தமிழறிவோம் !

瀏覽次數:205 次
跳到第一則未讀訊息

தேமொழி

未讀,
2022年1月14日 下午5:46:012022/1/14
收件者:mintamil
தமிழ்ச்சொற்கள் உச்சரிப்பு விளக்கம்😊

இணைப்பில்  காண்க.......... 

#whatsappshare
-- தேமொழி




※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※
உயரப் பறக்கும் குருவியே காணுமாம்  
ஊரின் தொலைவு தனை                                                                                         
※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※
tamizh sounds clarification.mp4

தேமொழி

未讀,
2022年1月21日 下午4:46:342022/1/21
收件者:மின்தமிழ்

“ஐயா வணக்கம்."

"வணக்கம். சொல்லுங்க."

"அடுத்த வாரம் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளோம்; அழைப்பிதழ் அனுப்பியிருந்தேன், கிடைத்ததா?"

"அப்படியா எப்பொழுது அனுப்பினீர்கள்?"

"நேற்றுதான் ஐயா புலனம் (WhatsApp) மூலம் அனுப்பினேன். இன்று காலை பற்றியம் (Messenger) மூலமும் பகிர்ந்தேன்."

"நான் புலனம் பயன்படுத்துவதை நிறுத்தி பலகாலம் ஆகிவிட்டது. இப்போது தொலைவரி (Telegram) தான் பயன்படுத்துகிறேன். இருப்பினும் நான் நேரில் வந்து பங்கேற்பது சிரமம். இயங்கலை (Online) மூலம் பங்கேற்கலாமா ?"

"சரி ஐயா. காயலை (skype) மூலம் பேசுங்கள். நாங்கள் ஒளிவீச்சி (Projector) மூலம் பங்கேற் பாளர்களுக்குக் காண்பிக்கிறோம்."

"மிக்க நன்றி. வீட்டுத் தனிமையில் இருக்கிறேன். அதனால்தான் இந்த ஏற்பாடு. இல்லையெனில் தடங்காட்டி (GPS) உதவியுடன் நேரிலேயே வந்திருப்பேன்.   "

"பரவாயில்லை ஐயா. அழைப்பிதழை இன்னொரு முறை தொலைவரிக்கு அனுப்புகிறேன். தாங்கள் அதை உங்கள் படவரி (Instagram) மூலமும், கீச்சகம் (Twitter) மூலமும் பகிர்ந்தால், நன்றாக இருக்கும் ஐயா. நிகழ்ச்சிக்கும் ஒரு விளம்பரம் கிடைக்கும்."

"நிச்சயம் செய்கிறேன். அங்கே அரங்கில் அருகலை (WiFi) வசதி இருக்கிறதா?"

"இல்லை ஐயா. எனது இன்னொரு திறன்பேசி (smart phone) மூலம் பகிரலை (Hotspot) உருவாக்கி, அதில் இணைப்பு ஏற்படுத்தி உங்கள் பேச்சை நேரலையில் பகிர்வோம் ஐயா. உங்கள் இல்லத்தில் ஆலலை (Broadband) இணைப்பு இருக்கிறதுதானே ஐயா?"

"இருக்கிறது. ஆகவே சிரமம் இல்லை."

"உங்கள் பேச்சை அரங்கில் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் மற்றவர்களும் காணும் விதமாக, வலையொளி (youtube) மூலமும், முகநூல் (facebook) மூலமும் நேரலை செய்கிறோம் ஐயா. மட்டுமல்லாமல், இதனை வன்தட்டில் (Hard disk) சேமித்து, பிறருக்கு பகிர்வோம். அவர்கள் பின்பு முடக்கலை (Offline) யிலும் கண்டு களிக்கலாம்."

"மிக்க நன்றி

⭕ WeChat          -        அளாவி
⭕Bluetooth       -          ஊடலை
⭕ Thumbdrive   -        விரலி
⭕ cctv                 -        மறைகாணி
⭕ OCR              -         எழுத்துணரி
⭕ LED              -         ஒளிர்விமுனை  
⭕ 3D                  -        முத்திரட்சி
⭕ 2D                 -         இருதிரட்சி
⭕ printer          -        அச்சுப்பொறி
⭕ scanner         -        வருடி
⭕ Simcard          -       செறிவட்டை
⭕ Charger          -        மின்னூக்கி
⭕ Digital             -         எண்மின்
⭕ Cyber            -          மின்வெளி
⭕ Router           -         திசைவி
⭕ Selfie             -         தம் படம் - சுயஉரு - சுயப்பு
⭕ Thumbnail              சிறுபடம்
⭕ Meme           -         போன்மி
⭕ Print Screen -          திரைப் பிடிப்பு
⭕ Inkjet             -           மைவீச்சு
⭕ Laser            -          சீரொளி


#whatsappshare 

தேமொழி

未讀,
2022年1月27日 清晨5:49:432022/1/27
收件者:மின்தமிழ்
மிதிவண்டி உதிரிப் பாகங்கள்
cycle parts.jpg

மிதிவண்டி உதிரிப் பாகங்கள் பட்டியல்

  • Bicycle - மிதிவண்டி, ஈருளி
  • Tube - மென் சக்கரம், தூம்பு
  • Tyre - வன் சக்கரம், உருளிப்பட்டை, மெத்துருளி
  • Front wheel - முன் சக்கரம், முன்னாழி
  • Rear wheel (or) Back wheel - பின் சக்கரம், பின்னாழி
  • Free wheel - வழங்கு சக்கரம்
  • Sprocket - இயக்குச் சக்கரம்
  • Multi gear sprocket - பல்லடுக்குப் பற்சக்கரம்
  • Training wheels - பயிற்சிச் சக்கரங்கள், பயிலாழி
  • Hub - குடம், ஆழிக்குடம், நடு
  • Front wheel axle - முன் அச்சுக் குடம், முன்னாழி அச்சு
  • Rear wheel axle - பின் அச்சுக் குடம், பின்னாழி அச்சு
  • Rim - சக்கரச் சட்டகம், ஆழி வளை
  • Gear - பல்சக்கரம், பல்லாழி
  • Teeth - பல்
  • Wheel bearing - சக்கர உராய்வி
  • Ball bearing - பந்து உராய்வி, உண்டைத் தாங்கி (தாங்கி = bearing)
  • Bottom Bracket axle - அடிப்புறத் தண்டியக்கட்டை அச்சு
  • Cone cup - கூம்புக் கிண்ணம்
  • Mouth valve - மடிப்பு வாய், ஒருபோக்கி வாய்
  • Mouth valve cover - மடிப்பு வாய் மூடி, ஒருபோக்கி வாய்மூடி
  • Chain - சங்கிலி
  • Chain link - சங்கிலி இணைப்பி
  • Chain pin - இணைப்பி ஒட்டி
  • Adjustable link - நெகிழ்வு இணைப்பி
  • Circlip - வட்டக் கவ்வி
  • Chain lever - சங்கிலி நெம்பி
  • Frame - சட்டகம்
  • Handle bar - பிடி செலுத்தி, கைத்திருப்பி, கைச்செலுத்தி
  • Gripper - பிடியுறை
  • Cross Bar - குறுக்குத் தண்டு
  • Cross Bar cover - குறுக்குத் தண்டு உறை
  • Sissy Bar - சிறுமியர் இருக்கைத் தண்டு
  • Dynamo - மின் ஆக்கி
  • Head light - முகப்பு விளக்கு, முன்விளக்கு
  • Danger light (or) Light reflector - அபாய விளக்கு (அ) ஒளிதிருப்பி, பின் ஒளிர்வி
  • Rearview Mirror - பின்காட்டி, பின் ஆடி
  • Back Carrier - பொதி பிடிப்பி, பின் சுமைதி
  • Front Carrier Basket - பொதி ஏந்தி, முன் கூடை
  • Carrier support legs - பொதி பிடிப்பித் தாங்கு கால்கள், சுமைதி கால்
  • Side box - பக்கவாட்டுப் பெட்டி, பக்கப் பெட்டி
  • Stand - நிலை, நிற்பி
  • Side stand - சாய்நிலை, சாய் நிற்பி
  • Speedo meter (Odo meter) - வேகம்காட்டி, விரைவளவி, விரைவுமானி
  • Fender - வண்டிக் காப்பு
  • Derailleurs - பற்சக்கர மாற்றி, பல்லாழி மாற்றி
  • Peg - ஆப்பு
  • Air pump - காற்றழுத்தி, காற்றேற்றி
  • Shock absorber - அதிர்வு ஏற்பி, அதிர்வு குறைப்பி
  • Break - நிறுத்தி, தடை
  • Break shoes - நிறுத்துக்கட்டை, தடைக்கட்டை
  • Break wire - நிறுத்திழை, நிறுத்திக் கம்பி
  • Break Lever - நிறுத்து நெம்பி
  • Front break ankle - முன் நிறுத்துக் கணு
  • Back break ankle - பின் நிறுத்துக் கணு
  • Disc brake - வட்டு நிறுத்தி
  • Break connecting links - நிறுத்தி இணைப்பிகள்
  • Pedal - மிதிக்கட்டை
  • Reflecting Pedal - ஒளிதிருப்பி மிதிக்கட்டை, எதிரொளிர் மிதிகட்டை
  • Pedal cover - மிதிக்கட்டை உறை
  • Pedal cup - மிதிக்கட்டைக் குமிழ்
  • Pedal rod - மிதிக்கட்டைத் தண்டு
  • Spindle - சுழலும் மிதிக்கூடு, தண்டு, சுழல்தண்டு
  • Seat (Saddle) - இருக்கை
  • Seat Post - இருக்கை தாங்கி
  • Baby Seat - குழந்தை இருக்கை
  • Seat cover - இருக்கை உறை
  • Leather Seat - தோல் இருக்கை
  • Cushion seat - மெத்திருக்கை
  • Washer - நெருக்கு வில்லை, இடை வில்லை
  • Tension washer - மிகுநெருக்கு வில்லை, நெருக்கு வில்லை
  • Screw - திருகுமரை, திருகாணி, திருகு கூராணி
  • Nut - ஆணி இறுக்கி, மரை வில்லை
  • Bolt - திருகாணி, திருகுதண்டு
  • Spring - சுருள்
  • Bush - உள்ளாழி
  • Lever - நெம்பி
  • Rust - துரு
  • Balls - பொடிப்பந்துகள், உண்டைமணி
  • Crank - வளைவு அச்சு
  • Rivet - கடாவு ஆணி
  • Axle - அச்சு
  • Spring chassis - சுருள் அடிச்சட்டம்
  • Nose spring - சுருள் முனை
  • Fork - கவை
  • Horn - ஒலியெழுப்பி, ஒலிப்பி
  • Cable - கம்பியிழை, வடம்
  • Knuckles - மூட்டுகள்
  • Clamp - கவ்வி
  • Ring - வளையம்
  • Hole - ஓட்டை
  • Hook - கொக்கி
  • Spokes - ஆரக்கால்கள்
  • Spoke fixing screw - ஆரக்கால் திருகாணி
  • Spanner - மறைதிருகி
  • Spokes spanner - ஆரக்கால் மறைதிருகி
  • Screw driver - திருப்புளி
  • Tools - கருவிகள்
  • Pocket tools - பையடக்கக் கருவிகள்
  • Front Mud Guard - முன் மணல் காப்புறை
  • Back mud guard - பின் மணல் காப்புறை
  • Chain Guard - சங்கிலிக் காப்புறை
  • Dress Guard - ஆடைக் காப்புறை
  • Gloves - கையுறை
  • Head set - தலைக்கவசம்
  • Wrist band - மணிக்கட்டுப் பட்டை
  • Bell - மணி
  • Bell lever - மணி நெம்பி
  • Bell cup - மணி மூடி
  • Bell spring - மணிச் சுருள்
  • Bell frame - மணிச் சட்டகம்
  • Bell rivet - மணி கடாவி
  • Bell fixing clamp - மணிப் பொருத்தி
  • Lock - பூட்டு
  • Lock fixing clamp - பூட்டுப் பொருத்தி
  • Key - சாவி
  • Key chain - சாவிக் கொத்து
  • Chain lock - சங்கிலிப் பூட்டு
  • Inner wire - உள்ளிழை
  • Electrical parts - மின்னணுப் பாகங்கள்
  • Lighting Spoke - ஒளிரும் ஆரக்கால்
  • Spokes with balls - மணிகோத்த ஆரக்கால்
  • Extra fittings - கூடுதல் பொருத்திகள்
  • Foot rest - கால்தாங்கி
  • Baby foot rest - குழந்தைக் கால்தாங்கி
  • Water bottle - தண்ணீர்க் குடுவை
  • Racing cycle - பந்தய மிதிவண்டி
  • Mini cycle - சிறு மிதிவண்டி
  • Mountain cycle - மலை மிதிவண்டி
  • Foldable cycle - மடக்கு மிதிவண்டி
  • Wheel chair - சக்கர நாற்காலி
  • Beach cruiser - கடற்கரைத் துரிதவண்டி
  • One-wheel cycle - ஒரு சக்கர மிதிவண்டி
  • High-tech bike - அதிநுட்ப வண்டி
  • Kid cycle - சிறுவர் மிதிவண்டி
  • Ladies cycle - மகளிர் மிதிவண்டி
  • Tri cycle - முச்சக்கர வண்டி (அ) பொதி மிதிவண்டி
  • Cycle with motor - உந்து மிதிவண்டி
  • Inflating - காற்றடித்தல்
  • Patch - பட்டை
  • Patching - பட்டை வைத்தல்
  • Patch work - சிறு வேலை (அ) சில்லறை வேலை
  • Over hauling - முழுச் சீரமைத்தல்
  • Painting - வண்ணம் தீட்டல்
  • Lubrication - எண்ணெய் இடல்
  • Wheel bend removal - கோட்டம் எடுத்தல்
  • Puncture - துளை
  • Puncture closure - துளைமூடல்
  • Puncture lotion - துளைமூடு பசை
  • Emory paper (Abrasive sheet) - தேய்ப்புப் பட்டை (உப்புத் தாள்)
  • Wooden mallet - மரச் சுத்தி
  • Grease - உயவுப் பசை
  • Lubricant oil - உயவு எண்ணெய்
  • Waste oil - கழிவு எண்ணெய்
  • seat, saddle = குந்துகை, இருக்கை
  • handle bar = கைப்பிடிப் பாளை (தென்னம் பாளை என்பதில் வரும் பாளை என்பது bar என்பதையே குறிக்கிறது.)
  • wheel = வளை/வளவி (கையில் போடுவதும் வளவி தான்.)
  • mud guard = மட் காப்பு (மண்+காப்பு)
  • stand = தண்டை (தண்டு கொள்ளுதல் என்பது இருத்தலும் நிலைத்தலும் ஆகும்.)
  • carrier = தூக்கி
  • pedal = மிதி
  • spoke = போழ்க்கு (போழுதல் என்பது கூர்மையாகக் குத்துதல். போழ்க்குகள் இங்கே சக்கர விளிம்பில் இருந்து நடுவத்தை நோக்கிப் போவது போழ்க்குவதாய் இருக்கிறது.)
  • wheel rod = வளை/வளவி உரல் (எல்லாவற்றிற்கும் தண்டு எனவே சொல்லிக் கொண்டிராமல் உரல் என்ற சொல் இங்கே பயனாகிறது. கம்பு, தண்டு, தடி, உரல் எனப் பலவற்றையும் வேறுபாடு விளங்கிப் பயன்படுத்த வேண்டும்.)
  • bell = மணி
  • rim = விளிம்பு
  • tube = தூம்பு
  • tyre = தோலி (வியப்பாக இருக்கும்; தோலில் இருந்த கிளைத்த தோலி என்பது பழத்திற்கு மட்டுமல்லாமல் எல்லாவிதமான மேல் உறைகளுக்கும் பயன்படக் கூடிய சொல் தான்)
  • chain = கணை (கண்ணி கண்ணியாய் கோத்துக் கணைத்தது கணை)
  • break = தடை
  • forks = பிரிகை
  • sprocket = பற்சகடு
  • gears = பல்லிணை
  • pump = இறைப்பி
  • dynamo = துனைமி ("கதழ்வும் துனைவும் விரைவுப் பொருள" என்பது தொல்காப்பியம். இந்தச் சொல் ப.அருளியின் அருங்கலைச்சொல் அகரமுதலியில் இருக்கிறது. அருமையான சொல்.)
  • reflector = மறுபளிப்பி
  • caliper = இடுக்கி
  • shoe = கவை
  • cable = கொப்புழை (மரத்தில் கிளை, கொப்பு என்று உறுப்புகள் பிரிவதை நினைவு கொள்ளுங்கள். உழை என்ற ஈறு கொப்பின் சிறியதைக் குறிப்பது.)
  • frame = வரம்பை, (வரம்பு கட்டியே ஏதொன்றையும் உருவாக்குகிறோம். வரம்பு என்பது எல்லை மட்டுமல்ல.
  • lever = எழுவை, நெம்புகோல்
source:

தேமொழி

未讀,
2022年2月13日 凌晨12:54:262022/2/13
收件者:மின்தமிழ்
நல்ல உரைநடை எழுத வேண்டுமா?
காணொளி தொடர் :
https://www.youtube.com/playlist?list=PLTvsRjI_CgIy5HNZC5bLYVFfBZ1L4RGeQ




தேமொழி

未讀,
2022年2月13日 凌晨1:48:462022/2/13
收件者:மின்தமிழ்
source: https://twitter.com/kryes/status/1492562165022273537

KRS | கரச@kryes

குங்குமம்

குங்குமம் = கும் + கும் + அம்

*அம்= அழகு
*கும்= ஒலிக் குறிப்பு (Onomatopoeia)

கும்-ன்னு வாசனை தூக்குது!
இங்கே, கும்= உணர்வொலிக் கிளவி!
திபுதிபு, விரைவு குறிப்பது போல்
கும்கும், மணத்தைக் குறிப்பது!

’கும்கும்’ என வாசனை அழகு= கும்+கும்+அம்
மக்கள் பேச்சு மொழியில், மஞ்சள்-குங்கம்!
~*~

குங்குமம்.. தமிழ்ச் சொல்லே!

சேரன் நறுமண வணிகம்
இந்தியத் துணைக்கண்டம்/ உலகெங்கும்
எல்லா மொழிகட்கும் பரவியது!

பழந்தமிழ்நாட்டில்.. குங்குமச் சாந்து, வாசனைப் பொருள்!
நெற்றிக்கு மட்டுமல்ல, உடலிலும் பூசிக் கொள்வது!

இன்று தான், வெறும் பொட்டு ஆகிவிட்டது
~*~

சேரன் விளைவித்த கறி (மிளகு)
எப்படி எல்லா மொழிகளிலும் Curry ஆனதோ
சேரன் விளைவித்த குங்குமம்
எல்லா மொழிகளிலும் Kumkum ஆனது!

குங்குதல்= சுருங்குதல் (Dense)
நறுமண அடர்த்தியே, குங்குமம்!

மார்பில் கலவாக் குங்குமம் - கல்லாடம்

குங்குமம்= பொட்டு கடந்த நறுமணம்!
~*~

குங்குமத்தின் வேறு தமிழ்ப் பெயர்கள்!

*கொங்காரம்
*ஞாழல்
*நறவம்
*செஞ்சாந்து
*மனாலம்
*ஆவம்
*மஞ்சணை

குங்குமம் தமிழ்ச் சொல்லே!
Sanskrit-இல், कुङ्कुम என்று எழுதினாலும்
இங்கிருந்து சென்ற
சேரனின் நறுமண வணிகமே என்று தெளிக!

குங்குமத்தில்..
மதம் இல்லை!
மணம் உண்டு!
~*~
訊息已遭刪除

தேமொழி

未讀,
2022年3月27日 清晨5:27:472022/3/27
收件者:மின்தமிழ்
"வேட்டையாடு விளையாட" 
இது பேஸ்புக் பதிவு ஒன்றின் ஒரு பகுதி 
------------------------------

....
(கதநாய் வடுகர்)
நாய் வைத்துக்கொண்டு வேட்டையாடும் வடுகரை சங்க இலக்கியம்,
கடும் குரல் பம்பை கதநாய் வடுகர் - நற்.212
கல்லா நீள்மொழி கதநாய் வடுகர் - அகம். 107 என்றே குறிப்பிடுகிறது.
வீட்டுநாயைக் விட வேட்டையாடும் நாய் அதிக சினமும் அதிக ஆற்றலும் உடையது. இதனால் வேட்டை நாயை 'கதநாய்' என்றே தொகைப்பாடல்கள் கூறும். வடுகமொழி அதவாது தெலுங்கின் மூலமொழி பயிலும் 'வடுகர்' என்போர் காட்டில் வேட்டையாடுதலையே தொழிலாக உடைய வேட்டுவ தொல்குடிகள். இவர்களுடன் வேட்டைநாய் எப்போதும் இருக்கும், எனவே இவர்களைக் 'கதநாய் வடுகர்' என்றே இலக்கியங்கள் குறிப்பிடும்.
சரி வடுகர் மட்டும் தான் வேட்டைக்கு நாயை பயன்படுத்தினார்களா, இல்லை தமிழகத்தைச் சேர்ந்த வேட்டுவர்களும் நாய்களை வேட்டைக்குப் பயன்படுத்தி வந்துள்ளனர். இதனை,
வேட்டைநாயை விலங்குகளை வேட்டையாட பழக்கியத்தை,
"நாய் பயிர் குறிநிலை கொண்ட கோடே" - அகம். 318
சத்தம் எழுப்பக்கூடு கொம்பினை ஊதி (விசில் போன்று) வேட்டை நாயின் உதவியுடன் காட்டில் வேட்டையாடும் வேட்டுவரின் மகள் என்பதை,
"கோடு துவையாக் கோள்வாய் நாயொடு
காடுதேர் நசைஇய வயமான் வேட்டு
வயவர் மகளிர் என்றி ஆயின்" - நற்.276
கொலைவெறியுடன் பாய்ந்து வந்த வேட்டைநாயினைக் கண்டு பயந்துபோன மானானது வேடுவர் விரித்த வலையில் சிக்கிய,
"கொலைவெம் கொள்கையொடு நாய் அகப்படுப்ப
வலைவர்க்கு அமர்ந்த மட மான் போல" - கலி.23
வேடனுக்கு பயந்து ஓடிய மானை, வேட்டை நாய்கள் பாய்ந்து கொன்றன என்பதை,
"மான் கணம் தொலைச்சிய கடு விசை கத நாய்
நோன் சிலை வேட்டுவ" - புறம் 205
மேலும், வேட்டுவன் காட்டில் வேட்டையாடிய இறைச்சியைக் கொண்டுவது கொடுத்துவிட்டு தானியங்களை பண்டமாற்றாகப் பெற்றுச் சென்றான் என்பதை,
"கான் உறை வாழ்க்கைக் கதநாய், வேட்டுவன்
மான்தசை சொரிந்த வட்டியும்," புறம் 33
பாடல் குறிப்பிடுகிறது.
தமிழகத்தில் இருந்த தமிழக வேட்டுவரும், வடுகர் முனையில் இருந்த வடுகர் வேட்டுவரும், ஒரே மாதிரி வேட்டைப் பண்புகளைக் கொண்ட மக்களாக இருந்துள்ளனர்.
இவர்களைத் தொடர்ந்து, தென் தமிழகத்தை ஆண்ட பிற்கால வடுகர்களான, பாளையக்காரர்கள் தங்களது கோட்டைகளைக் காக்கவும், போர்களிலும் நாய்களை பயன்படுத்திவுள்ளனர் என்பதை அங்கிலேயர்க் கால ஆவணங்கள் கூறுகின்றன.
சங்க காலத்திலும், நாய்கள் காவலுக்கு பயன்படுத்தப்பட்டதை,
கணைக்கால் பந்தர் தொடர்நாய் யாத்த துன்னரும் கடி நகர் - பெரும்.125
காவலர் கடுகினும் கதநாய் குரைப்பினும் - குறி.240
உப்பு விற்க வந்த பெண்ணை, குரைத்து மிரட்டிய நாயை,
ஞமலி குரைப்ப வெரீஇய
மதர் கயல் மலைப்பின் அன்ன கண் - அகம்.140 போன்ற சங்கப் பாடல்கள் கூறுகின்றன. ஞமலி என்றால் நாய்.
மேலும், வடுக அரசர்களைப் போன்று அதற்கு முன்பு தமிழகத்தை ஆட்சி செய்த சோழர்கள் பெரிய கோவில் ஓவியத்திலும், பல்லவர் காலக் குடிகள் தங்கள் நடுகல்லிலும் நாயின் வீரத்தை, அவர்கள் வாழ்வின் அங்கம் என்பதை போற்றும் விதமாக வரைந்து வைத்துள்ளனர்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
27-3-2022.
(தொகுத்து அளித்தவர் :
அரசு சின்னசாமி வாத்தியார், ஆவுடையாள்புரம், சங்கரன்கோவில்)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


தேமொழி

未讀,
2022年4月11日 晚上10:14:132022/4/11
收件者:மின்தமிழ்
கணக்குவைப்பு முறை (bookkeeping system) பதிவு செய்வதில்                
               
'பற்று'க்கும் (செலவு),   'வரவு'க்கும் இன்றுவரை Dr.(Debit)  என்றும் Cr. (Credit)என்றும் தான் குறிக்கப்படுகிறது.
ஆனால் தமிழில் 'பற்று'க்கும்,  'வரவு'க்கும் பணத்திற்கு உள்ளது போல் தனித்தனி குறியீடுகளே உள்ளது.

௶    பற்று/செலவு    Debit
௷    வரவு                   Credit

------------
#whatsappshare

தேமொழி

未讀,
2022年4月13日 晚上8:24:252022/4/13
收件者:மின்தமிழ்
source - https://www.facebook.com/மேழிச்செல்வம்-380706305922476/photos/649046779088426/


"துரவு"

தெரிந்து கொள்வோமே...

   —   ஊரிலுள்ள ஒரு நிலக்கிழாரைப் பார்த்து, "அவருக்குத்தோட்டம், துரவுஎல்லாம் இருக்கு..."-  என்று சொல்வதைக் கேட்டிருப்போம்.

   —   'தோட்டம்'-  சரி.  அது என்ன, 'துரவு'...?

பெரிய அளவில் பாசனத்துக்குப் பயன்படும் கிணறுதான், 'துரவு'.

இன்று, "துரவு"- என்ற சொல்லையே நாம் துறந்துவிட்டோம்.

   —   இதன் நீள அகலம், 1:1, 1:2, 1:3 என்ற விகிதத்தில் அமைய வேண்டும் என விளக்குகிறார் கொடுமுடி ச. சண்முகம்.

   —   'கிணறு தோண்டுதல்'-  முதலிய கட்டுமானங்களை விளக்கும், ‘மயமதம்’-  எனும் ஒரு பொறியியல் நூல் நம்மிடம் இருந்ததாக இவர் குறிப்பிடுகிறார்.

   —   அகலமான கிணறுகள் மட்டுமன்றி, ஆழமான கிணறுகளும் நம்மிடம் இருந்தன.

   —   'நெடுங் கிணற்று வல் ஊற்று உவரி தோணி’ – (97-98) என்கிற, 'பெரும்பாணாற்றுப்படை' வரி,  தொண்டை மண்டலத்தில் ஆழமாகத் தோண்டப்பட்ட கிணற்றைப் பற்றிக் கூறுகிறது.

இதேபோல் கிணறு வெட்டும் ஆடவர்கள், தீப்பொறி உண்டாகப் பாறைகளை வெட்டி பாலை நிலத்தில் கிணறு தோண்டியிருந்த காட்சியை, ‘வன்புலம் துமியப் போகிக்…’ என அகநானூறு (79:6) விவரிக்கிறது. ஆனால், இவ்விரு பாடலுமே ஒரே செய்தியை தெரிவிக்கின்றன. இப்படித் தோண்டப்பட்ட கிணற்றில்,  உவர்நீர்தான் கிடைத்தது என்பதே அது. இது பாறையின் தன்மையினால் ஆனது.

இன்றும் புதுக்கோட்டை மாவட்டத்தின் மிக வறண்ட பகுதிகளில், ‘காராளன்_கிணறு’-  என்றழைக்கப்படும் பாசனக் கிணறுகள் உள்ளன.
 
   —   பொன்செய் கணிச்சித் திண்பிணி உடைத்துச் சிரறுசில ஊறிய நீர்வாய்ப் பத்தல் கயிறு குறு முகவை மூயின மொய்க்கும்.
 (மூன்றாம் பத்து -  பாட்டு 22: 12-14)

- என்கிற, 'பதிற்றுபத்துப் பாட்டில்'  வேறொரு கிணற்றைப் பற்றிய காட்சி விளக்கப்படுகிறது.

   —   கரும்பொன்'-  எனும் இரும்புக் கோடரியால், வன்மையான பாறை நிலத்தை உடைத்து தோண்டப்பட்டமையால், கற்பாறைகள் ஒழுங்கின்றி உடைந்து, சிதறி சிறிதளவே நீர் ஊறுகிறது. அதில், 'முகவை'- எனும் மரத்தால் செய்த, நீர் முகக்கும் கருவி ஒரு நீளமான கயிற்றால் பிணைக்கப்பட்டு, நீர் இறைக்கப்படும் காட்சி விளக்கப்படுகிறது. இங்குள்ள பத்தல் எனும் சொல் கவனத்துக்குரியது. இதை, 'உட்கிணறு' எனக் கொள்ளலாம். மேலே அகலமாக அகழ்வதைக் 'கூவல்'- என்றும் அக்கூவலுக்குள்ளே ஆழமாய் அகழ்வதைப் 'பத்தல்'- என்றனர். இது கொங்குப் பகுதியில் 'பிள்ளைக் கிணறு'-  என்று அழைக்கப்பட்டது.

   —   இதுதவிரத் தமிழகத்தின் பிறபகுதிகளில், குளம் ஏரிக்கு நடுவில் அமைந்த கிணற்றுக்கும்,  "பிள்ளைக் கிணறு"-  என்ற பெயர் இருந்தது.

   —   மணற்பாங்கான இடங்களில், குறிப்பாகச் சோழநாட்டின் ஆற்றுப்பகுதிகளில் அமைக்கப்பட்ட கிணறுகள்,  "உறைக்கிணறு"-  என்றழைக்கப்பட்டது.

   —   மணலில் தோண்டுவது எளிதன்று. மணல் சரிந்துக்கொண்டே இருக்கும். களிமண்ணால் வட்டைகள் செய்து சுட்டு, அவற்றை உறைகளாகப் பயன்படுத்தியுள்ளனர். மேற்பகுதி மண்ணைத் தோண்டியெடுத்துவிட்டு, மணல் பகுதியில் வட்டையை வைப்பர். வட்டையின் உட்பக்கமுள்ள மணலை தோண்டியெடுப்பர். உறை கீழே இறங்கும். பின் அடுத்த உறையை வைப்பர். உறையின் வாய்ப்பகுதி சற்றே பெரிதாகவும்,  வால்பகுதி அதனுள் செல்லுமாறும் இருக்கும். பின்  உறைக்குள் இருக்கும் மணலை தோண்டுவர். இவ்வாறு தொடர்ந்து தண்ணீர் சுரக்குமளவுக்குப் பல உறைகளை இறக்கிக் கொள்வர்.

இவ்வாறு, பல வகையான கிணறுகள் தமிழகத்தில் இருந்திருக்கின்றன.

   —   "கிணறு"- என்று பொருள் தரும் சொற்களுக்குத் தமிழில் வறுமையில்லை.

   —   பாறையைக் குடைந்து செய்யும் குடைக்கிணறு, "குமிழி"- எனப்பட்டது.

   —   சரளை நிலத்தில் வெட்டப்பட்டுச் சுற்றிலும் கல் மற்றும் செங்கல்களால் அகச்சுவர் கட்டிய கிணறு,  "கட்டுக்கிணறு"- எனப்பட்டது.

   —   "கேணி"-  என்றால், ஆழமும், அகலமும் உள்ள பெருங்கிணறு.

   —   கடலருகே தோண்டிய கிணறு, "ஆழிக்கிணறு." கடற்கரை ஓரங்களிலும், திருச்செந்தூர் கோவிலருகிலும் இதைக் காணலாம்.

   —   இறங்கிச் செல்லும் படிக்கட்டுகளுடன் அமைந்த பெருங்கிணறு, "நடைகேணி"- ஆகும். இதன் மாதிரிகளைக் கங்கை கொண்ட சோழபுரம், திருவிடைமருதூர் கோவில்களில் காணலாம்.

   —   ஊற்றுக்கால் கொப்பளித்துக்கொண்டே இருக்கும் கிணறு, "பொங்கு_கிணறு"- ஆகும். அதாவது, ஆர்ட்டீசியன் கிணறு. (ஆர்ட்டீசியன் ஊற்றுக்கு,  "
குமிழி ஊற்று"-  என்ற பெயரும் உண்டு)

   —   "பூட்டைக்_கிணறு"-  என்பது கமலை நீர்ப் பாய்ச்சும் அமைப்புள்ள கிணறாகும்.

   —   ஏற்றம் வைத்து நீர் பாய்ச்சும்போது ஏற்றம், குற்றேற்றம், நெட்டேத்தம், கூடையேற்றம், பெட்டி இறைப்பு, கமலை, ஆளேற்றம் என இவற்றில் பலவகைகள் இருந்தன.

   —   கோடையில், ஆற்றில் அல்லது ஆற்றங்கரையில் அவ்வப்போது தோண்டப்பட்ட கிணறு,  "தொடுகிணறு"-  எனப்பட்டது.

   —   காவிரி கடைமடைப் பகுதியில் ஆற்றோரத்தில் தோண்டப்பட்டுக் காய்கறி பாசனத்துக்குப் பயன்பட்ட கிணற்றை, "துலவாக்குழி"-  என்பர். துலவம் என்பது ஏற்றத்தில் பயன்படும் நீண்ட மரத்துண்டைக் குறிக்கும்.
well.jpg
---------------------------

தேமொழி

未讀,
2022年6月14日 清晨6:38:392022/6/14
收件者:மின்தமிழ்
விடுகதை
https://ta.wikipedia.org/s/97o

பாடலாக இருக்கும் விடுகதை

சங்க காலத்து தனிப் பாடல் திரட்டில் காணப்படும், பாடல் வடிவில் உள்ள ஒரு விடுகதை. இது சுந்தரகவிராயர் என்பவரால் பாடப்பட்ட பாடல். தமிழ்நயத்துடன், மரம் என்ற சொல் மீண்டும் மீண்டும் வருமாறு அமைக்கப்பட்ட பாடல். ஆனால் இங்கே மரம் என்ற ஒரே சொல்லால், வெவ்வேறு பொருள் வரும்படி பாடல் அமைக்கப்பட்டுள்ளது.

மரமது மரத்திலேறி மரமதைத் தோளில் வைத்து
மரமது மரத்தைக் கண்டு, மரத்தினால் மரத்தைக் குத்தி,
மரமது வழியே சென்று, வளமனைக் கேகும் போது
மரமது கண்ட மாதர் மரமுடன் மரமெடுத்தார்

மரமது - அரச மரம் (அரசு) - இங்கே அரசு என்பது அரசனைக் குறிக்கிறது.
மரத்திலேறி - மா மரம் = மா என்பது குதிரை எனப் பொருள் படுகின்றது.
மரமதைத் தோளில் வைத்து - வேல மரம் (வேல்)
அதாவது அரசன் குதிரையிலேறி, வேலைத் தோளில் வைத்துச் செல்கின்றான். அப்போது,
மரமது - மீண்டும் அரசு
மரத்தைக் கண்டு - வேங்கை மரம் - இங்கே வேங்கை என்பது வேங்கைப் புலியைக் குறிக்கிறது.
மரத்தினால் - மீண்டும் வேல் -
மரத்தைக் குத்தி - மீண்டும் வேங்கை
அதாவது அரசன் வேலினால் புலியைக் குத்துகின்றான். பின்னர்,
மரமது வழியே சென்று - மீண்டும் அரசு, வளமனைக்கேக்கும்போது, அதாவது அரசன் வீடு நோக்கிச் செல்லும்போது,
மரமது கண்ட மாதர் - மீண்டும் அரசு, அதாவது அரசனைக் கண்ட பெண்கள்,
மரமுடன் - ஆல் மரம்
மரமெடுத்தார் - அத்தி மரம்
அதாவது ஆல் + அத்தி = ஆலத்தி, அரசனைக் கண்ட பெண்கள் ஆலத்தி எடுத்தார்.
இப்பாடலின் பொருளை முழுமையாகக் கூறுவதாயின்:

அரசன் ஒருவன், தன் தோளிலே வேலை ஏந்தி, குதிரையில் ஏறி, வேட்டைக்குச் சென்றான். அங்கு ஒரு வேங்கைப்புலியைக் கண்டு, தன் வேலால் குத்திக்கொன்றான். பின்னர் அரசன் தனது அரண்மனைக்குச் சென்றான். புலியைக் கொன்று வெற்றிவீரனாகத் திரும்பிவரும் அரசனைக் கண்ட பெண்கள் அரசனுக்கு ஆலத்தி (ஆரத்தி) எடுத்து வரவேற்றனர்.

தேமொழி

未讀,
2022年6月14日 下午3:35:392022/6/14
收件者:மின்தமிழ்
சங்க இலக்கியம் கற்க ஓர் குழு!
https://www.facebook.com/groups/764019484396750/permalink/1175503143248380/

Joseph Patrick

未讀,
2022年6月25日 凌晨2:27:372022/6/25
收件者:mint...@googlegroups.com
நிறைய தமிழ் சொற்களை மறந்து போனோம்

On Wed, 15 Jun, 2022, 01:05 தேமொழி, <jsthe...@gmail.com> wrote:
சங்க இலக்கியம் கற்க ஓர் குழு!
https://www.facebook.com/groups/764019484396750/permalink/1175503143248380/

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/d49c65d0-074b-45d5-97ed-99a36b2cb112n%40googlegroups.com.

தேமொழி

未讀,
2022年9月10日 晚上10:27:372022/9/10
收件者:மின்தமிழ்
வினா வகைகள்
வினா,
அகவினா
புறவினா
என இருவகைப்படும்.

அகவினா:-
ஒரு சொல்லின் அகத்தே நின்று வினாப் பொருளை உணர்த்தும் வினா "அக வினா" எனப்படும். இவ்வெழுத்துகளைச் சொல்லிலிருந்து பிரித்தால், அச்சொல் தனியே பொருள் தராது.

அகவினாவிற்குரிய எழுத்துகள்
யா, எ, ஏ 
சான்று:
யார்?, யாது?, யாவை?
எது?, எங்கே?, எப்படி?, எவ்வாறு?, என்ன?, எதற்கு?
ஏன்?, ஏது?
இவை சொல்லாம் நிலையில் இருந்து வினாப்பொருளை உணர்த்தும்.

புறவினா:-
சொல்லின் புறத்தே நின்று வினாப்பொருளை உணர்த்தும் வினா "புற வினா" எனப்படும். இச்சொற்களில் வினாப் பொருளைத் தரும் எழுத்தை நீக்கினாலும் அச்சொற்கள் தனியே நின்று பொருள்தரும்.
புறவினாவிற்குரிய எழுத்துகள்:
ஆ, ஏ, ஓ
இவை எழுத்தாம் நிலையில் நின்று வினாப்பொருளை உணர்த்தும்.
சான்று:
இவனா? - இவன் +ஆ
அவனே? - அவன் +ஏ
யாரோ? - யார் + ஓ
=========================================

அகவினா புற வினா
விளக்கம்:

எங்கு?   ஏன்?   யார்?
இச்சொற்களில் எ..ஏ..யா. .  என்ற மூன்று எழுத்துக்களும் சொற்களுக்கு முன்னே நின்று வினா பொருளை உணர்த்துகின்றன.   இவற்றில் வினா பொருளைத் தரும் எழுத்துக்களை நீக்கிவிட்டால் மீதி உள்ள எழுத்துக்கள் சரியான பொருளை உணர்த்த மாட்டா.  
இவ்வினா எழுத்துக்கள் பிரித்தால் பொருள் தராதபடி சொல்லின் அகத்தே என்று வினா பொருளை தருகின்றன எனவே இவை அகவினால் எனப்படும்.

புறவினா:
இவனா?  ( இவன்+ஆ)
அவனோ?(அவன்+ஓ)
அதுதானே? (அது+தான்+ஏ)

மேற்குறிப்பிட்ட சொற்களில் உள்ள ஆ, ஓ,ஏ என்னும் எழுத்துக்களைப் பிரித்து விட்டால்
இவன், அவன், அதுதான்
என்ற சொற்கள் சரியான பொருளைத் தருகின்றன.
இவ்வாறு வினா எழுத்துக்கள் சொற்களின் புறத்தேநின்று வினாப் பொருளை உணர்த்துவதால்புறவினா எனப்படும்.

எ,யா என்னும் இரண்டு எழுத்துக்களும் சொல்லின் முதலில் நின்று அகவினாவாகவும், புறவினாவாகவும் வரும்.

எடுத்துக்காட்டு;  
எவன்?      எப்பொழுது?
யார்?        யாங்கனம்?

ஆ.  ஓ என்னும் இரு வினா எழுத்துகளும் சொல்லின் இறுதியில் நின்று புறவினாவாகவே வரும்.

எடுத்துக்காட்டு முருகனா?   முருகனோ?
ஏ என்னும் வினா எழுத்து சொல்லின் முதலில் என்று அக வினாவாகவும் சொல்லின் இறுதியில் நின்று புறவினாவாகவும் வரும்

எடுத்துக்காட்டு;  
ஏன்?     முருகன் தானே?

-- பத்மா
#WhatsappShare

தேமொழி

未讀,
2022年9月20日 晚上11:41:562022/9/20
收件者:மின்தமிழ்

நூற்பாஎண் - 302
நூல்: தொல்காப்பியம்                     
அதிகாரம்:எழுத்து                              
இயல்:  புள்ளிமயங்கியல்                

நூற்பாஎண்: 302
ணகார றுதி வல்லெழுத் தியையின்
டகார மாகும் வேற்றுமைப் பொருட்கே

இதன்பொருள்:    நிலைமொழி ஈற்றில் ணகாரம் நிற்க வருமொழி முதலில் வல்லெழுத்து வந்தால் வேற்றுமைப் புணர்ச்சியில் டகாரமாகத்திரியும்
சான்று:   மண்+குடம்= மட்குடம், மட்சாடி, மட்தாழி, மட்பானை

உரை விளக்கம்: புலவர் ஆ.காளியப்பன்      
அலைபேசி  9788552993  

தேமொழி

未讀,
2023年6月20日 凌晨12:35:022023/6/20
收件者:மின்தமிழ்
சொல் அறிவோம்!
"சொல்லாய்வுச் செம்மல்" குடந்தை வய்.மு. கும்பலிங்கன்

நன்றி:   https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2021/jan/24/we-know-the-word-3549910.html

"சொல் அறிவோம்!..."

அலகை
அலகை என்பதற்குப் "பேய்" என்பது பொருள். "அல்" என்பதற்கு இரவு, இருட்டு, கருப்பு என்பன பொருளாகும். இது கரிய நிறத்தோடு அலையும். ஆதலால், அவ்வுருவம் அலகை - பேய் ஆயிற்று. (அல் = இருள், கருப்பு, பேய்)

அம்மி
மிளகாய், சாந்து முதலிய பொருள்கள் அரைக்கப் பயன்படும் கருவி, ஆயுதம் அம்மி ஆயிற்று. காரணம், அப்பொருள்களைச் செவ்வக வடிவமான கருங்கல்லில் வைத்துக் குழவியால் "அம் அம்" என்று அமுக்கியும், அழுத்தியும் அரைப்பதால் அஃது அம்மி ஆயிற்று.

அமையம்
"அமையம்" என்பதற்குப் பொருந்துதல், நேர்தல், நிகழ்தல், சமயம், பொழுது எனப் பல பொருள் கொள்ளலாம். சந்தர்ப்பம் அல்லது நேரத்திற்கு ஏற்ப அஃது அமைவதால் "அமையம்" ஆயிற்று.

அரம்
அரிவாள், அறுவாள், அரிவாள்மனை போன்ற கருவிகளை அராவி அதாவது, தேய்த்துக் கூர்மைப்படுத்தும் கருவி "அரம்" ஆயிற்று. இதை "ரம்பம்" என்றும் "அரம்பம்" என்றும் சொல்லலாம்; சொல்லுவார்கள்.

அரவம்
பாம்புக்கு அரவம் என்ற வேறு பெயரும் உண்டு. அரவுதல் என்பதற்குத் தீண்டுதல், கடித்தல், வருத்துதல், துன்புறுத்துதல் எனப் பல பொருள்கள் உண்டு. எனவே, அஃது அரவம் எனப்பட்டது. மேலும், அரவு என்பதற்குச் சப்தம், இரைச்சல், ஒலி, ஓசை என்ற பெயரும் உண்டு. மேலும், அது "உஸ் உஸ்" என சப்தம் எழுப்பும் தன்மையது. எனவே, அஃது அரவமும் ஆயிற்று.

அரவணைத்தல்
பாம்பின் வகைகளான சாரைப் பாம்பும், நல்ல பாம்பும் ஒன்றை ஒன்று கட்டிப்பிடித்து அரவணைத்து ஆலிங்கணம் செய்யும். எனவே, இச்செயல் அரவணைத்தல் எனப்பட்டது. அரவணைத்தல் என்பதற்குப் "பாம்புச் சேர்க்கை" என்பது பொருளாகும். மேலும், ஒத்துப்போதலும் ஆகும்.  

அரண்மனை
"அரண்" என்பதற்குப் பாதுகாப்பு என்பது பொருள். "மனை" என்பதற்கு இல்லம் அல்லது "வீடு" என்பது பொருள். மன்னர் அல்லது அரசர் வாழும் இடம் அரண்மனை ஆயிற்று. மன்னர் வாழும் அவ்விடம் - அம்மனை அகழிகளாலும், மதில் சுவர்களாலும், படைப் பாதுகாவலர்களாலும் அரண் செய்து பாதுகாப்பாக சூழப்பட்டிருக்கும். எனவே, அஃது அரண்மனை ஆயிற்று.

அரிவை
அரிவை என்பதற்குப் "பெண்" என்பது பொருளாகும். அதாவது 20 முதல் 25  வயதுள்ள பெண் "அரிவை" எனப்பட்டாள். அதாவது,  "அரி" என்னும் சிங்கத்தைப் போன்று எடுப்பான தோற்றமும், அழகும், ஆற்றலும் பெற்ற அப்பெண்மகள் அரிவை ஆனாள்.

ஆண் - பெண்
ஆளுமைத்தன்மை உடையவன் ஆள் + அண் = ஆளண் - ஆண் ஆனான். அதுபோல் பேணுதல் தன்மை உடைய அப்பெண் மகள் பேண் + அண் = பேணன் - பெண் ஆனாள்.


சொல் அறிவோம்!
"சொல்லாய்வுச் செம்மல்" குடந்தை வய்.மு. கும்பலிங்கன் 
訊息已遭刪除

தேமொழி

未讀,
2023年6月20日 下午2:53:072023/6/20
收件者:மின்தமிழ்
///பெயர் சொல் தான் முதல் சொல், 
வினை சொல் பெயர் சொல்லில் இருந்து பிறக்கும். ///

பெயர்ச் சொல் தான் முதல், 
வினைச் சொல்  அதிலிருந்துபிறப்பதுதான்  முறை என்றால் . . . 
ஓடம் என்பதிலிருந்து ஓட்டம், ஓடு 
மிதவை  என்பதிலிருந்து மிதத்தல், மித
ஊஞ்சல் என்பதிலிருந்து ஊசல் 
ஏற்றம் என்பதிலிருந்து ஏறுதல், ஏறு 
போன்ற  வினைச் சொற்கள் உருவானதா ?
விளக்கவும் . . . 




On Tuesday, June 20, 2023 at 4:33:52 AM UTC-7 இசையினியன் wrote:
 /// பேண் + அண் = பேணன் - பெண் 

 தெரிந்தவரை

குறில் தான் அளபெடுக்கும், 
இ, உ, ஔ, ஐ போன்றவை சில இடங்களில் குறுகும். 
ஆனால் ஏ'காரம் எகரமாக குறுகாது? . ஆகவே

அப்படியே வேர் சொல் நோக்கி பயணிப்போம். 

பெண் > பேண் ஆக மாறலாம். ஆனால்
பேண் > பெண் என குறுகாது. அதாவது முதல் வேர் சொல் பெண் என்பதே. பேண் என்பது பெ அளபெடுத்த அடுத்த நிலை பே. 

மேலும், 

பெயர் சொல் தான் முதல் சொல், 
வினை சொல் பெயர் சொல்லில் இருந்து பிறக்கும். 

பெண் என்பது பெ. சொல், 
அப் பெயர் சொல் செய்யும் வினையைக் குறிக்க பேண் என உருவாகி இருக்கலாம். 

பேண் > பெண் என சொல் உருவாகி இருக்க வாய்ப்புகள் குறைவே. ஆனால் பெண் > பேண் என உருவாகி இருக்கும். 

தேமொழி

未讀,
2023年12月19日 晚上11:08:362023/12/19
收件者:மின்தமிழ்
[#WhatsAppShare]

தமிழண்ணல்
அவர்களின்
 பிழை திருத்தும் மனப்பழக்கம்
என்ற நூலிலிருந்து:
--------------------------------------

"ஆறு + பாசனம் = ஆற்றுப்பாசனம்.

 நாடு + பற்று = நாட்டுப்பற்று.

ஆடு + குட்டி = ஆட்டுக்குட்டி.

மாடு + வண்டி = மாட்டுவண்டி.

தமிழ்நாடு + முதல்வர் = தமிழ்நாட்டு முதல்வர்.

இவ்வாறு  வன்தொடர்க் குற்றியலுகர ஒற்று வரும் சொல்லோடு சேரும்போது, இரட்டிப்பது தமிழின் இயல்பு.

'தமிழ்நாடு அரசுப் பேருந்து ';

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் ';

தமிழ்நாடு அரசுப் பணியாளர்';

 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிகக் கழகம்' -

 என இவ்வாறு தமிழ்நாடு என்றுமட்டும் வரலாமா?.

இங்கும் 'தமிழ்நாட்டு' என்றல்லவா வரவேண்டும்?

ஆயினும் நாடு இழவோன், காடு கிழாள் (கொற்றவை), காடகம் (காடு) என ஒற்று இரட்டிக்காமலும் மிகச் சிறுபான்மை வந்துள்ளன.

இதை இலக்கண உரையாசிரியர்கள் காட்டியுள்ளனர்.(நன்.183).

'தமிழ்நாடு' என்பது ஒரு பெயராக நின்று, அதனுடன்
அரசு,
கழகம்,
ஆணையம் எனச் சேரும்போது
தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம்,
தமிழ்நாடு தேர்வாணையம் என வரலாம்.

 மூதறிஞர் வ.சுப.மா.வும் இதற்கு உடம்பட்டு எழுதியுள்ளார்."




தேமொழி

未讀,
2024年1月7日 下午6:36:011月7日
收件者:மின்தமிழ்
[#WhatsAppShare]
எஸ் தனலட்சுமி 

தொல்காப்பிய நூற்பாவின் படி . . . 
அர்ச்சனை, கர்த்தர் , பர்வதம், கர்ப்பம், அர்ப்பணம் ...போன்ற சொற்களெல்லாம் தமிழ்ச் சொற்களல்ல.

எடுத்துக்காட்டாக

அர் , கர், செர், தர், திர் , பர் , பெர் ...இவையெல்லாம்  சொற்களல்ல. ஆனால் இவை நெடிலுடன் கூடும் போது பொருள் தரும் சொற்களாகும்.

(எ - டு) ஆர், ஈர், ஊர், ஏர், ஓர்  , கார், சேர், தீர், சீர், தார், தூர் , பார், பேர், போர் , மோர், வேர் ....


அரு, கரு, பரு , பெரு, சொரி, பொரி , நரி, சிரி , கரி, பரி ,  புரி, திரி,தரு , மரு, தரை , குரை , அரை, இரை, சிரை, திரை , நரை , வரை ,சுரை  , ஒரீ ...சொற்களாகும்.

அழ் , பழ் ,விழ் , மழ் , தழ் , வழ், கிழ் ....போன்றவை எல்லாம் சொற்களல்ல.

ஆனால் நெடிலுடன் கூடும் போது சொற்களாகும்.
( எ-டு) ஆழ் ,  பாழ், கீழ் . வீழ் , வாழ் ....

அழி, அழு, அழை , பழி, பிழை, குழு , மழு , மொழி கிழி , விழி , தழீ , குழி , வழி , பிழி , மழி , மழை , பிழை , விழை , குழை....போன்றவை சொற்களாகும்.

மேலும் தமிழ் மொழியில் ழகரவொற்று  ( ழ் ) சொல்லில் நெடில்  எழுத்துடன் இணைந்து இரண்டாவது எழுத்தாகவும்,  இரு குறில் எழுத்துகளுடன் இணைந்து  மூன்றாவது எழுத்தாகவும் மட்டுமே அமையும்.

(அச்சொற்களின் மாத்திரை அல்லது அலகு -     இரண்டரை 2 1/2 ஆகத்தானிருக்கும்.)

நெடில் - 2 மாத்திரை
குறில் - 1 மாத்திரை
மெய் - 1/2 மாத்திரை

எடுத்துக்காட்டாக

கூழ் , சூழ் , வீழ் , வாழ் ,தாழ் , பாழ், சீழ் , பூழ் , கீழ் , யாழ் ....(2 + 1/2 )

தமிழ் , குமிழ் , கமழ், நிகழ் , அகழ் , புகழ் , கவிழ் , தவழ் , மகிழ் , இகழ் ....(1+ 1 + 1/2 )


回覆所有人
回覆作者
轉寄
0 則新訊息