USA (Eastern): 9:00 pm (Friday, Dec 5)
India: 7:30 am (Saturday, Dec 6)
அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை அயலகத் தமிழர் நல வாரியம்
உலகமெங்கும் இருக்கின்ற தமிழர்கள், தமிழ்ப்பள்ளிகள், தமிழ்க்கல்விக்கான பல்வேறு முன்னெடுப்புகளுக்குத் தொடர்ந்து செயலூக்கமும், ஆக்கமும் கொடுத்து வருகின்றனர். அதன்பொருட்டு, அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறையானது தமிழ்ப்பள்ளி ஒருங்கிணைப்பாளர்கள், நிர்வாகிகள், தமிழ்க்கல்வி ஆர்வலர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்களுடன் இணையவழிக் கலந்தாய்வுக் கூட்டம் நடத்திட முன்வந்துள்ளது. அனைவரும் பங்கேற்றுப் பயன்கொள்ள அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.
Dr. M Vallalar IAS.,
The Commissioner, Commissionerate of Rehabilitation & Welfare of Non-Resident Tamils
North America
USA (Pacific): 6:00 pm (Fri, Dec 5)
USA (Central): 8:00 pm (Fri, Dec 5)
USA (Eastern): 9:00 pm (Fri, Dec 5)
Canada (Toronto): 9:00 pm (Fri, Dec 5)
Middle East / Asia
Dubai: 6:00 am (Sat, Dec 6)
India: 7:30 am (Sat, Dec 6)
Singapore/Malaysia: 10:00 am (Sat, Dec 6)
South Korea/Japan: 11:00 am (Sat, Dec 6)
பொருண்மை:
அயலகத் தமிழ்க்கல்வி நிறுவனங்களில் தமிழ் கற்பிக்க ஊக்கத்தொகைகளும், தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்களுக்குப் பயிற்சியும், பட்டயமும் வழங்குதல்.
அயலகத் தமிழ்ப்பள்ளிகளுக்கு தாயகத்திலிருந்து தமிழாசிரியர்களை அனுப்புதல்.
தமிழ் இணையக் கல்விக்கழகம் வழியாக உலகத்தரநிலைகளுக்கு (ACTFL/CEFR) ஏற்றவாறு புதிய பாடத்திட்டங்களை வகுத்து புத்தகங்கள் வழங்குதல், இணையவழி வகுப்புகள் நடத்துதல், தேர்வு நடத்துதல், சான்றிதழ் வழங்குதல் ஆகிய முன்னெடுப்புகள்.
அயலகத் தமிழ் இளையோர்களுக்காக தமிழ்நாடு அரசால் நடத்தபடும் "வேர்களைத் தேடி" என்கிற இரண்டு வார கலாச்சாரச் சுற்றுலா திட்டம்.
அயலகத் தமிழர் தின பெருவிழாவிற்கான (ஜனவர் 11, 12-சென்னை) அழைப்பு.

----------------------------------------------------