மீனாட்சிசுந்தரனாரின் 206-வது பிறந்த நாள் இன்று

14 views
Skip to first unread message

தேமொழி

unread,
Apr 6, 2020, 1:09:00 PM4/6/20
to மின்தமிழ்
source :  https://www.facebook.com/100001935370654/posts/3752711604803315/?sfnsn=wiwspwa&extid=HwayMTi0bne4Bg3C

தமிழறிஞர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார் (1815-76)
சென்னைக்கு இருமுறை மட்டுமே வருகைபுரிந்துள்ளார். மூன்றாவது முறை வாய்ப்புக் கிடைத்தும் பயணம் மேற்கொள்ள இயலவில்லை. மயிலாப்பூர் தமிழறிஞர் ஒருவரிடம் பாடம் கேட்கும் வேட்கையில் கபாலி கோவில்
சந்நிதிக்குள் கூட நுழையாமல் வெளியிலிருந்தே கும்பிடுபோட்டுவிட்டு விரைகிறார்!

தமக்குப் பாடம்சொல்லிக்கொடுத்த குருவான அவரைப்பற்றி 'தமிழ்த்தாத்தா'
டாக்டர் உவேசா, தாம் எழுதியுள்ள "சிறீமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம்"* நூலில் (பக்கம் 60) இவ்வாறு கூறுகிறார்:

"திருவம்பலத்தின்னமுதம்பிள்ளை வீட்டிற்குச் செல்லும்பொழுது ஶ்ரீகபாலீசுவரர் கோயிலின் வாயிலின் வழியேதான் செல்வேன். அப்பொழுது உள்ளே சென்று ஸ்வாமியைத் தரிசித்துக்கொண்டு போகவேண்டுமென்னும் விருப்பம் இருப்பினும் நேரமாய் விடுமேயென்னும் கவலையால் சந்நிதியில் நின்றபடியே அஞ்சலி செய்து விட்டுச் செல்வேன்" என்று கூறியதுண்டு.
______
வழிபாட்டைவிடவும் பாடங்கேட்டலுக்கு முக்கியத்துவம் அளித்த
திரிசிரத்தார் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனாரின் 206-வது பிறந்த நாள் இன்று.
* வெளியீடு: டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம், சென்னை 600090.


-----



தேமொழி

unread,
Apr 8, 2020, 6:38:25 PM4/8/20
to மின்தமிழ்
source:  https://www.facebook.com/RadhakrishnanKS1956/posts/1214675448702819


தமிழ் தாத்தா உவேசா வின் ஆசிரியர் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை மாபெரும் ஆளுமை.

தான் இறக்கும்போது குடும்பத்தாரை கடனில் வைத்துவிட்டு தமிழையே நேசித்தவர். அவர் விரும்பி கேட்டிருந்தால் ஆதீனங்களும் அக்கால ஜமீந்தார்களும் பொன்னையும் பொருளையும் கொடுத்து அவர் வசதியாக வாழ்ந்திருப்பார். தன் குடும்ப சூழ்நிலையை எவருக்கும் சொல்லாமல் தமிழே தவம் என்று மாணவர்களே தனக்கு கிடைத்த கொடை என்று பணி செய்தார். பல தமிழறிஞர்களும் செல்வந்தர்களும் அவர் இருக்குமிடம் நோக்கி பயணப்பட்டார்கள். ஒருமுறை லண்டனிலிருந்து வெறுமென மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, மதராஸ் ஸ்டேட் என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட சரியான முகவரியில்லாத கடிதம் அக்காலத்திலேயே அவரிடத்தில் சரியாக சென்று சேர்ந்ததென்றால் அவரின் பெருமையை சொல்ல வேண்டுமோ?

அவர் இயற்றிய நூல்கள் ஏராளம்.
அவற்றுள் தெரியாதவை பல. தெரிந்தவற்றுள், புராணங்கள் இருபத்திரண்டு; பிற காப்பியங்கள் ஆறு; அந்தாதிகள் பதினான்கு; பிள்ளைத்தமிழ் நூல்கள் பத்து; அகப்பொருள் கோவைகள் மூன்று; தூது இரண்டு; கலம்பகம் இரண்டு; குறவஞ்சி ஒன்று; சிலேடை வெண்பா ஒன்று; ஏனைய பிரபந்தங்கள் பதினொன்று; தனிப்பாடல்கள் அளவிறந்தன.

பிள்ளை அவர்கள் 01.02.1876 அன்று இறக்கும் வேளையின் போது தம் சீடரிடம், “திருவாசகம் படி” என்றார். அவர் உச்சரித்த திருவாசகம் சைவர்களின் மணிவாசகமாகும்.

அவர் மறைந்த போது ‘தமிழ் காளிதாசா நீ போய்விட்டாயே! ‘’இன்றைய தமிழ்க் கம்பனே நீ சென்றுவிட்டாயே’என்று தமிழகமே அழுது தவித்தது. எழுத்தாணியும் ஓலைச்சுவடியுமே தன் கைவசம் வைத்துக் கொண்டு தான் இறக்கும் வரை பாக்களை எழுதி தமிழுக்கு பெருமை செய்தார்.

பக்தி இலக்கியங்களும் தமிழுக்கு அடிப்படை அடையாளம் என்பதை உறுதிப்படுத்தியவர் தல புராண நாயகர் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை. நேரசையில் பாக்கள் துவங்கினால் பதினாறு எழுத்து நிரை அசையில் தொடங்கினால் பதினேழு எழுத்து என்பதையெல்லாம் கவனமாக போகிற போக்கில் செய்யுள்களை இயற்றுவார். கலித்துறை இலக்கணக் கோட்பாடு உட்பட கவி எழுதுவது சிரமம். அதையு சாதாரணமாக கவிமொழியில் பாக்களைப் பாடும் ஆற்றல் இவருக்கே உண்டு. மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளைக்கு நிகர் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையே. தமிழ் கூறும் நல்லுலகம் வெற்றுப் பேச்சுகளை நம்புகிறது. இப்படிப்பட்ட ஆளுமைகளைப் பற்றி அறிதலும் புரிதலும் இல்லாதது தமிழுக்குச் செய்யும் மாபெரும் கேடாகும் என்பதை உணர வேண்டும். கடல் மடை திறந்தாற் போல கவிதைகளை செழுமையான குரலில் கொட்டித் தீர்த்த மீனாட்சி சுந்தரம் பிள்ளை தமிழகத்தில் எந்த நினைவுச் சின்னம் இல்லாதது என்பது வேதனையான விடயம்.

#மகாவித்வான்_மீனாட்சி_சுந்தரம் #பிள்ளை

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
08.04.2020
#ksrposts

தேமொழி

unread,
Apr 8, 2020, 6:39:53 PM4/8/20
to மின்தமிழ்

*திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை பிறந்த தினம்*

இன்று ஏப்ரல் 6ம் தேதி, மகாவித்வான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிறந்த தினம். அதனை முன்னிட்டு மகாவித்வான் தங்கியிருந்து தமிழ்த்தொண்டு செய்த திருவாவடுதுறை ஆதீன மடம், புலவர்கள் விடுதி, சரசுவதி மகால் நூலகம். ஓலைச்சுவடி நூல்கள், ஆதீ​​னத்தின் சுற்றுவளாகம் ஆகியவற்றை விவரிக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் வெளியீடு - 13 நிமிடங்கள் கொண்ட விழியைப் பதிவை பகிர்கின்றேன். இது 2014ம் ஆண்டு செய்யப்பட்ட பதிவு.

மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் திருவாவடுதுறை ஆதீனத்தின் புலவராக இருந்தவர். இங்கு அவர் பல மாணவர்களுக்குத் தமிழ் கற்றுக் கொடுத்தும் அங்கிருந்தபடியும் மற்றும் பல ஊர்களுக்கு பயணித்த படியுமிருந்து பல தல புராண நூல்களை இயற்றினார். அவர் மறைந்ததும் இதே ஆதீனத்தில் அவருக்காக வழங்கப்பட்டிருந்த திருமடத்து புலவர்கள் இல்லத்திலேயே!

மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் திரு.சிதம்பரம்பிள்ளை அன்னத்தாச்சி அம்மையார் ஆகியோருக்கு 6.4.1815ம் ஆண்டு பிறந்தார். தமது தந்தையார் ஒரு தமிழ் ஆசிரியர் என்பதால் அவர் துணையோடு கல்வி கற்க ஆரம்பித்தார். அவரது தமிழ் ஆர்வம் எல்லையற்றதாக இருந்தமையால் இவர் சான்றோர்கள் இருக்கும் இடம் தேடிச் சென்று அவர்களிடமெல்லாம் கல்வி கற்று வரலானார். திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் மிகுந்த தமிழ்ப்புலமை கொண்டவர் என்பதை அறிந்து தக்கார் துணை கொண்டு திருமடத்தில் ஆதீனகர்த்தரின் அறிமுகம் பெற்றார். தமக்கு ஆசிரியராக இருந்த ஆதீனகர்த்தர் அம்பலவாண தேசிகருக்காக திருவாவடுதுறை ஸ்ரீ அம்பலவாண தேசிகர் பிள்ளைத் தமிழ், கலம்பகம் ஆகிய இரு நூற்களை பிள்ளையவர்கள் இயற்றினாரர்கள். இவை இரண்டும் தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள் சேகரத்தில் உள்ளன.

பிள்ளையவர்களின் தமிழ் புலமையைக் கண்டு பாராட்டி ஆதீனகர்த்தர் இவருக்கு மகாவித்துவான் என்ற சிறப்புப் பட்டமளித்துச் சிறப்பித்தார்கள். இவருக்குப் பல மாணவர்கள். அதில் குறிப்பாக, சவேரிநாதப் பிள்ளை, உ.வே.சாமிநாதய்யர், தியாகராச செட்டியார், சுப்பராய செட்டியார் ஆகியோரைக் கூறலாம். சீர்காழியில் நீதிபதியாகப் பதவி வகித்த வேதநாயகம் பிள்ளையவர்கள் இவரது நெருங்கிய நண்பராக இருந்தவர். அம்பலவாண தேசிகர் மறைவுக்குப் பின் ஆதீனகர்த்தராகப் பதவி ஏற்றுக் கொண்ட சுப்பிரமணிய தேசிகர் பிள்ளையவர்களுக்கு ஆதீனத்தில் பல சலுகைகளை உருவாக்கித் தந்து பிள்ளையவர்களோடு அவரது அன்பிற்குரிய மாணாக்கர்கள் அனைவரும் தங்கியிருந்து பாடங் கேட்கவும் உதவியவர். ஆதீனகர்த்தர் என்ற நிலையைக் கடந்து இவர்கள் இருவருக்கும் இடையே மிக நெருக்கமான நட்பும் அமைந்திருந்தது. இவர் 1.2.1876ம் ஆண்டில் இறைவன் திருவடியை அடைந்தார் என்பன போன்ற தகவல்களை உ.வே.சாவின் என் சரிதக் குறிப்புக்களிலிருந்து அறியமுடிகின்றது.

19ம் நூற்றாண்டில் தமிழில் அதிகமான நூற்களை இயற்றிய தமிழறிஞர் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களே. புராணங்களும் சிறுவகை நூல்களுமாக ஏறத்தாழ எழுபத்தொன்பதுக்கும் மேற்பட்ட நூல்களை இவர் இயற்றியுள்ளார். அனைத்துமே செய்யுள் வடிவில் அமைந்தவை.

இவர் இயற்றிய நூல்கள் வகைகளின் அடிப்படையில்:
புராணம்: 9
கோவை: 3
பிள்ளைத் தமிழ்: 7
அந்தாதி: 14
மாலை: 6
பதிகம்: 3
கலம்பகம்: 2
உலா: 1
அகவல்: 1
தூது: 1
சரித்திரம்: 2
தனிப்பாடல்கள்: 1
விருத்தம்: 1
கதை: 1
ஆனந்தக் களிப்பு: 1

விழியப் பதிவைக் காண: https://www.youtube.com/watch?v=NBk7eMt9gOY

-சுபா


Reply all
Reply to author
Forward
0 new messages