1. தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்: ஆளுமையர் உரை 167 & 168 ; நூலரங்கம் ++ 2. வெருளி நோய்கள் 1581-1585 : இலக்குவனார் திருவள்ளுவன்

5 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Jun 16, 2026, 5:52:33 PM (24 hours ago) Jun 16
to thiru thoazhamai, Thamizh Pavai, ara...@aol.com, Akar Aadhan, Paramasivam Marudanayagam, Casmir Raj, Vani Aravanan, pthang...@gmail.com, Bala subramanian, Anna Centenary Library Librarians, wsws sl, Raju Krishnaswamy, விவேக் பாரதி, Lalitha Sundaram, vidya chandran chandran, kalvet...@gmail.com, Neethi Vallinayagam, Sampath Singara, Kumanan K.b. Kanji, madhiyazhagan subbarayan, LION.R. MOURALY, Kandaih Mukunthan, Office, kandasamy santharupi, Tamil Mar Laie, Palanichamy V, HAMIDIA BROWSING CENTRE, raman kannusamy, பூங்குழலி Poonkuzhali, annac...@yahoo.co.in, Karunkal kannan, Solidarity For Malayagam, Manimekalai Prasuram, pandian M.T, Dr. Namadhu MGR, CHERALATHAN A, msvoimaie...@gmail.com, dgvcmut...@gmail.com, Kirubanandan Srinivasan, jainol...@gmail.com, Jeeva Kumaran, mega digital4, mohan raj, Swathi Swamy, Senthilnarayanan Arunachalam, Chitraleka V, Dr Seenivasan Sappani, Rajan Krishnan, Umarani Pappusamy Mysore, Dr. Ku.Muthukumar

தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்: ஆளுமையர் உரை 167 & 168 ; நூலரங்கம்


ஃஃஃ       அகரமுதல     இலக்குவனார் திருவள்ளுவன் 
     16 June 2026      



தமிழே விழி!                                                                         தமிழா விழி!

தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்

ஆளுமையர் உரை 167 & 168 ; நூலரங்கம்

ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்

காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு.                  

(திருவள்ளுவர், திருக்குறள், ௬௱௪௰௨ – 642)

நாள்: ஆனி 07, 2057 ஞாயிறு 21.06.2026 காலை 10.00 

கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;  கடவுக்குறி / Passcode: 12345

அணுக்கிக் கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)

வரவேற்புரை : கவிஞர் தமிழ்க் காதலன்,

தலைமையும் நூலாய்வும் :  இலக்குவனார் திருவள்ளுவன்

ஆளுமையர் உரை:

இசைக்கவி மதியழகன், சிங்கப்பூர்

கவித்திலகம் தங்க மாரியப்பன்

ஆய்விற்குரிய நூல் : கவிஞர் செம்பை சேவியர் எழுதியுள்ள

ஒன்றில் மூன்று – குறட்பா விளக்கம்

நிறைவுரை : அரசறிவியல் பேராசான்  தோழர் தியாகு

நன்றியுரை : செல்வி முகிற்செல்வி

++

வெருளி நோய்கள் 1581-1585 : இலக்குவனார் திருவள்ளுவன்

 ஃஃஃ       அகரமுதல     இலக்குவனார் திருவள்ளுவன்      17 June 2026      


(வெருளி நோய்கள் 1576-1580 : தொடர்ச்சி)

வெருளி நோய்கள் 1581-1585

  1. பண்ணை விலங்கு வெருளி – Agerozoophobia

பண்ணை விலங்குகள் மீதான அளவுகடந்த பேரச்சம் பண்ணை விலங்கு வெருளி.
விலங்கு வெருளி(zoophobia) உள்ளவர்களுக்குப் பண்ணை விலங்கு வெருளி வர வாய்ப்புள்ளது.
கிரேக்க மொழியில் agros என்றால் பண்ணை என்றும் zoo என்றால் விலங்கு என்றும் பொருள்.
00

  1. பண்ணை வெருளி – Fundophobia

பண்ணை(farm) குறித்த வரம்பற்ற பேரச்சம் பண்ணை வெருளி.
பண்ணைகள் மீதான அச்சம் என்பது பொதுவாக வேளாண் தொழிலில் வேதியல் பயன்பாடு, புதிய பண்ணைச் சட்டங்கள், நலக் குறைபாடுகள், பயிர்த் தொற்றுநோய்கள், பண்ணை விலங்குகள் மீதான தொற்று நோய்கள் முதலியன குறித்த பேரச்சத்திற்கு ஆளாகின்றனர்.
fundum என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் பண்ணை.
00

  1. பதிகை வெருளி – postophobia

வலைப்பூக்கள் முதலான இணையத்தளங்களில் முதலில் பதிவிட வேண்டும் என்ற பரபரப்பிற்கு ஆளாவதால் ஏற்படும் அளவுகடந்த பேரச்சம் பதிவூட்ட வெருளி. இதனைச் சுருக்கமாகப் பதிகை வெருளி எனலாம்.
தவறான பதிவுகளை மேற்கொண்டு பின்னர் மக்களின் எதிர்ப்பிற்கும் காவல் துறையின் வழக்கிற்கும் ஆளாகுபவர்கள், அல்லது ஆளாகுபவர்கள் பற்றிய செய்திகளைப் படிப்பவர்கள், பதிகை வெருளிக்கு ஆளாவர்.
00

  1. பதிவி வெருளி- X!mzophobia

நெஞ்சப்பதிவு காட்டி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் பதிவி வெருளி.
நெஞ்சுத் துடிப்புகளைப் பதிவுசெய்த பின்தான் திரையகத்தில்(monitor) காட்டுகிறது. இதன் நெஞ்சகச் செயலபாட்டைப் புரிந்து கொள்ள முடிகிறது. எனவே, அடிப்படைப்பணியின் அடிப்படையில் heart monitorஐப் பதிவி எனலாம்.
இதயச்சீர்நோக்கி ஆகிய நெஞ்சப் பதிவியின் செயல்பாடு, பழுதாக இருக்குமோ என்ற அச்சம் முதலியன குறித்துக் கவலைகள் கொண்டு பேரச்சத்திற்கு ஆளாகின்றனர். இயல்பான நிலையைக் காட்டினாலும், அதன் மூலம் பார்ப்பதால் உயிருக்குக் கேடுவருமோ என அஞ்சுவோர் உள்ளனர்.
00

  1. பதிவேறா வெருளி – Turpisophobia

தான் பதியும் அல்லது பகிரும் படங்களைப் பிறர் பதிவேற்றம் செய்ய மாட்டார்கள் என அளவுகடந்த பேரச்சம் கொள்வது பதிவேறா வெருளி.
பதிவேற்றம் சரியாக அமையாமல் போகிறது என்பதால் பிறர் பதிவேற்றவில்லை எனக் கவலைப்படுவர்.
Turpis என்னும் இலத்தீன் சொல்லிற்கு மோசமான எனப் பொருள்.
00

(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 3/5

++




--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Reply all
Reply to author
Forward
0 new messages