இந்தியை ஏன் படிக்க வேண்டும்???

10 views
Skip to first unread message

தேமொழி

unread,
Jul 11, 2026, 2:20:54 AM (yesterday) Jul 11
to மின்தமிழ்
இந்தியை ஏன் படிக்க வேண்டும்???

இணையத்தில் உள்ள ஓர் ஆங்கிலக் கட்டுரையைத் தமிழில் படிக்கலாமே என்று தோன்றினால் அந்தப் பக்கத்தில் வலது சொடுக்கலில் தேவையான மொழியைத்தேர்வு செய்து மொழி மாற்றம் செய்து படிக்கலாம்.  அவ்வாறு ஆங்கிலத்திலிருந்து 133 மொழிகளுக்கு மொழிபெயர்த்துப் படிக்கலாம். தமிழிலும் மற்ற மொழிகளிலும்  உள்ள பக்கத்தையும் அவ்வாறே 133 மொழிகளுக்கு மாற்றி பிற மொழி மக்களும் படிக்கலாம்.  ஆனால் ஒன்று, எல்லோருக்கும் ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும், குறைந்த அளவு தங்கள் மொழியை ஆங்கிலத்தில் எவ்வாறு எழுத வேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும். 

133 languages of google.jpg

இதன் மூலம் தானாகவே ஆங்கிலம் தொடர்பு மொழியாகிவிட்டது என்ற உண்மையைக் கூகுள் நிறுவிவிட்டதால், தங்கள் மொழி பேசப்படும் பகுதி தவிர்த்துப் பிற இடங்களுக்குப் பயணம் செய்யாத மக்கள் தாய்மொழியையும் ஆங்கிலத்தையும் தவிர்த்து வேறு ஒரு மொழி படிப்பது தேவையா என்ற கேள்வி எழுகிறது. உலக நாடுகளுக்குப்  பயணம் செய்வோர் விமான நிலையத்திலேயே ஆங்கிலம்தான் உலகத் தொடர்பு மொழி என்பதைப் புரிந்து கொள்வார்கள். புலம் பெயர்ந்து வாழும் மக்கள் அவர்கள் வாழும் பகுதியின் மற்றொரு மொழியையும் கற்க வேண்டி இருக்கும்.  ஆனால் இந்தக் காலத்திலும் தேவையற்று இந்தி பேசாத பிற மொழி இந்தியர்களை இந்தி படிக்க கட்டாயப் படுத்துவதுதான் வேடிக்கை.
Reply all
Reply to author
Forward
0 new messages