திருக்குறள் அதிகார விளக்கம்: குறள் திறன்

1,155 views
Skip to first unread message

தேமொழி

unread,
Oct 16, 2023, 5:59:34 PM10/16/23
to மின்தமிழ்
1. கடவுள் வாழ்த்து

கடவுள் ஒருவர் உள்ளார்; அவரை நினைந்து வாழ்த்தி வணங்க வேண்டும் என்ற கருத்துப்பட அமைந்தது 'கடவுள் வாழ்த்து' என்னும் முதல் அதிகாரம். ஆதிபகவன், வாலறிவன், மலர்மிசை ஏகினான், வேண்டுதல் வேண்டாமை இலான், இறைவன், தனக்கு உவமை இல்லாதான், அறவாழி அந்தணன், எண்குணத்தான் என்ற அடைகளால் இறைவன் பாடப்படுகின்றான். கடவுளை நினைப்பவர் நன்கு வாழ்வர்; அவர்கள் துன்பங்களை உணரமாட்டார்கள்; அவர்களிடம் நல்வினை தீவினை தாக்கம் இல்லை; அவர்கள் நெடிது வாழ்வர்; அவர்களது தீராக் கவலைகளுக்கு மாற்றல் கிடைக்கும்; குற்ற உணர்ச்சிகளிலிருந்து மீட்சி பெறுவர்; வாழ்க்கை என்னும் கடலைக் கடந்து கரை சேர்வர் போன்ற பயன்களும் கூறப்படுகின்றன.

கடவுள் வாழ்த்து:
கடவுள் என்ற அழகிய சங்கச் சொல் எல்லாவற்றையும் கடந்து நிற்பது என்ற பொருள் தருவது. எல்லாவற்றிலும் நீக்கமறக் கலந்து நிற்பதையும் குறிக்கும்.
வாழ்த்து என்பது வாழ்த்துதல் பொருளில் அன்றி நினைத்தல், போற்றல், வணங்கல் ஆகிய உள்ளம், சொல், மெய் ஆகியவற்றின் செயல்களை உணர்த்தும் வகையில் இங்கு ஆளப்படுகின்றது. அதிகாரத்துப் பத்து குறள்களில் ஏழு பாடல்கள் 'அடிசேர்ந்தார்' 'தாள்சேர்ந்தார்' என்றபடியான தொடர்கள் கொண்டு யாக்கப்பட்டுள்ளன. 'அடி' என்பது 'இறைவன் அருள்' என்னும் பொருள்பட அமைந்துள்ளது. 'சேர்தல்' என்ற சொல்லுக்குப் பரிமேலழகர் இடைவிடாது நினைத்தல் எனப் பொருள் கூறுவார். எனவே அடி சேர்ந்தார் என்பது இறைவன் அருள் வேண்டி இடையறாது அவனை நினைத்தல் என்பதாகும். "புகழ் புரிந்தார்" எனச் சொல்லால் போற்றுதலை ஒரு பாடல் குறிக்கிறது. வணங்குதல் என்ற உடல்சார்ந்த செயல் மற்றொரு பாடலில் குறிக்கப் பெறுகிறது.
ஒருமையில் அடி என்று சொல்லப்பட்டுள்ளதால் ஓர்அடி (ஒற்றைத் தாள்) கொண்ட அருவ (உருவமற்ற-ஒளி, காற்று போன்ற) நிலையில் உள்ள ஒரு தெய்வமே கடவுள்வாழ்த்து அதிகாரக் குறட்பாக்களில் கூறப்படுகிறது எனலாம். ஒருவர் எண்ணிய குணங்களின் உருவாக இறைவனை வழிபடலாம் என்ற கருத்துப்படவும் ஒரு பாடல் அமைந்துள்ளது.
கற்றவனும் கடவுளை நினைக்க வேண்டும் என்று ஒருபாடலும் கடவுளை வணங்காதவர் அறிவில்லாதவர் என்று மற்றொரு பாடலும் கூறுகின்றன.

கடவுள் வாழ்த்து அதிகாரப் பாடல்களின் சாரம்:
முதல் குறள் உலகம் ஆதிபகவனை முதலாக உடையது என கடவுள் இயல்பையும் கடவுளுக்கு உலகோடுடைய தொடர்பையும் கூறுகிறது.
2 ஆம்குறள் என்ன கற்றிருந்தாலும் இறைவனை நினையாமல் இருக்கக் கூடாது என அறிவுறுத்துவது.
3 ஆம்குறள் கடவுளின் திருவடியை நினைப்பவர் இந்நிலவுலகின்கண் நன்கு வாழ்வர் என்கிறது.
4 ஆம்குறள் சார்பற்ற இறைவனை நெஞ்சில் தாங்கியவர் எந்தச் சூழ்நிலையிலும் துன்பங்களை உணரமாட்டார் என்பதைச் சொல்வது.
5 ஆம்குறள் கடவுளின் பெருமை அறிந்து வாழ்த்துபவருக்கு நல்வினை தீவினை எதுவுமே தாக்கத்தை ஏற்படுத்தாது என்கிறது.
6 ஆம்குறள் ஒழுக்கத்தின்வழி நின்று கடவுள் வணக்கம் செய்க என அறிவுறுத்துவது.
7 ஆம்குறள் எல்லாம்வல்ல இறைவனால் மட்டுமே தீராக் கவலைகளுக்கு மாற்றல் தர முடியும் என்று சொல்கிறது.
8 ஆம்குறள் அருள் வடிவினனான இறைவனின் தாளை இடைவிடாது நினைந்தவர் குற்ற உணர்ச்சிகளிலிருந்து மீள வழியுண்டு எனச் சொல்வது.
9 ஆம்குறள் இறைவனை திருவடியை வணங்காதவர் தலை இருந்தும் இல்லாதது போல்தான் எனக் கூறுகிறது.
10 ஆவதுகுறள் இறைவன் அருள் இருந்தால் மட்டுமே நாம் வாழ்க்கை என்னும் கடலைக் கடக்க முடியும் என்கிறது.

கடவுள் வாழ்த்தும் சமயங்களும்:
கடவுள் வாழ்த்தில் வள்ளுவர் எந்தச் சமயக் கருத்துக்களைக் கூறுகிறார் என்ற தேடுதல் காலம்காலமாக நடைபெற்றுவருகின்றது.

பரிப்பெருமாள் என்ற பழைய உரையாசிரியர் குறள் 9-க்குக் கூறிய உரையில் ''இவ்வதிகாரத்திற் கூறிய கடவுட் பெயர் எல்லாம் ஒரு சமயத்தார் கூறும் பெயரன்றி, வேறு வேறாகப் பலசமயத்தார் கூறும் பெயராகத் தோன்றா நின்றது எனச் சொல்கிறார். இவரது கூற்று வள்ளுவர் பலசமயப் பெயர்கள் தோன்றுமாறு விரும்பியே இவ்வதிகாரப் பாடல்களை யாத்தாரா? என்ற ஐயத்தை உண்டாக்குகிறது. எல்லாச் சமயங்களும் மெய்ப்பொருளான முழுமுதற்கடவுளை நோக்கித்தான் செல்வன என்பதை உணர்த்துவதற்காக பலசமயப் பெயர்கள் தோன்றுமாறு பாடல்களை இயற்றி இருக்கலாம். குறள் படிப்போர்க்கெல்லாம் அவரவர் தம் சமயங்களையும், கோட்பாடுகளையும் உணர்த்துவதாக அமைந்துள்ளதால் இந்நூல் சமயம் கடந்த நிலையை உறுதிப்படுத்துகிறது என்பதும் விளங்கும்.

கடவுள் குறித்த வள்ளுவரின் விளக்கங்கள் ஸ்ரமணத்தின் (சமண-புத்த-ஆசீவக) சமண சமயக் கடவுளுக்கும் பௌத்த சமய போதிசத்துவருக்கும் பெரிதும் பொருந்துகின்றன என்று சமண, புத்த சமயத்தினர் கூறுவர். ஆதிபகவன், வாலறிவன், மலர்மிசை ஏகினான், வேண்டுதல் வேண்டாமை இலான், இறைவன், பொறிவாயில் ஐந்தவித்தான், தனக்கு உவமை இல்லாதான், அறவாழி அந்தணன், எண்குணத்தான் என்பன சமண/புத்தப் பெரியோர்களையே குறிப்பன என்று கூறி அதற்குத் தங்கள் சமய நூல்களிலிருந்து சான்றும் கூறுவர்.
கடவுள் வாழ்த்தில் முதல் குறள் மூன்றையும் முறையே சிவன், மால், அயன் என்ற வரிசையில் மறைமுகமாகக் குறித்து இருக்கிறார் என்று தோன்றுவதாகவும் ஆதிபகவன் என்பது அரனையும், வாலறிவன் என்பது மாலவனையும், மலர்மிசை ஏகினோன் என்பது அயனையும் சுட்டுவது என்பதாக வைதிகர்கள் சொல்கின்றனர். இவர்களுள்ளும் முதல் அதிகாரப்பாக்கள் சைவத்தையே குறிக்கும் என்று சைவர்களும் வைணவைத்தையே சொல்கிறது என்று வைணவர்களும் ஆதாரங்களைத் தேடித் தருவர்.

பொதுவாக சமய நூல்களில் கடவுள் விரும்பித் திட்டமிட்டு உலகையும் பிறவற்றையும் படைத்ததாகக் கூறி இறையாற்றலைப் போற்றுவர். அது போன்ற கருத்துக்கள் குறளகத்து இல்லை; வள்ளுவர் நீண்ட இசைப் பாடல்களை எழுதவில்லை; பொழிவுகள், கடவுள் தொடர்பான நெடிய விளக்கங்கள் குறளில் பதிவாகவில்லை; பெரும்பான்மைச் சமயங்கள் அவதாரம் அதாவது கடவுள் மக்களில் ஒருவராகப் பிறந்து, வாழ்ந்து, மறைதல் பற்றி பேசுகின்றன. கடவுள் வாழ்த்து அதிகாரமும் ஆற்றல்மிகு அறிஞர்கள், சான்றோர்கள், பேரா இயற்கை எய்தியவர்கள், குருமார் ஆகியோரை மனத்தில் இருத்தித்தான் வள்ளுவர் படைத்தார் என்று கூறுவோரும் உளர். ஆனால் வள்ளுவர் காட்டும் கடவுள் மூலமும் முதலுமாய முழுமுதற்பொருள் ஆகும். அது அவதாரம் அல்ல.
கடவுள் உள்ளமையில் நம்பிக்கை கொண்டு, உலகப் படைப்பின் உட்பொருளை உணர்ந்து ஒழுகும் வாழ்க்கை நெறியைப் 'பொய்தீர் ஒழுக்கநெறி' எனக் குறள் 6 குறிக்கிறது என்பர் ஆய்வாளர்கள். இது ஏதேனும் ஒரு சமய நெறியையே சொல்கிறது என்பர் சமயக்கணக்கர். ஆனால் ஒழுக்கநெறிகள் பல உள்ளன என்பதாகவும் அவற்றுள் மெய்யான ஒழுக்க நெறி எதுவென்பதைத் தெளிந்து, அந்நெறியில் நின்று ஒழுகுக என்றுதான் இக்குறள் (6) அறிவுறுத்துகிறது. பொய்தீர் ஒழுக்கநெறி என்பது சமயநெறியைக் குறிப்பதாகக் கொண்டாலும் வெவ்வேறு சமயங்கள் வெவ்வேறு நெறிகளை, இறைவன் பெயரால் அல்லது இறை தொடர்பானவற்றால் கூறி வருகின்றன என்பதால் அவற்றுள்ளும் மெய்யான ஒழுக்க நெறி அறிந்து அதன்படி ஒழுக வேண்டும் என்பது வள்ளுவர் அறிவுரையாகும்.
ஆயினும் கடவுள் வாழ்த்திலோ குறளில் மற்ற எவ்விடத்திலுமோ குறிப்பிட்ட எந்தச் சமயக் கருத்துக்களும் இடம்பெறவில்லை.
குறள் ஒரு சமயத்திற்காகத் தோன்றிய நூலன்று; இதில் சமயம் தேடுதல் பயனற்றது.

முரண் களைதல்:
கடவுள் வாழ்த்தில் முரண்கள் உள்ளதாகச் சுட்டிக் காட்டுவர். ஆனால் அவை முரண் ஆகா என்பதை அறிஞர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். முரண்களும் அதற்குரிய விளக்கங்களும் கீழே தரப்பட்டுள்ளன:
1. கடவுளைப் பால், திணையுள் அடக்கிக் கூறப்பட்டுள்ளது:
ஆதிபகவன், வாலறிவன், தனக்குவமையில்லாதான், எண்குணத்தான் என்றபடி ஆண்பால் வடிவினனாகவும் உயர்திணை வகையாகவும் கடவுள் தோற்றமளிப்பதாக இருந்தாலும், உருவமில்லாக் கடவுளே கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் காட்டப்படுகிறது. படிப்போர் உள்ளத்தில் உணர்த்தும் பொருட்டே திணையோடு சேர்த்துக் கூறப்படுகிறது. இது இறை இயல்பை மீறுவதாகாது.
2. மெய்ப்பொருளுக்கு அடி (தாள்) உண்டா?
முகமே உருவத்தை அடையாளம் காட்டக்கூடியது. முதல் அதிகாரத்தில் எங்கும் முகம் விவரிக்கப்படவில்லை. அடி ஒன்றே கூறப்பட்டுள்ளது. அதுவும் அடிகள் என்னாமல் ஒருமையில் அடி எனச் சொல்லப்பட்டுள்ளது. அடி என்பது 'இறைவன் அருள்' என்னும் பொருள்படவே ஆளப்பட்டுள்ளது. அது உறுப்பல்ல. எனவே முரணாகாது.
3. கடவுளுக்கு ஏது குணம்? எப்படி அவன் எண்குணத்தான் ஆவான்?
எண்குணத்தான் என்றதற்கு எட்டுக் குணங்கள் என்ற பொருள் மட்டும் அல்லாமல் 'எண்ணிய குணம் கொண்டவன்; என்ற பொருளும் 'எளிய குணம் கொண்டவன்' என்ற பொருள்களும் உண்டு. அன்பர் எண்ணிய குணம் கொண்டவன் எனக் கொள்வதால் இம்முரணும் நீங்கும்.
4. 'ஏகினான்' என்று எங்கும் நிறைந்திருக்கும் இறைவனை வினையொடு படுத்திக் கூறலாமா?
மலர்மிசை ஏகினான் என்பதற்கு அன்பர்கள் உள்ளமலர்களில் புகுந்தவன் என்ற பரிமேலழகர் உரையை நோக்கினால், இந்த முரண் களையப்படும்.
5. பொறியும் புலனுமற்ற இறைவன் எப்படி ஐந்தவித்தான் ஆகமுடியும்?
மக்கள் ஐந்தவித்தான் (ஆகி) ஒழுக்கநெறியின் வழுவாது நிற்பாராயின் நீடுவாழ்வார் என்பது அப்பாடல் (குறள் 6) கூறும் கருத்து. ஐந்தவித்தான் என்பது இறைவனைக் குறியாது மாந்தரையே கூறுவதால் முரண் என்ற கேள்விக்கு இடமில்லை.

கடவுள் வாழ்த்து அதிகாரச் சிறப்பியல்புகள்:
கடவுள் வாழ்த்துப் பாக்கள் அனைத்திலும் வள்ளுவர் தன் கவிதைப் பேராற்றலை வெளிப்படுத்தியுள்ளமையைத் தெற்றெனக் காணமுடிகிறது.
செய்யுளில் பொருட்செறிவு என்பது கவிஞன் கருதியமைத்த பொருளோடு குறிப்பும் உள்ளுறையுந்தோன்ற நிற்றல் என இலக்கண நூல்கள் கூறும். இப்பொருட்செறிவு கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் மேலோங்கி நிற்கிறது.
எல்லா சமயத்தினரும் அவரவர்களின் முரண்பட்ட கடவுள் கோட்பாட்டுக்குக் குறள் பொருந்துவதாக உரிமை கொண்டாடுகின்றனர். இவ்வாறு முரணைக் கடந்து செல்வதைத்தான் வள்ளுவர் விரும்பினார் என்று தோன்றுகிறது. வெவ்வேறாகப் பலசமயத்தார் பெயர் தோன்றும்படி கூறி, முடிவில், பயில்வோர் மனதில், பொதுமைக் கடவுள் தோன்றும்படி செய்துவிடுகிறார் வித்தகக் கவிஞரான வள்ளுவர்.

இறைவனை 'அறவாழி அந்தணன்' என வள்ளுவர் குறிப்பிடுவதிலிருந்து அறத்துக்கும் இறைநிலைக்கும் தொடர்பு பெரிதானது என்பது பெறப்படும்.
இறைவனுடைய பண்புகளாக வள்ளுவர் தொகுத்துக் கூறியவை ஒரு அறக்கடவுளை நம்முன் நிறுத்துகிறது. முற்றறிவு பெற்ற இக்கடவுள் விருப்பு வெறுப்பு அற்றவர், தண்ணளி செய்பவர், அவர் அறக்கடலை உடையவர், உலக முதல்வனை- பொதுக்குணத்தவனை-ஒழுக்கத் தனி முதல்வனாக நமக்கு அறிமுகப்படுத்தியமையால், அவனை நினைவால் தொழும் நாமும் வாலறிவராக, பற்றற்றவராக, ஐந்தவித்தவராக, அறவாழி அந்தண்மையராக வளரல் வேண்டும் என்பது வள்ளுவம் என்பார் வ சுப மாணிக்கம். அறவழியில் மனிதர் உறுதியாக நிற்றலே நிறைந்த வழிபாடு என்பதும் சிறந்த இறைவாழ்த்தாகிறது. கடவுள் வாழ்த்துக்கும் அறங்களுக்கும் உள்ள இணைப்பு பற்றிய தண்டபாணி தேசிகர் கருத்து நினைக்கத்தக்கது: "அறங்கள் நிலைக்க வேண்டுமானால் கடவுள் உணர்ச்சி இன்றியமையாதது; கடவுள் வாழ்த்துதலும் ஓர் அறமாம் என்று கருதியே இவ்வதிகாரம் படைக்கப்பட்டது; "எங்கும் உளனொருவன் காணுங்கொல் என்று அஞ்சி அங்கங்குலைவது அறிவு" (பொருள்: எங்கும் நிறைந்த இறைவன் காண்கின்றானென்று நடுங்கி, உடல்பதறுவதே அறிவாகும்) என்று குமரகுருபர் கூறியதுபோல கடவுளுணர்வு இருந்தாற்றான் அறங்கள் யாவும் நின்று நிலவும் என்பதற்காகவே கடவுள் வாழ்த்தையும் முதலறமாகக் கருதுகிறார் வள்ளுவர். ஆகவே அறத்துப்பால் கடவுள் வாழ்த்திலிருந்தே ஒவ்வோர் அறமாக இயங்குகிறது."

வள்ளுவர் காட்டும் கடவுளும் வழிபாட்டு முறையும் புதியன.
கடவுள் பற்றிய விளக்கத்தை முதற்குறளில் சொல்லப்பட்ட ஆதிபகவன் என்ற தொடர் சுருக்கமாகவும் தெளிவாகவும் வெளிப்படுத்துகிறது. அலகிலா உலகனைத்துக்கும் ஆதியாய், முடிவிலா முதல்வனாய், தனக்குவமை இல்லாத ஒருவனான இறைவனையே கடவுள் வாழ்த்து அதிகார வழி வள்ளுவர் நமக்குக் காட்டுகிறார்.
பலதெய்வ வழிபாட்டையும் பலநிலை வழிபாடுகளையும் மேற்கொண்டிருந்த சமுதாயத்தினிடை வள்ளுவர் ஒரு-தெய்வக் கொள்கையை உடையவராய் இருந்தார் என்று தெரிகிறது.
நிலத்திற்கோர் தெய்வமென்பது பழங்கோட்பாடாக இருந்தது. முருகன், கொற்றவை, காமன், நடுகல் இவற்றின் வழிபாடு அன்றைய மக்களிடம் இருந்தது. வள்ளுவர் மேற்கூறிய எந்த தெய்வத்தையும் வழிபாட்டையும் குறளில் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை.
சமயக் கூறுகளான நம்பிக்கைகள் மற்றும் சடங்குகள் கடவுள் வாழ்த்தில் பேசப்படவில்லை.
தெய்வங்களுக்கு விலங்குப்பலி, குருதிப்பலி கொடுக்கும் வழக்கம் இருந்தது; அவற்றிற்கு கள், மாமிசம் கலந்த சோறு, அவித்த பருப்பு, எள்ளுருண்டை முதலியனவும் படைக்கப்பட்டதாக வள்ளுவர் காலத்துக்கு முந்தைய நூல்கள்வழி அறிகிறோம். ஆனால் கடவுள் வாழ்த்தில் இவ்விதப் பலிகளோ, தீயை வணங்குதல், திசையை வணங்குதல், கோயில் முன்னே நின்று கும்பிடுதல் போன்றவையோ, படையல்களோ, பூசை முறைகளோ, சமய விழாக்களோ கூறப்படவில்லை.
குற்றங்களிலிருந்து மீளக் கழுவாய் (பிராயச்சித்தம்), அதற்கான வேள்வி, பாவமன்னிப்பு, அர்ச்சனை, ஆசாரச் சடங்குகள் போன்றவை சொல்லப்படவில்லை.
வழக்கில் இருந்த தெய்வ வழிபாட்டு முறைகள், சடங்குகள், விழாக்கள், போன்ற எல்லாவற்றிலிருந்தும் வள்ளுவர் மிகத் தள்ளி நின்றார் என்பது வெள்ளிடைமலை.
இறைவனே அனைத்துக்கும் மூலமும் முதலுமாய முழுமுதற்பொருள் என்றும், அம்முழுமுதற்பொருளின் உண்மை உணர்ந்து அதனை நினைத்து வழிபட்டுத் தன் வாழ்வை ஒழுங்குபடுத்திக்கொள்ளுதல் வேண்டும் என்பதே கடவுள் வாழ்த்து தரும் செய்தியாகும். சிந்தையும் புலனும் கடந்த பொருளுக்கு, மாந்தர் தம் அறிவுக்கும் உணர்வுக்கும் எட்டும் முகத்தான், குணநலன்கள் ஓதி அதனை அதன் உருவமற்ற தாளை இடைவிடாது நினைத்து புகழ்பாடி வணங்கச் சொல்கிறார். 'கடவுள் வாழ்த்து'ம் முறையில் இது ஒரு புதுமையாகும்.
'இறைவன் அடி சேர்தல்' அதாவது கடவுளை மறவாது நினைத்தல் என்பதை இறைவணக்கமாகச் சொன்னது வள்ளுவரின் சிறப்புப் பங்களிப்பு ஆகும்.
பிறநூற்களில் சொல்லப்பட்ட ஐம்புலனும் அறுபகையும் கடவாத, கடவுளரைப் போல் அல்லாமல், ஒரு தனித்த கடவுளையும்..ஒரு தனித்த வழிபாட்டு முறையையும் நமக்கு அறிமுகப்படுத்துகிறது வள்ளுவரின் முதல் அதிகாரம்.

இந்நூலின் கடவுள் வாழ்த்திற்கும் ஏனைய நூல்களின் கடவுள் வாழ்த்திற்கும் வேறுபாடு உண்டு. ஏனைய நூல்களில் எடுத்துக்கொண்ட நூல் இனிது நிறைவேறுதற் பொருட்டும், நின்று நிலவுதற் பொருட்டும் கவிஞர் கடவுளை வாழ்த்துவர். இந்நூலில் கடவுளின் பொது இயல்பும், சிறப்பு இயல்பும் கூறி அவரை வாழ்த்துதலின் பயனும் கூறப்படுகின்றன. இதனை ஊன்றி ஆராயின் கடவுளை வாழ்த்துதலும் தலையாய அறம் அல்லது ஒழுக்கம் என்பது உணர்த்தப் பெற்றதேயன்றி ஏனைய நூல்களைப் போலப் பயன் கருதிக் கடவுளை வாழ்த்தவில்லை.
- ச தண்டபாணி தேசிகர்

நன்றி: குறள் திறன் தளம் 
-----
கடவுள் வாழ்த்து
 
1. அகரம் முதல, எழுத்து எல்லாம்; ஆதி-
        பகவன் முதற்றே, உலகு.

2. கற்றதனால் ஆய பயன் என்கொல்-வால்-அறிவன்
        நல் தாள் தொழாஅர் எனின்?.

3. மலர்மிசை ஏகினான் மாண் அடி சேர்ந்தார்
        நிலமிசை நீடு வாழ்வார்.

4. வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு
        யாண்டும் இடும்பை இல.

5. இருள் சேர் இரு வினையும் சேரா, இறைவன்
        பொருள் சேர் புகழ் புரிந்தார்மாட்டு.

6. பொறி வாயில் ஐந்து அவித்தான் பொய் தீர் ஒழுக்க
        நெறி நின்றார் நீடு வாழ்வார்.

7. தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்,
        மனக் கவலை மாற்றல் அரிது.

8. அற ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்,
        பிற ஆழி நீந்தல் அரிது.

9. கோள் இல் பொறியில் குணம் இலவே-எண்குணத்தான்
        தாளை வணங்காத் தலை.

10. பிறவிப் பெருங் கடல் நீந்துவர்; நீந்தார்,
        இறைவன் அடி சேராதார்.
 
நன்றி: தமிழ் இணையக் கல்விக் கழகம் 
-----

தேமொழி

unread,
Oct 18, 2023, 7:56:59 PM10/18/23
to மின்தமிழ்
2. வான் சிறப்பு

வான் சிறப்பு அதிகாரம் மழையின் பெருமை கூறுவது. மழையின் இன்றியமையாமை பற்றியும், மழை இன்மையால் நேரும் இன்னல்கள் பற்றியும் விளக்குவது. நிலவளமும் கடல் வளமும் மாந்தரின் மனவளமும் உலக ஒழுங்கமைவுமே மழைநீரால்தான் அமையும் எனச் சொல்லும் அதிகாரம். காணமுடியாத கடவுளின் ஆற்றல் அவனது தண்ணருளின் செயலாகிய மழையால் உணரப்படுகிறது என்பதால் கடவுள் வாழ்த்துக்கு அடுத்ததாக வான் சிறப்பை அமைத்தார் வள்ளுவர்.

வான் சிறப்பு அதிகாரம் தேவையா?
...........-மாரி வறப்பின், தருவாரும் இல்லை; அதனைச் சிறப்பின், தணிப்பாரும் இல் (11 அறத்துப்பால், பழவினை 104) என்னும் நாலடியார். இதன் பொருள் ..... மழை பெய்யாதொழிந்தால் அதனைப் பெய்விப்பார் வேறு யாருமில்லை; மிகப் பெய்தால் அதனைத் தடுத்து நிறுத்துவாரும் வேறு  யாருமில்லை   என்பது. இங்ஙனமிருக்க வான்சிறப்பைக் கூறுவது எதற்காக? என்ற கேள்வி எழுகிறது.

வான் சிறப்பு பாடப்பட்டது மழையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அல்ல; மழை கடவுள் ஆணையால் வருவது. அது மனிதரின் ஆளுகைக்குட்பட்டதல்ல. ஒரு நாடு வேளாண்மை சார்ந்த சமூகமானாலும், வறண்ட பாலைநிலச் சமூகமானாலும் அதன் உயிர்களின் ஆதாரம் மழைநீரே. மாந்தரது வாழ்க்கையின் சிறப்பும் அமைதியும் வலுவான பொருளாதாரத்தின் அடிப்படையிலேயே அமைகிறது. மழை இன்றேல் பொருளியல் வாழ்வே பொன்றிவிடும். பொருள் நிலைக்கு அடியாய், மூலத்தொழிலுக்கு இன்றியமையாததாய் விளங்குவது மழை. வான் வழங்காவிட்டால் பயித்தொழில் நடவாது. உழவு இல்லையென்றால் விளைபொருள் இல்லை. உணவு இல்லையானால் பசிக்கொடுமை மக்களை வாட்டும்; அவர்களது வாழ்க்கையில் அமைதி நிலவாது. உலகில் அமைதியும் சிறப்பும் நிலவும்போதுதான் இறையுணர்வும் தொடரும்; வளமான பொருளியல் வாழ்க்கையில்தான் மனிதப்பண்பு மிளிரும்; ஒழுக்கம் மேன்மையுறும். மழை வளத்தை நாம் திறம்படப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பது அறியப்பட வேண்டும். மழையின் இன்றியமையாமையைச் சொல்லி அது வணங்கத் தக்கவைகளுள் ஒன்று என்று உணரவைக்கவே வான்பற்றி வள்ளுவர் விரிவுபடக் கூறினார்.

வான் சிறப்பு:
வான் விண்ணைக் குறிக்கும்; விண்ணில் நிலவும் மேகத்தைக் குறித்து மேகத்தின் வழி பெய்யும் மழையின் பெருமையை வான் சிறப்பு பேசுகிறது. இவ்வதிகாரத்து முதல் இரண்டு பாடல்களும் உணவும் நீரும் வழங்கும் மழையின் வள்ளன்மை கூறும்; மற்ற பாடல்கள் அனைத்தும் மழை இன்மையால் உண்டாகும் துன்பங்கள் சொல்லப்பட்டன. முன்றாம் பாட்டில் பசிக் கொடுமையும், நான்காம் ஆறாம் பாட்டில் விளைச்சல் பாதிப்பும், ஐந்தாம் பாட்டில் மழையின் பேராற்றலும், ஏழில் கடலாக்கம் குன்றுவதும், எட்டு ஒன்பதில் ஆன்மீக உணர்வு குறைவதும் மனிதப் பண்புகள் மறைவதும், பத்தில் ஒழுக்கம் அமையாமையும் சொல்லப்பட்டுள்ளன.

வான் சிறப்பு அதிகாரம் தவிர்த்து வேறு பல இடங்களிலும் மழையை முன்நிறுத்திப் பாடப்பட்ட குறட்பாக்கள் உள்ளன. மழை வள்ளுவரின் உள்ளத்தை மிகவும் கவர்ந்திருக்கின்றது என்பார் மு வரதராசன் (மு வ). 'வள்ளுவர் பலமுறை உவமையாக எடுத்தாண்டிருப்பது மழையே ஆகும். ஒப்புரவாளரின் கைம்மாறு வேண்டாத கடப்பாட்டை எண்ணும்போது 'மழைக்கு உலகம் என்ன கைம்மாறு செய்யமுடியும்? '(ஒப்புரவறிதல், 211) என்று நினைந்து வியக்கின்றார். அறநெறி தவறாமல் ஆளும் தலைவனுடைய செங்கோலை நோக்கிக் குடிமக்கள் வாழ்வார்கள் என்று செங்கோன்மை கூறும்போது உலகமெல்லாம் மழையை நோக்கி வாழும் சிறப்பை (செங்கோன்மை 542) உவமையாகக் கூறுகின்றார். ஆட்சித் தலைவன் அருள் அற்றவனாக உள்ள காரணத்தால் குடிமக்கள் துன்புறுவதை எடுத்துரைக்கும்போதும், மழைத்துளி காணாமல் உலகம் வருந்தும் நிலையைக் கூறி (கொடுங்கோன்மை 557) விளக்குகின்றார். பிறர்க்கு உதவியாக வாழும் நல்ல செல்வருக்கு நேரும் வறுமை மழையின் வறட்சி போன்றது (நன்றியில் செல்வம் 1010) என்று கூறுகின்றார். காதல் கொண்ட மகளிர்க்குப் பிரிந்து மீண்டும் வந்த காதலர் செய்யும் தலையளியைக் காதலி நினைக்கும்போது, உயிர் வாழும் மக்களுக்கு மழை பயன் பெருகப் பொழிதலை நினைந்து உருகச் செய்கின்றார் (தனிப்படர்மிகுதி 1192) நாட்டில் நல்ல ஆட்சி உள்ளபோது மழை பொழிந்து உதவும் (செங்கோன்மை 545) என்றும் ஆட்சி முறை தவறினால் மழை உதவாது (கொடுங்கோன்மை 559) என்றும் நம்பும் நம்பிக்கையும் திருவள்ளுவர்க்கு உண்டு' என்று குறளில் மழை ஆளப்பட்ட இடங்களை மு வ காட்டுவார்.

'இயற்கையே இறைவன்' என்பதை வள்ளுவர் நம்புபவர். மழை இயற்கையின் குறியீடாக அமைந்து இறையின் பருப் பொருளாகத் தோற்றம் அளிக்கிறது. இயற்கையில் அமைந்துள்ள பலவற்றிலும் சிறந்த மழையைப் போற்றுவது வான் சிறப்பு.

உலகில் பல இடங்களில் உயிர் ஊற்றுகள் (Life Springs) இருக்கின்றன. உயிர் நதிகளும் (Perennial Rivers) உள்ளன. இவற்றில் ஆண்டு முழுவதும் நீர் வற்றாமல் ஓடிக்கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் உயிர் ஆறு என்று சொல்லத்தக்கது பொதிகையில் தோன்றும் தாமிரபரணி (பொருநை) ஒன்றுதான். மற்றப்படி, இங்குள்ள ஆறுகள் பெரும்பாலும் பருவ மழையையும் வெளி மாநிலங்களிலிருந்து வரும் ஆற்றுநீரையும் நம்பி உள்ளவையாம். இதனாலேயே நாம் வான்நோக்கி வாழும் குடியாக உள்ளோம். நீர் வற்றிய ஆறுகளையும், ஆற்று மணல் மேடுகளையும், மழையின்றி உயிரினங்களும், செடி, கொடிகளும் வாடி, வதங்கிய காட்சிகளைப் பண்டைத் தமிழ்ச் செய்யுட்களும் காட்டுகின்றன.

மழை சார்ந்த சமுதாயத்தில் பொருள் வாழ்க்கை ஒரு சூதாட்டம் ஆகிவிடுகிறது - மழை பெய்தால் வளம்; மழை பொய்த்தால் வறட்சி, வறுமை, துன்பக்காட்சிகள். இவை இங்கு தொடர்ந்து வந்துகொண்டு இருப்பதை வரலாறு சொல்லும். மழையின் பெருமையையும் இன்றியமையாமையையும் நாம் நன்கு உணர்ந்தவர்களே. மழையைத் தெய்வமாக, மாரியம்மன் எனப் பெயரிட்டு (மாரி என்பதற்கு மழை என்பது பொருள்), ஊர்தோறும் கோயில்வைத்து வழிபடுகிறோம்.

எனவேதான் மழையின் தேவையையும் அதைவிட மழையின்மை பற்றியும் வான் சிறப்பு அதிகாரம் விரிவாக ஆய்கிறது.
வடக்கே வேங்கடத்துக்கும் தெற்கே குமரிக்கும் இடைப்பட்ட தமிழ்நாடு வெப்பப் பகுதியில் அமைந்துள்ளது. மழை மறைவுப் பகுதியாய்த் திகழ்கின்றதால் தமிழகம் நீர்த்தேவைக்காகப் போராடிக் கொண்டிருக்கும் மண்ணாகும். மழைநீரை நல்ல முறையில் சேமித்துப் பயன்பெறவேண்டும் என்ற செய்தியும் இவ்வதிகாரத்தின்கண் உள்ளது என்பது அறியப்படவேண்டும்.

வான் சிறப்பு அதிகாரப் பாடல்களின் சாரம்:
11 ஆம்குறள் உலகத் தொடர்ச்சியை நிலைநிறுத்துவதால் வான்மழை அமிழ்தம் எனப்படுகிறது என்கிறது.
12 ஆம்குறள் உணவுப்பொருளை விளைவிப்பதொடு தானும் நீராக உண்ணப்படுவது என்று மழையின் பயன் கூறுகிறது.
13 ஆம்குறள் வானம் மழை பொழியாவிட்டால் பசி நீக்க உணவு கிடைக்காது என்கிறது.
14 ஆம்குறள் மழைப் பொழிவு குறைந்தால் வேளாண்தொழில் நடைபெறாது என்பதைச் சொல்வது.
15 ஆம்குறள் உலகத்தை இயங்க வைக்கின்ற மழை சில சமயங்களில் இடர் உண்டாவதற்கும் காரணமாக உள்ளது என்கிறது.
16 ஆம்குறள் மழை பெய்யாது இருந்திட்டால், புல்லும் தலை காட்டாது. புல்லே முளைக்காது என்றால் பிற உயிரினங்களைக் காணமுடியுமா? எனக் கேட்பதுபோல் அமைகிறது.
17 ஆம்குறள் மழை பெய்யாவிடில் கடலும் தன் தன்மையில் மாறுபடும் என்று சொல்கிறது.
18 ஆம்குறள் மழையில்லை என்றால் தெய்வங்களும் நினைக்கப்படுவது இல்லை என்பதைச் சொல்வது.
19 ஆம்குறள் அறங்கள் தழைக்கவும் மண்ணுலகில் மழைபெய்தல் இன்றியமையாதது எனக் கூறுகிறது.
20 ஆவதுகுறள் உயிர்கள் நிலைபெற்றிருக்க மட்டுமல்ல, அவற்றின் ஒழுக்கத்திற்கும் மழையே காரணம் என்கிறது.
வான் சிறப்பு அதிகாரச் சிறப்பியல்புகள்
இவ்வதிகாரத்து துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை (12) என்ற பாடலில் முற்று மோனையும் முற்றெதுகையும் அமைந்து இனிய ஓசையின்பம் தந்து குறள் நடை சிறக்கின்றதை உணரமுடிகின்றது. அணியிலக்கண நூலார் இதனைச் சொற்பொருட் பின்வருநிலை என்பர் (இ சுந்தரமூர்த்தி).

விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உண்ணின்று உடற்றும் பசி (13) என்னும் குறள் மழை தொடர்ந்து பெய்யாது போனால் வறட்சி ஏற்பட்டு, பயித்தொழில் தடைபட்டு, பசிப்பிணி உண்டாகும், பசித்தீயால் வருந்துவதால் பட்டினிச் சாவுகள் பெருகும் என வேளாண் சார்ந்த பொருளாதாரத்துக்கு மழை எத்துணை இன்றியமையாதது என்பதைச் சொல்கிறது.

சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு (18) தானம் தவம் இரண்டும் தங்கா வியன்உலகம் வானம் வழங்கா தெனின் (19) ஆகிய பாடல்கள் மாந்தரிடம் இறையுணர்வும் மனிதமாண்புகளும் குன்றாதிருக்க மழை வேண்டும் என்பதைச் சொல்வன.

கடலிலிருக்கும் நீர், நிலத்தினடியில் இருக்கும் குகைவழிகள் மூலமாக நிலத்திலிருந்து மலைப்பகுதிகளை அடைந்து அங்கு மலைகளின் அழுத்தம் காரணமாக ஊற்றாக வெளிவருகின்றது என்று வெகுகாலமாக மக்கள் நம்பினர். கி பி 17-ஆம் நூற்றாண்டில்தான் சோதனைகள் மூலம், மழைநீரே ஊற்றுநீருக்கும் ஆற்றுநீருக்கும் ஆதாரம் எனப் பிரான்ஸ் நாட்டினர் கண்டு நிரூபித்தனர். 'அப்பொழுதுதான் நீரின்றி அமையாது உலகு எனின், அந்த நீரும் மழையின்றி அமையாது என்பது உறுதியாக்கப்பட்டது. இதே கருத்தை 2000 ஆண்டுகளுக்கு முன்பே இவ்வளவு தெளிவாக வள்ளுவர் (குறள் 20-இல்) கூறியிருப்பது அந்தக் காலத் தமிழ் மக்களுடைய அறிவு நிலையைக் காட்டுகிறது என்பதோடு வள்ளுவர் அன்றைய சூழ்நிலையில் வளர்ந்திருந்த கலைகள் அனைத்தையும் ஈடுபாட்டுடனும் தெளிவுடனும் அறிந்திருந்தார் என்பதையும் காட்டுகிறது' என்று வா செ குழந்தைசாமி தனது நூலில் குறித்துள்ளார்.

இயற்கைச் சக்திகளில் முக்கியமான ஞாயிற்றின் சிறப்பைக் குறிப்பிடாமல் மழையின் வான் சிறப்பைக் கூறியதும் வள்ளுவர் நடைமுறை வாழ்க்கைக்குக் (Practical Life) கொடுத்த முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. இயற்கை சக்திகளில் (சூரியன்) ஞாயிறே முக்கியமானது; சக்தி நிறைந்தது. மழைக்கும் ஒரு காரணமானது. மேலும், சூரியன் திட்டமிட்டு-மாறாமல் செயல்படுவது. ஞாயிறு பொய்த்து யாரும் இதுவரை துன்பப்படவில்லை. ஆனால் மழை எப்போது பெய்யும்; எவ்வளவு பெய்யும் என்று முன்னரே நிர்ணயிக்கமுடியாது. மேலும், மழை பெய்தும் (வெள்ளம் ஏற்பட்டும்)- பெய்யாமலும் கெடுக்கும் தன்மை உடையது. அதனால்தான் இயற்கைச் சக்திகளில் மழையைத் தேர்ந்தெடுத்து இரண்டாவது அதிகாரத்தில் அதன் சிறப்பைப் பாராட்டுகிறார்.
- செ வை சண்முகம்


நன்றி: குறள் திறன் தளம்
http://kuralthiran.com/KuralAthikaaraVilakkam/BrowseKuralAthikaaraVilakkam.aspx
-----
வான் சிறப்பு
[மு.வ. உரை]

11. வானின் றுலகம் வழங்கி வருதலாற்,
        றானமிழ்த மென்றுணரற் பாற்று.
மழை பெய்ய உலகம் வாழ்ந்துவருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத் தக்கதாகும்.

12. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
        துப்பாய தூஉ மழை.
உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவார்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்.

13. விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்
        துண்ணின் றுடற்றும் பசி.
மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்.

14. ஏரி னுழாஅ ருழவர் புயலென்னும்
        வாரி வளங்குன்றிக் கால்.
மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், (உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர்கொண்டு உழ மாட்டார்.

15. கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
        எடுப்பதூஉ மெல்லா மழை.
பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்குத் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்.

16. விசும்பிற் றுளிவீழி னல்லான்மற் றாங்கே
        பசும்புற் றலைகாண் பரிது.
வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது.

17. நெடுங்கடலுந் தன்னீர்மை குன்றுந் தடிந்தெழிலி
        தான்ல்கா தாகி விடின்.
மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும்.

18. சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
        வறக்குமேல் வானோர்க்கு மீண்டு.
மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடக்கும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது.

19. தானந் தவமிரண்டுந் தங்கா வியனுலகம்
        வானம் வழங்கா தெனின்.
மழை பெய்யவில்லையானால், இந்தப் பெரிய உலகத்தில் பிறர்பொருட்டுச் செய்யும் தானமும், தம் பொருட்டுச் செய்யும் தவமும் இல்லையாகும்.

20. நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்
        வானின் றமையா தொழுக்கு.
எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்.

தேமொழி

unread,
Oct 20, 2023, 11:33:34 PM10/20/23
to மின்தமிழ்
3. நீத்தார் பெருமை

தந்நலம் நீத்தார் பெருமை கூறும் அதிகாரம். மானிட உயர்வை அடையச் செல்லும் பாதையில் உள்ள மேன்மக்கள் பற்றிப் பேசுவது. தனிப்பட்ட விடுதலை நோக்கித் துறவறம் மேற்கொண்டவர்களைக் குறிப்பதல்ல இத்தொகுப்பு; உடற்பற்று விட்டு உடல்வாழ்வை பொதுநலத்துக்காகத் தந்து தொண்டு செய்பவர்களைச் சிறப்பிப்பது. மனித வாழ்வின் உச்சநிலை அடைந்தவர்களைப் போற்றுகிறது. இத்தகைய உயர்ந்தோரின் செயல்பாடுகள்தாம் சமுதாய ஆற்றலை உருவாக்குகின்றன. இதனாலேயே கடவுள் வணக்கம் சொல்லி, இறைவனின் அடையாளம் காட்டும் இயற்கையின் சிறப்பு கூறியபின் நிறைமனிதரின் இன்றியமையாமை கருதி பாயிரத்தின் மூன்றாவது அதிகாரமாக நீத்தார் பெருமை பாடுகிறார் வள்ளுவர். சிறப்பு வாய்ந்தவரில் மிக மேன்மையாளராகக் கருதப்படும் வெவ்வேறு வகைப்பட்ட மாந்தர்களை நீத்தார் என்ற பொதுப்பெயரில் அழைத்து அக்குழாத்து மாந்தர் சிலரை வகைப்படுத்தி இந்த அதிகாரத்தில் நமக்கு அறிமுகப்படுத்துகிறார் வள்ளுவர்.

நீத்தார்:
முதற்குறளில் உள்ள 'ஒழுக்கத்து நீத்தார்' என்ற சொற்றொடர் அதிகாரத்துத் தலைப்பிற்கு வரையறை காண்கின்றது. ஒழுக்கம் என்பது ஓர் ஒழுங்கைக் குறிக்கும் சொல். நீத்தார் என்பது துறந்தவர்கள் என்ற நேரடிப் பொருள் தரும். 'ஒழுக்கத்து நீத்தார்' என்றது முதல் வாசிப்பில் தெளிவு கொடுக்கவில்லை. மணக்குடவர் 'ஒழுக்கத்தின் பொருட்டு எல்லாப் பொருளையுந் துறந்தார்' என்று இத்தொடரை விளக்குவார். காலிங்கர் 'தாம் முன்னம் ஒழுகிய ஒழுக்கத்தினைப் பின்பு துறவு நெறி சொல்லுகின்ற ஒழுக்கத்தின்கண்ணே கருதி விட்டு நீங்கினார்' அதாவது இல்லற ஒழுக்கத்திலிருந்து துறவறம் சென்றவர்கள் என்பது இவர் உரையின் கருத்து. ஒழுக்கத்து நீத்தார் என்பதற்கு தன்னலந்துறந்து அறச்செயல்கள் மேற்கொள்ளும் பெரியார் எனப் பொருள் கொள்ளலாம். மக்கள் நன்மைக்காக உயிர் நீத்தவர்களைக் குறிப்பதாகவும் ஒரு விளக்கம் உள்ளது. தியாகிகள் என்ற பொருளும் நீத்தாருக்குப் பொருந்த வரும்.

இச்சொல்லின் நேர்பொருளை வைத்து ‘நீத்தார்’ என்பது முற்றும் துறந்த முனிவர்களைச் சொல்வது என்று பலரும் கருத்துத் தெரிவிப்பர். ஆனால் நூலுள் துறவுக்கென்று தனியதிகாரம் ஒதுக்கி விளக்கப்பட்டுள்ளதால் பாயிரத்தில் தீரத் துறந்தார் பெருமையைப் பற்றி எழுதத் தேவை இல்லை. எனவே இங்கு சொல்லப்பட்டுள்ள நீத்தார் வேறு. இது துறவறம் மேற்கொண்டவர்களைப் பற்றிக் கூறும் ஒரு அதிகாரம் அல்ல. 'சங்ககாலத்தில் நன்னெறி சார்ந்த உயர்குடி மக்களைக் காண்கிறோம். ஆனால் எந்தக் குழுவும் துறவு பூண்டதாக இல்லை' என்ற தெ பொ மீ யின் குறிப்பு இங்கு நோக்கத்தக்கது. வள்ளுவம் காட்டும் நீத்தார், பொதுநலம் நாடித் தவம் செய்பவர்கள். இவர்களது தவம் உடலால் உயிரால் உணர்வால் செய்யக்கூடியது. இவர்கள் தனக்கு என்றின்றி பிறர்க்காக, உயிர்களின் மேம்பாட்டுக்காக பணிபுரிபவர்கள்.
உண்டால் அம்ம, இவ் உலகம் -
......................... தமக்கு என முயலா நோன் தாள்,
பிறர்க்கு என முயலுநர் உண்மையானே (புறநானூறு 182)
(பொருள்: உண்டேகாண் இவ்வுலகம்...தமக்கென்றுமுயலாத வலிய முயற்சியையுடைய பிறர்பொருட்டென முயல்வார் உண்டாதலான்) என்ற சங்கப்பாடல் புகழ்ந்தேத்தும் பிறர்க்கென முயல்வார் அனைவர் பற்றியும் இவ்வதிகாரம் பேசுகிறது. பொதுநலம் பேணிப் பொருள்செறிந்த வாழ்க்கை வாழ்பவர்களே நீத்தார் ஆவர்.

நீத்தார் பெருமை:
அறத்தைக் கடமையாக ஏற்று வாழ்க்கைப் பணியாகக் கொண்டு, அதற்காகத் தம்மையே அளித்து, தொண்டு செய்து, மாந்தர் வாழ்க்கையைச் செப்பமாக்கும் செம்மல்களான செயல்வீரர்களைப் பற்றியது. அப்பெரியரை வள்ளுவர் ஒழுக்கத்து நீத்தார், தன்னலம் துறந்தார், அறம் பூண்டார், ஐந்தையும் காப்பான், ஐந்து அவித்தான், செயற்கரிய செய்வார், ஐந்தின் வகை தெரிவான், நிறைமொழி மாந்தர், குணமென்னும் குன்றேறி நின்றார், அறவோர், என்று அழைத்துச் சிறப்பிக்கிறார். இப்படிப் பல்திற வல்லமை கொண்டவர்களது ஆற்றலே சமுதாயச் சக்தியாக அமைந்து மாந்தரை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும். எனவே அவர்கள் மிகவும் போற்றுதற்குரியவர்கள்.

அரசு அமைப்பையும் சமுதாயத்தையும் இயக்கும் ஆற்றல் கொண்ட உயர்ந்தோரது தன்னலமற்ற தொண்டு பற்றியதே 'நீத்தார் பெருமை'. இங்கு பேசப்படும் நீத்தார் என்பவர் எந்தத் துறையில் இருப்பவராயினும் அத்துறையில் கருத்தாகச் செயல்பட்டு, உலக நலத்துக்காக, தனது தனித் தேவைகளை/இன்பங்களைத் தியாகம் செய்து, வாழ்க்கை வசதிகளைத் துறந்து சாதனை புரிபவர்கள். ஐம்பொறிகளைக் கட்டுப்படுத்தியவர்களாலே இது இயலும் என்பதை வள்ளுவர் அழுத்தமாகவே (மூன்று குறட்பாக்கள் ஒதுக்கி) சொல்வார். செயற்கரிய செய்யும் பெரியரும் இவர்களிலிருந்தே உருவாக முடியும்; அப்பெரியர் அரிய செயல்கள் புரிந்த அரசியல், சமூகத் தலைவராக, கல்வியாளராக, பொதுத்தொண்டு புரிவோராக, இருந்து சமுதாயத்திற்குப் பெருநன்மை நல்கியவராக இருப்பர். (காந்தி, காமராஜ், ஈ வே ரா, உ வே சாமிநாத ஐயர், ஆல்பர்ட் சுவைட்சர் போன்றோர் நினைவுக்கு வருவர்.) மற்றும் சிலர் காலத்தால் அழியாத இலக்கியம் படைத்தோராக (திருவள்ளுவர்), அல்லது அருளாளராக (அன்னை தெரசா) இருக்கலாம். இவர் போன்றோரை முழுமனிதராக அடையாளம் காட்டுகிறது இவ்வதிகாரத்துப் பாடல்கள்.

சமுதாய நலத்திற்காகப் பாடுபடும் அனைத்து நல்லவர்களும், கருணை மனம் கொண்டோரும், அறிவியல் அறிஞரும்-தம்நலம் துறந்து பொதுநலத்திற்காகப் பாடுபடுபவர் அனைவரும்- நீத்தார்க்கு உரிய வாழ்வும் பெருமையும் உடையவர்களே. இவர்கள் திருமணம் புரிந்துகொண்டு மனைவி மக்களோடு வாழ்ந்தார்களாயினும் இவர்களும் நீத்தாரே. புறவேடம் கொண்ட போலித் துறவிகளை வள்ளுவர் நீத்தாராகக் கருதமாட்டார்.

குறள் கூறும் நீத்தார் துய்த்தலைத் துறந்தவர்; மக்களுள் சிறந்தோர்; தன்னலம் கடிந்து பிறர் நலம் பேணும் பெற்றியாளர்; வாழ்க்கையின் சுமை தாங்கமாட்டாது கசப்புற்று உலகினைத் துறந்தவர் அல்லர்; வாழ்க்கையை வெறுத்தவர் அல்லர்; வாழ்வின்பம் துய்த்தோ துய்க்காமலோ, வாழ்வும் மனமும் முதிர்ச்சி பெற்று அறநெறி நிற்கும் தூயோர்; அவர்கள் அறத்தைப் பணியாக மேற்கொண்டதால் அறவோர் என அழைக்கப்பட்டனர். அறத்தை அறத்திற்காகவே செய்பவர்கள் அவர்கள் தீயநெறிகளை ஒதுக்கி, மன உறுதியுடன் ஐம்புலன்களையும் ஒடுக்கி, விழுப்பமுடைய வினைகளை ஒழுக்கம் வழுவாது ஓம்பி தொண்டாற்றி வருபவர்கள். அவர்கள் சமயம், மொழி, இனம், குலம், குடி என்ற வேறுபாடில்லாமல் அன்பு பாராட்டுபவர்கள். இறைவன் படைப்பில் தோன்றிய உயிர்கள் அனைத்தின்மீதும் அவர்கள் கருணை காட்டுவர். இங்கு இவர்கள் பெருமை குன்றின்மீது ஏற்றிக் காட்டப்பெறுகிறது.

நீத்தார் பெருமை அதிகாரப் பாடல்களின் சாரம்:
21 ஆம்குறள் ஒழுக்கத்திற்காக நீத்தார் பெருமையே விருப்பமான விழுப்பம் என பனுவல் முடிவு கொள்ளும் எனச் சொல்கிறது.
22 ஆம்குறள் நீத்தார் பெருமையை இறந்தாரை எண்ணி அறிந்து கொள்க என்கிறது.
23 ஆம்குறள் இருவேறு நிலைகளை ஆராய்ந்து தந்நலத் துறவு என்ற உயர்ந்த அறத்தை மேற்கொண்டார் பெருமையால் இந்த உலகம் ஒளிர்கின்றது என்கிறது.
24 ஆம்குறள் உளஉறுதியுடன் பொறிகளை அடக்கிய நீத்தார் மேலான இடம் செல்வர் என்கிறது.
25 ஆம்குறள் தவமுயற்சியுடன் செயல்பட்டு இந்திரபதவி பெற்றவன் போல ஐம்பொறிகளையும் அடக்கி ஆளும் நீத்தார் தனது குறிக்கோளை அடைவர் என்கிறது.
26 ஆம்குறள் செய்வதற்கு அரிய செயல்களைச் செய்பவர்கள் பெரியவர்கள்; அரிய செயல்களைச் செய்ய இயலாதோர் சிறியர் ஆகின்றனர் என்கிறது.
27 ஆம்குறள் ஐம்புலன்களின் கூறுபாடுகளைத் தெரிந்த நீத்தார் இவ்வுலகத்தை இயக்குவர் என்கிறது.
28 ஆம்குறள் நீத்தார் பெருமை அவர் அருளிச்சென்ற மொழியால் விளங்கும் என்கிறது.
29 ஆம்குறள் குணத்தில் சிறந்த நீத்தார்க்கு ஒருகணம் கூட சினம் தோன்றுவதில்லை என்கிறது.
30 ஆம்குறள் தந்நலம் நீத்த அருளாளரே அந்தணர் என்று அழைக்கப்படுவர்; அவர் எல்லா உயிர்கள் மேலும் கருணையுள்ளம் கொண்டவர் என்கிறது.

நீத்தார் பெருமை அதிகாரச் சிறப்பியல்புகள்:
கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு இவற்றை அடுத்து பனுவலின் மூன்றாவது அதிகாரமாகச் சிறப்புச் செய்யப் பெற்றதிலிருந்து, 'நீத்தார் பெருமை' யின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம். 'மணக்குடவர் கூற்றுப்படி பெரியவர்கள் நல்ல ஒழுக்கம் அல்லது அறத்திற்காக எல்லாவற்றையும் துறப்பர். திருக்குறள் முழுவதோடும் தொடர்புபடுத்திப் பார்க்கும்போது இவரது உரை அதிகாரத்தின் இன்றியமையாமையைச் சுட்டுகின்றது' (தெ பொ மீ).

நீத்தார் அரிய செயல்கள் புரியவல்லவர்கள் என்பதைக் கூறும் செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார் என்ற பாடல் இங்குதான் உள்ளது.

பொறிபுலன்களைக் கட்டுப்படுத்துவதின் இன்றியமையாமை குறளில் பல இடங்களில் குறிக்கப்பெற்றுள்ளது. அறம்பூண்டார் பெருமையால் உலகம் விளக்கம் பெற்றது என்று சொல்லியவர் சுவைஒளி ஊறுஓசை நாற்றமென் றைந்தின் வகைதெரிவான் கட்டே உலகு என்ற பாடல் மூலம் ஐந்தையும் அடக்கியவர் உலகை ஆள்வர் என்கிறார்.

அந்தணர் யார் என்பதைத் தெளிவுபடுத்தி எல்லா உயிர்களிடத்தும் அருள் பொழிவோரைப் பெருமைப் படுத்தும் அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான் என்னும் பாடல் இவ்வதிகாரத்திலே உள்ளது.

சமுதாய உயர்வையே குறிக்கோளாகக் கொண்டு, அதற்காகவே தம்மை அர்ப்பணித்து, தொண்டு செய்து வாழும் பெரியார்களை, ஒழுக்கத்து நீத்தார், துறந்தார், இருமை வகை தெரிந்து அறம் பூண்டார், ஐந்தின் வகை தெரிவான், ஐந்தும் காப்பான், ஐந்து அவித்தான், அந்தணர், நிறைமொழி மாந்தர், பெரியர், குணம் என்னும் குன்றேறி நின்றார் என்று வள்ளுவம் வகைப்படுத்துகிறது. உரையாசிரியர்களோ இத்துணைச் சீரிய சமுதாய வழிகாட்டிகளையும், 'நீத்தார்' எனப் பொதுவாகச் சாற்றி, சமூக நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்ட துறவிகளாக்கி ஒதுக்கி விட்டனர்.
- கு ச ஆனந்தன்



நன்றி: குறள் திறன் தளம்
http://kuralthiran.com/KuralAthikaaraVilakkam/BrowseKuralAthikaaraVilakkam.aspx
-----
3. நீத்தார் பெருமை
[மு.வ. உரை]

21. ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
     வேண்டும் பனுவற் றுணிவு.
ஒழுக்கத்தில் நிலைத்துநின்று பற்றுவிட்டவர்களின் பெருமையைச் சிறந்ததாகப் போற்றிக் கூறுவதே நூல்களின் துணிவாகும்.

22. துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்
      திறந்தாரை யெண்ணிக்கொண் டற்று.
பற்றுகளைத் துறந்தவர்களின் பெருமையை அளந்து கூறுதல், உலகத்தில் இதுவரையில் பிறந்து இறந்தவர்களை எண்ணிக் கணக்கிடுவதைப் போன்றது.

23.  இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்
      பெருமை பிறங்கிற் றுலகு.
பிறப்பு வீடு என்பன போல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்தது.

24.  உரனென்னுந் தோட்டியா னோரைந்துங் காப்பான்
      வரனென்னும் வைப்புக்கோர் வித்து.
அறிவு என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கிக் காக்க வல்லவன், மேலான வீட்டிற்கு விதை போன்றவன்.

25.  ஐந்தவித்தா னாற்ற லகல்விசும்பு ளார்கோமா
      னிந்திரனே சாலுங் கரி.
ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்.

26.  செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
      செயற்கரிய செய்கலா தார்.
செய்வதற்கு அருமையான செயல்களைச் செய்ய வல்லவரே பெரியோர். செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர்.

27.  சுவையொளி யூறொசை நாற்றமென் றைந்தின்
      வகைதெரிவான் கட்டே யுலகு.
சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று சொல்லப்படும் ஐந்தன் வகைகளையும் ஆராய்ந்து அறிய வல்லவனுடைய அறிவில் உள்ளது உலகம்.

28.  நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
      மறைமொழி காட்டி விடும்.
பயன் நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை, உலகத்தில் அழியாமல் விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும்.

29.  குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி
      கணமேயுங் காத்த லரிது.
நல்ல பண்புகளாகிய மலையின்மேல் ஏறிநின்ற பெரியோர், ஒரு கணப்பொழுதே சினம் கொள்வார் ஆயினும் அதிலிருந்து ஒருவரைக் காத்தல் அரிதாகும்.

30.  அந்தண ரென்போ ரறவோர்மற் றெவ்வுயிர்க்குஞ்
      செந்தண்மை பூண்டொழுக லான்.
எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால் அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்.

இசையினியன்

unread,
Oct 24, 2023, 2:28:41 AM10/24/23
to மின்தமிழ்
///  கடவுள் என்ற அழகிய சங்கச் சொல் எல்லாவற்றையும் கடந்து நிற்பது என்ற பொருள் தருவது. எல்லாவற்றிலும் நீக்கமறக் கலந்து நிற்பதையும் குறிக்கும்.
  1. என் வகுப்பு தமிழ் ஆசிரியர், பின்வருமாறு கூறுவார்.
  2. கடவுள் என்னும் சொல் உள்+கட என்னும் சொற்களின் கூட்டுச் சொல். 
  3. இந்த  கூட்டுச் சொல்லை தொடர்ந்து கூறினால்  கடவுள் எனக்கிடைக்கும். அல்லது பிறர் காதுகளை  கடவுள் எனச் சென்றடையும்.
  4. உள்+கட
    1. உன்னுள்ளே கட 
    2. உள்ளதைக் கட
    3. உள்ளத்தைக் கட
  5. இவற்றை யார் செய்கிறாரோ அவர் கடவுள் என்னும் ஒன்றை அறிவார், காண்பார், அடைவார்.
    1. கடவுள் என்பதன் நிலைகளே (God's states - கடவுள் தன்மைகள்) வள்ளுவரின் முதல் அதிகாரம் கூறும் பெயர்ச் சொற்கள். அவை
      1. ஆதிபகவன்
      2. வால்-அறிவன்
      3. மலர்மிசை ஏகினான்,  மாண் அடி சேர்ந்தார்
      1. இலான் அடி சேர்ந்தார்
      1. இரு வினையும் சேரா இறைவன்
      1.  ஐந்து அவித்தான்
      1. தனக்கு உவமை இல்லாதான்
      1. அற வாழி அந்தணன்
      1. பொறியில் குணம் இலவே-எண்குணத்தான்
      1. பிறவிப் பெருங் கடல் நீந்துவர்

தேமொழி

unread,
Oct 24, 2023, 3:06:29 AM10/24/23
to மின்தமிழ்
///கடவுள் வாழ்த்தில் முதல் குறள் மூன்றையும் முறையே சிவன், மால், அயன் என்ற வரிசையில் மறைமுகமாகக் குறித்து இருக்கிறார் என்று தோன்றுவதாகவும் ஆதிபகவன் என்பது அரனையும், வாலறிவன் என்பது மாலவனையும், மலர்மிசை ஏகினோன் என்பது அயனையும் சுட்டுவது என்பதாக வைதிகர்கள் சொல்கின்றனர். இவர்களுள்ளும் முதல் அதிகாரப்பாக்கள் சைவத்தையே குறிக்கும் என்று சைவர்களும் வைணவைத்தையே சொல்கிறது என்று வைணவர்களும் ஆதாரங்களைத் தேடித் தருவர்.///

/// 
எல்லா சமயத்தினரும் அவரவர்களின் முரண்பட்ட கடவுள் கோட்பாட்டுக்குக் குறள் பொருந்துவதாக உரிமை கொண்டாடுகின்றனர். இவ்வாறு முரணைக் கடந்து செல்வதைத்தான் வள்ளுவர் விரும்பினார் என்று தோன்றுகிறது. வெவ்வேறாகப் பலசமயத்தார் பெயர் தோன்றும்படி கூறி, முடிவில், பயில்வோர் மனதில், பொதுமைக் கடவுள் தோன்றும்படி செய்துவிடுகிறார் வித்தகக் கவிஞரான வள்ளுவர்///

இது போல ஒரு கருத்துகள்  அதிகார விளக்கத்தில் உள்ளது.   
என்னைப் பொருத்தவரை அவரவர்  கவனத்தில் ஓரிரு குறள்கள் இந்தக் கடவுளுக்குப் பொருந்துகிறது அந்தக் கடவுளுக்குப்  பொருந்துகிறது அதனால் வள்ளுவர் இந்த இந்த சமயத்திற்குக் கூறினார் என்பதைவிட . . .  அத்தனை குறள்கள் காட்டும் பண்புகளும்  எவருக்குப்  பொருந்துகிறது என்பதைப் பார்க்க வேண்டும்.  ஆனால் அவர் கடவுளாக  இருக்கத் தேவையில்லை. ஏனெனில் திருக்குறளில் `கடவுள்` என்ற சொல்லே இல்லை. தெய்வம் இறைவன்  என்ற சொற்கள் வருகின்றன.  

இந்த அதிகாரத்தில் இருப்பவர் மனிதனாகப் பிறந்து அறவழி காட்டும் ஒரு வழிகாட்டி . . .
இவர் இறைவன் எனப்படுகிறார் 

அன்றைய நாளில் செயற்கரிய செய்து மாய்ந்த முன்னோரை  வணங்கினர்   
நெல் உகுத்துப் பரவும் கடவுள் என்று மக்கள் கருதியது யார் என்பதும் கேள்வி 
வான் உறையும் தெய்வம் யார் 

இறைவன்= தெய்வம்=கடவுள் 
என்ற மாற்றம் பிற்கால வழக்காக இருக்க வேண்டும் 

"அறவாழி அந்தணன்" [this is the key to solve the puzzle]
என்பவர் யாரோ அவரை மட்டுமே இறைவன் என திருக்குறள் வாழ்த்துகிறது 
ஆனால் .. அவர் யார்?

தேமொழி

unread,
Oct 24, 2023, 3:58:59 AM10/24/23
to மின்தமிழ்
4. அறன் வலியுறுத்தல்

குறளின் திரள் பொருளே அறன்வலியுறுத்தல்தான். அறன் வலியுறுத்தலாவது அறன் வலிமையுடைத்து என்பதனை அறிவுறுத்தலும், அறநெறியே மாந்தரின் நல்வாழ்வுக்கு உகந்தது என வற்புறுத்திக் கூறுவதுமாம். இவ்வதிகாரம் அறத்தின் விழுப்பம் கூறி அதன் இயல்பு வரையறுத்து அறச்செயல் எது என்பதைச் சொல்லி அதனால் பெறப்படும் பேறுகளை விளக்குகிறது. அறவோர்க்கே அறம் சிறப்பானாலும் எல்லோர் வாழ்விலும் அது அடிப்படை ஆதல் வேண்டும் என்பது உணர்த்தப்படுகிறது.

அறன் வலியுறுத்தல்
திருக்குறள் பனுவலுக்குத் திறவுகோலாக அமைவது அறன் வலியுறுத்தல் அதிகாரம்.
பகைமை, வறுமை, பிணி, மனமாசு, அச்சம் போன்ற தீமைகளுக்கிடையில் மாந்தர் போராட வேண்டியிருக்கிறது. இந்நிலையில் அவர்கள் மன அமைதி பெறுவதற்கும், அன்றாடக் கடமைகளிலும் உரிமைகளிலும் குறுக்கீடுகள் நிகழாமல் காக்கப் பெறுவதற்கும் அறக்கோட்பாடுகள் தேவையாக இருக்கின்றன. குறள்நூல் தொடக்கம் முதல் முடிவு வரை அறத்தையே உணர்த்துவது. அறம் ஒரு இயங்கு ஆற்றலாகவும் பொருள், இன்பம் ஆகிய அறங்கள் அதன் வெளிப்பாடாகவும் கூறப்படுகிறது. குறள்நூல் தொடக்கம் முதல் முடிவு வரை அறத்தையே உணர்த்துவது. தனிஅறம் பேசியதாலும், பொருள் செய்தலில் மேற்கொள்ள வேண்டிய பொருள் வாழ்க்கை அறங்கள் கூறியதாலும், களவும் கற்புமாகிய காமஇன்ப வாழ்க்கையும் அறத்தொடு அமையவேண்டும் என்று அறிவுறுத்துவதாலும், பொருளும் இன்பமும் அறமாகவே அடங்கவேண்டும் என்று குறள் வலியுறுத்துவது தெளிவு. புறநானூறு பொருளும் காமமும் அறத்தின் வழிகளில் செல்லும் என்று முன்னர் சொன்னது: சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும் அறத்து வழிப்படூஉந் தோற்றம் போல (புறநானூறு.37 பொருள்: மேன்மையுடைய முறைமையினால் பொருளும் காமமும் அறத்தின் பின்னே தோன்றும் காடசியைப் போல.) அறன் வலியுறுத்தல் என்பது அறத்தை வலியுறுத்திக் கூறுதலும் அதாவது அறத்தைப் பின்பற்றவேண்டிய இன்றியமையாமையைக் குறிப்பிட்டு நிற்றலும், அறத்தை மக்கள் கடைப்பிடிக்கவேண்டும் எனச் சொல்வதும் ஆகும். அறன் வலியுறுத்தல் அதிகாரம், அறத்தின் பொது இலக்கணம் கூறி, ஏனைய பொருளும் இன்பமும் அறவழி வருவனவாகவே இருக்கவேண்டும் என்று அறிவுறுத்துகிறது.

'அறம்' என்பது நற்செயல் என்பதைச் சுட்டும் கலைச்சொல். அறம் என்பதை அறு+அம் என்று விரிப்பர். அறு என்பது அறுத்துச் செல் என்ற பொருள் தரும். அறுத்துக் கொள்ளப் பயன்படுவது அறம் என்பர். சிக்கல் நிறைந்தது வாழ்க்கை. அவரவர் தன் வழியிலுள்ள சிக்கல் அறுத்து நிறைவான வாழ்வு அமைக்கத் துணை செய்வது அறம். மனிதன் தனக்கென வரையறுத்துக் கொண்ட ஒழுக்க முறைகளின் தொகுதியே-முழுநிறைவடிவமே-அறம் என்று கூறுவர். இச்சொல் காலப்போக்கில் பல்வேறு பொருள்களை உணர்த்தும் பொருள் செறிவு வாய்ந்த சொல்லாகச் சிறப்புற்று விரிவடைந்தது. அறம் என்ற சொல் நன்மை, ஈகை, நீதி முதலிய பொருள்களில் வழங்கலாயிற்று. நல்வாழ்வுக்குப் பயன்படுகின்ற அத்துணைப் பொருள்களையும் தன்னுள் தழுவி நிற்பது அறம். பொதுவாக நல்லொழுக்கமும் நற்செய்கைகளும் அறம் என்று அறியப்படும்.

ஒழுக்கச் செயலுக்கு அடிப்படையாக இருப்பது எண்ணமாகும். எண்ணம் தூய்மையாக இருந்தால்தான் சொல்லும் செயலும் தூய்மையாக அமைய முடியும். 'எண்ணம் அறத்தின் நிலையமைதி (Static) ஆற்றலாகும்; சொல் இயக்க நிலை (Kinetic) ஆற்றலாகும்; செயல் இயங்குநிலை (dynamic) ஆற்றலாகும்' (க த திருநாவுக்கரசு). எண்ணம் தூய்மையாக இருக்கவேண்டுமானால், மனம் மாசு இல்லாததாக இருக்க வேண்டும் என்கிறது இவ்வதிகாரத்துப் பாடல் ஒன்று. மனம் மாசற்றுத் தூய்மையாக இருக்கும் நிலையே அறம் எனப்படும். இவ்வாறு அறத்திற்குப் பொது இலக்கணம் கூறியபின் மனம் சார்ந்த அறத்தின் பண்புகளாகக் கடிந்தொழுக வேண்டியவற்றில் அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல் ஆகிய நான்கும் குறிப்பாகச் சொல்லப்படுகின்றன.

அறத்திற்கு வரையறை செய்து (குறள் 34,35) அறத்தின் சிறப்பு கூறி (குறள் 31,32) எப்பொழுது அறம் செய்வது, ஏன் அறம் செய்யவேண்டும் (குறள் 33,36,38, 39) எனக் கூறி, செய்ய்யத்தக்கன பழியில்லா அறம்(குறள் 40) என்று அதிகாரம் முடிவடைகிறது. இடையில், உலகியல் காட்சி ஒன்றைக் காண்பித்து அறக்கருத்து தவறாகப்புரிந்து கொள்ளப்படக்கூடாது (37) என்பதும் தெளிவாக்கப்படுகிறது.

அறன் வலியுறுத்தல் அதிகாரப் பாடல்களின் சாரம்:
31 ஆம்குறள் அறவாழ்வு மேற்கொண்டோர் சிறப்பையும் செல்வத்தையும் பெறுவர் என்கிறது.
32 ஆம்குறள் அறம் செய்வதை எப்பொழுதும் மறத்தலாகாது என்று சொல்வது.
33 ஆம்குறள் இயன்ற வழிவகையில் எல்லாம், இடைவிடாது, அறத்தைச் செய்யத்தகும் இடமெல்லாம் செய்க எனத் தூண்டுவது.
34 ஆம்குறள் உள்ளத்தைத் தூய்மையாக வைத்திருந்து, ஆர்ப்பாட்டம் இன்றி, அறம் செய்க என்று கூறுவது.
35 ஆம்குறள் பொறாமை, பேராசை, சினம், கடுஞ்சொல் இவை நான்கையும் ஒழித்து நடப்பதே அறம் என்று கூறுவது.
36 ஆம்குறள் அன்றைக்குப் பார்த்துக்கொள்ளலாம் எனத் தள்ளிப்போடாது அறம் செய்க; அது கடைசிக் காலத்தில் அழியாத துணையாய் இருக்கும் என்று அறிவுறுத்துவது.
37 ஆம்குறள் அறக்கருத்து பிழைபடவேண்டாம் எனத் தெளிவுறுத்துவது.
38 ஆம்குறள் இடையீடு இல்லாமல் அறம் செய்தால் இன்னல்-இடைவெளி இல்லாது வாழ்வு அமையும்; வாழ்நாள் முழுதும் அறம் செய்க என அறிவுறுத்துகிறது.
39 ஆம்குறள் நல்லொழுக்கத்தாலும் நற்செயல்களாலும் கிடைப்பது மட்டுமே இன்பம்; மற்றவை வேறானவை, புகழும் தரா என்று முடிவாகக் கூறுவது.
40 ஆம்குறள் கருத்துடன் செய்யவேண்டியது அறமே; ஆராய்ந்து விலக்க வேண்டியது பழியே என்று அறிவுறுத்துவது.

அறன் வலியுறுத்தல் அதிகாரச் சிறப்பு: 
குறளில் உள்ள எல்லா அதிகாரங்களும் அறங்கூறுவனவே. இவ்வதிகாரங்களுக்கெல்லாம் அறன் வலியுறுத்தல் முன்னுரை ஆகும். அறத்தொடு ஈட்டும் பொருளையும் நுகரும் இன்பத்தையுமே இது விளக்குவதால், குறளுக்குச் செயப்படுபொருளாக அமைவது அறமே. அறத்தின் வலிமையை வலியுறுத்தவே குறள் யாக்கப்பட்டது. அறவாழ்வு பற்றிச் சொல்வது குறள். 'செயற்பால தோரும் அறனே' 'அறத்தான் வருவதே இன்பம்' என்று அறன் வலியுறுத்தல் கூறும்.

அறன் வலியுறுத்தல் குறளின் பாயிர அதிகாரங்களாகக் கருதப்படும் நான்கு அதிகாரங்களில் ஒன்றாக உள்ளது (மற்றவை கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை ஆகியன). சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு என்று அறவழி தேடிய பொருள் இயல்பை எடுத்துக்காட்டியதாலும், புற இன்பங்களும் அக இன்பங்களும் அறத்தொடுபட்டு ஆவதே என்று கூறுவதாலும், பொருளும் இன்பமும் அறமாகவே அடங்கும் முறைமை அறன் வலியுறுத்தல் ஆனது.

இவ்வதிகாரத்தின் மூலம் வள்ளுவரின் அறம் பற்றிய மனஓட்டங்களைப் புரிந்து கொள்ள முடிகிறது. அவருக்கு அறமே எல்லாம். மாந்தர் அறத்தை மறவாமல் செய்யவேண்டும் என்பது அவர் விருப்பம். எவ்வெவ்வழிகளெல்லாம் அறம் செய்யமுடியுமோ அவ்வவ்வழிகளில் அறம் செய்யவேண்டும்; ஒருநாள் கூட வீணாக்காமல் அறம் செய்ய வேண்டும்; பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்றிராமல் அறம் செய்யவேண்டும். உள்ளம் தூய்மையாக இருந்தால் அதுவே எல்லா அறமுமாம் என்ற எளிய அறநெறி ஒன்றும் சொல்கிறார். அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் என்ற நான்கு அறமற்ற எண்ணங்களும் பேச்சும் அறத்திற்கு எதிரானவை என்கிறார். அறவழி நின்றால் இயற்கையின் துணை கிடைக்கும் என்று அவர் நம்புகிறார் என்பதும் தெரிகிறது. அறத்திற்கு எதிர்ச்சொல்லாக 'பழி'யை ஆள்கிறார். பழி ஏற்படாவண்ணம் ஆராய்ந்து காத்துக்கொள்ளவேண்டும் என்று எச்சரிக்கவும் செய்கிறார். அறச்செயல்களால் வருவது மட்டுமே உண்மையான இன்பம் என்கிறார்.

அறவாழ்க்கையின் பயனை எடுத்துரைப்பதில் குறள் தனித்துவம் வாய்ந்தது. 'பொருள் தேடப் போனால் அறத்தைக் கைவிட வேண்டி வரும்' என்று பேராசை கொண்ட செல்வர்கள் ஒருபுறமும், சமயம் சார்ந்த அறநூல்கள் 'இப்பிறவியில் துன்பப்பட்டால், பிறவிக் கடலைக் கடக்கலாம்' என்று மறுபுறமும் குழப்ப, இவ்வதிகாரம் 'சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறம்; என்றும் 'அறத்தான் வருவதே இன்பம்' என்றும் அறம் செய்வதால் கிடைக்கப்பெறும் பயன்களை தெளிவாகக் கூறுகிறது.

மனத்துக்கண் மாசிலன் ஆதல்... என்ற அறத்துக்கான அரிய வரையறை கண்ட குறள் 34 இவ்வதிகாரத்திலேதான் உள்ளது.

புறத்தோற்றத்தைக் கண்டு அறத்தின் பயனை அளந்தறியாதே என்று வாழ்க்கை வேறுபாடுகள் உலகியலாலும் செல்வ வேறுபாட்டாலும் தோன்றுவதே தவிர, அறத்தின்பாற் பட்டதன்று என்ற தெளிவையும் தரும் அறத்தாறு இதுவென வேண்டா என்ற குறளும் (37 இந்த அதிகாரத்தில் அமைந்ததே.


அறத்துப்பாலுக்குத் தோற்றுவாயாக அறனை வலியுறுத்தியவர் ஏனைப் பாலையும் தனிச் சிறப்போடு விதந்து கூறுபவராயின் பொருள் செயல்வகை, இன்பநலன் என்று தனித்தனியே செயப்படு பொருளைப் பாயிரத்தில் சொல்லுதல் வேண்டும். அங்ஙனம் அன்றி, அறன் வலியுறுத்தல் ஒன்றே உணர்த்தலின், இவர் நுதலிப் புகுந்தது அறம் ஒன்றுமே என்பதும், ஏனைய இரண்டும் இதனுள் அடங்கியனவே என்பதும் அதனாலேயே அறத்தின் பகுதியாகவே ஏனைய இரு பாலையும் ஓதினார் என்பதும் நுனித்து அறியத் தக்கன.

- ச தண்டபாணி தேசிகர்


நன்றி: குறள் திறன் தளம்
http://kuralthiran.com/KuralAthikaaraVilakkam/BrowseKuralAthikaaraVilakkam.aspx
-----
4. அறன் வலியுறுத்தல்
[மு.வ. உரை]

31. சிறப்பீனும் செல்வமு மீனு மறத்தினூஉங்
     காக்க மெவனோ வுயிர்க்கு.
அறம், சிறப்பையும் அளிக்கும்; செல்வத்தையும் அளிக்கும்; ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தைவிட நன்மையானது வேறு யாது?

32. அறத்தினூஊங் காக்கமு மில்லை யதனை
     மறத்தலினூங் கில்லையாங் கேடு.
ஒருவருடைய வாழ்க்கைக்கு அறத்தைவிட நன்மையானதும் இல்லை; அறத்தைப் போற்றாமல் மறப்பதைவிடக் கெடுதியானதும் இல்லை.

33. ஒல்லும் வகையா னறவினை யோவாதே
     செல்லும்வா யெல்லாஞ் செயல்.
செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும்.

34. மனத்துக்கண் மாசில னாத லனைத்தற
     னாகுல நீர பிற.
ஒருவன் தன் மனத்தில் குற்றம் இல்லாதவனாக இருக்க வேண்டும்; அறம் அவ்வளவே; மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை.

35. அழுக்கா றவாவெகுளி யின்னாச்சொன் னான்கு
     மிழுக்கா வியன்ற தறம்.
பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடிந்து ஒழுகுவதே அறமாகும்.

36. அன்றறிவா மென்னா தறம்செய்க மற்றது
     பொன்றுங்காற் பொன்றாத் துணை.
இளைஞராக உள்ளவர் பிற்காலத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்யவேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியாத் துணையாகும்.

37. அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
     பொறுத்தானோ டூர்ந்தா விடை.
பல்லக்கைச் சுமப்பவனும் அதன் மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய அவர்களிடையே அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டா.

38. வீழ்நாள் படாஅமை நன்றாற்றி னஃதொருவன்
     வாழ்நாள் வழியடைக்குங் கல்.
ஒருவன் அறம் செய்யத் தவறிய நாள் ஏற்படாதவாறு அறத்தைச் செய்வானானால் அதுவே அவன் உடலோடு வாழும் நாள் வரும் பிறவி வழியை அடைக்கும் கல்லாகும்.

39. அறத்தான் வருவதே யின்பமற் றெல்லாம்
     புறத்த புகழு மில.
அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும்; அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை; புகழும் இல்லாதவை.

40. செயற்பால தோரு மறனே யொருவற்
     குயற்பால தோரும் பழி.
ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத் தக்கது அறமே, செய்யாமல் காத்துக் கொள்ளத் தக்கது பழியே.



நன்றி: தமிழ் இணையக் கல்விக் கழகம்
https://www.tamilvu.org/library/l2100/html/l2100ind.htm
----------

இசையினியன்

unread,
Oct 25, 2023, 1:54:03 PM10/25/23
to மின்தமிழ்
/// ஏனெனில் திருக்குறளில் `கடவுள்` என்ற சொல்லே இல்லை. தெய்வம் இறைவன்  என்ற சொற்கள் வருகின்றன.  

  • கடவுள்
  • தெய்வம்
  • இறைவன்
  • இவற்றின் வேறுபாடு என்ன என்பதையும் கூறுங்கள். 

இசையினியன்

unread,
Oct 25, 2023, 2:19:19 PM10/25/23
to மின்தமிழ்
என்குறிப்பு
  1. ஏன் மழை அமிழ்துடன் நோக்கப்படுகிறது. அமிழ்தின் தன்மை என்ன?  ஒரு குழந்தைக்கு அமிழ்து எது. அதைப்போல இவ்வுலகிற்கு அமிழ்து எது. 
  2. வியனுலகு என்ன? 
  3. புயலை ஏன் வாரி என்கிறார்? 
  4. தடிந்தெழிலி என்ன? 
  5. வானோர் யார்? 

தேமொழி

unread,
Oct 28, 2023, 3:49:27 AM10/28/23
to மின்தமிழ்
5. இல்வாழ்க்கை

இல்லில் மனைவியோடு கூடி வாழ்தல் இல்வாழ்க்கை ஆகும். இது குடும்ப வாழ்க்கை என்றும் அறியப்படும். இல்வாழ்க்கை அதிகாரம் இல்வாழ்வார் வாழும் திறன் கூறுவது. அவரது கடமையும் பொறுப்பும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. இல்வாழ்க்கையின் சிறப்பும் இல்வாழ்வார் மாண்பும் சொல்லப்படுகின்றன.

இல்வாழ்க்கை
இல்வாழ்க்கை அதிகாரம் மனைவி மக்களோடு குடும்பம் நடத்தி, அறம் செய்யும்முறையை விளக்குகிறது. இல்லாளோடு கூடி இல்லத்தை நடத்துவது இன்ப நுகர்ச்சிக்காக மட்டுமன்று. அது பலருக்கும் துணையாக நின்று உதவுதற்குரிய அறம் செய்வதற்கும் ஆகும். இன்பமும் அறமும் இணைந்ததே இல்வாழ்க்கையாகும். வீட்டிலிருந்து அறவாழ்க்கையை மேற்கொள்வதால் அது இல்லறம் எனப்படுகிறது. மாந்தர் தாம், தமக்கு எனத் தன்னலவாழ்வு வாழாமல் துணைவி, பிள்ளைகள், பெற்றோர், சுற்றம், விருந்தினர், வறியர், ஆதரவு நாடுவோர் முதலானோருக்காக மேற்கொள்ளும் அறவாழ்வே குடும்ப வாழ்க்கை அல்லது இல்லறமாம். இல்லறமே மற்ற வாழ்வு நெறிகளுக்கும் ஆதாரமாக உள்ளது. இல்லற வாழ்க்கையைச் சரியான முறையில் நடத்துவதற்கு பொறுப்பும் சகிப்புத் தன்மையும் மிகையாக வேண்டும். அதனால் இல்வாழ்வான் முயல்வாரு ளெல்லாம் தலையாவான்.

அதிகாரத்தின் முதல் மூன்று பாடல்கள் இல்வாழ்வார் கடமைகளைச் சொல்கின்றன. நான்காம் பாடல் அவரது பொறுப்புகளைக் கூறுகிறது. ஐந்தாவதும், ஆறாவதாகவும் அமைந்த குறள்கள் அறத்துக்கும் இல்வாழ்க்கைகுமுள்ள சிறந்த தொடர்புகளை விளக்குகின்றன. ஏழாம் பா இல்வாழ்வானது முயற்சியையும் எட்டாம் பா அவனுறும் துன்பங்களைப் பேசுகிறது. ஒன்பதாம் பாடல் அறமே இல்வாழ்க்கைதான் என்று சொல்கிறது. துறவு போன்ற வாழ்வுநெறிகள் பிறவற்றுள்ளும் இல்வாழ்வே ஏற்றமுடையது என்று 46, 47, 48, 49 ஆகிய பாடல்கள் நிறுவுகின்றன. இறுதிக் குறள் (50) இல்வாழ்க்கை மேற்கொள்பவன் தெய்வமாகவும் உயர்வான் என்று பகர்கிறது.

சமுதாயத்தில் குடும்பம் என்பது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோரைக் கொண்ட ஒரு குழு எனலாம். இவர்கள் நல்வழியில் நிற்றலுக்கு குடும்பத்தலைவனாக இல்வாழ்வான் துணையாயிருக்கிறான். அன்பும் அறமும் உடையது இல்லறம்; அன்பு என்னும் பண்பு உடைய குடும்பம் அறம் நிறைந்த பயனுடைய வாழ்வுநடாத்தும். இல்லறத்தில் இருப்போர் துறவிகள், பசித்திருப்போர், கைவிடப்பட்டவர்கள் ஆகியோரைப் பேணிக்காக்கின்றார்கள். இறந்த முன்னோர் நினைவுகளைப் பாதுகாப்பது, தெய்வ வழிபாடு செய்வது, விருந்தினர் மற்றும் சுற்றத்தார்களைக் காப்பாற்றுவது ஆகியவற்றை இவர்கள் கடமையாகச் செய்கிறார்கள். தன் குடும்பத்தின்மீது பழி ஏற்படாமல் காத்து, பகுத்துண்டு வாழ்கிறான் இல்வாழ்வான். அவன் இல்லறத்தின்படி குடும்ப வாழ்க்கையை நடத்துவதால் வேறு எந்த வாழ்வுநிலையையும் எண்ணிப்பார்க்க வேண்டியதில்லை; அங்குப் போய் பெறப்போவதும் இதனினும் மிக்கது ஒன்றுமில்லை. வாழும்நெறிப்படி இல்வாழ்க்கை மேற்கொள்பவன் தெய்வமாகவே உயர்ந்துவிடுவான். இவை இந்த அதிகாரம் தரும் செய்திகள்.

சில புரிதல்கள்
காமத்துப்பாலில் சொல்லப்பட்டதும் ஆண் பெண் இருவரும் சேர்ந்து வாழும் வாழ்க்கை பற்றியே என்றாலும் அது ஒருவர்க்கொருவர் செலுத்தும் அன்பு பற்றியது. அறத்துப்பாலின் இல்வாழ்க்கை அந்த இருவரும் மனம்ஒருப்பட்டு அவரது மக்கள், மாற்றார் முதலானவர்களுக்காக விட்டுக்கொடுத்து நடத்தும் அறம் சார்ந்த வாழ்க்கை பற்றியது.

வடநூலார் வாழ்வுநெறியை நான்காகப் (பிரம்மசரியம், கிருகஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம்) பகுத்துக் காண்கின்றனர். இந்நிலைகளுள் சந்நியாசத்தை மிகவும் உயர்த்திக் கூறுவர். ஆனால் வள்ளுவர் இல்நிலை-துறவு நிலை என்ற இரண்டு பகுப்பினையே குறளில் பேசுகிறார். துறவினும் இல்லறத்தாலே சமுதாயத்திற்குப் பயன் மிகுதி என்பதால் இல்லறமே சிறந்தது என்பதை இவ்வதிகாரத்தில் அவர் விளக்கியுள்ளார்.

அறஞ் செயல்முறையாக வடவர் கூறிய இஷ்டம், பூர்த்தம், தத்தம் இவற்றையே இல்வாழ்க்கை அதிகாரம் சொல்கிறது என்றும் இயல்புடைய மூவர் (குறள் 41) என்போர் நால்வகை ஆசிரமங்களில் கிருஹஸ்தர் தவிர்த்த ஏனைய மூன்று ஆசிரமத்தார் ஆவர் என்றும் 'ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை' (குறள் 43) என்ற பாடலில் நேரடியாகவே கிருஹதர்ம சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட 'பஞ்சமஹா யக்ஞம்' கருத்துக்கள் ஆளப்பட்டுள்ளன என்றும் சிலர் உரைத்தனர். இந்த அடிப்படையில் அதிகாரக் குறட்பாக்கள் நோக்கப்பட்டதாலே பல உரையாசிரியர்கள் பிழையான உரை கண்டனர். உலகப் பொருள் எல்லாம் எடுத்தோதப்பட்ட குறளில் வாய்ப்பாக இங்கொன்றும் அங்கொன்றும் சில கருத்து ஒற்றுமை இருப்பதாகத் தோன்றலாம். ஆனால் வள்ளுவர் வழி எப்பொழுதும் தனிச் சிறப்பானது. இந்தப் புரிதல் இருந்தால்தான் குறட்பொருளை அவர் அணுகிய நோக்கில் நன்கு புரிந்துகொள்ள முடியும். வடவரது தவம், துறவு, அவற்றிற்கான மெய்யியல் ஆகியன நம் மண்ணின் மரபிலிருந்து வேறுபட்டவை என்பது கருத்திற் கொள்ளப்பட வேண்டும்.

இல்வாழ்க்கை அதிகாரப் பாடல்களின் சாரம்:
41 ஆம்குறள் அறம் குடும்பத்திலிருந்து தொடங்குகிறது என்பதைச் சொல்வது.
42 ஆம்குறள் துறவியர், வறுமையாளர், ஆதரவற்றோர் ஆகியோர்க்கு இல்வாழ்வான் உதவ வேண்டும் என்கிறது.
43 ஆம்குறள் குடும்பத்தை மேம்படச் செய்யும் ஐந்து கடமை நெறிகள் பற்றிக் கூறும் பாடல்.
44 ஆம்குறள் பழி வராமல் பார்த்துக்கொள்வதும், பிறருடன் பங்கிட்டு உண்பதும், குடும்பம் நடத்துவனது பொறுப்புக்களாகும்.
45 ஆம்குறள் அன்பு என்ற பண்பும் அறம் என்ற பயனும் உள்ளதாக இல்லறவாழ்வு விளங்கும் என்பதைச் சொல்வது.
46 ஆம்குறள் அறவழியில் நடத்தப்படும் இல்வாழ்க்கை மற்ற எந்தவொரு வாழ்வு முறையினும் மேம்பட்டது என்னும் பாடல்.
47 ஆம்குறள் இயல்பான வாழ்வு நடத்தும் இல்லறத்தான் வெற்றி வாழ்க்கைக்கு முயல்வோருள் சிறந்தவன் என்னும் பாடல்.
48 ஆம்குறள் இல்வாழ்க்கை தவத்தினும் நோவுமிக்கது என்று சொல்லும் குறள்.
49 ஆம்குறள் இல்லறமே நல்லறம் என்று கூறும் குறள் இது.
50 ஆவதுகுறள் வாழும் முறைப்படி வாழும் இல்வாழ்வான் தெய்வமாக உயர்வான் எனக் கூறுவது.
இல்வாழ்க்கை அதிகாரச் சிறப்பியல்புகள்
இன்பம் நோக்கிய இல்வாழ்க்கை, அன்பால் தூண்டப்பட்டு அறத்தில் மலர வேண்டும் என்று எண்ணிய வள்ளுவர் "அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை" என்று இல்வாழ்க்கையை இல்லறமாக்கினார். குடும்ப வாழ்க்கை குறிக்கோள் மிக்க வாழ்க்கை ஆனது. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது (45) என்ற பாடல், அன்பு இல்வாழ்வின் பண்பு; அறம் தழைப்பது இல்வாழ்க்கையின் பயன் என்கிறது.

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில் போஒய்ப் பெறுவது எவன்? (46) என இல்வாழ்க்கையை அறவழியிற் செலுத்துபவனுக்கு, அறத்தாற்றிற்குப் புறமான பிற வழியில் சென்று வாழ்வதால், என்ன பயன் கிடைக்கப் போகிறது என்று இல்வாழ்க்கையினும் மிக்கது ஒன்றும் துறவில் இல்லை என்பதை ஓங்கி உரைக்கிறது.

வாழ்க்கை வாழ்வதற்கே என்ற விருப்புடன் இயல்பான வாழ்வு நடத்தினால் அதுவே இல்லறத்தான் வெற்றி வாழ்க்கைக்கு வழிவகுக்கும் என்கிறது இவ்வதிகாரத்து இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை (47) என்ற பாடல்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும் என்னும் பாடல் இல்வாழ்க்கை எத்துணை மேலானது என்பதைத் தெளிவாக்குகிறது: குற்றமற்ற இல் வாழ்வு ஒன்றே போதுமானது; குடும்பச் சூழலில் வாழ்ந்தே, பொருளுரிமை ஏற்றும் இன்ப நுகர்ச்சி கொண்டும் மிக உயர்ந்த நிலையை ஒருவர் அடையலாம். தெய்வநிலை எய்துவது என்பது இயற்கை நிலைக்கு அப்பால் இருந்து பெறப்பட வேண்டியது அல்ல; இல்வாழ்க்கை மேற்கொண்டோர் தெய்வ நிலைக்கு உயரலாம் என்கிறது. இச்சீரிய சிந்தனை வேறெங்கும் காணப்படாதது ஆகும்.

காதல் வயப்பட்ட ஒருவனும் ஒருத்தியும் தம்முள் கலந்து கூடி வாழ்தல் இல்வாழ்க்கை என்பதாகும். அறநெறி கண்டுணர்த்திய வாழ்வியல் நெறியில் இல்லறநெறி தலையாயது. அன்பின் விரிவுக்கும் சமூக வரலாற்றின் நீட்சிக்கும் துணை செய்யக்கூடியது இல்வாழ்க்கையேயாம். இல்வாழ்க்கை அர்ப்பணிப்பு உணர்வுடன் கடமைகளைச் செய்யும் களமாகும்.
- குன்றக்குடி அடிகளார்



நன்றி: குறள் திறன் தளம்
http://kuralthiran.com/KuralAthikaaraVilakkam/BrowseKuralAthikaaraVilakkam.aspx
-----
5. இல்வாழ்க்கை
[மு.வ. உரை]

41.  இல்வாழ்வா னென்பா னியல்புடைய மூவர்க்கு
       நல்லாற்றி னின்ற துணை.
இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகின்றவன் அறத்தின் இயல்பை உடைய மூவர்க்கும் நல்வழியில் நிலை பெற்ற துணையாவான்.

42.  துறந்தார்க்குத் துவ்வா தவர்க்கு மிறந்தார்க்கு
       மில்வாழ்வா னென்பான் றுணை.
துறந்தவர்க்கும் வறியவர்க்கும் தன்னிடத்தே இறந்தவர்க்கும் இல்லறம் மேற்கொண்டு வாழ்கின்றவன் துணையாவான்.

43.  தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்க றானென்றாங்
       கைம்புலத்தா றோம்ப றலை.
தென்புலத்தார், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற ஐவகையிடத்தும் அறநெறி தவறாமல் போற்றுதல் சிறந்த கடமையாகும்.

44.  பழியஞ்சிப் பாத்தூ னுடைத்தாயின் வாழ்க்கை
       வழியெஞ்ச லெஞ்ஞான்று மில்.
பொருள் சேர்க்கும்போது பழிக்கு அஞ்சிச் சேர்த்து, செலவு செய்யும்போது பகுத்து உண்பதை மேற்கொண்டால், அவ்வாழ்க்கையின் ஒழுங்கு எப்போதும் குறைவதில்லை.

45.  அன்பு மறனு முடைத்தாயி னில்வாழ்க்கை
       பண்பும் பயனு மது.
இல்வாழ்க்கை அன்பும் அறமும் உடையதாக விளங்குமானால், அந்த வாழ்க்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும்.

46.  அறத்தாற்றி னில்வாழ்க்கை யாற்றிற் புறத்தாற்றிற்
       போஒய்ப் பெறுவ தெவன்.
ஒருவன் அறநெறியில் இல்வாழ்க்கையைச் செலுத்தி வாழ்வானானால், அத்தகையவன் வேறு நெறியில் சென்று பெறத்தக்கது என்ன?

47.  இயல்பினா னில்வாழ்க்கை வாழ்பவ னென்பான்
       முயல்வாரு ளெல்லாந் தலை.
அறத்தின் இயல்போடு இல்வாழ்க்கை வாழ்கின்றவன்- வாழ முயல்கின்றவன் பல திறத்தாரிலும் மேம்பட்டு விளங்குகின்றவன் ஆவான்.

48.  ஆற்றி னொழுக்கி யறனிழுக்கா இல்வாழ்க்கை
       நோற்பாரி னோன்மை யுடைத்து.
மற்றவரையும் அறநெறியில் ஒழுகச் செய்து, தானும் அறம் தவறாத இல்வாழ்க்கை, தவம் செய்வாரைவிட மிக்க வல்லமை உடைய வாழ்க்கையாகும்.

49.  அறனெனப் பட்டதே யில்வாழ்க்கை யஃதும்
       பிறன்பழிப்பது தில்லாயி னன்று.
அறம் என்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே ஆகும்; அதுவும் மற்றவன் பழிக்கும் குற்றம் இல்லாமல் விளங்கினால் மேலும் நன்மையாகும்.

50.  வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையுந்
       தெய்வத்துள் வைக்கப் படும்.
உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கின்றவன், வானுலகத்தில் உள்ள தெய்வமுறையில் வைத்து மதிக்கப்படுவான்.

இசையினியன்

unread,
Oct 28, 2023, 9:13:48 AM10/28/23
to மின்தமிழ்
என் குறிப்பு:
  1. மூவர் யார்? அதென்ன இயல் உடைய மூவர்?
  2. துவ்வாதவர் யார்? 
  3. தென்புலத்தார் யார்?  ஏன் தென்புலத்தார் அடுத்து தெய்வம் என குறிப்பிடுகிறார்? 
  4. இயல்பினான் வரையறை என்ன? 
  5. தெய்வம் ஏன் வானில் உறைகிறது? 

இசையினியன்

unread,
Oct 28, 2023, 9:35:01 AM10/28/23
to மின்தமிழ்
/// இல்லில் மனைவியோடு கூடி வாழ்தல் இல்வாழ்க்கை ஆகும். இது குடும்ப வாழ்க்கை என்றும் அறியப்படும். இல்வாழ்க்கை அதிகாரம் இல்வாழ்வார் வாழும் திறன் கூறுவது. அவரது கடமையும் பொறுப்பும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. இல்வாழ்க்கையின் சிறப்பும் இல்வாழ்வார் மாண்பும் சொல்லப்படுகின்றன.
  1. இல் வாழ்க்கை அதிகாரத்தில் மனைவி என்றோ கணவன் என்றோ குழந்தைகள் என்றோ எந்த ஒரு இடத்திலும் வள்ளுவர் கூறவில்லை. 
  2. வள்ளுவர் கூறும் இல்வாழ்க்கை எனும் வரையறை முற்றிலும் வேறுபட்டது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்
  3.  இதில் எந்த ஒரு இடத்திலும் கணவன் என்றோ மனைவி என்று குழந்தை என்று அவர் கூறவே இல்லை. 
  4. ஆனால் உரை எழுதியவர்கள் அனைவருமே இதற்கு கணவனோடு கூடி வாழுதல் மனைவியோடு கூடி வாழுதல் சுற்றத்தாலோடு கூடி வாழுதல் குழந்தைகளோடு கூடி வாழ்க என உரை எழுதி விட்டார்கள். 
  5. அவர் அடுத்த அதிகாரத்தில்தான் ஒரு நபரின் வாழ்க்கை துணை பற்றி  கூறுகிறார்
  6. இல்வாழ்க்கை நடத்துவதற்கு ஒரு கணவன் என்ற நபர் இருக்க வேண்டும் என்று ஒரு மனைவி என்ற நபர் இருக்க வேண்டும் என்றோ குழந்தைகள் எனும் நபர்கள் இருக்க வேண்டும் என்றோ வள்ளுவர் ஒருபோதும் கூறவில்லை இல் வாழ்க்கை நடத்துபவர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றி மட்டும் தான் அவர் கூறுகிறார்
  7. கணவன் இல்லை என்றால் இல் வாழ்க்கை நடத்த முடியாது என்றோ மனைவி இல்லை என்றால் இல் வாழ்க்கை நடத்த முடியாது என்றோ குழந்தைகள் இல்லை என்றால் இல் வாழ்க்கை நடத்த முடியாது என்றோ வள்ளுவர் ஒருபோதும் கூறவில்லை அவர் கூறும் இல்வாழ்க்கை வரையறை முற்றிலும் வேறுபட்டது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்

தேமொழி

unread,
Oct 28, 2023, 3:03:44 PM10/28/23
to மின்தமிழ்
நன்று இசையினியன். 
நல்ல நல்ல கோணங்கள், ஆய்வுகள் கேள்விகள் - இவ்வாறே தொடருங்கள், 
மாற்றுக் கோணத்தை அறியவும், மாற்றுக் கோணத்தில் சிந்திக்கவும், மாற்றுக் கோணத்தில் குறளை  அணுகவும் உதவும். 

தேமொழி

unread,
Oct 31, 2023, 5:54:56 PM10/31/23
to மின்தமிழ்
6. வாழ்க்கைத்துணை நலம்

இல்வாழ்க்கை பொலிவு பெறத் துணை நிற்பவள் மனைவி. அவளே வாழ்க்கைத்துணை. அவளால் இல்லமும் கணவனும் பெறும் நலம் கூறப்படுகிறது. இல்லாளாகிய வாழ்க்கைத் துணையினால், இல் வாழ்க்கைக்குக் கிடைக்கும் நன்மைகளைச் சொல்வதாலேயே ‘வாழ்க்கையின் துணை நலம்‘ எனப்பட்டது என்பர். இவனுக்கு அவள் துணையும் அவளுக்கு இவன் துணையும் என்னும் ஒப்புரிமைப் பட்டதே “வாழ்க்கைத்துணை நலம்” என்பதாம். ஆனாலும் இல்லத்தரசியாய் குடும்பத்தை ஆட்சி செய்பவள் இல்லாளே. எனவே மனைவியின் அழகு குறித்ததாகவே அதிகாரத்து அனைத்துப் பாடல்களும் உள்ளன. மனைவி மாட்சிமை உடையவளாக இருக்க வேண்டும் என்று அதிகாரம் தொடங்குகிறது, மனைவி ஆற்றவேண்டிய கடமைகளையும் பொறுப்புக்களையும் சொல்லி, குணம் நிறைந்த பெண்ணை அடைந்த கணவனது பேற்றைக் கூறி, நல்ல கணவனை அடைந்தவள் பெறும் பேரின்பத்தையும் சொல்கிறது, இருவரும் குடும்பத்தை பொலிவாக்குகிறார்கள்; நல்ல மக்களைப் பெற்று அதற்கு மேலும் அழகு சேர்க்கிறார்கள் என்று சொல்லி நிறைவு பெறுகிறது வாழ்க்கைத்துணை நலம் அதிகாரம்.

வாழ்க்கைத்துணை நலம்:
முந்தைய அதிகாரத்தில் 'இல்வாழ்க்கை' நடத்தப்படும் முறை கூறப்பட்டது. இங்கு வாழ்க்கைத் துணையான மனைவிக்குரிய மாட்சிமைக் குணங்கள் குறிக்கப்பெறுகின்றன.

வாழ்க்கை என்ற நெடிய பயணத்தில் மணம் என்னும் சடங்குவழி ஆணும் பெண்ணும் ஊரறிய இணைகின்றனர். ஒருவர்க்கொருவர் துணையாக இல்லறம் தொடங்குகிறது. இல்வாழ்க்கை மனைவி என்ற பெண்ணைச் சுற்றியே நகர்கிறது. இல்லப் பொறுப்பு பெண்ணைச் சார்ந்தது என்றவாறாயிற்று. இல்வாழ்வுக்கு மாண்பு, மங்கலம் என்ற விழுமங்களைச் சேர்ப்பவள் அவளே.  இல்லத்தைப் பொறுத்தவரையில் கணவனைவிட மனைவிக்கே சுமை மிகுதி. குடும்ப ஆட்சி செம்மையுற இல்லறத்திற்கேற்ற நற்குண நற்செய்கைகள் அவளுக்கு இன்றியமையா முதன்மைத்து என இங்கு வலியுறுத்தப்பெறுகிறது. இக்குணங்களை மனைமாட்சி என்னும் சொல்கொண்டு அழைக்கிறார் வள்ளுவர். இல்வாழ்க்கை நடத்துவதற்கான மாட்சிமையும், அக்கறையும், திறனும் படைத்திருக்க வேண்டியவள் மனைவி என்கிறது இத்தொகுதி.

வாழ்க்கைத்துணை நலம் அதிகாரம் தரும் செய்திகளாவன:
மனைவியின் செயற்பாடுகள் கணவனுக்கும் குடும்பத்துக்கும் புகழ் சேர்ப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது. இல்லறக் கடமைகள் செய்வதில் அவள் எப்போதும் சோர்வடைவதில்லை; கணவனிடம் பேரன்பு செலுத்தும் பெண் பேராற்றல் பெறுகிறாள்; கற்பொழுக்கம் பேணும் பெண்ணை மனைவியாக அடைந்தவன் பேறு பெற்றவன்; சிறைபோன்ற காவல் அமைத்து மகளிரின் பாலியல் ஒழுக்கத்தைக் காக்க முடியாது- அவள் தனது நிறை எனும் வலிமையால் மட்டுமே தனது கற்பைக் காக்க இயலும்; புறம்போகா ஆடவன் கணவனாகக் கிடைத்தால் அவளது இல்வாழ்வு சொர்க்கலோகமாக அமையும்; குணம் நிறைந்த மனைவியால் கணவன் மிடுக்குடன் நடமாடமுடியும்; மனைமாட்சி விளங்கிய இல்லம் பொலிவுடன் திகழ்கிறது- அவர்கள் உருவாக்கும் நன்மக்கள் அதற்கு மேலும் அழகு சேர்ப்பர்.

வாழ்க்கைத்துணை நலம் அதிகாரப் பாடல்களின் சாரம்:
51 ஆம்குறள் இல்லறமாட்சி காத்து குடும்பத்தின் பொருள்நிலையை மேலாண்மை செய்பவள் வாழ்க்கைத்துணை என்கிறது.
52 ஆம்குறள் எவ்வளவு வளங்கள் இருந்தாலும் இல்லாளிடம் குடும்ப வாழ்க்கைக்குரிய பண்பு இல்லாவிடில் இல்வாழ்க்கையானது பிற பெருமைகள் எவை இருந்தாலும் ஒன்றும் இல்லாதது போன்றது என்பதைச் சொல்கிறது.
53 ஆம்குறள் இல்லறத்துக்கு இன்றியமையாது வேண்டப்படுவது இல்லாளின் பெருமைக் குணங்கள் என்பது மீண்டும் வலியுறுத்தப் பெறுகிறது.
54 ஆம்குறள் கற்பு நெறியில் உறுதியுடன் நிற்கும் மனைவியைப் பெற்றதைவிடப் பெருமை மிக்கது வேறொன்றும் இல்லை எனச் சொல்கிறது.
55 ஆம்குறள் கணவனிடம் பேரன்பு பாராட்டுபவள் பெறும் பேராற்றலைச் சொல்கிறது.
56 ஆம்குறள் தன்னைக் காத்தும், தன் கணவனது நலனில் அக்கறை செலுத்தியும், இருவரது புகழ் காத்தும் சுறுசுறுப்புடன் இருப்பவளே மனைவியாவாள் என்கிறது.
57 ஆம்குறள் மகளிரைச் சிறையால் காப்பதினும் அவர்கள் தம்நிறையால் காப்பதே தலை சிறந்த காவல் எனச் சொல்கிறது.
58 ஆம்குறள் தனக்கே உரியவனாகக் கணவனை அடைந்த பெண் சொர்க்க உலகில் உலவுவது போல உணர்வாள் என்று சொல்கிறது.
59 ஆம்குறள் மாட்சிமை பெற்ற இல்லத்திலுள்ளோர் வீறு கொண்ட நடை போடுவர் என்கிறது.
60 ஆவதுகுறள் மனையறத்துக்கு பொலிவு சேர்த்து நல்ல மக்களைப் உருவாக்கி அதற்கு அணி சேர்ப்பர் வாழ்க்கைத்துணையானவர்கள் எனப் போற்றுவது.

தவறான புரிதல்கள்:
இவ்வதிகாரத்தில் கற்பு பற்றி மிகையாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்றும் பெண்ணடிமை பேசும் கருத்துக்கள் இதில் உள்ளன என்றும் பெண்ணியம் பேசுபவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறட்பாக்கள் சொல்லவரும் கருத்துக்கள் பற்றிய தவறான புரிதல்களாலேயே இக்குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

கற்பு:
'கற்புடைய பெண்' யார்? பொதுவாக இது 'தான் மணந்த ஆடவனுக்கு உண்மையுடையவளாயிருக்கும் பெண்'ணைக் குறிக்கும் சொல். வள்ளுவர் இத்தகைய பெண்களை ஒருமைமகளிர் என்று அழைப்பார்.
குறள் 54லிருந்து குறள் எண் 59வரையான ஆறு பாடல்கள் வழி பெண்ணுக்குக் கற்பு 'அளவுக்கதிகமாக' வெளிப்படையாக வலியுறுத்தப்படுகிறது என்று குறை சொல்கின்றனர். அவை சொல்வன எவை?
குறள் 54 - கற்பென்னும் திண்மை கொண்ட பெண்ணைப் பெற்ற பேற்றைவிட பெருந்தக்க யாவுள என அவள் கணவன் வினவுவதாக உள்ள பாடல். இது கற்பு என்னும் மனஉறுதி கொண்ட பெண்ணை வெகுவாகப் போற்றுவதான பாடல். பெண்ணைப் போற்றுதல் எவ்விதம் தவறு ஆகிறது? ஆடவருக்கும் பாலியல் ஒழுக்கம் கூறுவதாக 'பெற்றார்ப் பெறின்' என்ற 58-ஆம் பாடல் உள்ளது. எனவே ஆணுக்கும் 'கற்பு' வேண்டும் என்பதே வள்ளுவம்.
குறள் 55 - தெய்வம் தொழாமல் கணவனைத் தொழுதெழும் பதிவிரதை பற்றியது. இக்குறட்கருத்து பற்றித் தனியே கீழே பேசப்பட்டுள்ளது.
குறள் 56 - தன்காத்து, தன் கணவன் நலம் பேணி, சொல்காத்துத் தளராமல் இருப்பவளே மனைவி என்கிறது. இதில் தற்காத்து என்பதும் சொல்காத்து என்பதும் பெண்ணின் கற்பு பற்றியது என்கின்றனர். தன்காத்து என்பதற்குப் பொருள் தன்னைக்காத்து என்பது. இது உள்ளம், உடல் காத்து என்பதைக் குறிக்கும். உள்ளம் காப்பதில் கற்பும் ஒன்று. ஆனால் அது ஒன்று மட்டும் அல்ல. அதுபோல்சொற்காத்து என்பது குடும்பத்துக்கான நற்பெயர் காத்து என்பதுதான் பொருள். கற்புநெறி மீறல் பற்றிய சொல் என்று தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது.
குறள் 57 - கற்பென்னும் திண்மையே ஒரு பெண்ணுக்கு பாலியல் ஒழுக்கம் மீறாமைக்கு நல்ல காவலாம்; அவளைச் சிறைசெய்து அதைக் கட்டுப்படுத்த முடியாது என்பது. இதைப் பெண்கள் இயல்பாகவே செய்வர். மகளிர் தம் நிறை குணங்களால் ஒழுகி கணவன் புறம்போகாது திருத்துவர் என்ற இக்குறளுக்கான புத்துரையையும் கருத்திற் கொள்ளலாம்.
குறள் 58 - பெற்றார்ப் பெறின் என்று தொடங்கும் பாடலுக்குச் சரியான பொருள்: 'புறம்போகாத கணவனை அடையப் பெற்ற பெண் பேரின்பப் பெருபெருவாழ்வு வாழ்கிறாள்' என்பதே. ஆனால் 'பெண்டிர் தம்மை எய்திய கணவனை வழிபடுதல் பெறுவராயின்' என்று சில உரையாளர்களால் தவறுதலாகப் பொருள் கூறியதால் சிக்கல் எழுந்தது. உண்மையில் கற்பில் மன உறுதி கொண்ட கணவன் பற்றியது இக்குறள்; பெண்கற்பு பேசுவதல்ல.
குறள் 59 - இப்பாடலிலுள்ள 'புகழ் புரிந்த இல்' என்ற தொடர்க்குப் புகழ்விரும்பிய இல்லம் என்றும் புகழ்விரும்பிய இல்லாள் என்றும் பொருள்கொள்ள வகையுண்டு. பெண்ணுக்கும் கணவனுக்கும் குடும்பத்துக்கும் புகழ் குறைவதற்கு எவ்வளவோ வழிகள் உண்டு. ஆனால் சிலர் 'புகழ் புரிந்த இல் இல்லோர்' என்பதற்குப் 'புகழ் இல்லாதவள்' அதாவது 'பாலியல் ஒழுக்கம் இல்லாதவள்' என்று பொருள் கொண்டு உரை செய்ததால் இப்பாடல் குறைகூறுவார்க்கு இடமாயிற்று.
மேற்சொன்ன விளக்கங்களால் கற்பு இருபாலர்க்கும் பொது என்பதே வள்ளுவர் கொள்கை என்பதும் 'அளவுக்கதிகமாக' கற்பு அறிவுரை சொல்லப்படவில்லை என்பதும் தெளிவாகும்.

பெண்ணடிமை:
கற்பென்னும் திண்மை உண்டானால் பெண் பெருமைக்குரியவள் என்று இவ்வதிகாரத்துப் பாடல் ஒன்று சொல்வது போல ஆண்பெருமைக்கு இது போன்ற முன்வரையறை எதுவும் விதிக்கப்படவில்லையே ஏன் என வினவினர் சிலர். மேலும் பெண்ணிற் பெருந்தக்கார் யாருளர் என்று கூறாமல் பெண்ணிற் பெருந்தக்க யாவுள என்று கூறியிருப்பதும், மற்றொரு பாடலில் தற்கொண்டான் என்ற சொல்லாட்சியும் பெண் ஒருவனது உடைமைப் பொருள் என்று கொள்ளும்படி ஆகிறதல்லவா எனவும் வினா எழுப்பினர். இன்னபிறவற்றால் குறள் பெண்ணடிமை பேசுகிறது; ஆணுக்குப் பெண் அடங்கி வாழவேண்டும் என்பதே குறளின் கோட்பாடு; வள்ளுவர் ஒரு ஆணாயில்லாமல் பெண்ணாயிருந்து இக்குறளை எழுதியிருப்பாரானால் இம்மாதிரிக் கருத்துக்களைக் காட்டியிருப்பாரா? என்ற கேள்விக் கணைகளை வீசுகின்றனர்.

மேற்சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்துக் கூறப்பட்ட கருத்துக்களாவன: பெண்ணை உடைமைப் பொருளாக வள்ளுவர் கருதியிருந்தால் அவளை வாழ்க்கைத் துணை என்று அழைப்பாரா? மனைமாட்சி பெண்ணாலேயே அமைகின்றது என்றும், மனைமாட்சி அவள்பால் இல்லையென்றால் இல்வாழ்க்கையில் எச்சிறப்பும் இல்லை என்றும் கூறியிருப்பாரா? பிறன் மனைவியை விரும்பும் ஆடவனை ‘அறிவிலி’, ‘செத்தவன்’ ‘பழிஅடைபவன்’ என்றெல்லாம் கடுஞ் சொற்களால் வசைபாடும் வள்ளுவர், பெண்ணைப் பற்றிப் பேசும்போது மட்டும் ‘பெண்ணிற் பெருந்தக்க யாவுள’ என்று உடன்பாட்டுப் போக்கில் பெருமைப்படுத்திப் பேசுவதிலிருந்து பெண்டிர் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு எழுதப்பட்ட நூல் என்பது புலனாகிறது. ஆடவருக்கு அறிவுரை கூறும்போது மிகக் கடிந்து கூறும் வள்ளுவர் பெண்ணுக்கு அறிவுரை கூறும்போது மிகக் கனிந்து கூறுவது அவர் பெண்ணினத்தின்பால் கொண்ட பெருமதிப்பு என்பது தெளிவாகும்.

இந்த அதிகாரத்தில், கற்பு குறித்து ஓரிரு குறள்களோடு நின்றுகொண்ட வள்ளுவர், ஆண்களுக்கான கற்பு இலக்கணமாக வேறு ஒரு அதிகாரமே (பிறனில் விழையாமை) படைத்துள்ளார்.
மகளிர் பிறரால் அடக்கப்படாமல் உரிமையுடன் வாழவேண்டும் என்பதே வள்ளுவரின் நோக்கம். குறள் ஆணின் ஆண்மையையும் பெண்ணின் பெண்மையையும் பிரித்துச் சமன்நிலை வாழ்வு பற்றி பேசுகிறது. காதல் நெறியைத் தூய்மைப்படுத்திக் கற்பை, ஆண், பெண் இருபாலர்க்குமும் உரிமையாக்கிய பெருமை வள்ளுவருக்கே உரியதாகும். முதன்முதலாக வள்ளுவர் காலத்தில்தான் ஆணுக்குப் பாலியல் ஒழுகுமுறை அறம் கூறப்பட்டது என்பதும் அறியத்தக்கது. ஆனால் தற்காலப் பென்ணியமோ ஆண்மையில் பெண்மையும், பெண்மையில் ஆண்மையும் சேர்ந்த ஓர் கலப்பினை உருவாக்கி குழப்பமுறுகிறது.

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்:
வள்ளுவரா தெய்வம் தொழாமை பற்றி பேசுகிறார்? துயில் எழும்போது கொழுநனை ஏன் மனைவி தொழவேண்டும்? இக்கேள்விகளுக்குச் சரியான விடை இதுவரை கிடைக்கவில்லை.

குறளில் இப்பகுதி எப்படி இடம் பெற்றது என்பது கற்பு நெறியை வடவரின் பதிவிரதா தர்மத்துடன் ஒப்புநோக்கும்போது விளக்கம் பெறும்.
ஒரு பெண் தன் கணவனுக்கு உண்மையாயிருத்தலைக் கற்பு நெறியின் அடிப்படை நிலையாகக் கொள்ளலாம். பதிவிரதா தர்மம் மேற்கொள்ளும் பெண்ணும் கற்புடையவளே. ஆனால் கற்பு நெறியின் இந்நிலையைத் தாண்டிக் கொண்டானை விடச் சிறந்த தெய்வம் மனைவிக்கு இல்லை என்பது வடவரின் பதிவிரதா தர்மத்தின் கோட்பாடு. பதிவிரதா தர்மத்தின் பிற கூறுகளாவன:
பதிவிரதை என்பவள் ஒருமனப் பெண்ணாக இருப்பதுடன் கணவனே தெய்வம் என்று அவனைத் தொழுதுவாழ விதிக்கப்பட்டவள் ஆவாள். 'பெண் கணவனைத் தெய்வமாகப் பேணவேண்டும்; அவளுக்கு ஐம்பெரு வேள்வி, நோன்பு இன்னபிற தருமங்களில் தனிஉரிமை இல்லை; கணவனுக்குப் பணிவிடை செய்வதாலேயே அவள் துறக்கத்தில் பெருமை அடைகிறாள்; பதிவிரதா தர்மத்திற்குப் பதிவிரதையே முதற் பொறுப்பு. அந்த நோன்பை அவள் முழுவதுமாகக் கடைப்பிடிக்கும் வரை தர்மத்திற்குக் கேடு வராது; பதிவிரதா தர்மத்தின் படிநிலையில்- கணவனைத் தெய்வமாக வழிபடுவதால் பதிவிரதைக்கு இயற்கை மீறிய பேராற்றல் பெறுகிறாள்; பத்தினித் தெய்வம் என்ற நிலைக்கு உயர்கிறாள். கணவனைத் தெய்வமாக வழிபடுவதால் மட்டுமே ஒரு மனைவி தன் பாலியல் ஒழுக்கத்தில் மீறல் வராதவாறு கட்டுப்படுத்த முடியும் அதாவது கணவனைத் தெய்வமாக வழிபடுவதால் அவளது கற்பு காப்பாற்றப்படுகிறது என்பது இதன் உட்கிடக்கை.

பதிவிரதைக்கு எடுத்துக்காட்டாக நளாயினி கதையைக் கூறுவர். நளாயினி தொழுநோயாளியான கணவனுக்கு எல்லாப் பணிவிடைகளையும் செய்து அவன் விரும்பியவாறு பரத்தையின் வீட்டுக்கும் அவனைக் கூடையில் வைத்துத் தலையில் சுமந்து செல்வாள். ஒருமுறை, போகும் வழியில், இன்னொரு முனிவனது சாபத்துக்கு ஆளாகிறான் கணவன். அவனை அச்சாபத்திலிருந்து காப்பாற்ற 'பதிவிரதை நான் என்பது உண்மையானால் நாளை சூரியன் உதிக்காமல் போகட்டும்' என்று வானத்தை நோக்கி முழக்கம் வேறு செய்பவள் நளாயினி!

இக்குறள் பற்றி ராஜ் கௌதமன் குறிப்பது: 'தெய்வத்தைத் தொழாமல் கணவனையே தெய்வமாகத் தொழும் மனைவி 'பெய்' என்றால் மழை பெய்யும் என்று கூறியதால் மனைவியைப் 'பதிவிரதை'யாக, பத்தினியாக, அவளது இல்லற தர்மத்தைப் பதிவிரதா தருமமாக வள்ளுவர் நோக்கியது புரியும்..... வள்ளுவர் வாழ்க்கைத் துணை நலத்தில், தமிழ் மரபுக்கு ஒத்துப் போகிற விதத்தில் பதிவிரதா தருமத்தை எடுத்துக் கூறியமை புரியும்.'

பதிவிரதா தர்மத்தின் கோட்பாடுகளில் உள்ளவாறு கணவனைத் தெய்வமாகப் பேணுதலும் அதனால் அவள் பெறும் ஆற்றலும் இக்குறளில் சொல்லப்பட்டுள்ளமை தெரிகிறது. அதாவது இக்குறள் பெண்ணை வேறொரு மரபிற்கு உட்படுத்திப் பார்த்த பார்வையைப் புலப்படுத்துகிறது.  நம் மரபு கற்பு நெறியின் முதல் படிநிலையைத்தான் ஏற்றுக் கொண்டிருக்கிறது. பதிவிரதா தர்மம் பெண்ணுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து, அவளது கற்பு நிலைக்கு மேலும் சில படிகளை உருவாக்கி, பேதைமையின் விளிம்பு வரை எடுத்துச் செல்வது. கற்புடைய பெண் பேராற்றல் பெறுகிறாள் என்பதை ஒத்துக்கொள்ளலாம். ஆனால் தெய்வம் தொழாமல் கணவனைத் தொழுதெழும் பெண் என்னும் கருத்து ஏற்புடையதல்ல. இதுவே இப்பாடலின் குறைபாட்டுக்குக் காரணமாக அமைந்தது.

வாழ்க்கைத்துணை என்றதனால், மனைவி மணாளனது வாழ்க்கையில் அறத்திற்குத் துணையாகின்றாள். பொருளுக்கும் துணையாகின்றாள்; இன்பத்திற்கும் துணையாகின்றாள் என்பதுதானே போதருகின்றது. இதற்கு மேலும் பெண்களுக்கு உரிமை கொடுத்தவர் யாரே என அறிய விரும்புகின்றோம்.
- தெ பொ மீனாட்சி சுந்தரனார்



நன்றி: குறள் திறன் தளம்
http://kuralthiran.com/KuralAthikaaraVilakkam/BrowseKuralAthikaaraVilakkam.aspx
-----
6. வாழ்க்கைத்துணை நலம்
[மு.வ. உரை]

51. மனைத்தக்க மாண்புடைய ளாகித்தற் கொண்டான்
      வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.
இல்வாழ்க்கைக்கு ஏற்ற நற்பண்பு உடையவளாகித் தன் கணவனுடைய பொருள் வளத்துக்குத் தக்க வாழ்க்கை நடத்துகின்றவளே வாழ்க்கைத் துணை ஆவாள்.

52. மனைமாட்சி யில்லாள்க ணில்லாயின் வாழ்க்கை
      யெனைமாட்சித் தாயினு மில்.
இல்வாழ்க்கைக்குத் தக்க நற்பண்பு மனைவியிடம் இல்லையானால். ஒருவனுடைய வாழ்க்கை வேறு எவ்வளவு சிறப்புடையதானாலும் பயன் இல்லை.

53. இல்லதெ னில்லவண் மாண்பானா லுள்ளதெ
      னில்லவண் மாணாக் கடை.
மனைவி நற்பண்பு உடையவளானால் வாழ்க்கையில் இல்லாதது என்ன? அவள் நற்பண்பு இல்லாதவளானால் வாழ்க்கையில் இருப்பது என்ன?

54. பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
      திண்மையுண் டாகப் பெறின்.
இல்வாழ்க்கையில் கற்பு என்னும் உறுதிநிலை இருக்கப் பெற்றால், பெண்ணைவிடப் பெருமையுடையவை வேறு என்ன இருக்கின்றன?

55. தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
      பெய்யெனப் பெய்யு மழை.
வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்!

56. தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
      சொற்காத்துச் சோர்விலாள் பெண்.
கற்புநெறியில் தன்னையும் காத்துக்கொண்டு, தன் கணவனையும் காப்பாற்றி, தகுதியமைந்த புகழையும் காத்து, உறுதி தளராமல் வாழ்கின்றவளே பெண்.

57. சிறைகாக்குங் காப்பெவன் செய்யு மகளிர்
      நிறைகாக்குங் காப்பே தலை.
மகளிரைக் காவல் வைத்துக் காக்கும் காப்புமுறை என்ன பயனை உண்டாக்கும்? அவர்கள் நிறை என்னும் பண்பால் தம்மைத் தாம் காக்கும் காப்பே சிறந்தது.

58. பெற்றார்ப் பெறிற்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
      புத்தேளிர் வாழு முலகு.
கணவனைப் போற்றிக் கடமையைச் செய்யப் பெற்றால் மகளிர் பெரிய சிறப்பை உடைய மேலுலக வாழ்வைப் பெறுவர்.

59. புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை யிகழ்வார்முன்
      னேறுபோற் பீடு நடை.
புகழைக் காக்க விரும்பும் மனைவி இல்லாதவர்க்கு, இகழ்ந்து பேசும் பகைவர்முன் காளைபோல் நடக்கும் பெருமித நடை இல்லை.

60. மங்கல மென்ப மனைமாட்சி மற்றத
      னன்கல நன்மக்கட் பேறு.
மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம் என்று கூறுவர்; நல்ல மக்களைப் பெறுதலே அதற்கு நல்லணிகலம் என்றும் கூறுவர்.

தேமொழி

unread,
Nov 7, 2023, 11:47:21 PM11/7/23
to மின்தமிழ்
7.  புதல்வரைப் பெறுதல்

புதல்வரைப் பெறுதல் என்பது மக்களைப் பெறுதல் அதாவது மக்கட்பேறு பற்றியது. மக்கள் அறிவுள்ள பிள்ளைகளாக உருவானால் அதைவிடச் சிறந்த பேறு வேறெதுமில்லை எனத் தொடங்குகிறது அதிகாரம். அவர்கள் பண்புள்ளவர்களாகவும் அவரவர் காலில் நிற்கும்படியாகவும் வளர்க்கப்படவேண்டும் என்று தொடர்கிறது. குழந்தைகளின் சிறுகை ஊட்டிய உணவும், மெய்தீண்டலும், மழலைச் சொல்லும் பெற்றோர்க்கு அளவிலா இன்பம் பயக்கும் என்றும் மகனை உலக அரங்கில் முந்தியிருக்கச் செய்தல் தந்தையின் கடமை என்றும் குழந்தைகளை அறிவுடைமையராக்குதல் பெற்றோரின் வளர்ப்பு நோக்கமாக இருக்கவேண்டும் என்று கூறுகிறது. பிள்ளைகள் நற்குணம் கொண்டவரானால் தாய்க்கு மகிழ்ச்சி. அவர்கள் பெருமை கொண்டவர்களாக ஆனால் தந்தையின் முயற்சிகளுக்கு வெற்றி என்று சொல்லி முடிகிறது இவ்வதிகாரம்.

அதிகாரத் தலைப்பு:
இவ்வதிகாரத்துத் தலைப்பாக புதல்வரைப் பெறுதல் என்றும் மக்கட்பேறு என்றும் கொள்கின்றனர். எது சரியானது?
அதிகாரப் பெயர் 'புதல்வரைப் பெறுதல்' என்று மணக்குடவர்-பரிப்பெருமாள், பரிதி, காளிங்கர், பரிமேலழகர் ஆகிய அனைத்துத் தொல்லாசிரியர்களும் குறிக்கின்றனர். அதன்பின் வந்தவர்களிலும் கவிராசபண்டிதர் வரை அதே தலைப்பையே காண்கிறோம்.

ஆனால் திரு வி க அதிகாரத் தலைப்பை 'மக்கட்பேறு' என மாற்றினார். இன்றைய உரையாசிரியர்கள் அனைவரும் மக்கட்பேறு என்றே தலைப்பிட்டனர். குறளின் அனைத்துத் தலைப்புக்களும் தூய தமிழ்ச் சொற்களாகக் காணப்படுகின்றன; புதல்வரைப் பெறுதல் என்பதில் அயல்மொழிக் கலப்புச் சொல் தோன்றுவதால் மக்கட்பேறு என்னும் தலைப்பையே அனைவரும் இன்று விரும்புகின்றனர்.

குறளின் அதிகாரத் தலைப்புப் பெரிதும் ஒவ்வொரு அதிகார முதற் பாட்டிலேயே தோற்றம் செய்வது ஆசிரியர் வழக்கம்; அதிகாரத்துள் 'புதல்வர்' என்ற சொல்லாட்சியில்லை; ஒவ்வொரு குறளிலும் மக்கள்/மகன் என்றே ஆண்டு வந்துள்ளன என்ற காரணங்களை முன்வைக்கின்றனர் அதிகாரத்தலைப்பை மக்கட்பேறு என்று அழைத்த அறிஞர்கள். முன்னதிகாரமான 'வாழ்க்கைத் துணைநல'த்தின் இறுதிப் பாட்டிலும், இவ்வதிகார முதற் பாட்டிலும் மக்கட்பேறு என்றே குறிக்கப் பெறுகின்றது என்றும் இவர்கள் 'மக்கட்பேறு' என இருத்தலே அமைவுடையதாகும் எனக் கூறுகின்றனர்.

பழம் ஆசிரியர்கள் அனைவரும் தலைப்பைப் 'புதல்வரைப் பெறுதல்' என்றே கொண்டனர். திருக்குறள் அதிகாரங்களின் பெயரைத் திருவள்ளுவரே அமைத்தார் என்று பரிமேலழகர் 'அவர்வயின் விதும்பல்'(127) என்னும் அதிகாரத் தொடக்க உரையில் குறித்துள்ளார். இதைக் குறளறிஞர்கள் அனைவரும் ஒப்புவர். எனவே புதல்வரைப் பெறுதல் என்பதை வள்ளுவர் இட்ட பெயராகக் கொண்டு அதையே நாம் ஏற்றுக் கொள்ளலாம்.

புதல்வரைப் பெறுதல்:
தம் குழந்தைகள் தரும் இன்பங்கள், பிள்ளை வளர்ப்புமுறை இவற்றைக் கூறும் அதிகாரம். மக்களினத் தொடர்ச்சிக்கும் உலகம் சிறப்புறுதற்கும் மக்கட்பேறு தேவை. மனைமாட்சியின் நன்கலம் மக்கட்பேறு என்றதால் மக்களைப் பெறுதல் மனையறம் காத்தலில் இன்றியமையாத பகுதியாகிறது.

இவ்வதிகாரம் மக்கட்பேற்றின் சிறப்பைக் கூறி குழந்தைகளால் பெற்றோர் எய்தும் பெரும் இன்பங்களைச் சொல்லி, பிள்ளை வளர்ப்பில், தாய்-தந்தையர் கடமையையும் கூறுகிறது. குழந்தைகள் வளர்ந்ததும் பெற்றோர் உள்ளம் மகிழ சான்றோராகவும் அவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் சிறப்பான வாழவும் மேற்கொள்வர் என்றும் கூறிச் செல்கிறது.

'புதல்வரைப் பெறுதல்' அதிகாரம் ஆண் குழந்தைகளைப் பெற்றவர்களுக்கே கூறப்பட்டது, பெண் குழந்தை பெற்றவர்களுக்காக அன்று என்று தோற்றம் தரும் வண்ணம் பழைய உரைகள் சில அமைந்தன. 'அறிவறிந்த என்றதனால் மக்கள் என்னும் பெயர் பெண்ணொழிந்து நின்றது' அதாவது இங்கு மக்கள் என்று குறிப்பிட்டது ஆண்மக்கள் பற்றியே என்ற பரிமேலழகர் உரை பொருத்தமில்லாதது. மக்கள் என்பது ஆண் பெண் இருபாலர்க்கும் உரிய சொல். பெண் ஒழித்து நிற்பதற்குக் காரணம் பெண்கள் அறியமாட்டாதவர்கள் என்று வள்ளுவர் கூறுகிறார் என்று உரைப்பது முற்றும் தவறான கருத்தாகும்.

மக்கள் என்றால் ஆண், பெண் இருவரையும் குறிக்கும் பலர்பாற்பெயர். புதல்வர் என்பதும் இருபாலரையும் குறிக்கும் பலர்பாற்பெயரே. புதல்வர் ஆண் பால் புதல்வி- பெண் பால் புதல்வர்-பலர் பால் (இரு பாலரையும் குறிக்கும்).
அவையத்து முந்தியிருத்தலை ஒரு பாடலிலும், சான்றோன்/அரிய குணங்கள் கொண்டவன் எனப்பலர் பாராட்ட விளங்குதலை இரு பாக்களிலுமாக மூன்று பாடல்கள் மகனுக்கு உரியதாக்கப்பட்டது. அதிகாரத்து மற்ற ஏழு பாடல்களிலும் 'மக்கள்' என இருபாலாரையும் சுட்டிச் சொல்லப்பட்டது. எனவே, மக்கட்பேறு என்பது பெண்மக்கட்பேறு உள்ளடங்கிய இருபாலார்க்கும் பொதுவாகவே எழுதினாரேயன்றி ஆண்மக்கட் பேற்றை மட்டும் முதன்மைப்படுத்திக் கூறவில்லை என்பது அறியப்படும்.

புதல்வரைப் பெறுதல் அதிகாரப் பாடல்களின் சாரம்:
61 ஆம்குறள் அறிவுடன் கூடியதாக பிள்ளைகள் உருவாதல் பெற்றோர் பெறும் பேறாகும் என்கிறது.
62 ஆம்குறள் குழந்தைகள் பண்புள்ளவர்களாக வளர்க்கப்பட்டால் பெற்றோருக்கு தீமைகள் நேரா என்பது.
63 ஆம்குறள் பிள்ளைகள் அவரவர் காலில் நிற்கப் பயிற்றுவிக்கப்படவேண்டும் என்பதை அறிவுறுத்துவது.
64 ஆம்குறள் தம் குழந்தைகளின் பிஞ்சுக்கையால் ஊட்ட உணவருந்துவது சுவைமிக்க அனுபவம் எனச் சொல்கிறது.
65 ஆம்குறள் தமது உடம்பில் சாய்ந்து உரைக்கும் குழந்தைகளின் குதலை மொழி கேட்பது உடம்பிற்கும் செவிக்கும் இன்பம் தரும் என்கிறது.
66 ஆம்குறள் எந்தவிதமான இசையையும் விட தம்தம் குழந்தைகளின் மழலைச் சொல்தான் இன்பம் தருவது என்று ஆசிரியர் மெய்மறந்து பாடுவது.
67 ஆம்குறள் தன் மகனை உலக அரங்கில் முதன்மைப்படுத்துவதற்கு உகந்த சூழலை உருவாக்கித் தருவது ஒரு தந்தையின் கடமை என்று சொல்கிறது.
68 ஆம்குறள் தம் குழந்தைகளை அறிவுடைமைப் படுத்துதலே பெற்றோரின் வளர்ப்பு நோக்கமா இருத்தல் வேண்டும் என்று சொல்கிறது.
69 ஆம்குறள் பிள்ளைகள் நற்குணம் வாய்ந்தவர்களாக வளர்ந்து பெயர் பெற்றால், அப்பெருமை தாய்க்குரியது என்று குறிக்கிறது.
70 ஆவதுகுறள் மகன் பெருமை கொண்டோன் ஆனது தந்தையின் முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றி ஆகும் என்கிறது.

புதல்வரைப் பெறுதல் அதிகாரச் சிறப்பியல்புகள்:
'யாம்' என வள்ளுவர் தாமே முன்வந்து பேசுவதாகத் தன்மைப் பன்மை(சிறப்பு ஒருமை அல்லது உயர்வு ஒருமை) யில் அமைந்த குறள்கள் மொத்தம் மூன்று. அதில் முதலாவது பாடலான பெறுமவற்றுள் யாமறிவது இல்லை...(குறள் 61) என்பது இவ்வதிகாரத்தில் உள்ளது.

........ தம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்(குறள் 64) மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம்.......(குறள் 65) குழலினிதி யாழினிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளாதவர்(குறள் 66) என்ற 'தம்குழந்தைகள்' நல்கும் இன்பங்கள் கூறும் மூன்று இனிமையான கவிதைச் சுவை நிரம்பிய பாடல்கள் இங்கேதான் உள்ளன.

நற்குண நற்செய்கைகள் கொண்டவனாக இருக்கிறான் என்று கேள்விப்படும் தாயின் பேருவகையைச் சொல்லும் ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும்................ (குறள் 69) என்ற புகழ்பெற்ற பாடல் இவ்வதிகாரத்தின் கண்ணே உள்ளது.

எதைப் பெற்றிருந்தாலும் பெற்றோர் ஆக முடியாது. பிள்ளையைப் பெற்றவர்கள் தாம் பெற்றோர் என்ற பெருமைக்குரிய பெயரைப் பெறமுடியும். .உயிர் வாழ்வு நீள்வதற்கும் நிலைப்பதற்கும் உதவுவது மக்கட்பேறு..மனித வாழ்வு என்னும் சங்கிலி நீண்டு கொண்டே போவதற்கு மக்கட்பேறு வேண்டும்.
- சௌந்தரா கைலாசம்



நன்றி: குறள் திறன் தளம்
http://kuralthiran.com/KuralAthikaaraVilakkam/BrowseKuralAthikaaraVilakkam.aspx
-----
7.  புதல்வரைப் பெறுதல்
[மு.வ. உரை]

61. பெறுமவற்றுள் யாமறிவ தில்லை யறிவறிந்த
      மக்கட்பே றல்ல பிற.
பெறத் தகுந்த பேறுகளில், அறியவேண்டியவைகளை அறியும் நன்மக்களைப் பெறுவதைத் தவிர மற்றப் பேறுகளை யாம் மதிப்பதில்லை.

62. எழுபிறப்புந் தீயவை தீண்டா பழிபிறங்காப்
      பண்புடை மக்கட் பெறின்.
பழி இல்லாத நல்ல பண்பு உடைய மக்களைப் பெற்றால் ஒருவனுக்கு ஏழு பிறவியிலும் தீவினைப் பயனாகிய துன்பங்கள் சென்று சேரா.

63. தம்பொரு ளென்பதம் மக்க ளவர்பொரு
      டந்தம் வினையான் வரும்.
தம் மக்களே தம்முடைய பொருள்கள் என்று அறிஞர் கூறுவர்; மக்களாகிய அவர்தம் பொருள்கள் அவரவருடைய வினையின் பயனால் வந்து சேரும்.

64. அமிழ்தினு மாற்ற வினிதேதம் மக்கள்
      சிறுகை யளாவிய கூழ்.
தம்முடைய மக்களின் சிறு கைகளால் அளாவப்பெற்ற உணவு, பெற்றோர்க்கு அமிழ்தத்தைவிட மிக்க இனிமை உடையதாகும்

65. மக்கண்மெய் தீண்ட லுடற்கின்ப மற்றவர்
      சொற்கேட்ட லின்பஞ் செவிக்கு.
மக்களின் உடம்பைத் தொடுதல் உடம்பிற்கு இன்பம் தருவதாகும்; அம் மக்களின் மழலைச் சொற்களைக் கேட்டல் செவிக்கு இன்பம் தருவதாகும்.

66. குழலினி தியாழினி தென்பதம் மக்கண்
      மழலைச்சொற் கேளா தவர்.
தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவரே குழலின் இசை இனியது, யாழின் இசை இனியது என்று கூறுவர்.

67. தந்தை மகற்காற்று நன்றி யவையத்து
      முந்தி யிருப்பச் செயல்.
தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும்.

68. தம்மிற்றம் மக்க ளறிவுடைமை மாநிலத்து
      மன்னுயிர்க் கெல்லா மினிது.
தம் மக்களின் அறிவுடைமை, தமக்கு இன்பம் பயப்பதைவிட உலகத்து உயிர்களுக்கெல்லாம் மிகுந்த இன்பம் பயப்பதாகும்.

69. ஈன்ற பொழுதிற் பெரிதுவக்குந் தன்மகனைச்
      சான்றோ னெனக்கேட்ட தாய்.
தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் எனப் பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனைப் பெற்ற காலத்து உற்ற மகிழ்ச்சியைவிடப் பெரிதும் மகிழ்வாள்.

70. மகன் தந்தைக் காற்று முதவி யிவன்றந்தை
      யென்னோற்றான் கொல்லெனுஞ் சொல்.
மகன் தன் தந்தைக்குச் செய்யத்தக்க கைம்மாறு, `இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ’ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்.

தேமொழி

unread,
Nov 13, 2023, 7:16:05 PM11/13/23
to மின்தமிழ்
8. அன்புடைமை

இல்வாழ்வார்க்கு அமைய வேண்டிய இன்றியமையாத குணம் அன்பு. அகத்தே உணரப்படும் மென்மையான உணர்வு அன்பாம்; இதற்குப் புறவடிவம் இல்லை. மணமான ஆண்-பெண் தாங்கள் ஒருவருக்காக ஒருவர் உள்ளதாக உணருவது அன்பின் தொடக்கநிலையாக அமையும். காமத்தில் தோன்றிய, தன்னலம் சார்ந்த அன்பு பின்னர் அதனைக் கடந்து பிள்ளைகள், உற்றார், உறவினர், நட்பினர் என்று, தன்னலம் மறைந்து, பரந்து விரிகிறது. அன்புமுதிர்ந்து ஆர்வம் என்ற அடுத்த நிலைக்கு உயர்கிறது. ஆர்வம் இன்னும் உயர்ந்த நிலையான நட்பைத் தருகிறது. அன்புடைமைதான் மனிதனை மனிதனாக்குகிறது என்கிறது இவ்வதிகாரம். உடலுக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பு அன்புதான். அன்பகத்தில்லா உயிர் வாழ்க்கை இறுகிய நிலத்தில் பட்டமரம் துளிர்த்தல் போன்றது; அன்புள்ள உடலே உயிருடையது; அன்பில்லாதவன் வெறும் தோல்போர்த்திய உடல் கொண்ட உயிரற்ற பிணம் போன்றவன் - என அன்பு இல்லாவிட்டால் உண்டாகும் குற்றங்களும் பேசப்படுகின்றன.

அன்புடைமை:
இல்லறவாழ்வில் அன்பு உடையவராய் இருத்தல் பற்றிய அதிகாரம் இது; தொடர்புடையார் மாட்டுள்ள உள்ளநெகிழ்வைச் சொல்வது.

அன்பு என்பது நாம் அடக்க விரும்பினாலும் கட்டுப்பாட்டை மீறிக் கண்ணீராக வெளிப்பட்டுவிடும் உணர்வு என முதற்குறட்பா கூறுகின்றது; அன்புள்ளம் கொண்டோர் தன்னலமற்றவராயிருப்பர், தம் உடம்பையும் பிறர்க்கு உரியதாக்குவர் என்கிறது ஒரு பாடல்; உடலும் உயிரும் கூடுவது அன்பு என்னும் பயன் கருதியே என்று ஆன்றோர் கூறினர் என உடல், உயிர், அன்பு இவற்றிற்கு இடையேயான தொடர்புபற்றிச் சொல்கிறது ஒரு குறட்பா; அன்பிலிருந்து பிறர்மீது விருப்பமுடைமை பிறக்கிறது, அதனின்று அது மனிதநேயம் என்ற நிலைக்கு வளர்கிறது; இந்த உலகிலே இன்பம் அடைந்து சிறப்புற்ற எல்லாரும் அன்பு செய்து வாழ்ந்தவர்களே என்கிறது மற்றொரு பாடல்; அறத்திற்கு மட்டுமல்லாமல் மறச்செயல்கள் நிகழ்வதற்கும் அன்பே காரணமாக அமைகிறது என்பதும் சொல்லப்பட்டது; இறைவன் ஒறுத்தல் என்பது குறளில் அரிதாகக் காணப்படுவது. அன்பில்லாதவர்களை அறக்கடவுள் ஒறுக்கும் என இவ்வதிகாரத்துள்ள ஒரு குறள் கூறுகிறது. உள்ளத்துள் அன்பற்றவர்கள் வாழ்வு இறுகிய நிலத்தில் உள்ள பட்டமரம் தழைப்பது போன்றாம் என அன்பிலார் உயிரற்றுத் தோன்றுவர் எனக் கூறுகிறது இன்னொரு பாடல்; புறத்துறுப்புக்களால் அழகுநலன் பெற்று விளங்கினாலும் அகத்துறுப்பான அன்பு இல்லையென்றால் அவர் வாழும் இல்லறம் எப்படிச் சிறக்கும்? எனக் கேட்கிறது மற்றொரு பாடல்; அன்பில்லாதவர்கள் எலும்பைச் சுற்றிப் போர்த்திய தோல் போன்றவர்களே என அவர்கள் நடைப்பிணங்களே என்று கடைசிப் பாடல் சாடுகிறது.

இல்லறத்திலுள்ள அன்புடைமை அதிகாரத்துக்கு ஒத்த கருத்துடைய துறவற அதிகாரம் அருளுடைமை ஆகும்.

அன்புடைமை அதிகாரப் பாடல்களின் சாரம்:
71 ஆம்குறள் அன்பு செய்யப்பட்டார் துன்பம் உறுதலைப் பொறுக்கமாட்டாமல் அன்புடையார் கண்ணீரும் கம்பலையுமாய் ஆகிவிடுவர் என்கிறது.
72 ஆம்குறள் அன்புள்ளம் கொண்டவர் தன்னலம் கருதாதவராயிருப்பர் என்பது.
73 ஆம்குறள் உடலுக்கும் உயிருக்கும் தொடர்பு உண்டாக்குவது அன்புதான் என்பதைச் சொல்கிறது.
74 ஆம்குறள் அன்பு எப்படி மனிதநண்பாக வளர்ச்சி பெறுகிறது என்பதைச் சொல்வது.
75 ஆம்குறள் அன்புடையார் இன்பச் சிறப்பு அடைகின்றனர் என்கிறது.
76 ஆம்குறள் அறசெயல்கள் மட்டுமன்றி மறச்செயல்களும் அன்பின் ஆட்சியாலேயே நடைபெறுகின்றன எனக் கூறுகிறது.
77 ஆம்குறள் அன்பில்லாதவனை அறம் ஒறுக்கும் என்று சொல்கிறது.
78 ஆம்குறள் அன்பில்லாதவர் உயிரற்றுக் காட்சியளிப்பர் எனச் சொல்வது.
79 ஆம்குறள் அன்பு என்ற உறுப்பே இல்லற வாழ்வைப் பயனுள்ளதாக்கும் என்று குறிக்கிறது.
80 ஆவதுகுறள் அன்பில்லாத உடம்பு உயிரற்றது ஆகிறது எனச் சாடுகிறது.
அன்புடைமை அதிகாரச் சிறப்பியல்புகள்
அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்.. (71) என்ற பாடல் அன்பிற்குரியோர் இவ்வுலகத்திலிருந்து மறையும் போது உண்டாகும் கண்ணீரையும் கம்பலையையும் நம் முன்னே கொண்டு வருகிறது.

அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்; மறத்திற்கும் அஃதே துணை. (76) 'அன்பின் துணையாலேயே மறச்செயலும் நிகழ்கிறது' என்றது அன்பைப் புதிய கோணத்தில் பார்க்கப்பட்ட அறிவுக்கு விருந்தாகும் பாடலாகும்.

அன்பிலாரை அறக்கடவுள் ஒறுக்காமல் விடாது என்பதை என்பில்லாத புழுக்களை வெயில் காய்வது என்ற சிறந்த உவமையுடன் விளக்குவது என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம் (77) என்னும் பாடல்.

""மனைவியும் மக்களும் பிறருமாகத் தம்மொடு தொடர்புடையார்கண் காதலுடையனாதல். தொடர்புபற்றி எழும் இவ்வன்பு சேய்க்கும் தாய்க்குமிடையே சிறந்து தோன்றுதலின் இதனை மக்கட்பேற்றின்பின் தொடர வைத்தார். இல்லறம் இனிது நடத்தற்கும் பிற உயிர்களின்மேல் அருள் பிறத்தற்கும் காரணம் அன்பாதலின் இது வேண்டப்பட்டது.""
- நாகை சொ தண்டபாணிப் பிள்ளை



நன்றி: குறள் திறன் தளம்
http://kuralthiran.com/KuralAthikaaraVilakkam/BrowseKuralAthikaaraVilakkam.aspx
-----
8. அன்புடைமை
[மு.வ. உரை]

71.அன்பிற்கு முண்டோ வடைக்குந்தா ழார்வலர்
     புல்கணீர் பூச றரும்.
அன்புக்கும் அடைத்துவைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே (உள்ளே இருக்கும் அன்பைப்) பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்.

72.அன்பிலா ரெல்லாந் தமக்குரிய ரன்புடையா
     ரென்பு முரியர் பிறர்க்கு.
அன்பு இல்லாதவர் எல்லாப் பொருளையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வர்; அன்பு உடையவர் தம் உடம்பையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர்.

73.அன்போ டியைந்த வழக்கென்ப வாருயிர்க்
     கென்போ டியைந்த தொடர்பு.
அருமையான உயிர்க்கு உடம்போடு பொருந்தி இருக்கின்ற உறவு, அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன் என்று கூறுவர்.

74.அன்பீனு மார்வ முடமை யதுவீனு
     நண்பென்னு நாடாச் சிறப்பு.
அன்பு, பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் தன்மையைத் தரும்; அஃது எல்லோரிடத்திலும் நட்பு என்று சொல்லப்படும் அளவற்ற சிறப்பைத் தரும்.

75.அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத்
     தின்புற்றா ரெய்துஞ் சிறப்பு.
உலகத்தில் இன்பம் உற்று வாழ்கின்றவர் அடையும் சிறப்பு, அன்பு உடையவராகிப் பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன் என்று கூறுவர்.

76.அறத்திற்கே யன்புசார் பென்ப வறியார்
     மறத்திற்கு மஃதே துணை.
அறியாதவர், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவர்; ஆராய்ந்து பார்த்தால் வீரத்திற்கும் அதுவே துணையாக நிற்கின்றது.

77.என்பி லதனை வெயில்போலக் காயுமே
     யன்பி லதனை யறம்.
எலும்பு இல்லாத உடம்போடு வாழும் புழுவை வெயில் காய்ந்து வருத்துவதுபோல், அன்பு இல்லாத உயிரை அறம் வருத்தும்.

78.அன்பகத் தில்லா வுயிர்வாழ்க்கை வன்பார்க்கண்
     வற்றன் மரந்தளிர்த் தற்று.
அகத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர்வாழ்க்கை வளமற்ற பாலைநிலத்தில் பட்டமரம் தளிர்த்தாற் போன்றது.

79.புறத்துறுப் பெல்லா மெவன்செய்யும் யாக்கை
     யகத்துறுப் பன்பி லவர்க்கு.
உடம்பின் அகத்து உறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு உடம்பின் புறத்து உறுப்புக்கள் எல்லாம் என்ன பயன் செய்யும்?

80.அன்பின் வழிய துயிர்நிலை யஃதிலார்க்
     கென்புதோல் போர்த்த வுடம்பு.
அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிர்நின்ற உடம்பாகும்; அன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்பு எலும்பைத் தோல் போர்த்த வெற்றுடம்பே ஆகும்.
Message has been deleted

தேமொழி

unread,
Dec 9, 2023, 8:49:11 PM12/9/23
to மின்தமிழ்
9.  விருந்தோம்பல்  

விருந்து என்ற சொல் இன்று மணவிழா, சிறப்புப்பெற்றவர்களை வாழ்த்துவது இவை போன்ற கொண்டாட்ட நிகழ்சிகளில், சுற்றத்தார்க்கும் நட்பு வட்டத்திற்கும் மற்றவர்க்கும், மகிழ்ச்சியின் வெளிப்பாடாக, வீட்டிலோ வெளிஇடங்களிலோ, அளிக்கப்படும் உயர்ந்தவகை உண்டியையே குறிக்கிறது. ஆனால், முன்னாட்களில் விருந்து என்றது புதியது அல்லது புதியவர் என்று பொருள்பட்டது. உதவி தேடி புதியதாகத் தன் இல்லம் வருபவரை அன்புடன் வரவேற்றுச் 'சோறிடுதல்' விருந்தோம்பல் எனப்பட்டது.

விருந்தோம்பல்:
அன்பு முதிர்ந்த நிலையை ஆர்வமுடைமை என்று வள்ளுவர் குறிப்பார். ஆர்வ நிலையில் விருந்தோம்பல் என்ற பண்பு மலரும். தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை (இல்வாழ்க்கை குறள் 43) என்ற பாடலில் இல்வாழ்வானுக்குரிய தலையாய ஐந்து கடமைகளில் விருந்தோம்பலும் ஒன்று எனக் கூறிய வள்ளுவர் அதற்கென தனியாக ஒரு அதிகாரம் படைத்து அதன் விழுப்பங்கள், பயன்கள், விருந்தோம்பும் முறை இவற்றை விளக்கியுள்ளார். விருந்தோம்பாமை இழித்தும் சொல்லப்படுகிறது, மனித மேம்பாட்டைச் சிறப்பிக்கும் விருந்தோம்பல் என்ற பசி தீர்க்கும் அறத்தை ஒவ்வொரு இல்வாழ்வாரும் கடைப்பிடிக்க வேண்டும் என்ற கருத்துத் தோன்ற இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு (விருந்தோம்பல் 81 பொருள்: குடும்பமாக இருந்து சிறந்து வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் பேணி அவர்களுக்கு உதவிசெய்தற் பொருட்டு) என்று வள்ளுவர் பணிக்கின்றார். வேளாண்மை செய்தல் என்பது வருந்தினோர்க்கு உதவி செய்தல் என்ற பொருளது. விருந்தோம்பல் இல்லாதவழி அன்பு பெருகி அருளாக மாறாது.

பிற பண்பாடுகளில் வானுலக தேவர்களுக்கு விருந்து படைப்பதை வேள்வி (யாகம்) என அழைக்கின்றனர். கண்காணாத தேவர்களுக்குச் செய்யும் வேள்வியைவிடக் கண்கண்ட மானிடர்க்குச் செய்யும் விருந்தோம்பலாகிய வேள்வி சிறந்ததென்கிறார் வள்ளுவர். இவ்விருந்து விரும்பிச் செய்ய வேண்டியதாகலின் அது வேள்வி எனப்பட்டது. விருந்தோம்புவானது நற்பண்பினால் இறையருள் துணையாக அவனது வயலில் விதைப்பதெல்லாம் பெரும்போகமாக விளையும் எனக் கூறி விருந்தோம்பலை மேன்மைப் படுத்துகிறார் வள்ளுவர்.

அறிமுகமானவர்களும் விருந்தினர்களாக வருவர். அறியாதவர்களும் வருவர். ஆனாலும் விருந்து என்பதற்குப் புதிது என்றும் விருந்தினர் என்பதற்கு புதியவர் என்றுமே பொருள். எத்துணை முறை வந்தாலும் சரி, பன்முறை பழகிவந்தாலும் சரி. அவர்களையெல்லாம் புதியராக எண்ணிப் போற்றவேண்டும் என்னும் விழுமிய எண்ணத்தால் எழும்பியதே இச்சொற்கள் போலும்!(இரா இளங்குமரனார்).

பயணம் போகும் இடங்களில் அவர்களை ஏற்றுக்கொண்டு பேணக்கூடியவர்கள் இல்லங்களில் தங்கி அவர்கள் அளிக்கும் உணவையுண்டு அவ்வவ்விடங்களில் அறப்பணியாற்றியவர்கள் புதியவர் எனப்பட்டிருக்கலாம். இக்காலம் போல் பணம் பெற்று வசதியளிக்கும் உண்டுறை விடுதிகள் அக்காலத்தில் இருந்திருக்கா. ஆகவே, ஊருக்குப் புதிதாக வருவோரை வரவேற்று உணவு கொடுக்க வேண்டியது இல்லறத்தார்க்குரிய கடனாகக் கருதப்பட்டிருக்கலாம்.
பசியாற்றல்தான் விருந்தோம்பல் என்றால் பகுத்துக் கொடுக்கத் தக்கவர் எல்லாரையும் கூறாது, விருந்து ஒன்றை மட்டும் கூறியது ஏன் என்ற கேள்வி எழுப்பி அது சிறப்பு விதியாகக் கூறப்பட்டது என்று அமைதியும் கூறினார் பழம் உரையாசிரியரான பரிப்பெருமாள்.

இல்லறத்தில் கணவனும் மனைவியும் மனவேறுபாடின்றி இணைந்து விருந்தோம்பல் கடமையை நிறைவேற்றினர். கோவலன் தன்னை விட்டுப் பிரிந்திருந்ததனால் ...... தொல்லோர் சிறப்பின் விருந்துஎதிர் கோடலும் இழந்த என்னை......(சிலப்பதிகாரம் மதுரைக்காண்டம் கொலைக்களக் காதை 72-73) எனக் கண்ணகி விருந்தோம்புதலை ஆற்ற இயலவில்லையே என்று கலங்கினாள். ... விருந்து கண்டபோது என்னுறுமோ என்று விம்மும்'(சுந்தரகாண்டம், காட்சிப்படலம்) என்று கம்ப இராமாயணத்தில் இராமனிடம் இருந்து பிரித்துக் கொணரப்பட்டுத் தனிமையில் வைக்கப்பட்டிருந்த சீதையும் விருந்து பேண முடியாமற்போமே என்று வருந்துவாள்.

விருந்தோம்பல் அதிகாரக் கருத்துக்கள் இன்றும் பொருந்துகின்றனவா?
விருந்தோம்பலைப் பாட்டும் தொகையும் பாடல் காலத்து விருந்தோம்பலாக மட்டும் வள்ளுவர் நோக்கவில்லை; ஒரு புனிதமான வேள்வியாக விருந்தோம்பலை வள்ளுவர் கருதினார் (ராஜ் கௌதமன்). வள்ளுவர் காலத்துக்கு ஆயிரம் ஆண்டுகள் பின் வந்த உரையாசிரியர்கள் காலத்தில் விருந்தோம்பல் பொருளில் மாற்றம் காணப்பட்டது போல் தெரிகிறது. எந்த நேரத்தில் விருந்து வந்தாலும் உணவு தரவேண்டும் என்று வள்ளுவர் கூற மணக்குடவர்/பரிப்பெருமாள் உரை 'உண்ணுங் காலத்துப் புதியார் வந்தால் பகுத்துண்ண வேண்டும்' என்கிறது. அதற்குப் பின்பு விருந்தோம்பலின் எல்லை இன்னும் சுருங்கி, தொடர்புடைய சுற்றத்தார், நட்பினர் ஆகியோரே விருந்தினர் ஆகிவிட்டார்கள். சமூக-பொருளாதார அமைப்பில் ஏற்பட்ட மாற்றங்களே விருந்தினர் யார் என்பதற்கான அடையாளம் மாறியதற்குக் காரணமாயிருக்கலாம்.
......விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு' என்று வள்ளுவர் விருந்தோம்பலை பிறர்க்கு உதவி செய்தல் என்ற பொருளிலேயே ஆண்டுள்ளார். பழம்பாடல்களிலும் குறளிலும் கூறப்பட்ட விருந்தோம்பல் முறை இன்று அப்படியே இல்லை என்றாலும் இன்று பசியாற்றல் நிகழ்வுகளை வேறுவடிவில் காணமுடிகிறது. அறச்சாலைகளிலும், சமுதாயக்கூடங்களிலும், பெரும் செல்வந்தர் இல்லங்களிலும், இப்பொழுது வெளியாட்களுக்கு உணவுக்கொடை அதாவது அன்னதானம் என்ற பெயரில் உணவு வழங்கப்படுகிறது. விருந்தோம்புவான் வரையறைக்குள் இவர்கள் முற்றுமாக பொருந்தமாட்டார்கள் என்றாலும் விருந்தோம்பும் பண்பு இவ்விடங்களிலும் காணப்படும்.
சில இல்லங்களில் குறிப்பாக பெருநகரங்களில் 'காசுகொடுக்கும் விருந்தாளி' (Paying Guest) அதாவது பணம் பெற்று உணவு வழங்குதல் முறை உள்ளது. இதையும் பசியாற்றல் பணியாகக் கொள்வதில் குற்றம் இல்லை. இன்று விருந்தோம்பல் பணியை, தொழில் முறையாக ஆதாயம்பெற்றுச் செய்யும் உண்டுறை விடுதி (hospitality industry) செய்கிறது.
பொதுவாக இன்று வீடுகளில் உற்றார்க்கும் நண்பர்க்கும் செய்யப்படும் விருந்தோம்பல் அறமாகப் போற்றப்படாவிட்டாலும் இவ்வதிகாரத்தில் கூறப்பட்ட விருந்தோம்பும் பண்புநலன்கள் பின்பற்றப்படுகின்றன.

பசியாற்றி உதவி செய்தலையே வள்ளுவர் விருந்தோம்பல் எனக் கூறுகிறார். ஆதலால் இவ்வதிகாரத்துக் கருத்துக்கள் இன்றைக்கும் பொருந்துவனவே.

விருந்தோம்பல் அதிகாரப் பாடல்களின் சாரம்:
81 ஆம்குறள் இல்லறம் நடத்துவது விருந்தினரைப் பேணுவதற்கே என்கிறது.
82 ஆம்குறள் சாவா மருந்தேயானாலும் விருந்தினரோடு உண்க எனச் சொல்வது.
83 ஆம்குறள் விருந்தினர் நாளும் வந்தாலும் அவர்களைப் பேணிக்கொள்ள வேண்டும் என்பதைச் சொல்கிறது.
84 ஆம்குறள் வருவோரை முகமலர்ச்சியுடன் பேணுவானது செல்வமும் மலரும் எனச் சொல்வது.
85 ஆம்குறள் வந்தவர் அனைவரும் உண்டனரா என்று உறுதி செய்தபின் தான் உண்பவன் நிலத்தில் விளைச்சல் பெருகும் என்கிறது.
86 ஆம்குறள் நாள் முழுவதும் இடையறாது விருந்து போற்ற விழைவானை வரவேற்க இன்பம் மட்டுமே நிறைந்த வேறோர் உலகம் காத்துக் கொண்டிருக்கிறது எனக் கூறுகிறது.
87 ஆம்குறள் இல்லற வேள்வியான விருந்தோம்பல் பயன் இவ்வளவு என்று சொல்லக்கூடிய ஒன்று இல்லை என்று சொல்கிறது.
88 ஆம்குறள் செல்வம் இருந்தபோது உணவிட மனம் இல்லாது இப்பொழுது அதை நினைப்பது காலங்கடந்த புரிதலாகிறது எனச் சொல்வது.
89 ஆம்குறள் செல்வமிருந்தும் விருந்து தலைப்படாதது மூடத்தனம் என்று குறிக்கிறது.
90 ஆவதுகுறள் வந்த விருந்தினரை மகிழ்வோடு ஏற்று மலர்ந்த முகத்தோடு மனத்தில் சற்றும் களங்கமில்லாமல் பேண வேண்டும் என அறிவுறுத்துவது.
விருந்தோம்பல் அதிகாரச் சிறப்பியல்புகள்
இறவாமையைத் தருவதாகக் கூறப்படும் அமிழ்தம் கிடைத்தாலும் அதை விருந்தினர் புறத்திருக்கத் தான் மட்டும் உண்ணக்கூடாது என்பதை வலியுறுத்தும் விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று என்னும் உயர்ந்த கருத்துக் கொண்ட பாடல் (குறள் 82) இவ்வதிகாரத்தின் கண்ணே உள்ளது.

வித்தில்லாமலே விளைச்சல் பெருகும் எனச் சொல்லும் வித்தும் இடல்வேண்டும் கொல்லோ ..... எனத் தொடங்கும் செய்யுள் (குறள் 85) இங்குதான் உள்ளது. உணர்ச்சியும் கற்பனையும் ஒருங்கே இயைந்து படிப்போர் உள்ளத்தில் அழுத்தமாகப் பதியவைக்கும் வகையில் கருத்தைக் கூறிய குறட்பா இது.

குறள் 89-இல் உடைமையுள் இன்மை....... என்னும் அழகிய தொடர் அமைந்துள்ளது. செல்வமிருந்தும் விருந்தோம்பா மடமையை வளமையில் வறுமை என்ற பொருள்படும்படி இத்தொடர் குறிக்கிறது.

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து. என்ற ஓசை நயம் கொண்ட பாடல் (குறள் 90) இவ்வதிகாரத்து உள்ளது. நுண்ணுணர்வையும் மென்மையையும் கொண்ட அனிச்சமலரை விருந்தினர் உள்ளத்துக்கு ஒப்பிட்டது எண்ணி இன்புறத்தக்க உவமையாம். வீட்டிற்கு வரும் விருந்தினர் மனம் புண்படும்படி நடந்துகொள்ளக்கூடாது என்பதை இதனினும் அழுந்தக் கூறமுடியாது.

""கணவன் மனைவிக்கிடையில் அன்பான சூழலை விளக்கிய பிறகு பிள்ளைகளின் பெருமையில் மகிழ்கிறார்கள். பின்னையது சமூகத்துக்குப் பயன்படக்கூடியது. வள்ளுவர் இந்த அன்பை மேலும் விரித்து விருந்தினரைப் பேணுவதுவரை கொண்டு செல்லுகிறார். எதிர்பாராத விருந்தினர்க்குத் தம் உணவைப் பகிர்ந்து கொடுப்பதில் அடையும் மகிழ்ச்சியையும் பெருமையையும் பற்றிப் பேசுகிறார். திருவள்ளுவர் இதனை வேள்வி அல்லது பெருந்தியாகம் என்று அழைக்கின்றார்.""
- தெ பொ மீனாட்சிசுந்தரம்


நன்றி: குறள் திறன் தளம்
http://kuralthiran.com/KuralAthikaaraVilakkam/BrowseKuralAthikaaraVilakkam.aspx
-----
9.  விருந்தோம்பல்  
[மு.வ. உரை]

81.இருந்தோம்பி யில்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
     வேளாண்மை செய்தற் பொருட்டு.
வீட்டில் இருந்து பொருள்களைக் காத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவிசெய்யும் பொருட்டே ஆகும்.

82. விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
     மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.
விருந்தினராக வந்தவர் வீட்டின் புறத்தே இருக்கத் தான் மட்டும் உண்பது சாவாமருந்தாகிய அமிழ்தமே ஆனாலும் அது விரும்பத்தக்கது அன்று.

83. வருவிருந்து வைகலு மோம்புவான் வாழ்க்கை
     பருவந்து பாழ்படுத லின்று.
தன்னை நோக்கி வரும் விருந்தினரை நாள்தோறும் போற்றுகின்றவனுடைய வாழ்க்கை, துன்பத்தால் வருந்திக் கெட்டுப் போவதில்லை.

84. அகனமர்ந்து செய்யா ளுறையு முகனமர்ந்து
     நல்விருந் தோம்புவா னில்.
நல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்றுகின்றவனுடைய வீட்டில் மனமகிழ்ந்து திருமகள் வாழ்வாள்.

85. வித்து மிடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி
     மிச்சின் மிசைவான் புலம்.
விருந்தினரை முன்னே போற்றி உணவளித்து மிஞ்சிய உணவை உண்டு வாழ்கின்றவனுடைய நிலத்தில் விதையும் விதைக்க வேண்டுமோ?

86. செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பா
     னல்விருந்து வானத் தவர்க்கு.
வந்த விருந்தினரைப் போற்றி, இனி வரும் விருந்தினரை எதிர்பார்த்திருப்பவன், வானுலகத்தில் உள்ள தேவர்க்கும் நல்ல விருந்தினனாவான்.

87. இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
     றுணைத்துணை வேள்விப் பயன்.
விருந்தோம்புதலாகிய வேள்வியின் பயன் இவ்வளவு என்று அளவு படுத்திக் கூறத்தக்கது அன்று; விருந்தினரின் தகுதிக்கு ஏற்ற அளவினதாகும்.

88. பரிந்தோம்பிப் பற்றற்றோ மென்பர் விருந்தோம்பி
     வேள்வி தலைப்படா தார்.
விருந்தினரை ஓம்பி அந்த வேள்வியில் ஈடுபடாதவர், பொருள்களை வருந்திக் காத்து (பின்பு இழந்து) பற்றுக் கோடு இழந்தோமே என்று இரங்குவர்.

89. உடமையு ளின்மை விருந்தோம்ப லோம்பா
     மடமை மடவார்க ணுண்டு.
செல்வ நிலையில் உள்ள வறுமை என்பது விருந்தோம்புதலைப் போற்றாத அறியாமையாகும்; அஃது அறிவிலிகளிடம் உள்ளதாகும்.

90. மோப்பக் குழையு மனிச்ச முகந்திரிந்து
     நோக்கக் குழையும் விருந்து.
அனிச்சப்பூ மோந்தவுடன் வாடிவிடும்; அதுபோல் முகம் மலராமல் வேறுபட்டு நோக்கியவுடன் விருந்தினர் வாடி நிற்பர்

தேமொழி

unread,
Dec 18, 2023, 7:59:43 PM12/18/23
to மின்தமிழ்
10.  இனியவைகூறல்

இனிமை பயக்குஞ் சொல்லைச் சொல்லுதல் இனியவை கூறல் ஆகும். அன்போடு கலந்து படிறு நீங்கிச் சொல்லப்படுவது இன்சொல்லாம். இனிய பேசுவதால் மாந்தரிடையே வெறுப்புணர்ச்சி மறைகிறது. இனியவை கூறல் ஓர் அறம் என்கிறார் வள்ளுவர். இன்சொல் தமக்கு இனிமை பயப்பதை உணர்பவர் ஏன் வன்சொல் வழங்குகிறார் என்று வியப்புத் தெரிவிக்கிறார் அவர். இன்சொல் கூறுதலின் மாண்பு கூறி, அதன் பயன் தெரிவித்து, வன்சொல் கூற வேண்டாம் என அறிவுறுத்துகின்றன அதிகாரப்பாடல்கள்.

இனியவைகூறல்:
அன்பு நெஞ்சினின்றுதான் இனிய சொற்கள் ஊறும். உலகில் நல்லவை நடப்பதற்கும் கெட்டவை உண்டாதற்கும் பேசப்படும் சொற்களும் காரணம். ஆதலால் அறநெறியொழுக்கத்திற்கும் வாழ்வில் வெற்றிபெறுதற்கும் இன்சொல் பேசிப்பழகுதல் வேண்டும். மாந்தர், தங்களுக்குள் பழகும்போதும் உரையாடும்போதும், ஒருவர்க்கொருவர் உள்ளன்போடு இன்முகம் காட்டி இனிய சொற்கள் பேசவேண்டும் என்பதைச் சொல்வது இவ்வதிகாரம். .

இனிமை உடையனவாய், அன்பு பொருந்தி வஞ்சனை அற்றனவையாய் இருப்பன இன்சொற்கள்;
ஈகை பெறுவதை விட, அன்பு கலந்து உள்ளத்தில் வஞ்சகம் இல்லாமல் கொடுப்போர் பேசும் இன்சொற்களோ ஏற்பார்க்கு மகிழ்வு அளிக்கும்; முகமலர்ந்து இனிமையாகப் பார்த்து உள்ளக் கனிவோடு இன்சொல் கூறுக; அதுவே அறமாகும். இன்சொல் புகல்வோர் மற்றவர்களிடம் வெறுப்புக் கொள்ளார்; பிறரும் இவர் மேல் காழ்ப்பு காட்ட மாட்டார்கள்; அவர்கள் துன்புறமாட்டார்கள்; பணிவுடன் இன்சொல் பேசுபவதல் ஒருவர் பொலிவு பெறுவர்; நல்லவற்றை இன்சொல்லால் பேசுவதன் பயனாக தீயவை குறைந்து நற்செயல்கள் பெருகும்; பண்புடன் கூடிய இன்சொல்லினால் அறம் வளரும். நம்மை பலரும் விரும்புதல் நிகழும்- நயனையும் பயனையும் நன்றியையும் விளக்குந் தன்மை வாய்ந்தது. இழிவற்ற இன்சொற்களைக் கூறுபவர்க்கு இவ்வுலகிலும் வேறு உலகிலும் இன்பவாழ்வு கிடைக்கும்;
மற்றவர் நம்மிடம் இனிமையாகப் பேசும் போது அதை நன்கு அனுபவித்து மகிழுகிற நமக்கு எது இனிமையான பேச்சு என்பதும் தெரியும். எப்படி இனிமையாகப் பேசவேண்டும் என்பதும் தெரியும். வன்சொல் சிறுமை பொருந்தியது. இன்சொல் என்ற கனி இருக்கும்போது ஒருவர் ஏன்  இன்னாச்சொல் என்னும் பழுக்காத காயை எடுத்து நுகர வேண்டும்?
இவை இவ்வதிகாரம் தரும் செய்திகள்.

இனியவைகூறல் அதிகாரப் பாடல்களின் சாரம்:
91 ஆம்குறள் அறம் தெரிந்தவர் அருள் கலந்து, தூய்மையானதாய், வாய்மையுடன் கூறும் சொல்லே இன்சொல் என்கிறது.
92 ஆம்குறள் கொடை பெறுவதைவிட மகிழ்விப்பது முகம் மலர்ந்து கூறப்படும் இன்சொல்லேயாகும் எனச் சொல்கிறது.
93 ஆம்குறள் உள்ளன்போடு இன்சொற்கள் கூறுவது ஓர் அறமாகும் என்பதைச் சொல்கிறது.
94 ஆம்குறள் இன்சொற்கள் பேசுவாரிடையே வெறுப்பு நிலவாது என்பதைச் சொல்வது.
95 ஆம்குறள் இன்சொல் பேசி பணிவாக நடப்பானானால் அது அவர்க்கு அழகு சேர்க்கும் அணியாகும் என்கிறது.
96 ஆம்குறள் இனியவை கூறக் கூற தீயன குறைந்து நன்மைகள் வளரும் என்னும் அறக்குரல் ஒலிப்பதைச் சொல்வது.
97 ஆம்குறள் இனிமைப் பயன் நல்கும் சொல்லானது விரும்புதலைத் தந்து, நன்மை உண்டாக்கும் என்று சொல்கிறது.
98 ஆம்குறள் இழிவுபடுத்தாத இனிய சொற்கள் பேசினால் இருமையிலும் இன்பம் கிடைக்கும் எனச் சொல்வது.
99 ஆம்குறள் இன்சொல்லின் இனிமையை உணர்ந்தும் கடுஞ்சொல் பேசும் மக்களைப் பார்த்து வள்ளுவர் ஆற்றாமை கொள்வதைக் குறிப்பது.
100 ஆவதுகுறள் இன்பம் தரும் சொற்கள் தம்முள் இருக்க ஒருவன் பயன்தராத கடுஞ்சொற்கள் பேசவேண்டாம் என அறிவுறுத்துவது.

இனியவைகூறல் அதிகாரச் சிறப்பியல்புகள்:
ஈகையைவிட இன்சொல்கூறும் அறம் சிறந்தது என்னும் கருத்துக் கொண்ட அகன்அமர்ந்து ஈதலின் நன்றே..... என்ற பாடல் (92) இவ்வதிகாரத்தில் உள்ளது.

சொல்பவன் கேட்பவன் ஆகிய இருவர் நெஞ்சமும் இன்சொல்லைச் சொல்லிப் போதும் என்றும், கேட்டுப் போதும் என்றும் அமையாத வண்ணம் இன்சொல்லைச் கூறினால் அதுவே அறம் என்னும் இனிமையான கருத்தமைந்த முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தானாம் இன்சொல் இனதே அறம் என்ற பாடல் (93) இங்கே இருக்கிறது.

இன்பம் தரும் பழமும், இன்னாசொல்லான கனியாத காயும் இருக்கும் இடத்திலிருந்து ஏன் ஒருவன் காயை எடுத்து நுகர்கிறான் என வியந்து வன்சொல் வழங்குதல் வேண்டாம் என அறுவுறுத்தும் இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று என்ற நன்கு அறியப்பட்ட பாடல் (100) இடம்பெற்றுள்ள அதிகாரம் இது.

""இல்வாழ்க்கையிலும் சமூக வாழ்க்கையிலும் இணைப்பு தேவை. இணைப்புக்கு உரமிடுவது இனிய சொற்களேயாம். எல்லாம் நன்றாகச் செய்யினும் இனிய சொற்கள் கூறத் தெரியாவிடில் அனைத்தும் பாழ். ஆதலால் இனிய கூறலும் அறமாயிற்று.""

- குன்றக்குடி அடிகளார்


நன்றி: குறள் திறன் தளம்
http://kuralthiran.com/KuralAthikaaraVilakkam/BrowseKuralAthikaaraVilakkam.aspx
-----
10.  இனியவைகூறல்
[மு.வ. உரை]

91.இன்சொலா லீர மளைஇப் படிறிலவாஞ்
     செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
அன்பு கலந்து வஞ்சம் அற்றவைகளாகிய சொற்கள், மெய்ப்பொருள் கண்டவர்களின் வாய்ச்சொற்கள் இன்சொற்களாகும்.

92.அகனமர்ந் தீதலி னன்றே முகனமர்ந்
     தின்சொல னாகப் பெறின்.
முகம் மலர்ந்து இன்சொல் உடையவனாக இருக்கப் பெற்றால், மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும் ஈகையைவிட நல்லதாகும்.

93.முகத்தா னமர்ந்தினிது நோக்கி யகத்தானா
     மின்சொ லினதே யறம்.
முகத்தால் விரும்பி - இனிமையுடன் நோக்கி - உள்ளம் கலந்து இன்சொற்களைக் கூறும் தன்மையில் உள்ளதே அறமாகும்.

94.துன்புறூஉந் துவ்வாமை யில்லாகும் யார்மாட்டு
     மின்புறூஉ மின்சொ லவர்க்கு.
யாரிடத்திலும் இன்புறத்தக்க இன்சொல் வழங்குவோர்க்குத் துன்பத்தை மிகுதிப்படுத்தும் வறுமை என்பது இல்லையாகும்.

95.பணிவுடைய னின்சொல னாதல் ஒருவற்கு
     அணியல்ல மற்றுப் பிற.
வணக்கம் உடையவனாகவும் இன்சொல் வழங்குவோனாகவும் ஆதலே ஒருவனுக்கு அணிகலனாகும், மற்றைய அணிகள் அணிகள் அல்ல.

96.அல்லவை தேய வறம்பெருகு நல்லவை
     நாடி யினிய சொலின்.
பிறர்க்கு நன்மையானவற்றை நாடி இனிமை உடைய சொற்களைச் சொல்லின், பாவங்கள் தேய்ந்து குறைய அறம் வளர்ந்து பெருகும்.

97.நயனீன்று நன்றி பயக்கும் பயனீன்று
     பண்பிற் றலைப்பிரியாச் சொல்.
பிறர்க்கு நன்மையான பயனைத் தந்து நல்ல பண்பிலிருந்து நீங்காத சொற்கள், வழங்குவோனுக்கும் இன்பம் தந்து நன்மை பயக்கும்.

98.சிறுமையு ணீங்கிய வின்சொன் மறுமையு
     மிம்மையும் மின்பந் தரும்.
பிறர்க்குத் துன்பம் விளைவிக்கும் சிறுமையிலிருந்து நீங்கிய இனிய சொற்கள் மறுமைக்கும் இம்மைக்கும் வழங்குவோனுக்கு இன்பம் தரும்.

99.இன்சொலா லினிதீன்றல் காண்பா னெவன்கொலோ
     வன்சொல் வழங்கு வது.
இனிய சொற்கள் இன்பம் பயத்தலைக் காண்கின்றவன், அவற்றிற்கு மாறான வன்சொற்களை வழங்குவது என்ன பயன் கருதியோ?

100.இனிய வுளவாக லின்னாத கூறல்
       கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.
இனிய சொற்கள் இருக்கும்போது அவற்றைவிட்டுக் கடுமையான சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்கும்போது காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்றது.
Message has been deleted

தேமொழி

unread,
Dec 28, 2023, 1:07:45 AM12/28/23
to மின்தமிழ்
11. செய்ந்நன்றி அறிதல்

பிறர் செய்த நன்மையை மறவாது உணர்ந்திருப்பது செய்ந்நன்றியறிதல் ஆகும். செய்யாமல் செய்த உதவி, காலத்தினால் செய்த உதவி, பயன் தூக்கார் செய்தார் உதவி என்றிவை நன்றி உணர்தலில் அளவிட்டு அறியமுடியாத மிக உயர்ந்த நிலையில் வைத்துப் பேசப்பட்டுள்ளன. நன்றி மறப்பது அறமன்று எனச் சொல்லப்படுகிறது. செய்ந்நன்றி கொல்வது அதாவது தனக்குச் செய்யப்பட்ட உதவியில் தோன்றவேண்டிய நன்றியுணர்வை நினைவிற்கொள்ள மனமில்லாமல் அதை அழித்துவிடல் என்பது மன்னிப்பே இல்லாத குற்றமாம் என்று கூறப்படுகிறது.

செய்ந்நன்றியறிதல்:
ஒருவர்க்கொருவர் உதவி செய்வதாலேயே உலகம் இயங்குகிறது. பலருதவியும் தன் முயற்சியும் இயைந்த சேர்க்கையே வாழ்க்கையாகிறது. ஒருவரது வாழ்வில் எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத வாயில்கள் வழியாக ஏமாற்றங்கள் ஏற்படுகின்றன. துன்பங்கள் நேர்கின்றன. அதுபோன்ற வேளைகளில் பிறர் உதவியில்லாமல் அவற்றிலிருந்து மீள்வது கடினம். ஆனாலும் யாராவது எங்கிருந்தாவது உதவுவர். அவ்விதம் நமக்குச் செய்யப்பட்ட நன்மைகளை மறவாமல் நினைந்து போற்றவேண்டும். உதவி என்பது பொருளுதவி மட்டுமன்றி எல்லாவகையான உதவிகளையும் குறிக்கும்.

நன்றி என்ற சொல் இன்று ஒருவர் செய்த உதவிக்கு நன்றியுணர்ச்சி காட்டுதல் அல்லது திரும்ப உதவுதல் என்ற பொருள்களில் பயன்பாட்டில் உள்ளது.
ஆனால் இவ்வதிகாரத்தில் நன்றி என்ற சொல் நன்மை அல்லது உதவி என்ற பொருளிலேயே ஆளப்பட்டுள்ளது. செய்யப்பட்ட உதவி நினைக்கப்படவேண்டும் என்பதைச் சொல்வது இவ்வதிகாரம். நன்றிக்கு நன்றி செய்வது அல்ல. அதாவது செய்யப்பட்ட நன்றியை மறவாது இருப்பது பற்றியதே இது. செய்ந்நன்றியறிதலை உதவியறிதல் எனவும் கொள்ளலாம். செய்த நன்றி அதாவது செய்யப்பட்ட நன்றி என்பது செய்ந்நன்றி எனச் சுருங்கியது.

'ஒருவர் நமக்குச் செய்த உதவியை மறவாது நினைவிற்கொள்ளவேண்டும் என்றால் ஏதோ செய்ததற்கு ஈடு செய்வது அல்ல. இன்ன காலத்து இவர் இன்ன செய்தார் எனப் பாராட்டிப் பேசினும் செய்ந்நன்றி தாழும் என்னும் கருத்தை எண்ணி ‘நன்றி கூறல்’ என்னாது ‘நன்றியறிதல்’ என்று கூறப்பட்டது (தண்டபாணி தேசிகர்).
உதவி பற்றியும் உதவி பெற்றோர் பற்றியும் பேசும் அதிகாரம் உதவி செய்தோர் பற்றி ஒன்றும் குறிக்கவில்லை.

நன்மையின் அளவை எண்ணாது செய்யப்பட்ட உதவிக்காகவே அதைப் பெரிதாகப் போற்றுவர் நன்றியுணர்வுள்ளவர்கள்; துன்ப காலத்தில் நன்மை செய்தவர்களை எப்பொழுதும் மறக்காமல் தொடர்பிலேயே வைத்திருக்க வேண்டும்; நன்மையல்லாதவற்றை மறக்கப் பயிற்சி கொள்ளவேண்டும்; சிறு உதவியையும் பெரிதாகப் போற்ற வேண்டும்; ஒருவன் கொல்வது போன்ற துன்பத்தை செய்தாலும் அவன் செய்த ஒரு சிறு நன்மையின் நினைவு அதை மறக்கடிக்கும்; உதவியைப் பெற்ற பிறகு, மனதின் சிறுமையால், செய்யப்பட்ட நன்மையை மறந்துவிடக்கூடாது; செய்ந்நன்றி மறத்தல் கொடிய செயலாகும்; ஒருவன் எந்த நன்மையை மறந்தாலும் மீட்சி பெறலாம்; ஆனால் நன்றியுணர்வைச் சாகடித்தால் அத்தீச் செயலிலிருந்து மீட்சியே இல்லை; இவை இவ்வதிகாரம் தரும் செய்திகள்.

செய்ந்நன்றியறிதல் அதிகாரப் பாடல்களின் சாரம்:
101 ஆம்குறள் முன்னே தாம் ஒருவர்க்குச் ஒன்றும் செய்யாமல் ஒருவர் தமக்குச் செய்த உதவிக்கு மண்ணுலகும் விண்ணுலகும் கொடுத்தாலும் அவை ஈடாக மாட்டா என்கிறது.
102 ஆம்குறள் உற்ற நேரத்தில் செய்த உதவி சிறியதாயினும் அது உலகத்தைவிட பெருமையில் பெரியது எனச் சொல்கிறது.
103 ஆம்குறள் ஒரு பயனை நோக்கானாய்ச் செய்த உதவியின் தன்மையை ஆராயின், நன்மை கடலினும் பெரிது என்பதைச் சொல்கிறது.
104 ஆம்குறள் தமக்கு ஒருவர் தினையளவு நன்மை செய்தாலும் அதனைப் பனையளவு பெரிய நன்மையாகக் கருதுவர் 'உதவியின் பயனை அறியக்கூடியவர்கள்.என்பதைச் சொல்வது.
105 ஆம்குறள் செய்யப்பட்ட உதவிப்பொருளின் அளவு பொறுத்ததல்ல உதவி, அது உதவி பெற்றவரின் பெருங்குணத்தின் அளவினது என்கிறது.
106 ஆம்குறள் குற்றமற்றாரது கேண்மையை மறவாதீர்; துன்பம் வந்தகாலத்து துணையாய் நின்றவர் நட்பைக் கைவிடாதீர் எனச் சொல்வது.
107 ஆம்குறள் தம்மிடம் உண்டாகிய துன்பத்தை நீக்கியவர் நட்பினை ஏழேழு பிறப்பிற்கும் நினைத்துக்கொள்வர் நன்றியறிவுடையோர் என்று சொல்கிறது.
108 ஆம்குறள் ஒருவர் செய்த உதவியை மறப்பது அறமன்று; அவர் செய்த நன்மையல்லாததை அப்பொழுதே மறந்துவிடுவது நல்லது எனச் சொல்வது.
109 ஆம்குறள் கொன்றால் ஒத்த தீங்கைச் செய்தாலும் அவர் செய்த நன்மை ஒன்றை நினைக்க அத்தீமை மறைந்து போகும் என்பதைச் சொல்வது.
110 ஆவதுகுறள் எவ்வகைப்பட்ட நன்மையையும் சிதைத்தவர்க்கு மீட்சி கிடைக்கும்; செய்தஉதவிக்கான நன்றியுணர்வைக் கொன்றவனுக்கு அதிலிருந்து மீள வழியில்லை எனக் கூறுகிறது.

செய்ந்நன்றியறிதல் அதிகாரச் சிறப்பியல்புகள்:
செய்ந்நன்றியறிதல் வெகு உயர்வாகச் சிறப்பிக்கப்படுகிறது. இவ்வதிகாரத்தில் உதவிக்கு ஒப்பீடு செய்வதற்கு வையகம், வானம், ஞாலம், கடல் போன்ற அளவிட்டு அறியமுடியாத உவமப் பொருட்கள் ஆளப்பட்டன; நன்றி-நன்றிஅறிதல் இவற்றின் வேறுபாடு தெளிவாகப் புலப்படும் வகையில் தினை-பனை என்ற எல்லைகளில் குறிக்கப்பட்டுள்ளது, எழுமைஎழுபிறப்பு என்ற கழிநெடுங் கால அளவிலும் சொல்லப்பட்டுள்ளது.

மறவற்க மாசற்றார் கேண்மை; துறவற்க துன்பத்துள் துப்பாயார் நட்பு (106) என்னும் பாடல் தனக்குத் துன்பம் வந்தகாலத்து வலிமைதந்து உதவினார் நட்பை விடாதொழிக எனச் சொல்கிறது. இப்பாடலிலுள்ள 'மறவற்க மாசற்றார் கேண்மை' என்ற பகுதி பின்சொல்லப்படும் 'துன்பத்துள் துப்பாயர்' என்பவன் குற்றமுள்ளவன் என்பதைக் குறிப்பால் உணர்த்துவதாக உள்ளது. செய்யப்பட்ட உதவியின் கால அருமை நோக்கி துன்ப காலத்தில் கைகொடுத்து உதவியவன் தொடர்பைக் குற்றமுள்ளவனென்று விட்டு விடாதே என்கிறது இக்குறட்பா. எங்கும் தூய்மை பேசும் வள்ளுவர் இங்கு குற்றமுள்ளவனானாலும் அவன் துன்பகாலத்தில் துப்பாய் அதாவது வலிமை சேர்ப்பவனாய் இருந்ததால் அவன் செய்த உதவியையும் மறத்தலாகாது என்கிறார்.

நன்றிமறவாத் தன்மையைப் பெரிதாகப் பாராட்டும் அதிகாரம், நன்றி கொன்ற குணத்தைக் குற்றங்களின் உச்சநிலையாகக் காட்டுகின்றது. மிகக் கொடுமையான தீச்செயல் புரிந்த ஒருவனைவிட, செய்ந்நன்றி கொன்றவன் கொடிய தீர்ப்புக்கு உள்ளாகின்றான். கழுவாய் தேடி உய்தி பெறும் நிலைமை இவனுக்கு அறவே இல்லை என்கிறது எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு (குறள்110) என்ற பாடல். நன்றி மறத்தல் என்பது செய்யப்பட்ட நன்மையை நினைவில் நிறுத்தாத குற்றம் குறிப்பது. நன்றி கொல்தல் என்பது தனக்குச் செய்யப்பட்ட உதவியைப் பாராட்டாமல் இருப்பதும் அதன் பயனை முற்றிலும் துய்த்தபின்னர் உதவியவர் என்ன பெரிதாகச் செய்துவிட்டார் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்வதும் அந்நன்மையைத் தான் பெறவே இல்லை என்று மறுப்பதும் ஆகும்.

""ஒருவர் செய்த உதவியை, நன்மையை நினைத்துக் கொள்ளுதல். உலகில் பலருக்குத் தாம் பிறருக்குச் செய்த நன்மையே நினைவில் நிற்கும்; பிறர் தமக்குச் செய்த உதவி மறந்துபோகும். கைம்மாறு கருதாதது செய்ந்நன்றி; அந் நன்மையைச் செய்து கொண்டவன்தான் நினைந்து போற்ற வேண்டும்.""
- தமிழண்ணல்


நன்றி: குறள் திறன் தளம்
http://kuralthiran.com/KuralAthikaaraVilakkam/BrowseKuralAthikaaraVilakkam.aspx
-----
11.செய்ந்நன்றி அறிதல்
[மு.வ. உரை]

101.செய்யாதார் செய்த வுதவிக்கு வையகமும்
       வானகமு மாற்ற லரிது.
தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறர் தனக்குச் செய்த உதவிக்கு மண்ணுலகையும் விண்ணுலகையும் கைம்மாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.

102.காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினு
       ஞாலத்தின் மாணப் பெரிது.
உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை ஆராய்ந்தால் உலகத்தைவிட மிகப் பெரிதாகும்.

103.பயன்றூக்கார் செய்த வுதவி நயன்றூக்கி
       னன்மை கடலிற் பெரிது.
இன்ன பயன் கிடைக்கும் என்று ஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலைவிடப் பெரிதாகும்.

104.தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
       கொள்வர் பயன்றெரி வார்.
ஒருவன் தினையளவாகிய உதவியைச் செய்த போதிலும் அதன் பயனை ஆராய்கின்றவர், அதனையே பனையளவாகக் கொண்டு போற்றுவர்.

105.உதவி வரைத்தன் றுதவி யுதவி
       செயப்பட்டார் சால்பின் வரைத்து.
கைம்மாறாகச் செய்யும் உதவி முன்செய்த உதவியின் அளவை உடையது அன்று; உதவி செய்யப்பட்டவரின் பண்புக்கு ஏற்ற அளவை உடையதாகும்.

106.மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
       துன்பத்துட் டுப்பாயார் நட்பு.
குற்றமற்றவரின் உறவை எப்போதும் மறத்தலாகாது, துன்பம் வந்த காலத்தில் உறுதுணையாய் உதவியவர்களின் நட்பை எப்போதும் விடலாகாது.

107.எழுமை யெழுபிறப்பு முள்ளுவர் தங்கண்
       விழுமந் துடைத்தவர் நட்பு.
தம்முடைய துன்பத்தைப் போக்கி உதவியவரின் நட்பைப் பல்வேறு வகையான பிறவியிலும் மறவாமல் போற்றுவர் பெரியோர்.

108.நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல
       தன்றே மறப்பது நன்று.
ஒருவர் முன்செய்த நன்மையை மறப்பது அறம் அன்று; அவர் செய்த தீமையைச் செய்த அப்பொழுதே மறந்து விடுவது அறம் ஆகும்.

109.கொன்றன்ன வின்னா செயினு மவர்செய்த
       வொன்றுநன் றுள்ளக் கெடும்.
முன் செய்த உதவி செய்தவர் பின்பு கொன்றாற் போன்ற துன்பத்தைச் செய்தாரானாலும், அவர் முன் செய்த ஒரு நன்மையை நினைத்தாலும் அந்தத் துன்பம் கெடும்.

110.எந்நன்றி கொன்றார்க்கு முய்வுண்டா முய்வில்லை
       செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்; ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை.

சக்திவேலு கந்தசாமி

unread,
Dec 28, 2023, 11:48:32 PM12/28/23
to mint...@googlegroups.com
'திருக்குறள் அதிகார விளக்கம்"  சிறப்புடைத்தது.  மின் தமிழ் வாசகர்களுக்கு இனிமை பயக்கிறது.  நன்றி.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/b1bf299c-46a1-4202-a23e-cfbea4fba72en%40googlegroups.com.

இசையினியன்

unread,
Dec 31, 2023, 1:00:06 AM12/31/23
to mint...@googlegroups.com
"திருக்குறள் அதிகார விளக்கம்" ஆம் மிகச் சிறப்பாக அமைந்து வருகிறது. வள்ளுவரின் குறளின் அதிகாரத்துக்கே  விளக்கம் கொடுப்பது சிறந்த முயற்சி. அருமையிலும்
 அருமையாக உள்ளது.  வள்ளுவரை பல கோணங்களில் ஆராய்கிறது என்பது மிகச் சிறப்பாக உள்ளது. தமிழ் மக்களுக்கு சிறந்த வரப்பிரசாதம் என்றும் கூடக் கூறலாம். 


From: mint...@googlegroups.com <mint...@googlegroups.com> on behalf of சக்திவேலு கந்தசாமி <vlrsa...@gmail.com>
Sent: Friday, December 29, 2023 10:17:49 AM
To: mint...@googlegroups.com <mint...@googlegroups.com>
Subject: Re: [MinTamil] திருக்குறள் அதிகார விளக்கம்: குறள் திறன்
 
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/JyH4YOUOHXA/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAFfhOEi4VAfXgQ-2Ch-F5WEW81ojGRwoLLRtGddWq5ArAUdrEg%40mail.gmail.com.

தேமொழி

unread,
Jan 3, 2024, 7:50:12 PM1/3/24
to மின்தமிழ்
12. நடுவுநிலைமை

எப்பகுதியினரிடத்தும் ஒப்ப நடத்தல் நடுவுநிலையாகும். எல்லாத் துறையிலும் எல்லார்க்கும் வேண்டப்படும் பண்பு இது. கருத்து வேறுபாடுகளில், செல்வம் ஈட்டுவதில், அறம் கூறுதலில் என அனைத்து நிலைகளிலும் அன்றாட செயல்பாடுகளில் நடுவுநிலையைப் போற்றி நடத்தல் வேண்டும். வலியவன், எளியவன், வறியன், செல்வன், தாழ்ந்த நிலையிலுள்ளவன், உயர்ந்த நிலையிலுள்ளவன், நண்பன், பகைவன் என்றெல்லாம் பாகுபாடு கருதாது அனைவரிடத்தும் நடுநிலை பிறழாமல் ஒழுகுதல் வேண்டும். செய்ந்நன்றி, அன்பு காரணமாகவும் நடுவு நிலை தவறக்கூடாது. தனிமனிதப் பண்பான நடுநிற்றல் சமுதாய வளன் என்ற பரப்பில் விரிவாக்கம் பெற்று அனைவருக்கும் பயன்பட வேண்டும் என்பது வள்ளுவம்.

நடுவுநிலைமை:
நடுவுநிலைமை என்ற சொல் நடுநிற்றலின் தன்மை என்ற பொருள் தருகிறது. நடுநிலை என்பது வழக்காற்றில் பல பொருள்களைக் குறிக்கும் சொல்லாக உள்ளது. சார்பு எடுக்காத நிலைமை, நேர்மை, சமரசம் செய்தல் என்பன அவற்றில் சில. யாரேனும் இருவருக்கிடையே கருத்து வேறுபாடோ முரண்பாடுடைய பூசலோ ஏற்படும்போது, அதில் குறுக்கிடாமல் யார் பக்கமும் சேராமல் ஒதுங்கி நிற்பதையும் நடுநிலை என்று சொல்கிறோம்.

குறள் கூறும் பொருளில் எல்லாச் செயல்களிலும் உள்ளார்ந்து நிற்கும் உயர் பண்பான நேர்மையே நடுநிலை எனப்படும். இது எல்லாத்துறையிலும் எல்லார்க்கும் இன்றியமையாது வேண்டப்பெறும் குணம் ஆகும். வள்ளுவர் இதனைத் தகுதி என அழைக்கிறார். நடுவுநிலைமை என்பது செப்பம், தகவு, நடுவு என்னும் சொற்களாலும் இவ்வதிகாரத்தில் குறிக்கப் பெறுகிறது. இது ஒருபாற்சாராமை, நேர்மை, நியாய உணர்வு என்ற சொற்களாலும் அறியப்படுவது.

வீட்டிலும் நாட்டிலும் உலக அளவிலும் நடுவு நிலைமை இன்றியமையாத தேவை ஆகும். நடுவு நிலைமையை 'நன்மையை உடைய நடுவு நிலைமை' என்ற பொருளில் 'நன்னர் நடுவு' என்று நெய்தற் கலி பாராட்டுகிறது. ஒருவருடைய தனிவாழ்வில் தம் பெற்றோர் மனைவி, மக்கள், உடன்பிறந்தோர் ஆகியோருடன் உள்ள உறவின் அழுத்தத்திலுள்ள வேறுபாடு காரணமாக நடுநிலை பிறழாமல் நடந்து கொள்ளவேண்டும். ஒருவரது தாய்க்கும் மனைவிக்கும் கருத்து வேறுபாடு எற்படும் சமயங்களில் சார்புநிலை எடுக்காமல் உண்மை கண்டறிந்து ஒழுகுவது நடுநிலை காப்பது ஆகும்.

உதவி செய்தார்க்கு உதவவேண்டும் என்ற மனநிலை நடுநிலைமையுடன் நிற்பதற்குத் தடையாக அமைதல் கூடாது. (இது செய்ந்நன்றி அதிகாரத்துக்கு அடுத்து இவ்வதிகாரம் வைக்கப்பட்டதற்கான காரணம் என்று உரையாளர்கள் கூறுவர்.)
கேடும் பெருக்கமும் உலக வாழ்க்கையின் இயல்பு. இந்த உண்மையை உணராமல் அவை நடுநிலை தவறுவதற்கு ஏதுக்களாக அமையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நன்று செய்யுமாயினும் நடுநிலை தவறி கையூட்டுப் பெறுதல் போன்றவற்றை வெறுத்து ஒதுக்க வேண்டும். செப்பமான வாழ்வு மேற்கொண்டவர் தாழ்ந்தாலும் அதை இழிவாக உலகோர் கருதார். நேர்மை வாழ்வு நடாத்தியவர்களை அவரது மறைவுக்குப் பின்னர் இன்னும் பெருமையாகப் பேசுவர்.
நீதியரசர்கள் துலாக்கோல் போல்- ஒரு பக்கம் சாராமல்- நேர் நின்று நீதி வழங்க வேண்டும். தீர்ப்பு வழங்கும் நிலையில் இருப்போரது சொற்களில் கோணல் தோன்றக்கூடாது என்பது மட்டுமல்ல, அவர்கள் உள்ளத்திலும் கோட்டமின்றி இருக்க வேண்டும். வணிகர்கள் தம் ஆதாயம் ஒன்றை மட்டுமே கருதாமல் சமூக நலன் கருதிச் செயல்படவேண்டும். இவை இவ்வதிகாரச் செய்திகள்.

நடுநிலைமை எல்லா நிலையினர்க்கும் வேண்டப்படும் பண்பானாலும், சிறப்புக் கருதி, அறம்‌கூறும்‌ அவையத்தார் (நீதியரசர்கள்) (118, 119) வணிகர் (120) ஆகியோர்க்குச் சிறப்பாக வேண்டப்படுவது என்பது வள்ளுவர் கருத்தாக உள்ளது.

நடுவுநிலைமை அதிகாரப் பாடல்களின் சாரம்:
111 ஆம்குறள் எப்பகுதியினரிடத்தும் நேர்மையாக நடந்து கொள்வதே ஒப்பற்ற நடுவுநிலைமை அறமாம் என்கிறது.
112 ஆம்குறள் நடுநிலையோடு செயல்படுபவனது ஆக்கம் அவன் இறந்த பின்பும் நிலைத்து நிற்கும் எனச் சொல்கிறது.
113 ஆம்குறள் நல்லது நேரினும், நேர்மையற்ற வழியில் செல்வம் சேர்ப்பதை கைவிடுக என்பதைச் சொல்கிறது.
114 ஆம்குறள் ஒருவர் நேர்மையாளராய் இருந்தாரா அல்லவா என்பது அவர் விட்டுச் செல்லும் புகழ், பழி என்னும் இவை சொல்லும் என்று சொல்கிறது.
115 ஆம்குறள் கேடும் ஆக்கமும் இயற்கையின் பாற்பட்டது என உணர்ந்து நடுநிலை கோணாதிருத்தல் சால்புடையார்க்கு அழகாகும் என்கிறது.
116 ஆம்குறள் நடுவுநிலைமை அல்லாதனவற்றைச் செய்ய நினைத்த போதே தான் கெடப்போகிறேன் என்பதை உணர வேண்டும் எனச் சொல்வது.
117 ஆம்குறள் நேர்மையான வாழ்வைக் கடைப்பிடித்து அறநெறியில் நிற்பவன் அடையும் கேடு தாழ்வாகாது என்று சொல்கிறது.
118 ஆம்குறள் ஒரு பக்கம் சாயாமல் துலாக்கோல் போல நடுநிலை கொள்வது சால்புடையார்க்கு அழகாகும் எனச் சொல்வது.
119 ஆம்குறள் ஒருபால் உள்ளம் சாய்வு இல்லாமல் இருந்தால், நடுநின்ற சொற்கள் தெளிவாகவும் கோணாமலும் அமையும் என்பதைச் சொல்வது.
120 ஆவதுகுறள் பிறர் பொருளையும் தமதே போல் பேணிச் செய்யும் நடுநிலை தவறாத வாணிகம் இன்னும் பெருக்கத்தை உண்டாக்கும் எனக் கூறுகிறது.

நடுவுநிலைமை அதிகாரச் சிறப்பியல்புகள்:
நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை அன்றே ஒழிய விடல் (குறள் 113) என்ற பாடல் கையூட்டுப் பெறுதல் போன்ற தவறான வழியில் வரும் பணம் நன்மையே செய்வதானாலும் அவ்வாறு செல்வம் தேடுவதைத் தடுக்கச் சொல்கிறது.

தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப் படும் (குறள் 114) என்னும் குறள் ஒருவர் நேர்மையாக வாழ்ந்தாரா அல்லவா என்பதை அவர் மறைந்த பின்னர் உலகோர் பேசுவதிலிருந்து தெரிந்து கொள்ளலாம் என்கிறது.

நடுநிலைமை தவறுதலை நினைத்தால் 'கெடப்போகிறாய் நீ' என மனச்சான்று எச்சரிக்கும் பாடலாக கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம் நடுஒரீஇ அல்ல செயின் (குறள் 116) என்பது அமைகிறது.

தகுதி, செப்பம், தக்கார், தகவிலர், எச்சம், கோடாமை, இல்லல்ல, இல்லது, சீர்தூக்கும் கோல், சொற்கோட்டம், உட்கோட்டம் போன்ற சொற்கள் நினைவிற் கொள்ளத்தக்கனவாகும்.

"""நடுவு நிலைமை என்பது எல்லார்க்கும்‌ ஒப்ப நிற்கும்‌ நிலை. இந்‌நிலையைத்‌ துலாக்கோலின்‌ நடுமுள்போல்‌ சாய்தல்‌ இல்லாமல்‌ நேர்மையைக்‌ கடைப்பிடித்தலாகும்‌ என்பர்‌, 'சமன்செய்து சீர்‌தூக்கும்‌ கோல்போல்‌ அமைந்து ஒருபால்‌ கோடாமை' என 8 ஆம்‌ பாட்டில்‌ வள்ளுவர்‌ தரும்‌ விளக்கம்‌ நடுவுநிலைமையின்‌ பொருளை நன்கு விளக்குகிறது. நுகத்தடியின்‌ பகலாணியை, அதாவது நுகத்தின்‌ நடுவாக உள்ள முளையையும்‌ நடுவுநிலைமைக்கு ஒப்புக்‌ கூறுவது உண்டு. இந்‌ நடுவு நிலைமையைத்‌ 'தகுதி: (1) ' செப்பம்‌ (2,9), 'தகவு' (4), “நடுவு' (3, 6, 7) என்னும்‌ சொற்களால்‌ இவ்வதிகாரப்‌ பாடல்களில்‌ வள்ளுவர்‌ குறிப்பிட்டுள்ளார்‌. மற்றும்‌ 'நெஞ்சத்துக்‌ கோடாமை: (5),' 'ஒருபால்‌ கோடாமை' (8) என்று நடுவுநிலைமையின்‌ பொருளைத்‌ தெளிவுபடுத்தியும்‌ உரைத்துள்ளார்‌."""
மு சண்முகம்பிள்ளை



நன்றி: குறள் திறன் தளம்
http://kuralthiran.com/KuralAthikaaraVilakkam/BrowseKuralAthikaaraVilakkam.aspx
-----
12. நடுவுநிலைமை
[மு.வ. உரை]

111.தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற்
      பாற்பட்ட டொழுகப் பெறின்.
அந்தந்தப் பகுதிதோறும் முறையோடு பொருந்தி ஒழுகப்பெற்றால், நடுவுநிலைமை என்று கூறப்படும் அறம் நன்மையாகும்.

112.செப்ப முடையவ னாக்கஞ் சிதைவின்றி
      யெச்சத்திற் கேமாப் புடைத்து.
நடுவுநிலைமை உடையவனின் செல்வவளம் அழிவில்லாமல் அவனுடைய வழியிலுள்ளார்க்கும் உறுதியான நன்மை தருவதாகும்.

113.நன்றே தரினு நடுவிகந்தா மாக்கத்தை
      யன்றே யொழிய விடல்.
தீமை பயக்காமல் நன்மையே தருவதானாலும் நடுவுநிலைமை தவறி உண்டாகும் ஆக்கத்தை அப்போதே கைவிட வேண்டும்.

114.தக்கார் தகவில ரென்ப தவரவ
      ரெச்சத்தாற் காணப் படும்.
நடுவுநிலைமை உடையவர் நடுவுநிலைமை இல்லாதவர் என்பது அவரவர்க்குப் பின் எஞ்சிநிற்கும் புகழாலும் பழியாலும் காணப்படும்.

115.கேடும் பெருக்கமு மில்லல்ல நெஞ்சத்துக்
      கோடாமை சான்றோர்க்கு கணி.
கேடும் ஆக்கமும் வாழ்வில் இல்லாதவை அல்ல; ஆகையால் நெஞ்சில் நடுவுநிலைமை தவறாமல் இருத்தலே சான்றோர்க்கு அழகாகும்.

116.கெடுவல்யா னென்ப தறிகதன் னெஞ்ச
      நடுவொரீஇ யல்ல செயின்.
தன் நெஞ்சம் நடுவுநிலைமை நீங்கித் தவறு செய்ய நினைக்குமாயின், `நான் கெடப்போகின்றேன்’ என்று ஒருவன் அறிய வேண்டும்.

117.கெடுவாக வையா துலக நடுவாக
      நன்றிக்கட் டங்கியான் றாழ்வு.
நடுவுநிலையாக நின்று அறநெறியில் நிலைத்து வாழ்கின்றவன் அடைந்த வறுமை நிலையைக் கேடு என்று கொள்ளாது உலகம்.

118.சமன்செய்து சீர்தூக்குங் கோல்போ லமைந்தொருபாற்
      கோடாமை சான்றோர்க் கணி.
முன்னே தான் சமமாக இருந்து, பின்பு பொருளைச் சீர் தூக்கும் துலாக்கோல்போல் அமைந்து, ஒரு பக்கமாகச் சாயாமல் நடுவுநிலைமை போற்றுவது சான்றோர்க்கு அழகாகும்.

119.சொற்கோட்ட மில்லது செப்ப மொருதலையா
      வுட்கோட்ட மின்மை பெறின்.
உள்ளத்தில் கோணுதல் இல்லாத தன்மையை உறுதியாகப் பெற்றால், சொல்லினும் கோணுதல் இல்லா திருத்தல் நடுவுநிலைமையாம்.

120.வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
      பிறவுந் தமபோற் செயின்.
பிறர் பொருளையும் தம்பொருள்போல் போற்றிச் செய்தால், அதுவே வாணிகம் செய்வோர்க்கு உரிய நல்ல வாணிக முறையாகும்.

இசையினியன்

unread,
May 26, 2024, 7:24:27 PM5/26/24
to மின்தமிழ்
//// பொறியில் குணம் இலவே-எண்குணத்தான்

-- எண்குணன் மற்றுமொரு விளக்கம் 
Reply all
Reply to author
Forward
0 new messages