பேராசிரியர் சுசுமு ஓனோ நூற்றாண்டு பிறந்த நாள் இணையவழிக் கருத்தரங்கம்

19 views
Skip to first unread message

M Bama

unread,
Aug 8, 2022, 8:19:35 AM8/8/22
to THFI Workshop Participants, mint...@googlegroups.com
 நண்பர்களே.. 


தமிழ் மொழிக்கும் ஜப்பானிய மொழிக்கும் இடையே உள்ள மொழியியல் தொடர்புகளை ஆய்வு செய்த அறிஞர்கள் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே. அத்தகைய ஆய்வாளர்களில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பேரறிஞராக நம் முன்னே திகழ்ந்தவர் ஜப்பானிய அறிஞர் பேராசிரியர் ஓனோ அவர்கள்.

அவர் மறைந்து விட்டாலும் அவரது நினைவாக பேராசிரியர் ஓனோ அவர்களுக்கு நூற்றாண்டு விழாவை கொண்டாட வேண்டும் என்று 2020 ஆம் ஆண்டு திட்டமிட்டும் அது செயல்படுத்த முடியாமல் போனது.

வருகின்ற சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்கள் பேராசிரியர் ஒனோ அவர்களின் நினைவாக இரண்டு நாள் இணைய வழி கருத்தரங்கம் நடைபெறவிருக்கிறது.

ஜப்பானிய மொழிக்கும் தமிழ் மொழிக்கும் உள்ள தொடர்புகளை அறிந்து கொள்வது மட்டுமின்றி இதுவரை நடைபெற்ற ஆய்வுகள் பற்றி அறிந்து கொள்ளவும் இனிவரும் காலங்களில் தமிழ் மொழிக்கும் ஜப்பானிய மொழிக்கும் இடையேயான தொடர்புகளை ஆய்வுப்பூர்வமாக அணுகவும் ஒரு முயற்சியாக இந்தக் கருத்தரங்கம் திகழும்.

இந்த கருத்தரங்கில் கலந்து கொள்வதற்கு கட்டணங்கள் ஏதும் இல்லை என்றாலும் சான்றிதழ் வழங்கப்படுவதால் உங்கள் பெயர்களை நீங்கள் பதிந்து கொள்ளுங்கள்.

பதிவு
Register in advance for this meeting:
https://us02web.zoom.us/meeting/register/tZYrf-Coqz8pGdDnEK98HGdA7CmbfIhlE7jD

அழைப்பிதழ் இன்று பகிர்ந்து கொள்கிறோம். வருகின்ற வாரம் 13 ஆம் தேதி 14 ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்களும் இந்த முக்கிய நிகழ்விற்காக உங்கள் நேரத்தை ஒதுக்கி கொள்ளுங்கள்.

- கருத்தரங்கு ஏற்பாட்டு குழு
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு


image.png

M Bama

unread,
Aug 9, 2022, 7:59:26 AM8/9/22
to THFI Workshop Participants, mint...@googlegroups.com
☘️ 💡 தமிழ் மொழிக்கும் ஜப்பானிய மொழிக்குமான தொடர்புகளை ஆய்வு செய்தவர்கள் மிகச் சிலரே. அவர்களுள் பேராசிரியர் டாக்டர்.சுசுமு ஓனோ அவர்கள் சிறப்பிடம் பெறுபவர். அவரைப் பற்றி தமிழ் கற்ற அல்லது கற்பிக்கும் நம்மில் பலர் அறிந்திருக்கின்றோமா?  இதுவரை அறிந்திராவிட்டால் வருகின்ற வார இறுதியில்  (13 & 14 - சனி-ஞாயிறு)  தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள அவரது நூற்றாண்டு விழா கருத்தரங்கில் பங்கு கொள்ளத் தயாராகுங்கள்.  

கட்டணம் இல்லை.

உங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்ள கீழ்க்காணும் லிங்கை பயன்படுத்திக் கொள்க.
 https://us02web.zoom.us/meeting/register/tZYrf-Coqz8pGdDnEK98HGdA7CmbfIhlE7jD?fbclid=IwAR1mtfeZfqRiD2z7cLJzemk7blc_kO3m-sjpxcvgQdb_DWgPczTRMrkvnUA

- கருத்தரங்க ஏற்பாட்டுக் குழு, தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு


image.png
Reply all
Reply to author
Forward
0 new messages