Re: [MinTamil] குறுந்தொகை

257 views
Skip to first unread message

Kannan Natarajan

unread,
Aug 30, 2008, 10:32:11 PM8/30/08
to minT...@googlegroups.com
குறுந்தொகையில் மனம் திறக்கும் மங்கையர்!
 

சங்க இலக்கியத்தில் ஒன்று குறுந்தொகை; இதன் பாடல்கள் குறைந்தபட்சம் நான்கடி, அதிகபட்சமாய் எட்டு அடிகளைக் கொண்டவை. 401 பாடல்கள் இதில் உள்ளன. அத்தனையும் கருத்துச் சுரங்கம்; கற்பனை வளம்.

 

வெவ்வேறு சூழலில், வெவ்வேறு மன நிலையில் மூன்று பெண்கள் பேசுகின்றனர். பெண்ணின் பேச்சு நாசூக்காய், தாய்மையாய், உண்மையாய் அமையும் என்பதை குறுந்தொகை சுட்டிக் காட்டுகிறது.

காதல் கொள்கிறாள் இளம் பெண் ஒருத்தி. காதல் நோய் அவளை வாட்டியெடுக்கிறது. எல்லா நோய்க்கும் மருத்துவரிடம் மருந்திருக்கும். இந்நோய்க்கு மருத்துவரும், மருந்தும் வேறல்லவா? பெண் என்ற காரணத்தால் காதல் நோவை வெளியே சொல்ல முடியவில்லை; சொல்லாமலும் இருக்க முடியவில்லை. அப்பொழுது மொழியை நாசூக்காய் பயன்படுத்துகிறாள். உவமை அவளுக்கு உதவுகிறது.

சூரியன் சுட்டெரிக்கின்ற நண்பகல் நேரம், கொதிக்கின்ற பாறை. பாறை நடுவில் உருட்டி வைக்கப்பட்ட வெண்ணெய்க்கட்டி உருகி நான்கு புறமும் வழிகிறது. இதைப் பார்க்கிறான் ஒருவன். வெண்ணெய் வீணாய் உருகி வழிகிறதே என வருந்துகிறான்; ஓடிப்போய் வழிகின்ற வெண்ணெயைத் திரட்டி, வழித்து எடுக்க அவனுக்கு ஆசை. அந்தோ பரிதாபம்! கைகள் இரண்டும் இல்லாதவன். சரி, உரத்த குரல் கொடுத்து, யாரையாவது அழைத்து உருகும் வெண்ணெயை எடுக்கச் செய்யலாம் என்றால் பேச முடியாதவன். அங்கும் இங்கும் ஓடுகிறான், பரபரக்கிறான் பயன் இல்லை. பாறையில் வெண்ணெய் உருகி எல்லாப் பக்கமும் வழிந்தோடுகிறது. கண்களால் பார்த்துக்கொண்டுதான் நிற்க முடிகிறது. கையில்லாத, வாய் பேசமுடியாதவன் போல்தான், காதல் கொண்ட என் நிலைமை என்பதை,

 

"ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில்

கை இல் ஊமன் கண்ணில் காக்கும்

வெண்ணெய் உணங்கல் போலப்

பரந்தன்று இந்நோய்; நோன்று கொளற்க அரிதே."

என்று நாசூக்காக, நாகரிகமாய் எடுத்துரைக்கிறாள்.

அன்பாய் வளர்த்த மகள்; ஆடவன் ஒருவன் மீது காதல் கொண்டு, உற்றாரும், மற்றோரும் அறியாவண்ணம் உடன்போக்கு சென்று விடுகிறாள். மகள் சென்றபின்தான் தாய்க்குத் செய்தி தெரியவருகிறது. தாய் வருந்துகிறாள், அரற்றுகிறாள். மகள் தன்னைவிட்டுச் சென்று விட்டாளே என்ற வருத்தம் அவளைப் படுத்துகிறது. சற்று நேரத்தில் தாயின் வருத்தம் கவலையாய் மாறி விடுகிறது.

தன் மகள் உடன்போக்கு செல்லும் பாதை மலையை ஒட்டியபாதை, கல்லும், முள்ளும் நிறைந்த கரடுமுரடான பாதை, சூரியன் கொளுத்தும், நிழலில் ஒதுங்கலாம் என்றால் மரமெல்லாம் பட்டுப்போய் மொட்டையாய் நிற்கும் பாலைவனம். நீண்டதூரம் நடக்க வேண்டிய பாதை, நடந்தறியா மென்பாதம் கொண்ட என்மகள் எப்படி நடக்கப் போகிறாள் என்று கவலை. இப்பொழுது கவலை இறை வேண்டுதலாய் மாறிவிடுகிறது. என்மகள் இந்த மலைக்காட்டுப் பாதையைக் கடக்கும் வரை சூரியன் உதிக்கக்கூடாது. பட்டுப்போன மரம் தளிர்த்து நிழல் தரும் மரமாக வேண்டும், கூர் கற்கள் நிரம்பிய பாதை மணற்பாதையாய் மாறி என் மகள் கால்களுக்கு இதம் தரவேண்டும். நீண்ட பாதை தூரம் சிறிது தூரமாய் குறுகிட வேண்டும் என வேண்டுகிறாள் இதுதானே தாயன்பு!

 "ஞாயிறு காணாதா மாண் நிழற் படீஇய
  மலைமுதல் சிறுநெறி மணல் மிகத் தாஅய்
  தண்மழை தலைய வாகுக நம் நீத்து
  சுடர்வாய் நெடுவேல் காளையோடு
  மடமா அரிவை போகிய சுரனே." (குறுந் - 378 - கயமனார்)

வருத்தம், கவலையாய், கவலை வேண்டுதலாய் மாறிய நெஞ்சில் நிறைந்த தாய்மை புலப்படுகிறது இப்பாடலில்.

அன்பிற்கு முப்பரிமாணம் கொடுத்த பெண்ணின் வாக்கு சாதுர்யத்தைக் குறுந்தொகை காட்டி நிற்கிறது. கண்ணால் பார்க்கக் கூடிய பொருளுக்கு அளவு சொல்லலாம், மனதால் உணரமட்டுமே முடியும் உணர்வுக்கு வடிவமும் அளவும் சொல்லி மலைக்க வைக்கிறாள் சங்கத் தலைவி.

எச்சரிக்கையடி தோழி, காதலன் உன்னை ஏமாற்றிவிடப் பேகிறான் என்று ஒரு வார்த்தை சொல்லி விடுகிறாள் தோழி; அவளுக்கு மறுமொழி கூறுகிறாள். அந்த வார்த்தையில் யாரைப் பார்த்து உனக்கு சந்தேகம், அவன் யாரென்று நினைத்து விட்டாய் என்ற கோபம் தெரிகிறது.

காதலனைப் பற்றிய பெருமிதம் தெரிகிறது. தலைவி தோழியிடம் கேட்கிறாள் மூன்று வினாக்கள்.

  1. இந்த பூமி எவ்வளவு பெரியது என்று உனக்குத் தெரியுமா?
  2. வானத்தை உன்னால் தொடமுடியுமா?
  3. கடலின் ஆழத்தைத்தான் காண முடியுமா?
இதற்கெல்லாம் உன்னால் முடியும் என்று பதில் கூற முடிந்தால், என் அன்பிற்குரியவனின் காதலையும் உன்னால் புரிந்துகொள்ள முடியும் என்கிறாள்.
 
இதோ அவளின் பதில்,

"நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
 நீரினும் ஆரளவு இன்றே சாரல்
 கருங்கோல் குறிஞ்சிப் பூக்கொண்டு
 பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பு." (குறுந் - 3 - தேவகுலத்தார்)

இப்படி காதலுக்கு அடி, அகல, உயரம் கொண்ட முப்பரிமாணத்தைச் குறுந்தொகை பெண்ணின் மனம் விளக்குகிறது.

முனைவர் எச். அனார்கலி

நன்றி: தமிழ்மணி (தினமணி)

வேந்தன் அரசு

unread,
Aug 31, 2008, 8:21:23 AM8/31/08
to minT...@googlegroups.com
அருமையான பாடல்கள்

--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)

Kannan Natarajan

unread,
Sep 13, 2008, 5:57:43 PM9/13/08
to minT...@googlegroups.com
குறுந்தொகையில் ஆளுமை வெளிப்பாடு
 
"ஒரு புலவர் எண்ணற்ற பாடல்களை எழுதும்போதோ அல்லது 100 வரிகளுக்கு மேல், சில வேளைகளில் 600 வரிகளுக்குமேல் நீண்ட ஒரு பாடலை எழுதும்போதோ, அவரது நாடக பாணித் தனியுரையிலிருந்து அவர் எவ்வளவுதான் தம்மை வெளிப்படுத்தாமல் தப்பித்த போதிலும், அவருடைய ஆளுமை எப்படியாவது வெளியாகியே தீரும்," என்பார் பேராசிரியர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார். இக்கருத்தின் ஒளியில் குறுந்தொகைப் பாடல்கள் வெளிப்படுத்தும் புலவர் தம் ஆளுமைப் பண்புகளை அடையாளம் காட்டுவது இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.

அரசப் புலவரை அடையாளம் காட்டும் கூற்று:-

குறுந்தொகை 137ம் பாடல் தலைவன் கூற்றாக அமைந்தது. "இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகன் பிரிவச்சம் உரைத்தது" என்பது அப்பாடலின் துறை. பாடல் வருமாறு:

"மெல்லியல் அரிவைநின் நல்லகம் புலம்ப
 நின்துறந்து அமைகுவென் ஆயின் என்துறந்து
 இரவலர் வாரா வைகல்
 பலவா குகயான் செலவுறு தகவே."

மென்மைத் தன்மையை உடைய அரிவையே; நின் நல்ல நெஞ்சம் தனிமையால் வருந்த, நின்னைப் பிரிந்து சென்று, சென்ற இடத்தே மனம் பொருந்தி இருப்பேனாயின், யான் அங்ஙனம் செல்வதற்கு உற்ற தக்க வினையின்கண், என்னை நீங்கி இரப்போர் வராத நாட்கள் பலவாகுக என்பது இப்பாடலின் பொருள்.

இப்பாடலில் இடம்பெற்றுள்ள "என் துறந்து இரவலர் வாரா வைகல் பலவாகுக" என்னும் கூற்று, இப்பாடலை இயற்றியவர் ஓர் அரசப் புலவராக - புரவலராக இருக்கலாம் என்பதைப் புலப்படுத்த வல்லதாகும். ஏனெனில் வரிசைக்கு வருந்தும் பரிசில் வாழ்க்கை நடத்தும் ஒரு புலவரிடம் இருந்து தலைமைப் பண்பு சுடர்விட்டு நிற்கும் இத்தகையதொரு கூற்று பிறப்பதற்கு வாய்ப்பு இல்லை எனலாம்.

பெண் மொழியில் அமைந்த பாடல்:-

குறுந்தொகை 157ம் பாடல் அள்ளூர் நன்முல்லையார் என்ற பெண்பாற் புலவர் பாடியது. "பூப்பெய்திய தலைமகள் உரைத்தது" என்னும் துறையில் அமைந்தது. அப்பாடல் வருமாறு:

"குக்கூ என்றது கோழி அதன்எதிர்
 துட்கென் றன்றுஎன் தூய நெஞ்சம்
 தோள்தோய் காதலர்ப் பிரிக்கும்
 வாள்போல் வைகறை வந்தன்றால் எனவே"

கோழி குக்கூ என்று கூவியது. அதற்கு நேரே எனது தோளை மணந்த தலைவரைப் பிரியச் செய்யும் வாளைப் போல விடியற்பொழுது வந்தது. எனது மாசற்ற நெஞ்சம் தலைவரை இனிப் பிரிந்திருத்தல் வேண்டும் என்பதால் அச்சத்தை அடைந்தது எனப் பூப்பெய்திய தலைமகள் ஒருத்தி இங்கே தன் உள்ளத்து உணர்வை வெளியிடுகிறாள். இன்று பெண்ணியத் திறனாய்வில் பரவலாகப் பேசப்படும் பெண் மொழிக்கு முன்னோடியாக அள்ளூர் நன்முல்லையாரின் இக்குறுந்தொகைப் பாடலை எண்ணிப் பார்க்கலாம்.

பூப்பு என்பது ஒரு பெண்ணுக்கே உரிய தனி அனுபவம். இதனை ஒரு பெண்பாற் புலவரே,

  • திட்பமாகவும்,
  • நுட்பமாகவும்,
  • ஒட்பமாகவும்

வெளியிட முடியும். பூப்பு தலைமகள் உள்ளத்தில் ஏற்படுத்திய அச்ச உணர்வை அள்ளூர் நன்முல்லையார் இப்பாடலில் அழகுற வெளிப்படுத்தியுள்ளார். "துட்கென்றன்று தூய நெஞ்சம்", "தோள் தோய் காதலர்", "வாள் போல் வைகறை வந்தன்று" - பெண்பாற் புலவர் ஒருவராலேயே இங்ஙனம் மொழியைக் கையாள முடியும்; உணர்வைப் புலப்படுத்த இயலும்.

உவமை வெளிப்படுத்தும் ஆளுமைப் பண்பு:-

 
கபிலர் குறிஞ்சித் திணையைப் பாடுவதில் மிக்க திறமை வாய்ந்தவர்; வேள் பாரியின் கெழுதகை நண்பர்.
  • பாரி
  • ஓரி
  • நள்ளி
  • அகுதை
  • இருங்கோவேள்
  • விச்சிக்கோன்
  • மலையன்
  • சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதன்
  • சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
  • மலையமான் திருமுடிக்காரி
  • வையாவிக் கோப்பெரும் பேகன்
என இவரால் பாடப்பெற்ற மன்னர்கள் பலர் ஆவார்.
  • நட்பு
  • வண்மை
  • நன்றி மறவாமை

முதலான உயர்ப்பண்புகளும், அறக்கருத்துகளும், விழுமியங்களும் கபிலரின் பாடல்களில் மிகுந்து காணப்படுவதற்கு மன்னர்கள் பலரோடு கபிலர் கொண்டிருந்த தனிப்பட்ட நெருங்கிய தொடர்பே அடிப்படையான காரணம் ஆகும். குறுந்தொகை 225ம் பாடலில்,

"கெட்ட இடத்து உவந்த உதவி கட்டில்
 வீறுபெற்று மறந்த மன்னன் போல
 நன்றிமறந்து அமையாய் ஆயின்..."

எனக் கபிலர் கையாண்டிருக்கும் உவமை இவ்வகையில் நினைவுகூரத்தக்கதாகும். "தான் வறுமையுற்ற காலத்துப் பிறரால் பெற்று மகிழ்ந்த உதவியை, அரசுக் கட்டிலாகிய சிறப்பைப் பெற்றதும் மறந்துவிட்ட அரசனைப் போல," என்னும் உவமையில் கபிலரின் பரந்து பட்ட அரசியல் அனுபவம் பளிச்சிடுவது கண்கூடு. கபிலரின் அகப்பாடல்களை ஆழ்ந்து கற்றால் இன்னும் இது போல் பற்பல ஆளுமைப் பதிவுகளைக் கண்டுகொள்ளக் கூடும்.
 
பேராசிரியர் இரா.மோகன்

Narayanan Kannan

unread,
Sep 13, 2008, 7:49:47 PM9/13/08
to minT...@googlegroups.com
2008/9/14 Kannan Natarajan <thar...@gmail.com>:

> இப்பாடலில் இடம்பெற்றுள்ள "என் துறந்து இரவலர் வாரா வைகல் பலவாகுக" என்னும்
> கூற்று, இப்பாடலை இயற்றியவர் ஓர் அரசப் புலவராக - புரவலராக இருக்கலாம் என்பதைப்
>

இரத்தல் என்பது பெரிய விஷயமாக தமிழ் உளவியலில் உள்ளது என்பது இங்கு வரும்
சங்க இடுகைகளிலிருந்து தெளிவாய் தெரிகிறது. இரந்து உண்பார் உளரேல் பரந்து
கெடுக உலகு இயற்றியான் என்று ஒரு புறம்! இரவலர் வாரா வைகல் பலவாகுக!
என்று சாபம் ஒரு புறம்!

தமிழர்கள் பொருளாதார சமம் கொண்ட சமுதாயத்தை உருவாக்க அன்றிலிருந்து
முயலவில்லை என்று தெரிகிறது. கன்மவினை பாற்பட்ட ஏற்றத்தாழ்வுகளை அப்படியே
ஏற்றுக் கொண்டுள்ளனர் என்பது தெளிவு!

> "குக்கூ என்றது கோழி அதன்எதிர்
> துட்கென் றன்றுஎன் தூய நெஞ்சம்
> தோள்தோய் காதலர்ப் பிரிக்கும்
> வாள்போல் வைகறை வந்தன்றால் எனவே"
>

குக்கூ என்றது கோழி!! ஆகா! சினிமாத் தலைப்பு!

வாள்போல் வைகறை வந்த சொல்லாட்சி திருவாய்மொழியிலும் வருகிறது.


> பூப்பு என்பது ஒரு பெண்ணுக்கே உரிய தனி அனுபவம். இதனை ஒரு பெண்பாற் புலவரே,
>
> திட்பமாகவும்,
> நுட்பமாகவும்,
> ஒட்பமாகவும்
>
> வெளியிட முடியும். பூப்பு தலைமகள் உள்ளத்தில் ஏற்படுத்திய அச்ச உணர்வை அள்ளூர்
> நன்முல்லையார் இப்பாடலில் அழகுற வெளிப்படுத்தியுள்ளார். "துட்கென்றன்று தூய
> நெஞ்சம்", "தோள் தோய் காதலர்", "வாள் போல் வைகறை வந்தன்று" - பெண்பாற்
> புலவர் ஒருவராலேயே இங்ஙனம் மொழியைக் கையாள முடியும்; உணர்வைப் புலப்படுத்த
> இயலும்.
>


இங்கு பேசப்படுவது premarital sex தானே?

க.>

வேந்தன் அரசு

unread,
Sep 13, 2008, 7:53:08 PM9/13/08
to minT...@googlegroups.com


2008/9/13 Narayanan Kannan nka...@gmail.com



 
இங்கு பேசப்படுவது premarital sex தானே?

க.>
 
 
 துட்கென் றன்றுஎன் தூய நெஞ்சம்
 

Kannan Natarajan

unread,
Sep 20, 2008, 5:32:42 PM9/20/08
to minT...@googlegroups.com

தோழிக்காக வருந்தும் தலைவி!

சங்க இலக்கிய அகத்திணைப் பாடல்களில்,
  • தலைவன்
  • தலைவி
  • தோழி
  • செவிலி
  • நற்றாய்
  • பரத்தை
  • பாங்கன்
எனப் பலர் வந்து செல்கின்றனர் எனினும் அப்பாடல்கள் அனைத்தும்,
  • தலைவன்
  • தலைவி
  • தோழி

என்ற மூவரையும் மையமிட்டே பாடப்பட்டுள்ளன. தலைவனின் மனப் பிரதிபலிப்பாக அவனைத் தவிர வேறு யாரும் பாடல்களில் படைத்துக் காட்டப்படவில்லை. பாங்கனிடம் தலைவன் பேசுவது போன்ற பாடல்கள் உள்ளன. என்றாலும் அப்பாங்கனும் தலைவனின் முழு பிரதிபலிப்பன்று. ஆனால், தலைவியின் மனப் பிரதிபலிப்பாகத் தோழி என்ற பாத்திரம் படைத்துக் காட்டப்பட்டுள்ளது. அனைத்துப் பாடல்களிலும் தலைமக்களின் உணர்வுகள்தான் பேசப்பட்டுள்ளன. ஆயினும் அகத்திணையில் தோழி கூற்றுப் பாடல்களே மிகுதியாக உள்ளன.

பத்துப்பாட்டில் குறிஞ்சிப்பாட்டு தோழி கூற்றாக அமையும் நீண்ட பாடலாகும்.
 
தலைவியின்
  • களவு வாழ்க்கை
  • கற்பு வாழ்க்கை
என்ற இரு நிலையிலும் தோழியின் துணை இன்றியமையாததாக உள்ளது.
  • கையுறை மறுத்தல்/ஏற்றல்
  • பகல்குறி மறுத்து இரவுக்குறி வேண்டல்
  • இரண்டையும் மறுத்து விரைவு வேண்டல்
  • அறத்தொடு நிற்றல்
  • வாயில் மறுத்தல் - ஏற்றல்
  • உறுதிப் பொருள் உரைத்தல்
  • உடன் போக்கிற்கு உதவுதல்

எனப் பல்வேறு நிலைகளில் தலைவியின் மனசாட்சியாகத் தோழி விளங்குகிறாள்.

போருக்கோ, பொருளுக்கோ சென்ற தலைவன் வரவில்லை என்றால் தலைவியை ஆற்றுவிக்கும் மிகப்பெரிய பொறுப்பு தோழியுடையது. தலைவன் வருவதாகச் சொன்ன கார்காலம் வந்து தலைவிக்கு அவன் வரவைச் சுட்டிக்காட்ட, தலைவிக்காக அந்த இயற்கை நிகழ்வையே பொய்யென்று உரைக்கும் தோழியைச் சங்க இலக்கிய அகப்பாடல் முழுவதிலும் காணலாம். தலைவி உணவு உண்ணவில்லை என்றாலோ, உடல் மெலிந்தாலோ, காப்பு மிகுதியால் வருந்தினாலோ முதலில் வருத்தப்படுவது தோழிதான். தலைவிக்காக வாழ்ந்த பாத்திரமாகத்தான் தோழி சங்க இலக்கியத்துள் படைக்கப்பட்டுள்ளாள்.

இப்படி, தலைவிக்காகவே வாழ்ந்த தோழிக்காக, அவளது உணர்வுகளுக்காக யாராவது வருத்தப்பட்டிருக்கிறார்களா என்று பார்த்தால், ஏறக்குறைய இல்லை என்றே கூறலாம். அரிதாகத் தோழிக்காக வருந்தும் தலைவி கூற்றுப்பாடல் ஒன்று குறுந்தொகையில் உள்ளது (பா.224). அப்பாடலில் தலைவி பின்வருமாறு பேசுகிறாள்.

"கிணற்றினுள்ளே விழுந்த குரால் நிறப்பசு படும் துன்பத்தை இரவுப் பொழுதில் கண்ட ஊமையன், அதைப் பிறருக்கு எடுத்துக்கூற முடியாமல் துன்புறுவது போல, என் பொருட்டுத் தோழிபடும் துயரத்தை ஆற்ற இயலாமல் தவிக்கிறேன். இது, யாமரங்கள் உள்ள நீண்ட பாலை வழியில் சென்ற தலைவரது கொடுமையை நினைத்து தூங்காதிருக்கும் துன்பத்தைவிடவும் மிக்க துன்பம் உடையதாக இருக்கிறது," என்பது தலைவி கூற்றாகும்.

 
கவலை யாத்த அவல நீள்இடைச்
சென்றோர் கொடுமை எற்றித் துஞ்சா
நோயினும் நோய்ஆ கின்றே கூவல்
குரால்ஆன் படுதுயர் இராவிற் கண்ட
உயர்திணை ஊமன் போலத்
துயர் பொறுக் கல்லேன் தோழி நோய்க்கே. (குறு. 224)
 
என்பது மேற்சுட்டிய பொருள் கொண்ட பாடலாகும்.

தனக்கு இனிய பசு கிணற்றில் விழுந்துவிட, இரவில் கண்ட ஊமையன் அதைக் காப்பாற்ற முடியாமல் வருந்துவது போலத் தோழியும் இரவில் நான் விரகக் குழியில் வீழ்ந்து வருந்துவதைக் கண்டு என்னை ஆற்றவும், என்னைப் பற்றிப் பிறருக்கு உரைக்கவும் முடியாமல் கலங்கும் அவளது நோய்க்காக நான் வருந்துகிறேன் என்ற பொருளில் இப்பாடல் அமைந்திருப்பதாக இரா.இராகவையங்கார் குறிப்பிட்டுள்ளார்.

இப்பாடலில் தோழியின் வருத்தத்திற்காக நான் வருந்துகிறேன் என்று மட்டும் சொல்லியிருந்தால், தலைவியின் மன ஓட்டம் இயல்பானதாக இருந்திருக்கும். ஆனால் அவள், நீண்ட பாலை வழியிலே சென்ற தலைவன் உண்டாக்கிய வருத்தத்தைவிட தோழியால் எனக்கு ஏற்பட்ட வருத்தம் மிகப் பெரியது என்பதுதான் இப்பாடலுக்கு அழுத்தம் கொடுப்பதாக உள்ளது.

மற்றொன்று, இப்பாடலில் கையாளப்பட்டிருக்கும் உவமை. "இரவில் கிணற்றில் விழுந்த பசுவைக் கண்ட ஊமையன் நிலையோடு தன் நிலையை ஒப்பிடுவதாகும்." இவ்வாறான உவமை, தலைவன், தலைவியர் நிலை பற்றி உரைக்கும் உவமையாகும். சான்றாக, பாறையின் மீது ஞாயிறு காயும் வெண்ணெயைக் கை இல்லாத, வாய் பேச முடியாத ஊமையன் கண்ணில் மட்டுமே பார்த்து வருந்தவதுபோல என் காதல் நோயை நானும் ஆற்றிக்கொள்ள முடியாமல், வெளியில் சொல்லவும் முடியாமல் தவிக்கிறேன் என்று கூறும் தலைவனைக் குறுந்தொகையில் உள்ள ஒரு பாடலில் காண முடிகிறது.

 
ஞாயிறு காயும் வெவ்அறை மருங்கில்

கைஇல் ஊமன் கண்ணில் காக்கும்

வெண்ணெய் உணங்கல் போலத்

பரந்தன்று இந்நோய் நோன்று கொளற்கு அரிதே.

என்பது அக்குறுந்தொகைப் பாடலாகும்.

ஏறக்குறைய இதே உவமை போன்றுதான் முன்சுட்டிய பாடலில் உவமையும் உள்ளது. தலைவனோ, தலைவியோ மற்றொருவரைப் பிரிந்து படும் துயரத்தைப் போன்றுதான் தோழியால் ஏற்படும் என் துயரமும் என்று தலைவி இப்பாடலில் குறிப்பிடுகின்றாள். இன்னும் கூட அவன் ஏற்படுத்திய வருத்தத்தை விட இவள்படும் துயர் வருத்தத்திற்குரியது என உயர்த்திப் பேசுகிறாள்.

 
சங்க இலக்கியத்துள் தோழியர் உணர்வுகள் எடுத்துரைக்கப் பெறா நிலையில் தலைவி, மேற்கண்ட பாடலில் அவளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் தலைவனுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தோடு ஒருபடி மேல் வைத்துப் பேசி இருப்பது கவனிக்கத் தக்கதாகும்.
 
முனைவர் அ.செல்வராசு

Narayanan Kannan

unread,
Sep 20, 2008, 7:23:21 PM9/20/08
to minT...@googlegroups.com
நன்றி கண்ணன்.

இதே அகத்திணை உவமையை ஆழ்வார் எப்படிக் கையாள்கிறார் என்று பார்ப்போம்:

சேமமே வேண்டித் தீவினை பெருக்கித்
தெரிவைமார் உருவமே மருவி
ஊமனார் கண்ட கனவிலும் பழுதாய்
ஒழிந்தன கழிந்அந் நாள்கள்
காமனார் தாதை நம்முடை யடிகள்
தம்மடைந் தார்மனத் திருப்பார்
நாமம்நா னுய்ய நான் கண்டு கொண்டேன்
நாராயணாவென்னும் நாமம்

உடற் சுகம் வேண்டி பல்வேறு பெண்டிர் பின் அலைந்து கழித்த நாட்களை ஒருவன்
மற்றவரிடம் சொல்ல முடியுமோ? முடியாது. அது ஊமை கண்ட கனவு என்கிறார்
திருமங்கை ஆழ்வார். சரி! அக்கனவாவது உருப்படியான கனவாக இருக்கக்கூடாதோ?
அதுவொரு nightmare! யாரிடமாவது சொன்னால் ஆற்றுப்படும். அதை ஊமையனால்
எப்படிச் சொல்ல முடியும்? இதனைச் "சேமமே வேண்டித் தீவினை பெருக்கி" என்று
சுட்டுகிறார் ஆழ்வார். எப்படி! ஊமை கண்ட பழுதான கனவு போல் நம் வாழ்வு
செல்கிறது பாருங்கள்.

ஆனாலும் இதற்கும் ஒரு மாற்று உண்டு என்கிறார். தன்னை அடைந்தார் மனத்தைத்
திருத்தி நல்லுய்யப்பண்ணும் ஒரு நாமம் உண்டு. அதுதான் "நாராயணா! எனும்
நாமம் என்று சொல்கிறார்.

சங்கத்தின் எதிரொலி எப்போதும் தமிழகத்தில் கேட்ட வண்ணமே உள்ளது!

வாழ்க.

கண்ணன்

2008/9/21 Kannan Natarajan <thar...@gmail.com>:

வேந்தன் அரசு

unread,
Sep 20, 2008, 8:47:36 PM9/20/08
to minT...@googlegroups.com
>துயர் பொறுக் கல்லேன் தோழி நோய்க்கே. (குறு. 224)
 
துயர் பொறுக்கல்லேன், தோழி!, நோய்க்கே.
 
தோழி! விளி வேற்றுமையாகவும் இருக்கலாமே?

வேந்தன் அரசு

unread,
Sep 20, 2008, 8:50:05 PM9/20/08
to minT...@googlegroups.com


2008/9/20 Narayanan Kannan <nka...@gmail.com>

நன்றி கண்ணன்.

இதே அகத்திணை உவமையை ஆழ்வார் எப்படிக் கையாள்கிறார் என்று பார்ப்போம்:

சேமமே வேண்டித் தீவினை பெருக்கித்
 தெரிவைமார் உருவமே மருவி
திருமங்கை ஆழ்வார் திருதெரிவை ஆள்வாராய் இருந்தாரோ?

Narayanan Kannan

unread,
Sep 20, 2008, 11:05:06 PM9/20/08
to minT...@googlegroups.com
>
> திருமங்கை ஆழ்வார் திருதெரிவை ஆள்வாராய் இருந்தாரோ?
>

ஐயோ பாவம் ;-)

அவரொரு குறுநில மன்னன், சோழ சாம்ராஜ்ஜியத்தில். அக்காலத்தில்
அரசர்களுக்கு எல்லாம் கையெட்டும் தூரத்தில்தான். தெரியவையரும் அதில்
அடக்கம்தான்.

ஆயினும் குருபரம்பரைக் கதைகள் இவரைப்பற்றி அப்படிச் சொல்லவில்லை.
குமதவல்லி என்னும் பேரழகிக்காக காலமெல்லாம் கிடந்து மணம் செய்து
வாழ்ந்தவர் திருமங்கை மன்னன். ஆனால் பூவையருக்காக மயங்கிக் கிடந்தவர்
தொண்டரடியாழ்வார். இவர்கள் சமகாலத்தவர்.

லௌகீக விஷயங்களைப்பற்றி ஆழ்வார்கள் பேசும் போது கவனமாகப் பொருள் கொள்ள
வேண்டியிருக்கிறது. ஏனெனில் நம்மாழ்வார் கட்டை பிரம்மச்சாரி.
பொந்துக்குள்ளே கிடந்த 'சடம் + கோபன்' அது. ஆனால் அத்தனை பாடல்களும்
காதல் ரசம் சொட்டும் அகத்திணைப் பாடல்கள். எப்படி?

கதாசிரியன் என்றளவில் எனக்குத் தோன்றுவது என்னவெனில், ஒரு
இலக்கியவாதியின் படைப்பில் பலரது அனுபவங்கள் தன் அனுபவமாக இடம் பெறும்.
அதுவொரு இலக்கிய உத்தி. நான் ஒருமுறை மருத்துவச்சி என்றொரு கதை
எழுதினேன். அதில் 'நான்' என்றுதான் வரும். யார் அந்த நான்? அதன் பால்
என்ன என்று வெளிப்படையாகத் தெரியாது. கதைக்குப் படம் போட்டவர் என்னைப்
பெண்ணாக வரைந்திருந்தார் ;-)

கண்ணன்

Reply all
Reply to author
Forward
0 new messages