசிக்​கொண்​டன;​​ ​
இன்​னுமா மனி​தன் இயற்​கை​யைப் படித்து​ ​
தன்​னிலை உண​ராது தவித்து நிற்​கி​றான்?​​ ​

வாழும்​போது நிழல்​த​ரும் மரம் ​நான்;​​ ​
வீழும்​போ​தும் மண்​பெ​றும் உரம் ​நான்.​​ ​
என்​னைப் பார்த்து என் நிழல் ஏற்று​ ​
என்று திருந்​து​வான் இன்​றைய மனி​தன்?​​ ​

மாலைப் போதில் மயங்​கிய ஒளி​யில்​ ​
சாலை​யோ​ரம் மண்​டிய புகை​யில்​ ​
மரங்​கள் தங்​க​ளுக்​குள் ​​ ​
மவு​ன​மாய்ப் பேசிக்​கொண்​டன.​​ ​

மரத்துப் போகாத மனக் காயத்​து​டன்​ ​
மனி​தர்க்​கா​கச் சோகப் பட்​டன.

Kannan Natarajan

unread,
Dec 19, 2009, 9:18:36 PM12/19/09
to mint...@googlegroups.com
"தின​மணி" அலு​வ​ல​கத்​தில் கடை​நிலை ஊழி​யர்​கள் வரை இப்​போது புதுக்​க​வி​தைப் பிரி​யர்​க​ளாகி விட்​ட​னர்.​

உத​வி​யா​ளர் சந்​தி​ர​மெ
லி நான் கவிதை எழுதி இருக்​கி​றேன்,​​ சொல்​லட்​டுமா என்​றார்.​

"ம்.." என்று தலையை ஆட்​டி​னேன்.​

அவர் சொன்ன கவிதை...​

பணக்​கா​ரர்​க​ளின்
காட்​டில மழை...!​

ஏழை​க​ளின்
வீட்​டில மழை...!​

இது எப்​படி இருக்கு...?

Kannan Natarajan

unread,
Dec 20, 2009, 12:45:21 AM12/20/09
to mint...@googlegroups.com
பொங்​கு​த​மிழ்ப் பண்​ணிசை மணி​மன்​றத்​தின் சார்​பில் ஏழாம் ஆண்டு பண்​ணி​சைப் பெரு​விழா
சென்​னை​யில் சனிக்​கி​ழமை(19/12/09) தொடங்​கி​யது.​

விழா​வுக்கு தலைமை வகித்து இராம​தாஸ் பேசி​ய​தா​வது:​-

"எங்கும் தமிழ்;​ எதி​லும் தமிழ்" என சிலர் கூறி வரு​கின்​ற​னர்.​

"தமிழ் எங்கே இருக்​கி​றது?​" என நான் கேட்​கி​றேன்.​

தமிழ் எங்​கா​வது உரிய அதி​கா​ரத்​து​டன் இருக்​கி​றது என யாரா​வது கூறி​னால்,​​ அவர்​க​ளு​டன் விவா​திக்க
நான் தயா​ராக உள்​ளேன்.​

வட​மொ​ழி​யால் தமி​ழின் ஒரு சிறகு ஒடிந்​தது.​ இப்​போது ஆங்​கி​லத்​தால் இன்​னொரு சிற​கும்
ஒடிந்து விட்​டது.​

மொத்​தத்​தில் சிற​கொ​டிந்த பற​வை​யாக தமிழ் உள்​ளது.​

"மெல்லத் தமிழ் இனிச் சாகும்" என்​றார்​கள்.​

ஆனால், இன்​றைய நிலை​யில் பார்த்​தால்,​​ மிக வேக​மாக செத்​துக் கொண்​டி​ருக்​கி​றது.​

இந்த நிலை தொடர்ந்​தால்,​​ இன்​னும் 10 ஆண்​டு​க​ளில் தமிழ் அழிந்​து​வி​டும் அபா​யம் உள்​ளது.​

முதல்​வர் கரு​ணா​நி​திக்கு கோரிக்கை:​​- பொங்கு தமிழ்ப் பண்​ணிசை மணி​மன்​றத்​தின் சார்​பில்
ஏழா​வது ஆண்​டாக பண்​ணி​சைப் பெரு​வி​ழாவை நடத்​து​கி​றோம்.​

ஒவ்​வொரு ஆண்​டும் தமி​ழக அர​சுக்கு வைக்​கும் கோரிக்கை,​​ "சென்​னை​யில் தமி​ழிசை விழாக்​களை
நடத்​து​வ​தற்​கான அரங்​கத்தை அரசே கட்​டித் தர வேண்​டும்" என்​ப​து​ தான்.​

அதே கோரிக்​கையை இந்த ஆண்​டும் முதல்​வர் கரு​ணா​நி​திக்கு வைக்​கி​றேன்.​மேலும் வய​தான
தமிழ்ப் பண்​ணிசை அறி​ஞர்​க​ளுக்கு மாதம் ரூ.10 ஆயி​ரம் ஓய்​வூ​தி​யம் அளிக்க வேண்​டும்.​

தமிழ் இசை அறி​ஞர்​க​ளுக்​கும் மத்​திய அர​சின் பத்ம விரு​து​கள் கிடைக்க தமி​ழக அரசு நட​வ​டிக்கை
மேற்​கொள்ள வேண்​டும்.​

தமி​ழி​சையை 1 முதல் 12ம் வகுப்பு வரை கட்​டா​யப் பாட​மா​கச் சேர்க்க வேண்​டும்.​

அதை இந்த ஆண்டு முதலே அமல்​ப​டுத்த முதல்​வர் கரு​ணா​நிதி நட​வ​டிக்கை மேற்​கொள்ள வேண்​டும்
என்​றார் இராம​தாஸ்.​

விழா​வில்,​​ தமி​ழிசை அறி​ஞர் திருத்​தணி என்.​ சுவா​மி​நா​த​னுக்கு "பண்​ணி​சைத் தமிழ் மாமணி" என்ற
விருதை இராம​தாஸ் வழங்கி கெளர​வித்​தார்.​

நிகழ்ச்​சி​யில் பத்​தி​ரி​கை​யா​ளர் ஜே.வி.​ கண்​ணன்,​​ தமி​ழ​றி​ஞர்​கள் மா.​வைத்​திய​லிங்​கன்,​​
மு.பெ.​ சத்​தி​ய​வேல்​ மு​ரு​கன்,​​ தெ.​ ஞான​சுந்​த​ரம் மற்​றும் முன்​னாள் மத்​திய இணை​ய​மைச்​சர்
ஏ.கே.​ மூர்த்தி உள்​ளிட்​டோர் பங்​கேற்​ற​னர்.​

ஆழ்​வார்​பேட்டை மாந​க​ராட்சி சமு​தாய நலக் கூடத்​தில்,​​ ஞாயிற்​றுக்​கி​ழமை வரை நடை​பெ​றும்
இந்த இரண்டு நாள் நிகழ்ச்​சி​யில் தமி​ழிசை ஆய்​வ​ரங்​கம்,​​ இசை​ய​ரங்​கம் உள்​ளிட்ட பல்​வேறு
தமி​ழிசை நிகழ்ச்​சி​கள் நடை​பெ​று​கின்​றன.

Kannan Natarajan

unread,
Dec 20, 2009, 12:51:58 AM12/20/09
to mint...@googlegroups.com
"இந்​தி​யன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்​டி​யின்" சார்​பில் 77வது தென்​னிந்​திய இசை மாநாடு மற்​றும்
விழா​வில் புல்​லங்​கு​ழல் இசைக் கலை​ஞர் டாக்​டர் பிர​பஞ்​சம் சீத்​தா​ரா​முக்கு
"சங்​கீத கலா சிகா​மணி" விருது வழங்கி நீதி​பதி பிரபா ஸ்ரீதே​வன் சனிக்​கி​ழமை (19/12/09)
பேசி​ய​தா​வது:​-

இந்த நிறு​வ​னத்தை நிறு​வி​ய​வர்​க​ளில் ஒரு​வ​ரான பி.​ செளடையா ஒரு இசை மேதை.​

ஒரு முறை டி.ஆர்.​ மகா​லிங்​கத்​தின் இசை நிகழ்ச்​சி​யில் வய​லின் இசை இயல்​பாக இல்​லா​த​தால்
செளடையா தானே வய​லின் இசைத்​தா​ராம்.​

மகா​லிங்​கத்​தின் சீடர் என்ற பெருமை பிர​பஞ்​சம் சீத்​தா​ரா​முக்கு உண்டு.​

மு​து​பெ​ரும் இசைக் கலை​ஞர்​கள் நோயால் பாதிக்​கப்​பட்​டா​லும்,​​ பொரு​ளா​தா​ரத்​தில் நலி​வுற்​றா​லும்
அவர்​க​ளுக்கு உத​விக்​க​ரம் நீட்​டும் வகை​யில் நிறு​வ​னத்​தின் சார்​பில் இப்​போது அறக்​கட்​டளை
தொடங்​கப்​பட்​டுள்​ளது பாராட்​டத்​தக்​கது.​

இ​தர துறை​க​ளைச் சேர்ந்​த​வர்​க​ளுக்கு உள்​ளது போன்று வருங்​கால வைப்பு நிதி உள்​ளிட்ட எதிர்​கால
நலன்​க​ளுக்கு உத்​த​ர​வா​தம் அளிக்​கும் வகை​யில் எவ்​வித பாது​காப்​பும் இசைக் கலை​ஞர்​க​ளுக்கு இல்லை.​

இசை சீச​னின் போது மேடை​யே​று​வ​தால் மட்​டுமே இசைக் கலை​ஞர்​க​ளுக்கு வரு​வாய் கிடைக்​கி​றது.​

இ​சைக் கலை​ஞர்​கள் நலி​வு​றும் நிலைக்​குத் தள்​ளப்​ப​டு​வதை நாம் அனு​ம​திக்​கக் கூடாது.​

அது கல்​விக் கட​வுள் சரஸ்​வதி தேவிக்கே களங்​கம் விளை​விப்​ப​தா​கும்.​

பிறந்த குழந்​தைக்கு யாரும் கற்​றுக் கொடுக்​கா​மலே வரு​வது உண​வைச் சாப்​பி​டு​வது தான்.​

இது மனி​த​னுக்கு மட்​டு​மல்ல,​​ விலங்​கு​க​ளுக்​கும் கூட உள்​ளது.​

இதற்கு அடுத்​த​ப​டி​யாக இசை என்​பது கற்​கா​ம​லேயே வரு​கி​றது.​

குழந்தை அழும்​போது தாலாட்டு பாடி​னால் அதைக்​கேட்டு அமைதி அடை​கி​றது.​

இதன் மூலம் இசை​யைக் கேட்டு தனது வருத்​தத்​தையோ அல்​லது கோபத்​தையோ அடக்​கிக் கொள்ள
குழந்​தைக்கு யார் கற்​றுக் கொடுத்​தது?​

இ​சையை மனி​தர்​கள் மட்​டு​மல்ல விலங்​கு​க​ளும்,​​ தாவ​ரங்​க​ளும் கூட கேட்​கின்​றன.​

உலகம் முழு​வ​தும் வன்​முறை பர​வி​யுள்ள நிலை​யில்,​​ மனித சமு​தா​யத்தை அமைதி வழி​யில்
ஈர்த்து பாது​காப்​பது இசைக் கலை​ஞர்​க​ளால் மட்​டுமே முடி​யும்.​

அ​த​னால்​ தான் மன்​னர்​கள் காலத்​தில் கலை​ஞர்​க​ளுக்கு அதிக ஆத​ரவு அளிக்​கப்​பட்​டது.​

அதே​போல இந்​தக் காலத்​தி​லும் கலை​ஞர்​களை போற்றி,​​ ஆத​ரவு அளிக்க வேண்​டும்.​

த​மி​ழ​கத்​தில் ஒரு போதும் இசை உள்​ளிட்ட கலை​கள் அழி​யாது.​

இந்த சீச​னில் மட்​டுமே 2,500 இசைக் கச்​சேரி நடை​பெற உள்​ளது.​

இது அனை​வ​ருக்​கும் மகிழ்ச்சி அளிக்​கக் கூடி​ய​தா​கும்.​

அந்​தக் காலத்​தில் ரிக்​ஷா​வில் செல்​லும் வித்​வான் பாடும் இராகத்தை,​​ ரிக்ஷா ஓட்​டு​ப​வர் கூட
அறிந்து இரசிக்​கும் நிலை தமி​ழ​கத்​தில் இருந்​தது.​

இப்​போது அதே போன்ற நிலை மீண்​டும் திரும்​பி​யுள்​ளது.​

இ​சை​யின் உயர்​வை​யும்,​​ அதன் அனு​ப​வத்​தை​யும் அனைத்து தரப்​பி​ன​ரும் அறிய வேண்​டும்.​

அத​னால்​ தான் இசை​யும்,​​ கலை​யும் கோவில் போன்ற பொது இடத்​தில் அரங்​கேற்​றப்​பட்​டது.​

இதை இரசிக்க அனை​வ​ரும் வர​லாம்.​

தடை இருக்​கக் கூடாது.​

இசையை சாத​கம் செய்​வதே தவம்.​

பாடு​வதே நாத உபா​சனை ஆகும்.​

இப்போ​தைய தலை​முறை இணை​ய​த​ளத்தை திறம்​பட பயன்​ப​டுத்​து​கின்​ற​னர்.​

உல​கின் எப்​ப​கு​திக்​கும் இசை​யை​யும்,​​ நுண்​க​லை​க​ளை​யும் பரப்ப முடி​யும்.​

இணை​ய​த​ளத்​தின் உத​வி​யு​டன் இளை​ஞர்​கள் எளி​தில் இசை​யைக் கற்க முடி​யும்.​

எனவே,​​ இசை உள்​ளிட்ட அருங்​க​லை​கள் இனி நலி​வு​றாது என்​றார் நீதி​பதி பிரபா ஸ்ரீதே​வன்.​

நி​று​வ​னத்​தின் தலை​வர் வி.​ சேது​ராம்,​​ புல்​லாங்​கு​ழல் இசைக் கலை​ஞர் டாக்​டர் பிர​பஞ்​சம் சீதா​ராம்,​​
கர்​நா​டக இசைப் பாடகி சுதா இரகு​நா​தன்,​​ இரவிக் கிரண்,​​ கே.வி.​ இராமச்​சந்​தி​ரன் ஆகி​யோர் பங்​கேற்​ற​னர்.

Kannan Natarajan

unread,
Dec 26, 2009, 1:28:49 AM12/26/09
to mint...@googlegroups.com
சென்னையில் வெள்ளிக்கிழமை (25/12/09) நடைபெற்ற "உயிர்மை" பதிப்பகத்தின் நூல் வெளியீட்டு விழாவில்
"தினமணி" ஆசிரியர் கே.​ வைத்தியநாதன் பேசியது:-

"எல்லாக் காலங்களிலும் படைப்புகள் வந்த வண்ணம் தான் இருக்கின்றன.​ எல்லா எழுத்தாளனுக்குமே தான்
படைத்த படைப்பெல்லாம் இலக்கியம்தான்;​ சிறந்ததுதான்.​

இதில் எதை நாம் இலக்கியம் என்று ஏற்றுக் கொள்வது?​

இலக்கியம் என்கிற அங்கீகாரம் பெற என்னதான் அளவுகோல்?

காலம் என்கிற பரிசோதனைச் சாலையில் அங்கீகாரம் பெறாத எந்த எழுத்தும் இலக்கியமாகாது.​

குறைந்தது ஒரு தலைமுறையைத் தாண்டி அந்தப் படைப்பு நின்றால் மட்டுமே அது இலக்கியம்.​

எழுதப்படும்,​​ வெளியிடப்படும் படைப்புகளில் 90% படைப்புகள் காலத்தால் புறந்தள்ளப்பட்டு விடுகின்றன என்பது
தான் யதார்த்த உண்மை.​ ​

அதேபோல,​​ சமகால இலக்கியப் படைப்புகள் பள்ளி,​​ கல்லூரிப் பாடத்திட்டங்களில் இடம் பெறக்கூடாது.​

குறைந்தது 50 ஆண்டுகளுக்கு முந்தைய படைப்புகள் மட்டுமே பாடத்திட்டத்தின் பரிசீலனைக்கே எடுத்துக்
கொள்ளப்பட வேண்டும்.​

சமகாலப் படைப்புகளை ஏற்றுக் கொள்ளும்போது,​​ ஆட்சிக்கும்,​​ பாடத்திட்டக் குழுவுக்கும் வேண்டியவர்களின்
தரமற்ற இலக்கியப் படைப்புகள்கூடப் பள்ளிக் குழந்தைகளுக்குப் பாடமாகத் தரப்பட்டுவிடும் ஆபத்து உண்டு.​

இதன் தொடர் விளைவாகத் தரமற்ற நாளைய தலைமுறை உருவாகிவிடும் என்பது மட்டுமல்ல,​​ இலக்கியத்தின்
தரமும் தாழ்ந்துவிடும்.

நமது எழுத்தும்,​​ பேச்சும் சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்;​ மாற்றத்திற்கு வழிகோல வேண்டும்;​
அடுத்த தலைமுறைக்கு வழிகாட்ட வேண்டும்" என்றார் தினமணி ஆசிரியர் வைத்தியநாதன்.

http://www.dinamani.com/Images/article/2009/12/26/26editor.jpg

உயிர்மை பதிப்பகத்தின் சார்பில் சென்னையில் வெள்ளிக்கிழமை (25/12/09) நடைபெற்ற பன்னிரண்டு நூல்கள்
வெளியீட்டு விழாவில் "வெட்டுப்புலி" என்ற நூலை தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் வெளியிட,​​
திரைப்பட இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் பெறுகிறார்.​

உடன் ​(இடமிருந்து)​ பதிப்பாளர் மனுஷ்யபுத்திரன்,​​ கவிஞர் ஞானக்கூத்தன்,​​ எழுத்தாளர் பிரபஞ்சன்,​​
நூலாசிரியர் தமிழ்மகன்.​​

Kannan Natarajan

unread,
Dec 26, 2009, 1:48:18 AM12/26/09
to mint...@googlegroups.com
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் மாமல்லபுரத்தில் வெள்ளிக்கிழமை (25/12/09) நடத்தப்பட்ட
இந்திய நாட்டிய கலைவிழா தொடக்க விழாவில்,​​ சிறப்பு விருந்தினராக துணை முதல்வர்
மு.க.ஸ்டாலின் பங்கேற்று,​​ விழாவை தொடங்கிவைத்து பேசியது:
-
 
பயணங்களில்,
  • தொழில்
  • கல்வி
  • மருத்துவம்
  • தேர்வு
  • சேவை
என்று பலவிதமான பயணங்கள் இருப்பினும் அதில் சிறந்தது சுற்றுலாப் பயணம் தான்.​

அதில் தான் மகிழ்ச்சியையும்,​​ ஒரு நாட்டின் பண்பாடு மற்றும் கலாசாரத்தையும் உணர முடிகிறது.​

அதனாலேயே இந்த அரசு சுற்றுலாவுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.​

இன்று தொடங்கப்பட்டுள்ள சிற்ப பூங்காவுக்கு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் கோவையில் நடக்கவிருக்கும்
செம்மொழி உலகத் தமிழ் மாநாட்டை மனதில் கொண்டு இப்பூங்காவுக்கு "செம்மொழி சிற்ப பூங்கா"
என பெயர் வைக்கப்பட்டுள்ளது.​

இப்பூங்கா ரூ.87
லட்சம் செலவில் தமிழ் கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்டு கலை நயத்துடன்
வடிவமைக்கப்பட்டுள்ளது.​

மரகதப் பூங்கா ரூ.60
லட்சத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.​

இந்திய நாட்டிய கலை விழா 1992ல் தொடங்கப்பட்டு,​​ டிசம்பர் 25 முதல் ஒரு மாதம் வார விடுமுறை நாட்களில்
மட்டும் நடத்தப்பட்டு வந்தது.​

இதனை வெளிமாநிலத்தவர் உள்பட,​​ பல வெளிநாட்டினர் விரும்பிப் பார்த்தனர்.​

இதற்கு அதிக வரவேற்பு இருப்பதால் ​ கடந்த ஆண்டு முதல் இந்திய நாட்டிய கலைவிழா மாதம் முழுவதும்
நடத்தப்படுகிறது.​ ​

இந்த கலைவிழாவில தமிழ் பண்பாட்டு சங்கம் சார்பில்,
  • கிராமிய நடனம்
  • கரகம்
  • காவடி
  • தப்பாட்டம்
மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து அந்தந்த மாநிலத்தின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில்
பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படவிருக்கிறது.​

மாமல்லபுரத்துக்கு மத்திய அரசின் சார்பில் ரூ.108 கோடியும்,​​ மாநில அரசு சார்பில் ரூ.136 கோடியும்
கடந்த 3 ஆண்டுகளில் செலவிடப்பட்டு பல சிறப்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.​

இதனால் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் மாமல்லபுரத்திற்கு 3
லட்சம் வெளிநாட்டினர்
உள்பட 33
லட்சம் பேர் வந்து பார்வையிட்டு சென்றுள்ளனர் என்றார்.

முன்னதாக மாமல்லபுரம் சுற்றுலா வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள
  • செம்மொழி சிற்ப பூங்காவையும்
  • மாமல்லபுரம் மரகதப் பூங்காவையும்
திறந்துவைத்தார்.​

செம்மொழி சிற்ப பூங்காவில் உலகப்பொதுமறை இயற்றிய திருவள்ளுவரை உலக உருண்டையின்
மீது வைத்தாற்போன்ற சிலை முதலில் வைக்கப்பட்டுள்ளது.​

சிற்ப பூங்காவில் திருவள்ளுவர் சிலை உள்பட 33 சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.


விழாவில்,
  • சுற்றுலாத்துறை அமைச்சர் என்.சுரேஷ்ராஜன்
  • தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன்
  • தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத் தலைவர் வெ.இறையன்பு
  • சுற்றுலா வளர்ச்சிக் கழக இயக்குநர் ஆ.சி.மோகன்தாஸ் மற்றும்
  • காஞ்சிபுரம் எம்.பி பெ.விஸ்வநாதன்
  • எம்.எல்.ஏக்கள் க.சுந்தர் மற்றும் காயத்ரி தேவி
உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.​ ​​​

Kannan Natarajan

unread,
Dec 26, 2009, 10:43:40 PM12/26/09
to mint...@googlegroups.com
புதுவைக்குப் போயிருந்தபோது நிருபர் குப்பன் கி.ராஜநாராயணனை சந்திக்க அழைத்துப் போனார்.

நெல்லைச் சீமையின் "கதை சொல்லி" இப்போதும் புதுவையில் இருந்தபடி இலக்கியப் பணி
தொடர்வதைப் பாராட்டாமல் இருப்பது எப்படி?

சமீபத்தில் வெளியான அவரது "கதை
சொல்லி"இதழில் வெளிவந்த படைப்புகளின்
தொகுப்பைத் தரும்போதே "தேர்ந்தெடுத்த படைப்புகளை மட்டுமே தொகுத்திருக்கிறோம்"
என்று ஒரு விளக்கமும் சொன்னார் அவர்.

சற்று ஆழமாகப் படித்தபிறகு "கதை சொல்லி" தொகுப்பு பற்றி எழுதுகிறேன்.

இப்போது, கி.
ரா. சொன்ன இரண்டு அருமையான சிந்தனைக்குரிய விஷயங்களைப் பதிவு
செய்ய விரும்புகிறேன்.

நடைபெற இருக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் நாட்டுப்புறவியல் பற்றிய
குறிப்பு இல்லை என்பது கி.
ரா.வின் நியாயமான வருத்தம்.

இதற்கு அவர் சொல்லும் வாதம் அதைவிட அருமை.

ஆரம்பத்தில் மனிதன் எழுதவில்லை. சொல்தான் இருந்தது.

பல இலக்கியங்கள் வாய்வழிதான் கத்திக் கூறப்பட்டன.

கதைகள் மூலம் நீதி நெறிகள் நிலைநிறுத்தப்பட்டன.

சொல்லுக்குப் பிறகே எழுத்து வந்திருக்க முடியும்.

அதனால் சொல்வழி வந்த "நாட்டுப்புறவியல்" செம்மொழித் தமிழின் இன்றியமையாத ஒன்று.

அடுத்ததாக கி.
ரா. முன்வைத்த இன்னொரு கருத்தும் சிந்தனைக்குகந்த ஒன்று.

தமிழ் இலக்கியம் என்பது கவிதை சார்ந்ததாகவே தான் இருந்து வந்திருக்கிறது.

ஐரோப்பியர்கள் தரங்கம்பாடியில் அடியெடுத்து வைத்த பிறகுதான் - அவர்கள் பைபிளைத்
தமிழ்ப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட பிறகுதான் - உரைநடைத் தமிழ் இங்கே உருவானது.

அதன்பிறகு, படைப்பிலக்கியம் என்பது உரைநடை இலக்கியமாக மாறிவிட்டது எனலாம்.

கவிதைகூட வசன கவிதை, புதுக்கவிதை என்று உரைநடையை ஒட்டியதாக மாறிவிட்டது.

இந்த நிலையில், இன்னும் ஏன் உரைநடைத் தமிழுக்கு நமது பல்கலைக்கழகங்களில் தனியாகத்
துறை அமைக்கப்படவில்லை என்பது "கி.
ரா" எழுப்பும் கேள்வி.

தான் புதுவைப் பல்கலைக்கழகத்தில் வேலை பார்த்தபோது, அன்றைய துணைவேந்தர்
வெங்கடசுப்பிரமணியத்திடம் இதற்காக வாதாடியதாகவும், பிறகு க.ப.அறவாணன்
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணைவேந்தரானபோது, அங்கே உரைநடைத்
தமிழுக்குத் தனித்துறை அமைப்பதாகக் கூறி, பிறகு ஏனோ அதை முன்னெடுத்துச்
செய்யவில்லை என்றும் மனம் திறந்தார்.

எழுத்தாளர் "கி.
ரா" முன் வைத்திருக்கும் இரண்டு கருத்துகளுமே ஆழ்ந்த சிந்தனைக்குரியவை.

இவை பற்றிய விவாதங்கள் ஆரோக்கியமான மொழி வளர்ச்சிக்கு உதவும்.

Kannan Natarajan

unread,
Dec 26, 2009, 10:47:46 PM12/26/09
to mint...@googlegroups.com
நண்பர் "செ.திவான்" ஒரு வித்தியாசமான மனிதர். மனதிற்கினிய நண்பர்.

சமீபத்தில் எனக்கு அவர் ஒரு பரிசளித்தார்.

அட, இப்படியொரு பொக்கிஷத்தை எனக்குப் பரிசளிக்க எப்படி மனது வந்தது?

நானாக இருந்திருந்தால் நிச்சயமாகக் கொடுத்திருக்க மாட்டேன்.

அந்த அளவுக்குப் பெரிய மனது எனக்கு இல்லை.அது என்ன அப்படியொரு பொக்கிஷம்?

அது 1935ஆம் ஆண்டு வெளியான "இந்திய ஐரோப்பிய இனங்களின் தோற்றம்"
(T‌h‌e O‌r‌i‌g‌i‌n ‌o‌f ‌t‌h‌e I‌n‌d‌o -​ E‌u‌r‌o‌p‌e​a‌n,​​ Ra​c‌e‌s a‌n‌d ‌P‌e‌o‌p‌l‌e) என்கிற ஆங்கிலப் புத்தகம்.

இதைத் தொகுத்தவர் வி.சொக்கலிங்கம் பிள்ளை என்பவர்.

யார் இந்த வி.சொக்கலிங்கம் பிள்ளை தெரியுமா?

கேட்டால் ஆச்சரியத்தில் சமைந்துவிடுவீர்கள்.

அவர் பிரபல படைப்பாளி புதுமைப்பித்தனின் தந்தை.

முன்சீப்பாக வேலைபார்த்து வந்த சொக்கலிங்கம் பிள்ளை நிரம்பப் படித்தவர்.

ஆங்கிலத்தில் அசாத்தியப் புலமை. சரித்திரத்தில் ஆழ்ந்த ஞானம்.

ஊர், ஊராக மாற்றலாகும் வேலையில் இருந்தாலும், இரவெல்லாம் கண்விழித்து
எழுதிய புத்தகத்தின் முதல் பாகம் தான் திவான் எனக்குப் பரிசளித்தது.

இரண்டாவது பாகம் எங்கே என்று கன்னிமரா நூலகம் வரை சல்லடைபோட்டு
தேடிக்கொண்டிருக்கிறேன்.

இவ்வளவு விஷயங்களை, இந்த அளவுக்கு ஊடகங்களும், வசதியும் இல்லாத காலத்தில்
இந்த மனிதர் எப்படித் தெள்ளத் தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தார் என்பது மலைப்பாக
இருக்கிறது.

தனது கடைசிக் காலத்தில் அவர், "நாஜி" கொள்கைகளின் பற்றாளராக மாறினார் என்றும்,
ஹிட்லருடன் கடிதப் போக்குவரத்து வைத்திருந்தார் என்றும் கூடக் கூறுவார்கள்.

ஜவாஹர்லால் நேருவின் "க்ளிம்ப்சஸ் ஆஃப் வோர்ல்ட் ஹிஸ்ட்ரி" என்கிற உலக சரித்திரம்
பற்றிய பதிவு மேலோட்டமானது என்றால், சொக்கலிங்கம் பிள்ளையின் பதிவு ஆழமானது.

ஓர் ஆராய்ச்சியாளர் செய்து முடிக்க வேண்டிய பணியை, ஓர் அரசு அலுவலர் பகுதிநேரப்
பணியாகச் செய்திருக்கிறார்.

அதிலும் ஒரு தமிழன்.

இந்தச் சாதனையைப் பதிவு செய்யாமல் விடுவது எங்ஙனம்?

யாராவது இதை மறுபதிப்புச் செய்து வெளியிடக்கூடாதா?

Kannan Natarajan

unread,
Dec 26, 2009, 10:50:59 PM12/26/09
to mint...@googlegroups.com
"நடிகவேள்" எம்.ஆர்.ராதா பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?

என்ன தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

அந்த வித்தியாசமான கலைஞனைப் பற்றிய அற்புதமான பதிவு ஒன்றை
பத்திரிகையாளர் மணா "எம்.ஆர்.
ராதா - காலத்தின் கலைஞன்" என்கிற
புத்தகத்தின் மூலம் படைத்திருக்கிறார்.

"துப்பாக்கி அதிர்வுகள்" என்கிற பகுதி எம்.ஜி.ஆர். துப்பாக்கிச் சூடு சம்பவத்தின்
பின்னணியை விளக்குகிறது.

சுதாங்கனின் பதிவு அளவுக்குப் பதிவு இல்லை என்றாலும், இதில் இன்னொரு 
கோணத்தில் பயணித்திருக்கிறார் மணா.

"எந்தப் படத்திலும் தன்னை ஒப்பந்தம் செய்ய வருகிறவர்களிடம், எனக்கு என்ன பாத்திரம்?"

என்று கேட்க மாட்டாராம் எம்.ஆர்.
ராதா.

அவர்களாகச் சொன்னால் மட்டும் கேட்டுக்கொள்வாராம்.

வில்லன், நகைச்சுவை, குணச்சித்திரம் என்று எதுவானாலும் மறுக்காமல் ஏற்றுக்கொள்வாராம்.

தனக்கு ஜோடியாக யார் நடிக்கிறார்கள் என்பதைக் கூட அவர் பொருட்படுத்தமாட்டார் என்று
மணா செய்திருக்கும் பதிவு உண்மை... உண்மை... உண்மை...!

உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா?

எம்.ஆர்.
ராதா உயிரோடு இருக்கும்வரை, எந்த ஊரில் அவர் "ரத்தக்கண்ணீர்" நாடகம் நடத்தினாலும்,
அந்த நாடகம் நடக்கும் தினங்களில் திரையரங்குகளில் புதிய திரைப்படமே ஆனாலும் கூட்டம்
குறைந்துவிடும்.

அப்படியொரு சிரஞ்சீவித்தனம் அந்த நாடகத்துக்கும் அவரது நடிப்புக்கும் இருந்தது!

Kannan Natarajan

unread,
Dec 26, 2009, 10:56:05 PM12/26/09
to mint...@googlegroups.com
சமீபத்தில் படித்ததில் பிடித்த கவிதை எது என்று வாராவாரம் "இந்த வாரம்" எழுதும்போது
கடைசியாக எழும் சிந்தனை.

இந்த வாரம் அதிக நேரம் சிந்திக்க வேண்டிய வேலை இருக்கவில்லை.

கவிஞர் "தமிழ்நதி" ஆனந்தவிகடன் இதழில் எழுதியிருக்கும் கவிதை ஒன்றைப் படித்தபோது
அட, முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் என்னில் அடிக்கடி எழுந்து மறைந்த சிந்தனை
இந்தக்காலக் கவிதையிலும் ஒரு படைப்பாளியால் பிரதிபலிக்கப்படுகிறதே என்று
நினைத்துப் பிரமித்தேன்!

மீண்டும், மீண்டும் படித்துப் பார்த்து மனதுக்குள் சிரித்துக்கொள்கிறேன்.

தமிழ்நதி ஒரு கவிஞரின் தர்மசங்கடமான மன ஓட்டத்தை சித்திரித்திருக்கும் விதத்தை
எண்ணி, எண்ணி வியக்கிறேன்.

இதோ கவிதை,

அவசரமாய் கவிதையொன்றைத்
தயாரிக்க வேண்டியிருக்கிறது
அனுப்பிவைக்கக் கேட்டவரின் அனுக்கமும்
வாசிப்பவள்/ன்
கைவண்டி இழுத்துக் களைத்தவனா
சமையல் விடுமுறையில்
கூட்டத்தில் குப்புறக் கவிழ்ந்திருந்து படிப்பவளா
இலக்கிய நுணுக்குக்காட்டி அணிந்தவனா
சன்னல்களும் பூட்டப்பட்ட அறையினுள்
புத்தகங்களோடு மட்டும் வசிப்பவனா
இக் கவிதை
திறந்த இடுப்பருகில் இடம்பெறுமா
கொலைப் படுகளத்தைச் சித்திரிக்கும் கட்டுரைக்கு
எதிர்ப் பக்கத்தில் வெளிவருமா
இறக்குவதா ஏற்றுவதா
இருண்மை செய்வதா
வெளிச்சம் விழுத்துவதா
ஏதேதோ கேள்விக் கொக்கி
பிடித்திழுக்கப் பிடித்திழுக்க
பொறாமல் முகம் சிணுங்கி
தெருவிறங்கிப் போகிறதே
என் கவிதை
என் செய்வேன்
இல்லாத என் தெய்வமே!

Kannan Natarajan

unread,
Dec 26, 2009, 11:10:16 PM12/26/09
to mint...@googlegroups.com
திருப்புகழை பாடப் பாட...

வாக்குக்கு அருணகிரி என்பது பழைய மொழி,​​ ஆனால் இது ஒரு பொய்யாமொழி.​

அவர் அருளிய திருப்புகழ்தனைப் பாடி நம்மை மெய்மறக்கச் செய்பவர் சுந்தரவல்லி.​

http://www.dinamani.com/Images/article/2009/12/25/27kon10.jpg

திருப்புகழ் பாடல்களைக் கொண்டே ஒரு முழுக் கச்சேரி செய்ய வல்லவர்.​

தனது கணவர் கிருஷ்ணனுடன் இணைந்து பல திருப்புகழ் விளக்கக் கூட்டங்களும்
நிகழ்த்தியுள்ளார்.​

இனி அவருடன்...

திருப்புகழ் மீது அன்றும், இன்றும் அதே பற்றுடன் தான் இருக்கிறேன்.​

திருப்புகழ் ஆர்வம் என்பது எங்கள் வீட்டிலே உருவானது தான்.​

திருவல்லிக்கேணியில் எங்கள் வீட்டில் பாட்டு சதா ஒலித்துக் கொண்டே இருக்கும்.​

ஒவ்வொரு வாரமும் மூன்று நாட்கள் பஜனை நடப்பது உறுதி.​

எனது பாட்டனார் டி. வி. சீதாராம பாகவதர் ஒரு ஸ்ட்ரிக்ட் ஆன பேர்வழி.​

எங்களுக்குப் பாடலின் ஒரு வரியை சொல்லிக் கொடுத்து உடனே பாட வைப்பார்.​

எனது பாட்டனார் திருப்புகழ் பாடல்களை வெளி உலகிற்குக் கொண்டு வந்த
வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகளிடம் பயிலும் பாக்கியம் பெற்றவர்.​

சங்கீதத்திலும் எனது பாட்டனாருக்கு ​ நல்ல பாண்டித்தியம் உண்டு.​

ஒரு முறை பூச்சி ஸ்ரீனிவாஸ அய்யங்கார்,​​ எனது பாட்டனார் பாடுவதில்
லயித்து,​​
திண்ணையில் அமர்ந்து கேட்டு பாராட்டியிருக்கிறார்.​

இத்தனைக்கும் எனது தாத்தா கேள்வி ஞானத்தினால் தான் எல்லாவற்றையும்
வளர்த்துக் கொண்டவர்.

எனது தகப்பனாரும் இதில் மிகுந்த ஆர்வம் காட்டியதில் ஒன்றும் வியப்பில்லை.​

அவர் ​(டி.எஸ்.வாசுதேவன்)​ திருப்புகழின் பதங்கள்,​​ அதன் சந்தம்,​​ குறிலும் நெடிலும் அமையும் விதம்
இவற்றையெல்லாம் மனதில் கொண்டு இந்த அழகிய பாடல்களுக்கு அழகிய மெட்டுக்களை அமைத்தவர்.​

ஜி.என்.பி.யும் எனது தகப்பனாரும் ஒரே வயதுடையவர்கள்.​ ஒன்றாகப் படித்தவர்கள்.​

சிறுவயதில் ஆட்டம் ஆடும் தருணத்தில் கூட ஜி.என்.பி.​ ஒரு விளையாட்டைப் போலவே
மாற்றி, மாற்றி ஸ்வரங்கள் அமைத்துக் காட்டுவார் என்றும் அதைக் கண்டு தான் வியந்த விதத்தையும்
எனது தகப்பனார் என்னிடம் கூறியிருக்கிறார்.​

1979ஆம் ஆண்டு எனக்குத் திருமணம் நடந்தது.​

எனது கணவர் வலையபட்டி கிருஷ்ணனும் தமிழ் மொழியின் மீதும் திருப்புகழின் மீதும் நாங்கள் கொண்ட
அதே அளவு ஈடுபாடு கொண்டிருந்தார் என்பது எனக்கு ஏற்பட்ட மற்றொரு அதிர்ஷ்டம்.​

அவர் ஸ்யாமா சாஸ்திரிகளின் வழி வந்தவர் என்பதும் எனக்குச் சேரும் பெருமையே ஆகும்.

சங்கீதத்தில் ​ என் மனம் ஒன்றி இருந்ததால் பி. ஏ. மற்றும் எம். ஏ. இரண்டையும் இசைத்துறையிலேயே
பெற்றேன்.​

டாக்டர் எஸ்.
ராமநாதனிடமும் எஸ்.ராஜத்திடமும் நான் இசை பயின்றுள்ளேன்.​

ராமநாதன் தமிழையும்,​​ அதிலும் முக்கியமாக சிலப்பதிகாரத்தில் நம் இசை வழிகள்,​​ முறைகள்
எங்ஙனம் விவரிக்கப்பட்டுள்ளது என்பதையும் நன்கு ஆராய்ந்துள்ளவர்.​

எஸ்.
ராஜம்,​​ எஸ்.பாலசந்தரின் சகோதரர்.​

இவர் கோடீஸ்வர அய்யரின் 72 மேள கர்த்தா
ராக க்ருதிகளை ஸ்வரப் படுத்தியதோடன்றி எனக்கு
இவற்றை விவரமாகச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.​

நேரம் காலம் போவதே தெரியாது.​

இது தவிர சுலோச்சனா பட்டாபிராமனிடமும் கற்றுக் கொண்டிருக்கிறேன்.​ ​

ராகத்தை ஒரு வரைபடம் போல நமக்குக் காண்பிப்பார்.​ ​

ஆல் இண்டியா ​ ரேடியோவும், மியூசிக் அகாடமியும் திருப்புகழைப் பரப்ப நிறைய உதவியிருக்கின்றன.​

எங்களுக்கு நிறைய வாய்ப்பும் கொடுத்திருக்கின்றன.​

சமீபத்தில் ஓய்வு பெற்ற பி. ஆர். குமார் முழு நேர திருப்புகழ் கச்சேரி என் மூலம் நடத்தியுள்ளார்.​

லய வல்லுனர் ஜே. வெங்கட்ராமன் எனக்கு தம்பூரா ஸ்ருதி கொடுத்துள்ளார்.​

அந்தத் தருணத்திலேயே உருகிப் போயும் இருக்கிறார்.​

இது திருச்சி வானொலியில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது.​

க்ளீவ்லேண்ட் இசை நிகழ்ச்சியிலும் திருப்புகழ் பாடச் சொல்லி எனக்கு தற்பொழுது அழைப்பு வந்துள்ளது.

உண்மையில் எனக்கு நன்றாக வீணை வாசிக்கத் தெரியும்.​

எனது தாத்தாவும் வாசிப்பார்.​

எனக்கு 12 வயதிருக்கும் போது திண்ணியம் வெங்கட்ராமன் என்ற மகாவித்வான் என்னை திடீரென்று பாடச்
சொன்னார்.​

நான் பாடுவதைக் கேட்டு குரல் இருக்கிறதே -​ குரல் இருக்கும் போது விரல் வேண்டாம் என்றார்.​

என்னை வாய்ப்பாட்டிற்குள் இழுத்து விட்டவர் அவரே.​ நல்ல சாதகம் கொடுப்பார்.​

விளக்கெண்ணையில் பேயம் பழத்தை ஊற வைத்து சாப்பிடச் சொல்லி மிகச் சன்னமாக இருந்த என் குரலைக்
கேட்பவர்கள் போற்றும் வண்ணம் மாறி ஒலிக்கச் செய்தவர் அவரே.​ ​

எனது மகள் பவ்யாவும் இது போலவே திருப்புகழிலும் சங்கீதத்திலும் அக்கறை காட்டி நன்றாகக் கற்றுக்
கொண்டிருக்கிறாள்.​ எனது மாணவி ப்ரதிபா சென்னைப் பல்கலைக் கழகத்தில் இசை பயின்று வருகிறாள்.​

இது போல மாணவிகள் வி .ஜி .அக்ஷயா,​​ ஸ்ரீ வித்யா வானொலியில் இசை நிகழ்ச்சிகள் கொடுத்துள்ளார்கள்.​ ​

இசை கற்க வருபவர்களுக்கு முதலில் சுய ஆர்வம் இருக்க வேண்டும்.​

கற்றுக் கொண்டதை பல முறை பாடி அது மிக மிகச் சரியாக வரும்வரை தளராமல் முயல வேண்டும்.​

இதோடு நில்லாமல் பலர் பாடுவதைக் கேட்டு இன்புறவும் பயன் பெறவும் வேண்டும்.​

பெரியவர்கள் சொல்வதைக் கேட்டு நடத்தல் அவசியம்.​

நான் பழமைவாதி தான்.​

குருவிற்கு சேவை செய்வதால் அவர்களிடம் உள்ள ஞானமும்,​​ அவர்களது திறனும் யாரும் அறியாமலே
பயில்பவரை வந்தடையும் என்பதில் எனக்கு எந்த வித  ஐயமும் இல்லை.

ஆர்வலன்

படங்கள்: பி.
ராதாகிருஷ்ணன்

Kannan Natarajan

unread,
Dec 26, 2009, 11:20:44 PM12/26/09
to mint...@googlegroups.com
"திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தொல்காப்பியப் பள்ளி!"

செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனம், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பெரியார் உயராய்வு மையம்
இணைந்து
  • உயர்நிலை
  • மேல்நிலைப் பள்ளி
  • முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு
நடத்திய 10 நாள் செவ்விலக்கியப் பயிலரங்கின் நிறைவு விழாவுக்குத் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின்
துணைவேந்தர் மு. பொன்னவைக்கோ
தலைமை வகித்து பேசியது:-

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இந்தப் பயிலரங்கத்துடன் மொத்தம் 3 மூன்று பயிலரங்குகள் நடத்தி
முடிக்கப்பட்டுள்ளன.

சங்க இலக்கியங்களுக்குத் தலையாய் இருப்பது தொல்காப்பியம்.

அதை,
  • எழுத்து
  • சொல்
  • பொருள்
என மூன்று அதிகாரங்களாகப் பிரித்து வைத்துள்ளனர்.

எந்தவொரு மொழிக்கும் இல்லாத சிறப்பு தமிழ் மொழிக்கு உண்டு.

எப்படி எழுத்துகள் பிறக்க வேண்டும் என்பதை மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கின்ற இலக்கண நூல்
தொல்காப்பியம் தான்.

  • சொற்கள் எப்படி அமைய வேண்டும்
  • எப்படி பாகுபடுத்தப்பட வேண்டும்
  • வெவ்வேறு நிலைகளுக்கு ஏற்ப எப்படி அமைய வேண்டும்
எனக் கூறியிருக்கும் ஒரே நூல் தொல்காப்பியம் தான்.

தொல்காப்பிய பொருள் அதிகாரத்தில் தமிழரின் வாழ்க்கை வரலாறு, இயற்கையோடு  இயைந்து வாழ்ந்ததற்கு
அடையாளமாக, மரபியலுக்கு ஏற்ப பல்வேறு இடங்களில் கூறப்பட்டிருக்கின்றன.

40 ஆண்டுகளுக்கு முன்பு பாட திட்டத்தில் இருந்த தொல்காப்பியம் இப்போது இல்லை.

இதற்கெல்லாம் தமிழ்நாடு பாடநூல் கழகத்தைச் சேர்ந்த தலைவர்களும், உறுப்பினர்களும் தான் காரணம்.

உயிருடன் இருப்பவர்கள் எழுதிய பாடங்களைப் பாடநூலில் சேர்க்கக் கூடாது.

ஆங்கில வழியில் மனப்பாடம் செய்து படிப்பதால் அவர்களது சிந்திக்கும் திறனும், படைப்பாற்றலும் போய்விடுகிறது.

ஆங்கிலம் கலந்து தமிழ் பேசுவதை ஏற்படுத்தியது சாதாரண மக்கள் அல்லர், படித்தவர்கள், உயர் பதவியில்
இருப்பவர்களும் தான்.

பதவியில் உள்ளவர்கள், படித்தவர்களின் இந்த ஆங்கிலத்தில் பேசும் பழக்கம் மாறினால் நிலை மாறும்.

துறைகள் தோறும் தமிழ் ஆட்சி மொழி என்று தொடங்கினால் நாட்டின் நிலை மாறும்.

தொல்காப்பியத்துக்காக என்று தனிப்பள்ளி உருவாக்கி, அதில் ஆற்றல்மிக்க வல்லுநர்களை உருவாக்கி
பண்பாட்டுக் கூறுகளை பாரதிதாசன் பல்கலைக்கழகம் எடுத்துச் செல்ல வேண்டும் என
செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனத்தின் இயக்குநர் அண்மையில் கூறியிருந்தார்.

அதை நிறைவேற்றும் வகையில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் விரைவில் தொல்காப்பியப் பள்ளி
தொடங்கப்பட உள்ளது.

கலைஞர் தமிழாய்வு இருக்கையில் சங்க இலக்கியங்கள் பற்றி மழலைக் கல்வி முதல் ஆய்வுப் பட்டம்
மேற்கொள்பவர்களுக்கான பாடத் திட்டம் உள்ளது.

அந்தப் பாடத் திட்டங்கள் எல்லாம் இந்தப் பள்ளியில் சேர்க்கப்படும். 

தமிழர்கள் தமிழின் உண்மையை, பெருமையை உணர வேண்டும்.

படித்தவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றார் பொன்னவைக்கோ.

Kannan Natarajan

unread,
Jan 2, 2010, 11:43:16 PM1/2/10
to mint...@googlegroups.com
  • இசை மூவர்
  • சீர்காழி மூவர்
போலத்
  • "தமிழ் மூவர்"
யார் என்று கேட்டால்

  1. தெ.பொ.மீ.
  2. வையாபுரிப் பிள்ளை  மற்றும்
  3. ரா.பி.சேதுப்பிள்ளை
ஆகிய மூவரும் தான் என்று தமிழ் ஆராய்ச்சியாளர்கள் சட்டெனக் கூறிவிடுவார்கள்.

அந்த அளவுக்கு இந்த மூவரும் தமிழுக்குப் பங்களிப்பு நல்கியுள்ளனர்.

தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் தமிழ், சம்ஸ்கிருதம், ஆங்கிலம், பிரெஞ்சு போன்ற மொழிகளில் தேர்ச்சிபெற்ற "பன்மொழிப் புலவர்".

மொழியியல் என்பது தமிழில் இவரால் தான் மேன்மையடைந்தது என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது.
  • சமயம்
  • தத்துவம்
  • வரலாறு
  • அரசியல்
  • பொருளாதாரம்
  • சட்டம்
என்று இவரது ஆளுமை பரந்து விரிந்தது.

தென்னகத்தில் "ஒப்பிலக்கியத் துறை"க்கு வித்திட்ட பெருமை தெ.பொ.மீ.யைத்தான் சாரும்.

அதுமட்டுமல்ல.

தமிழ் இலக்கியத் திறனாய்வை உலகத் தரத்துக்கு உயர்த்திய பெருமையும் இவருக்கு உண்டு.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தரான தெ.பொ.மீ.க்கு இன்னொரு முகமும் இருந்தது.

அது ஆன்மிக முகம்.

ஆழ்நிலை தியானத்தில் இவர் தன்னை முழுமையாக அர்ப்பணம் செய்து பல பரிசோதனைகளைச் செய்திருப்பது
பலருக்கும் தெரியாது.

"நாமும் மனமும்" என்றொரு புத்தகம்.

http://www.dinamani.com/Images/article/2010/1/3/TM-2.jpg

தியானத்தின் அவசியம் பற்றி பாமரர்களும் அறியவேண்டும் என்கிற உயரிய நோக்கத்துடன் தெ.பொ.மீ.யால் எழுதப்பட்ட சிறிய நூல் இது.

"கவலைக்குக் காரணமான "
லாக்டேட்"(Lactate) என்கிற நச்சு, தியானத்தின்போது ரத்தத்தில் குறைந்து வருவதைக் காணலாம்.

நாம் எண்ணியபடி நம் உடம்பு இயங்கினால் தான் மனம் அமைதியாக இருக்க முடியும்.

எனவே, உடம்பும் மனமும் ஒன்றாக இணைந்து செயலாற்ற வேண்டும்.

இவற்றின் இயைபு வளரவேண்டும்.

அத்தகைய இயைபு தியானத்தால் வளர்கிறது என்றும்,"உலக அமைதி என்று பேசும்போது அது நம்மால் நிலைநாட்ட முடியாத ஒன்றுபோல் தோன்றுகிறது.

ஆனால், அதனுடைய அடிப்படை உறுப்புகளைப் பிரித்துப் பிரித்துப் பார்க்கும்போது நாம் ஒவ்வொருவரும் தான் அந்த உறுப்பென விளங்கிவிடுகிறது.

தனித்தனி மனிதரின் மன அமைதிதான் உலக அமைதியாக நிலைத்துவிடுகிறது..."என்றும்

தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் குறிப்பிட்டிருப்பது சிந்தனையைத் தூண்டும் கருத்துகள்.

ஒரு மொழியியல் வல்லுநர் படைத்திருக்கும் மனவியல் கருத்துகள் என்பதால், "நாமும் மனமும்" புத்தகத்தில் சிந்தனை
லயித்தது.

Kannan Natarajan

unread,
Jan 2, 2010, 11:51:54 PM1/2/10
to mint...@googlegroups.com
கடந்த வாரம் புதுமைப்பித்தனின் தந்தை சொக்கலிங்கம் பிள்ளை பற்றி எழுதியதைப் பற்றி மேலும் பல புதிய தகவல்கள்
அனுப்பியிருக்கிறார் அன்பர் செ.திவான்.

அறிஞர் தொ.மு.சி.
ரகுநாதன் "புதுமைப்பித்தன் வரலாறு" நூலில் (1951) எழுதுகிறார்.

"சொக்கலிங்கம் பிள்ளை (93) இன்று ஜீவியவந்தராக இருக்கிறார்.

நல்ல திடகாத்திரர்; கண்ணாடியில்லாமல் வாசிக்கிறார்.

கம்பு இல்லாமல் நடக்கிறார்; துடியாகப் பேசுகிறார்;

அவரைப் பார்த்தால், புதுமைப்பித்தனின் ஞாபகம் வரத்தான் செய்கிறது.

ஜாடை, பேச்சு, சிரிப்பு எல்லாம் அப்படித்தான் தோன்றுகின்றன.

சொக்கலிங்கம் பிள்ளை வெறும் தாசில்தார் மட்டுமல்ல; புத்தகாசிரியர்.

இந்திய - ஐரோப்பிய நாட்டு இனங்கள் (Indo - European Races) என்ற ஒரு நூலை, பாகம் பாகமாக எழுதியிருக்கிறார்;

இந்தத் தள்ளாத காலத்திலும் அந்த நூலின் மூன்றாம் பாகத்தை எழுதுவதில் முனைந்திருக்கிறார்.

ஒவ்வொரு பாகமும் ஒரு அகராதியளவு கனம்.

புதுமைப்பித்தனின் தந்தையை யாராவது பார்த்து

நீங்கள் விருத்தாசலத்தின் தகப்பனாரா?

என்று கேட்டுவிட்டால் அவருக்கு மனம் குன்றிப்போய்விடும்.

தங்கள் பிள்ளையா விருத்தாசலம்? என்று கேட்க வேண்டுமாம்!

சொக்கலிங்கம் பிள்ளை சுத்த சுயம்புவான பத்தொன்பதாம் நூற்றாண்டின்
ராஜவிசுவாசப் பிறவி...

இதனை தொ.மு.சி. நூலில் வாசித்தறிந்த காலத்தில் இருந்து அந்த நூல்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.

முதல் பாகம் கிடைத்தது.

இரண்டாம் பாகத்தைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.

மூன்றாம் பாகம் வெளிவந்ததா?

அல்லது கையெழுத்துப் பிரதிகள் உள்ளதா?

தேடல் தொடர்கிறது.

இனி நீங்கள் மட்டுமல்ல திவான், தமிழ்கூறு நல்லுலகமே தேடத்தொடங்கிவிட்டது.

மகிழ்ச்சி தானே!


கலாரசிகன்

நன்றி:- தினமணி
---------------------------------------------------------------------------------------------------------------------------------------

Kannan Natarajan

unread,
Jan 2, 2010, 11:56:37 PM1/2/10
to mint...@googlegroups.com
அருணன் ஓர் அற்புதமான ஆராய்ச்சியாளர்.

பல ஆண்டுகளாக நான் சந்தித்து அளவளாவ விரும்பும் தமிழ் ஆய்வாளர்களில் ஒருவர்.

பல ஆண்டுகளுக்கு முன் இவர் எழுதிய "தமிழ் இலக்கிய (வழி) வரலாற"என்கிற புத்தகத்தைப் படிக்க நேரிட்டது முதலே,
இவர் மீது எனக்கு அளப்பரிய மரியாதை.

இப்போது அந்த நூலின் மறுபதிப்பையும் படிக்க நேர்ந்தது.

அருணன் தனது முன்னுரையில் கூறுவதுபோல, தமிழ் இலக்கிய வரலாறு என்ற தலைப்பில் வெளிவரும் புத்தகங்களில்
பல பாடநூல் வரிசையில் வருபவையாகவே இருக்கின்றன.

விமர்சனப் பாங்கு இல்லாத அறிமுக நூல்கள்.

ஆனால், அருணனின் தமிழ் இலக்கிய வரலாறு பிற நூல்களில் இருந்து வேறுபட்டு தமிழ் இலக்கியத்தை நமக்கு அறிமுகப்படுத்தும் போதே
விமர்சனப் பூர்வமான கணிப்பையும் முன் வைக்கிறது.

  • அந்தந்தக் காலத்தின் பின்புலத்தில் இலக்கியங்களை மதிப்பிடுவதும்
  • அந்தந்த இலக்கியத்தின் பின்புலத்தில் காலத்தைக் கண்டறிவதும்
அருணனின் தனித்தன்மை.

"ஆடு மேய்த்தது போலவும் இருக்கணும்; அண்ணனுக்குப் பொண்ணு பார்த்தது போலவும் இருக்கணும்" என்பது போல,
இலக்கியத்தை
ரசிக்கும் அதே நேரத்தில், வாசகர்களுக்குப் பல சரித்திரச் செய்திகளையும் தர முயன்றிருப்பதாக அருணன் கூறுவது
பொய்யல்ல.

சங்ககாலம் தொட்டு 19ஆம் நூற்றாண்டு வரையிலான இலக்கியங்களை, சாமானியர்களும் படித்துத் தெரிந்து கொள்ளும் வகையில்
எளிமையாக எழுதியிருக்கும் அருணனின் தலைப்புகள் கூட நம்மைக் கவர்ந்திழுக்கும் தன்மையன.

உதாரணமாக,
  • "காதலுக்கு சாட்சி நாரை தானாம்!"
  • "திருவோட்டில் கல் இடலாமோ?"
  • "கணவனைக் கொன்ற காரிகையின் கதை"
என்று பலப்பல.

இந்தப் புதிய பதிப்பில் கந்தபுராணமும் இணைக்கப்பட்டுள்ளது.

தமிழில் ஆர்வம் உள்ளவர்களும் சரி, வரலாற்று ஆர்வலர்களும் சரி, எடுத்தால் முடிக்காமல் கீழே வைக்கமுடியாத புத்தகம்.

அருணனுக்குப் பாராட்டுகள்!
It is loading more messages.
0 new messages