சாதி ஆணவக் கொலைகளை தடுக்க சிறப்புச் சட்டம் ஏன் அவசியம்? — பெ.சண்முகம்

34 views
Skip to first unread message

தேமொழி

unread,
Aug 9, 2025, 7:56:47 PM8/9/25
to மின்தமிழ்
சாதி ஆணவக் கொலைகளை தடுக்க சிறப்புச் சட்டம் ஏன் அவசியம்?
— பெ.சண்முகம்
ஆகஸ்ட் 7, 2025
நன்றி: தீக்கதிர்

சாதி ஆணவக் கொலைகளை தடுக்க சிறப்புச் சட்டம் ஏன் அவசியம்?

மென்பொறியாளர் கவின் செல்வ கணேஷ் அவர்களின் படுகொலை மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் வேண்டுமென்பது விவாதப் பொருளாக மாறியுள்ளது. 

சாதி என்பது ஆதியில் இருந்ததல்ல! பாதியில் வந்தது.

பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும் - என்பது குறள். “சாதியாவது ஏதடா சலம் திரண்ட நீரலாம் பூதவாசல் ஒன்றலோ, பூதம் ஐந்தும் ஒன்றலோ? காதில்வாளி, காரை, கம்பி, பாடகம் பொன் ஒன்றலோ? சாதிபேதம் ஓதுகின்ற தன்மை என்ன தன்மையோ?” - என்பது சிவவாக்கியர் கேள்வி. யாதும் ஊரே யாவரும் கேளிர் - கணியன் பூங்குன்றனாரின் வைர வரிகள். “யாயும் ஞாயும் யாராகியரோ எந்தையும் நுந்தையும் எம்முறைக்கேளிர்  யானும் நீயும் எவ்வழி அறிதும் செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே -என்பது குறுந்தொகையின் அற்புதமான வரிகள். இருட்டறையில் உள்ளதடா உலகம் சாதி இருக்கின்றதென்பானும் இருக்கின்றானே - என்பது பிற்காலத்தில் பாரதிதாசன் அவர்கள் வெதும்பிச் சொன்னது. யாருமேல கீறினாலும் ரத்தம் ஒன்று தான் ஆக மொத்தம் நீயும் நானும் பத்துமாதம் தான்- என்றார் பட்டுக்கோட்டை. சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், கம்யூனிஸ்ட்டுகள், வள்ளலார், வைகுண்ட சாமிகள் என புரட்சியா ளர்களும், சமூக சீர்திருத்தவாதிகளும் சாதி ஒழிக்கப் பட வேண்டும் என்றும், சாதியப் பாகுபாடு, ஒடுக்கு முறைகளுக்கு எதிராகவும் தங்களின் வாழ்நாள்  முழுவதும் போராடியவர்கள். 

மேற்குறிப்பிட்டுள்ள மகத்தான மனிதர்களின் உழைப்பு விழலுக்கி றைத்த நீராகிவிட்டதோ என்று கருதும் வண்ணம் தற்காலத்தில் சாதிய அணி திரட்டலும் சாதி கெட்டிப்படுவதும் அதிகரித்துக் கொண்டுள்ளன. சாதிய அணி திரட்டலில்  தீவிரம் காட்டும் பாஜக தங்களின் அரசியல் சுயலாபத்திற்காக இத்தகைய சாதிய அணி திரட்டலில் பாரதிய ஜனதா கட்சி தீவிரம் காட்டி வருகிறது. அந்தந்த சாதி மக்களை சங்கமாக அணி திரட்டுவதும் பிறகு அரசியல் கட்சி யாக மாற்றி தேர்தல் மூலம் மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்புகளை எதிர்பார்த்து காத்திருப்பதும், வாய்ப்பு கிடைக்கும் போது தேர்ந்தெடுக்கப்படுவதும், அதை தக்க வைத்துக் கொள்வதற்காக தொடர்ந்து சாதியினரின் ‘ஒற்றுமையை’ காப்பதும் என தமிழ்நாட்டில் சாதிப் பிரிவினைகளை வலுப்படுத்தும் செயல்கள் தீவிர மாக நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு சாதியும் ஆண்ட பரம்பரை என்று பெருமை பேசுவதும், வெற்றுப் பெருமிதங்களை ஊதிப் பெரிதாக்கி “எப்படி இருந்த நாம் இப்படி ஆகிவிட்டோம்”; எனவே, சாதித் தூய்மையை காப்பாற்றுவது தான் ஆகப்பெரிய கடமை என கட்ட மைப்பதும், இவற்றையெல்லாம் ஏன், எதற்கு என்று  கேள்வி எழுப்பாமல், வீச்சரிவாளை கையில் ஏந்தி கொலை செய்து மற்றவர்களின் வாழ்க்கையை அழித்தொழிப்பது மட்டுமல்லாமல் தன்னுடைய வாழ்க்கையையும் அழித்துக் கொள்ளும் அவல நிலைமைக்கு உள்ளாகிறார்கள். 

எதிர்த்துக் களமாட முன்வாரீர்! எல்லா சாதியிலும் முற்போக்காளர்கள், ஜன நாயகவாதிகள் இருக்கிறார்கள் என்பதை நாம்  உணர்ந்தே இருக்கிறோம். இவர்கள் சாதிவெறி சக்தி களுக்கு எதிராக களமாட முன்வர வேண்டும். அரசியல் சாசனம் மக்களுக்கு வழங்கியுள்ள உரிமை களை நிலைநாட்ட முனைப்புக் காட்ட வேண்டும். வயது வந்த ஆணும் - பெண்ணும் தான் விரும்பிய வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்துக் கொள்வ தற்கான உரிமையை சட்டம் வழங்கியிருக்கிறது. அதைத் தடுப்பதற்கு பெற்றோருக்கே உரிமை இல்லாதபோது சாதிவெறி பிடித்த மற்றவர்கள் எப்படி தலையிட முடியும்? சாதியக் கட்டுப்பாடு என்ற பெயரில் சாதி வெறியர்கள் இதில் தலையிடுகிறார் கள். சாதி கெட்டவர்கள் என்று உற்றார் உறவினர்கள் தூற்றுவார்களே என்று பெற்றோர்களே பிள்ளை களைக் கொல்லும் கொடூரம் அரங்கேற்றப்படு கிறது. குற்றம் என்று தெரிந்தே இத்தகைய செய லில் ஈடுபடுகின்றனர். குடும்ப கௌரவத்தை காப் பாற்றுவது, சாதித் தூய்மையை காப்பது என்ற பெயரில் தான் இந்த கொடூரங்கள் நிகழ்த்தப்படுகின்றன. எனவே, இது பட்டியல் சாதி மக்களின் பிரச்சனை அல்ல; ஒட்டுமொத்த சமூகத்தின் பிரச்சனை என்பதை சுட்டிக்காட்டுகிறோம். 

சாதி மறுப்புத் திருமணங்களின் அவசியம் சனாதன, வர்ணாசிரமக் கருத்தியலும், சாதியக் கட்டமைப்பும் அக மணமுறையும் சாதியை நீடிக்கச் செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதை தகர்த்தெறிய வேண்டுமென்றால், சாதி மறுப்பு திரு மணங்கள் பெரும் எண்ணிக்கையில் நடைபெற வேண்டும். காதல் மூலம் தான் இது பெருமளவு சாத்தியமாகும். முற்போக்குவாதிகள், சமூக சீர்திருத்தவாதிகள் இத்தகைய திருமணங்களை தங்கள் குடும்பங்களில் நடத்திட முன்வர வேண்டும். சாதி மறுப்பு திருமணங்கள் செய்பவர்களுக்கு பாது காப்பு அரணாக விளங்க வேண்டும். இத்தகைய திருமணங்களை ஊக்குவிப்பதில் ஆட்சியாளர்க ளின் பங்களிப்பு முக்கியமானது. அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை, சட்டரீதியான பாதுகாப்பு, வாழ்க்கையை துவங்குவதற்கான நிதி உதவி போன்ற வகைகளில் அரசு உதவிட முடியும். மார்க்சிஸ்ட் கட்சியின்  தொடர் போராட்டம் சாதி ஆணவக் கொலைகளை தடுக்க தனிச் சட்டம் வேண்டுமென்று நீண்ட காலமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி வருகிறது. 2015ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்ட மன்றக்குழு தலைவராக இருந்த மூத்த தலைவர், அ.சவுந்தரராசன் அவர்கள் இதுகுறித்த தனிநபர் மசோதா ஒன்றை சட்டப்பேரவைத் தலைவரிடம் அளித்தார். பிறகு அது திருப்பி அனுப்பப்பட்டு விட்டது. தனிச் சட்டம் வேண்டும் என்ற கோரிக்கை யை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது. சாதியப் பாகுபாடு, சாதிய ஒடுக்குமுறை, தீண்டா மைக் கொடுமைகளுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சமரசமற்ற தொடர்ச்சியான போராட்டத் தையும், கருத்தியல் ரீதியான பிரச்சாரத்தையும் மேற்கொண்டு வருவதை தமிழ்நாட்டு மக்கள் அறி வார்கள். சாதியற்ற சமத்துவ சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற கொள்கை வழியில் நின்று இத்தகைய பணிகளை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி முன்னெடுத்து வருகிறது. 

ஏன் தனிச் சட்டம் வேண்டும்? 

பெற்றவர்களே தனது பிள்ளைகளை கொலை செய்கிறார்கள். பெற்றவர்கள் கூலிப்படையின் மூலம் தனது பிள்ளைகளை கொல்கிறார்கள். சாதிப் பஞ்சாயத்து கூடி கொலை செய்வது என்று தீர்மானித்து கொல்கிறார்கள். சகோதரியுடன் பட்டி யல் சாதி பையன் பேசினான் அல்லது காதலிக்கிறான் என்பதற்காக பெண்ணின் சகோதரர்கள் கொலை செய்வது அல்லது தற்கொலை செய்து கொள்ள கட்டாயப்படுத்துவது, மன ரீதியாக துன்புறுத்தி அதன் காரணமாக தற்கொலைக்கு காரணமாவது, சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களை கட்டாயப்படுத்தி பிரிப்பது, பட்டியல் சாதியை சார்ந்தவர்களின் பெற்றோர்களை மிரட்டுவது, அச்சுறுத்தி சாதி விலக்கம் செய்வது, இத்தகைய வழக்குகளை விசாரிக்கும் காவல்துறை அதி காரிகளை அச்சுறுத்துவது, காவல்துறை அதிகாரி களே இத்தகைய குற்றங்களுக்கு ஆதரவாக நடந்து கொள்வது, பாதுகாப்பு தரும் அமைப்பு களின் தலைவர்களை மிரட்டுவது, அலுவலகங்க ளை தாக்குவது, உடைமைகளை தீ வைத்து எரிப்பது, சூறையாடுவது என்று பல பரிமாணங்க ளை உள்ளடக்கியதாக சாதி ஆணவக் கொலை கள் நிகழ்த்தப்படுகின்றன. எனவே, குற்றவியல் சட்டங்களின் மூலம் மட்டும் இத்தகைய வழக்குகள் விசாரிக்கப்படும் போது இதற்கு காரணமான பலரும் தப்பித்து விடும் நிலை ஏற்படுகிறது. தமிழ்நாட்டில் இதற்கு ஏராளமான உதாரணங்கள் உண்டு. இத்த கைய கொலைகாரர்களுக்கும், தூண்டியவர்களுக் கும் கடும் தண்டனை, விரைவாக வழக்குகளை விசாரிப்பது, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும், நிவாரணமும், பாதுகாப்பும் கிடைக்கச் செய்வது என பலவிதமான அம்சங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த சட்டமாக இருக்க வேண்டும். 

நீதிமன்ற வழிகாட்டுதல்கள் ஏற்கனவே, “ராஜஸ்தான் திருமண இணைத் தெரிவு சுதந்திரத்தில் கௌரவம் மற்றும் பாரம் பரியம் என்ற பெயரில் குறுக்கிடுவதை தடுக்கும் சட்டம்” நடைமுறையில் இருக்கிறது. உச்சநீதி மன்றத்தில் சக்தி வாஹினி எதிர் மத்திய அரசு தொடர்பான வழக்கில் 27.03.2018இல் வழங்கிய தீர்ப்பு குறிப்பிடத்தக்கது. இந்த தீர்ப்பை நடை முறைப்படுத்தும் விதமாக மத்திய உள்துறை அமைச்சகம் 31.5.2018 அன்று அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் சுற்றறிக்கை  அனுப்பியது. ஆனால், இதுவும் நடைமுறைப்படுத் தப்படவில்லை. சென்னை உயர்நீதிமன்றம் விமலா தேவி கொலை தொடர்பான வழக்கில் 13.4.2016 அன்று வழங்கிய தீர்ப்பில் பல்வேறு வழிகாட்டுதல்களை மாநில அரசுக்கு வழங்கியது. இதுவும் முழுமையாக அமல்படுத்தாத நிலை. மேற்கண்ட அனைத்தையும் தொகுத்துப்பார்த்தால் “தனிச் சட்டம்” தேவை என்பதைத் தான் அழுத்தமாக வலி யுறுத்துகிறது. 

இந்திய அரசியல் சாசனம் குடிமக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை மறுக்கும் அல்லது பறிக்கும் வகையில் நடந்து கொள்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை. அடிப்படை உரிமை களை பாதுகாக்கும் வகையில் தேவையான புதிய சட்டங்களை இயற்றுவது தான் ஆட்சியாளர்களின் கடமை ஆகும். தாமதம் வேண்டாம் இது ஒரு சமூகப் பிரச்சனை என்ற முறையில் பொதுச்சமூகத்தில் இத்தகைய கொடுமைகளுக்கு எதிரான கருத்தை உருவாக்க வேண்டும்.  தமிழ் நாட்டின் முன்னேற்றம், வளர்ச்சி ஆகியவற்றோடு இணைந்த பிரச்சனை என்ற முறையில், அனை வரும் கட்சி வித்தியாசமில்லாமல் வலியுறுத்த வேண்டிய பிரச்சனை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது. எனவே, தமிழ்நாடு அரசு தாமதமில்லாமல் சாதி ஆணவக் கொலைகளை தடுப்பதற்கான சிறப்புச் சட்டம் ஒன்றை இயற்றுவதற்கு முன்வர வேண்டு மென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோருகிறது.

தேமொழி

unread,
Aug 9, 2025, 10:40:36 PM8/9/25
to மின்தமிழ்
Aadhavan Dheetchanya Speech.jpg

யாவரும் கேளிர் -
சாதி ஆணவக் கொலைகளைக் கண்டித்து
- ஆதவன் தீட்சண்யா அவர்களின் உரை
https://www.youtube.com/watch?v=08viMhWvZ-g

தேமொழி

unread,
Aug 10, 2025, 1:04:07 AM8/10/25
to மின்தமிழ்
sanna speaks.jpg
அண்ணலும்  நோக்கினான் அவளும் நோக்கினாள் என்றால் மட்டும் பிடிக்கிறதா?
- கௌதம சன்னா 

தேமொழி

unread,
Aug 10, 2025, 9:17:24 PM8/10/25
to மின்தமிழ்
iyan.jpg
யாவரும் கேளிர் : சாதிவெறியோடு சுத்தறாங்களே
— ஐயன் கார்த்திகேயன்
https://www.youtube.com/watch?v=RzH8hbhRnzM
Reply all
Reply to author
Forward
0 new messages