இன்னா நாற்பது குறிப்பிடும் இன்னாதவை

3,780 views
Skip to first unread message

தேமொழி

unread,
Aug 25, 2019, 12:30:12 AM8/25/19
to மின்தமிழ்

நன்றி சிறகு:   http://siragu.com/இன்னா-நாற்பது-குறிப்பிடு/

இன்னா நாற்பது குறிப்பிடும் இன்னாதவை

தேமொழி 

Aug 24, 2019

          சங்கம் மருவிய காலத்துப் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான 'இன்னா நாற்பது' என்பது மக்களை நல்வழிப்படுத்தும் அறவுரைகளை  40 வெண்பாக்களில்  வடித்துக்  கொடுக்கும் ஓர் சிறிய நூலாகும்.  இவற்றுடன் துவக்கத்தில் ஒரு கடவுள் வாழ்த்துப் பாடலும் உண்டு.  அப்பாடல் வைதிக சமயத்துக் கடவுளரான சிவன், பலராமன், திருமால், முருகன் ஆகிய கடவுளரைத் தொழவேண்டும் என்ற கருத்தை உரைக்கின்றது.  இப்பாடல் தவிர்த்து  இறை என்னும் பொருள் குறித்தவையாகவோ  இறைவழிபாடு, கடவுள், தெய்வம், இம்மை, மறுமை, ஆன்மா போன்ற சமயக் கருத்துக்களோ நூலெங்கிலும் காணப்படவில்லை.  கடவுள் வாழ்த்தைத் தவிர்த்து,  அறம்  வலியுறுத்தும் நோக்கம் கொண்ட  மற்ற 40 பாடல்களிலும் இறை நம்பிக்கை குறித்தும், நல்வழி நடத்தல் என்பதே மறுமையின் நல்வாழ்வுக்கு என்ற கருத்தும் காணப் பெறாததால் இக் கடவுள் வாழ்த்துப் பாடல் பிற்கால இடைச்செருகல் எனக் கருத வழியுண்டு.

          பதினெண்கீழ்க்கணக்கு  நூல்களில் 40 என்ற தொகை நூல்கள் என்ற சிறப்பைப் பெறுவன இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கார்நாற்பது, களவழி நாற்பது என்ற நான்கு நூல்கள் மட்டுமே. இவற்றுள் இன்னா நாற்பதும் இனியவை நாற்பதும் அறநூல்களாக மக்களை வாழ்வில் நெறிப்படுத்தும் கருத்துகளைக் கொண்டவை.  இன்னா நாற்பது வாழ்வில் எவையெவை  துன்பம் தருவன என்பவற்றை 'இன்னாதவை' எனக் குறிப்பிட்டுச் செல்கிறது. இன்னாதவை என்பவை பாடலின் பொருளுக்கேற்ப ‘இனிமையற்றவை' எனவோ அல்லது  ‘தகுதியற்றவை' எனவோ அல்லது 'பயனற்றவை' எனவோ பொருள் கொண்டு அமையும். இதற்கு மாறாக வாழ்வின் 'இனியவை' எவை என்று கூறி அறநெறியை வலியுறுத்துவது இனியவை நாற்பது.  இவையிரண்டையும் தவிர்த்து கார்நாற்பதும், களவழி நாற்பதும் முறையே தமிழுக்கே உரிய 'அகம்' 'புறம்' என்ற திணைகளைக்  கருப்பொருளாகக் கொண்டவை.

          இந்த நூலை  யாத்த புலவர் கபிலர் சங்க காலத்து மன்னனான பறம்பு மலையின் அரசன்  பாரி வள்ளலின் தோழராக அறியப்படும் கபிலர் அல்லர்.  இவர் அவருக்கும் பிற்காலத்தவர்.  ஆனால், இந்நூலுக்கு உரை எழுதிய ந. மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள் ‘புலனழுக்கற்ற அந்தணாளன்' என்று பாராட்டப்பட்ட சங்கப் புலவர் கபிலர் என்றே தனது உரைநூலின் முகவுரையில் எழுதியுள்ளார்.  தமிழ் இலக்கிய  வரலாற்றில் ஔவை என்ற பெயர்கொண்ட புலவர் பலர் வாழ்ந்தது போல, கபிலர் என்ற பெயரிலும் புலவர் பலர் இருந்தனர். இன்னா நாற்பது எழுதிய புலவர் கபிலர் சங்கம் மருவிய காலற்றவர் ஆவார்.

          ஒவ்வொரு இன்னா நாற்பது பாடலும் நான்கு  துன்பம் தரும் தவிர்க்கப்படவேண்டிய கருத்துகளை இன்னா என்று உரைக்கிறது. ஆகவே, 164 (41 X 4) துன்பம் தருவனவற்றைப் பட்டியலிடுகிறார் நூலின் ஆசிரியர் கபிலர்.  கடவுள் வாழ்த்து தவிர்த்து, இன்னா நாற்பது கூறும் 160 அறநெறிகளைத் தனிமனிதருக்குரியவை எனவும்,   அரசைக் குறித்துச் சொல்வன எனவும்,   பொதுவானவை எனவும் பகுத்தும் காணலாம். அன்புடைமை, அறமுடைமை, அறிவுடைமை, ஒழுக்கமுடைமை, பொருளுடைமை, நட்பு, கடப்பாடு, ஒப்புரவு  குறித்த அறநெறி அறிவுரைகளின் தொகுப்பு இந்த வெண்பாக்கள்.  'இன்னா' எனக் காட்டப்படும்  ஒவ்வொரு கருத்தும்  தவிர்க்கப்பட வேண்டியவையாக, 41 பாடல்களின் ஒவ்வொரு வரிகளின் இறுதியிலும் இடம் பெறுவதால்  நூலுக்கு  இன்னா நாற்பது என்ற பெயரையும் பெற்றுத் தந்துள்ளது.

          ஒரு சில கருத்துகள், குறிப்பாக யானைப்படையின் தேவை போன்ற கருத்துகள் இக்காலத்திற்குப் பொருந்தாமல் போகலாம். அவை அக்கால வரலாற்று நிலையையும் வாழ்வியல் முறையையும்  அறியத் தருகின்றன.  எக்காலத்திற்கும் பொருந்துவதாகும் அறநெறிகள் கூறப்பட்டுள்ளன. தனிமனித ஒழுக்க நெறியை வலியுறுத்தி சமூகத்தின் வாழ்வியலை மேம்படுத்த உதவும் கருத்துகள் இன்னா நாற்பது நூலில் பலவுண்டு. 

          அதற்கு எடுத்துக்காட்டாக, கீழ்க் காணும் இரு பாடல்களைக் குறிப்பிடலாம்.  இப்பாடல்கள் பள்ளி மாணவர்களுக்குரிய  மனனம் செய்யும் பாடல்களாகத் தேர்வு செய்ய வேண்டியவை எனலாம். 

          பெரியாரோடு யாத்த தொடர் விடுதல் இன்னா

          அரியவை செய்தும் என உரைத்தல் இன்னா

          பரியார்க்கு தாம் உற்ற கூற்று இன்னா இன்னா

          பெரியார்க்கு தீய செயல் [பாடல்: 26]

[பொருள்: பெரியவர்களுடன் கொண்ட உறவைத் துண்டித்துக் கொள்வது,  செய்தற்கரிய காரியங்களைச் செய்து உதவுவதாக வாக்களிப்பது,  பரிவு காட்டாதவரிடம்  சென்று தனது துயர் சொல்லிப் புலம்புவது,  பெரியவர்களுக்குத் தீங்கு செய்வது  ஆகியன துன்பம் தருவனவாம்.]

          தன்னைத்தான் போற்றாது ஒழுகுதல் நன்கு இன்னா

          முன்னை உரையார் புறமொழி கூற்று இன்னா

          நன்மை இலாளர் தொடர்பு இன்னா ஆங்கு இன்னா

          தொன்மை உடையார் கெடல் [பாடல்: 32]

[பொருள்: தனது வாழ்வையும் நலத்தையும் பேணாது வாழ்வது,  நேரடியாகக் கூறாமல் புறம் பேசுவது,  பண்பற்றவருடன் நட்பு கொள்வது,  வாழ்வாங்கு வாழ்ந்தவரின் நிலை தாழ்வது  ஆகியன துன்பம் தருவனவாம்.]

          ஒரு சில பாடல்கள் பொது அறிவு எனத் தெரிந்திருக்க வேண்டியவை என்பதிலும் அடங்கும். குறிப்பாகக் கீழ்க்காணும் பாடல், 

          நெடுமரம் நீள் கோட்டு உயர் பாய்தல் இன்னா

          கடும் சின வேழத்து எதிர் சேறல் இன்னா

          ஒடுங்கி அரவு உறையும் இல் இன்னா இன்னா

          கடும் புலி வாழும் அதர் [பாடல்: 30]

[பொருள்: நெடிதுயர்ந்த மரத்தின் உச்சியில் உள்ள நுனிக் கொம்பில் ஏறி கீழே குதிப்பது,  மதம் கொண்ட யானையின் முன் செல்வது, பாம்புப் புற்றில் கை நுழைப்பது, கொடிய புலி வாழும் காட்டிற்குச் செல்வது  ஆகியன துன்பம் தருவனவாம்.]

          உரை எழுதிய ந. மு. வேங்கடசாமி நாட்டார் இக்கருத்துகளுக்குப் பொருள் கூறுமிடத்து, " நெடுமர நீள் கோட்டுயர் பாய்தல் முதலிய நான்கற்கும், ஓட்டென்னும் அணிபற்றி, முறையே தம் வலியளவறியாது பெரிய வினைமேற் சேறலும், வலியார்க்கு மாறேற்றலும், உடம்பாடிலாத உட்பகையுடன் வாழ்தலும், பகைக்கெளியராம்படி நெறியலா நெறியிற்சேறலும் இன்னாவாமெனப் பொருள்கோடலும் பொருந்துமாறு காண்க"  (பக்கம்:  28)  என்று  இத்தகைய தன்மை கொண்ட மனிதர்களைத் தவிர்க்க வேண்டும் என்றோ தனது வலி அறிந்து செயல்பட வேண்டுமென்றோ பொருள் காணலாம் என்று கூறுகிறார். 

பொதுவாக நூலின் கருத்துகள்; 

          வித்தை கல்லாதவர்/தொழிற் பயிற்சி இல்லாதவர்  ஒரு செயலை செய்ய முற்படுதல் (திறன் இலான் செய்யும் வினை இன்னா - பாடல்: 38);

          திட்டமிடாமல் செயலில் இறங்குதல், (தறி அறியான் கீழ் நீர் பாய்ந்தாடுதல் இன்னா - பாடல்: 29)

          வெற்று வாக்குறுதிகள் வழங்குதல், (வல்லாதான் சொல்லும் உரையின் பயன் இன்னா - பாடல்:  28)

          கடமை தவறுதல், (ஈன்றாளை ஓம்பா விடல் இன்னா  - பாடல்: 17)

          தேவையான நேரத்தில் கிடைக்காத உதவிகள், (எருது இல் உழவர்க்கு போகு ஈரம் இன்னா - பாடல்: 4) 

போன்ற கருத்துகளை பல்வேறு கோணங்களில், பல்வேறு தொழில் செய்வோர் வழியாகவும், பல்வேறு சூழ்நிலைகளில் எடுத்துக்காட்டுகளுடன் காட்டுகின்றது என்றாலும் அடிப்படைக் கருத்தை இவ்வாறு தொகுக்கலாம். 

          சில கருத்துகள் கூறியது கூறல் முறையில் மீண்டும் மீண்டும் கூறப்பட்டுள்ளன, இது ஆசிரியர்  அக்கருத்தை வலியுறுத்துகிறார் எனவும் கூறப்படுகிறது.  எடுத்துக்காட்டாக இரண்டினைக் காட்டலாம்: 

வறுமை நிலையில் உள்ளவர் ஈகைக் குணத்துடன் இருப்பது துன்பம் தரும் என்பதை, 

          இடும்பை உடையார் கொடை இன்னா [பாடல்: 6]

          பொருள் இல்லார் வண்மை புரிவு இன்னா [பாடல்: 10]

          மான்று இருண்ட போழ்தின் வழங்கல் பெரிது இன்னா [பாடல்: 17]

          கொடுக்கும் பொருள் இல்லான் வள்ளன்மை இன்னா  [பாடல்: 39]

மேலுள்ள வரிகள் வெவ்வேறு முறையில் அதே கருத்தை உரைக்கின்றன. 

அவ்வாறே, அழகிய மலர் நறுமணத்துடன் இல்லாதிருப்பது பயனற்றது என்பதையும் காட்டலாம். 

          நாற்றம் இலாத மலரின் அழகு இன்னா [பாடல்: 7]

          நறிய மலர் பெரிது நாறாமை இன்னா [பாடல்: 37]

மேலுள்ள வரிகள் வெவ்வேறு முறையில் அதே கருத்தை உரைக்கின்றன. 

          மலருக்கு அழகிருந்தும் மணம்  இல்லாததால் பயனில்லை என்பதற்கு மாறாக மனிதர்களிடம் அழகு மட்டுமிருந்து தேவையான நல்ல பண்புகள் இல்லையென்றால் பயனில்லை என்ற கருத்துகளும் காணப்படுகின்றன. 

          பந்தம் இல்லாத மனையின் வனப்பு இன்னா  [பாடல்: 1]

          வண்மை இலாளர் வனப்பு இன்னா [பாடல்: 9]

          கண் இல் ஒருவன் வனப்பு இன்னா [பாடல்: 16]

          வளமை இலாளர் வனப்பு இன்னா [பாடல்: 27]

          அழகுடையான் பேதை எனல் இன்னா [பாடல்: 35]

அன்பு இல்லாதோர், உதவும் மனப்பான்மை இல்லாதோர், கருணை இல்லாதோர், செல்வம் இல்லாதோர், அறிவு இல்லாதோர் ஆகியோர் கொண்டிருக்கும் அழகால் பயனில்லை என்று நூல் கூறுகிறது. 

          நூல் ஆணின் கோணத்தில் எழுதப்பட்டுள்ளது.  இல்வாழ்வு குறித்த கருத்துகள் இடம் பெறுகையில் மனைவி எவ்வாறு இருக்க வேண்டும் என்றோ அல்லது பெண் எவ்வாறு இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால் ஒரு கணவனின் பண்பு நலன்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற கருத்துகளைக் காணமுடியவில்லை.  

          பந்தம் இல்லாத மனையின் வனப்பு இன்னா [பாடல்: 1]

          ஆர்த்த மனைவி அடங்காமை நற்கு இன்னா [பாடல்: 2]

          உடம்பாடு இல்லாத மனைவி தோள் இன்னா [பாடல்: 11]

          முலை இல்லாள் பெண்மை விழைவு இன்னா [பாடல்: 12]

          பிணி அன்னார் வாழும் மனை இன்னா [பாடல்: 13]

          வணர் ஒலி ஐம்பாலார் வஞ்சித்தல் இன்னா  [பாடல்: 14]

இக்குறிப்பிட்ட வரிகள் பெண்களிடம் என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்பதைக் காட்டுகின்றன. 

          நாலடியார் பழமொழி நானூறு போன்ற பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறள் கருத்துகள் தென்படுவது போல இன்னா நாற்பது நூலிலும் குறள் சொல்லும் கருத்துகளைக் காணமுடிகிறது. அவற்றைச்  சற்று விரிவாகவே காண்பதும்  பதினெண்கீழ்க்கணக்கு அறநூல்கள் முதன்மைப்படுத்திய அறங்களின் முக்கியத்துவத்தை அறிய உதவும். 

உதவிய நூல்கள்: 

கபிலர் இயற்றிய 'இன்னா நாற்பது'— நாவலர் ந. மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள்

உரை, 1925, திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு.

தமிழ் இணையக் கல்விக்கழகம் - பதிப்பு: 

http://www.tamilvu.org/library/l2400/html/l2400bod.htm 

இன்னா நாற்பது

http://www.tamilvu.org/courses/degree/c012/c0121/html/c012141.htm

இசையினியன்

unread,
Aug 26, 2019, 2:21:07 AM8/26/19
to மின்தமிழ்
நாற்றம் இலாத மலரின் அழகு இன்னா [பாடல்: 7]
நறிய மலர் பெரிது நாறாமை இன்னா; [பாடல்: 37]

இரண்டின் பொருளும் மாறுபடுகிறது,

முதல் பாடலில் மட்டுமே வாசனையையும், அழகையும் ஒப்பிடுகிறார்.
இரண்டாவது பாடலில் மலரின் புறத்தோற்றம் அழகை கூறப்படவில்லை, மாறாக "நறிய மலர்"; நறுமணம் கொடுக்கும் மலர், அதிக நறுமணம் கொடுக்காவிடில் அது இன்னா என்கிறார். இங்கு மலரின் அழகைப்பற்றி கூறவில்லை. நறுமணம் மட்டுமே வருகிறது.

நறிய = நறுமணம்.. என்றாகிறது.

தேமொழி

unread,
Aug 26, 2019, 2:41:32 AM8/26/19
to மின்தமிழ்

///

நறிய = நறுமணம்.. என்றாகிறது
///

http://www.tamilvu.org/slet/l2100/l2100pd1.jsp?bookid=36&auth_pub_id=40&pno=31#37

நறிய - நல்ல, அழகுடைய

நான் நூலிற் மேற் கூறியவாறு பொருள் கொண்டேன் இசையினியன்

இசையினியன்

unread,
Aug 26, 2019, 3:06:21 AM8/26/19
to மின்தமிழ்
நல்ல என்றும் பொருள் கொள்ளலாம் என்றே தோன்றுகிறது.... 

நற்றமிழ் => நல்ல தமிழ்
நற்குணம்
நற்கீரர்
நற்சமயம்
நற்சாளை
நற்சிலை
நற்மலர்
நற்கால்

ஆனால் ஆசிரியர் மேற்கட சொற்களை வைத்து மட்டும் பொருள் கொண்டு விட்டிரிப்பார் என்றே தோன்றுகிறது.
இய என்னும் விகுதி சேர்ந்ததும் பொருள் மாறி விடுகிறது என்று நினைக்கிறேன்...
நாறியமலர் => நறியமலர்
நெடில் => குறில்
--
நற்கால் => நாற்றங்கால்
குறில்=>நெடில்

இசையினியன்

unread,
Aug 26, 2019, 3:06:22 AM8/26/19

On Monday, 26 August 2019 12:11:32 UTC+5:30, தேமொழி wrote:

இசையினியன்

unread,
Aug 26, 2019, 3:22:32 AM8/26/19
to மின்தமிழ்
உண்மையில் ஆனால் இவ்வரிக்கான பொருள் என்ன? நல்ல மலரா? அல். வாசனை மலரா?

நறிய மலர் பெரிது நாறாமை இன்னா; [பாடல்: 37]

இப்படி பார்க்கலாம்,

நறிய மலர் ****** நாறாமை இன்னா; [பாடல்: 37]

பெரிது என்ற வார்த்தை இல்லாமல் இருந்தால்... அழகிய மலர் என்று பொருள் கொள்ளலாம்.. தகும்... ஆனால் உண்மையில் பெரிது நாறாமை சேர்த்தால்,

நறிய மலர் பெரிது நாறாமை இன்னா; [பாடல்: 37]

கவிஞரின் சிந்தனை என்ன என ஆராய்ந்தால், பெரிது என்ற சொல் வந்து இருப்பதால்... நறியமலர் என்றால் வாசனை மலர் என்றே பொருள் கொள்ள வேண்டும் எனத் தோன்றுகிறது... .

TVU தனது இணையத்தில் இங்கு http://www.tamilvu.org/slet/l2100/l2100pd1.jsp?bookid=36&auth_pub_id=40&pno=31#37, சரியான பொருளை இணையத்தில் ஏற்றவில்லை. மாற்ற வேண்டும்... அறிஞர் யாரேனும் TVU தொடபில் இருந்தால் பாடலுக்குரிய விளக்கத்தை மாற்றச் சொல்லுங்களேன்.

On Monday, 26 August 2019 12:11:32 UTC+5:30, தேமொழி wrote:

தேமொழி

unread,
Aug 26, 2019, 3:42:08 AM8/26/19
to மின்தமிழ்

On Monday, August 26, 2019 at 12:22:32 AM UTC-7, இசையினியன் wrote:
உண்மையில் ஆனால் இவ்வரிக்கான பொருள் என்ன? நல்ல மலரா? அல். வாசனை மலரா?

நறிய மலர் பெரிது நாறாமை இன்னா; [பாடல்: 37]

இப்படி பார்க்கலாம்,

நறிய மலர் ****** நாறாமை இன்னா; [பாடல்: 37]

பெரிது என்ற வார்த்தை இல்லாமல் இருந்தால்... அழகிய மலர் என்று பொருள் கொள்ளலாம்.. தகும்... ஆனால் உண்மையில் பெரிது நாறாமை சேர்த்தால்,

நறிய மலர் பெரிது நாறாமை இன்னா; [பாடல்: 37]

கவிஞரின் சிந்தனை என்ன என ஆராய்ந்தால், பெரிது என்ற சொல் வந்து இருப்பதால்... நறியமலர் என்றால் வாசனை மலர் என்றே பொருள் கொள்ள வேண்டும் எனத் தோன்றுகிறது... .

TVU தனது இணையத்தில் இங்கு http://www.tamilvu.org/slet/l2100/l2100pd1.jsp?bookid=36&auth_pub_id=40&pno=31#37, சரியான பொருளை இணையத்தில் ஏற்றவில்லை. மாற்ற வேண்டும்... அறிஞர் யாரேனும் TVU தொடபில் இருந்தால் பாடலுக்குரிய விளக்கத்தை மாற்றச் சொல்லுங்களேன்.

இசையினியன் !!!  

நாவலர் ந. மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள் எழுதிய உரையை யாராலும் திருத்த இயலாது.  

மேலும், 
நறியவும் உளவோ நீயறியும் பூவே   என்பது போல  
(நீங்கள் குறிப்பிட்ட)  வழியில் பொருள் கொள்வது பாடல்  வரியில் முரண் கொண்டுவருமே !!!

நறிய மலர் பெரிது நாறாமை இன்னா

நறுமணம் கொண்ட மலர் பெரிதும்  மணம் தராவிட்டால் பயனில்லை.  

?

unread,
Aug 26, 2019, 7:51:42 AM8/26/19
to Mintamil, isaiyini
அதில் என்ன முரண் எனத் தெளிய முடியவில்லை...

நறுமணம் கொண்ட பூ என்றால் அப்படியே மூக்கைத் துளைத்து எடுக்க வேண்டும் என்கிறார்...சும்மா போய் நுகர்ந்து மட்டுமே வாசனையை அறிந்து கொள்ள முடியாதபடி இருக்க வேண்டும் என்கிறார்...

அந்த வகையில் மஞ்சணத்தி பூவைக்கூறலாம்... பன்னீர் மரத்தைக் குறிக்கலாம்... நாமாச் சென்று நுகர வேண்டியதில்லை, அந்த வழியில் நடந்து சென்றாலே நாம் உணர்ந்து விட முடியும். மேலும் ஆண் பப்பாளி மர poovin மனத்தையும் கூட கூறிடலாம்.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/KxGfe6K_8cY/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/0fa750a6-2c3e-4312-8717-b01b78d2f950%40googlegroups.com.

?

unread,
Aug 26, 2019, 8:11:35 AM8/26/19
to Mintamil
சிறப்பு, குறுந்தொகையிலும் இவ்வார்த்தை உள்ளது. நினைவு செய்தமைக்கு நன்றிகள்.

// நறிய மலர் பெரிது நாறாமை இன்னா
// நறியவும் உளவோ நீயறியும் பூவே

இரண்டுமே ஒன்றாகத்தானே தெரிகிறது... 

நறியவும் = நறுமணம் வீசுவதும்
உளவோ = உள்ளதோ?
நீயறியும் பூவே = என அறிவாயோ மலரே...

மேலே உள்ள சொல்லிலும் நறிய = நறுமணம்
கீழே உள்ள சொல்லிலும் நறியவும் = நறுமணமும்

இரண்டுமே ஒரே பொருள்தான்...

மதுரையிலே தமிழ் வளர்த்த இறையனார் சும்மாவா? பாடல் எழுதி இருப்பார்? தவறான பொருளில் கூட தவறு என புள்ளி வைத்து இருக்கிறார் எனக்குத் தெரிகிறது. நான் கூறுவது இந்த வரியிலயே, குறுந்தொகைப் பாடலின் மீதி பொருள் தவறு எனும் புள்ளி தெரிவதைக் கூறுகிறேன்.

// நறியவும் உளவோ நீயறியும் பூவே
இந்த வரியில் உள்ள, அந்தப் புள்ளி நர்கிரருக்கு மட்டுமே தெரிந்ததாக வரலாறு...

On Mon, 26 Aug 2019 at 13:12, தேமொழி <jsthe...@gmail.com> wrote:
--

S. Jayabarathan

unread,
Aug 26, 2019, 8:13:48 AM8/26/19
to mintamil

 /////சங்கம் மருவிய காலத்துப் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான 'இன்னா நாற்பது' என்பது மக்களை நல்வழிப்படுத்தும் அறவுரைகளை  40 வெண்பாக்களில்  வடித்துக்  கொடுக்கும் ஓர் சிறிய நூலாகும்.  இவற்றுடன் துவக்கத்தில் ஒரு கடவுள் வாழ்த்துப் பாடலும் உண்டு.  அப்பாடல் வைதிக சமயத்துக் கடவுளரான சிவன், பலராமன், திருமால், முருகன் ஆகிய கடவுளரைத் தொழவேண்டும் என்ற கருத்தை உரைக்கின்றது.  இப்பாடல் தவிர்த்து  இறை என்னும் பொருள் குறித்தவையாகவோ  இறைவழிபாடு, கடவுள், தெய்வம், இம்மை, மறுமை, ஆன்மா போன்ற சமயக் கருத்துக்களோ நூலெங்கிலும் காணப் படவில்லை.  கடவுள் வாழ்த்தைத் தவிர்த்து,  அறம்  வலியுறுத்தும் நோக்கம் கொண்ட  மற்ற 40 பாடல்களிலும் இறை நம்பிக்கை குறித்தும், நல்வழி நடத்தல் என்பதே மறுமையின் நல்வாழ்வுக்கு என்ற கருத்தும் காணப் பெறாததால் இக் கடவுள் வாழ்த்துப் பாடல் பிற்கால இடைச்செருகல் எனக் கருத வழியுண்டு.///

தமிழ் இலக்கியங்களில் "இறைவழிபாடு" இல்லாத நூல்கள் உள்ளனவா ?  இவற்றைத் தேடிக்
காட்டுவதால் யாருக்கு என்ன பயன் ? பூர்வீகத் தமிழர் நாத்திகர் என்று காட்டவா ? அல்லது  நாத்திகருக்கு ஆதாரம் தேடவா ?  நாத்திகப் பெரியாரின் பிரதான சீடர் அறிஞர் அண்ணாதுரையே "ஒன்றே குலமும், ஒருவனே தேவனும்" "நாங்கள் பிள்ளையாரை உடைப்பதும் இல்லை.  பிள்ளையாருக்குத் தேங்காய் உடைப்பதும் இல்லை" என்று ஆத்திகரையும் தன் முன்னேற்றக் குழுவில் வரவேற்க ஆரம்பித்தார்.

ஆதி முதலே பூர்வீக மனிதர் சூரியனை வழிபடத் தொடங்கினர்.  4000 வருடத்துக்கு முன்னே பிரமிட் கட்டிய ஃபெரோ மன்னர்கள் சூரிய வழிபாடு செய்தார்.

சி. ஜெயபாரதன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/a4da723f-b605-4d1b-b1bd-d24dcd3173cf%40googlegroups.com.

S. Jayabarathan

unread,
Aug 26, 2019, 8:27:52 AM8/26/19
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, நா. கணேசன்
புதிய இழை

---------- Forwarded message ---------
From: S. Jayabarathan <jayaba...@gmail.com>
Date: Mon, Aug 26, 2019 at 8:13 AM
Subject: Re: [MinTamil] இன்னா நாற்பது குறிப்பிடும் இன்னாதவை
To: mintamil <mint...@googlegroups.com>

 /////சங்கம் மருவிய காலத்துப் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான 'இன்னா நாற்பது' என்பது மக்களை நல்வழிப்படுத்தும் அறவுரைகளை  40 வெண்பாக்களில்  வடித்துக்  கொடுக்கும் ஓர் சிறிய நூலாகும்.  இவற்றுடன் துவக்கத்தில் ஒரு கடவுள் வாழ்த்துப் பாடலும் உண்டு.  அப்பாடல் வைதிக சமயத்துக் கடவுளரான சிவன், பலராமன், திருமால், முருகன் ஆகிய கடவுளரைத் தொழவேண்டும் என்ற கருத்தை உரைக்கின்றது.  இப்பாடல் தவிர்த்து  இறை என்னும் பொருள் குறித்தவை யாகவோ  இறைவழிபாடு, கடவுள், தெய்வம், இம்மை, மறுமை, ஆன்மா போன்ற சமயக் கருத்துக்களோ நூலெங்கிலும் காணப் படவில்லை.  கடவுள் வாழ்த்தைத் தவிர்த்து,  அறம்  வலியுறுத்தும் நோக்கம் கொண்ட  மற்ற 40 பாடல்களிலும் இறை நம்பிக்கை குறித்தும், நல்வழி நடத்தல் என்பதே மறுமையின் நல்வாழ்வுக்கு என்ற கருத்தும் காணப் பெறாததால் இக் கடவுள் வாழ்த்துப் பாடல் பிற்கால இடைச்செருகல் எனக் கருத வழியுண்டு.///

தமிழ் இலக்கியங்களில் "இறைவழிபாடு" இல்லாத நூல்கள் உள்ளனவா ?  இவற்றைத் தேடிக் காட்டுவதால் யாருக்கு என்ன பயன் ? பூர்வீகத் தமிழர் நாத்திகர் என்று காட்டவா ? அல்லது  நாத்திகருக்கு ஆதாரம் தேடவா ?  நாத்திகப் பெரியாரின் பிரதான சீடர் அறிஞர் அண்ணாதுரையே "ஒன்றே குலமும், ஒருவனே தேவனும்" "நாங்கள் பிள்ளையாரை உடைப்பதும் இல்லை.  பிள்ளையாருக்குத் தேங்காய் உடைப்பதும் இல்லை" என்று ஆத்திகரையும் தன் முன்னேற்றக் குழுவில் வரவேற்க ஆரம்பித்தார்.

ஆதி முதலே பூர்வீக மனிதர் சூரியனை வழிபடத் தொடங்கினர்.  4000 வருடத்துக்கு முன்னே பிரமிட் கட்டிய ஃபெரோ மன்னர்கள் சூரிய வழிபாடு செய்தார்.

பகுத்தறிவுப் பெரியாரின் நாத்திகத் திராவிடக் கழகம், இப்போது திருநீறு பூசாக் கட்சி [திமுக], திருநீறு பூசும் கட்சி [அதிமுக] என்று முறிந்து இரண்டாய்ப் பிரிந்து போனதே !!!
Message has been deleted

தேமொழி

unread,
Aug 26, 2019, 9:26:06 AM8/26/19
to மின்தமிழ்

On Monday, August 26, 2019 at 5:13:48 AM UTC-7, jayabarathans wrote:

 /////சங்கம் மருவிய காலத்துப் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான 'இன்னா நாற்பது' என்பது மக்களை நல்வழிப்படுத்தும் அறவுரைகளை  40 வெண்பாக்களில்  வடித்துக்  கொடுக்கும் ஓர் சிறிய நூலாகும்.  இவற்றுடன் துவக்கத்தில் ஒரு கடவுள் வாழ்த்துப் பாடலும் உண்டு.  அப்பாடல் வைதிக சமயத்துக் கடவுளரான சிவன், பலராமன், திருமால், முருகன் ஆகிய கடவுளரைத் தொழவேண்டும் என்ற கருத்தை உரைக்கின்றது.  இப்பாடல் தவிர்த்து  இறை என்னும் பொருள் குறித்தவையாகவோ  இறைவழிபாடு, கடவுள், தெய்வம், இம்மை, மறுமை, ஆன்மா போன்ற சமயக் கருத்துக்களோ நூலெங்கிலும் காணப் படவில்லை.  கடவுள் வாழ்த்தைத் தவிர்த்து,  அறம்  வலியுறுத்தும் நோக்கம் கொண்ட  மற்ற 40 பாடல்களிலும் இறை நம்பிக்கை குறித்தும், நல்வழி நடத்தல் என்பதே மறுமையின் நல்வாழ்வுக்கு என்ற கருத்தும் காணப் பெறாததால் இக் கடவுள் வாழ்த்துப் பாடல் பிற்கால இடைச்செருகல் எனக் கருத வழியுண்டு.///

தமிழ் இலக்கியங்களில் "இறைவழிபாடு" இல்லாத நூல்கள் உள்ளனவா ?  இவற்றைத் தேடிக்
காட்டுவதால் யாருக்கு என்ன பயன் ?

படித்த  ஒரு நூல் குறித்து  எழுதுகையில்  (கட்டுரையின் நோக்கம்)   அதில்  ஓர்ந்து அறிந்த  ஒரு கருத்தைப் பதிவு செய்ய வேண்டியது  எழுதுபவரின் கடமையாகிறது. எழுதுபவரின் கோணத்தைப் பதிவு செய்யும்  நோக்கில்தான் கட்டுரைகள் எழுதப்படும் ஐயா. 

கடவுள் வாழ்த்துப் பாடல்கள் இடைச்செருகல் என்பது தமிழிலக்கிய வரலாற்றில் புதிய கருத்துள்ள, திருக்குறளும்  அதற்குத் தப்பியதல்ல. 

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

N D Logasundaram

unread,
Aug 26, 2019, 9:27:00 AM8/26/19
to mintamil
நூ த லோ சு
மயிலை
அன்புள்ள செயபாரதன்

இடைச் சொருகலா எனப்பார்ப்பதும்  கடவுள் வாழ்துப் பாடலா எனபார்ப்பதும் வேறு ஆகும் 
நீங்கள் தான்  அதனை நத்திகமா இல்லையா எனும் பார்வையில் வலிந்து கொணர்ந்து பார்க்க முயல்கின்ரீர் 

மேலும் அப்படியே அவர் நாத்திகமா இல்லயா எனப்பார்ப்ப்பதிலும் என்ன பிழை கண்டீர் நானும் அப்படிப்
பார்க்கவில்லை  உங்கள் பார்வையில் ஒன்று வேறொருவர் பார்வையில் மற்றொன்று அப்படி பார்கக்கூடாது 
என்பதும் உங்ககள் கருத்து அவ்வளவே 
வாழகபாரதம் என்பது உங்கள் கருத்து வாழ்க தமிழகம் என்பதும் இணையானதுதான் இல்லை இல்லை என்றால் 
அதுவும் உங்கள் கருத்து எல்லரும் தங்கள் சுய நல்த்திற்காக பேசுவது தான் உலக உண்மை எந்த ஒரு எண்ணமும்
 காலத்தினால் மட்டுமல்ல் கண்ணெதிரேயே கூட மாறக் கூடியது 

தேமொழி

unread,
Aug 26, 2019, 9:27:34 AM8/26/19
to மின்தமிழ்

On Monday, August 26, 2019 at 6:26:06 AM UTC-7, தேமொழி wrote:

On Monday, August 26, 2019 at 5:13:48 AM UTC-7, jayabarathans wrote:

 /////சங்கம் மருவிய காலத்துப் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான 'இன்னா நாற்பது' என்பது மக்களை நல்வழிப்படுத்தும் அறவுரைகளை  40 வெண்பாக்களில்  வடித்துக்  கொடுக்கும் ஓர் சிறிய நூலாகும்.  இவற்றுடன் துவக்கத்தில் ஒரு கடவுள் வாழ்த்துப் பாடலும் உண்டு.  அப்பாடல் வைதிக சமயத்துக் கடவுளரான சிவன், பலராமன், திருமால், முருகன் ஆகிய கடவுளரைத் தொழவேண்டும் என்ற கருத்தை உரைக்கின்றது.  இப்பாடல் தவிர்த்து  இறை என்னும் பொருள் குறித்தவையாகவோ  இறைவழிபாடு, கடவுள், தெய்வம், இம்மை, மறுமை, ஆன்மா போன்ற சமயக் கருத்துக்களோ நூலெங்கிலும் காணப் படவில்லை.  கடவுள் வாழ்த்தைத் தவிர்த்து,  அறம்  வலியுறுத்தும் நோக்கம் கொண்ட  மற்ற 40 பாடல்களிலும் இறை நம்பிக்கை குறித்தும், நல்வழி நடத்தல் என்பதே மறுமையின் நல்வாழ்வுக்கு என்ற கருத்தும் காணப் பெறாததால் இக் கடவுள் வாழ்த்துப் பாடல் பிற்கால இடைச்செருகல் எனக் கருத வழியுண்டு.///

தமிழ் இலக்கியங்களில் "இறைவழிபாடு" இல்லாத நூல்கள் உள்ளனவா ?  இவற்றைத் தேடிக்
காட்டுவதால் யாருக்கு என்ன பயன் ?

படித்த  ஒரு நூல் குறித்து  எழுதுகையில்  (கட்டுரையின் நோக்கம்)   அதில்  ஓர்ந்து அறிந்த  ஒரு கருத்தைப் பதிவு செய்ய வேண்டியது  எழுதுபவரின் கடமையாகிறது. எழுதுபவரின் கோணத்தைப் பதிவு செய்யும்  நோக்கில்தான் கட்டுரைகள் எழுதப்படும் ஐயா. 

கடவுள் வாழ்த்துப் பாடல்கள் இடைச்செருகல் என்பது தமிழிலக்கிய வரலாற்றில் புதிய கருத்துள்ள, திருக்குறளும்  அதற்குத் தப்பியதல்ல. 

கடவுள் வாழ்த்துப் பாடல்கள் இடைச்செருகல் என்பது தமிழிலக்கிய வரலாற்றில் புதிய கருத்தல்ல, திருக்குறளும்  அதற்குத் தப்பியதல்ல. << பிழைதிருத்தம்  

தேமொழி

unread,
Aug 26, 2019, 9:35:08 AM8/26/19
to mint...@googlegroups.com

இன்னா நாற்பது   https://innanarpathu-poems.blogspot.com/

நான் புரிந்துகொண்ட  அளவில் பாடல்களுக்குப் பொருள் எழுதிய தளம் இது. 

சென்ற வாரம்தான் உருவாக்கினேன். 

இது குறித்த தோழர்கள் கருத்தையும் வரவேற்கிறேன்.

தேமொழி

unread,
Aug 26, 2019, 9:40:47 AM8/26/19
to மின்தமிழ்

On Monday, August 26, 2019 at 6:35:08 AM UTC-7, தேமொழி wrote:

இன்னா நாற்பது    https://innanarpathu-kapilar.blogspot.com/

நான் புரிந்துகொண்ட  அளவில் பாடல்களுக்குப் பொருள் எழுதிய தளம் இது. 

சென்ற வாரம்தான் உருவாக்கினேன். 

இது குறித்த தோழர்கள் கருத்தையும் வரவேற்கிறேன்.

1 . முக்கண் கொண்ட சிவனை வழிபடாமை
2 . பனைக்கொடி கொண்ட பலராமனை நினையாமை
3 . சக்கரப்படை கொண்ட மாலவனை மறத்தல்
4 . சக்தியான் வேலவனை வணங்காமை
5 . அன்பற்ற  இல்லாளின் அழகு 
6 . தந்தையை இழந்த மகனின் அழகு 
7 . துறவியர் வீட்டில் தங்கியிருந்து உண்டு வாழ்தல்
8 . மறைமொழி மந்திரங்கள் பயன் தராமை 
9 . பார்ப்பார் வீட்டினுள் கோழியும் நாயும் நுழைதல் 
10 . கணவன் சொல்லுக்குக் கட்டுப்படாத மனைவி 
11 . பகுப்பு இல்லாத உடை அணிதல் 
12 . காப்பாற்றாத அரசனின் ஆட்சியில் வாழ்வது 
13 . கொடுங்கோலாட்சி நடைபெறும் நாட்டில் வாழ்வது  
14 . நெடிய நீர்நிலையைப் படகின்றி நீந்திக் கடப்பது 
15 . கடுஞ்சொல் கூறுபவருடன் தொடர்பு கொண்டிருப்பது 
16 . நிம்மதி இழந்த மனதுடன் உயிர் வாழ்வது 
17 . உழவருக்கு ஏரோட்டுவதற்கு எருது இல்லாத பொழுது வயலின் ஈரம் 
18 . போர்க்கருவி செயலிழந்த  நிலையில் புறமுதுகிட்டுத் தப்பிக்க நேரும் வீரரின் நிலை 
19 . செல்வந்தரிடம் சினம் கொண்டு பகையை வளர்த்துக் கொள்வது 
20 . வலிமை நிறைந்தவருக்குத் தீமை செய்தல் 
21 . வேலியற்ற கரும்புத்தோட்டத்தைக் காவல் செய்வது 
22 . மழைபெய்கையில் ஒழுகும் பழைய கூரை கொண்ட வீட்டில் வாழ்வது 
23 . நீதிநெறியற்ற அரசாட்சியில் வாழ்வது 
24 . யாவரும் அறியும் வகையில் வெளிப்படையாகச் செயலாற்றுவது 
25 . அருள் மனம் கொண்ட அறவோர் சினந்து கூறும் கடுஞ்சொல் 
26 . நெஞ்சுரம் கொண்ட வீரர் போர்க்களத்தில் செயலாற்றாது சோம்பியிருத்தல் 
27 . வறுமையில் வாடுபவர் கொடையாளியாக இருத்தல் 
28 . கொடியவர் கூறும் தீய சொல் 
29 . வலிமையற்றவன் கையில் ஏந்திய ஆயுதம் 
30 . நறுமணமில்லாத மலரின் அழகு 
31 . தெளிவாக அறிந்திடாதவர் செய்யும் செயல் 
32 . உரையாடலின் உட்பொருள் புரியாதவர் அளிக்கும் மறுமொழி 
33 . சூரியஒளி போல தூய நெஞ்சம் கொண்டவர் பண்பற்றவராக இருப்பது 
34 . முகம் மலர சிரித்து மகிழும் தோழமை நெஞ்சத்தில் அன்பற்று இருப்பது 
35 . போரில் புறமுதுகிட்டு ஓடும் நிலை வருவது
36 . நீதியற்ற நெஞ்சம் கொண்டவர் நட்பு  
37 . கள்ளுண்டு களிக்கும் குடிகாரர்களுக்குக்  கள் விற்பனையற்ற ஊரில் வாழ்வது 
38 . இரவலர்களுக்கு அவர்களுக்கு வழங்கும் வள்ளல்கள் இல்லாது போவது 
39 . ஈகை குணம் இல்லாதோருக்கு இருக்கும் அழகு 
40 . கடிவாளமற்ற குதிரையை இயக்குவது 
41 . பொருளைப் புரிந்து கொள்ள இயலாதவரிடம் சென்று பாடலைப் படிப்பது 
42 . இருளடைந்துள்ள சின்னஞ்சிறு வீதியில் தனித்துப் போக நேர்வது 
43 . பொருள் வேண்டி கருணை மனமற்றவரை நாடிச் செல்லும் நிலை  
44 . வறுமை நிலையில் உள்ளோர் பிறருக்கு வழங்கி உதவ விரும்புவது 
45 . விருப்பமற்ற மனைவியின் தோளினை அணைத்தல்
46 . பரந்த நோக்கு கொண்ட பெருந்தன்மை அறியா சிறுமதியாளரிடம் கொள்ளும் நட்பு 
47 . நெறியற்ற வகை காமம் மிக்கவரைத் தோழமையாகக் கொள்வது 
48 . கடன் கொடுத்தவரைக் கடன்பட்டார் எதிர்கொள்ளும் நிலை 
49 . தலை பிளக்கும் வெயிலில் பாலைவனத்தில் செல்லுதல் 
50 . வலையை வீசி வாழும் வாழ்க்கையை நடத்துபவர் அது குறித்துக் கொள்ளும் பெருமிதம் 
51 . உயிரினங்களுக்குப் புலால் விரும்பி உண்டு வாழ்வோரின் வாழ்க்கைமுறை 
52 . பாலூட்டும் பெண்தன்மையை விரும்பும் முலையற்ற பெண்ணின்  விருப்பம் 
53 . வரவை அறிவிக்கும் மணியோசை எழுப்பாத யானையில் அறிவிப்பின்றி அரசர் வருவது 
54 . பகையை வெல்லும் துணிவற்றவர் வெல்வேன் என்று சூளுரைப்பது 
55 . பணியாதவர் என்ற செருக்குடைய மன்னர் பணிவது 
56 . பீடிக்கும் நோய் போன்று கணவரை வருத்தும் மனைவியுடன் வாழ்வது 
57 . சுருண்ட அடர்ந்த கருங்கூந்தலை ஐந்து வகையில் அள்ளி முடிக்கும் பெண்கள் தம் அன்பரை ஏமாற்றுதல் 
58 . கொத்தாகத் தொங்கும் மாம்பழங்கள் உண்பவர் இன்றி தானே அழுகிவிழும் நிலை 
59 . மனம் ஒத்து வாழ்ந்த பெண்ணைப் பிரிய நேர்வது 
60 . புரிந்துகொள்ளும் அறிவுடையவர் புரிந்து கொள்ளாமல் போவது 
61 . புல் உண்ணும் குதிரையின் மீது தன் வரவை அறிவிக்கும் மணியின்றி பயணிப்பது 
62 . பட்டறிவற்றவர் தரும் செயல்முறை விளக்க அறிவுரை 
63 . செல்வம் இல்லாதோர் சிறந்தவற்றை அடைய விரும்பும் விருப்பம் 
64 . பலர் முன்னர் மானக்கேடு ஏற்பட்டு நாணும் நிலைக்கு உள்ளாவது
65 . உண்ணாது கருமித்தனத்துடன் சேர்க்கும் பெரும் செல்வம் 
66 . உடன்பாடு இல்லாத பகைவருடன் சேருதல் 
67 . பார்வையற்றவர் கொண்டிருக்கும் அழகு 
68 . கணக்கிடும் திறனற்றவர் வகுக்கும் திட்டம் 
69 . கல்வியிற் சிறந்த சான்றோர் அவையில் கல்லாத ஒருவர் பங்கு பெறும் நிலை 
70 . வாழ்வு இருண்டு போன பொழுதும் கொடையளிப்பது 
71 . துன்பங்களைச் சகித்துக்கொண்டு வாழத் தெரியாதவர் நோன்பு வாழ்வை மேற்கொள்வது 
72 . பெற்ற தாயைக் காப்பாற்றாமல் தவிக்கவிடுதல் 
73 . திடமனத்தைக் கொண்டவர் மனம் இடிந்து போவது 
74 . வீர மறவர்களைக் கொண்டவர் முன் சென்று மார்தட்டி வலுச்சண்டைக்கு அழைப்பது 
75 . கொடுமையான காட்டின் வழி செய்யும் பயணம் 
76 . சிறுமதி கொண்டோருடன் உறவு கொள்ளுதல் 
77 . நற்குடியில் பிறந்தவர் கல்வி கற்காதிருப்பது 
78 . நிலத்தில் விதைத்த நல்லவிதைகள் விளையாமல் போவது 
79 . நற்பண்பு கொண்டவர் பழியஞ்சாமல் இருப்பது 
80 . பண்பாட்டு விழுமியங்களில் வேறுபட்ட குடும்பங்கள் கொள்ளும் உறவு 
81 . இளவேனில் காலம் தவறி மழைநாளில் துணைதேடிக் கூவும் குயிலின் குரல் 
82 . அன்பில்லா நெஞ்சத்தவர் கூறும் கடுஞ்சொல் 
83 . மழை வளம் பொய்த்துவிட்ட  உலகின் நிலை 
84 . கிழடு தட்டிய எருது பூட்டி செய்யும் உழவு 
85 . பெற்ற கொடையின் அளவு குறித்து மனம் நிறைந்து மகிழாதவர்களுக்குப் பொருள் கொடுப்பது 
86 . பகிர்ந்து உண்ணும் பண்பில்லாதவருடன் சேர்ந்து உணவு உண்பது 
87 . முதுமையில் நோய்வாய்ப்படல் 
88 . மறை ஓதா பார்ப்பனர் கூற்று 
89 . யானைப்படை இல்லா மன்னரைக் காண்பது 
90 . பிற உயிர்களின் உடலை உண்டு தன உடலை வளர்த்துக் கொள்வது 
91 . தேனும் நெய்யும் திரிந்து புளிப்புச் சுவை பெற்றுவிடுதல்
92 . காட்டாறுகளுக்கு இடைப்பட்ட நிலத்தில் உள்ள ஊரில் வாழ்வது 
93 . மதில் இல்லாத ஊரின் வாயிலைக் காத்தல் 
94 . குடிநீருக்காக உள்ள நீர்நிலையில் உடைகளைத் துவைத்தல் 
95 . பறை அறிவிப்பது போன்று அலர் பரப்புவோர் சொல் 
96 . புலனடக்கமற்றவருக்குத் தவம் செய்வது 
97 . காவல் இல்லாத ஊரில் வாழ்வது 
98 . தீய செயல்களைச் செய்வோர் அருகில் வாழ்வது 
99 . காம நோய் முற்றி உயிர் வாழ்வது 
100 . தன்நலம் நிறைந்தவருடன் வாழ்வது 
101 . நட்புடையவர் படும் துயரைக் காணுவது
102 . பகைவரின் வெற்றிச் செருக்கைக் காணுவது 
103 . உறவுகள் இல்லாத ஊரில் வாழ்வது 
104 . சூதாடும் கட்டை உருட்டி விரும்பிச் சூதாடுவது  
105 . பெரியவர்களுடன் கொண்ட உறவைத் துண்டித்துக் கொள்வது 
106 . செய்தற்கரிய காரியங்களைச் செய்து உதவுவதாக வாக்களிப்பது 
107 . பரிவு காட்டாதவரிடம்  சென்று தனது துயர் சொல்லிப் புலம்புவது 
108 . பெரியவர்களுக்குத் தீங்கு செய்வது 
109 . பெருமை மிக்க ஒருவரின் மதிப்பைக் குறைத்தல்
110 . உரிமையுடையவரின் உரிமையைப் பறித்துவிடுதல்
111 . செல்வமற்ற ஒருவர் கொண்டிருக்கும் அழகு 
112 . இளவயதில் தள்ளாமை ஏற்படுவது
113 . குதிரையேற்றம் பயிலாதவர் குதிரையைச் செலுத்துதல்
114 . வலிமையற்றவரின் வெற்றுப் பேச்சு  
115 . பொருள் இல்லாதவரின் நயமான பேச்சு  
116 . கற்றவர் அவையில் கல்லாதவரின் பேச்சு 
117 . வித்தை அறியாதவர் பெரியதொரு பாம்பை ஆட்டுவிக்க முற்படுதல் 
118 . நீரின் ஆழம் அறியாமல் நீர்நிலையில் குதித்து நீந்துதல் 
119 . கற்க விரும்பாத அறிவற்ற மக்களைப் பெறுதல் 
120 . கட்டுப்பாடு இல்லாதவர் தாம் அறிந்த முக்கியமான செய்தியைக் கையாளும் முறை 
121 . நெடிதுயர்ந்த மரத்தின் உச்சியில் உள்ள நுனிக் கொம்பில் ஏறி கீழே குதித்தல் 
122 . மதம் கொண்ட யானையின் முன் செல்வது
123 . பாம்புப் புற்றில் கை நுழைப்பது
124 . கொடிய புலி வாழும் காட்டிற்குச் செல்வது 
125 . இசை கூட்டாத யாழுடன் இசைந்து பாட விரும்புவது 
126 . கோள்களின் நிலையைக் கணிக்கும் வகை அறியாதவர் நேரத்தைக் குறித்துக் கொடுப்பது 
127 . தாளலயத்தைக் கூட்ட மத்தளத்தில் கரிய சாந்து பூசாத பொழுது அதை இசைப்பது 
128 . பண்பில்லாதவரைப் பகைத்துக் கொள்வது 
129 . தனது வாழ்வையும் நலத்தையும் பேணாது வாழ்வது 
130 . நேரடியாகக் கூறாமல் புறம் பேசுவது 
131 . பண்பற்றவருடன் கொள்ளும் நட்பு 
132 . வாழ்வாங்கு வாழ்ந்தவரின் நிலை தாழ்தல் 
133 . குடிபோதைக்கு அடிமையானவர் செய்வேன் எனக் கொடுக்கும் வாக்குறுதி
134 . முட்கள் நிறைந்த காட்டில்  நடந்து பயணப்படுதல் 
135 . வெள்ளத்தில் சிக்கிய விலங்குக்குத் தப்ப உதவாமல் அதனைச் சாக விடுதல்  
136 . வஞ்சனை செய்யும் நெஞ்சத்தோருடன் கொள்ளும் உறவு 
137 . நல்லொழுக்கம் இல்லாத ஒருவரைத் தனது உறவு எனக் கூறிக் கொள்ளுதல் 
138 . நன்னெறி நூல்களை விரும்பி கல்லாதிருப்பது 
139 . அறநெறியற்ற செயல்களில் ஈடுபடுவோருடன் உறவாடுவது 
140 . நல்லவர்கள் செல்வதைத் தவிர்க்கும் இடத்திற்குச் செல்லுதல் 
141 . முகில் உலக மக்களுக்குத் தேவையான மழையைத் தராது போதல் 
142 . குழல் தரும் காய்ந்த மூங்கில்கள் காற்றில் ஒன்றோடொன்று உராய்ந்து எழுப்பும் ஓசை 
143 . குழந்தைகள் நோய் வாய்ப்படுவது 
144 . அழகுடையவர் அறிவற்றவராகவும் இருந்துவிடுவது 
145 . செல்வமற்றவர் பிறருக்கு உதவ விரும்புதல் 
146 . உயர்ந்த மாடமாளிகைகள் உள்ள செல்வச் செழிப்புள்ள பெரிய நகரில் பொருளின்றி வறுமையில் வாழ்வது 
147 . வந்து உணவளிப்பவரை எதிர்நோக்கியிருந்து உணவு பெறும் நிலை 
148 . வாழ்வின் வறுமை எய்தும் பொழுது கைவிட்டு விலகிச் செல்லும் நட்பு 
149 . கவரும் அழகுள்ள மலருக்கு நறுமணம் இல்லாதிருப்பது 
150 . அடையவேண்டிய கரையின் தொலைவு அறியாது நீரில் இறங்கி நீந்துவது 
151 . விடை அறியாதவர்  கேள்விகளை எதிர்கொள்வது  
152 . சிறியோர் மீது சீற்றம் கொள்வது 
153 . மற்றொருவரின் மனைவி மேல் காமுறும் அறிவின்மை 
154 . வீரமற்ற மன்னர் போருக்குச் செல்லுதல் 
155 . விரைந்தோடும் குதிரை மீது சேணம்  இல்லாது பயணிப்பது 
156 . தொழிலில் திறமையற்றவர் செய்யும் பணி 
157 . கொடுப்பதற்குப் பொருளைக் கொண்டிராதவரின் ஈகை குணம்
158 . பாக்கை மெல்லும்பொழுது இடைப்படும் கல்
159 . புகழ்ந்து பாடும் பாவலருக்குப் பரிசு அளிக்காமை
160 . தடங்கல் ஏற்பட்டதால் தொடங்கிய பாடலை முடிக்காமல் விடுதல்
161 . ஐம்புலன்களையும் அடக்கும் தன்மையுடையவனின் பெருமிதம்
162 . முயற்சியில்லாதவன் தற்பெருமைப் பேசுதல்
163 . பிறர் அடைக்கலமாக ஒப்புவித்த பொருளை உரிமையாக்கிக் கொள்ளுதல்
164 . அறிவுரையை மதிக்காதோருக்குக் கூறும் ஆலோசனை  

தேமொழி

unread,
Aug 26, 2019, 9:55:12 AM8/26/19
to மின்தமிழ்
கட்டுரையைப் படித்து தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. 

S. Jayabarathan

unread,
Aug 26, 2019, 10:21:27 AM8/26/19
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, நா. கணேசன்
தேமொழி, 

இன்னா நாற்பதில் துவங்கும் இறைவாழ்த்து வெண்பாவையும், அதன் பொருளையும் எழுதுவீர்களா ?

நன்றி

சி. ஜெயபாரதன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/e049ef1e-b29e-4a3f-993f-fd2c106ff529%40googlegroups.com.

S. Jayabarathan

unread,
Aug 26, 2019, 10:29:18 AM8/26/19
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, நா. கணேசன்
திருக்குறளில் இறைவழிபாடு பற்றிக் கூறும் முதல் பத்துப் பாக்கள் மட்டுமல்ல, இறை / ஊழ் பற்றிப் பற்பல பாக்கள் உள்ளன. 

இந்த இழையில் "இறைவழிபாடு" பற்றிப் பேசுவோம். ஐயப்படும்  "இடைநுழைப்பு" பற்றித் தர்க்கம் இல்லை.

சி. ஜெயபாரதன்

தேமொழி

unread,
Aug 26, 2019, 10:30:53 AM8/26/19
to mint...@googlegroups.com

On Monday, August 26, 2019 at 7:21:27 AM UTC-7, jayabarathans wrote:
தேமொழி, 

இன்னா நாற்பதில் துவங்கும் இறைவாழ்த்து வெண்பாவையும், அதன் பொருளையும் எழுதுவீர்களா ?

வலைப்பதிவில் எழுதியதேயே இங்கு வெட்டி ஒட்டியுள்ளேன் ஐயா.

கடவுள் வாழ்த்து - முக்கண் பகவன் அடி

முக்கட் பகவ னடி தொழா தார்க்கின்னா
பொற்பனை வெள்ளையை யுள்ளா தொழுகின்னா
சக்கரத் தானை மறப்பின்னா வாங்கின்னா
சத்தியான் றாடொழா தார்க்கு.

சொல் பிரித்து பொருள் விளக்கம்:
முக்கண் பகவன் அடி தொழாதார்க்கு இன்னா
பொற்பனை வெள்ளையை உள்ளாது ஒழுகு இன்னா
சக்கரத்தானை மறப்பு இன்னா ஆங்கு இன்னா
சத்தியான் தாள் தொழாதார்க்கு

எவை துன்பம் தரும்:
முக்கண் கொண்ட சிவனை வழிபடாமை, 
பனைக்கொடி கொண்ட பலராமனை நினையாமை, 
சக்கரப்படை கொண்ட மாலவனை மறத்தல்,
சக்தியான் வேலவனை வணங்காமை, 
ஆகியன துன்பம் தருவனவாம்.
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

S. Jayabarathan

unread,
Aug 26, 2019, 10:45:50 AM8/26/19
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, நா. கணேசன்

இனியவை நாற்பது நூலின் முதற்பா இறைவழிபாடு அதே கடவுளர் பெயர்களைக் கூறுகிறது.  அதனைப் பார்த்தால் இடைநுழைப்பு மாதிரி தெரியவில்லை.

சி. ஜெயபாரதன்

தேமொழி

unread,
Aug 26, 2019, 10:51:31 AM8/26/19
to மின்தமிழ்

On Monday, August 26, 2019 at 7:45:50 AM UTC-7, jayabarathans wrote:

இனியவை நாற்பது நூலின் முதற்பா இறைவழிபாடு அதே கடவுளர் பெயர்களைக் கூறுகிறது.  அதனைப் பார்த்தால் இடைநுழைப்பு மாதிரி தெரியவில்லை.

/// இடைநுழைப்பு மாதிரி தெரியவில்லை. ///

ஐயா சென்ற மடலில்தான்  இடைச்செருகல் பற்றி பேசவேண்டாம்  என்று கூறினீர்கள் 

///இந்த இழையில் "இறைவழிபாடு" பற்றிப் பேசுவோம். ஐயப்படும்  "இடைநுழைப்பு" பற்றித் தர்க்கம் இல்லை.///

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

S. Jayabarathan

unread,
Aug 26, 2019, 10:52:03 AM8/26/19
to mintamil
நண்பர் லோகசுந்தரம்,

"இன்னா நாற்பது" பற்றி எழுதியவர் நாத்திகக் கண்ணால் பார்ப்பதால், நானும் அவர் கண்ணால் பார்த்துப் பதில் எழுதுகிறேன்.

சி. ஜெயபாரதன்  

தேமொழி

unread,
Aug 26, 2019, 10:55:48 AM8/26/19
to மின்தமிழ்
எனது கட்டுரையை ஆத்திகக் கண் கொண்டு படித்ததாகவும் மாற்றுக் கோணத்தில் பொருள் கொள்ள வழியுண்டு. 

புதிய இழை

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

தேமொழி

unread,
Aug 26, 2019, 11:18:26 AM8/26/19
to மின்தமிழ்

On Monday, August 26, 2019 at 7:45:50 AM UTC-7, jayabarathans wrote:

இனியவை நாற்பது நூலின் முதற்பா இறைவழிபாடு அதே கடவுளர் பெயர்களைக் கூறுகிறது.  அதனைப் பார்த்தால் இடைநுழைப்பு மாதிரி தெரியவில்லை.

இன்னா நாற்பது கடவுளர் நால்வர்:
சிவன்
பலராமன்
திருமால்
முருகன்
(இங்கு நான்முகன் குறிப்பிடப்படவில்லை)

இனியவை நாற்பது கடவுளர்-மும்மூர்த்திகள்:
சிவன்
திருமால்
பிரம்மா 
(இங்கு பலராமனும் முருகனும் குறிப்பிடப்படவில்லை)

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

இசையினியன்

unread,
Aug 26, 2019, 12:01:29 PM8/26/19
to மின்தமிழ்
சச்சரவு தேவையே இல்லையே..

ஒரு புதிய தொடரை மின்தமிழில் ஆரம்பியுங்கள்...

ஜெயபாரதன் ஐயா அவரது விளக்கத்தைக் கொடுக்கட்டும்.. நான் எனது விளக்கத்தைக் கொடுக்கிறேன்.. முன்னமே தேமொழி அவர்கள் அவரது விளக்கங்களை பதிந்து உள்ளார்... பிறரும் பங்கெடுப்பார்கள் அல்லவா..

திருக்குறளுக்கு எப்படி முவ.கலைஞர்.பாப்பையா உரை என இருப்பது போன்று ஒரு புதிய தெளிவுரை நூலையே உருவாக்கி விடலாம்...

நாற்பது நாளில் பலருடைய பங்களிப்பில் பல விளக்கங்கள் கிடைத்து விடும் அல்லவா...

kanmani tamil

unread,
Aug 26, 2019, 1:03:52 PM8/26/19
to mintamil

///வறுமை நிலையில் உள்ளவர் ஈகைக் குணத்துடன் இருப்பது துன்பம் தரும் என்பதை, 

          இடும்பை உடையார் கொடை இன்னா [பாடல்: 6]

          பொருள் இல்லார் வண்மை புரிவு இன்னா [பாடல்: 10]

          மான்று இருண்ட போழ்தின் வழங்கல் பெரிது இன்னா [பாடல்: 17]

          கொடுக்கும் பொருள் இல்லான் வள்ளன்மை இன்னா  [பாடல்: 39]

மேலுள்ள வரிகள் வெவ்வேறு முறையில் அதே கருத்தை உரைக்கின்றன. /// Themozhi wrote one day ago. 

இந்த நான்கு அடிகளும் நுட்பமான பொருள் வேறுபாடு உடையனவாயத் தோன்றுகின்றன.

"இடும்பை உடையார் கொடை இன்னா"  

(மகிழ்ச்சியான வாழ்வின்றி மீள முடியாத) துன்பத்தில் ஆழ்ந்து இருப்பவர் கொடைத்தொழில் செய்வது இன்னா. ஒரு சான்று மூலம் விளக்கலாம். கணவனை இழந்து கைம்மையில் துன்புறுவோர் கொடுக்க வேண்டும் என்று முனைவது இன்னா .  

"பொருள் இல்லார் வண்மை புரிவு இன்னா" 

கொடுக்கப் பொருள் இல்லாதவர் வள்ளல் தன்மையைப் புரிவது இன்னா - இக்கருத்தை ஒரு இலக்கியச் சான்று கொண்டு விளக்கலாம். பெரிய புராணத்தில் - ஒருபொருளும் இல்லாத இளையான்குடிமாற நாயனார் விதைத்த நெல்லை மழைக்கால இரவில் வயலுக்குச் சென்று அரித்து எடுத்து வந்து விருந்து உபசரிப்பது போல - ......அது இன்னா 

"மான்று இருண்ட போழ்தின் வழங்கல் பெரிது இன்னா"

எதிர்காலம் இருள்மயமாகத் தெரியும் போது - இனிமேல் பொருள் தேட இயலாது என்ற நிலையில் - எதிர்கால முன்னேற்றம் எட்டாக்கனி என்ற நிலையில் - பொருளைப் பெருக்க வழியற்றவன் கொடைத்தொழிலில் ஈடுபடுவது இன்னா 

"கொடுக்கும் பொருள் இல்லான் வள்ளன்மை இன்னா" 

பிறரிடம் இரந்து பெற்ற பொருளன்றித்; தான் ஈட்டிய பொருளைக் கொடுப்பதற்கு இல்லாதவன் வள்ளல் தன்மையுடன் இருப்பது இன்னா .'கொடுக்கும் பொருள் இல்லான்' என்பதால் இரந்து பெற்ற பொருள் இருக்கிறது என்பதும்; ஈட்டிய பொருள் இல்லை என்பதும் தொனிப்பொருள்.

சக      

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/df5c0d4a-d6d3-4b68-b8ed-4addd22f0687%40googlegroups.com.

S. Jayabarathan

unread,
Aug 26, 2019, 1:10:40 PM8/26/19
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm

பெயர்களில் சிறிது வேறுபாடுகள் இருப்பதால், இறைவழிபாடு வெண்பாக்கள் இடைநுழைப்பு இல்லை என்று எடுத்துக்கொள்ளலாம்.

சி. ஜெயபாரதன்

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/7ca1d5e4-b402-4048-8c7d-d1506a1f2c82%40googlegroups.com.

kanmani tamil

unread,
Aug 26, 2019, 1:29:47 PM8/26/19
to mintamil
///இசையினியன் !!!  
நாவலர் ந. மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள் எழுதிய உரையை யாராலும் திருத்த இயலாது.

இல்லை தேமொழி . நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் மரியாதைக்குரியவர். 
சிலப்பதிகாரத்திற்கு அடியார்க்கு நல்லார் உரை இருக்கும் போதே; தான் இன்னொரு உரை எழுதியவர் - புதிய உரைகள் தோன்றுவது காலத்தின் தேவையைக் காட்டுகிறது. இவருக்குப் பின்னர் பெருமழைப்புலவரும் சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதினார். எல்லோருமே மரியாதை தெரிந்தவர்கள் தாம். ஒரு உரைக்குப் பின்னர் இன்னொரு உரை தோன்றக்கூடாது என்று எந்த உரையாசிரியரும் எண்ணம் கொண்டு தமிழ் இலக்கிய வரலாற்றில் இல்லை. தொடர்ந்த இலக்கியப் பயிற்சி புத்துரை தோன்ற வழி வகுக்கும். இலக்கியத்தில் ஆழ்ந்து சென்றால் முத்தெடுக்கலாம். நாமும் முயல்வோம். ஆழ்ந்து செல்லத் தயங்கினால் உரையாசிரியர் சொற்களுக்கு மேல் ஏதும் சிந்திக்காமல் தேங்கிய நிலை அடைந்து விடுவோம்.

மேலும், 
நறியவும் உளவோ நீயறியும் பூவே   என்பது போல  
(நீங்கள் குறிப்பிட்ட)  வழியில் பொருள் கொள்வது பாடல்  வரியில் முரண் கொண்டுவருமே !!!
நறிய மலர் பெரிது நாறாமை இன்னா
நறுமணம் கொண்ட மலர் பெரிதும்  மணம் தராவிட்டால் பயனில்லை. /// தேமொழி 9 மணி நேரத்திற்கு முன்னர் எழுதியது.

"நறிய மலர் பெரிது நாறாமை இன்னா" - இப்பாடலடி கூறியது கூறல் இல்லை.
பல்லிதழ் பூக்கள் அரும்பும் போது மணத்துடன் மிகவும் சிறிதாகத் தோன்றி அளவில் பெரியனவாக வளர்ந்த பின்னர் அவற்றில் மணம் இல்லாவிட்டால் பெருமை குறைவே; அது இன்னா என்பது பொருள். இங்கே "நறிய மலர் பெரிது" என்று சேர்த்துப் பொருள் கொள்ள வேண்டும். ''பெரிது' என்ற சொல் மலருக்குரியதாகக் கொள்க. (இக்கருத்துரை பொருந்துமா இல்லையா என்று தாவரவியல் படித்த நீங்கள் தான் சொல்ல வேண்டும்.) பொருந்தாதெனின் மேலும் சிந்திக்கலாம்.
சக   
 
தேமொழி

unread,
Aug 26, 2019, 1:38:36 PM8/26/19
to மின்தமிழ்

On Monday, August 26, 2019 at 10:29:47 AM UTC-7, kanmanitamilskc wrote:
///இசையினியன் !!!  
நாவலர் ந. மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள் எழுதிய உரையை யாராலும் திருத்த இயலாது.

இல்லை தேமொழி . நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் மரியாதைக்குரியவர். 
சிலப்பதிகாரத்திற்கு அடியார்க்கு நல்லார் உரை இருக்கும் போதே; தான் இன்னொரு உரை எழுதியவர் - புதிய உரைகள் தோன்றுவது காலத்தின் தேவையைக் காட்டுகிறது. இவருக்குப் பின்னர் பெருமழைப்புலவரும் சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதினார். எல்லோருமே மரியாதை தெரிந்தவர்கள் தாம். ஒரு உரைக்குப் பின்னர் இன்னொரு உரை தோன்றக்கூடாது என்று எந்த உரையாசிரியரும் எண்ணம் கொண்டு தமிழ் இலக்கிய வரலாற்றில் இல்லை. தொடர்ந்த இலக்கியப் பயிற்சி புத்துரை தோன்ற வழி வகுக்கும். இலக்கியத்தில் ஆழ்ந்து சென்றால் முத்தெடுக்கலாம். நாமும் முயல்வோம். ஆழ்ந்து செல்லத் தயங்கினால் உரையாசிரியர் சொற்களுக்கு மேல் ஏதும் சிந்திக்காமல் தேங்கிய நிலை அடைந்து விடுவோம்.

கண்மணி,

///TVU தனது இணையத்தில் இங்கு http://www.tamilvu.org/slet/l2100/l2100pd1.jsp?bookid=36&auth_pub_id=40&pno=31#37, சரியான பொருளை இணையத்தில் ஏற்றவில்லை. மாற்ற வேண்டும்... அறிஞர் யாரேனும் TVU தொடபில் இருந்தால் பாடலுக்குரிய விளக்கத்தை மாற்றச் சொல்லுங்களேன்.///

மேற்கண்ட இசையினியனின் கருத்துக்குத் தான்  நான் பதில் அளித்திருந்தேன், நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார்  எழுதியதில் திருத்தம் செய்ய யாருக்கும் உரிமை இல்லை அல்லவா. 

நான் மற்றவர் உரை எழுதுவதைப் பற்றி கூறவில்லை.   

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

தேமொழி

unread,
Aug 26, 2019, 1:42:59 PM8/26/19
to மின்தமிழ்
உங்கள் விளக்கங்களுக்கு  நன்றி கண்மணி... 

ஆமாம், அதைத்தான் நானும்  அவர்கள் வாழ்வே கேள்விக்குறியாக இருக்கையில் கொடை கொடுப்பது இயலாது என்பதை "வெவ்வேறு முறையில் அதே கருத்தை உரைக்கின்றன" என்று குறிப்பிட்டேன்.  

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

kanmani tamil

unread,
Aug 26, 2019, 11:49:40 PM8/26/19
to mintamil
நன்று 
சக 

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/d72abf15-17ee-410e-9adb-6afebb647931%40googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages