தாமரைப் பொகுட்டில் வாழும் திருமகளுக்கும்
“கண்ணாள்” என்பது பொருந்தும்.
அவளும் கர்ணகத்தில் ( > கண்ணாள்) வதிபவள்
தானே. தாமரைக் கர்ணகத்தில் இருந்து எல்லா
உயிர்களும் உதிப்பதாக (யூனிகார்ன் என்னும் காளை
(bos indicus வகை), அரைச மர இலைகள், ...)
உள்ள சிந்து சமவெளி முத்திரை இருக்கிறது.
தாமரை இந்தியாவின் தேசிய மலர் ஆக்கியதில்
இதுவே பழமையான சான்று.
கண்ணாளன் = கண்ணாள் இலக்குமி கணவன்
ஆகிய நாராயணன்/விஷ்ணு என்றும் பொருள்
கொள்ளலாமோ? கீழ்வரும் இரு பாசுரங்களுக்கும்
வியாக்கியானம் என்ன? கண்ணாள் இலக்குமியின்
கணவர் என்ற குறிப்புண்டா?
திருவாய்மொழி (3211)
நண்ணாதார் முறுவலிப்ப
நல்லுற்றார் கரைந்தேங்க,
எண்ணாராத் துயர்விளைக்கும்
இவையென்ன உலகியற்கை?,
கண்ணாளா. கடல்கடைந்தாய்.
உனகழற்கே வரும்பரிசு, 4.9.1
[கடல் கடைந்ததில் பிறந்தவள் லக்ஷ்மி)
திருமங்கையாழ்வார் (2008)
மண்ணாடும் விண்ணாடும் வானவரும்
தானவரும் மற்றுமெல்லாம்
உண்ணாத பெருவெள்ளம் உண்ணாமல்
தான்விழுங்கி யுய்யக்கொண்ட,
கண்ணாளன் கண்ணமங்கை நகராளன்
கழல்சூடி, அவனையுள்ளத்
தெண்ணாத மானிடத்தை யெண்ணாத
போதெல்லா மினியவாறே 11.6.7
(கண்ணமங்கை - கண்ணனின் மங்கை என்றும்
ஒரு பொருள் சொல்லலாமா)
--------------
இலக்கியம் எழுதியுள்ள பனையோலைகளில்
முதலில் கலைமகள் வணக்கம் இருக்கும்.
மிகப் பழைய செய்யுள்:
”தவளத் தாமரைத் தாதார் கோயில்
அவளைப் போற்றுதும் அருந்தமிழ் குறித்தே”
வெண் தாமரையாள் அவள் - பாரதியார், குமரகுருபர், ...
கண்ணாள் என்று கலைமகளுக்குப் பெயர்.
ஏன் தெரியுமா? கண்ணாள் (< கர்ணா )
- வெண் தாமரைப் பொகுட்டு.
கண்ணகி (கர்ணகி) - கோவலன் (கிருஷ்ணன்) - சிலம்பின் நாயக, நாயகியர்
பெயர்ப் பின்புலம்
http://groups.google.com/group/minTamil/msg/2a35cdf42efcc856
அன்புடன்,
நா. கணேசன்
இலக்குமியின் கணவன் எனும் குறிப்பின் முக்கியத்துவத்தை திருமழிசையின்
பாசுரங்களை (திருச்சந்த விருத்தம்) விளக்கும் போது பரனூர்ப் பெரியவர்
சொல்லுவார். வேதம் பரத்துவம் பற்றி சொல்லிக்கொண்டே வருகிறது. இத்தகையது,
இத்தகையது என்று போய்க்கொண்டே இருக்கும். ஆனால் அது யார் என்பதைச்
சொல்லாமலே போகும். கடைசியில் ஒரு சிறுகுறிப்பாக, 'அது' இலக்குமியின்
கேள்வன் என்று இருக்கும். இக்குறிப்பு மட்டும் இல்லையெனில் நாரணனின்
பரத்துவத்தை அச்சூக்தத்தில் விளங்கிக்கொள்வது கடினம் என்பார் அண்ணா.
இதையெல்லாம் ஆழ்ந்து கற்றபின் தான் இராமானுச சித்தாந்தம், 'ஸ்ரீவைஷ்ணவம்'
என்றழைக்கப்படுகிறது.
க.>
On Mar 21, 9:53 pm, Narayanan Kannan <nkan...@gmail.com> wrote:
> 2009/3/22 N. Ganesan <naa.gane...@gmail.com>:
ஸ்ரீவைஷ்ணவம்.
கண்ணகியின் மங்கலாதேவி கோட்டத்தில் அவள் பெயர் (கல்வெட்டில்): ஸ்ரீபூரணி.
நா. கணேசன்
> க.>
இவையெல்லாம் மிகப்புதிய தகவல்கள் கணேசன். நீங்களோர் பொக்கிஷம்!!
க.>