சிறகடிக்கும் கனவுகள் — தேமொழி

13 views
Skip to first unread message

தேமொழி

unread,
Oct 1, 2026, 4:45:48 PM (8 days ago) Oct 1
to மின்தமிழ்

Vithya Ramraj.jpg

சிறகடிக்கும் கனவுகள்

— தேமொழி 

இருக்கும்வரை வாழ்ந்துவிட்டு 
வாழ்ந்த சுவடு ஏதுமின்றி 
காற்றோடு கரையும் புகைபோலே 
கனவாக மறையும் வாழ்க்கையை 
தொடர்ந்து வாழ்வதை விரும்பாமல் 
வாழ்வின் பொருளைத் தேடி அலைந்து 
கண்டடைந்து உலகிற்கு உணர்த்திய
புத்தர்களை உலகம் கண்டதுண்டு! 

தேடிச் சோறு நிதம் தின்று
பல வேடிக்கை மனிதரைப் போலே
வீழ்ந்து  மறைய விரும்பாமல் 
விட்டு விடுதலையாகி 
எட்டுத் திசையும் சிறகடித்துச்
சிட்டுக் குருவியெனத் திரிந்து
லட்சியக் கனவு காணும்
பாரதிகள் என்றும் பலருண்டு!

சிறகடிக்கும் கனவுகளுடன் 
உணவை மறந்து உறக்கம் துறந்து 
பிறப்பு விதித்த  எல்லையை மதிக்காது   
ஆற்றலுடன் சிறப்பாகப் பறப்பதை 
சவாலாக ஏற்று தடையை உடைத்து 
காற்றில் உயர்ந்து விண்ணில் பாய்ந்து 
துணிவோடு இலக்கை எட்டும் 
ஜானதன் சீகல்களாக நம்மில் சிலருண்டு!

     உயரப் பறக்கும் குருவியே காணுமாம்  
     ஊரின் தொலைவு தனை  
         [குறள் வெண்பா]


நன்றி: சக்தி, அக்டோபர் - 2026, 

குறிப்பு: இக்கவிதையை எழுதி சக்தி இதழுக்கு அனுப்பிய பொழுது, சாதனையாளர் வித்யா ராம்ராஜை மனதில் கொண்டு எழுதவில்லை, அவரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சாதனையை நிகழ்த்தவுமில்லை.  ஆனால் இதழ் வெளிவந்து குழுவில் பகிரும்பொழுது அவர் படத்தை இணைக்காமல் விட மனமில்லை. சாதனையாளர் வித்யா ராம்ராஜ் அவர்களுக்கு வாழ்த்துகள்.  

Reply all
Reply to author
Forward
0 new messages