வடமொழி வரலாறு - 1 (பாவாணர்)
சமையம் - ஸமய (அ.வே.).
அம்-அமை. அமைதல் = பொருந்துதல், நேர்தல், ஏற்படுதல்.
அமை - அமையம் = நேரும் வேளை, நேரம், வேளை.
"ஆனதோ ரமையந் தன்னில்"
(கந்தபு. திருக்கல். 72)
அமை - சமை. சமைதல் = 1. அமைதல். 2. பொருந்துதல்.
"என்றிவை சமையச் சொன்னான்"
(கம்பரா. அங்கத. 8)
3. அணியம் (ஆயத்தம்) ஆதல்.
"வனஞ்செல் வதற்கே சமைந்தார்கள்"
(கம்பரா. நகர்நீ. 143)
4. தகுதியாதல். 5. மணவாழ்க்கைக்குத் தகுதியாகப் பூப்படைதல். 6.
உண்ணத் தகுதியாக வேதல்.
சமையல் = உணவு வேவித்தல். சமைந்தவள் = பூப்படைந்தவள்.
சமையம் = நேரம்.
சமையம் - சமயம் = 1. ஆதன் (ஆன்மா) அல்லது மாந்தன்
இறைவன் திருவடிகளை அல்லது வீட்டின்பத்தை அடையச்
சமைவாகும் (தகுதியாகும்) நிலைமை. 2. அந் நிலைமைக்குரிய
ஒழுக்க நெறி.
நேரத்தைக் குறிக்குஞ் சொல்வடிவுகளில் மகர ஐகாரமும்,
மதத்தைக் குறிக்குஞ் சொல்வடிவில் மகரமும், வரல்வேண்டு
மென வேறுபாடறிக.
வடமொழியில் மகரமுள்ள வடிவேயுண்டு. அமையம் என்னும்
மூலச் சொல்லும் அங்கில்லை.
வடவர் ஸமய என்னுஞ் சொல்லை ஸம்+அய என்று பகுத்து, உடன்
வருதல், கூடுதல், இணங்குதல், உடன்படிக்கை, ஒப்பந்தம், ஏற்பாடு,
ஒழுங்கு, மரபு, சட்டம், நெறி, மதம் என்று பொருள் வரிசைப் படுத்துவர்.
ஸம் = கூட. அய = இயக்கம், செலவு, வருகை. இது இய என்னும்
தென்சொற் றிரிபாகும்.
--------------
தேவ்
கடவுளே , எந்த ச/ஸமயத்தில் சேர்வது என்று தெரியவில்லையே !
தேவ்
//வடமொழியாளர், சமயம் என்னும் தென்சொல்லை 'ஸமய' என்று திரித்தும், ஸம் +
அய என்று பிரித்தும், உடன் வருதல் (to come together) அல்லது
ஒன்றுசேர்தல் என்று பொருள் கூறி வடசொல்லாகக் காட்டுவர்.//
வடவர் ஸமய என்னுஞ் சொல்லை ஸம்+அய என்று பகுத்து, உடன் வருதல், கூடுதல்,
இணங்குதல், உடன்படிக்கை, ஒப்பந்தம், ஏற்பாடு, ஒழுங்கு, மரபு, சட்டம்,
நெறி, மதம் என்று பொருள் வரிசைப் படுத்துவர்//
அவ்வாறு திரிக்க இலக்கண விதியில் இடம் இல்லை ;
ஸம்+அய என்று பிரிக்கவும் முடியாது; அய:,அயஸ் என்றால் இரும்பு என்று
பொருள். அவ்வாறு பொருள் கொண்டால் நல்ல இரும்பு என்று பொருள் படும்;
ஸமயம் சமயத்தின் திரிபு என்றால், ஸமவாயம் எதன் திரிபு ?
ஸமய: - ஸம்+இ+அச்
ஸமவாய: - ஸம்+அவ+இ+அச்
இவை ‘ஸம்’ எனும் முன்னொட்டுடன் வெகு இயல்பாய் அஷ்டாத்யாயி விதிப்படி
அமைந்த சொற்கள்
ஸமய சப்தத்தோடு பொருந்திய ஸமயாசாரம், ஸமயகுரவ:, ஸமயோசிதம், ஸமயக்ரியா,
ஸமயவ்யபிசார: போன்ற தொகைகளும் உள்ளன.
தமிழில் சமயம் என்னும் சொல்லோடியைந்த தொகைகள் உள்ளனவா?
‘ஸம்’ முன்னொட்டுடன் அமைந்த ஸமர்ச்சநம், ஸமர்த்தம், ஸமர்த்தநம்,
ஸமர்ப்பணம், ஸமக்ஷம், ஸமஞ்ஜஸம், ஸமக்ரம்,
ஸமதிக்ரமம், ஸமஜ: ,ஸமதீதம், ஸமதம், ஸமந்யு:, ஸமந்வய:,
ஸமஸ்யா, ஸமாக்யா, ஸமாசரணம், ஸமாச்ரயணம், ஸமாஜ்ஞா, ஸமாபதநம், ஸமாம்நாய:
போன்ற பல சொற்களின் தமிழ் வேர்கள் யாவை ?
சமூகம், சமயம், சமுதாயம் என்பவை வட சொற்களே என்று கூறும் தமிழ்
அறிஞர்களும் உள்ளனர்.
தேவ்
தகவலுக்கு நன்றி! மேலும் தெரிந்து பார்க்கலாம்.
நா. கணேசன்