1965-இல் தமிழ்நாட்டில் இருந்த இந்தி எதிர்ப்பு என்பது காங்கிரஸ் கட்சிக்கு எதிரான போராட்டம் அல்ல. அன்றைய மத்திய அரசின் கொள்கைக்கு எதிரான போராட்டம்.
ஒரு கட்டத்தில் அன்றைக்கு மத்திய அரசில் அமைச்சர்களாக இருந்த சி.சுப்பிரமணியம், ஓ.வி.அழகேசன் ஆகியோர் இந்தி எதிர்ப்பை ஆதரித்து, தம் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தனர். (பின்னர் அவர்கள் சமாதானம்செய்யப்பட்டு தம் ராஜினாமாவைத் திரும்பப் பெற்றனர் என்பது வேறு கதை)
1965 – மொழிப்போரின் போது தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருந்த பக்தவச்சலம் அவர்களின் தவறான அணுகுமுறையால் தமிழர்களுக்கு காங்கிரஸ் கட்சி மீது அளவில்லாத வெறுப்பு வந்தது.
தமிழர்களின் மொழிப்பற்றைக் காங்கிரஸ் கட்சி தவறாக எடைபோட்டது என்பது உண்மைதான்.
ஆனால் இன்றைக்கு, இந்தியாவின் பன்முகத்தன்மையை முற்றிலும் உணர்ந்த பக்குவம் நிறைந்தவராக ராகுல்காந்தி காணப்படுகிறார்.
1965-இல் இருந்த காங்கிரஸ்காரர்களின் மனநிலையைக் காட்டிலும் பன்மடங்கு மோசமான மனநிலையைக் கொண்டது இன்றைய பா.ஜ.க. மத்திய அரசு. ஒரே மொழி, ஒரே மதம், ஒரே உணவு, ஒரே ஆடை, ஒரே கலாச்சாரம் போன்ற பல வன்மங்களை முன்னிறுத்துகிறது.
1967-இல் தமிழ்நாட்டை விட்டுத் தூக்கியெறியப்பட்ட காங்கிரஸ் இன்று மனம் மாறி நம்முடன் கைகோர்த்து நிற்கிறது.
ஆனால், மதவெறி, மொழிவெறி ஆகியவற்றைக் கொண்டு மக்களைப் பிரித்தாளும் வன்மத்துடன் களம் இறங்கியிருக்கும் கலவரக்கட்சியையும், அதற்குத் துணைபோகிறவர்களையும் மக்கள் இனம்கண்டுகொள்ள வேண்டும்.
ப.பாண்டியராஜா