ஒரு பேச‌ஞ்சர் ட்ரெய்ன்

2 views
Skip to first unread message

Eskki Paramasivan

unread,
2:34 AM (20 hours ago) 2:34 AM
to மின்தமிழ்
ஒரு பேச‌ஞ்சர் ட்ரெய்ன்
ரயில் ஸ்டேஷனுக்குள் வந்து நுழைவது
ஒரு பூப்போல...
மேற்கண்ட ஒரு நளினத்தில்
உங்கள் நண்பர் உங்களுக்குச் சொன்னது
கவி(ன்) மிகு வண்ணதாசன் அவர்களே....
உலகம் பூரா குமிழியடிக்கும்
ஒரு கவிதைப்பரவசம் தான்.
நான் திலி டவுண் ரயில்வே ஸ்டேஷன்
வழியாக‌
கல்லிடைக்குறிச்சிக்கு ரயிலில்
திரும்பும்போது
ஸ்டேஷனை தழுவி அரவணைத்து நிற்கும்
அந்த நெட்டை மரங்களும்
அந்த மந்திரமூர்த்தி ஸ்கூலின்
கட்டிடங்களும்
சன்னலின் இமைகள்
விரிய விரிய பார்த்து
என்னை வழியனுப்பிவைக்கும்
வைபவங்களும்
என் வார்வைத்த டவுசர் கால‌
பழம் நினைப்புகளில் கூட‌
பரல்கள் ஒலித்துக்காட்டும்
சிலப்பதிகாரங்கள் தான்.
உங்கள் நண்பர் பரமன்
ஒரு ரயில் எஞ்சின்
நிலையத்துக்குள் வந்து நுழைவதை
பூவாய் பிறந்து
இதழாய் விரித்துக்காட்டியிருக்கிறார்.
அந்த கவிச்சாறு
சேர்மாதேவி டக் டக் ஒலிப்பு
தண்டவாளத்து
ஆற்றுப்பாலம் வரை
அலையடித்துக்கொண்டிருக்கும்.
__________________________________________
சொற்கீரன்.

Reply all
Reply to author
Forward
0 new messages