வெருளி நோய்கள் 1486-1490: இலக்குவனார் திருவள்ளுவன்

5 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
May 28, 2026, 4:25:26 PM (22 hours ago) May 28
to thiru thoazhamai, Thamizh Pavai, ara...@aol.com, Akar Aadhan, Paramasivam Marudanayagam, Casmir Raj, Vani Aravanan, pthang...@gmail.com, Bala subramanian, Anna Centenary Library Librarians, wsws sl, Raju Krishnaswamy, விவேக் பாரதி, Lalitha Sundaram, vidya chandran chandran, kalvet...@gmail.com, Neethi Vallinayagam, Sampath Singara, Kumanan K.b. Kanji, madhiyazhagan subbarayan, LION.R. MOURALY, Kandaih Mukunthan, Office, kandasamy santharupi, Tamil Mar Laie, Palanichamy V, HAMIDIA BROWSING CENTRE, raman kannusamy, பூங்குழலி Poonkuzhali, annac...@yahoo.co.in, Karunkal kannan, Solidarity For Malayagam, Manimekalai Prasuram, pandian M.T, Dr. Namadhu MGR, CHERALATHAN A, msvoimaie...@gmail.com, dgvcmut...@gmail.com, Kirubanandan Srinivasan, jainol...@gmail.com, Jeeva Kumaran, mega digital4, mohan raj, Swathi Swamy, Senthilnarayanan Arunachalam, Chitraleka V, Dr Seenivasan Sappani, Rajan Krishnan, Umarani Pappusamy Mysore, Guberan Rajan, Dr. Ku.Muthukumar

வெருளி நோய்கள் 1486-1490: இலக்குவனார் திருவள்ளுவன்

 ஃஃஃ      அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்      29 May 2026      



(வெருளி நோய்கள் 1481-1485 தொடர்ச்சி)

வெருளி நோய்கள் 1486-1490

  1. நீக்க வெருளி – Primaforaphobia

வேலையிலிருந்து முதலில் நீக்கப்படலாம் என அளவுகடந்த பேரச்சம் கொள்வது வேலை நீக்க வெருளி. சுருக்கமாக நீக்க வெருளி என்கிறோம்.
ஆட்குறைப்பு, பணியகம்/தொழிலகம் மூட இருத்தல் போன்ற காரணங்களால் வேலையாள் நீக்கம் ஏற்படும் என்ற அச்சத்தால் வரும் பெருங்கவலையால் உருவாகும் (வேலை) நீக்க வெருளி. வேலை நீக்கம் தொடரும் முன்பே தன்னை முதலில் நீக்கி விடுவார்கள் என்றும் அஞ்சுவர்.
Prima என்னும் கிரேக்கச் சொல் முதலில் என்பதைக் குறிக்கிறது.
fora என்பது முதலில் இலத்தீனில் மக்கள் கூடும் அங்காடிகளைக் குறித்தது. பின்னர் பல்வகை அமைப்புகளையும் குறிக்கலாயிற்று. இந்த இடத்தில் பணி நிறுவன அமைப்பைக் குறிக்கிறது.
Prima fora நிறுவனத்தில் முதலில் (நீக்கப்படுதல் ) எனக் குறிக்கிறது.
00

  1. நீகிரவர் வெருளி-Negrophobia

நீகிரோ இன மக்கள் மீதான தேவையற்ற வெறுப்பும் மிகையான பேரச்சமும் நீகிரவர் வெருளி.
முன்பு நீக்கிரவர் வெருளி எனக் குறித்திருந்தேன். இப்பொழுது ஒலிப்பை மாற்றி நீகிரவர் வெருளி என்றே குறித்துள்ளேன்.
இசுபானிய போர்த்துகீசிய மொழிகளில் நீகிரோ என்றால் கருப்பு என்றே பொருள் கொள்கின்றனர். கறுப்பர் வெருளி என நிற அடிப்படையில் குறிக்க வேண்டா என்பதால் அவ்வாறு குறிக்கவில்லை. கருப்பு தொடர்பான கருவண்ண வெருளி (Melanophobia) வேறு. எனினும் நிற அடிப்படையிலான வெறுப்பு என்பதால் அதன் பகுதியாக இதைக் கருதலாம்.
அயலார் வெருளி(Xenophobia/Zenophobia) என்னும் பொதுநிலையில் இது அடங்கலாம். எனினும் பொதுவாக வெள்ளை இனத்தவரிடமே இது மிகுதியாக உள்ளது. தேவையற்ற இன வெறுப்பும் உயர்வு மனப்பான்மையும் இதற்குக் காரணங்கள். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்னும் திருவள்ளுவரின் குறள்நெறியை யாவரும் பின்பற்றினால் இது போன்ற வெருளி உருவாகும் வாய்ப்பு இல்லை.
00
1488.நீச்சல் குள வெருளி – Colimbophobia

நீச்சல் குளம்பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் நீச்சல் குள வெருளி.
colimbus என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் நீச்சல் குளம்.
00

  1. நீச்சல் வெருளி – Natatophobia

நீச்சல் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் நீச்சல் வெருளி.
Natato என்பது மாசிடோனியா(macedonia) மொழிச்சொல்.
00

  1. நீராடல்வெருளி – Ablutophobia

குளிப்பது தொடர்பாகக் காரணமற்ற அளவு கடந்த பேரச்சம் கொள்வது நீராடல்வெருளி.
துணி துவைப்பது தொடர்பாகவும் பேரச்சம் கொள்வர்.
பொதுவாகச் சிறுவர்களும் பெண்களும் குளியல் வெருளியால் மிகுதியாகப் பாதிக்கப்படுகின்றனர்.
குளிக்கும்பொழுது யாரேனும் மறைவாகப் பார்க்கலாம், மறைவாகப் படம் பிடிக்கலாம், குளியல் தொட்டியில் திடீரென்று தண்ணீர் நிறைந்து மூச்சு முட்டலாம், மின் கசிவால் அல்லது வெந்நீர்க்கலனால் மின் அதிர்ச்சிக்கு ஆளாகலாம் என்பன போன்ற எண்ணங்களுக்கு உள்ளாகிப் பேரச்சத்தை வளர்த்துக்கொள்கின்றனர்.
நண்பர்கள், உறவினர்கள், அண்டை வீட்டார் என அறிந்தவர்கள் யாருக்கேனும் குளிக்கும்பொழுது ஏற்பட்ட இன்னல் அல்லது இதுபோல் இடம்பெற்ற திரைப்படக்காட்சி அல்லது தொலைக்காட்சிப்படம் அல்லது இதுபோல் படித்த கதை அல்லது கட்டுரை ஆகியவை குறித்து மிகுதியும் சிந்தித்துத் தனக்கும் இப்படி நேரலாம் எனக் கற்பனையை வளர்த்துக்காெண்டு பேரச்சம் கொள்வர்.
Abluto என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் நீரில் நனைத்தல், அலம்புதல். இங்கே நனைதல் என்பது நீராடலைக் குறிக்கிறது.
00

(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 3/5

000

--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Reply all
Reply to author
Forward
0 new messages