விண்ணில் நாள்கள்

30 views
Skip to first unread message

கி.காளைராசன்

unread,
Feb 2, 2013, 1:45:08 AM2/2/13
to mintamil, thiruppuvanam
விண்ணில் நாள்கள்
வாரத்திற்கு ஏழு நாட்கள்.
ஒவ்வொரு நாளும் விண்ணில் உள்ள கோள்களைக் குறிப்பன.
ஞாயிறு (சூரியன்), திங்கள் (சந்திரன்) இவைகளை அனைவரும் பார்த்திருப்போம்.
இவற்றைப் போன்றே செவ்வாய், புதன், வியாழன் (குரு), வெள்ளி (சுக்கிரன்), சனி என மற்றைய நாள்களையும் நாம் விண்ணில் காணலாம்.

இவை பார்ப்பதற்கு சிறிய நட்சத்திரங்கள் போன்று தெரியும்.  ஆனால், நட்சத்திரங்களுடன் ஒப்பிட்டுப்பார்த்தால், இவை நாளுக்குநாள் கிழக்கு நோக்கி நகர்வதைக் காணலாம். இவை திடமான ஒளியுடன் காணப்படும்.  நட்சத்திரங்கள் போன்று மினுமினுக்கா.

இவை ஞாயிறு திங்கள் உலாவும் பாதைகளிலேயே உலாவும்.   எனவே இப்பாதைகளிலேயே இவற்றை நாம் காணலாம்.

மாலைநேரம் ஞாயிறு மறைந்தவுடன் கிழக்கே வியாழனை (குருவை)க் காணலாம்.
Inline image 1
இதே போன்று அதிகாலையில், ஞாயிறு உதிக்கும் முன், தலைக்கு மேலே பார்த்தால், திங்கள்(சந்திரன்) மற்றும் சனி இவற்றை அருகருகே காணலாம்.  இவை சுவாதி நட்சத்திரத்தின் அருகே தென்படும்.  மாசிமாதம் 4ஆம் தேதியிலிருந்து சனி வக்கிரமாகும்.  தினமும் கூர்ந்து கவனித்து வந்தால், சனியானது சுவாதி நட்சத்திரத்திற்கு மேற்கே பயணிப்பதைக் காணலாம்.
Inline image 2
அன்பன்
கி.காளைராசன்

27 stars 9 planets2.bmp
27 stars 9 planets.bmp

நா.ரா.கி.காளைராசன்

unread,
Apr 5, 2014, 1:07:00 PM4/5/14
to mintamil, thiruppuvanam
வணக்கம்.

6 ஏப்ரல் 2014 கோள்களின் நிலையைக் காட்டும் படம் கீழே உள்ளது.
இதில் சூரியன் இருக்கும் கட்டத்திற்கு நேர் எதிரே உள்ள (ஏழாவது ராசி) கட்டத்திற்கு ஒரு கோடு வரைந்து கொண்டால்,
அந்தக் கோடானது, இராசிக் கட்டத்தை பகல், இரவு என இரண்டு பகுதிகளாகப் பிரித்துவிடும்.

அதிகாலையில்
Inline images 2

படத்தில் கிழக்கு என்று குறிப்பிடப்பட்டுள்ள பகுதியைக் கிழக்கு நோக்கி வைத்துக் கொண்டு பார்த்தால்,
கோள்கள் வானில் உள்ள இடத்தைக் கண்டறியலாம்.

ஏப்ரல் 6ஆம் நாள் அதிகாலையில் சூரியன் உதிப்பதற்கு முன்பு கிழக்குநோக்கி வானத்தைப் பார்த்தால்,
1) வெள்ளி முளைத்திருக்கும்.  இது மிகவும் பிரகாசமான நட்சத்திரம் போன்று தெரியும்.

2) செவ்வாய் கோளானது (இளஞ்சிவப்பு நிறத்தில் பெரிய நட்சத்திரம் போன்று தெரியும்)
மறைந்து கொண்டிருக்கும்.

3) மேற்கே சற்று மேலே சனிக்கோளைக் காணலாம்,  இது மிகச்சிறிய நட்சத்திரம் போன்று தெரியும்.
தினமும் இதைக் கவனித்து வந்தால்,   நட்சத்திரங்களுடனான இதன் இருப்பிடம் கிழக்கு நோக்கிச் சிறிது சிறிதாக நகர்வதைக் காணலாம்.

------------------------------------------------------
மாலையில்

இதையே மாலையில் சூரியன் மறைந்தவுடன் மேலே சொன்னபடி வைத்துப் பார்த்தால்,

1) சந்திரன் அருகே மிகவும் பிரகாசமான நட்சத்திரம் போன்று வியாழனைக் காணலாம்.
சந்திரனும் வியாழனும் சேர்ந்திருப்பதைப் பார்க்க நன்றாக இருக்கும்.

2) இரவு சுமார் 7.30க்கு மேல் கிழக்கே செவ்வாய் (சிவப்பான)  ஒரு  பெரிய நட்சத்திரம் போன்று உதிப்பதைக் காணலாம்.

Inline images 1

ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என ஏழில், 
புதன் சூரியனுடன் சேர்ந்திருப்பதால் காணஇயலாது.

மற்றபடி,
புதன் நீங்களாக,
1) ஞாயிறு, 2) திங்கள், 3) செவ்வாய், 4) வியாழன், 5) வெள்ளி 6) சனி ஆகிய ஆறு நாள்களையும் விண்ணில் நாம் காணலாம்.

Geetha Sambasivam

unread,
Apr 5, 2014, 9:28:19 PM4/5/14
to மின்தமிழ்
தகவலுக்கு நன்றி.

N D Logasundaram

unread,
Apr 6, 2014, 2:31:35 PM4/6/14
to mintamil, வல்லமை, தமிழ் மன்றம், thamizayam, Maravanpulavu K. Sachithananthan, Sivakumar M A, adi...@shaivam.org, resp...@shaivam.org, Raji M
அன்புள்ள காளைராஜன் 

தங்கள் காட்டு வது 
தமிழ் நாட்டில் ஜாதகம் கணிக்கப்பயன் படும் 12 ராசி கட்டம் பூமியை மையமாகக் கொண்டு வரைவது  
பங்குனி மாதமாதலால் மீனா ராசியில் நீங்கள் காட்டும் கிழக்கு மேற்கு சரி ஆனால் சித்திரை யா னால் ஞாயிறு
அடுத்த கட்டத்தில் மேஷ  ராசியில் இருக்கும்
அப்போது அம்புக்குறி மேஷத்திற்கும் அதன் நேர் எதிர் கட்டத்திற்கும் வரையவேண்டும் 

இதனை நீங்கள் அறிவீர்கள் 

முன்பெல்லாம் ஆங்கில ஹிந்து நாளிதழில் மாதம் பிறக்கும் முன் அந்த மா தத்தின் நட்சத்திர வரைபடம் போடுவார்கள் 
stars of the month (with permission from institute of positional astronmy Calkutta எனும் குறிப்புடன்) அதனில் அமாவாசை
பௌர்ணமி எந்த கடிகார நேரத்தில் வரும் என மிக நுண்ணியமாக இருக்கும் கிரகணம் இருந்தால் அந்த மாத படத்தில்
விளக்கம் இருக்கும் 
 இப்போது நிறு த்தி விட்டுள்ளனர் ஏனோ தெரியவில்லை
 அதனை நாம் நீங்கள் குறித்தபடி படத்தை தலைக்கு மேலே பிடிப்பவர் காணும் நிலையில் அதனில் காட்டப்படும் திசை நோக்கி
பிடிதுப்பார்த்தல் அன்றைய இரவில் தெரியும் நட்சத்திரங்கள்  கோள்கள் இவை இவை எனக்காண லாம் அதனில்  MILKYWAY
 என்னும் ஆகாய கங் கையும் (நம் சூரிய குடும்பம் இருக்கும் விண்மீன்களின் தொகுப்பு  Galaxy குறுக்காக ஒடும்) காட்டியிருப்பார்கள் 

சப்தரிஷி மண்டலம் (BIG BEAR)  துருவ நட்சத்திரம் (POLARIS) போன்றவையும் அதனில் நாங்கள் பார்போம்
புதன் தான் எப்போதும் சூரியன் இருக்கும் கட்டத்திற்கு அடுத்கட்டத்த்தில் இருக்கும் போதுதான் தெரியும்
மாலை சூரியன் மறைந்த வுடனோ அல்லது சூரியன் உதிப்பதற்கு முன்போ 

சப்தரிஷி மண்டல் 7 நட்சத்திரங்கள் ஓர் தொங்கும்  வால்  நீண்ட  காற்றடி போலிருக்கும் இதனின் தலை யில் உள்ள இரு
நட்சத்திரங்க்களை ச் சேர்த்து வரையப்படும் கோ ட்டினில் து ருவ நட்சத்திரம் காணும் 

இவையாவும் சென்னை பம்பாய் கல்கத்தா  முதலிய பெருந கரங்களில் உள்ள கோளகங்களில் வருடத்தில் எந்த நாளிலும் 
காணும் நட்சத்திரங்களின் நிலையை பொறிவழி  உண்டாக்கி நன்றே விளக்குவார்கள் அப்பொறிகள் உலகிலுள்ள எந்த ஊரில்
கோள கம் அமைத்தாலும் அதற்காக மாற் றி விடமுயும் படி ஓர் முப்பர்மாண சுழுழற்சியுன் அமைக்கப்பட்டிருக்கும் 

சப்தரிஷி மண்டலம் என்பதுதான் 23.5 டிகிரிக்கு உள்ளே இருப்பதால் ஆண்டு முழுதும் ம் தெரியும் (NON SETTING STARS)
ஆனால்துருவ நட்சத்திரத்திற்கு ஏதேனும் ஓர் திசையில் 

சில நாட்களில் மாதங்களில் வியாழனும்  வெள்ளியும் எங்கும் தெரியாது காணாது (பகல் நே ரத்திலும் வெளிச்சத்தினால்
அல்லஎனும் கருத் து அடங்காது     (குரு  சுக்கிர மூடங்கள் என பஞ்சாங்க, குறிக்கும் பூமியிலிருந்து பார்க்கும்போது இவை
சூரியனால் மறைக்கப்படுவதால் (கிரகணம் போன்று (occultation and transits) 
 நூ த லோ சு 
மயிலை 


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Apr 6, 2014, 7:41:32 PM4/6/14
to mintamil, வல்லமை, தமிழ் மன்றம், thamizayam, Maravanpulavu K. Sachithananthan, Sivakumar M A, adi...@shaivam.org, resp...@shaivam.org, Raji M
வணக்கம் ஐயா.


2014-04-07 0:01 GMT+05:30 N D Logasundaram <selvi...@gmail.com>:
தங்கள் காட்டு வது 
தமிழ் நாட்டில் ஜாதகம் கணிக்கப்பயன் படும் 12 ராசி கட்டம் பூமியை மையமாகக் கொண்டு வரைவது  
பங்குனி மாதமாதலால் மீனா ராசியில் நீங்கள் காட்டும் கிழக்கு மேற்கு சரி ஆனால் சித்திரை யா னால் ஞாயிறு
அடுத்த கட்டத்தில் மேஷ  ராசியில் இருக்கும்
அப்போது அம்புக்குறி மேஷத்திற்கும் அதன் நேர் எதிர் கட்டத்திற்கும் வரையவேண்டும் 

இதனை நீங்கள் அறிவீர்கள் 
ஆமாம் ஐயா.
 

முன்பெல்லாம் ஆங்கில ஹிந்து நாளிதழில் மாதம் பிறக்கும் முன் அந்த மா தத்தின் நட்சத்திர வரைபடம் போடுவார்கள் 
தாங்கள் குறிப்பிட்டுள்ளது போல் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இப்போது ஏனோ போடுவதில்லை.  தமிழ் இந்துவில் இதை இடம் பெறச் செய்யவேண்டும்.

சில நாட்களில் மாதங்களில் வியாழனும்  வெள்ளியும் எங்கும் தெரியாது காணாது (பகல் நே ரத்திலும் வெளிச்சத்தினால்
அல்லஎனும் கருத் து அடங்காது     (குரு  சுக்கிர மூடங்கள் என பஞ்சாங்க, குறிக்கும் பூமியிலிருந்து பார்க்கும்போது இவை
சூரியனால் மறைக்கப்படுவதால் (கிரகணம் போன்று (occultation and transits) 
தாங்கள் குறிப்பிடுவது மிகவும் பயனுள்ள கருத்து.
சூரியனோடு சேர்ந்திருககும் நாட்கள் நீங்களாக, எல்லாக் கோள்களையும் எல்லா நாட்களிலும் காணலாம்.

அன்பன்
கி.காளைராசன்.

தேமொழி

unread,
Apr 7, 2014, 12:01:40 AM4/7/14
to mint...@googlegroups.com, mintamil, வல்லமை


On Sunday, April 6, 2014 11:31:35 AM UTC-7, selvi...@gmail.com wrote:

முன்பெல்லாம் ஆங்கில ஹிந்து நாளிதழில் மாதம் பிறக்கும் முன் அந்த மா தத்தின் நட்சத்திர வரைபடம் போடுவார்கள் 
stars of the month (with permission from institute of positional astronmy Calkutta எனும் குறிப்புடன்) அதனில் அமாவாசை
பௌர்ணமி எந்த கடிகார நேரத்தில் வரும் என மிக நுண்ணியமாக இருக்கும் கிரகணம் இருந்தால் அந்த மாத படத்தில்
விளக்கம் இருக்கும்  இப்போது நிறு த்தி விட்டுள்ளனர் ஏனோ தெரியவில்லை

Institute of positional astronmy Calkutta 

இந்த நிறுவனம் தங்கள் வலைதளத்தில் கூட இத்தகவல்களை வழங்கலாம், ஏனோ ஆர்வமற்றவர்களாக  இருப்பதாகத் தெரிகிறது.
வலைத்தளம் இற்றைபடுத்தப்பட்டு நாட்கள் பலவாகிவிட்டன போலிருக்கிறது.   
ஆராய்ச்சி மாணவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்திருக்கலாம், அப்படி செய்திருந்தால் சரிவர செயல்பட்டிருக்கக்கூடும்.

..... தேமொழி 


Reply all
Reply to author
Forward
0 new messages