திராவிட லிபி - லலிதவிஸ்தாரம் - தமிழ் பிராமி

58 views
Skip to first unread message

வினோத் ராஜன்

unread,
Apr 30, 2009, 3:03:39 PM4/30/09
to மின்தமிழ்
அனைவருக்கும் வணக்கம்,

புத்த பகவானின் வரலாற்றைக்கூறும் லலிதவிஸ்தார சூத்திரத்தில், பகவான்
புத்தர் குருவிடம் கல்வி கற்க செல்லும் போது, தான் அறிந்தவையாக 64
எழுத்துமுறைகளை (லிபிகளை) பட்டியலிடுவார்.

அது "திராவிட லிபி"யையும் உள்ளடக்கியது.

brāhmīkharoṣṭīpuṣkarasāriṁ aṅgalipiṁ vaṅgalipiṁ magadhalipiṁ
maṅgalyalipiṁ aṅgulīyalipiṁ śakārilipiṁ brahmavalilipiṁ pāruṣyalipiṁ
<<drāviḍalipiṁ>> kirātalipiṁ dākṣiṇyalipiṁ ugralipiṁ saṁkhyālipiṁ
anulomalipiṁ avamūrdhalipiṁ daradalipiṁ khāṣyalipiṁ cīnalipiṁ
lūnalipiṁ hūṇalipiṁ madhyākṣaravistaralipiṁ puṣpalipiṁ devalipiṁ
nāgalipiṁ yakṣalipiṁ gandharvalipiṁ kinnaralipiṁ mahoragalipiṁ
asuralipiṁ garuḍalipiṁ mṛgacakralipiṁ vāyasarutalipiṁ bhaumadevalipiṁ
antarīkṣadevalipiṁ uttarakurudvīpalipiṁ aparagoḍānīlipiṁ
pūrvavidehalipiṁ utkṣepalipiṁ nikṣepalipiṁ vikṣepalipiṁ prakṣepalipiṁ
sāgaralipiṁ vajralipiṁ lekhapratilekhalipiṁ anudrutalipiṁ śāstrāvartāṁ
gaṇanāvartalipiṁ utkṣepāvartalipiṁ nikṣepāvartalipiṁ pādalikhitalipiṁ
dviruttarapadasaṁdhilipiṁ yāvaddaśottarapadasaṁdhilipiṁ
madhyāhāriṇīlipiṁ sarvarutasaṁgrahaṇīlipiṁ vidyānulomāvimiśritalipiṁ
ṛṣitapastaptāṁ rocamānāṁ dharaṇīprekṣiṇīlipiṁ gaganaprekṣiṇīlipiṁ
sarvauṣadhiniṣyandāṁ sarvasārasaṁgrahaṇīṁ sarvabhūtarutagrahaṇīm

http://i291.photobucket.com/albums/ll301/vinodhrajan/Lalitavistara-Grantha.jpg

http://www.uwest.edu/sanskritcanon/dp/index.php?q=node%2F35&textID=d4e8257afed0047fe1

லலிதவிஸ்தாரம் ஏறக்குறிய CE 100 களில் எழுதப்பட்ட நிலையில், இந்த
பட்டியலில் கூறப்படும் <<திராவிட லிபி>> தமிழ் பிராமியை குறிப்பதாக
கருதலாமா ?

நா.கண்ணன்

unread,
Apr 30, 2009, 7:41:24 PM4/30/09
to மின்தமிழ்
On May 1, 4:03 am, வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com> wrote:
>
> லலிதவிஸ்தாரம் ஏறக்குறிய CE 100 களில் எழுதப்பட்ட நிலையில், இந்த
> பட்டியலில் கூறப்படும் <<திராவிட லிபி>> தமிழ் பிராமியை குறிப்பதாக
> கருதலாமா ?

இப்போது வழக்கில் `திராவிடலிபி` எனக்கருதப்படும் `கிரந்தம்` தோன்றிய
உண்மை வரலாறு என்ன?
பழுத்த வைணவர்களிடம் கேட்க வேண்டும். வேதாந்த தேசிகர் செய்யாத ஆய்வில்லை.
அவருக்கு பிராகிருதம், தமிழ், சங்கதம், தெலுங்கு, மலையாளம் போன்ற பல
மொழிகள் தெரியும்.

கிரந்தம் நாம் நினைப்பதையும் விட மூத்த ஒரு குறியீட்டுமுறையாக இருக்க
வாய்ப்புள்ளது.

கண்ணன்

வினோத் ராஜன்

unread,
May 1, 2009, 12:06:15 AM5/1/09
to மின்தமிழ்
கிரந்தம் பிராமியில் இருந்து திரிந்தது CE 400ஆம் வாக்கிலே, என்னுடைய
இந்தோஸ்க்ரிப்ட் மென்பொருளில், the oldest Grantha Inscription in the
database is dated around CE 550.(The Database could be outdated :P )
அதே காலக்கட்டத்தில் பிராமி கன்னட பகுதிகளில் கதம்ப லிபியாக உருமாறியதும்
இங்கு கவனிக்கப்பட வேண்டியது. இந்த காலக்கட்டத்தில் தான் தென்பிராமி
வடபிராமியில் இருந்து வேறுபட துவங்கி இருக்கவேண்டும்.

கிரந்தம் தமிழ் எழுத்தின் செயற்கையான நீட்சி என்பதான தமிழ்
தேசியவாதிகளின் Conspiracy Theoryகள் நம்பும்படியாக இல்லை. கிரந்தத்தின்
அனைத்து அக்ஷரங்களையும் பிராமியிலிருந்து வருவதாக காட்ட இயலும்.

CE 400களுக்கு முற்பட்ட லிபியாக கிரந்தம் இருப்பதற்கு வாய்ப்பு குறைவு.

இன்னொரு சுவையான கேள்வியும் இங்கு எழுகிறது, கிரந்தம் தோன்றுவதற்கு தமிழ்
நாட்டில் எந்த எழுத்துமுறையில் வடமொழியினை (சமஸ்கிருதம்/பிராகிருதம்)
எழுதினர் ? பிராமி ?

தமிழ் நாட்டில், தமிழ்-பிராமி கல்வெட்டுகளை தவிர்த்து பிராமியில் அதற்கு
சம காலத்தில் எழுதப்பட்ட பிராகிருத/சமஸ்கிருத கல்வெட்டுகள் எவையேனும்
கிடைத்துள்ளனவா ?

வினோத் ராஜன்

unread,
May 1, 2009, 12:08:06 AM5/1/09
to மின்தமிழ்
//கிரந்தம் தோன்றுவதற்கு தமிழ் //

<<-கிரந்தம் தோன்றுவதற்கு *முன்பு* தமிழ்>>

Geetha Sambasivam

unread,
May 1, 2009, 3:06:15 AM5/1/09
to minT...@googlegroups.com
சுவையான அலசல். விரிவான விளக்கத்திற்குக் காத்திருக்கிறேன். நன்றி.

2009/5/1 வினோத் ராஜன் <vinodh...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages