கிமு / கிபி வித்தியாசம் என்ன?

556 views
Skip to first unread message

தேமொழி

unread,
Jun 30, 2022, 4:29:56 PM6/30/22
to மின்தமிழ்
source - https://www.facebook.com/photo/?fbid=2214146342081386&set=a.100211446808230



கிமு / கிபி வித்தியாசம் என்ன..?
year difference.jpg
தற்காலத்தில் உலகம் முழுவதும் பொதுவான பயன்பாட்டில் இருப்பது கிரிகேரியன் காலண்டர்.

ரோமானியப் பேரரசு ஆரம்பித்த ஆண்டை முதல் ஆண்டாகக் கொண்ட ரோமானியக் காலண்டரும் அதனைத் தொடர்ந்து ஜூலியஸ் ஜீஸர் திருத்தம் செய்த காலண்டரான ஜூலியன் காலண்டரையும் அடிப்படையாகக் கொண்டு 1582ல் போப்பாண்டவர் எட்டாம் கிரிகோரி புதிய காலண்டர் முறையை அறிமுகப் படுத்துகிறார்.

கிரிஸ்து பிறப்பை முதல் ஆண்டாகக் கொண்டு கணக்கிட்டு அடுத்தடுத்த ஆண்டுகளை கடவுளின் ஆண்டு இத்தனையாவது என்று பொருள்படும் Anno Domini (AD) (கிபி) எனக் குறிப்பிட்டும், கிரிஸ்து பிறப்பதற்கு முந்தய ஆண்டுகளை before Christ (BC) (கிமு) என்றும் குறிப்பிட்டனர்.

காலக் கோட்டு வரைபடத்தில் சரியாக 2022 ஆண்டுகளுக்கு முன்பு கிபி முதலாம் ஆண்டு ஆரம்பிக்கிறது. கிமு என்பது டிசம்பர் 31ல் ஆரம்பித்து பின்னோக்கி செல்கிறது.

கிமுவிற்கும் கிபிக்கும் இடையில் 0 என்ற ஆண்டு கிடையாது. கிமு முதலாம் ஆண்டு முடிந்த பின் கிபி முதாலம் ஆண்டு ஆரம்பித்துவிடுகிறது.

கிரிகேரியன் காலண்டர் அறிமுகப்படுத்தப்பட்ட 100 ஆண்டுகளிலேயே கிரிஸ்துவம் அல்லாத மற்ற மதத்தினருக்கும் பயன்படுத்தும்படியான கிமு/கிபி என்ற முறையைத் தவிர்த்து பொது ஆண்டுக் கணக்கு முறை முன்வைக்கப்பட்டிருக்கிறது.

அதன்படி கிரிஸ்து பிறந்த முதல் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு பின்பு வந்த ஆண்டுகளை பொது ஆண்டு (பொஆ) CE (Common Era) எனவும், அதற்கு முந்தைய ஆண்டுகளை பொது ஆண்டுக்கு முந்தைய ஆண்டு BCE (Before Common Era) எனவும் குறிப்பிட ஆரம்பித்தனர்.

இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து இந்த கிபி/கிமு முறை கைவிடப்பட்டு பொது ஆண்டு CE/BCE முறை அதிகமாகப் பயன்படுத்தப் படுகிறது.

வரலாற்று குறிப்புகள் இல்லாத, ரேடியோ கார்பன் டேட்டிங் போன்ற அறிவியல் ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் காலத்தைக் குறிக்கும் பட்சத்தில் தற்போதிலிருந்து இத்தனை வருடங்கள் எனப்படும் Before Present (BP) என்ற முறை பின்பற்றப் படுகிறது.

1940ல் ரேடியோ கார்பன் டேட்டிங் அறிமுகப்படுத்தபின் 1950 ஜனவரி முதல் நாளை அடிப்படையாகக் கொண்டு Before Present (BP) முறை அளவிடப்படுகிறது.

உதாரணமாக 6000 BP என்று கணக்கிடப்பட்டிருந்தால் 1950ல் இருந்து 6000 ஆண்டுகள் எனவும், இன்றிலிருந்து 6072 ஆண்டுகள் எனவும் கொள்ள வேண்டும்.

நம்மிடம் உள்ள காலக் கணக்கீடு முறை என்பது ஒரு ஆண்டினை பருவங்களாகவும், மாதங்களாகவும், வாரங்களாகவும் நாட்களாகவும், நாழிகைகள் ஓரைகள், நொடிப்பொழுது, கண்ணிமைக்கும் நெரம், நட்சத்திரம் ஒளிரும் நேரம் என துள்ளியமாக பகுத்திருந்தாலும், வருடங்களைக் கூட்டி மொத்தம் இத்தனை ஆண்டுகள் என்று கணக்கிட்டு வைக்கும் சரியான முறை பண்டைய காலத்தில் இருந்திருக்கவில்லை.
Reply all
Reply to author
Forward
0 new messages