கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றம்

12 views
Skip to first unread message

B. SAISENTHIL

unread,
Sep 22, 2023, 12:55:29 PMSep 22
to மின்தமிழ்
IMG-20230921-WA0032.jpgநினைத்தாலே முக்திதரும் திருத்தலமாகவும், பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும் விளங்குகிறது திருண்ணாமலை அண்ணாமலையார் கோயில். இங்கு மாதந்தோறும் பவுர்ணமி நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையாரை தரிசனம் செய்துவிட்டு மலையே மகேசனாக விளங்கும் அண்ணாமலையை கிரிவலம் சென்று வருகின்றனர். மேலும் இக்கோயிலில் சித்ரா பவுர்ணமி, உத்ராயண புண்யகால பிரம்மோற்சவம், தட்சிணாயன புண்யகால பிரம்மோற்சவம், ஆடிப்பூர பிரம்மோற்சவம், திருவூடல் திருவிழா, ஆனி திருமஞ்சனம், கார்த்திகை தீபத்திருவிழா உள்பட பல்வேறு விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதில் மிகவும் பிரசித்தி பெற்றது கார்த்திகை தீபத்திருவிழா. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் காலை மற்றும் இரவில் பஞ்சமூர்த்திகள் மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். 10ம்நாள் அதிகாலை அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபமும், அன்று மாலையில் கோயிலின் பின்புறம் 2668அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும். இந்த மகாதீபத்தை காண தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம்.
பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா இந்தாண்டு வரும் நவம்பர் மாதம் 14ம்தேதி தொடங்கி 30ம்தேதி வரை நடைபெற உள்ளது.
முழு செய்தி,

Dr. Mrs. S. Sridas

unread,
Sep 22, 2023, 2:32:11 PMSep 22
to mint...@googlegroups.com
நன்றி.
அன்புடன்

Dr. Mrs. S. Sridas
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/d833bd23-4d67-457f-b7b2-281801bfb9d1n%40googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages