என் மகள் ரிதன்யா பிறந்தபோது ஒரு புகைப்படம் எடுத்து வைத்திருந்தேன். என் தங்கை பார்த்துவிட்டு "அண்ணே, பாப்பா பிறக்கும்போதே கடவுள் பாப்பாவுக்கு கண் மை, lip stick, nail polish எல்லாம் போட்டுத் தான் அனுப்பியிருக்கிறார்" என்று சொன்னாள்.
நான் கடந்த ஐந்தாண்டுகளாக பாடல்கள் மெட்டமைத்து எழுதிப் பாடி வருகிறேன். கடந்த 2005 ம் ஆண்டு தொடங்கி கவிதைகள் எழுதி வருகிறேன். நான் எழுதிய பாடல்களில் மனதிற்கு மிக நெருக்கமான பாடல்களில் இதுவும் ஒன்று. ஏனெனில், என் மூத்த மகள் ரிதன்யா "என் அறிவின் முழுமை, என் உயிரின் உருவம்" என்பதை நன்றாகவே உணர்ந்து கடந்த வருடங்களில் நான் அவளுக்கு எழுதிய பாடல்களில் கொண்டு வர முயற்சித்து ஓரளவுக்குக் கொண்டு வந்திருந்தேன். ஆனால், இந்தப் பாடலில் மெட்டுக்குள் அப்படியே கச்சிதமாக அமர்ந்து பல வருடங்களாக நான் மெட்டுக்குள் என் மகள் பற்றி மேலே சொல்ல நினைத்ததையும் முழுமையாகவே சொல்லியிருக்கிறேன்.
பாடல் வரிகளும் மெட்டும் என்னிடமிருந்து அருமையாக வந்திருக்கின்றன.
=================
= அன்பே கடவுள் =
=================
முனைவென்றி நா. வேல்முருகன் சேர்வை,
த/பெ த. நாகராசன் சேர்வை,
-------------
Munaivendri N. Velmurugan servai,
S/O T. Nagarajan servai,
7/215-1, Devarajan Nagar 1st street,
Emaneswaram - 623701,
Paramakudi Taluk,
Ravananathapuram District,
Thamizhnadu.
Mobile: 8754962106
***
இராவணனே தமிழர்களாகிய நம்முடைய கடவுளரில் ஒருவர். இராமன் என்பவன் தமிழரை அழிக்கப் புறப்பட்டு வந்த யூதனாவான். எனவே, என்னுடைய மாவட்டம் இராவணநாதபுரம் ஆகும். கடல் சூழ்ந்த தீவிற்கு பெயர் இராவணேஸ்வரம் என்பதே உண்மை.
***