காந்தகாரும் காந்தாரியும்
பொன் குலேந்திரன்
ஆப்கானிஸ்தானில் உள்ள காந்தகார் (Kandahar) நகரை ஒரு காலத்தில் ஆண்ட சுபலமன்னனின் பிள்ளைகளான, காந்தாரியும் அவளின் சகோதரன் சகுனியும் மகாபாரதத்தில் முக்கிய கதாபாத்திரங்கள். இராமாயணத்தில் கைகேயி எப்படியோ அது போன்று, மகாபாரதத்தில் சகுனி. அவன் இல்லாவிட்டால் மஹாபாரத யுத்தமே வந்திராது. கைகேயி இருந்திராவிட்டால் இராமாயணமே தோன்றியிருக்காது.
திருதராட்டிரனின் சகோதரன் பாண்டு மன்னன் வேட்டைக்குப்போன போது கலவியில் ஈடுபட்டிருந்த மான்களைக் கொன்றதினால் அவைகளின் சாபத்துக்கு ஆளானான். அதனால் அரசை துறந்து காட்டில் வாசம் செய்யத் தொடங்கினான். பீஷ்மரின் அறிவுரைப்படி கண்கள்தெரியாத பாண்டுவின் சகோதரன் திருதாட்டிரன் அரசேற்றான். எவ்வாறு ஒரு கபோதி அரசனாக முடியும் என்று அவன் பீஷ்மரிடம் வினவியதற்கு. நீ எதற்கும் யோசிக்காதே உன்னை திருமணம் செய்ய மேற்கிலிருந்து ஒரு இளவரசி வந்து கொண்டிருக்கிறாள் என்றார் அவர்.
“யார் அப்படி ஒரு குருடனை மணக்கக் கூடிய இளவரசி”? என்று அவன் அவரைக் கேட்டபோது வேறு யாருமில்லை காந்தகாரைச் சேர்ந்த காந்தாரி என்ற இளவரசி இரதத்தில் ஹஸ்தனாபுரம் ( டெல்கி) வந்துகொண்டிருக்கிறாள் என்றார். தனது மனைவி காந்தாரியின் அன்பில் திருதராட்டிரன் கட்டுண்டான். காந்தாரி தனது கணவனுக்கு கண் தெரியாத போது அவன் வாழும் நிலையிலேயே தானும் வாழவேண்டும் எனக் கண்களைக் கட்டியபடி தாம்பத்திய வாழ்க்கை நடத்திய கற்புக்கரசியானாள் என்கிறது மகாபாரதம். ஆனால் காந்தாரி திருமணம் குறித்து எழுந்த சர்ச்சை குறித்து விசாரித்து வர பீஷ்மர், ஒற்றர்களை காந்தார நாட்டுக்கு அனுப்பினார். காந்தாரியின் முதல் கணவருக்கு ஆயுள் இல்லை என்றும்,அதனால் காந்தாரியை ஒரு ஆட்டுக்கடாவுக்கு மணம் செய்வித்தும்,பிறகு அந்த ஆட்டை பலியிட்டதாகவும் ஒற்றர்கள் தெரிவித்தார்கள், நுணுக்கமாய் அன்றைய சாத்திரப்படி பார்த்தால் காந்தாரி ஒரு விதவை அவள் ஒரு சிவ பக்தை ஆகவே அகலத்தில் இந்து மதம் காந்தகாரில் இருந்திருக்க வேண்டும்
காந்தாரிக்குப் பிறந்தவர்களே கௌரவர்கள். அவர்களில் துரியோதனனே மூத்த மகனாவான். இது வரலாறு ஆனால் இங்கு முக்கியமாக கவனிக்கப்படவேண்டியது காந்தாரிக்கும் ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரகங்களில் ஒன்றான கந்தகாருக்கும் உள்ள தொடர்பாகும்.
பல குழு மக்கள் வசித்த “உப-கன-ஸ்தானம்” என்று சமஸ்கிருதத்தில் அழைக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் காலப்போக்கில் மருவி தற்காலத்துப் பெயரைப்பெற்றது. பல ஆக்கிரமிப்புகளுக்கு உற்பட்டநாடு. இன்று அதை சுற்றியிருக்கும் 6 நாடுகளுக்குள் நெரிபட்டு, கடலோடு தொடர்பு இல்லாத நாடு. ஆப்கானிஸ்தான் கி.பி 7ம் நூற்றாண்டுக்கு முன்னர் இந்துமதமும் பௌத்தமதமும் வேரூன்றி இருந்த நாடாகும் என்று சொன்னால் பலர் ஆச்சரியப்படுவார்கள். வேத கால மக்கள் அங்கு வாழ்ந்தார்கள் . காலப்போக்கில் அரசியல் காரணங்களால் வரலாறு சிதைந்து போய்விடுகிறது. உபகனஸ்தானம் என்ற சொல் பல பழங் குடிமக்கள் வாழ்ந்த இடம் என்பதைக் குறிக்கும். இன்றும் அங்கு பல பழங்குடி மக்கள் வெவ்வேறு பகுதிகளில் வாழ்ந்து தமக்கென ஒரு கலாச்சாரத்தையும் தலைவரையும் தேர்ந்தெடுத்து வாழ்வதைக் காணக் கூடியதாயிருக்கிறது.
ஒரு பண்டை நகரமான கந்தகார் ஊடகங்களினூடாக உலகத்தில் பலர் அறியக் கூடியதாக வருவதற்கு காரணம் அந்நகரத்தை தம் கைக்குள் வைத்திருந்து இஸ்லாம் மதத்தின் பெயரில் பல கொடுமைகளைச் செய்த தலீபானும், அல்குவைதா என்ற பயங்கரவாத இயக்கமுமேயாகும். இந்தியாவையும் மத்திய ஆசியாவையும் இணைக்கும் பட்டுப் பாதை (Silk Route) இந்நகரூடாகச் செல்கிறது. இந்நகரத்தின் பண்டைக்காலத்துப் பெயர் குவாந்தகார். நீண்ட ஆக்கிரமிப்புகளை வரலாறாகக் கொண்டது இந்நகரம். கிரேக்க மாவீரன் அலெக்சாந்தர் கி.மு 329ம் ஆண்டு இந்நகரை கைப்பற்றினான். அவனே இந்நகரின் பெயர் கந்தகார் என மருவியதற்கு காரணமாகயிருந்தான் என்கிறார்கள் சில ஆராச்சியாளர்கள். 24 வருடங்களுக்குப் பின்னர் சந்திரகுப்தா கிரேக்கரிடமிருந்து இந்நகரை மீட்டான். அசோக இலட்சினை அங்கு கல்வெட்டில் பதிக்கப்பட்டுள்ளது. கி.பி 7ம் நூற்றாண்டில் இந்நகரம் அரேபியரின் ஆக்கிரமிப்புக்கு உட்பட்டது. கி.பி 10ம் நூற்றாண்டில் கெங்கீஸ்கானால் நகரம் சீரழிக்கப்பட்டது. அதன்பின் துருக்கியரின் கையில் போய்ச் சேர்ந்தது. மோகல் அரசர்கள் அந்நகரத்தை ஆண்ட போது 40 படிகளைக் குன்றில் கட்டினார்கள். 1747ல் காந்தகார் ஒன்றிணைந்து ஆப்கானிஸ்தானின் தலைநகரமாயிற்று.
காந்தகாரைப்பற்றிய குறிப்புகள் வேதங்களிலும், மஹாபாரதத்திலும் , இராமாயணத்திலும் இருப்பினும், அந்நகரம் ஒருகாலத்தில் இந்திய-பாரசீக ஒருங்கிணைப்பு மையமாகவும், உலக வர்த்தகம், கலாச்சாரம் ஆகியவற்றின் முக்கிய மையமாகவும் இருந்தது. பௌத்தமதம் அங்கு இருந்ததி;ற்கு உள்ள பல ஆதாரங்கள் தலீபான்களால் சிதைக்கப்பட்டன. அதில் பாமியன் பள்ளத்தாக்கில் உள்ள குகையொன்றில் இருந்த 2000 வருடங்களுக்கு முன் அமைக்கப்பட்ட பௌத்த சிலையும் ஒன்றாகும்.
சுமார் கி.பி 4ம் நூற்றாண்டில் பாமியன் (ஆப்கானிஸ்தான்) பிரதேசத்தில உருவாக்கப் பட்ட 170 அடி, 120 அடி உயரமான அன்பைப் போதித்த புத்தரின் சிலைகள், தலீபான் முஸ்லீம் தீவிரவாத அரசினால் உடைக்கப்பட்டது. இஸ்லாம் உலக சகோதரத்துவத்தை வலியுறுத்தும் சாந்தி மதம். புத்த மதம் தோன்றி கிட்டத்தட்ட 800 ஆண்டுகளுக்கு பின் சவுதி அரேபியாவில் தோன்றிய மதம் இஸ்லாம். கி.மு 3ம் நூற்றாண்டில் மௌரிய சக்கிரவர்த்தி அசோகனால் புத்த மதம் ஆப்கானிஸ்தானுக்கு கொண்டுவரப்பட்டது. பல நூற்றாண்டுகளுக்குப் பின்னரே, முஸ்லீம் மன்னர்களின் படையெடுப்பின் மூலம் படிப்படியாக வட ஆபிரிக்கா, மற்றைய மத்திய கிழக்கு நாடுகள், ஈராக், ஈரான். ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான், இந்தியா. இந்தோனேஷியா, தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இஸ்லாம் பரவியது. 7ஆம் நூற்நாண்டில் இஸ்லாம் ஆப்கானிஸ்தானுக்குப் பரவியது. அன்றும் ஆக்கிரமிப்புக்காரர்கள்; பிற மத வழிப்பாட்டு இடங்களையும், விக்கிரகங்களையும் இடித்து நொருக்கினர். இஸ்லாமின் பெயரால் ஆட்சி நடத்தும் காடையர்களின் முடிவு மனித நாகரீகத்திற்கே இழுக்காகும்.
கந்தர்வர்களை வேதநூல்களில் பிரபஞ்ச ஜீவன்கள் என வர்ணிக்கப்பட்டுள்ளது. பின்னர் இலக்கியத்தில் அவர்களை ஜத்தி இனமென்றும் அழைக்கப்பட்டது. ஒரு காலத்தில் இப்பகுதி வாசிகள் இசையில் மேலோங்கியிருந்தனர். அவர்களை கந்தவகர்கள் என அழைத்தனர். நாட்டிய கலையிலும் அவர்கள் சிறந்து விளங்கினர். இவர்களின் இசை முறை கந்தர்வ முறையென அழைக்கப்பட்டது. கிழக்கு நாடுகளுக்கும் மத்தியதரைக்கடற் பகுதிகளுக்கும் இவர்களின் இசை முறையே பரவியது. மகாபாரத காலத்தில் காந்தகார் பகுதி கலாச்சாரத்திலும், அரசியலிலும் இந்தியாவின் ஒரு அங்கமாகவே இருந்தது. மஹாபாரத யுத்தம் குருசேஷத்திரத்தில் நடந்தது. அக்காலத்தில் ஹஸ்தினாபுரத்துக்கும் (டெல்கி) காந்தகாருக்கும் போக்குவரத்து ரதத்த;ன் மூலமும், பல்லாக்கு, குதிரைகள் மூலமும் இருந்தது. ஆகவே கந்தகா:ர் நகர இளவரசி காந்தாரி ஹஸ்தினாபுரத்துக்கு திருமணத்துக்காக வெகு தூரம் இரதத்திலோ அல்லது பல்லக்கிலோ சுமார் 800 மைல்கள் தூரம் பயணித்து இருக்கலாம் என ஊகிக்கவேண்டியுள்ளது. இப்பாதை க்ஹைபேர் பாஸ் (Khyber pass) வழியாக இந்திருக்கலாம் ஆகவே பல்லக்கில் வந்திருக்க முடியாது என்பது ஊகம்
கி.மு 3ம் நூற்றாண்டில் மௌரிய சக்கரவர்த்தி அசோகனின் ஆட்சியின் கீழ் காந்தகார் இருந்தது. இவர் காலத்தில் பௌத்த மதம் ஐரோப்பிய ஆசிய பகுதிகளுக்கு பரவி முதன்மையான மதமாகத் திகழ்ந்தது. பத்மசம்பவ என்பவர் இந்தோ -திபெத்தியன் பௌத்தத்தை தோற்றுவித்தார். இவர் கந்த:காரைச் சேர்ந்தவர். கிரேக்க சரித்திர வல்லுனர் ஒருவர் மௌரிய இராணுவத்தைப்பற்றி குறிப்பிடும் போது, “மாபெரும் படையிருந்தும் பௌத்த தர்மத்தை கடைப்பிடித்து, பிறநாடுகளின் மேல் படையெடுப்புக்களை நடத்தவில்லை” என்கிறார். இதனை இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த அரேபியர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது எதிர்மாறாக இருப்பதைக்காணலாம்.
முற்காலத்தில் பாக்கிஸ்தானின் சிந்துநதிப்பள்ளத்தாக்கில், பெஷ்வார் பகுதிகளில் இந்து மதம் வளர்ந்தது. பெஷ்வார் அக்காலத்தில் புருஷபுர என்ற பெயரைக் கொண்டிருந்தது. பின்னர் அக்பரின் ஆட்சக்p காலத்தில் பெஷ்வார் என்ற பெயர் பெற்றது. அது மௌரிய பௌத்த சாம்ராஜ்யத்தின் தலைநகராயிருந்தது. கந்தகார் இரண்டாவதாக திகழ்ந்தது. இந்து மதமும் பௌத்தமும் ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான் நாடுகளில் கி.பி 10ம் நூற்றாண்டுவரை மேலோங்கித் திகழ்ந்தன. விங் என்ற சரித்திர வல்லுனர் கந்தகாரைப்பற்றி குறிப்பிடும் போது சூன் என்ற சூரிய வழிபாடும், சிவ வழிபாடும் அங்கிருந்ததாக எழுதியுள்ளார். இஸ்லாம் இப்பகுதிக்கு வரும் வரை இந்துக் கோயில்கள் இங்கிருந்தன. கந்தகாரில் சிவன்-துர்கா வழிபாடு இருந்ததிற்கு ஆதாரங்களுண்டு. காந்தாரி ஒரு சிவ பக்தை.
ஒரு நாட்டின் வரலாறு மத, அரசியல், பொருளாதார காரணங்களுக்காக மறைக்கப்படுகிறது அல்லது மாற்றம் செய்யப்பட்டு மக்களுக்கு
எடுத்துச்சொல்லப்படுகிறது.. இதைக் கண்கூடாக இலங்கையில் பார்க்கிறோம். விலைமதிக்கமுடியாத சரித்திர ஆதாரங்கள் அழிக்கப்படுகின்றன. ஆனால் தற்காலத்தில் அவ் ஈனச்செயலைப் புரிபவர்கள் அதே கதி தமது ஆட்சிக்கும் வருங்காலத்தில் ஏற்படலாம் என்பதை உணருவதில்லை
.
****
1800 மற்றும் கி.மு. 800-க்கு இடையில் ஆப்கானிஸ்தானில்
சோரோரோஸ்ரியஸம் (Zoroastrianism)
மதம் இருந்தது என நம்பப்படுகிறது. பண்டைய ஈரானிய மொழிகள் சோரோரோஸ்ரிய எழுச்சியின் காலப்பகுதியில் இப்பகுதியில் பேசப்பட்டிருக்கலாம். கி.மு 330 ஆம் ஆண்டில், அலெக்ஸாண்டர் கிரேட் மற்றும் அவரது மாசிடோனியன் படைகள் ஆப்கானிஸ்தானுக்கு வந்து சேர்ந்தன. அலெக்ஸாண்டரின் சுருக்கமான ஆக்கிரமிப்பு நடந்தது அதன் பின் மௌரிய சாம்ராஜ்யம் பெரும்பகுதியை கட்டுப்படுத்தியது. புஷ்கலவதி, தக்ஷசிலா (தாக்சிலா - Taxila) மற்றும் புருஷபுரா (பெஷாவர்) ஆகியவை இந்த காந்தாரா இராச்சியத்தில் இருந்தன. தக்ஷசீலா, இராமனின் சகோதரன் பாரதால் நிறுவப்பட்டது. பாரதத்தின் சந்ததியினர் பின்னர் இந்த ராஜ்யத்தை ஆட்சி செய்தனர். காவிய காலத்தில் அது சகுனிவின் தந்தை சுவாலா, சகுனி மற்றும் சகுனி மகன் ஆகியோரால் ஆளப்பட்டது. யுதிஷ்டிரரின் அஸ்மத யக்ஞாவிற்கு போருக்குப் பிந்திய இராணுவப் பிரச்சாரத்தின்போது அர்ஜுனா சகுனி மகனை தோற்கடித்தார்.
கந்தர்வர்கள் இசை மற்றும் கலைகளில் நன்கு அறிந்தவர்கள் . இந்திய கிளாசிக்கல் மியூசிக்கில் காந்தார்வ செல்வாக்கு ஏன் இருக்கிறது என்பதை இது விளக்குகிறது. காந்தாரின் சிற்பத்தின் வடிவம் புகழ்பெற்றது (கிரேக்க சிற்பத்தோடு மிகவும் நெருங்கியது). சரஸ்வதி ஆற்றின் கரையோரங்களில் பல கந்தர்வா குடியிருப்புகள் கண்டார்.. குரு கிங் த்திராஷ்டிராவின் மனைவி காந்தாரி (கந்தர்வி) என்பவரால் காந்தாரி என்ற பெயர் பெற்றவர். காந்தாரின் மன்னர் சுவாலா வுக்கு சகுனி, சவுவலா, அச்சலா, விருச்சா மற்றும் விருஹ்தவாலா மகன்கள் அவர்கள் அனைவரும் காந்தகாரின் முதல்வர்களாக இருந்தனர். காந்தரா மன்னர் நாகஜித் மற்றும் அவரது மகன்கள் வாசுதேவ கிருஷ்ணனால் போரில் கைப்பற்றப்பட்டனர்..
காந்தாரா இசைப் பாடலின் பெயர். இசையின் கலையில் ஒரு தொழில்நுட்ப சொல். மகாபாரதம் காந்தாரா இசைக் குறிப்புகளின் பல குறிப்புகளைக் கொண்டுள்ளது. ஏழு இசைக் குறிப்புகள் ஷாதாஜா, ரிஷாபா, காந்தாரா, மத்தியமாமா, அதேபோல் பஞ்சாமா ஆகியவை; பின்னர் இது தெய்வதா மற்றும் பின் நிஷாதா எனப்படும்
ஆப்கானிஸ்தானில் பல இன குழுக்கள் உள்ளன. முக்கிய குழுக்கள் பஷ்டூன், தாஜிக், உஸ்பெக்ஸ் மற்றும் ஹஜாரஸ். ஆப்கானிய "பழங்குடியினர்" பற்றி மக்கள் பேசும்போது, அவர்கள் பெரும்பாலும் பஷ்டூன் பழங்குடியினரைக் குறிப்பிடுகிறார்கள்.
ஆப்கானிஸ்தானில் மிகப்பெரிய இனக்குழுவாகவும், உலகில் மிகப்பெரிய பிரிவினர் (பரம்பரையாக) பரம்பரையாகவும் பஷ்துன்கள் இருக்கிறார்கள்.
பஷ்டூன் வம்சத்தை 600 கி.மு. வரை காணலாம்,
****