(வெருளி நோய்கள் 1021-1025: தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 1026-1030
சிதை பொருள்(decaying matter) குறித்த வரம்பற்ற பேரச்சம் சிதை பொருள் வெருளி.
அழுகும் பொருள்களால் ஏற்படும் தீய நாற்றம்,நோய் முதலியவற்றால் பேரச்சம் கொள்வர்.
sep என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் சிதைவு/அழுகிப்போதல்.
00
குழந்தை உருச்சிதைந்து பிறக்கும், கோரமாகப் பிறக்கும், அருவருப்பான தோற்றத்தில் பிறக்கும் என்றெல்லாம் குழந்தைப் பிறப்பு குறித்து அளவுகடந்த தேவையற்ற பேரச்சம் கொள்வது சிதைவுரு வெருளி.
இது மகப்பேறு வெருளியுடன் (Lockiophobia/Tokophobia/Tocophobia/ Maieusiophobia/ Parturiphobia தொடர்புடையது.
பழங்கிரேக்கத்தில் téras என்றால் கோர உரு எனப் பொருள். இச்சொல்லில் இருந்து பிறந்த terato என்றால் பிறப்புக் குறைபாடுடைய எனப் பொருள்.
காண்க: அசுரன் வெருளி – Teratophobia(1)
00
சிந்தை/சிந்தனை குறித்த அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் சிந்தனை வெருளி.
சிந்தனை வளர்ச்சியே மக்கள் வளர்ச்சிக்கு அடையாளம். இதை அறிந்திருந்தாலும் சிந்தனை, கருத்துகள் முதலான வற்றின் மீது வெறுப்பு கொள்வோர் உள்ளனர். அறிவியல் சிந்தனையை இறைநெறிக்கு எதிராகக் கருதி எதிர்ப்போர் காலங்காலமாக உள்ளனர். சிலர் தொழிலாளர் முன்னேற்றம் தொடர்பான கருத்துகளை வெறுப்பவர்களாகவும் மற்றும் சிலர் முதலாளிகள் நலன் சார்ந்த கருத்துகளை வெறுப்பவர்களாகவும் உள்ளனர். சிலருக்கு மத வெறி, இன வெறிக் கருத்துகள் பிடிக்கா. இத்தகையோர் கருத்துகளை அழிவின் அடையாளமாகப் பார்த்துப் பேரச்சம் கொள்வர். தமிழின் சிறப்பைக் கூறும் கருத்துகள், ஆரியத்தின் தவறான இல்லாச் சிறப்புக் கருத்துகளைப் படம் பிடித்துக்காட்டுவதால் இது கேட்டு எரிச்சலடைந்து வெறுப்பு கொள்வோரும் உள்ளனர்.
phron என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் சிந்தனை
00
சிப்பம் / பொதிவு கட்டுவது(packing) தொடர்பான பேரச்சம் சிப்ப வெருளி.
திம் இலிஃகோரோ (Tim Lihoreau) “இந்நோய் ஆடவருக்கே வரும். ஏனெனில் பெண்கள் இந்தப்பணிகளைப்பார்ப்பதில்லை” என்கிறார். இது தவறாகப்படுகிறது. துணிக்கடைகள், ஆயத்த உடை நிலையங்கள், மளிகைக்கடைகள், அஞ்சல் சிப்பப்பணி எனச் சிப்பம் கட்டும் பணி உள்ள எல்லா இடங்களிலும் பெண்கள் மிகுதியாக வேலை பார்ப்பதைப் பார்க்கிறோம். ஒருவேளை அவரது நாட்டில் அத்தகைய நிலை போலும்.
சிப்பம் கட்டும்பொழுது உள்ளடக்கத்தில் தவறான எண்ணிக்கை வைத்துவிட்டதாக அல்லது மொத்தம் முடித்த சிப்ப எண்ணிக்கையில் தவறிழைத்துவிட்டதாக இத்தகையோர் அஞ்சுவர்.
colliga என்னும் இலத்தீன் சொல்லின் பொருள்கள் கட்டு, சேர், திரட்டு என்பனவாகும்.
00
சிப்பி மீன் அல்லது தூண்டில் மீன் குறித்த தேவையற்ற பேரச்சம் சிப்பி வெருளி.
teuthis என்றால் பழங்கிரேக்கத்தில் சிறு சிப்பி எனப் பொருள்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5