வெருளி நோய்கள் 734-738: இலக்குவனார் திருவள்ளுவன்

7 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Nov 25, 2025, 4:25:34 PM (15 hours ago) Nov 25
to thiru thoazhamai, Thamizh Pavai, ara...@aol.com, Akar Aadhan, Paramasivam Marudanayagam, Casmir Raj, Vani Aravanan, pthang...@gmail.com, Bala subramanian, Anna Centenary Library Librarians, wsws sl, Raju Krishnaswamy, விவேக் பாரதி, Lalitha Sundaram, vidya chandran chandran, kalvet...@gmail.com, Neethi Vallinayagam, Sampath Singara, Kumanan K.b. Kanji, madhiyazhagan subbarayan, LION.R. MOURALY, Kandaih Mukunthan, Office, kandasamy santharupi, Tamil Mar Laie, Palanichamy V, HAMIDIA BROWSING CENTRE, raman kannusamy, பூங்குழலி Poonkuzhali, annac...@yahoo.co.in, Karunkal kannan, Solidarity For Malayagam, Manimekalai Prasuram, pandian M.T, Dr. Namadhu MGR, CHERALATHAN A, msvoimaie...@gmail.com, dgvcmut...@gmail.com, Kirubanandan Srinivasan, jainol...@gmail.com, Jeeva Kumaran, mega digital4, mohan raj, Swathi Swamy, Senthilnarayanan Arunachalam, Chitraleka V, Dr Seenivasan Sappani, Rajan Krishnan, Umarani Pappusamy Mysore

வெருளி நோய்கள் 734-738: இலக்குவனார் திருவள்ளுவன்

 


ஃஃஃ     இலக்குவனார் திருவள்ளுவன்      26 November 2025      கரமுதல


(வெருளி நோய்கள் 729-733: தொடர்ச்சி)

வெருளி நோய்கள் 734-738

  1. காணாட்டத் தொடர் வெருளி – Mooglophobia
    காணாட்டத் தொடர் குறித்த வரம்பற்ற பேரச்சம் காணாட்டத் தொடர் வெருளி.
    (‘Final Fantasy video game series’ என்னும்) கனவுரு காணாட்டத் தொடர் குறித்த அளவுகடந்த பேரச்சம்.
    00
  2. காணாட்டவெருளி – Ludectrophobia

காணாட்டம்(video game) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் காணாட்டவெருளி
ludus electronicus என்னும் இலத்தீன் சொல்லில் இருந்து உருவான Ludectro என்பதற்குக் காணாட்டம் எனப் பொருள்.
00

  1. காணாட்டப்படங்கள் வெருளி- Pachnitilitphobia
    காணாட்டந்தழுவிய திரைப்படங்கள் மீதான காரணமற்ற அளவுகடந்த பேரச்சம் காணாட்டப்படங்கள் வெருளி.
    ஆட்ட வெருளி(ludophobia) காணாட்ட வெருளி(ludectrophobia) உள்ளவர்களுக்குக் காணாட்டப் படங்கள் வெருளி வர வாய்ப்பு உள்ளது.
    00
  2. காதலர் நாள் வெருளி – Valentinophobia
    காதலர் நாள் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் காதலர் நாள் வெருளி.
    காதல் பரிசு, காதல் வாழ்த்து அட்டை, காதல் விருந்து, காதலர் சந்திப்பு, நெருக்கச் சூழல், வரம்பு மீற நேரிடுமோ என்ற கவலை போன்றவற்றால் ஏற்படும் எதிர்பார்ப்பால் விளையும் பேரச்சமே காதலர் நாள் வெருளியாகும்.
    வேலன்டைன் நாள் (Valentine’s Day) எனப் பிப்பிரவரி 14 அன்று உலக மக்களால் கொண்டாடப்படுவதே காதலர் நாளாகும். இந்நாள் இப்பொழுது மக்கள் தங்களிடையே அன்பைப் பரிமாறிக் கொள்ளும் அன்பர் நாளாக மாறி வருகிறது.
    00
  3. காதலாட்ட வெருளி – Malaxophobia /Sarmassophobia

காதல் களியாட்டம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் காதலாட்ட வெருளி.
காதலினால் தீண்டல், நெருங்கிப் பழகுதல் முதலியன உறவிற்கோ, கற்பழிப்பிற்கோ, கருவுண்டாலுக்கோ இழுத்துச் செல்லும் என்ற கவலையால் வரும் பேரச்சமே இது. காதல் வெருளி உள்ளவர்களுக்கும் காதலாட்ட வெருளி வரும்.
மென்மை என்னும் பொருளிலான malயssō என்னும் பழங்கிரேக்கச் சொல்லில் இருந்து இலத்தீன் சொல்லான malaxo உருவானது. திருவள்ளுவரும் காதலை மெல்லிய உணர்வாகத்தான் கூறுகிறார்.
மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்.
 (௲௨௱௮௰௯ – 1289)
என்னும் திருக்குறள் மூலம் இதை அறியலாம்.
இந்த இடத்தில் இது மென்மையான காதல் உணர்வையும் தொடர்ச்சியாகக் காதலாட்டத்தையும் குறிக்கிறது.
sயrx என்னும் பழங்க கிரேக்கச் சொல்லிற்குத் தசை, உடல் எனப் பொருள்கள்.mயssō என்னும் பழங்கிரேக்கச் சொல்லிற்குத் தொடுதல், அழுத்துதல், ஊடாட்டம் எனப் பொருள்கள்.
முத்தமிடுதல்,தொடுதல் முதலான செயல்களால் வெருளி ஏற்படுகிறது.
கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள. 
(திருக்குறள், ௲௱௧ – 1101)
எனத் திருவள்ளுவரும் தொடுதல் முதலான புலனுணர்வைக் குறிப்பிடுகிறார்.
முத்தமிடுதல், தொடுதல் முதலான செயல்களால் இவ்வெருளி ஏற்படுகிறது.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

வெருளி அறிவியல் 2/5

--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Reply all
Reply to author
Forward
0 new messages