சங்க இலக்கியத்தில் மிகைக் கற்பனை!

227 views
Skip to first unread message

Kannan Natarajan

unread,
Apr 4, 2009, 5:51:29 PM4/4/09
to Min Thamizh
உள்ளது உள்ளபடிச் சொல்லுதலை "இயல்பு நவிற்சி" என்போம்.

பொதுவாக, நடைமுறை நிகழ்வுகளைக் கற்பனை கலக்காமல், மிகைப்படுத்தாமல், அழகுறச் சொல்வதே சங்க இலக்கியங்களின் தனித்தன்மை என்பர்.

அதாவது உயர்வு நவிற்சியாக மிகைப்படுத்தும் வழக்கம் சங்கப் புலவர்களிடையே இல்லை என்று அறிஞர் கூறுவர்.

சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவனை ஆவூர் மூலங்கிழார் பாடிய பாடல், "மன்னா நீ மகிழ்ச்சியோடு பார்த்த இடத்தில் பொன்னாக விளையும்; நீ சினந்து நோக்கிய இடத்தில் தீப்பற்றியெரியும்" என்கிறார். இந்தச் செய்தியைக் கூட ஒருவாறு ஏற்றுக்கொள்ளலாம். அந்த மன்னர் அன்போடு தோழமையோடு பார்த்தால், அவ்வாறு பார்க்கப்பட்ட நட்புடைய வேந்தர்க்கு பல நன்மைகள் விளையும், செல்வம் பெருகும் என்றும் சினத்தோடு நோக்கப்படும் பகை மன்னர்களிடம் துன்பம் பெருகும், செல்வம் அழியும் என்றும் எடுத்துக் கொள்ளலாம். இதற்கும் மேலே ஒன்று, இன்றைய அரசியல் தலைவர்களைப் பற்றித் தொண்டர்கள் சொல்லுகிற, "தலைவா நீ ஆணையிட்டால் இந்த அண்டமே கிடுகிடுக்கும்",
"நீ விரலசைத்தால் ஓடிவருபவர் பல்லாயிரம்பேர்" என்பவை போன்ற, இல்லை இவற்றை விடவும் அதிகமாக ஒரு கற்பனையை அள்ளி வீசுகிறார் புலவர்.

"நீ ஆணையிட்டால், விரும்பினால், வெப்பக் கதிர்களை வீசும் ஞாயிற்றில் இருந்து குளிர்ந்த இதமான நிலவொளியை வரச்செய்வாய், அவ்வாறே, குளிர் நிலவைத் தரும் திங்களிலிருந்து, நீ விரும்பினால் வெப்பக் கதிர்களையும் வெயிலையும் வரவழைப்பாய்."
அதாவது, சூரியனிலிருந்து நிலவையும், சந்திரனிலிருந்து வெயிலையும் வரவழைப்பானாம் அவன்!

"நீ உடன்று நோக்கும் வாய் எரிதவழ
 நீ நயந்து நோக்கும் வாய்ப் பொன்பூப்ப...
 செந்ஞாயிற்று நிலவு வேண்டினும்
 வெண்திங்களுள் வெயில் வேண்டினும்
 வேண்டியது விளைவிக்கும் ஆற்றலை." (புறம்-38)

அந்த மன்னன் எதுவேண்டுமானாலும், அவன் விரும்பியவாறு விளைவிக்கக் கூடியவன் என்று இயற்கைக்கு மாறாக, நம்பகத் தன்மையற்ற உயர்வு நவிற்சியாகப் படைத்துள்ளாரே இப்புலவர் என்று வியக்கிறோம்.

மற்றுமொரு காட்சியில், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டிய நெடுஞ்செழியன் போர்க்களத்தில் நிற்கிறான். இரண்டு பேரரசர்கள், ஐந்து குறுநில மன்னர்கள் ஆக எழுவருடன் இவன் தனியனாகப் போர் செய்கிறான். அட்டகாசமான போர். பகைவர்களை அலட்சியமாகத் தூக்கி வானிலே எறிந்து, தரையிலே விழச்செய்கிறான். அதற்காக அவன் பெருமைப்பட்டுக் கொள்ளவில்லை; மகிழ்ச்சியும் அடையவில்லை.

இதுவரையில்கூட இந்த வருணனையை நாம் ஏற்றுக்கொள்ளலாம்.

ஆனால் போர் செய்பவன் எப்பருவத்தினன் தெரியுமா?

பாலகன்!. நேற்றுவரை பாலுணவே உண்டான்; இன்றுதான் திடவுணவு கொண்டான்; கால்களிலே கிண்கிணிக் கொலுசுகள் போட்டிருந்தவன் இன்று வீரக்கழல் அணிந்தான். கைகளிலே வளையல் நீக்கி, அந்தக் கைகளிலே வில்லேந்தி அம்பு விடுகிறான். ஐம்படைத் தாலி என்னும் அணி (வில், வாள், கதை, சங்கு, சக்கரம் வடிவிலானவற்றைக் கோத்துக் கழுத்தில் குழந்தைகளுக்கு அணிவிப்பர்) இன்னும் களையவில்லை. குடுமி கழித்து வேப்பந்தார் சூடிக்கொண்டு தேரின் மீது ஏறி நின்று பகைவர்களைப் பந்தாடுகிறான்.

பாட்டைப் பார்ப்போம்.

"கிண்கிணி களைந்தகால் ஒண்கழல் தொட்டுக்
 குடுமி களைந்துநல் வேம்பின் ஒண்தளிர்
 நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிலைந்து
 குறுந்தொடி கழித்தகை சாபம் பற்றி
 நெடுந்தேர் கொடுஞ்சி பொலிய நின்றோன்!
 தாலி களைந்தன்றும் இலனே பால்விட்டு
 அயினியும் இன்று அயின்றனன் வயின்வயின்
 உடன்று மேல்வந்த மள்ளரை......
 அழுந்தப் பற்றி அகல்விசும்பு ஆர்ப்பு எழக்
 கவிழ்த்து நிலம்சேர அட்டதை
 மகிழ்தன்றும் மலிந்தன்றும் அதனினும் இலனே." (புறம்-77)

இடைக்குன்றூர்கிழார் என்ற புலவர், தலையாலங்கானம் என்ற இடத்தில் நடந்த இப்போரில் வெற்றிபெற்ற பாண்டியன் நெடுஞ்செழியனின் வீரத்தைப் பாராட்டிப் பாடியது இப்பாடல்.

அப்பப்பா! போதுமா?

இதனினும் மிகை வேறுண்டோ?

நன்றி: தமிழ்மணி (தினமணி)

வேந்தன் அரசு

unread,
Apr 4, 2009, 6:27:06 PM4/4/09
to minT...@googlegroups.com
செந்ஞாயிற்று நிலவு வேண்டினும்
 வெண்திங்களுள் வெயில் வேண்டினும்

எனவே நிலவு என்பது திங்களின் நின்று வரும் ஒளி.

--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
”உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே.”

Kumaran Malli

unread,
Apr 4, 2009, 7:58:18 PM4/4/09
to minT...@googlegroups.com
அருமையான எடுத்துக்காட்டு ஐயா. நன்றி.

2009/4/4 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>

shivan .

unread,
Apr 6, 2009, 12:47:41 PM4/6/09
to minT...@googlegroups.com
இப்படி உண்மையாக  நடப்பது சாத்தியமில்லை என்னும் லாஜிக் ஒருபுறமிருக்க, ஒருவேளை இப்படி உண்மையாக நிகழ்ந்திருந்தால்...?

இப்படி நிகழவில்லை என்றும் ஆணித்தரமாக தெரியும்படி ஏதேனும் பாடல் இருக்கிறதா?

சில சமயங்களில் லாஜிக்கை மீறி சில செயல்கள் நடப்பதும் உண்டே.

ஒரு இரண்டு வயது குழந்தை சுமார் நாற்பது கனமான தாள்களை ஒருசேர விளையாட்டாக கிழித்ததை நான் கண்டிருக்கிறேன்.

இதை ஒரு வியப்பு மிகுந்த நிகழ்ச்சியாக அந்த புலவர் சொல்லியிருக்கிறாரா, இல்லை  திரு, கண்ணன் சொன்னது போல மிகைப்படுத்தப்பட்ட ஒன்றா?





2009/4/5 Kannan Natarajan <thar...@gmail.com>

kaviarasan Va.Mu.Se.

unread,
Apr 6, 2009, 5:36:03 PM4/6/09
to minT...@googlegroups.com
கடோத்கஜன், அனுமார் பறத்தல், ராமர் அமைத்த மிதக்கும் பாலம்,குரங்கு முகமுடைய பேசும் மனிதர்கள் எனப் பல நமது புராண இலக்கியங்கிலும் உண்டு.
புலவர்களும் / ஆதரவாளர்களும்  சில சமயம் மிகைப் படுத்தியே கூற முனைகின்றனர் போலும்.

அன்புடன்
.கவி.

2009/4/6 shivan . <siva...@gmail.com>

shivan .

unread,
Apr 7, 2009, 5:08:09 AM4/7/09
to minT...@googlegroups.com
எது மிகை என்ற பேச்சை எடுக்கும்போதே தீர்மானங்கள் வந்து விடுகின்றன. ஒன்றை தடாலென நம்புவது எப்படி சரியில்லையோ அது போலவே ஒன்றை சட்டென நம்பாதிருப்பதும் சரியில்லை என்றே தோன்றுகிறது.

அந்த மேற்கூறிய சங்கப்பாடல் மேலெழுந்தவாரியாக பார்ப்பதற்கு மிகையாக தெரியினும் வேறு ஏதோ ஒன்று அதில் இருப்பதாக தோன்றுகிறது.




2009/4/7 kaviarasan Va.Mu.Se. <vamus...@gmail.com>

vj kumar

unread,
Apr 7, 2009, 6:01:24 AM4/7/09
to minT...@googlegroups.com
ஆனைமங்கலச் செப்பேடுகள்

1 'லீய்டன் பெரிய செப்பேடு'


"
இளைஞனான ஆதித்தியன் மனுகுலத்தின் ஒளி போன்றவன் மதங்கொண்ட யானைகளோடு சிங்கக் குட்டி விளையாடுவது போன்று வீரபாண்டியனுடன் இவன் போர் செய்தான்.

"

செவ்வூர் போரின் பொது ஆதித்ய கரிகாலனின் (அருள் மொழி என்ற ராஜ ராஜனின் அண்ணன் ) வயது 14 அல்லது 16.


rgds
vj
http://www.poetryinstone.in
Here the language of stone surpasses the language of man


2009/4/7 shivan . <siva...@gmail.com>

shivan .

unread,
Apr 7, 2009, 8:51:14 AM4/7/09
to minT...@googlegroups.com
இதை நம்ப முடிகிறதே.



2009/4/7 vj kumar <vj.ep...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Apr 13, 2009, 8:32:33 AM4/13/09
to minT...@googlegroups.com
லாஜிக் மனிதனின் சிந்தனைவளத்தின் முக்கிய பகுதி. ஆனால், அது எல்லைக்குள் மற்றும் 'குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டும்'. வாழ்வோ எல்லை தாண்டிய இயல்பு.
 
இன்னம்பூரான்

2009/4/7 shivan . <siva...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages