அகர முதல்வன் - ஆதி பகவன்

1,371 views
Skip to first unread message

kalairajan krishnan

unread,
Jul 15, 2010, 4:54:01 AM7/15/10
to mint...@googlegroups.com

http://groups.google.ge/group/Thiruppuvanam

kalair...@gamil.com

அகர முதல்வன் - ஆதி பகவன்

அகர முதல்வன் - ஆதி பகவன்
தெய்வப் புலவராம் திருவள்ளுவர் முதற்குறலில் வணங்கிய ​தெய்வம் எது?  என்பதைக் கண்டறிவதே இக் கட்டுரையின் ​நோக்கம்,
 
இக்கட்டுரை தர்க்கரீதியாக ஆராய்ந்து எழுதப்பட்டுள்ளது,  இதில் மறுப்பதற்கு ஏதும் இல்லை!  இக்கட்டுரை ​தொடர்பான அனைத்து ஐயப்பாடுகளுக்கும் என்னிடம் விடைகள் உள்ளன.  இக்கட்டுரையின் கருத்தை  ஏற்போரும் எதிர்ப்போரும்  திருக்குறள்களையே ​மேற்கோள்களாகக் ​கொண்டால் நன்று,   

ஆதி. பகவன் என்ற சொற்களைச் சிலர்  வடசொற்கள் என்று கூறுகின்றனர், இச் சொற்கள் சிறந்த தமிழ்ச் ​சொற்கள் என்று இக்கட்டுரையிலே விளக்கப்​பெற்ள்ளது,     

பகவன் முதற்றே உலகு
திருச்சிற்றம்பலம்

அருள்மிகு புலிக்கரை ஐயனார்  துணை

ஆனைமுகனே(னோ?) ஆதிபகவன்
நாள் 18-09-2005 (ஆய்வுக் கட்டுரையைப் பல்கலைக்கழகக் கருத்தரங்கில் வாசித்த நாள்) இ​ணையத்தில் ​வெளியிடும் நாள் 15-07-2010,

அகில உலகிலும் வாழும் மனிதர் அனைவரும் பிறப்பால் ஒன்றே ஆவர், ஆயினும் மனிதர்கள். தாம் பிறந்த நாட்டின் பெயராலும். பேசும் மொழியின் பெயராலும். வழிபடும் கடவுளின் பெயராலும் தமக்குள் பேதம் கண்டுள்ளனர், இவற்றினால் மாறுபட்ட சமூகங்களாக வாழ்கின்றனர், அவற்றுள் மிகவும் தொன்மை மிக்க சமூகத்தினராக இந்தியாவில் இந்துக்கள் வாழ்ந்து வருகின்றனர்,
உலகில் வாழும் மற்றபிற சமூகத்தினர்(மதத்தினர்) இறைவனின் தூதுவர்களையோ அல்லது இவ்வுலகில் தோன்றி மறைந்த மகான்களின் வடிவங்களையோ வணங்கி வருகின்றனர், ஆனால் தொன்மை மிகுந்த இந்தியச் சமூகத்தார்கள்(இந்துக்கள்) மட்டும் கடவுள்களின் திருவுருவங்களை நேரடியாக வணங்கி வழிபடுகின்றனர்,

தெ(தொ)ன் தமிழர்
உலகில் லெமூரியாக் கண்டம் அழிவதற்கு முன்னரே இவர்கள் அங்கு சமூக வாழ்க்கை வாழ்ந்திருக்கின்றனர் என்பது அறிவியல் உண்மை, இன்று. இந்தியச் சமுதாயத்தினருள் மிகத் தொல்பழம் சமுதாயமாக தமிழ்ச் சமுதாயம் விளங்குகிறது, தமிழ் மொழியின் மிகத் தொன்மையான நூல்களாகத் தொல்காப்பியமும். திருக்குறளும் மதிக்கப்படுகின்றன, தொல்காப்பியம் இலக்கண நூலாகக் கருதப்படுகின்றது, திருக்குறள் மட்டுமே அனைவராலும் படிக்கப்படுகின்றது,

கற்றதனாலாய பயன்
மனிதனுக்குத் தேவையான அறம். பொருள். காமம் உள்ளிட்ட எல்லாவற்றையும் உள்ளடக்கியது திருக்குறள், இந்நூலை இயற்றிய தெய்வப்புலவர் திருவள்ளுவர் வணங்கிய கடவுள் யார்?
இதைக் கண்டறிந்து. நாமும் அக்கடவுளை வணங்கி வழிபடவேண்டுமல்லவா?
அப்பொழுதுதானே திருக்குறளைக் கற்றதனாலாய பயனைப் பெற முடியும்?

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

என்பது திருக்குறளின் முதற்குறள், இதில் "ஆதிபகவன்" என்று திருவள்ளுவரால் வணங்கப்பட்ட கடவுள் யார்?
ஆதி பகவன் யார் என்று யாராலும் அறுதியிட்டுக் கூற இயலவில்லை! ஒவ்வொரு அறிஞரும் ஒருவாறாகக் கூறுகின்றனர்,
சிலர். திருக்குறள் என்பது உலகப் பொதுமறை நூலாகும். அவரவர் சமயத்தின் மூலக்கடவுளையே ஆதிபகவன் என்று வள்ளுவர் பொதுவாகக் குறிப்பிட்டுள்ளார் என்றும் கூறுகின்றனர்,
ஆதி என்பது தாயாகும். பகவன் என்பது தந்தையாகும், ஆதிபகவன் என்பது தாயையும் தந்தை​யையும் வணங்கி எழுதப்பட்டது என்றும் கூறுகின்றனர்,
பகவன். பகலன். பகலவன். என்ற சொற்கள் எல்லாம் கதிரவனைக் குறிப்பன, இது உலகம் தோன்றுவதற்குக் காரணமான இயற்கையையும். சூரியனையும் வணங்கி எழுதப்பட்ட குறள் என்றும் கூறுகின்றனர்,
ஆதி பகவன் என்பர் அனைத்துக் கடவுளருக்கும் தலைமையான கடவுளின் வழிபாடாகும். அதனால் இது சிவ வழிபாடு என்றும் கூறியுள்ளனர்,
திருக்குறளின் மற்றபிற குறள்களில் உலகுஅளந்தான். திருமகள் போன்ற தெய்வங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி ஆதிபகவன் என்பது ஆதிநாராயணனைக் குறிக்கும் என்றும் கூறியுள்ளனர்,
சிலர் முதற் குறள் உட்பட்ட பலகுறள்களில் வடமொழிச் சொல்லும் பொருளும் உள்ளன எனக் கூறுகின்றனர், இதனால் இக்குறள்கள் திருவள்ளுவரால் இயற்றப்படவில்லை என்றும். பின்னாளில் சேர்க்கப்பட்டன என்றும் கூறுகின்றனர்,
திருவள்ளுவர் வாழ்த்திய கடவுளும். வணங்கிய தெய்வங்களும். வசித்த இடமும். வாழ்ந்த காலமும் அறுதியிட்டுக் கூறமுடியாதபடி மிகவும் தொன்மையாக உள்ளன,
திருக்குறளில் உள்ள ஒவ்வொரு குறளும் இரண்டு அடிகளால் ஆனவை, மேலும் அவற்றில் உள்ள ஒவ்வொரு எழுத்தும். சொல்லும் பொருட் செறிவு மிக்கனவாக உள்ளன, இதனால் படிப்போர் ஒவ்வொருவருக்கும் அவர்கள் நோக்கும் எண்ணத்திற்கு ஏற்றாற்போல் புதிய புதிய கருத்துக்களைத் திருக்குறள் வழங்கி வருகின்றது, இதனால் திருக்குறளுக்கு இன்றும் புதிய உரைவளங்கள் தோன்றிய வண்ணம் உள்ளன,
இருப்பினும் இன்றைய நாளில் மக்களால் வணங்கப்படும் கடவுள்களில் ஏதேனும் ஒரு கடவுள் முதற் குறளுக்குப் பொருத்தமானவராய் இருக்கின்றாரா? என்று காண்போம்,
திருக்குறளோ யானை போன்றது! அதனைக் கற்கும் நாமோ மெய்யறிவுக் குருடர்கள் ஆவோம்! யானை தடவிய குருடர் கதையாக முதற்குறளின் ஒவ்வொரு எழுத்தையும். எழுத்துக்களாலான சொல்லையும். சொற்களாலான பொருளையும் காண்போம், அவ்வாறு கண்டால் நமது அறிவிற்கு ஆனைமுகத்தானே ஆதிபகவனாகத் ​தெரிகின்றார்,

மூல முதல்வன்
ஆதி பகவன் என்ற கடவுளை முதன்முதலாக வணங்கியே தெய்வப்புலவர் திருவள்ளுவர் திருக்குறளை இயற்றியுள்ளார், இதுபோல் இன்று எந்த ஒரு செயலைச் செய்யும் முன்பும் முதன்முதலாக யானை முகம் கொண்ட விநாயகப் பெருமானை வணங்கி வழிபட்டு அதன் பின்னரே நமது வேலைகளைத் துவக்குகிறோம்,
ஆகையால். முதல் வணக்கத்திற்கு உரிய கடவுள் என்ற முறையில் ஆதிபகவனும் ஆனைமுகத்தானும் ஒருவராகின்றனர்,

வித்தகன் விநாயகன்
இரண்டாவதாக "அகர முதல எழுத்துக்களெல்லாம். ஆதி பகவன் முதற்றே" என்று திருவள்ளுவர் கூறுகின்றhர், முதன் முதல் வணங்கிய கடவுளை எழுத்துக்களுடன் தொடர்புபடுத்திக் குறள் இயற்றியுள்ளார், அப்படியானால். எழுத்துக்களுடன் தொடர்புடைய கடவுள் யார்?
இறைவன் சிவனின் உடுக்கை (துடி)யிலிருந்து வேதங்கள் தோன்றின என்று கூறுகின்றனர், இதனால் இறைவன் சிவனே அனைத்து வேதங்களுக்கும் நாயகனாகச் சைவர்களால் வணங்கப்படுகிறhர், வைணவர்கள் அயக்கிரீவரைக் கலைகளின் கடவுளாகக் குறிப்பிடுகின்றனர், அன்னை கலைவாணி (ச​ரசுவதி). கலைகளின் நாயகியாக விளங்குகின்றhள், ஆனால் இக்கடவுள்கள் யாரும் எழுத்துக்களுடன் இணைத்துப் போற்றப்பட வில்லை,
வேதவியாசர் கூறிட. விநாயகர் தனது தந்தத்தையே ஒடித்துப் புராணம் எழுதியதாகக் கூறப்படுகிறது, இதனால் எழுத்துக்களுடன் தொடர்புடைய கடவுளாக விநாயகர் விளங்குகின்றhர்,
யானை முகனை ஓங்கார வடிவத்துடன் பொருத்திக் கூறுவர், ஒலி வடிவில் மட்டுமின்றி எழுத்து வடிவிலும் யானைத் தலையும். வலமாகச் சுழித்த துதிக்கையும் "ஓம்" என்ற எழுத்துக்கள் வடிவத்திற்கு பொருத்தமாக உள்ளன, பிற கடவுளருக்கு இப்பொருத்தம் பெரும்பாலும் இல்லை, இவ்வாறு விநாயகருக்கு உரிய ஓங்கார வடிவ காட்சிக்குப் பிள்ளையார் பட்டி விநாயகரின் திருஉருவமே எடுத்துக்காட்டாகும்,

ஆதியானவன்
மூன்றாவதாக திருவள்ளுவர். முதன் முதலில் தான் வணங்கிய கடவுளின் பெயரை "ஆதி பகவன்" என்று கூறிப்பிடுகின்றார், தமிழ் இலக்கணப்படி பகர ஒற்று மிகுந்து ஆதிப்பகவன் என்று இருக்க வேண்டும், இடையில் "ப்" இல்லாததால் ஆதிபகவன் என்பது வடநூல் முடிபு என்றும் கூறுகின்றனர்,
தமிழில் இலக்கணச் செறிவுடன் குறள் இயற்றியவர் தெய்வப் புலவர் திருவள்ளுவர், அவர் தனது முதற் குறளையே வடநூல் மரபினைப் பின்பற்றி எழுதியிருக்க மாட்டார் என்பது திண்ணம், அதனால் ஆதி என்ற சொல்லையும் பகவன் என்ற சொல்லையும் திருவள்ளுவர் வேறுபிற குறள்களில் எப்பொருளில் கையாண்டுள்ளார் எனப் பார்ப்போம்,
 
"ஆதி" என்றால் என்ன பொருள் என்று பார்ப்போம்,

அந்தணர் நூற்கு மறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்   (543)

என்ற குறளில் "ஆதி" என்ற சொல்லுக்கு. படைத்தலுக்குக் காரணமாயும். படைத்ததைக் காத்தலும். படைப்பில் குறைகள் ஏற்பட்டால் அதனை நிவர்த்தி செய்தலும் என்று பொருளாகிறது, ஆதி என்ற சொல்லுக்கு இணையாக ஆங்கிலத்தில் Authority  என்ற சொல் உள்ளது. "எழுத்தெல்லாம் ஆதி பகவன்" என்றால் எழுத்துக்கள் தோன்றுவதற்கு ஆதாரமானவனாகவும். எழுத்துக்களைக் காப்பவனாகவும். எழுத்துக்களில் குற்றம் குறை ஏற்படாமல் அருள்பவனாகவும் பகவன் என்ற கடவுள் உள்ளார் என்று பொருள், இவ்வாறான பண்புகளைக் கொண்ட கடவுளுக்குப் பகவன் என்ற பெயர் ஏன் வந்தது என்று காண்போம்,

பகுக்கப்பட்டவனே பகவன்
பகச் சொல்லிக் கேளிர் பிரிப்பர் (187) என்ற குறளிலும்.

எள் பக அளவு சிறுமை (889) என்ற குறளிலும்

பக என்ற சொல் உள்ளது, பக என்றால் பகுத்தல். பிரித்தல். பிளவுபடுத்துதல். துண்டாக்குதல் என்பன பொருளாகும், "அன்" என்ற ஆண்பால் பெயர் விகுதி உள்ளது, இதனால் பகவன் என்றால் பகுக்கப்பட்ட ஆண் கடவுள் என்று பொருள்,
அப்படியானால் இன்று நாம் வணங்கும் கடவுள்களில் பகுக்கப்பட்ட. பிரிக்கப்பட்ட. பிளவுபடுத்தப்பட்ட. துண்டாடப்பட்ட கடவுள் யார்? என்று பார்ப்போம்,
 நவக்கிரகங்களில் ராகுவும் கேதுவும் தலைதுண்டிக்கப்பட்ட அம்சத்தைக் கொண்டவர்களாக உள்ளனர், அசுரனின் தலையையும் பாம்பின் உடலையும் கொண்டது ராகுவாகும். பாம்பின் தலையையும் அசுரனின் உடலையும் கொண்டது கேதுவாகும், ஆனால் ராகுவும் கேதுவும் இரண்டு கிரகங்களாக உள்ளனர், இறைவன் சிவன் தனது உடலின் சரிபாதியைத் தேவிக்கு வழங்கியுள்ளார், ஆனால் அவரது உடல் பிளவுபடுத்தப்படவில்லை, விநாயகரின் தலை துண்டிக்கப்பட்டது, பின்னர் யானையின் தலை பொருத்தப்பட்டது, இதனால். விநாயகரே தலைபகுக்கப்பட்ட உடலையுடைய கடவுளாக உள்ளார், அவரது கதையைப் படிப்போம்,
 அன்னை பார்வதிதேவி தனது உடம்பின் அழுக்கிலிருந்து விநாயகப்பெருமானை உருவாக்கினார், சிவபெருமான் விநாயகாரின் தலையைத் துண்டித்துவிட்டார், பின்னர் யானையின் தலை பொருத்தப்பட்டு விநாயகர் உயிர்ப்பிக்கப்பட்டார், இதனால். விநாயகாரின் உடலானது அன்னை பார்வதிதேவியால் வழங்கப்பட்டது, அவரது தலையானது சிவபெருமானால் வழங்கப்பட்டது, இவ்வாறு பார்வதியும் பரமேசுவரனுமாக. தாயும் தந்தையுமாக. மூலமுதல்வனாக. வேதம் எழுதிய நாயகனாக விநாயகப் பெருமான் விளங்குகின்றார்,
 
"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு" என்ற குறளுக்கு அகர முதலான எழுத்துக்களுக்களின் தோற்றத்திற்கு மூல ஆதாரமானவனும். எழுத்துக்களில் உள்ள குற்றம் குறைகளை நீக்குபவனும். பகுக்கப்பட்ட உடலையுடையவனுமாகிய கடவுளே இவ்வுலகத்திற்கும் உலக மக்களுக்கும் முதன்மையானவன் ஆவான் - என்பது பொருளாகும்,

ஆனால் பிள்ளையார் வழிபாடு வாதாபி கொண்டானுக்கு முன்னாள் தமிழ்நாட்டில் இல்லை என்று கூறப்படுகிறதே! அதற்கான விளக்கத்தைக் காண்போம்,

பிடித்து வைத்தால் பிள்ளையார்
களிமண்ணையோ அல்லது மாட்டுச் சாணத்தையோ பிடித்துவைத்து அதில் அருகம்புள்ளைச் சொருகி விநாயகரைக் கும்பிடும் வழக்கமும். பிள்ளையார் சுழிபோட்டு எழுதத்துவங்கும் வழக்கமும் தொன்று தொட்டுத் தமிழ்நாட்டில் இருந்து வருகிறது, மேலும் வெள்ளெருக்கம் பூக் கொண்டு கடவுளை வழிபடும் வழக்கமும் பழந் தமிழரிடத்தில் இருந்துள்ளது,

இரண்டு கைகளையுடைய யானைமுகனின் உருவ வழிபாடு முற்காலப் பாண்டியர் காலத்தில். பிள்ளையார்பட்டியில்;. கி,பி, 4ம் நூற்றாண்டில். கல்லில் வடிக்கப்பட்டுள்ளது, இதனால் கி,பி,6ம் நூற்றாண்டில் வாதாபியிலிருந்து கொண்டுவரப்பட்ட நான்கு கைகளையுடைய விநாயகரின் காலத்திற்கு முன்பே தமிழ் நாட்டில் விநாயகர் உருவ வழிபாடு இருந்துள்ளது ​தெளிவாகிறது, மேலும் போரின் போது. எதிரி வழிபடும் தெய்வத்தையோ அல்லது மரத்தையோ கொண்டு வருதல் உண்டு, தமிழர்கள். இவ்வாறு செய்வதை வெற்றியின் அடையாளமாகத் கருதினர், இதனால் பழந்தமிழரிடம் விநாயகர் வழிபாடு இல்லை என்பதற்கு ஆதாரம் ஏதும் இல்லை என்பதே உண்மை,

ஆனை முகத்தனே ஆதிபகவன்
 இவ்வாறான காரணங்களால் வள்ளுவர் காலத்தில் ஆதிபகவன் என்று நம்முன்னோரால் வாழ்த்தப்பட்ட கடவுளின் பண்புநலன்கள் அனைத்தும். இன்றைய நாளில் நாம் வணங்கும் ஆனைமுகத்தானுக்கே பொருந்தியமைகின்றன, எனவே. தெய்வப்புலவராம் திருவள்ளுவர் வழி நின்று ஆனைமுகத்தானை நாமும் வாழ்த்தி நம் எழுத்துப்பணியையும். மற்றபிற பணிகளையும் செவ்வனே துவக்குவோம்; நலன்கள் அனைத்தும் பெறுவோம்.

* * * * *
முனைவர், கி, காளைராசன். B.Sc., PGDCA, M.A., M.Phil., Ph.D.,
உதவிப்பதிவாளர் (நிதிப்பிரிவு)
அழகப்பா பல்க​லைக்கழகம்
காரைக்குடி - 630 003
10 குருநாதர்கோயில் தெரு,
கோட்டையூர். – 630 106
தொலை​பேசி- 94435 01912

--
Dr. K. Kalairajan (Cell: 94435 01912)
Assistant Registrar
Alagappa University
KARAIKUDI -630 003

ananda rasa thiruma

unread,
Jul 15, 2010, 6:37:30 AM7/15/10
to mint...@googlegroups.com
திரு காளைராசன்
ஆனைமுகத்தோன் அருளால் அகர முதல கட்டுரையை மின் தமிழில் ஏற்றியிருக்கிறீர்கள்.
///இக்கட்டுரை தர்க்கரீதியாக ஆராய்ந்து எழுதப்பட்டுள்ளது,  இதில் மறுப்பதற்கு ஏதும் இல்லை!///
என்று நீங்கள் குறிப்பிட்ட பிறகு இதில் மாற்றுக் கருத்துக் கூற வாய்ப்பில்லை. கூறினாலும் நீங்கள் ஏற்கத் தயாரில்லை என்பதையே காட்டுகிறது.
தருக்கவியலில் முக்கூற்று வாதத்திற்கு ஓர் எடுத்துக்காட்டைத் தருவார்கள்.
 
மனிதன் தவறு செய்பவன்
சாக்ரடீஸ் மனிதன்
எனவே சாக்ரடீஸ் தவறுசெய்பவன்.
 
குற்றங்குறைகளுக்கு அப்பாற்பட்ட மனித முயற்சி ஏதும் இருப்பதாக அறிஞர்கள் சொல்வதில்லை. முதன் முதலில் மறுப்பிற்கே இடம் அளிக்காமல் ஒரு கட்டுரை எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.
 
எனக்கு ஓர் ஐயம். அது இந்தக் கட்டுரை தொடர்பான ஐயம் என்றும் சொல்லமுடியாது. இக்கட்டுரை தொடர்பானது இல்லை என்றும் சொல்ல முடியாது. அதாவது நீங்கள் இதனை உங்கள் பல்கலைக் கழகத்தில் ஐந்து ஆண்டுகளுக்குமுன் படித்துள்ளீர்கள். அங்கு யாரும் இதற்கு மாற்றுக் கருத்துச் சொல்லவில்லையா?
அன்புடன்
ஆராதி

2010/7/15 kalairajan krishnan <kalair...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

ananda rasa thiruma

unread,
Jul 15, 2010, 6:38:10 AM7/15/10

devoo

unread,
Jul 15, 2010, 6:46:51 AM7/15/10
to மின்தமிழ்
Jul 15, 5:37 am, ananda rasa thiruma

> எனக்கு ஓர் ஐயம். அது இந்தக் கட்டுரை தொடர்பான ஐயம் என்றும் சொல்லமுடியாது.
> இக்கட்டுரை தொடர்பானது இல்லை என்றும் சொல்ல முடியாது. அதாவது நீங்கள் இதனை
> உங்கள் பல்கலைக் கழகத்தில் ஐந்து ஆண்டுகளுக்குமுன் படித்துள்ளீர்கள். அங்கு
> யாரும் இதற்கு மாற்றுக் கருத்துச் சொல்லவில்லையா?

என்னே ஆ ரா தி அவர்களின் மென்மையான அணுகுமுறை !!
கற்க நிறைய உள்ளது

தேவ்

ananda rasa thiruma

unread,
Jul 15, 2010, 6:49:49 AM7/15/10
to mint...@googlegroups.com
என் கணினியில் ஏதோ சிக்கல் என நினைக்கிறேன். இரண்டுமுறை மடல் அனுப்பப்பட்டுள்ளது. பொறுத்தருள்க.
 
அன்புடன்
ஆராதி

2010/7/15 devoo <rde...@gmail.com>

ananda rasa thiruma

unread,
Jul 15, 2010, 6:50:14 AM7/15/10
to mint...@googlegroups.com
என் கணினியில் ஏதோ சிக்கல் என நினைக்கிறேன். இரண்டுமுறை மடல் அனுப்பப்பட்டுள்ளது. பொறுத்தருள்க.
 
அன்புடன்
ஆராதி

2010/7/15 devoo <rde...@gmail.com>

Nakinam sivam

unread,
Jul 15, 2010, 7:10:54 AM7/15/10
to mint...@googlegroups.com
அன்பு அய்யா கலைராஜன் அவர்களுக்கு,

உங்கள் கருத்துக்களை மறுக்க வேண்டும் என்றிதை எழுதவில்லை.

திருவள்ளுவர் சித்தர் மரபில் வந்தவர்.
சித்தர்கள் உருவ அருவ இரண்டு வழிபாடுகளையும்  சொல்வார்கள்.
இருப்பினும் உருவ வழிபாட்டில் சொல்லப்பட்ட தெய்வ உருவங்கள் எல்லாம் அருவ வழிபாட்டின் போது நமது உள்ளே நடைபெறும் மாற்றங்களை குறிப்பதற்காக சொல்வார்கள்.

செய்யுள் இயற்றும்போது முதலில் காப்பு செய்யுள் இயற்றுவது மரபு.
அதில் முதலாவதாக தும்பிக்கையானை முதலாவதாக வைத்தே இயற்றுவது நெடுங்காலமாக நடைமுறையில் உள்ளது.
அந்த அடிப்படையில் நீங்கள் கூறுவது உண்மையாக இருக்கலாம்.

ஆனால் திருவள்ளுவரின் குறள் உருவ நிலை கடந்து அருவ நிலையை பற்றியும், சித்தர்களுக்கே சிறப்பான சாகா கல்வி பற்றியும் போதிப்பதனால் அவர் ஆதி பகவன் என்று விநாயகரை சொல்லி இருக்க வாய்ப்பில்லை.

சரி அகர என்றால் என்ன என்று பார்த்தால்
சித்தர்கள் அகரம் என்பதனை உயிர் என்று கூறுகிறார்கள் 
ஆக அகரம் ஆகிய இந்த உயிர்கள் தொடருவதற்கு 
முழு முதல் காரண கர்த்தா யார் என்றால்
ஒன்றான சிவம் ( சிவன் அல்ல) 
இயங்கா நிலையில் இருந்து சலனத்தின் காரணமாக இயங்கு நிலை பெற்றதனால் உயிர்கள் தோன்றின.
அப்படிப் பட்ட ஆதியில் உள்ள இறைவனைதான் ஆதி பகவன் என்றும்
அவரே இந்த உலகு தோன்றுவதற்கு முதலானவர் என்பதனால் முதற்றே உலகு என்றும் கூறி இருக்கிறார்.

ஆக அருவாய் உள்ள இறைவனே ஆதி பகவன் என்பது தெளிவு.

மேலும் 
சாகா கல்வி பற்றி திருவள்ளுவர் முதல் அதிகாரத்தில் சொல்லி
இருக்கிறார் என்று வள்ளல் பெருமான் கூறி இருக்கிறார்
அதை அடுத்து சிந்திப்போம்.

அன்புடன்
சிவம்
 
2010/7/15 devoo <rde...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
Brotherly Athman
Nakinam Sivam

http://nakinam.blogspot.com

aruran visu

unread,
Jul 15, 2010, 7:34:09 AM7/15/10
to mint...@googlegroups.com
அன்பிற்குரியீர்,

1.வாதாபி படையெடுப்புக்கு முன்னாள், அதாவது 8-10 நூற்றாண்டுக்கு பிறகுதான் ஆனைமுகன் வழிபாடு தென்னிந்தியா வந்ததாக, பெரும்பாலானோர் ஏற்றுக் கொண்ட கருத்து. 
2. அறவழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கல்லார்-என்ற குறள் அருகக் கடவுளை குறிப்பிடுவதாக இதற்கு முன்னும் பலர் கூறியுள்ளனர்.
3. செங்கண்ணான் உலகு என்ற வரிகளும் அருகக் கடவுளையே குறிப்பதாக சொல்லப் படுகிறது.

இதை ஒட்டி, திருவள்ளுவர் சமணர் என்ற வாதமும் இங்கு உண்டு. 

அன்புடன்.
ஆரூரன் விசுவநாதன்

15 ஜூலை, 2010 2:24 pm அன்று, kalairajan krishnan <kalair...@gmail.com> எழுதியது:
--

Nakinam sivam

unread,
Jul 15, 2010, 7:53:37 AM7/15/10
to mint...@googlegroups.com
அய்யா,

திருவள்ளுவர் சித்தர் மரபில் வந்தவர்.
சித்தர்கள் ஜாதி, சமயம், மதம் கடந்தவர்கள்.
அவர்களை ஒரு ஜாதியிலோ, சமயத்திலோ, மதத்திலோ 
அடக்கி விட முடியாது.
இறைவனை பற்றி அவர் கூறியுள்ள அனைத்தும்
மதங்களை கடந்த உண்மை பரம்பொருளை பற்றியது மட்டுமே.
நம்மை போன்றவர்களுக்குதான் இறைவனிடம் பாகுபாடு எல்லாம்.
எங்கள் இறைவன், உங்கள் இறைவன் என்பதெல்லாம்.
சித்தர்களுக்கு ஒன்றான் இறைவனான 
இந்த உலகம் தோன்றியதும், ஒடுங்குவதும் , உயிர்கள் தோன்றியதும், ஒடுங்குவதும் எதிலோ அதுவே ஆகும்.

அன்புடன்
சிவம்

2010/7/15 aruran visu <visua...@gmail.com>

வினோத் ராஜன்

unread,
Jul 15, 2010, 7:56:36 AM7/15/10
to மின்தமிழ்
>
> இதை ஒட்டி, திருவள்ளுவர் சமணர் என்ற வாதமும் இங்கு உண்டு.

ணமோ அரஹந்தாணம் :-)

V

On Jul 15, 4:34 pm, aruran visu <visuaru...@gmail.com> wrote:
> அன்பிற்குரியீர்,
>
> 1.வாதாபி படையெடுப்புக்கு முன்னாள், அதாவது 8-10 நூற்றாண்டுக்கு பிறகுதான்
> ஆனைமுகன் வழிபாடு தென்னிந்தியா வந்ததாக, பெரும்பாலானோர் ஏற்றுக் கொண்ட
> கருத்து.
> 2. அறவழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கல்லார்-என்ற குறள் அருகக் கடவுளை
> குறிப்பிடுவதாக இதற்கு முன்னும் பலர் கூறியுள்ளனர்.
> 3. செங்கண்ணான் உலகு என்ற வரிகளும் அருகக் கடவுளையே குறிப்பதாக சொல்லப்
> படுகிறது.

>

> அன்புடன்.
> ஆரூரன் விசுவநாதன்
>
> 15 ஜூலை, 2010 2:24 pm அன்று, kalairajan krishnan

> <kalairaja...@gmail.com>எழுதியது:
>
>
>
>
>
> >http://groups.google.ge/group/Thiruppuvanam
>
> > kalairaja...@gamil.com
>
> > அகர முதல்வன் - ஆதி பகவன் <http://groups.google.ge/group/Thiruppuvanam>
>
> > *அகர முதல்வன் - ஆதி பகவன்
> > *தெய்வப் புலவராம் திருவள்ளுவர் முதற்குறலில் வணங்கிய ​தெய்வம் எது?

> > *அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
> > பகவன் முதற்றே உலகு*

>
> > என்பது திருக்குறளின் முதற்குறள், இதில் "ஆதிபகவன்" என்று திருவள்ளுவரால்
> > வணங்கப்பட்ட கடவுள் யார்?
> > ஆதி பகவன் யார் என்று யாராலும் அறுதியிட்டுக் கூற இயலவில்லை! ஒவ்வொரு அறிஞரும்
> > ஒருவாறாகக் கூறுகின்றனர்,
> > சிலர். திருக்குறள் என்பது உலகப் பொதுமறை நூலாகும். அவரவர் சமயத்தின்
> > மூலக்கடவுளையே ஆதிபகவன் என்று வள்ளுவர் பொதுவாகக் குறிப்பிட்டுள்ளார் என்றும்
> > கூறுகின்றனர்,
> > ஆதி என்பது தாயாகும். பகவன் என்பது தந்தையாகும், ஆதிபகவன் என்பது தாயையும்
> > தந்தை​யையும் வணங்கி எழுதப்பட்டது என்றும் கூறுகின்றனர்,
> > பகவன். பகலன். பகலவன். என்ற சொற்கள் எல்லாம் கதிரவனைக் குறிப்பன, இது உலகம்
> > தோன்றுவதற்குக் காரணமான இயற்கையையும். சூரியனையும் வணங்கி எழுதப்பட்ட குறள்
> > என்றும் கூறுகின்றனர்,
> > ஆதி பகவன் என்பர் அனைத்துக் கடவுளருக்கும் தலைமையான கடவுளின் வழிபாடாகும்.
> > அதனால் இது சிவ வழிபாடு என்றும் கூறியுள்ளனர்,
> > திருக்குறளின் மற்றபிற குறள்களில் உலகுஅளந்தான். திருமகள் போன்ற தெய்வங்கள்
> > குறிப்பிடப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி ஆதிபகவன் என்பது ஆதிநாராயணனைக்
> > குறிக்கும் என்றும் கூறியுள்ளனர்,
> > சிலர் முதற்
>

> ...
>
> read more »

kalairajan krishnan

unread,
Jul 15, 2010, 8:13:58 AM7/15/10
to mint...@googlegroups.com
நன்றி
நிறையவே ​கேள்விகள் ​கேட்டார்கள்
ஒவ்வொரு ​கேள்விக்கும் பதிலளிக்கப் பட்டது
ஒவ்​வொன்றாகச் ​சொல்கி​றேன்
ஆனால் அதிகமான பக்கங்கள் எடுத்துக் ​கொள்ளும் 
ஒரு மணி​நேரத்திற்கும் அதிகமாக நடந்த உ​ரையாடல்க​ளை நி​னைவுகூர்ந்து தட்டச்சு ​செய்வதற்​கே நாட்கணக்கில் ஆகும்,

ஆராய்ந்து எழுதப்பட்டுள்ளது,  இதில் மறுப்பதற்கு ஏதும் இல்லை!///
என்று நீங்கள் குறிப்பிட்ட பிறகு இதில் மாற்றுக் கருத்துக் கூற வாய்ப்பில்லை. கூறினாலும் நீங்கள் ஏற்கத் தயாரில்லை என்பதையே காட்டுகிறது.
 
மாற்றுக்கருத்து கூறலாம்.  ஆனால் எதிர் கருத்துக் கூறினால் பதில் கூறிடுவேன்,  அதுவும் ஏற்றுக்​கொள்ளும் வகையில்,  ​வேண்டு​கோள் ஒன்றுதான்,  ​கேள்விகள் ஊகங்களின் அடிப்படையில் இல்லாமல் தர்க்க ரீதியாக இருக்க ​வேண்டும்,
 
உலகில் அதிகமாக ஆராயப் ​பெற்ற இலக்கியம் எது? என்று ஓர் ஆராய்ச்சி ​மேற்​கொண்டால் அது திருக்குறளின் முதற்குறலாகவே இருக்கும் என்று நினைக்கிறேன்,
 
வ,உ,சி, முதல் நான்கு அதிகாரங்களும் திருவள்ளுவ​ரே இயற்றியது இல்​லை என்றும் குறப்பிட்டுள்ளார்,  இதற்கும் மிகச் சரியான பதில் உள்ளது,
 
நன்றி ஆராதி அவர்களே
அன்புடன்
கி, காளைராசன்,

kalairajan krishnan

unread,
Jul 15, 2010, 8:18:08 AM7/15/10
to mint...@googlegroups.com
இது உங்களுடைய கூற்று
தங்களு​டைய கூற்று ஆதாரங்களுடன் கூறப்​பெறவில்லை
இது ​போல் ஆதாரம் இல்லாத என்னு​டைய கூற்று,
திருக்குறள் தமிழ்ச்சங்கத்தினால் இயற்றப் ​பெற்ற நூல்
அது ஒரு ​பொது உடமை நூல்

kalairajan krishnan

unread,
Jul 15, 2010, 8:21:38 AM7/15/10
to mint...@googlegroups.com
On 7/15/10, aruran visu <visua...@gmail.com> wrote:
அன்பிற்குரியீர்,

1.வாதாபி படையெடுப்புக்கு முன்னாள், அதாவது 8-10 நூற்றாண்டுக்கு பிறகுதான் ஆனைமுகன் வழிபாடு தென்னிந்தியா வந்ததாக, பெரும்பாலானோர் ஏற்றுக் கொண்ட கருத்து. 
 
இதற்குப் பதில் எனது கட்டு​ரையி​லே​யேஉள்ளது,
 
2. அறவழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கல்லார்-என்ற குறள் அருகக் கடவுளை குறிப்பிடுவதாக இதற்கு முன்னும் பலர் கூறியுள்ளனர்.
 
இது எனது கட்டு​ரையில் ஆராயப்படவில்​லை,  இருப்பினும் மனதில் ​தோன்றியத​தைக் கூறுகி​றேன்,
இது பண்புநலன்க​ளைக் குறித்த குறள்,   இப்பண்பு​டைய அ​னைத்துத் ​தெய்வங்களுக்கும் இது ​பொருந்தும்.  ஏன் இப்பண்பு​டைய மானிடர்களுக்கும் இது ​பொருந்தும்,

3. செங்கண்ணான் உலகு என்ற வரிகளும் அருகக் கடவுளையே குறிப்பதாக சொல்லப் படுகிறது.
 
இது எனது கட்டு​ரையில் ஆராயப்படவில்​லை,

kalairajan krishnan

unread,
Jul 15, 2010, 8:37:26 AM7/15/10
to mint...@googlegroups.com
On 7/15/10, Nakinam sivam <nak...@gmail.com> wrote:
அன்பு அய்யா கலைராஜன் அவர்களுக்கு,

உங்கள் கருத்துக்களை மறுக்க வேண்டும் என்றிதை எழுதவில்லை.

திருவள்ளுவர் சித்தர் மரபில் வந்தவர்.
சித்தர்கள் உருவ அருவ இரண்டு வழிபாடுகளையும்  சொல்வார்கள்.
இருப்பினும் உருவ வழிபாட்டில் சொல்லப்பட்ட தெய்வ உருவங்கள் எல்லாம் அருவ வழிபாட்டின் போது நமது உள்ளே நடைபெறும் மாற்றங்களை குறிப்பதற்காக சொல்வார்கள்.
 
எனது கருத்து - எனது ஆராய்ச்சி அல்ல
திருவள்ளுவர் தமிழில் திருக்குறளை இயற்றியுள்ளார்
இதைத்தவிர அவரைப்பற்றிய எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை
இதுவே உண்மை
அவரைப்பற்றிய அனைத்துக் கருத்துக்களும் அவரவர் எண்ணங்களே
 
செய்யுள் இயற்றும்போது முதலில் காப்பு செய்யுள் இயற்றுவது மரபு.
அதில் முதலாவதாக தும்பிக்கையானை முதலாவதாக வைத்தே இயற்றுவது நெடுங்காலமாக நடைமுறையில் உள்ளது.
அந்த அடிப்படையில் நீங்கள் கூறுவது உண்மையாக இருக்கலாம்.
 
உண்மைதான் இதுவாகவும் இருக்கலாம்
 
ஆனால் திருவள்ளுவரின் குறள் உருவ நிலை கடந்து அருவ நிலையை பற்றியும், சித்தர்களுக்கே சிறப்பான சாகா கல்வி பற்றியும் போதிப்பதனால் அவர் ஆதி பகவன் என்று விநாயகரை சொல்லி இருக்க வாய்ப்பில்லை.
 
இது உங்களுடைய கருத்து,  இக்கருத்து தர்க்கரீதியாக எடுத்துக் கூறப்​பெறவில்லை,
எடுத்துக் கூறினால் எனது கருத்துக்களை நிரூபிக்க நான் தயார்,
 
சரி அகர என்றால் என்ன என்று பார்த்தால்
சித்தர்கள் அகரம் என்பதனை உயிர் என்று கூறுகிறார்கள் 
ஆக அகரம் ஆகிய இந்த உயிர்கள் தொடருவதற்கு 
முழு முதல் காரண கர்த்தா யார் என்றால்
ஒன்றான சிவம் ( சிவன் அல்ல) 
இயங்கா நிலையில் இருந்து சலனத்தின் காரணமாக இயங்கு நிலை பெற்றதனால் உயிர்கள் தோன்றின.
 
முதறக் குறளே - அகரத்தை எழுத்து என்று ​தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது,  எனவே தங்களது விளக்கம் ​​தேவையற்றதாகி விடுகிறது, 

அப்படிப் பட்ட ஆதியில் உள்ள இறைவனைதான் ஆதி பகவன் என்றும்
அவரே இந்த உலகு தோன்றுவதற்கு முதலானவர் என்பதனால் முதற்றே உலகு என்றும் கூறி இருக்கிறார்.
 
ஆம் ஆதி என்பதற்கு எனது கட்டுரையில் Authority  என்று ​திருவள்ளுவரின் குறளை எடுத்துக் காட்டாகக் ​கொண்டு பொருள் கூறியுள்​ளேன்
தங்களது ஆதிக்கு தாங்கள் எடுத்துக் காட்டுடன் கூறவும்
பகவன் என்பது யார்? என்பதை ஆய்வது தானே கட்டுரையின்​நோக்கம்

ஆக அருவாய் உள்ள இறைவனே ஆதி பகவன் என்பது தெளிவு.
 
அருவாய் உள்ளவன் இறைவன் என்று திருக்குறளில் எங்கும் இல்லை என நினைக்கிறேன்

--

வினோத் ராஜன்

unread,
Jul 15, 2010, 9:04:14 AM7/15/10
to மின்தமிழ்
//*பக* என்ற சொல் உள்ளது, பக என்றால் பகுத்தல். பிரித்தல்.

பிளவுபடுத்துதல்.
துண்டாக்குதல் என்பன பொருளாகும், "*அன்*" என்ற ஆண்பால் பெயர் விகுதி

உள்ளது,
இதனால் பகவன் என்றால் பகுக்கப்பட்ட ஆண் கடவுள் என்று பொருள்,
அப்படியானால் இன்று நாம் வணங்கும் கடவுள்களில் பகுக்கப்பட்ட.
பிரிக்கப்பட்ட.
பிளவுபடுத்தப்பட்ட. துண்டாடப்பட்ட கடவுள் யார்?//

ஏன் இப்படி ஒரு விபரீத பொருள் !

பகவன் ( < பகவத் ) என்பதற்கு தெளிவான சொற்பிறப்பு சமஸ்கிருதத்தில்
உள்ளதே.

பக (Bhaga) என்பதற்கு பொருளாக:

அதிருஷ்டம், சுகம் செல்வாகு, கௌரவம், கீர்த்தி, அழகு என்பதாக 1930’ல்
வெளியான தமிழ்-சமஸ்கிருத அகராதி கூறுகிறது.

-வத் என்றால், கொண்டவன்.. என்பதை குறிக்கும் ஆன்பால் சொற்பகுதி

மேற்கண்ட குணங்களை கொண்டவன், பக-வத். பெண்பால் சொல், பக-வதீ,

இது எழுவாயாக வரும்போது (பிரதம விபக்தி) பகவன் என்று ஆகும்.

சமஸ்கிருத எழுவாய் வடிவமே பொதுவாக தமிழில் ஏற்றுகொள்ளப்படுகின்றது.

(அருகன் < அர்ஹன் < அர்ஹத் நோக்குக )

எவ்வாறாகினும்,

சூடாமணி நிகண்டும்.. பகவன் என்ற சொல்லை புத்தன், ஜினன், சிவன், விஷ்ணு,
பிரம்மாவுக்கு உரியாத கூறுகிறது. விநாயகர் வரவில்லை. :-)

இன்னொன்று,

கணபதி முதலில் தடையை உண்டு பண்ணுபவனாக இருந்து பிறகு தடைகளை அழிப்பவர்
என்ற நிலையை அடைந்தார். தடைகளை (அவர்) உருவாக்காமல் இருக்கத்தான் கணபதியை
வழிப்பட்டிருக்க வேண்டும், காலம் செல்ல செல்ல கணபதி (எல்லா) தடைகளை
நீக்குபவர் என்ற நிலையை அடைந்திருக்கலாம்.

கணபதி விக்னஹர்தாவானது பிற்காலத்திலேயே.

இதை உறுதிப்படுத்தும் வகையில், ஆதிகால பௌத்த சூத்திரங்கள், கணபதியை
தடைகளை உருவாக்கும் யக்ஷனாகத்தான் சித்தரிக்கின்றன. [ பின்னர்
போதிசத்துவரான அவலோகிதேஸ்வரர் கணபதியை அடக்கியதாக கதைகள் உண்டு. ]

V

On Jul 15, 1:54 pm, kalairajan krishnan <kalairaja...@gmail.com>
wrote:
> http://groups.google.ge/group/Thiruppuvanam
>
> kalairaja...@gamil.com
>
> அகர முதல்வன் - ஆதி பகவன் <http://groups.google.ge/group/Thiruppuvanam>
>
> *அகர முதல்வன் - ஆதி பகவன்
> *தெய்வப் புலவராம் திருவள்ளுவர் முதற்குறலில் வணங்கிய ​தெய்வம் எது?  என்பதைக்

> *அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
> பகவன் முதற்றே உலகு*

> *மூல முதல்வன்
> *ஆதி பகவன் என்ற கடவுளை முதன்முதலாக வணங்கியே தெய்வப்புலவர் திருவள்ளுவர்

> திருக்குறளை இயற்றியுள்ளார், இதுபோல் இன்று எந்த ஒரு செயலைச் செய்யும் முன்பும்
> முதன்முதலாக யானை முகம் கொண்ட விநாயகப் பெருமானை வணங்கி வழிபட்டு அதன் பின்னரே
> நமது வேலைகளைத் துவக்குகிறோம்,
> ஆகையால். முதல் வணக்கத்திற்கு உரிய கடவுள் என்ற முறையில் ஆதிபகவனும்
> ஆனைமுகத்தானும் ஒருவராகின்றனர்,
>

> *வித்தகன் விநாயகன்
> *இரண்டாவதாக "அகர முதல எழுத்துக்களெல்லாம். ஆதி பகவன் முதற்றே" என்று

> திருவள்ளுவர் கூறுகின்றhர், முதன் முதல் வணங்கிய கடவுளை எழுத்துக்களுடன்
> தொடர்புபடுத்திக் குறள் இயற்றியுள்ளார், அப்படியானால். எழுத்துக்களுடன்
> தொடர்புடைய கடவுள் யார்?
> இறைவன் சிவனின் உடுக்கை (துடி)யிலிருந்து வேதங்கள் தோன்றின என்று கூறுகின்றனர்,
> இதனால் இறைவன் சிவனே அனைத்து வேதங்களுக்கும் நாயகனாகச் சைவர்களால்
> வணங்கப்படுகிறhர், வைணவர்கள் அயக்கிரீவரைக் கலைகளின் கடவுளாகக்
> குறிப்பிடுகின்றனர், அன்னை கலைவாணி (ச​ரசுவதி). கலைகளின் நாயகியாக
> விளங்குகின்றhள், ஆனால் இக்கடவுள்கள் யாரும் எழுத்துக்களுடன் இணைத்துப்
> போற்றப்பட வில்லை,
> வேதவியாசர் கூறிட. விநாயகர் தனது தந்தத்தையே ஒடித்துப் புராணம் எழுதியதாகக்
> கூறப்படுகிறது, இதனால் எழுத்துக்களுடன் தொடர்புடைய கடவுளாக விநாயகர்
> விளங்குகின்றhர்,
> யானை முகனை ஓங்கார வடிவத்துடன் பொருத்திக் கூறுவர், ஒலி வடிவில் மட்டுமின்றி
> எழுத்து வடிவிலும் யானைத் தலையும். வலமாகச் சுழித்த துதிக்கையும் "ஓம்" என்ற
> எழுத்துக்கள் வடிவத்திற்கு பொருத்தமாக உள்ளன, பிற கடவுளருக்கு இப்பொருத்தம்
> பெரும்பாலும் இல்லை, இவ்வாறு விநாயகருக்கு உரிய ஓங்கார வடிவ காட்சிக்குப்
> பிள்ளையார் பட்டி விநாயகரின் திருஉருவமே எடுத்துக்காட்டாகும்,
>

> *ஆதியானவன்
> *மூன்றாவதாக திருவள்ளுவர். முதன் முதலில் தான் வணங்கிய கடவுளின் பெயரை "ஆதி

> பகவன்" என்று கூறிப்பிடுகின்றார், தமிழ் இலக்கணப்படி பகர ஒற்று மிகுந்து
> ஆதிப்பகவன் என்று இருக்க வேண்டும், இடையில் "ப்" இல்லாததால் ஆதிபகவன் என்பது
> வடநூல் முடிபு என்றும் கூறுகின்றனர்,
> தமிழில் இலக்கணச் செறிவுடன் குறள் இயற்றியவர் தெய்வப் புலவர் திருவள்ளுவர்,
> அவர் தனது முதற் குறளையே வடநூல் மரபினைப் பின்பற்றி எழுதியிருக்க மாட்டார்
> என்பது திண்ணம், அதனால் ஆதி என்ற சொல்லையும் பகவன் என்ற சொல்லையும்
> திருவள்ளுவர் வேறுபிற குறள்களில் எப்பொருளில் கையாண்டுள்ளார் எனப் பார்ப்போம்,
>
> "ஆதி" என்றால் என்ன பொருள் என்று பார்ப்போம்,
>

> *அந்தணர் நூற்கு மறத்திற்கும் ஆதியாய்

> நின்றது மன்னவன் கோல்   (543)

> *

>
> என்ற குறளில் "ஆதி" என்ற சொல்லுக்கு. படைத்தலுக்குக் காரணமாயும். படைத்ததைக்
> காத்தலும். படைப்பில் குறைகள் ஏற்பட்டால் அதனை நிவர்த்தி செய்தலும் என்று

> பொருளாகிறது, ஆதி என்ற சொல்லுக்கு இணையாக ஆங்கிலத்தில் *Authority * என்ற சொல்

> உள்ளது. "எழுத்தெல்லாம் ஆதி பகவன்" என்றால் எழுத்துக்கள் தோன்றுவதற்கு
> ஆதாரமானவனாகவும். எழுத்துக்களைக் காப்பவனாகவும். எழுத்துக்களில் குற்றம் குறை
> ஏற்படாமல் அருள்பவனாகவும் பகவன் என்ற கடவுள் உள்ளார் என்று பொருள், இவ்வாறான
> பண்புகளைக் கொண்ட கடவுளுக்குப் பகவன் என்ற பெயர் ஏன் வந்தது என்று காண்போம்,
>

> *பகுக்கப்பட்டவனே பகவன்
> **பகச் சொல்லிக் கேளிர் பிரிப்பர் (187) *என்ற குறளிலும்.
>
> *எள் பக அளவு சிறுமை (889)* என்ற குறளிலும்
>
> *பக* என்ற சொல் உள்ளது, பக என்றால் பகுத்தல். பிரித்தல். பிளவுபடுத்துதல்.
> துண்டாக்குதல் என்பன பொருளாகும், "*அன்*" என்ற ஆண்பால் பெயர் விகுதி உள்ளது,

> இதனால் பகவன் என்றால் பகுக்கப்பட்ட ஆண் கடவுள் என்று பொருள்,
> அப்படியானால் இன்று நாம் வணங்கும் கடவுள்களில் பகுக்கப்பட்ட. பிரிக்கப்பட்ட.
> பிளவுபடுத்தப்பட்ட. துண்டாடப்பட்ட கடவுள் யார்? என்று பார்ப்போம்,
>  நவக்கிரகங்களில் ராகுவும் கேதுவும் தலைதுண்டிக்கப்பட்ட அம்சத்தைக்
> கொண்டவர்களாக உள்ளனர், அசுரனின் தலையையும் பாம்பின் உடலையும் கொண்டது
> ராகுவாகும். பாம்பின் தலையையும் அசுரனின் உடலையும் கொண்டது கேதுவாகும், ஆனால்
> ராகுவும் கேதுவும் இரண்டு கிரகங்களாக உள்ளனர், இறைவன் சிவன் தனது உடலின்
> சரிபாதியைத் தேவிக்கு வழங்கியுள்ளார், ஆனால் அவரது உடல் பிளவுபடுத்தப்படவில்லை,
> விநாயகரின் தலை துண்டிக்கப்பட்டது, பின்னர் யானையின் தலை பொருத்தப்பட்டது,
> இதனால். விநாயகரே தலைபகுக்கப்பட்ட உடலையுடைய கடவுளாக உள்ளார், அவரது கதையைப்
> படிப்போம்,
>  அன்னை பார்வதிதேவி தனது உடம்பின் அழுக்கிலிருந்து விநாயகப்பெருமானை
> உருவாக்கினார், சிவபெருமான் விநாயகாரின் தலையைத் துண்டித்துவிட்டார், பின்னர்
> யானையின் தலை பொருத்தப்பட்டு விநாயகர் உயிர்ப்பிக்கப்பட்டார், இதனால்.
> விநாயகாரின் உடலானது அன்னை பார்வதிதேவியால் வழங்கப்பட்டது, அவரது தலையானது
> சிவபெருமானால் வழங்கப்பட்டது, இவ்வாறு பார்வதியும் பரமேசுவரனுமாக. தாயும்
> தந்தையுமாக. மூலமுதல்வனாக. வேதம் எழுதிய நாயகனாக விநாயகப் பெருமான்
> விளங்குகின்றார்,
>

> *"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு" என்ற குறளுக்கு அகர முதலான

> எழுத்துக்களுக்களின் தோற்றத்திற்கு மூல ஆதாரமானவனும். எழுத்துக்களில் உள்ள
> குற்றம் குறைகளை நீக்குபவனும். பகுக்கப்பட்ட உடலையுடையவனுமாகிய கடவுளே

> இவ்வுலகத்திற்கும் உலக மக்களுக்கும் முதன்மையானவன் ஆவான் - என்பது பொருளாகும்,*

>
> ஆனால் பிள்ளையார் வழிபாடு வாதாபி கொண்டானுக்கு முன்னாள் தமிழ்நாட்டில் இல்லை
> என்று கூறப்படுகிறதே! அதற்கான விளக்கத்தைக் காண்போம்,
>

> *பிடித்து வைத்தால் பிள்ளையார்
> *களிமண்ணையோ அல்லது மாட்டுச் சாணத்தையோ பிடித்துவைத்து அதில் அருகம்புள்ளைச்

> சொருகி விநாயகரைக் கும்பிடும் வழக்கமும். பிள்ளையார் சுழிபோட்டு
> எழுதத்துவங்கும் வழக்கமும் தொன்று தொட்டுத் தமிழ்நாட்டில் இருந்து வருகிறது,
> மேலும் வெள்ளெருக்கம் பூக் கொண்டு கடவுளை வழிபடும் வழக்கமும் பழந்
> தமிழரிடத்தில் இருந்துள்ளது,
>
> இரண்டு கைகளையுடைய யானைமுகனின் உருவ வழிபாடு முற்காலப் பாண்டியர் காலத்தில்.
> பிள்ளையார்பட்டியில்;. கி,பி, 4ம் நூற்றாண்டில். கல்லில் வடிக்கப்பட்டுள்ளது,
> இதனால் கி,பி,6ம் நூற்றாண்டில் வாதாபியிலிருந்து கொண்டுவரப்பட்ட நான்கு
> கைகளையுடைய விநாயகரின் காலத்திற்கு முன்பே தமிழ் நாட்டில் விநாயகர் உருவ
> வழிபாடு இருந்துள்ளது ​தெளிவாகிறது, மேலும் போரின் போது. எதிரி வழிபடும்
> தெய்வத்தையோ அல்லது மரத்தையோ கொண்டு வருதல் உண்டு, தமிழர்கள். இவ்வாறு செய்வதை
> வெற்றியின் அடையாளமாகத் கருதினர், இதனால் பழந்தமிழரிடம் விநாயகர் வழிபாடு இல்லை
> என்பதற்கு ஆதாரம் ஏதும் இல்லை என்பதே உண்மை,
>

> *ஆனை முகத்தனே ஆதிபகவன்
> * இவ்வாறான காரணங்களால் வள்ளுவர் காலத்தில் ஆதிபகவன் என்று நம்முன்னோரால்

Vinodh Rajan

unread,
Jul 15, 2010, 11:08:57 AM7/15/10
to mintamil
//யானை முகனை ஓங்கார வடிவத்துடன் பொருத்திக் கூறுவர், ஒலி வடிவில் மட்டுமின்றி 
எழுத்து வடிவிலும் யானைத் தலையும். வலமாகச் சுழித்த துதிக்கையும் "ஓம்" என்ற 
எழுத்துக்கள் வடிவத்திற்கு பொருத்தமாக உள்ளன, பிற கடவுளருக்கு இப்பொருத்தம் 
பெரும்பாலும் இல்லை, இவ்வாறு விநாயகருக்கு உரிய ஓங்கார வடிவ காட்சிக்குப் 
பிள்ளையார் பட்டி விநாயகரின் திருஉருவமே எடுத்துக்காட்டாகும், //

இது தான்.. ஆதி ஓங்கார வடிவம் :-)

om_brahmi.JPG

இதற்கு பொருந்துபவர் நாகராஜர் மட்டும் தான் :-P

V
om_brahmi.JPG

devoo

unread,
Jul 15, 2010, 11:25:37 AM7/15/10
to மின்தமிழ்
>> பக (Bhaga) என்பதற்கு பொருளாக:
அதிருஷ்டம், சுகம், செல்வாக்கு, கௌரவம், கீர்த்தி, அழகு என்பதாக 1930’ல்

வெளியான தமிழ்-சமஸ்கிருத அகராதி கூறுகிறது. <<

’பகம்’ என்பது அறுநிதித் தொகுதி.
பகவாந், பகவதி, பகஹா, பகதத்தன் என்னும் வடசொற்கள் இதன் அடிப்படையில்
தோன்றியவை. பகவன் தமிழ்ச் சொல்லானால் ’ஆதிப்பகவன்’ என்று ஒற்று
மிகுந்திருக்கும்.
பகலவன், பகவன் என்ன தொடர்பு ?

‘வை’ இருமொழிகளிலும் உள்ளது; வடமொழியில் ‘வை’ வெறும் அசைச்சொல்.
‘சிதார்’ (மண்தின் சிதார்) பதிற்றுப்பத்தில் இடம்பெறும் சொல். சிதார்
என்னும் இசைக்கருவியும் உள்ளது. பிற மொழிகளில் இச்சொல்லைக் காணலாம்.
பதிற்றுப்பத்தை ஆதாரம் காட்ட இயலுமா ?

காயம் பட்டது என்கிறோம்; ‘காயம் கர்னா, காயம் ஹோனா’ என்று ஹிந்தியிலும்
சொல்வர், வேறு பொருளில். ’மால்’ எனும் சொல் குறித்து ஓர் இழையில்
ஆராய்ந்தோம்.

மொழிகளிடையே காணப்படும் ஒலி ஒற்றுமை மட்டுமே காரணம். எல்லா ஒலிகளும்
(வைகரி சப்தம்) கண்டத்திலிருந்தே கிளம்புகின்றன.

‘எல்லையிலாதன *எண்குணம்* ஆனவை எய்திடும் ஆகாதே
இந்து சிகாமணி எங்களை ஆள எழுந்தருளப்பெறிலே’ எனும் திருவாசக வரியில்
'எண்குணம்' காணப்படுகிறது

தேவ்

> ...
>
> read more »

Banukumar Rajendran

unread,
Jul 15, 2010, 12:30:25 PM7/15/10
to mint...@googlegroups.com
சமணத்தில் பக என்பதற்கு
ஞானம்,யஸஸ்,மாஹாத்மயம்,முத்தி,ஐஸ்வரியம்,வீர்யம்,தர்மம் என்று பொருள்
கொள்கிறார்கள்.

இரா.பா
சென்னை

கொள்கிறார்கள்.

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Jul 16, 2010, 1:19:53 AM7/16/10
to mint...@googlegroups.com
திரு கலைராஜன்

புதியதோர் ஆய்வு. முயற்சிக்கு பாராட்டுக்கள்.

ஆதிபகவன் என்பதில் பகவன் என்ற சொல் குறித்து நான் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறேன். அதன் சுட்டி இதோ கீழே:

http://thiruththam.blogspot.com/2010/03/blog-post_21.html

உங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன.

அன்புடன்,

தி.பொ.ச.

2010/7/15 kalairajan krishnan <kalair...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
.....................................................................................
நல்லவை செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லவை செய்தல் ஓம்புமின்!
......................................................................................

தமிழில் திருத்தங்களைக் காண வாருங்கள்: http://thiruththam.blogspot.com

ananda rasa thiruma

unread,
Jul 16, 2010, 1:29:24 AM7/16/10
to mint...@googlegroups.com
திரு காளைராசன்
சந்தேகங்களைக் கேட்க நீங்கள் அனுமதிப்பதால் சிலவற்றைக் கேட்கவிரும்புகிறேன்.
 
வினா எண்1
முதல் குறளில் முதல, முதற்று, ஆதி என்னும் மூன்று சொற்கள் உள்ளன. இவற்றிடையே உள்ள பொருள் வேறுபாடுகள் உள்ளளவா? அவை யாவை?
 
அன்புடன்
ஆராதி
2010/7/16 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>

ananda rasa thiruma

unread,
Jul 16, 2010, 1:31:33 AM7/16/10
to mint...@googlegroups.com
முதல் வினாவில் ஒரு திருத்தம்.
இவற்றிடையே உள்ள பொருள் வேறுபாடுகள் உள்ளளவா? என்னும் வினாவில் உள்ள என்பதை நீக்கிவிடவும்.
 
அன்புடன்
ஆராதி
2010/7/16 ananda rasa thiruma <aara...@gmail.com>

kalairajan krishnan

unread,
Jul 16, 2010, 2:17:04 AM7/16/10
to mint...@googlegroups.com
On 7/15/10, வினோத் ராஜன் <vinodh...@gmail.com> wrote:
//*பக* என்ற சொல் உள்ளது, பக என்றால் பகுத்தல். பிரித்தல்.
பிளவுபடுத்துதல்.
துண்டாக்குதல் என்பன பொருளாகும், "*அன்*" என்ற ஆண்பால் பெயர் விகுதி
உள்ளது,
இதனால் பகவன் என்றால் பகுக்கப்பட்ட ஆண் கடவுள் என்று பொருள்,
அப்படியானால் இன்று நாம் வணங்கும் கடவுள்களில் பகுக்கப்பட்ட.
பிரிக்கப்பட்ட.
பிளவுபடுத்தப்பட்ட. துண்டாடப்பட்ட கடவுள் யார்?//

ஏன் இப்படி ஒரு விபரீத பொருள் !
 
திருக்குறள் தமிழில் உள்ளது,  அதனால் பக என்ற ​சொல்லுக்குத் தமிழில் ​பொருள் கூறப்பட்டுள்ளது,  அதுவும் மற்றொரு குறளை ​மேற்கோளாகக் ​கொண்டே,  இதை விடுத்து நாம் தமிழ்ச் ​சொல்லுக்கு வட​மொழியின் ​பொருளை ஏற்றுக் ​கொள்ள ​வேண்டும்,

பகவன் ( < பகவத் ) என்பதற்கு தெளிவான சொற்பிறப்பு சமஸ்கிருதத்தில்
உள்ளதே.

பக (Bhaga) என்பதற்கு பொருளாக:

அதிருஷ்டம், சுகம் செல்வாகு, கௌரவம், கீர்த்தி, அழகு  என்பதாக 1930’ல்
வெளியான தமிழ்-சமஸ்கிருத அகராதி கூறுகிறது.

-வத் என்றால், கொண்டவன்.. என்பதை குறிக்கும் ஆன்பால் சொற்பகுதி

மேற்கண்ட குணங்களை கொண்டவன், பக-வத். பெண்பால் சொல், பக-வதீ,

இது எழுவாயாக வரும்போது  (பிரதம விபக்தி) பகவன் என்று ஆகும்.

சமஸ்கிருத எழுவாய் வடிவமே பொதுவாக தமிழில் ஏற்றுகொள்ளப்படுகின்றது.

(அருகன் < அர்ஹன் < அர்ஹத் நோக்குக )

எவ்வாறாகினும்,

சூடாமணி நிகண்டும்.. பகவன் என்ற சொல்லை புத்தன், ஜினன், சிவன், விஷ்ணு,
பிரம்மாவுக்கு உரியாத கூறுகிறது. விநாயகர் வரவில்லை. :-)
 
திருக்குறளைத் திருவள்ளுவரின் குறள்வழி நின்று ஆராய்வதே சரியானது,
நிகண்டில் உள்ள ​சொற்களை அடிப்படையாகக் ​கொண்டு திருக்குறள் ​பாடப்​பெறவில்லை அல்லவா?
 
இன்னொன்று,

கணபதி முதலில் தடையை உண்டு பண்ணுபவனாக இருந்து பிறகு தடைகளை அழிப்பவர்
என்ற நிலையை அடைந்தார். தடைகளை (அவர்) உருவாக்காமல் இருக்கத்தான் கணபதியை
வழிப்பட்டிருக்க வேண்டும், காலம் செல்ல செல்ல கணபதி (எல்லா) தடைகளை
நீக்குபவர் என்ற நிலையை அடைந்திருக்கலாம்.

கணபதி விக்னஹர்தாவானது பிற்காலத்திலேயே.

இதை உறுதிப்படுத்தும் வகையில், ஆதிகால பௌத்த சூத்திரங்கள், கணபதியை
தடைகளை உருவாக்கும் யக்ஷனாகத்தான் சித்தரிக்கின்றன. [ பின்னர்
போதிசத்துவரான அவலோகிதேஸ்வரர்  கணபதியை அடக்கியதாக கதைகள் உண்டு.
 
நாம் முதற் திருக்குறளை ஆராய்ந்து ​கொண்டிருக்கிறோம்,
திருவள்ளுவர் பகவனை எழுத்துக்களுக்கு ஆதியானவன் (Authority of Letters)  என்று குறிப்பிடுகிறார்,   முதன் முதலில் எழுத்துக்களை கண்டுபிடித்து எழுதிக்காட்டியவர் விநாயகர்,   இதற்கும் புராணங்களில் சான்றுகள் உள்ளன, 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

kalairajan krishnan

unread,
Jul 16, 2010, 2:59:46 AM7/16/10
to mint...@googlegroups.com
On 7/15/10, திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com> wrote:
திரு கலைராஜன்

புதியதோர் ஆய்வு. முயற்சிக்கு பாராட்டுக்கள்.

ஆதிபகவன் என்பதில் பகவன் என்ற சொல் குறித்து நான் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறேன். அதன் சுட்டி இதோ கீழே:

http://thiruththam.blogspot.com/2010/03/blog-post_21.html

உங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன.
 
தாங்கள் மிகப் ​பெரும் முயற்சி ​செய்தி கட்டுரை எழுதியுள்ளீர்கள், நன்றாக உள்ளது,
தங்களது அனைத்து ஐயப்பாடுகளுக்கும் எனது கட்டுரை விடையாக இருக்கும் என்று நம்புகிறேன்,  எனது கட்டுரையில் ஐயப்பாடுகள் இருந்தால் கூறுங்கள் ​தெளிவுறச் ​செய்ய ​வேண்டியது எனது கடமை,

S.Partha sarathy

unread,
Jul 16, 2010, 3:45:57 AM7/16/10
to mint...@googlegroups.com
நான் பள்ளியில் படிக்கும் போது ஆதி-வள்ளுவரின் தாய்; பகவன் - அவரது தந்தை என்றே தமிழ் புத்தகத்தில் சொல்லியிருந்தது  இன்றும் நினைவில் உள்ளது.
அன்புடன்
சே.பார்த்தசாரதி

2010/7/16 kalairajan krishnan <kalair...@gmail.com>

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Jul 16, 2010, 4:18:30 AM7/16/10
to mint...@googlegroups.com
திரு கலைராஜன்

உங்கள் ஆய்வு கட்டுரை குறித்து சில கேள்விகள்:

1) வள்ளுவர் எழுத்துக்களில் அகரத்தை முதன்மையாகக் கொண்டு கருத்தைச் சொல்கிறார். ஆனால் நீங்களோ ஓம் வடிவினான கணபதியை இதில் இணைக்கிறீர்கள். அகரம் முதல் எழுத்து. ஆனால் ஓகாரமோ 10 ஆவது எழுத்து. முதல் எழுத்துடன் பத்தாம் எழுத்தை இணைத்துக் கூறுவது எப்படி சரியாகும்?. வள்ளுவர் அவ்வாறு கூறி இருக்க முடியாது.

2) வள்ளுவர் 'எழுத்தெல்லாம்' என்று தானே கூறி உள்ளார். நீங்கள் 'எழுத்துக்கெல்லாம்' என்று பொருள் கொண்டிருப்பது சரியா?. எழுத்துகளுக்கு ஆதாரம் என்ற பொருளில் கூற வள்ளுவர் விரும்பி இருந்தால் 'எழுத்திற்கு ஆதி' என்றல்லவா எழுதி இருப்பார். 

3) நுண்மாண் நுழைபுலம் மிக்க வள்ளுவர் உருவ வழிபாட்டை ஆதரித்தார் என்பதற்கு தங்களிடம் இக் குறள தவிர வேறு ஆதாரங்கள் உண்டா?

அன்புடன்,

தி.பொ.ச.

2010/7/16 kalairajan krishnan <kalair...@gmail.com>

kalairajan krishnan

unread,
Jul 16, 2010, 4:57:42 AM7/16/10
to mint...@googlegroups.com
On 7/15/10, devoo <rde...@gmail.com> wrote:
>> பக (Bhaga) என்பதற்கு பொருளாக:
அதிருஷ்டம், சுகம், செல்வாக்கு, கௌரவம், கீர்த்தி, அழகு  என்பதாக 1930’ல்
வெளியான தமிழ்-சமஸ்கிருத அகராதி கூறுகிறது. <<

’பகம்’ என்பது அறுநிதித் தொகுதி.
பகவாந், பகவதி, பகஹா, பகதத்தன் என்னும் வடசொற்கள் இதன் அடிப்படையில்
தோன்றியவை. பகவன் தமிழ்ச் சொல்லானால் ’ஆதிப்பகவன்’ என்று ஒற்று
மிகுந்திருக்கும்.
 
வணக்கம் ஐயா ​​தேவ் அவர்க​ளே
என்னு​டைய கட்டு​ரையில் ஆதியும் பகவனும் இரண்டு ​சொற்கள் எனக் கூறியுள்ளேன்,
ஆதி என்பது - Authority  என்ற ​பொருளிலும்
பகவன் - பகுக்கப்பட்டவன் என்ற ​பொருளிலும் உள்ளன என்று கூறியுள்ளேன்
எனவே ஆதிப்பகவன் "ப்" ​​இலக்கணப்படி தேவையற்றதாகி விடுகிறது,

பகலவன், பகவன் என்ன தொடர்பு ?
 
பகவனுக்கும் பகலவனுக்கும் எந்தத் ​தொடர்பும் இருப்பதாக எனக்குத் ​தெரிவில்லை,  ஆனால் சில அறிஞர்கள் பகவன் என்பதைப் பகலவன் என்ற ​பொருளில் உரை கூறியுள்ளனர்,

‘வை’  இருமொழிகளிலும் உள்ளது; வடமொழியில் ‘வை’ வெறும் அசைச்சொல்.
‘சிதார்’ (மண்தின் சிதார்) பதிற்றுப்பத்தில் இடம்பெறும் சொல். சிதார்
என்னும் இசைக்கருவியும் உள்ளது. பிற மொழிகளில் இச்சொல்லைக் காணலாம்.
பதிற்றுப்பத்தை ஆதாரம் காட்ட இயலுமா ?

காயம் பட்டது என்கிறோம்; ‘காயம் கர்னா, காயம் ஹோனா’ என்று ஹிந்தியிலும்
சொல்வர், வேறு பொருளில். ’மால்’ எனும் சொல் குறித்து ஓர் இழையில்
ஆராய்ந்தோம்.

மொழிகளிடையே காணப்படும் ஒலி ஒற்றுமை மட்டுமே காரணம். எல்லா ஒலிகளும்
(வைகரி சப்தம்) கண்டத்திலிருந்தே கிளம்புகின்றன.

‘எல்லையிலாதன *எண்குணம்* ஆனவை எய்திடும் ஆகாதே
இந்து சிகாமணி எங்களை ஆள எழுந்தருளப்பெறிலே’   எனும் திருவாசக வரியில்
'எண்குணம்' காணப்படுகிறது
 
எண்குணம் - இது ​தொடர்பக ஆய்வு ​மேற்கொள்ள ​வேண்டியுள்ளது, எனது இக்கட்டுரைக்கும் எண்குணத்திற்கும் ​தொடர்பு இல்லை

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

kalairajan krishnan

unread,
Jul 16, 2010, 5:32:04 AM7/16/10
to mint...@googlegroups.com
முதல என்பதும் முதற்​றே என்பதும் ​வேறு ​வேறு ​சொற்கள் ​​வேறு​வேறு ​பொருள் ​கொண்டன,
முதல - என்பதற்கு எடுத்துக்காட்டு கூறுகி​றேன்,
​சென்​னை பல்க​லைக்ழகம் முதலான அ​னைத்துப் பல்க​லைக்கழகங்களிலும் இனி​மேல் தமிழில் பட்டமளிப்பு விழா ந​டை​பெறும்,
இதில் ​சென்​னை பல்க​லைக்கழம் - முதலில் ​தோன்றியது என்ற ​பொருளும் அதன் பின் மற்ற பல்க​லைக்கழகங்கள் ​தோன்றின என்ற ​பொருளும், இவ்வாறகத் தமிழகத்தில் உள்ள அ​னைத்துப் பல்க​லைக்கழகங்களும் - என்ற ​பொருளும் உள்ளன,
முதல என்பதற்கு முதலான என்று ​பொருள்
 
முதற்​றே -  ​பாரதியார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா தமிழில் நடை​பெற்றது,  அது முதற்றே தமிழகத்தின் அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் பட்டமளிப்பு விழாக்கள் தமிழில் நடை​பெறுகிறன,
 
என்னுடைய பதில் தங்களது ஐயப்பாட்டைத்  ​தெளிவுபடுத்தும் என்று நம்புகிறேன்,
 
அன்புடன்
கி, காளைராசன்
 
ananda rasa thiruma

unread,
Jul 16, 2010, 6:16:14 AM7/16/10
to mint...@googlegroups.com
திரு காளைராசன்
முதல, முதற்று, ஆதி என்னும் சொற்களின் பொருள் கூறும்போது அதே சொற்களைப் பொருளாகச் சொல்வது அகராதியியல் முறைமை அன்று. அடுத்து இச்சொற்கள் முதல் குறளில் இடம் பெற்றுள்ளன என்பதையும் நினைவூட்டுகிறேன். இப்பொழுது முதற்குறளில் நீங்கள் சொல்லிய முதல, முதற்று என்பதற்கான பொருளைப் பொருத்திக்காட்டினால் தெளிவு பெற எளிதாக இருக்கும். 
அன்புடன்
ஆராதி
2010/7/16 kalairajan krishnan <kalair...@gmail.com>

ananda rasa thiruma

unread,
Jul 16, 2010, 6:16:43 AM7/16/10

Jul 16, 2010, 7:14:47 AM7/16/10
to mint...@googlegroups.com
எந்த நாகராஜர் வினோத்? ;-)

இரா.பா,
சென்னை

2010/7/15 Vinodh Rajan <vinodh...@gmail.com>

--
om_brahmi.JPG

Hari Krishnan

unread,
Jul 16, 2010, 12:38:30 PM7/16/10
to mint...@googlegroups.com

2010/7/16 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>

3) நுண்மாண் நுழைபுலம் மிக்க வள்ளுவர் உருவ வழிபாட்டை ஆதரித்தார் என்பதற்கு தங்களிடம் இக் குறள தவிர வேறு ஆதாரங்கள் உண்டா?

கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

தாள், அடி என்று கால் இருக்கிறது; அதை வணங்கவும் சேரவும் வேண்டுமென்றால், உருவம் இல்லாமல் கால் இருக்குமா?  கால் இல்லாத உருவம்தான் கேள்விப்பட்டிருக்கிறேன்.  பிசாசு என்பார்கள்.  இது உருவம் இல்லாத காலோ?   
--
அன்புடன்,
ஹரிகி.

வினோத் ராஜன்

unread,
Jul 16, 2010, 1:07:18 PM7/16/10
to மின்தமிழ்
> எந்த நாகராஜர் வினோத்? ;-)
>
> இரா.பா,
> சென்னை

பௌத்தம், ஜைனம் மற்றும் வைதீகத்துக்கு பொதுவாக ஒரு நாகராஜர் இருந்தால்
சொல்லுங்கள் ;)

V

On Jul 16, 4:14 pm, Banukumar Rajendran <banukuma...@gmail.com> wrote:
>
> 2010/7/15 Vinodh Rajan <vinodh.vin...@gmail.com>

>  om_brahmi.JPG
> 11KViewDownload

வினோத் ராஜன்

unread,
Jul 16, 2010, 1:40:14 PM7/16/10
to மின்தமிழ்
> திருக்குறள் தமிழில் உள்ளது,  அதனால் பக என்ற ​சொல்லுக்குத் தமிழில் ​பொருள்
> கூறப்பட்டுள்ளது,  அதுவும் மற்றொரு குறளை ​மேற்கோளாகக் ​கொண்டே,  இதை
> விடுத்து நாம் தமிழ்ச் ​சொல்லுக்கு வட​மொழியின் ​பொருளை ஏற்றுக் ​கொள்ள
> ​வேண்டும்,
>

தமிழ்நூலாக இருந்தால் எல்லாம் தமிழ்ச்சொல்லாக இருக்க வேண்டும் என்பது
இல்லையே !

இந்திரனே சாலும் கரி என்றார்.. இந்திரன் என்பது என்ன தமிழ் சொல்லா ??

எந்த மொழி சொல்லானாலும் அதை பிய்த்து பிடுங்கு நம் இஷ்டத்துக்கு நம்
மொழியில் அர்த்தத்தை கொண்டு வருவது சாத்தியமானதே.

editorial என்பதை ஏடிட்டோரியல் என்று எழுத முடியாதா என்ன ?

புத்தன் என்பதை புதியவன் என்ற ரீதியாக பொருள் கொள்ளலாம்,

அருகன் என்பதை அருகியவன் என்ற ரீதியாக கூட பொருள் கொள்ளலாம்..

ஆனால், இவற்றை இப்படியே பொருள் கொள்ள வேண்டுமா என்றால் இல்லை.. அவற்றின்
வடமொழி பொருள்களே முதன்மையே வந்து நிற்கின்றன. தமிழ் பொருளை அதற்கு
தருவது கருத்து திணிப்பு.

நீங்கள் செய்வதும் அது தான்..

//நாம் முதற் திருக்குறளை ஆராய்ந்து ​கொண்டிருக்கிறோம்,

திருவள்ளுவர் பகவனை எழுத்துக்களுக்கு ஆதியானவன் (Authority of Letters)
என்று

குறிப்பிடுகிறார், //

கணபதி வழிபாடு என்பது ஆதிகாலத்தில் தன்னிச்சையான யக்ஷ வழிபாடாக
இருந்திருந்து, பிறகு வைதீகமும் பௌத்தமும் தன்னுள் அவற்றை ஈர்த்தன

விநாயகர் மஹேஸ்வர புத்திரனாக ஏற்றுக்கொள்ளப்பட்டதும் பிற்காலத்திலேயே...

இவை அனைத்துமே வள்ளுவரின் காலத்துக்கு சில நூறாண்டுகளுக்கு
பிற்பட்டு...நிகழ்ந்தவை...

வள்ளுவரின் காலத்தில் விநாயகர் வழிபாடு பெருவழக்காக இருந்ததாக
தெரியவில்லை. (சிறு தெய்வ வழிபாடாக ஆங்காங்க இருந்திருக்கலாம்... )

திருவள்ளுவர் காலத்தில் வைதீக கணபதியின் வழிபாடு தமிழ்நாட்டில்
பெருவழக்காக இருந்ததற்கு ஏதேனும் ஆதாரம் இருந்தால் தாருங்கள்...

//முதன் முதலில் எழுத்துக்களை கண்டுபிடித்து
எழுதிக்காட்டியவர் விநாயகர், //

எகிப்தியர்களையும் அரமேயர்களையும் தான் கேட்க வேண்டும்.,. அவர்கள் கணவில்
விநாயகர் வந்தாரா என.

V

On Jul 16, 11:17 am, kalairajan krishnan <kalairaja...@gmail.com>
wrote:

> On 7/15/10, வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com> wrote:
>
>
>
> > //*பக* என்ற சொல் உள்ளது, பக என்றால் பகுத்தல். பிரித்தல்.
> > பிளவுபடுத்துதல்.
> > துண்டாக்குதல் என்பன பொருளாகும், "*அன்*" என்ற ஆண்பால் பெயர் விகுதி
> > உள்ளது,
> > இதனால் பகவன் என்றால் பகுக்கப்பட்ட ஆண் கடவுள் என்று பொருள்,
> > அப்படியானால் இன்று நாம் வணங்கும் கடவுள்களில் பகுக்கப்பட்ட.
> > பிரிக்கப்பட்ட.
> > பிளவுபடுத்தப்பட்ட. துண்டாடப்பட்ட கடவுள் யார்?//
>
> > ஏன் இப்படி ஒரு விபரீத பொருள் !
>

> ...
>
> read more »

devoo

unread,
Jul 16, 2010, 2:19:48 PM7/16/10
to மின்தமிழ்
>> பகவன் - பகுக்கப்பட்டவன் என்ற ​பொருளிலும் உள்ளன என்று கூறியுள்ளேன்
எனவே ஆதிப்பகவன் "ப்" ​​இலக்கணப்படி தேவையற்றதாகி விடுகிறது, <<

பகலவனைப்போல் பகவன் தமிழ்ச்சொல் என்று வைத்துக்கொள்வோம்;
பகுத்தறிவுப் பகலவன் - இங்கு மட்டும் இலக்கணப்படி “ப்” ஏன்
தேவையாகிறது ?

தேவ்

On Jul 16, 3:57 am, kalairajan krishnan <kalairaja...@gmail.com>
wrote:

> ...
>
> read more »

devoo

unread,
Jul 17, 2010, 2:03:23 AM7/17/10
to மின்தமிழ்
>> அப்படிப் பட்ட ஆதியில் உள்ள இறைவனைதான் ஆதி பகவன் என்றும் <<

’ஆதி பகவன்’ - பண்புத் தொகையாகக் கொண்டாலும் ஆதிப்பகவன் என ஒற்று மிகும்

தேவ்

On Jul 15, 7:37 am, kalairajan krishnan <kalairaja...@gmail.com>
wrote:

> >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,

kalairajan krishnan

unread,
Jul 17, 2010, 2:45:13 AM7/17/10
to mint...@googlegroups.com
கலைவாணி மட்டுமே அருவாய் உள்ளவள்   மற்றைய ​​தெய்வங்களுக்கு உருவம் உண்டு என்றே நினைக்கிறேன் .  இது பற்றிய முழுமையான அறிவு எனக்கு ​வேண்டியுள்ளது,

ananda rasa thiruma

unread,
Jul 17, 2010, 8:09:42 AM7/17/10
to mint...@googlegroups.com

திரு காளை ராசன் தன் கருத்தை வலியுறுத்துவதில் கவனமாக இருக்கிறார். அது இயல்பும்கூட. அவர் கருத்துச் சரியாகவும் இருக்கலாம். ஒரு கருத்தைப் பொது மன்றத்தில் வைத்த பிறகு அதனைப் படிக்கிற அனைவரும் தங்கள் கருத்தைச் சொல்ல அது மாற்றுக் கருத்தாக இருந்தாலும் உரிமை உண்டு . அதற்குப் படைப்பாளி பதில் சொல்லக் கடமைபட்டவர். ஒவ்வொருவரும் தன் கருத்து ஏற்கப்பட வேண்டும் என நினைப்பது நியாயமான உணர்வாக இருப்பினும் சரியான கருத்து அனைவருக்கும் போய்ச் சேரவேண்டும் என்பது அதைவிட முக்கியமானது. அதற்குப் படைப்பாளி உள்ளிட்ட அனைவரின் பங்களிப்பும் தேவை. அப்பொழுதுதான் அறிவுப் பரவல் சரியாக நடக்கும்.

இதே கருத்தை மற்றொரு இழையிலும் அவர் தந்துள்ளார். அதற்கான காரணம் தெரியவில்லை.

அன்புடன்

ஆராதி

2010/7/17 kalairajan krishnan <kalair...@gmail.com>

Mani Manivannan

unread,
Jul 17, 2010, 3:16:07 PM7/17/10
to மின்தமிழ்
 
On Jul 16, 9:38 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
 
> தாள், அடி என்று கால் இருக்கிறது; அதை வணங்கவும் சேரவும் வேண்டுமென்றால்,
> உருவம் இல்லாமல் கால் இருக்குமா?  கால் இல்லாத உருவம்தான்
> கேள்விப்பட்டிருக்கிறேன்.  பிசாசு என்பார்கள்.  இது உருவம் இல்லாத காலோ?
 
உருவம் இல்லாத கால் என்றவுடன் நினைவுக்கு வருகிறது.  பல இடங்களில் புத்தரது (அல்லது அருகரது) பாதங்களை மட்டும் பதித்து வைத்து வழிபடுவார்கள். மயிலாப்பூரில் உள்ள வள்ளுவர் கோவிலிலும் அவ்வாறு உள்ள பாதச் சந்நிதி உள்ளது.  வள்ளுவர் பிறந்த இடம் என்று எழுதி வைத்து, இருபதாம் நூற்றாண்டின் அலங்கோல வண்ணச் சிலைகள் மூன்றை வைத்து, வள்ளுவக் குழந்தை, அவரது முனிவர் தந்தை “பகவன்” அவரது தாய் “ஆதி” என்று வணங்குகிறார்கள்.  அந்தக் கோவில் படம் இதோ.
 
இதே போலப் பல இடங்களில் பழமையான புத்த பாதங்களைப் பார்த்திருக்கிறேன்.  சில இடங்களில் அவற்றை ஆதாம் கோவில் என்றும் ஏசு பாதங்கள் என்றும் வழிபட்டார்கள்.  சிறு பிள்ளையாக இருக்கும்போது ஈரோடு மாவட்டத்தில் கொமாரபாளையத்தில் ஒரு குன்றில் இது போன்ற பாதங்களை ஏசு பாதம் என்று வழிபட்டவர்களோடு சேர்ந்து நானும் கற்பூரம் கொளுத்தி வணங்கி வந்திருக்கிறேன்.  அது இன்னும் இருக்கிறதா என்று போய்ப் பார்க்க வேண்டும்.
 
அன்புடன்,
 
மணி மு. மணிவண்ணன்
சென்னை, தமிழ்நாடு

vaLLuvar Koil - Mani.JPG

Innamburan Innamburan

unread,
Jul 17, 2010, 7:53:06 PM7/17/10
to mint...@googlegroups.com
வைணவர் சம்பிரதாயத்தில், சடாரி சாதிப்பதே, ஒஎருமாளின் தாள் வணங்குவதே.
இன்னம்பூரான்

2010/7/18 Mani Manivannan <mmani...@gmail.com>

kalairajan krishnan

unread,
Jul 19, 2010, 8:17:43 AM7/19/10
to mint...@googlegroups.com

On 7/17/10, ananda rasa thiruma <aara...@gmail.com> wrote:

திரு காளை ராசன் தன் கருத்தை வலியுறுத்துவதில் கவனமாக இருக்கிறார். அது இயல்பும்கூட. அவர் கருத்துச் சரியாகவும் இருக்கலாம். ஒரு கருத்தைப் பொது மன்றத்தில் வைத்த பிறகு அதனைப் படிக்கிற அனைவரும் தங்கள் கருத்தைச் சொல்ல அது மாற்றுக் கருத்தாக இருந்தாலும் உரிமை உண்டு . அதற்குப் படைப்பாளி பதில் சொல்லக் கடமைபட்டவர்.

மதிப்பிற்குரிய ஆராதி மற்றும் அனைவருக்கும்
வணக்கம்,
தங்களது கூற்று முற்றிலும் உண்மையே
பல்கலைக்கழகத்தில் எனது கட்டுரையை ​வெளியிட்டது அரங்கில் ஆடியது ​போன்றது
இணையத்தில் ​வெளியிட்டது அம்பலத்தில் ஆடுவது ​போன்றது,
 
எனவே அனைவரது ஐயப்பாடுகளுக்கும் பதில் ​சொல்ல ​வேண்டிய எனது கடமையே,
 
தொடங்கியவர்களே முடித்தும் ​வைக்க ​வேண்டும்
எனவே நான் ​தொடங்கிய இடத்திற்கே வருகிறேன்
முடிவைப் பார்ப்போம்
 
ஆதி, பகவன், உலகு என்ற ​சொற்கள் தமிழ்ச் ​சொற்கள் அல்ல என்று கூறப்பட்டதன் அடிப்படையில் எனது கட்டுரையை ​வெளியிட்டேன்,
இப்போதும் நான் எனது கட்டுரையில் கூறப்பட்டுள்ள முதற்குறளை மட்டுமே விவாதிக்க விரும்புகிறேன்.  எனவே அனைவரும் எனது விளக்கத்தை அவசியம்  அன்புடன் படிக்கவும் ​வேண்டுகிறேன்,  முழுவதும் படித்தவுடன் தங்களது கருத்துக்களை கூறவும் ​வேண்டுகிறேன்,
 
முதற் குறள் - ​சொற் ​பொருள் விளக்கம்
அகர முதல - அகரம் முதலான
எழுத்​தெல்லம் - எழுத்துக்கள் எல்லாம்
ஆதி - Authority (இதைத் தவிர ​வேறு ​சமமான ​சொல் எனக்குத் ​தெரியவில்லை. என்னுடைய மூலக் கட்டுரையை அன்புடன் பார்க்கவும்) குறள் - 543
பகவன் - பகுக்கப்பட்டவன் (குறள் - 187, 889)
முதற்றே உலகு - முதன்மையாகக் ​கொண்ட உலகு
 
பொருள் - பகுக்கப்பட்டவனை (கடவுளை?) முதன்மையாகக் ​கொண்ட உலகில் அகரம் முதலான எழுத்துக்களே Authorityஆகும், 
(The software containg the letters (அ and other டetters) are the authorities of this world which lead by the god who is being bisectored.  எனக்குத் ​தெரிந்த ஆங்கிலத்தில் இதை ​மொழி​பெயர்த்துள்ளேன்)
 
எனது கட்டு​ரையின் வழியாக ஆதி - பகவன் என்ற சொற்கள் தூய தனித் தமிழ்ச் ​சொற்கள் என்பதை நிரூபிக்கிறேன்,
 
​மேலும் முதற்குறளில் கூறப்பட்டுள்ள பகவன் என்ற கடவுள் - தற்போது நாம் வணங்கி வரும் விநாயகனின் பண்பு நலன்களை ஒத்தவராக உள்ளார் என்றும் கூறுகிறேன்,
 
மேற்கண்ட எனது கூற்றிற்கு இதுவரை யாரும் மறுப்புக் கூறவில்லை
ஆனால்
மற்றையோர் கூற்றுகளுக்கு மறுப்பு உள்ளன,
 
இருப்பினும் இப்போதும் கூறுகிறேன்
நான் எனது கட்டுரையில் கூறியதைத் தர்க்க ரீதியாக மறுத்தால் நான் பதில் ​சொல்லக் கடமைப் பட்டுள்ளேன் - நிச்சயம் பதில் ​சொல்வேன்
அன்புடன்
 
கி, காளைராசன்

ஒவ்வொருவரும் தன் கருத்து ஏற்கப்பட வேண்டும் என நினைப்பது நியாயமான உணர்வாக இருப்பினும் சரியான கருத்து அனைவருக்கும் போய்ச் சேரவேண்டும் என்பது அதைவிட முக்கியமானது. அதற்குப் படைப்பாளி உள்ளிட்ட அனைவரின் பங்களிப்பும் தேவை. அப்பொழுதுதான் அறிவுப் பரவல் சரியாக நடக்கும்.

Tthamizth Tthenee

unread,
Jul 19, 2010, 8:25:39 AM7/19/10
to mint...@googlegroups.com
திருப்பதிக்கு சென்று மலை மேலே  கல்யாணவெங்கடேசர் ஆலயத்திற்கு செல்லும் வழியில் இன்னும் சற்று மேலே சென்றால்  மலையின் விளிம்பில் ஒரு மண்டபம் உள்ளது
அந்த மண்டபத்தில் இரு பாதம் மட்டுமே  இருக்கிறது
அந்தப் பாதங்களை  ஸ்ரீமன் நாராயணனின்  பாதங்கள் என்று கூறுகின்றனர்
நின்ற திருவடிகள்
 
அங்கிருந்து பார்த்தால் திருப்பதி  வெங்கடாசலபதி ஆலையம்  மேல் கோபுர தளம் தெரியும்
 
அன்புடன்’
தமிழ்த்தேனீ

19-7-10 அன்று, kalairajan krishnan <kalair...@gmail.com> எழுதினார்:

--
மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net

Nagarajan Vadivel

unread,
Jul 19, 2010, 8:35:18 AM7/19/10
to mint...@googlegroups.com
திரு.காளை ராசன் அவைகளுக்கு
ஒரு கருத்தை ஆய்வுப் பூர்வமாக விளக்கும்போது அந்த் இலக்கிய காலத்துக்கு முற்பட்ட ஆதாரங்க்ளின் அடிப்படையில் அமைந்த்துதான் ஆராய்ச்சி நெறிமுறை.
விநாயகர் தமிழகத்துக்கு வாதாபியில் இருந்து வந்ததே பல்லவ காலத்தில் என்று ஆதாரக் குறிப்புகள் உண்டு.  எழுத்துக்கான கடவுள் கனபதி, யானை முகத்தான் என்று பொதுக் கருத்துக்கள் உண்டு. திருவள்ளுவர் கூறிய ஆதி பகவன் கனங்களுக்கு அதிபதியான கனபதி என்று நிறுவ நீங்கள் திருவள்ளுவருக்கு முந்தைய ஆதாரங்களைக் காட்டவேண்டும்.
ந்ன்றி
பேரா.நாகராசன்

2010/7/19 kalairajan krishnan <kalair...@gmail.com>

--
visit : www.elearning.edu www.radiusconsultancy.com www.elearninglive.tv

வி. சு.

unread,
Jul 19, 2010, 9:07:05 AM7/19/10
to மின்தமிழ்
ஆதி பகவன்

இதில் பகவன் பக்கம் நான் போகப் போவதில்லை. "ஆதி"யை மட்டும் எடுத்துக்
கொள்கிறேன்.

முதலிலேயே சொல்லி விடுகிறேன். இது நகைச்சுவக்காக எழுதப்படும் பதில்
இல்லை.

ஆதி என்ற சொல் முதல், பழைய என்ற பொருளில் பயன் படுத்துகிறோம். முதல் /
பழைய என்று சொல்வதிலிருந்து, இப்போதிருக்கும் காலத்திலிருந்து, இதன்
சேய்மையை (தொலைவு) நாம் உணரலாம். இதிலிருந்து "ஆதி" என்ற சொல் 'அ' என்ற
சேய்மைச் சுட்டிலிருந்து வந்ததாகக் கொள்ளலாம்.

இதையே நீட்டினால் (extrapolation), "இ" என்ற அண்மைச் சுட்டிலிருந்து
"ஈதில்" (recently) என்ற சொல்லைத் தருவிக்கலாம்.

முதல் / பழைய பகவன் என்று சொல்வதிலிருந்து, இந்த "ஆதி" பகவனைத் தவிர்த்த,
"ஆதி" பகவனுக்கு பிற்பட்ட / புதிய பகவன்கள் பலர் வழக்கில் இருந்திருக்கக்
கூடும் எனக் கொள்ளலாம்.

kalairajan krishnan

unread,
Jul 19, 2010, 8:45:32 AM7/19/10
to mint...@googlegroups.com, aara...@gmail.com
On 7/19/10, kalairajan krishnan <kalair...@gmail.com> wrote:

On 7/17/10, ananda rasa thiruma <aara...@gmail.com> wrote:

திரு காளை ராசன் தன் கருத்தை வலியுறுத்துவதில் கவனமாக இருக்கிறார். அது இயல்பும்கூட. அவர் கருத்துச் சரியாகவும் இருக்கலாம். ஒரு கருத்தைப் பொது மன்றத்தில் வைத்த பிறகு அதனைப் படிக்கிற அனைவரும் தங்கள் கருத்தைச் சொல்ல அது மாற்றுக் கருத்தாக இருந்தாலும் உரிமை உண்டு . அதற்குப் படைப்பாளி பதில் சொல்லக் கடமைபட்டவர்.

இதே கருத்தை மற்றொரு இழையிலும் அவர் தந்துள்ளார். அதற்கான காரணம் தெரியவில்லை.அன்புடன்

ஆராதி

மதிப்பிற்கு உரிய ஆராதி அவர்களுக்கு
வணக்கம்
எனது முதல் கட்டுரை முதற்குறள் பற்றியது
இரண்டாவது விநாயகரின் புராணம் பற்றியது
 
இவற்றில் பொதுவானது - எழுத்துக்களுக்கு ஆதியானவர் (Authority) விநாயகர் என்பதும்
பகுக்கப்பட்ட - பகவன் - விநாயகர் என்பதுமே ஆகும்
 
எனவே எனது இரண்டாவது கட்டுரையை அன்புடன் வாசித்துத் தங்களது கருத்துக்களை கூற ​வேண்டுகிறேன்,

kalairajan krishnan

unread,
Jul 19, 2010, 9:07:54 AM7/19/10
to mint...@googlegroups.com
On 7/19/10, Nagarajan Vadivel <radius.co...@gmail.com> wrote:
திரு.காளை ராசன் அவைகளுக்கு
ஒரு கருத்தை ஆய்வுப் பூர்வமாக விளக்கும்போது அந்த் இலக்கிய காலத்துக்கு முற்பட்ட ஆதாரங்க்ளின் அடிப்படையில் அமைந்த்துதான் ஆராய்ச்சி நெறிமுறை.
 
ஐயா, வணக்கம்
நான் எனது கருத்திற்குத் திருக்குறளையே ஆதாரமாக அடிப்படையாகக் ​கொண்டுள்ளேன், அதனை அதனால் ஆராய்ந்துள்ளேன், 

விநாயகர் தமிழகத்துக்கு வாதாபியில் இருந்து வந்ததே பல்லவ காலத்தில் என்று ஆதாரக் குறிப்புகள் உண்டு.  எழுத்துக்கான கடவுள் கனபதி, யானை முகத்தான் என்று பொதுக் கருத்துக்கள் உண்டு. திருவள்ளுவர் கூறிய ஆதி பகவன் கனங்களுக்கு அதிபதியான கனபதி என்று நிறுவ நீங்கள் திருவள்ளுவருக்கு முந்தைய ஆதாரங்களைக் காட்டவேண்டும்.
 
தங்களது இக்கருத்திற்கு எனது கட்டுரையிலேயே பதில் உள்ளது,
 
எனது கூற்று - முதற்குறளில் கூறப்பட்டுள்ள பண்பு நலன்கள் அனைத்தும் விநாயகருக்கே இன்று ​பொருந்தி வருகின்றன என்பதாகும்,
மற்றையபடி  எழுத்துத் ​தோன்றிய காலத்தே விநாயகர் இருந்துள்ளார்,
எனவே விநாயகர் பல்லவர் காலத்தவர் என்ற கூற்று எனக்குத் தவறாகத் ​தோன்றுகிறது,
 
நான் கூறும் விநாயகர் எழுத்துக்களைத்​தோற்றுவித்தவர் - எனவே விநாயகர் எப்போது​தோன்றினார் என்று அறிய எழுத்துக்கள் எப்போது ​தோற்றுவிக்கப்பட்டன என அறிய ​வேண்டியுள்ளது,  அது நிச்சயமாகத் திருவள்ளுவர் காலத்திற்கு முற்பட்டதே
 
வாதாபி ​கொண்டான் விநாயகரைத் தூக்கி வந்தான் என்பதால் தமிழர்கள் அதற்கு முன் விநாயகரை அறிந்திருக்க வில்லை என்பது ​பொருளாகாது, 
 
அன்புடன்
கி. காளைராசன்

kalairajan krishnan

unread,
Jul 19, 2010, 9:12:36 AM7/19/10
to mint...@googlegroups.com
வணக்கம்
ஐயா குறள் 543ஐ பார்க்கவும்
ஆதில் கூறப்பட்டுள்ள ஆதி என்ற ​சொல்லிற்கு என்ன ​பொருள்?
அதே ​பொருள் தான்
முதற் குறளில் உள்ள ஆதி என்ற ​சொல்லிற்கும்
இதுவே ஏற்புடையதாகும் என்று கருதுகிறேன்,
 
அன்புடன்
கி. காளைராசன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Nagarajan Vadivel

unread,
Jul 19, 2010, 10:17:35 AM7/19/10
to mint...@googlegroups.com
அன்புடையீர்,
ஒரு நூலின் கருத்தை ஆய்வு செய்யும்போது அந்நூலையே அஹாரம் காட்டுவது Internal criticism எனப்படும்.  ஆதி என்பதும் பகவன் என்பதும் எங்கெங்கு அந்நூலில் பயன்படுத்தப் பட்டது என்பதை ஆய்வது ஒரு வகை ஆய்வு.  அவ்வாறு செய்து எதேனும் ஆதாரங்கல் திரட்டியுள்ளீர்களா?
பழந்தமிழர்களின் இறை வழிபாடு animism என்று கூறப்படும் இயற்கை மற்றும் முன்னோர் வழிபாடு என்ற கருத்து உண்டு. 
சம காலத்திலோ அல்லது அதற்கு முன்னரோ எழுதப்பட்ட ஆதாரங்கல் ஏதேனும் உண்டா?

Banukumar Rajendran

unread,
Jul 20, 2010, 12:57:07 AM7/20/10
to mint...@googlegroups.com
//முதல் / பழைய பகவன் என்று சொல்வதிலிருந்து, இந்த "ஆதி" பகவனைத் தவிர்த்த,

"ஆதி" பகவனுக்கு பிற்பட்ட / புதிய பகவன்கள் பலர் வழக்கில் இருந்திருக்கக்
கூடும் எனக் கொள்ளலாம்.//

நல்ல புரிதல் ஐயா!

மஞ்சை வசந்தனின் கட்டுரை!

http://banukumar_r.blogspot.com/2008/03/blog-post.html

இரா.பா,

2010/7/19 வி. சு. <vijayakuma...@gmail.com>

--

N. Kannan

unread,
Jul 20, 2010, 6:59:26 PM7/20/10
to mint...@googlegroups.com
இறையவர் பலர் தோன்றியபின் ஆதி பகவனைப் பற்றிப் பேச எழுந்தவையே பக்தி
இலக்கியங்கள். இறை ஒன்றே என்று சொல்ல வரும் போது நம்மாழ்வார்
`ஆதிப்பிரான்` என்று திருமாலைச் செப்புகிறார். இதே பாட்டையில்
சைவக்குரவர்களும், திருமூலரும் செல்கின்றனர். எனவே, ஆதிப்பிரான் யார்
என்ற கேள்வி தேங்கி நிற்கிறது. நம் திவாகரிடம் கேட்டால் `அவன் அவனே!`
என்று நாவலே எழுதிவிடுவார் :-)) அவன் யார்?

க.>

பிகு: சம காலத்திலும் பகவான் என்ற சொல்லை இறைவனுக்கும், இறை ஒத்த
மனிதருக்கும் பயன்படுத்துவது காணக்கிடைக்கிறது. உம். பகவான்
ஸ்ரீகிருஷ்ணன், பகவான் ரஜ்னேஷ்

2010/7/20 Banukumar Rajendran <banuk...@gmail.com>:

> //முதல் / பழைய பகவன் என்று சொல்வதிலிருந்து, இந்த "ஆதி" பகவனைத் தவிர்த்த,
> "ஆதி" பகவனுக்கு பிற்பட்ட / புதிய பகவன்கள் பலர் வழக்கில் இருந்திருக்கக்
> கூடும் எனக் கொள்ளலாம்.//
>

http://banukumar_r.blogspot.com/2008/03/blog-post.html

Innamburan Innamburan

unread,
Jul 20, 2010, 7:23:48 PM7/20/10
to mint...@googlegroups.com
'...தீயினும்தெறல்...அனைத்தும் நீ, அனைத்தும் உட்பொருளும் நீ...' என்று
பரிபாடலில், அந்த சதுர்த்தனை வருணிக்கிறார், கடுவன் இளம்வெயின்னார்.

இன்னம்பூரான்

2010/7/21 N. Kannan <navan...@gmail.com>:

N. Kannan

unread,
Jul 20, 2010, 8:33:27 PM7/20/10
to mint...@googlegroups.com
அடடா! விட மாட்டீர்கள் போல!! அந்த ஆதிபகவன் யார் என்று அறிந்து கொள்ளாமல் ;-)

http://thirumozi.blogspot.com/2007/08/073.html
http://thirumozi.blogspot.com/2007/08/073.html

க.>

2010/7/21 Innamburan Innamburan <innam...@googlemail.com>:

Banukumar Rajendran

unread,
Jul 21, 2010, 2:06:28 AM7/21/10
to mint...@googlegroups.com
ஆதிபகவன் யார்?
                                                                              - மே.வி.வேணுகோபாலப் பிள்ளை.

(தமிழ் அன்றும் இன்றும் - என்ற நூலிலிருந்து எடுத்துத் தரப்படுகிறது)

ஒப்புயர்வற்ற அறனூலெனப்படும் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரைப்பற்றிய
வரலாறும் செவி வழிச் செய்திகளிற் சிக்குண்டிருப்பதை நாம் காண்கிறோம்.

'அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு'

என்னும் முதற்குறளின் 'ஆதிபகவன்' என்னும் சொற்றொடரைக் கொண்டு கட்டப்பட்ட
கதை, நகைச்சுவைக்கு நல்லதோர் எடுத்துக் காட்டாகும். 'ஆதி' என்பது இழிகுலப்
பெண்ணின் பெயரென்றும், 'பகவன்' என்பது அந்தணனைக் குறிக்கும் பெயரென்றும்,
'அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம்' ஆதலின் அவர்களையே தெய்வமாகக்
கொண்டு திருவள்ளுவர் இக்கடவுள் வாழ்த்தைக் கூறினார் என்றும் புனைந்துரைக்கிறது
கதை. 'ஆதி பகவன்' என்பது ஆண்பாற் பெயரென்பதைத் திருவள்ளுவர் நன்கு
அறிவாரல்லரோ?

' உயர்திணை உம்மைத் தொகைபலர் ஈறே',

என்னும் இலக்கணம் அறியாதவரா திருவள்ளுவர்? தம் பெற்றோர் பெயரைக் குறிப்பது
திருவள்ளுவர் கருத்தாயின், 'ஆதிபகவர்'என்றல்லவா குறள் செய்திருக்க வேண்டும்?
'ஆதிபகவன்' என்பது பெற்றொரைச் சுட்டுவதாயின், வள்ளுவரின் பெற்றொரை உலகம்
எப்படித் தனக்கு முதலாகக் கொள்ள இயலும்? உலகத்திற்கு நூலளிக்க வந்த வள்ளுவர்,
தம் தாய் தந்தையரையா முதற்கண் உலகத்திற்கு அறிமுகம் செய்வார்? அதன் மூலம்
தாம் இழிகுல மங்கைக்கு மைந்தர் எனக் கூறிக் கொள்ளவா முந்துவார்? வள்ளுவரின்
தெள்ளறிவிற்குச் சிறிதும் பொருந்தாத இக்கருத்தை அவர் மீது சுமத்துவதைக் காட்டிலும்,
அடர்ப்பழியொன்று இருக்க இயலுமா? இத்தனை இடர்பாடுகளும், 'ஆதிபகவன்' என்னும்
ஆதி தீர்த்தங்கராகிய சமணரைக் குறிப்பதை மறைக்க வகுத்தவகையால் ஏற்பட்டனவே
எனக் கூறலாம்.

--------------------------------------------------------------
--------------------------------------------------------------

2010/7/21 N. Kannan <navan...@gmail.com>

செல்வன்

unread,
Jul 21, 2010, 3:24:55 AM7/21/10
to mint...@googlegroups.com
மடிஇலா மன்னவன் எய்தும் அடிஅளந்தான்
தாஅயது எல்லாம் ஒருங்கு.

அடி அளந்தான் யார்?

செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து.

அவியுணவை உண்ணுபவர்கள் யார்?
--
செல்வன்

www.holyox.blogspot.com

"The United States did not invent slavery. It invented freedom.Someone name me another country on earth that fought a civil war to make men equal"- Rush Limbaugh

Raja sankar

unread,
Jul 21, 2010, 7:32:30 AM7/21/10
to mint...@googlegroups.com
திருக்குறள் இந்து நூல் அல்ல என்ற முடிவுக்கு வந்த பின் அதற்கான ஆதாரங்களை கட்டமைத்தால் இப்படித்தான் இருக்கும். 

எவ்வளவு தான் எடுத்துக்காட்டுகள் தந்தாலும் அது ஏற்க படமாட்டாது.

ராஜசங்கர்

2010/7/21 செல்வன் <hol...@gmail.com>

வி. சு.

unread,
Jul 21, 2010, 9:37:33 AM7/21/10
to மின்தமிழ்
On Jul 19, 6:12 pm, kalairajan krishnan <kalairaja...@gmail.com>
wrote:
> On 7/19/10, வி. சு. <vijayakumar.subbu...@gmail.com> wrote:
...

> > ஆதி பகவன்
>
> > இதில் பகவன் பக்கம் நான் போகப் போவதில்லை. "ஆதி"யை மட்டும் எடுத்துக்
> > கொள்கிறேன்.
>
> > முதலிலேயே சொல்லி விடுகிறேன். இது நகைச்சுவக்காக எழுதப்படும் பதில்
> > இல்லை.
>
> > ஆதி என்ற சொல் முதல், பழைய என்ற பொருளில் பயன் படுத்துகிறோம். முதல் /
> > பழைய என்று சொல்வதிலிருந்து, இப்போதிருக்கும் காலத்திலிருந்து, இதன்
> > சேய்மையை (தொலைவு) நாம் உணரலாம். இதிலிருந்து "ஆதி" என்ற சொல் 'அ' என்ற
> > சேய்மைச் சுட்டிலிருந்து வந்ததாகக் கொள்ளலாம்.
>
> > இதையே நீட்டினால் (extrapolation), "இ" என்ற அண்மைச் சுட்டிலிருந்து
> > "ஈதில்" (recently) என்ற சொல்லைத் தருவிக்கலாம்.
>
> > முதல் / பழைய பகவன் என்று சொல்வதிலிருந்து, இந்த "ஆதி" பகவனைத் தவிர்த்த,
> > "ஆதி" பகவனுக்கு பிற்பட்ட / புதிய பகவன்கள் பலர் வழக்கில் இருந்திருக்கக்
> > கூடும் எனக் கொள்ளலாம்.
>
> வணக்கம்
> *ஐயா குறள் 543ஐ பார்க்கவும்*
> ஆதில் கூறப்பட்டுள்ள *ஆதி *என்ற ​சொல்லிற்கு என்ன ​பொருள்?

> அதே ​பொருள் தான்
> முதற் குறளில் உள்ள *ஆதி* என்ற ​சொல்லிற்கும்

> இதுவே ஏற்புடையதாகும் என்று கருதுகிறேன்,
...

ஆதி என்பதன் பொருளை நான் கேட்கவில்லை.

ஆதி என்பதற்கு நான் ஒரு பொருளைக் கூறியிருக்கிறேன். "ஆதி" என்ற
சொல்லிற்கும், 'அ' என்ற சுட்டெழுத்திற்கும் உள்ள தொடர்பை
சொல்லியிருக்கிறேன்.

தாங்கள் இதற்கு உடன்பட்டால், இது தொடர்பாக ஏதாவது சொல்லலாம்;
இல்லையெனில், மறுத்து ஏதாவது சொல்லலாம்.

இரண்டுமில்லாமல், 543 என வேறொரு குறளைக் காட்டினால் எப்படி எடுத்துக்
கொள்வது என்று தெரியவில்லை. :-(

Banukumar Rajendran

unread,
Jul 21, 2010, 1:26:05 PM7/21/10
to mint...@googlegroups.com
திருக்குறளாசிரியர் சமயம்
- தமிழ்ப் பண்டிதர். டீ.ஆர். ஸ்ரீநிவாச சாரியார்

தமிழ் இலக்கியத்தில் சிறப்புற்றோங்கி வளரும் குறள் என்ற நீதி நூலைத்
தமிழ் நாட்டில் அறியாதவர் அறியாதவரே ஆவர். இந்நூல் அறம் பொருள் இன்பம்
என்னும் விஷயங்களின் பாகுபாட்டையும் அதனால் அடையும் பயன்களையும்
தெளிவாய்க் கூறுகின்றது. ஆரியருக்கு மனுதர்ம சாஸ்திரம் சுக்கிர நீதி
முதலிய நீதி நூல்கள் எவ்வாறு முக்கியமானவைகளோ, தமிழருக்கு இந்நூலும்
அப்பேர்ப்பட்டதே. இத்தகைய சிறப்பு வாய்ந்த நூலை யியற்றியவர் யார்? அவர்
எக்காலத்தவர்? அவர் சமயம் யாது? என்பவைகளைப் பற்றிச் சுருக்கமாய்
ஆராய்வோம்.
குறளின் நூலாசிரியர் திருவள்ளுவர் என்பர். அவர் கடைச் சங்க காலத்திற்கு
முன்னே இருந்தவர் ஆவர். இக்கடைச் சங்கமோ ஒன்றாவது இரண்டாவது நூற்றாண்டில்
இருந்ததாகத் தமிழ் ஆராய்ச்சி வல்லவர்கள் தக்க நியாயங்களைக் கொண்டு
ஸ்திரப்படுத்தி யிருக்கின்றார்கள். ஆகையால் வள்ளுவர் காலமும் 1, 2
நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே என்று ஏற்படுகின்றது. ஏனெனில் சங்கப்
புலவர்களாகிய நக்கீரர், நல்லந்துவனார், கபிலர், பாணர் முதலானோர்
இத்திருக்குறளின் கருத்திக்களையும் அடிகளையும், அடிகளின் தொடர்களையும்
கையாண்டு இருக்கிறார்கள். இம்மட்டோ! சைவ சமயாசாரியர்களான அப்பர்,
ஞானசம்பந்தர், சுந்தரர் முதலானவர்களும், வைணவ சித்தாந்த தேசிகர்களாம்
நம்மாழ்வார் முதலிய ஞானாசரியர்களும் குறட்பாக்களை
யெடுத்தாண்டிருக்கிறார்கள். இனி அவர் சமயத்தைப் பற்றி ஆராய்வோம்.

இவர் இன்ன சமயத்தினர் என்று துணிந்து கூறுவதற்குத் தகுந்த சான்று இல்லை
என்பார் ஒரு சாரார்; மற்றொரு சாரார் இவரைச் சைவர் என்பர். அவர்கள்
அப்படிக் கூறுவதற்குக் ‘கடவுள் வாழ்த்தில்’ குறளாசிரியர் “எண்குணத்தான்”
என்ற சொற்றொடரை உபயோகப்படுத்தியிருப்பதாலும், அச்சொற்றோடர்
சிவபிரானுக்குத்தான் பொருந்தியுள்ளது என்றும் அவர்கள் கொண்ட கொள்கைக்கு
காரணங் காட்டுவர். மற்றும் அவர்கள் கூறும் மற்றொரு காரணம் ஒளவை அவர்
தமக்கையாம்; அவள் சிவபக்தனாம். ஆகையால் இவரும் சிவபக்தராய்த்தான்
இருந்திருப்பாராம். ஏதொ ஒரு தனிப்பாடலில் “பூவில் அயனும் புரந்தானும்”
என்று கூறிச் சிவனைப் புகழ்ந்திருக்கிறாராம். அதுவும் அவரது சைவ
சமயத்தைத் தெளிவாய்க் கூறுகின்றது என்றும் உரைப்பர். இத்துடன் நில்லாமல்
“நாயனார்” என்ற பட்டம் சிவபக்தருக்குத்தான் உரியது என்றும் இவரும்
அப்பட்டத்தை வகித்ததால் இவர் சைவ சமயியாய்த்தான்
இருக்கவேண்டுமென்றுங்கூறி வாதிடுவர்.
இம்மூன்று கொள்கைகளும் நியாய வாயிலாக யோசிக்குமிடத்து ஒன்றும் நிலைக்கு
நில்லா. “எண் குணத்தான்” என்ற சொற்றொடர் சிவனை மாத்திரமா குறிக்கின்றது?
விஷ்ணுவையும் “எண் குணத்தான்” என்று திருச்சந்த விருத்தம் முதலிய வைணவ
நூல்கள் கதறுகின்றனவே! அருகரையும் “எண் குணத்தான்” என்று அருகநூல்
சாதிக்கின்றது. ஆனால் கடவுள் வாழ்த்தில் “எண் குணத்தான்” என்றும்,
“மலர்மிசை யேகினான்’ என்றும், “பொறிவாயிலைந் தவித்தான்” என்றும், “பகவன்
வேண்டுதல் வேண்டாமை இலான்” என்றும், “அறவாழி அந்தணன்” என்றும் வரும்
சொல்லையும் சொற்றொடர்களையும் உபயோகப்படுத்துவதாலும் அவைகள் அருகருக்கே
உரியவை யென்று நிகண்டு முதலிய நூல்கள் சான்று கூறுவதாலும் “எண்
குணத்தான்” என்று குறளில் வழங்கியிருப்பது அருகரைக் குறித்தே அல்லாமல்
சிவனைக் குறித்து அல்ல. “ஒளவையார் சைவர், அவர் தம்பியாகிய இவரும் சைவர்”
என்பதும், “பூவில் அயனும்” என்ற ஒருதனிப்பாட்டையும் இதற்கு அனுகுணமான ஓர்
ஆதாரமற்ற கதையையும் மேற்கோளாகக் காட்டுவதும் ஒப்புக்கொள்ளத்தக்கன அல்ல.
ஏனெனில்

குறளில் எங்கேயாவது சிவனையாவது சைவ வழிப்பாட்டைப் பற்றியாவது
கூறியிருக்கின்றாரா? மருந்துக்கும் காணோமே!
இதுபோக வைணவர் இவரை வைணவர் என்று கூறுவர். இதற்குக் காரணம், இவர் குறளில்
“தாமரைக் கண்ணான் உலகு” என்று உபயோகப்படுத்தியிருப்பதால் அத்தொடர்
விஷ்ணுவைத்தான் குறிக்குமே யல்லாது, மற்றத்தெய்வத்தைக் குறிக்காது என்ற
பிடிவாதக் கொள்கைதான். “தாமரைக் கண்ணான்” என்ற சொற்றொடருக்கு இந்திரன்
என்ற பொருளிலும், கம்பர் பலதடவையில் உபயோகப்படுத்தி யிருக்கிறார்.
ஆகையால் வைணவர் கூற்று உபயோகமற்ற கூற்றாய் முடிகிறது.
பெளத்தர் என்றாலோ, பெளத்தர்கள் ஜீவனில்லை மறுபிறப்பில்லை என்கிறார்கள்.
கொல்லாமை, புலால் மறுத்தலை இவர்கள் வெறுக்கவில்லை. ஜீவன் உண்டு என்றும்,
மறுபிறப்பு உண்டென்றும், கொல்லாமையையும் புலால் மறுத்தலையும் குறளில்
வற்புறுத்தி யிருக்கிறார். ஆகையால் வள்ளுவர் பெளத்தர் ஆகார்.
ஆனால், இவர் சமணர்தான் என்று சொல்வதற்குத்தக்க நியாயங்கள் உள்ளன. கடவுள்
வாழ்த்தில் பகவன், அறிவன், மலர்மிசை ஏகினான், இறைவன், ஐந்தவித்தான்,
அறவாழி அந்தணன், எண்குணத்தான் என்று அருகக் கடவுளுக்குப் பெயராக வழங்கும்
சொற்களை உபயோகப்படுத்தியிருப்பதும், அருகசரணம், சித்தசரணம், சாது சரணம்,
தர்மசரண்ம் என்ற ஜைன சமயத் துதியாகிய நான்கிற்கும் பதிலாகக் கடவுள்
வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்திக் கூறுதலாலும்
இவர் சமணரே என்க. இவர் அருகனைக் குறிக்கும் சொற்களையே சிலப்பதிகாரம்,
சிந்தாமணி, நிகண்டு முதலியவற்றிலும் கூறிருப்பதும் காண்க:- “அறிவன்,
அறவோன், அறிவரம்பிகந்தோன்”, “செறிவன், சினேந்திரன், சித்தன், பகவன்”,

“இறைவன்”, எண் குணத்தான்” ஐவரை வென்றோன்”, மலர்மிசை நடந்த
மலரடி”—சிலப்பதிகாரம்.” பகை நண் போடிப்பான்” –சிந்தாமணி “அறவாழி அந்தணன்”
–திவாகரம், ஆயினும் சிலர் “உலகியற்றியான்” அந்தணர் நூல் “மறப்பினும்
ஒத்துக் கொள்ளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக்கெடும்” “அறு
தொழிலோர் நூன் மறப்பர்” என்று திருக்குறளில் வழங்கியிருப்பதைக் கொண்டு
சமணக் கொள்கையை மறுக்க எழுவோர் பரிமேலழகர் வைதீக மதக் கொள்கைகளையும்
கதைகளையும் யுக்திக்குத்தகுந்தவாறு புகட்டி வலிந்து பொருள் கொள்வதை
ஆராய்ச்சி செய்யாதவரேயாவர். ஆனால், சமணக் கொள்கைகளையும் கதைகளையும்
ஆதாரமாகக் கொண்டு சொல் கடந்த வழியே பொருள் நோக்கினால் பரிமேலழகரே வலிந்து
பொருள் கொண்டாரென்று தெரியும்.
தொல்காப்பியச் சூத்திரத்தில் “வினையினீங்கிய” என்ற செய்யுளுக்கு
பொருத்தமான பொருள் நோக்கில் வினையில் கொஞ்ச காலம் சம்பந்தப்பட்டிருந்து
பின்பு நீங்கிய அறிவையுடையவன் இறைவனாகும் என்று புலப்படுகிறது. இவ்
வடைமொழிகள் அருகருக்கு பெருந்தி இருப்பதுபோல மற்ற தெய்வங்களுக்குப்
பொருந்த வில்லை. ஜைனர் கொள்கைப் பிரகாரம் அருகர் வினையிலே சிலகாலம்
கிடந்து பிறகு அதனின்று நீங்கி அறிவையடைந்து விளங்கினார் என்றும் மற்ற
தெய்வங்களுக்கு வினையே இல்லையென்றும் புராணங்கள் கூறுகின்றன். ஆகையால்
தொல்காப்பியர் மதமும் ஜைனம் என்றே தெளிவாகின்றது.
-------------------------------------------
-------------------------------------------

Innamburan Innamburan

unread,
Jul 21, 2010, 7:32:25 PM7/21/10
to mint...@googlegroups.com
'...வைணவ நூல்கள் கதறுகின்றனவே!...'
அன்று. அன்று. அவை அருமை சாற்றுகின்றன. 'திருக்குறளாசிரியர் சமயம்
-       தமிழ்ப் பண்டிதர். டீ.ஆர். ஸ்ரீநிவாச சாரியார்' முழு விவரம்
தரவும். திரு. பானுகுமாரும் நானும் ஒரே பேட்டையில் இருக்கிறோம்.
அவருக்கும் மின்னாக்கத்தில் ஆர்வம் உண்டு. இந்த நூலை மின்னாக்கம்
செய்யவேண்டுமல்லவா!
இன்னம்பூரான்

2010/7/21 Banukumar Rajendran <banuk...@gmail.com>:

kalairajan krishnan

unread,
Jul 22, 2010, 7:13:34 AM7/22/10
to mint...@googlegroups.com
On 7/21/10, செல்வன் <hol...@gmail.com> wrote:
மடிஇலா மன்னவன் எய்தும் அடிஅளந்தான்
தாஅயது எல்லாம் ஒருங்கு.

அடி அளந்தான் யார்?

செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து.

அவியுணவை உண்ணுபவர்கள் யார்?
--
செல்வன்
 
ஐயா வணக்கம்
 
நீங்கள் ​கேட்கும் ​கேள்விக்குத் ​தெளிவான விளக்கம் உள்ளது,
தாங்கள் குறப்பிட்டுள்ள குறளின் ​பொருளை யாரும் இதுவரை மறுத்துள்ளதாக நான் அறியேன்
ஆனால் முதற்குறளுக்கான ​பொருளைத்தான் ஒவ்வொருவரும் ​வெவ்வேறு விதமாகக் கூறுகின்றனர்
அதனால் முதலில் முதற்குறளை ஆராய்வோம்
நான் சிவன் ​கோயிலுக்குச் ​செல்தால் ​சைவன் என்பதா!
நான் ​பெருமால் ​கோயிலுக்குச் ​செல்வதால் ​​வைணவனாக முடியுமா?
​மேற்கு ​நோக்கிக் கும்பிடுவதால் முகம்மது நபியைக் கும்பிடுகிறேன் என்று கூறமுடியுமா?
 
நான் ஒரு மனிதன்
நான் அனைத்துத் ​தெய்வங்களையும் வணங்குபவன்
திருவள்ளுவர் ஏன் அனைத்துத் ​தெய்வங்களையும் வணங்கியவராக இருக்கக் கூடாது?
​மேலும் ஆராய்வோம்
அன்புடன்
கி. காளைராசன்
 
www.holyox.blogspot.com

"The United States did not invent slavery. It invented freedom.Someone name me another country on earth that fought a civil war to make men equal"- Rush Limbaugh

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

kalairajan krishnan

unread,
Jul 22, 2010, 7:22:55 AM7/22/10
to mint...@googlegroups.com, kkra...@yahoo.co.in
On 7/19/10, Nagarajan Vadivel <radius.co...@gmail.com> wrote:
அன்புடையீர்,
ஒரு நூலின் கருத்தை ஆய்வு செய்யும்போது அந்நூலையே அஹாரம் காட்டுவது Internal criticism எனப்படும்.  ஆதி என்பதும் பகவன் என்பதும் எங்கெங்கு அந்நூலில் பயன்படுத்தப் பட்டது என்பதை ஆய்வது ஒரு வகை ஆய்வு.  அவ்வாறு செய்து எதேனும் ஆதாரங்கல் திரட்டியுள்ளீர்களா?
 
ஆமாம் ஐயா
அதுதான் எனது கட்டுரை
அதன் அடிப்படையிலேயே எனது விவாதங்களைத் ​தொடர்கிறேன்
தாங்களது பார்வைக்காக அக் கட்டுரையைக் கீழே ​கொடுத்துள்ளேன்
படித்துப் பார்த்து அன்புடன் தங்களது கருத்துக்களையும் கூற ​வேண்டுகிறேன்
அன்புடன்
கி. காளைராசன்

அகர முதல்வன் - ஆதி பகவன்

தெய்வப் புலவராம் திருவள்ளுவர் முதற்குறலில் வணங்கிய ​தெய்வம் எது?  என்பதைக் கண்டறிவதே இக் கட்டுரையின் ​நோக்கம்,
 
இக்கட்டுரை தர்க்கரீதியாக ஆராய்ந்து எழுதப்பட்டுள்ளது,  இதில் மறுப்பதற்கு ஏதும் இல்லை!  இக்கட்டுரை ​தொடர்பான அனைத்து ஐயப்பாடுகளுக்கும் என்னிடம் விடைகள் உள்ளன.  இக்கட்டுரையின் கருத்தை  ஏற்போரும் எதிர்ப்போரும்  திருக்குறள்களையே ​மேற்கோள்களாகக் ​கொண்டால் நன்று,   

ஆதி. பகவன் என்ற சொற்களைச் சிலர்  வடசொற்கள் என்று கூறுகின்றனர், இச் சொற்கள் சிறந்த தமிழ்ச் ​சொற்கள் என்று இக்கட்டுரையிலே விளக்கப்​பெற்ள்ளது,     

பகவன் முதற்றே உலகு

திருச்சிற்றம்பலம்

அருள்மிகு புலிக்கரை ஐயனார்  துணை

ஆனைமுகனே(னோ?) ஆதிபகவன்
நாள் 18-09-2005 (ஆய்வுக் கட்டுரையைப் பல்கலைக்கழகக் கருத்தரங்கில் வாசித்த நாள்) இ​ணையத்தில் ​வெளியிடும் நாள் 15-07-2010,

அகில உலகிலும் வாழும் மனிதர் அனைவரும் பிறப்பால் ஒன்றே ஆவர், ஆயினும் மனிதர்கள். தாம் பிறந்த நாட்டின் பெயராலும். பேசும் மொழியின் பெயராலும். வழிபடும் கடவுளின் பெயராலும் தமக்குள் பேதம் கண்டுள்ளனர், இவற்றினால் மாறுபட்ட சமூகங்களாக வாழ்கின்றனர், அவற்றுள் மிகவும் தொன்மை மிக்க சமூகத்தினராக இந்தியாவில் இந்துக்கள் வாழ்ந்து வருகின்றனர்,
உலகில் வாழும் மற்றபிற சமூகத்தினர்(மதத்தினர்) இறைவனின் தூதுவர்களையோ அல்லது இவ்வுலகில் தோன்றி மறைந்த மகான்களின் வடிவங்களையோ வணங்கி வருகின்றனர், ஆனால் தொன்மை மிகுந்த இந்தியச் சமூகத்தார்கள்(இந்துக்கள்) மட்டும் கடவுள்களின் திருவுருவங்களை நேரடியாக வணங்கி வழிபடுகின்றனர்,

தெ(தொ)ன் தமிழர்
உலகில் லெமூரியாக் கண்டம் அழிவதற்கு முன்னரே இவர்கள் அங்கு சமூக வாழ்க்கை வாழ்ந்திருக்கின்றனர் என்பது அறிவியல் உண்மை, இன்று. இந்தியச் சமுதாயத்தினருள் மிகத் தொல்பழம் சமுதாயமாக தமிழ்ச் சமுதாயம் விளங்குகிறது, தமிழ் மொழியின் மிகத் தொன்மையான நூல்களாகத் தொல்காப்பியமும். திருக்குறளும் மதிக்கப்படுகின்றன, தொல்காப்பியம் இலக்கண நூலாகக் கருதப்படுகின்றது, திருக்குறள் மட்டுமே அனைவராலும் படிக்கப்படுகின்றது,

கற்றதனாலாய பயன்
மனிதனுக்குத் தேவையான அறம். பொருள். காமம் உள்ளிட்ட எல்லாவற்றையும் உள்ளடக்கியது திருக்குறள், இந்நூலை இயற்றிய தெய்வப்புலவர் திருவள்ளுவர் வணங்கிய கடவுள் யார்?
இதைக் கண்டறிந்து. நாமும் அக்கடவுளை வணங்கி வழிபடவேண்டுமல்லவா?
அப்பொழுதுதானே திருக்குறளைக் கற்றதனாலாய பயனைப் பெற முடியும்?

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

என்பது திருக்குறளின் முதற்குறள், இதில் "ஆதிபகவன்" என்று திருவள்ளுவரால் வணங்கப்பட்ட கடவுள் யார்?
ஆதி பகவன் யார் என்று யாராலும் அறுதியிட்டுக் கூற இயலவில்லை! ஒவ்வொரு அறிஞரும் ஒருவாறாகக் கூறுகின்றனர்,
சிலர். திருக்குறள் என்பது உலகப் பொதுமறை நூலாகும். அவரவர் சமயத்தின் மூலக்கடவுளையே ஆதிபகவன் என்று வள்ளுவர் பொதுவாகக் குறிப்பிட்டுள்ளார் என்றும் கூறுகின்றனர்,
ஆதி என்பது தாயாகும். பகவன் என்பது தந்தையாகும், ஆதிபகவன் என்பது தாயையும் தந்தை​யையும் வணங்கி எழுதப்பட்டது என்றும் கூறுகின்றனர்,
பகவன். பகலன். பகலவன். என்ற சொற்கள் எல்லாம் கதிரவனைக் குறிப்பன, இது உலகம் தோன்றுவதற்குக் காரணமான இயற்கையையும். சூரியனையும் வணங்கி எழுதப்பட்ட குறள் என்றும் கூறுகின்றனர்,
ஆதி பகவன் என்பர் அனைத்துக் கடவுளருக்கும் தலைமையான கடவுளின் வழிபாடாகும். அதனால் இது சிவ வழிபாடு என்றும் கூறியுள்ளனர்,
திருக்குறளின் மற்றபிற குறள்களில் உலகுஅளந்தான். திருமகள் போன்ற தெய்வங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி ஆதிபகவன் என்பது ஆதிநாராயணனைக் குறிக்கும் என்றும் கூறியுள்ளனர்,
சிலர் முதற் குறள் உட்பட்ட பலகுறள்களில் வடமொழிச் சொல்லும் பொருளும் உள்ளன எனக் கூறுகின்றனர், இதனால் இக்குறள்கள் திருவள்ளுவரால் இயற்றப்படவில்லை என்றும். பின்னாளில் சேர்க்கப்பட்டன என்றும் கூறுகின்றனர்,
திருவள்ளுவர் வாழ்த்திய கடவுளும். வணங்கிய தெய்வங்களும். வசித்த இடமும். வாழ்ந்த காலமும் அறுதியிட்டுக் கூறமுடியாதபடி மிகவும் தொன்மையாக உள்ளன,
திருக்குறளில் உள்ள ஒவ்வொரு குறளும் இரண்டு அடிகளால் ஆனவை, மேலும் அவற்றில் உள்ள ஒவ்வொரு எழுத்தும். சொல்லும் பொருட் செறிவு மிக்கனவாக உள்ளன, இதனால் படிப்போர் ஒவ்வொருவருக்கும் அவர்கள் நோக்கும் எண்ணத்திற்கு ஏற்றாற்போல் புதிய புதிய கருத்துக்களைத் திருக்குறள் வழங்கி வருகின்றது, இதனால் திருக்குறளுக்கு இன்றும் புதிய உரைவளங்கள் தோன்றிய வண்ணம் உள்ளன,
இருப்பினும் இன்றைய நாளில் மக்களால் வணங்கப்படும் கடவுள்களில் ஏதேனும் ஒரு கடவுள் முதற் குறளுக்குப் பொருத்தமானவராய் இருக்கின்றாரா? என்று காண்போம்,
திருக்குறளோ யானை போன்றது! அதனைக் கற்கும் நாமோ மெய்யறிவுக் குருடர்கள் ஆவோம்! யானை தடவிய குருடர் கதையாக முதற்குறளின் ஒவ்வொரு எழுத்தையும். எழுத்துக்களாலான சொல்லையும். சொற்களாலான பொருளையும் காண்போம், அவ்வாறு கண்டால் நமது அறிவிற்கு ஆனைமுகத்தானே ஆதிபகவனாகத் ​தெரிகின்றார்,

மூல முதல்வன்
ஆதி பகவன் என்ற கடவுளை முதன்முதலாக வணங்கியே தெய்வப்புலவர் திருவள்ளுவர் திருக்குறளை இயற்றியுள்ளார், இதுபோல் இன்று எந்த ஒரு செயலைச் செய்யும் முன்பும் முதன்முதலாக யானை முகம் கொண்ட விநாயகப் பெருமானை வணங்கி வழிபட்டு அதன் பின்னரே நமது வேலைகளைத் துவக்குகிறோம்,
ஆகையால். முதல் வணக்கத்திற்கு உரிய கடவுள் என்ற முறையில் ஆதிபகவனும் ஆனைமுகத்தானும் ஒருவராகின்றனர்,

வித்தகன் விநாயகன்
இரண்டாவதாக "அகர முதல எழுத்துக்களெல்லாம். ஆதி பகவன் முதற்றே" என்று திருவள்ளுவர் கூறுகின்றhர், முதன் முதல் வணங்கிய கடவுளை எழுத்துக்களுடன் தொடர்புபடுத்திக் குறள் இயற்றியுள்ளார், அப்படியானால். எழுத்துக்களுடன் தொடர்புடைய கடவுள் யார்?
இறைவன் சிவனின் உடுக்கை (துடி)யிலிருந்து வேதங்கள் தோன்றின என்று கூறுகின்றனர், இதனால் இறைவன் சிவனே அனைத்து வேதங்களுக்கும் நாயகனாகச் சைவர்களால் வணங்கப்படுகிறhர், வைணவர்கள் அயக்கிரீவரைக் கலைகளின் கடவுளாகக் குறிப்பிடுகின்றனர், அன்னை கலைவாணி (ச​ரசுவதி). கலைகளின் நாயகியாக விளங்குகின்றhள், ஆனால் இக்கடவுள்கள் யாரும் எழுத்துக்களுடன் இணைத்துப் போற்றப்பட வில்லை,
வேதவியாசர் கூறிட. விநாயகர் தனது தந்தத்தையே ஒடித்துப் புராணம் எழுதியதாகக் கூறப்படுகிறது, இதனால் எழுத்துக்களுடன் தொடர்புடைய கடவுளாக விநாயகர் விளங்குகின்றhர்,
யானை முகனை ஓங்கார வடிவத்துடன் பொருத்திக் கூறுவர், ஒலி வடிவில் மட்டுமின்றி எழுத்து வடிவிலும் யானைத் தலையும். வலமாகச் சுழித்த துதிக்கையும் "ஓம்" என்ற எழுத்துக்கள் வடிவத்திற்கு பொருத்தமாக உள்ளன, பிற கடவுளருக்கு இப்பொருத்தம் பெரும்பாலும் இல்லை, இவ்வாறு விநாயகருக்கு உரிய ஓங்கார வடிவ காட்சிக்குப் பிள்ளையார் பட்டி விநாயகரின் திருஉருவமே எடுத்துக்காட்டாகும்,

ஆதியானவன்
மூன்றாவதாக திருவள்ளுவர். முதன் முதலில் தான் வணங்கிய கடவுளின் பெயரை "ஆதி பகவன்" என்று கூறிப்பிடுகின்றார், தமிழ் இலக்கணப்படி பகர ஒற்று மிகுந்து ஆதிப்பகவன் என்று இருக்க வேண்டும், இடையில் "ப்" இல்லாததால் ஆதிபகவன் என்பது வடநூல் முடிபு என்றும் கூறுகின்றனர்,
தமிழில் இலக்கணச் செறிவுடன் குறள் இயற்றியவர் தெய்வப் புலவர் திருவள்ளுவர், அவர் தனது முதற் குறளையே வடநூல் மரபினைப் பின்பற்றி எழுதியிருக்க மாட்டார் என்பது திண்ணம், அதனால் ஆதி என்ற சொல்லையும் பகவன் என்ற சொல்லையும் திருவள்ளுவர் வேறுபிற குறள்களில் எப்பொருளில் கையாண்டுள்ளார் எனப் பார்ப்போம்,
 
"ஆதி" என்றால் என்ன பொருள் என்று பார்ப்போம்,

அந்தணர் நூற்கு மறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்   (543)

என்ற குறளில் "ஆதி" என்ற சொல்லுக்கு. படைத்தலுக்குக் காரணமாயும். படைத்ததைக் காத்தலும். படைப்பில் குறைகள் ஏற்பட்டால் அதனை நிவர்த்தி செய்தலும் என்று பொருளாகிறது, ஆதி என்ற சொல்லுக்கு இணையாக ஆங்கிலத்தில் Authority  என்ற சொல் உள்ளது. "எழுத்தெல்லாம் ஆதி பகவன்" என்றால் எழுத்துக்கள் தோன்றுவதற்கு ஆதாரமானவனாகவும். எழுத்துக்களைக் காப்பவனாகவும். எழுத்துக்களில் குற்றம் குறை ஏற்படாமல் அருள்பவனாகவும் பகவன் என்ற கடவுள் உள்ளார் என்று பொருள், இவ்வாறான பண்புகளைக் கொண்ட கடவுளுக்குப் பகவன் என்ற பெயர் ஏன் வந்தது என்று காண்போம்,

பகுக்கப்பட்டவனே பகவன்
பகச் சொல்லிக் கேளிர் பிரிப்பர் (187) என்ற குறளிலும்.

எள் பக அளவு சிறுமை (889) என்ற குறளிலும்

பக என்ற சொல் உள்ளது, பக என்றால் பகுத்தல். பிரித்தல். பிளவுபடுத்துதல். துண்டாக்குதல் என்பன பொருளாகும், "அன்" என்ற ஆண்பால் பெயர் விகுதி உள்ளது, இதனால் பகவன் என்றால் பகுக்கப்பட்ட ஆண் கடவுள் என்று பொருள்,
அப்படியானால் இன்று நாம் வணங்கும் கடவுள்களில் பகுக்கப்பட்ட. பிரிக்கப்பட்ட. பிளவுபடுத்தப்பட்ட. துண்டாடப்பட்ட கடவுள் யார்? என்று பார்ப்போம்,
 நவக்கிரகங்களில் ராகுவும் கேதுவும் தலைதுண்டிக்கப்பட்ட அம்சத்தைக் கொண்டவர்களாக உள்ளனர், அசுரனின் தலையையும் பாம்பின் உடலையும் கொண்டது ராகுவாகும். பாம்பின் தலையையும் அசுரனின் உடலையும் கொண்டது கேதுவாகும், ஆனால் ராகுவும் கேதுவும் இரண்டு கிரகங்களாக உள்ளனர், இறைவன் சிவன் தனது உடலின் சரிபாதியைத் தேவிக்கு வழங்கியுள்ளார், ஆனால் அவரது உடல் பிளவுபடுத்தப்படவில்லை, விநாயகரின் தலை துண்டிக்கப்பட்டது, பின்னர் யானையின் தலை பொருத்தப்பட்டது, இதனால். விநாயகரே தலைபகுக்கப்பட்ட உடலையுடைய கடவுளாக உள்ளார், அவரது கதையைப் படிப்போம்,
 அன்னை பார்வதிதேவி தனது உடம்பின் அழுக்கிலிருந்து விநாயகப்பெருமானை உருவாக்கினார், சிவபெருமான் விநாயகாரின் தலையைத் துண்டித்துவிட்டார், பின்னர் யானையின் தலை பொருத்தப்பட்டு விநாயகர் உயிர்ப்பிக்கப்பட்டார், இதனால். விநாயகாரின் உடலானது அன்னை பார்வதிதேவியால் வழங்கப்பட்டது, அவரது தலையானது சிவபெருமானால் வழங்கப்பட்டது, இவ்வாறு பார்வதியும் பரமேசுவரனுமாக. தாயும் தந்தையுமாக. மூலமுதல்வனாக. வேதம் எழுதிய நாயகனாக விநாயகப் பெருமான் விளங்குகின்றார்,
 
"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு" என்ற குறளுக்கு அகர முதலான எழுத்துக்களுக்களின் தோற்றத்திற்கு மூல ஆதாரமானவனும். எழுத்துக்களில் உள்ள குற்றம் குறைகளை நீக்குபவனும். பகுக்கப்பட்ட உடலையுடையவனுமாகிய கடவுளே இவ்வுலகத்திற்கும் உலக மக்களுக்கும் முதன்மையானவன் ஆவான் - என்பது பொருளாகும்,

ஆனால் பிள்ளையார் வழிபாடு வாதாபி கொண்டானுக்கு முன்னாள் தமிழ்நாட்டில் இல்லை என்று கூறப்படுகிறதே! அதற்கான விளக்கத்தைக் காண்போம்,

பிடித்து வைத்தால் பிள்ளையார்
களிமண்ணையோ அல்லது மாட்டுச் சாணத்தையோ பிடித்துவைத்து அதில் அருகம்புள்ளைச் சொருகி விநாயகரைக் கும்பிடும் வழக்கமும். பிள்ளையார் சுழிபோட்டு எழுதத்துவங்கும் வழக்கமும் தொன்று தொட்டுத் தமிழ்நாட்டில் இருந்து வருகிறது, மேலும் வெள்ளெருக்கம் பூக் கொண்டு கடவுளை வழிபடும் வழக்கமும் பழந் தமிழரிடத்தில் இருந்துள்ளது,

இரண்டு கைகளையுடைய யானைமுகனின் உருவ வழிபாடு முற்காலப் பாண்டியர் காலத்தில். பிள்ளையார்பட்டியில்;. கி,பி, 4ம் நூற்றாண்டில். கல்லில் வடிக்கப்பட்டுள்ளது, இதனால் கி,பி,6ம் நூற்றாண்டில் வாதாபியிலிருந்து கொண்டுவரப்பட்ட நான்கு கைகளையுடைய விநாயகரின் காலத்திற்கு முன்பே தமிழ் நாட்டில் விநாயகர் உருவ வழிபாடு இருந்துள்ளது ​தெளிவாகிறது, மேலும் போரின் போது. எதிரி வழிபடும் தெய்வத்தையோ அல்லது மரத்தையோ கொண்டு வருதல் உண்டு, தமிழர்கள். இவ்வாறு செய்வதை வெற்றியின் அடையாளமாகத் கருதினர், இதனால் பழந்தமிழரிடம் விநாயகர் வழிபாடு இல்லை என்பதற்கு ஆதாரம் ஏதும் இல்லை என்பதே உண்மை,

ஆனை முகத்தனே ஆதிபகவன்
 இவ்வாறான காரணங்களால் வள்ளுவர் காலத்தில் ஆதிபகவன் என்று நம்முன்னோரால் வாழ்த்தப்பட்ட கடவுளின் பண்புநலன்கள் அனைத்தும். இன்றைய நாளில் நாம் வணங்கும் ஆனைமுகத்தானுக்கே பொருந்தியமைகின்றன, எனவே. தெய்வப்புலவராம் திருவள்ளுவர் வழி நின்று ஆனைமுகத்தானை நாமும் வாழ்த்தி நம் எழுத்துப்பணியையும். மற்றபிற பணிகளையும் செவ்வனே துவக்குவோம்; நலன்கள் அனைத்தும் பெறுவோம்.

* * * * *
முனைவர், கி, காளைராசன். B.Sc., PGDCA, M.A., M.Phil., Ph.D.,
உதவிப்பதிவாளர் (நிதிப்பிரிவு)
அழகப்பா பல்க​லைக்கழகம்
காரைக்குடி - 630 003
10 குருநாதர்கோயில் தெரு,
கோட்டையூர். – 630 106
தொலை​பேசி- 94435 01912

kalairajan krishnan

unread,
Jul 22, 2010, 7:59:02 AM7/22/10
to mint...@googlegroups.com, banuk...@gmail.com, kkra...@yahoo.co.in, durais...@gmail.com
ஐயா வணக்கம்
இந்தக் கருத்திற்கு மாற்றுக் கருத்து என்னிடம் உள்ளது,
எனது இக்கருத்து அடங்கிய கட்டுரையை தமிழ் மாருதம் இதழில் ​வெளியாகி உள்ளது,
அதனை கூடிய விரைவில் unicodeக்கு  மாற்றி ​வெளியிடுகிறேன்
அப்போது தாங்கள் அவசியம் அக்கட்டரையைப் படித்துத் தங்களது கருத்தைக் கூற விரும்புகிறேன்
 
 அன்புடன்
கி. காளைராசன்
 
kalairajan krishnan

unread,
Jul 22, 2010, 8:07:00 AM7/22/10
to mint...@googlegroups.com

Banukumar Rajendran

unread,
Jul 23, 2010, 12:34:24 PM7/23/10
to mint...@googlegroups.com

தமிழ் நாட்டு ஜைநர்கள்

-        விஜய நகரம் மகாராஜா கலாசாலையில் சரித்திர போதகாசிரியராகிய ஸ்ரீமான் எம்.எஸ்.இராமசாமி அய்யங்கார் (1920ல் எழுதியது)

திருக்குறளுடைய ஆசிரியர் எந்தமதத்தைச் சார்ந்தவர் என்பது ஒரு பெரிய கேள்வியாகவிருந்து வருகிறது. அவ்வாசிரியர் ஜைநரென்று சில பெரிய வித்வான்கள் உறுதியாகக் கூறுகின்றார்கள். அவர் ஹிந்து தெய்வம் எதையும் வணங்கா திருத்தலும் மலர்மிசை யேகினான், எண் குணத்தான் என்று கடவுளைக் குறிப்பிடுதலுமே அவர் ஜைநர் என்று கூறுவதற்குப் போதுமான ஆதாரங்களென்று கருதப் படுகின்றன. ஜைநர்கள் தங்களுடைய ஆசார்யர்களுள் ஒருவரான ஏலாச்சாரியார் என்பவர் குறளை இயற்றியதாக நம்புகிறார்கள். பழைய சிறந்த தமிழ்க்காப்பியங்களுள் ஒன்றாகிய நீலகேசி என்னும் நூலினுடைய உரையாசிரியராகிய சமயதிவாகர வாமன மாமுனிவர் தமது உரையில் திருக்குறளைக் குறிப்பிடும் பொழுதெல்லாம் அதை “எம்மோத்தாதலால்”  (எமது வேதம் ஆகையினால்) என்று எழுதி யிருக்கின்றார். இந்தக் கொள்கை உண்மையானால் ஜைநர்கள் கி.பி. முதல் நூற்றாண்ட்டில் தென்னாட்டில் பிரவேசித்துத் தங்கள் மதத்தைத் தமிழ்ப் பாஷை மூலமாக வெளியிட ஆரம்பித்தனரென்று ஊகிக்கலாம்.

     ஜைநர்கள் பெரிய வித்யார்த்திகளாய் இருந்தது மல்லாமல் புத்தகங்களை எழுதுபவருமாய் இருந்தனர். அவர்கள் நூற்களையும் சாஸ்திரங்களையும் ஸ்வபாவ மாகவே நேசித்து அவைகளை விருத்தி பண்ணும் முயற்சி யுடையவர்கள். தமிழில் ஜைநர்கள் செய்யப் பட்டிருக்கும் நூல்கள் தமிழர்களுடைய ஐஸ்வர்யங்களுள் மிகவும் விலையுயர்ந்தவை. இலக்கண, இலக்கிய விரோதங்களில்லாமல் சமஸ்கிருத சொற்களைத் தமிழ்ச் சொற்களோடு கலந்து உபயோகிக்கும் முறையைக் காட்டியவர்களும் அவர்களே. கன்னட நூற்களும் ஜைநர்களுக்கு ஏராளமாகக் கடன்பட்டிள்ளன. உண்மையில் அவைகளை முதலில் எழுதியவர்களும் இவர்களே. இங்கு (L.Rice) எல். ரைஸ் என்பவர் எழுதுவது கவனிக்கத் தக்கது; அதாவது: “பன்னிரண்டாவது நூற்றாண்டின் மத்தியகாலம் வரையில் கன்னட நூற்கள் முழுமையும் ஜைநர்களுடையவையே. ஜைந நூற்களே பின்னும் நீண்ட காலம் வரையுல் உயர்ச்சி பெற்று வந்தன. கன்னட பாஷையில் மிகப்பழமை யானவையும், அதிக மேன்மை தங்கியவுமான நூற்களேல்லாம் ஜைநர்களுடையனவே” என்பதே. இன்னும், ரவரண்ட் கிட்டல் என்பவரும் இம்மாதிரியே கூறுகிறார்; அதாவது: “ஜைநர்கள் தங்கள் சமூகத்திற்காக எழுதியது மல்லாமல், சாஸ்திரங்களின் மேலுள்ள இச்சையினாலும் அநேக நூற்களை எழுதி யிருக்கின்றனர். சில சமஸ்கிருத நூற்களைக் கன்னடத்தில் பொழிபெயர்த்து மிருக்கின்றனர்.” என்பதே.

     உன்னதமான அஹிம்ஸா விரதம் ஹிந்துவேதாந்த ஆசாரங்களைச் சரிப்படுத்தி இருக்கிறது. ஜைந உபன்னியாசங்கள் காரணமாகப் பிராமணர் மிருகபலியை நிறுத்தி அதற்குப் பதிலாக யாகங்கள் செய்யும் பொழுது மாவினால் மிருகங்கள் செய்து உபயோகப் படுத்து கின்றனர்.

     விக்ரக ஆராதனையும் தேவாலய நிர்மாணமும் தென்னிந்தியாவில் பெரும்பாலும் ஜைநர்களினாலேயே ஏற்பட்டன. சைவகோயில்களில் சந்நியாசிகளைக் கும்பிடுவது ஜைநப் பழக்கத்தில் நின்று நேராகவே கடன் வாங்கப்பட்டிருக்கின்றது. ஜைநர்களா லேற்பட்ட மற்ற எல்லாத் திருத்தங்களை விட மேலானவை, திராவிடர்களுடைய ஞான, நீதி, அபிவிருத்திக்குக் காரணமா யிருந்தனவும், ஜைந கல்விக் கழகங்களுக்கும் பிரசாரங்களுக்கும் போட்டியாக ஏற்படுத்தப்பட்டனவுமான பாடசாலைகளேயாம்.
------
------

வினோத் ராஜன்

unread,
Jul 23, 2010, 12:37:56 PM7/23/10
to மின்தமிழ்
இது முழுகட்டுரையா

அல்லது

கட்டுரையின் ஒரு பகுதி மட்டுமா ?

V

Banukumar Rajendran

unread,
Jul 23, 2010, 12:46:20 PM7/23/10
to mint...@googlegroups.com
முழு கட்டுரை அவ்வளவுதான்!
இனி முற்றும்! இடுகிறன் :-))
 
இரா.பா

N. Kannan

unread,
Jul 24, 2010, 10:51:51 AM7/24/10
to mint...@googlegroups.com
எனக்கும் இதுதான் கேள்வி. ஜைனர்கள் முற்றும் முழுதும் இந்துக்கள்
மாதிரிதான் என்றால் எதற்கு நமக்குள் பிரிவு. வள்ளுவரை இந்து என்று
சொல்வதில் என்ன தவறு? திருவடி சம்பந்தம் அங்கும் முக்கியம் இங்கும்
முக்கியம், உலகளந்த பெருமாள் அங்கும் முக்கியம் இங்கும் முக்கியம்,
இறைவன் என்பவன் அங்கும் முக்கியம், இங்கும் முக்கியம். பிறகென்னதிற்கு
இங்கு வாக்குவாதம்?

வள்ளுவனை இந்து என்று பார்த்ததாலேதானே குறள் இத்தனை நூற்றாண்டுகள்
தாண்டியும் இன்றும் நம் கைகளில் உலவுகிறது. சமணர்கள் என்போர் இன்று இந்து
சமுதாயத்தின் ஒரு பகுதியாகத்தானே உள்ளார்கள்? சும்மா ஏதோ ஃபாஷன் போல
வள்ளுவரை சமணர் என்று சொல்வது இருப்பதாகப் படுகிறது. A kind of attention
trading!

க.>

2010/7/24 Banukumar Rajendran <banuk...@gmail.com>:

Innamburan Innamburan

unread,
Jul 24, 2010, 11:39:23 AM7/24/10
to mint...@googlegroups.com
திரு.கண்ணனின் வினா நியாயமானது; மற்ற சமயங்களுடன் கூட பொருந்திப் பார்க்க இயலும். இன்று, திரு. பானுகுமார் ராஜேந்திரன் வந்திருந்தார். நேமிநாதருக்கும், கிருஷ்ணனுக்கும் உள்ள உறவு பற்றி சுவை படக் கூறினார். ஆர்வம் மிகுந்த இளைஞர். த.ம.அ. வுக்க்காக, அவர் எளிதில் செய்யக்கூடிய பணிகளை பற்றி பேசிக்கொண்டோம். பார்க்கலாம்.
இன்னம்பூரான்

2010/7/24 N. Kannan <navan...@gmail.com>

வினோத் ராஜன்

unread,
Jul 24, 2010, 2:13:23 PM7/24/10
to மின்தமிழ்
//னக்கும் இதுதான் கேள்வி. ஜைனர்கள் முற்றும் முழுதும் இந்துக்கள்

மாதிரிதான் என்றால் எதற்கு நமக்குள் பிரிவு. வள்ளுவரை இந்து என்று
சொல்வதில் என்ன தவறு? //

கொஞ்சம் அதையே திருப்பிப்போடுவோம்..

[...] இந்துக்கள் முற்றும் முழுவதும் ஜைனர்கள் மாதிரி என்றால், எதற்கு
நமக்குள் பிரிவு. வள்ளுவரை ஜைனர் என்று சொல்வதில் என்ன தவறு [..]

அதே தான்.. அதே வகையில் யோசித்தால்...

வள்ளுவர் ஜைனர் என்று ஏன் சொல்லக்கூடாது.

வைதீகத்தை ஜைனத்துள் அடக்கி விடலாம் இல்லையா !

இன்னும் சொல்லப்போனால்.. ஜைனர்களின் நம்பிக்கையில் ஆதி தர்மம் ஜைன
தர்மம்.. ஜைன தர்மம் திரிந்தே மற்ற தர்மங்கள் வைதீகம் உட்பட வந்தது
என்று ..

ஜைனரீதியாக பார்த்தால், சனாதனமான தர்மம் ஜைனம் தான்.. ஆதி அந்தம்
அற்றது...

ஆக, ஏன் அனைத்தையும் ஜைனத்துள் அடக்கக்கூடாது ? Taking a Jaina POV.

A whole point of taking a absolute Vaidika POV for everything is
unwanted here.

//வள்ளுவனை இந்து என்று பார்த்ததாலேதானே குறள் இத்தனை நூற்றாண்டுகள்
தாண்டியும் இன்றும் நம் கைகளில் உலவுகிறது.//

ஏன் கண்ணன்,

அதை பௌத்த நூலாகவோ, ஜைன நூலாகவோ இருந்தால்...

மற்ற பௌத்த/ஜைன நூல்களைப்போல் அதுவும் அழிக்கப்பட்டிருக்குமோ ?

ஆக, ஒன்று நிலைக்க வேண்டுமெனில் வைதீகத்தை அனுசரித்தே அனைத்தும் நடைபெற
வேண்டும் என்று கூற வருகிறீர்களா ?

//வள்ளுவரை சமணர் என்று சொல்வது இருப்பதாகப் படுகிறது. A kind of
attention
trading! //

...a necessary one.. IMHO

V

On Jul 24, 8:39 pm, Innamburan Innamburan <innambu...@googlemail.com>
wrote:

> திரு.கண்ணனின் வினா நியாயமானது; மற்ற சமயங்களுடன் கூட பொருந்திப் பார்க்க
> இயலும். இன்று, திரு. பானுகுமார் ராஜேந்திரன் வந்திருந்தார். நேமிநாதருக்கும்,
> கிருஷ்ணனுக்கும் உள்ள உறவு பற்றி சுவை படக் கூறினார். ஆர்வம் மிகுந்த இளைஞர்.
> த.ம.அ. வுக்க்காக, அவர் எளிதில் செய்யக்கூடிய பணிகளை பற்றி பேசிக்கொண்டோம்.
> பார்க்கலாம்.
> இன்னம்பூரான்
>

> 2010/7/24 N. Kannan <navannak...@gmail.com>

devoo

unread,
Jul 24, 2010, 2:49:53 PM7/24/10
to மின்தமிழ்
வினோத்ஜி

’ததாகத: ‘ - இப்பெயர் புத்த பகவானுடையதா ? மஹா வீரருடையதா ?

தேவ்

Innamburan Innamburan

unread,
Jul 24, 2010, 8:11:10 PM7/24/10
to mint...@googlegroups.com
புத்த பகவானுடையது. திருவள்ளுவருடன் இந்த வினாவின் பொருத்தம் தெரிவித்தால், நலம்.
இன்னம்பூரான்

2010/7/25 devoo <rde...@gmail.com>

N. Kannan

unread,
Jul 24, 2010, 10:36:48 PM7/24/10
to mint...@googlegroups.com
வினோத்ஜி:

என்னிடம் வெளிநாட்டில் ஏன் சைவ உணவு கொள்கையுடன் இருக்கிறீர்கள் என்று
கேட்கும் போதெல்லாம் நான் என்னை சமணனாக, பௌத்தனாக உணர்கிறேன்.
வேதத்திலும் இக்கருத்து வலியுறுத்தப்ப்டுகிறது என்று தேவ்
சுட்டிக்காட்டினார். இந்திய வம்சாவளியினர் ஒன்றையொன்று அண்டி வாழ்ந்து
வருபவர்கள். பௌத்தம் இன்று தாய்லாந்தால் காக்கப்படுகிறது. ஆனால் அது
தோன்றிய நாட்டில் எங்குள்ளது என்று கேட்டால், அது நம் எல்லோர்
உள்ளத்திலும் ஒளிந்து கொண்டுள்ளது என்பேன். மாற்றிருவில் நாம் சமணர்கள்,
பௌத்தர்கள். இந்து மதம் என்ற ஒன்று இல்லைதானே. நம் பாட்டைகள்
மெருகேறுகின்றன. தாவ் என்பது போல் இந்து என்பதும் ஒரு பாட்டை தான். தடம்
வலுப்பட, வலுப்பட வழிச்சுகம் அதிகம்.

அதுதான் நான் சொல்ல வருவது. வள்ளுவன் என் கண்களுக்கு வைணவனாகப் பட்டால்
அதுவும் உண்மையே. அவன் சைவனாகப் பட்டால் அதுவும் உண்மையே. அவன் ஜீனன்
என்றால் அதுவும் சரியே. அவன் மிகச்சரியாக இந்தியாவை தன் குறளில்
காட்டுகிறான் என்றுதான் பொருள். அதனால்தான் குறள் இன்று நாத்திகராலும்,
ஆத்திகராலும் போற்றிப் பாதுகாக்கப்படுகிறது.

க.>

2010/7/25 வினோத் ராஜன் <vinodh...@gmail.com>:

Banukumar Rajendran

unread,
Jul 25, 2010, 6:36:00 AM7/25/10
to mint...@googlegroups.com
ஐயா,
 
///பிறகென்னதிற்கு இங்கு வாக்குவாதம்?///
 
இந்த இழையில் எங்கே வாக்குவாதம்? :-)
 
//வள்ளுவரை இந்து என்று சொல்வதில்..//
 
சொல்ல முடியாது! தேவர் குறள் எழுந்தக் காலத்தில் இந்து சமயம் என்ற ஒன்று கிடையாது. தனி தனி சமயங்களாகத்தான் இருந்தன. கி.பி.7ஆம் நூற்றாண்டு வரை குறளை சமண நூலாக தான் கருதப்பட்டு வந்திருக்கிறது. குறள் இறைவாழ்த்து “சொல்லாட்சிகளை” சமண இலக்கியங்கள் மிகவும் போற்றி வந்தமை இங்கு கருததக்கது. குறளை எங்கள் வேதம் என்று போற்றியவர்கள் சமணர்கள்.
 
//சமணர்கள் என்போர் இன்று இந்து
சமுதாயத்தின் ஒரு பகுதியாகத்தானே உள்ளார்கள்?//
 
பின் ஏன் அப்போது பரப்பக்கத்தில் சேர்த்தார்கள்? :-))
 
//சும்மா ஏதோ ஃபாஷன் போல வள்ளுவரை சமணர் என்று சொல்வது இருப்பதாகப் படுகிறது. A kind of attention trading!//
 
ஃபாஷன் மற்றவர்களுக்கு இருக்கலாம். ஒரு சமணனுக்கு இருக்க முடியாது அல்லவா! :-)
 
இரா.பா

On 7/24/10, N. Kannan <navan...@gmail.com> wrote:
எனக்கும் இதுதான் கேள்வி. ஜைனர்கள் முற்றும் முழுதும் இந்துக்கள்
மாதிரிதான் என்றால் எதற்கு நமக்குள் பிரிவு. வள்ளுவரை இந்து என்று
சொல்வதில் என்ன தபிறகென்னதிற்கு

Banukumar Rajendran

unread,
Jul 25, 2010, 6:50:59 AM7/25/10
to mint...@googlegroups.com
மறக்க முடியாத அனுபவம்! வீடு முழுக்க புத்தகங்கள்!! பரீட்சைக்கு படிக்கும் மாணவர். புத்தகங்களை மின்னாக்கத்தில் மிக ஆர்வமான இளைஞர்!!
 
குறைந்த நேரமேயானாலும் மனதில் சந்தோஷம் நிறைந்த நிமிடங்கள்!!
 
மரியாதையுடன்,
 
இரா.பா,
சென்னை

--

Banukumar Rajendran

unread,
Jul 25, 2010, 7:07:53 AM7/25/10
to mint...@googlegroups.com
இரண்டு பகவான்களுக்கும் பொருந்தும்.
 
விளக்க சொன்னால் சொல்கிறேன்! :-)
 
இரா.பா
 
devoo

unread,
Jul 25, 2010, 7:58:31 AM7/25/10
to மின்தமிழ்
Jul 25, 6:07 am, Banukumar Rajendran

> இரண்டு பகவான்களுக்கும் பொருந்தும்.
> விளக்க சொன்னால் சொல்கிறேன்! :-)

கட்டாயமாக,
உங்கள் விளக்கத்தை எதிர்பார்க்கிறேன்

தேவ்

N. Kannan

unread,
Jul 25, 2010, 11:24:26 AM7/25/10
to mint...@googlegroups.com
அன்பின் இரா.பா

தாங்கள் எடுத்துக் கொடுக்கும் பண்பு உண்மையான ஜீனனை அடையாளம் காட்டுவது
போல் உள்ளது. உண்மையில் சமணர்கள் என்றால் ஏதோ பாடப்புத்தகத்தில்
படித்ததுதான். களப்பணியாக தஞ்சை சென்ற போது அறம் கூறும் அன்னை
விஜயலக்ஷ்மியைக் கண்ணுறும் பாக்கியம் கிடைத்தது. அவர் நிறையச் சொன்னார்.
மேலும் அதுபோதுதான் நான் ஒரு ஜைனக்கோயிலுக்கு போயிருக்கிறேன். அச்சாக,
இந்துக் கோயில் போல இருப்பதால் மூகாம்பிகையை தரிசிக்க கொல்லூர் போயிருந்த
போது அங்கிருந்த பல சமணக் கோயில்களுக்குள் போய் தெய்வம் யாரென்று
தெரியாமல் வழிபட்டு வந்தது நினைவிற்கு வருகிறது. பின் சரவணபெலகுளா.
அற்புதமான அனுபவம்.

இது எல்லாம் என்னுள் காட்டுவது என்னவெனில், இந்தியச் சமயம் என்பது ஒரு
மகா நதி போல். பல்வேறு கிளை நதிகள் செழித்து, தழைத்து இருந்து பின்
ஏதோவொரு பொது நீரோட்டத்தில் கலந்துவிடுவது போல. 21ம் நூற்றாண்டில் தனி
அடையாளம் என்று சொல்வதே முரண்நகை போல் படுகிறது. ஏனெனில் சாம்பாரில்
கரைந்த காய்கறிகள் போல் எல்லோரும் கரைந்திருக்கிறோம். ஒரு வரலாற்றுப்
பார்வையில் வேண்டுமெனில் சொல்லிப் பெருமைப் படலாம். அதனால்
நேரடிப்பயனென்று ஏதுமில்லை. காலத்தை இனி எதிர் திசையில் ஓட்டமுடியாது.
மல்லிகை வைத்த பாண்டம் போல் இது ஒரு வாசம் தரலாம். அவ்வளவுதான்.

வள்ளுவனை ஒரு இந்துவாகத்தான் பார்க்கமுடிகிறது இப்போது. அவர்தான் சுத்த
ஜீனர் என்றால், இன்னும் மகிழ்ச்சியாக இந்துவாகப் பார்க்கமுடிகிறது :-))
(நான் சொல்ல வருவது புரிகிறதா? என்று தெரியவில்லை)

க.>

2010/7/25 Banukumar Rajendran <banuk...@gmail.com>:

Innamburan Innamburan

unread,
Jul 25, 2010, 12:04:18 PM7/25/10
to mint...@googlegroups.com
எனக்கு புரிகிறது. இரா.பா. வுக்கும் புரியும். ஜைன இளைஞர் சங்கம் மிக
நேர்த்தியாக இயங்குகிறது. இன்று காலை தான் நினைத்தேன். மு.வ. சொல்வதை
எழுத வேண்டும் என்று. '...அதை (திருக்குறள்) இயற்றிய புலவரின்
இயற்பெயரும் தெரியவில்லை. அவருடைய வாழ்க்கை வரலாறும் தெரியவில்லை....அவரை
பற்றிப் பல கட்ஹைகள் அவ்வப்போது கட்டப்பட்டன. ஆராய்ச்சியாளர்கள் அவற்றை
ஏற்றுக்கொள்வதில்லை. ..பல சமயத்தாரொடு பழகினாலும் பொதுமை நாட்டமே
உடையவர்...' (தமிழ் இலக்கிய வரலாறு: 22வது அச்சு: ப.73) எல்லாருக்கும்
அவர் நம்மடவர் தான். இளங்கோ அடிகள் சமணத்துறவி என்று யாவரும் அறிவோம்.
சிலப்பதிகாரம் is so holistic and ecumenical that one is amazed at his
detached metaphysics. சமணம் தமிழுக்கு செய்த தொண்டு மகத்தானது.

இன்னம்பூரான்

l2010/7/25 N. Kannan <navan...@gmail.com>:

Subashini Tremmel

unread,
Jul 25, 2010, 12:45:32 PM7/25/10
to mint...@googlegroups.com

திரு.பானுகுமார்,

ஜைன சமய வழிபாட்டு நெறிகளைப் பற்றி நீங்கள் மரபு விக்கியில் பதிப்பிக்கலாமே.
 
@திரு.இன்னம்புரான் நீங்கள் இந்த ஜைன இளைஞர் குழுவிற்கு இந்தப் பணியில் துணை செய்ய முடியுமா?

அன்புடன்
சுபா

2010/7/25 Innamburan Innamburan <innam...@googlemail.com>

Banukumar Rajendran

unread,
Jul 26, 2010, 4:20:47 AM7/26/10
to mint...@googlegroups.com
அன்பின் ஐயா,

நன்றி!

ஒன்றை தெளிவுப் படுத்த விரும்புகிறேன். சமணத்தை பற்றி எழுதுவதால் நான் இந்து சமயத்திற்கு எதிரி அல்ல. என் சகோதர மதம் அது. நான் வெளி நாடு (ஜெர்மனி, சிங்கப்பூர், சாம்பியா) சென்ற போது, என்னை இந்துவாகத் தான் அறிமுகப்படுத்திக் கொண்டேன். என் ஆதர்ஷ நாயகன் நரேந்திர மோடி தான். (அவர் மாதிரி நிர்வாகத் திறன் பெற்றவர் மாநிலத்திற்கு ஒருவர் வேண்டும் என்பது என் கனா!! எங்கள் ஓட்டு பி.ஜே.பிக்கு தான். :-) VHP ன் தலைவர் ஒரு ஜைனர் என்பது பலருக்கு தெரியாது.

ஆதி நாதருடைய மருமகன் மரீசி. அவனாலேயே தொடங்கப்பட்டது தான், பின் மற்ற சமயங்களாக உருவெடுத்தது என்று எங்கள் மகாபுராணம் கூறும். எப்படிப் பாத்தாலும் இந்தியாவில் உருவான மதங்கள் எல்லாம் தங்களுக்குள் உறவுகள் மூலம் பிணைந்திருக்கின்றன.

ஆனால், ஆராய்ச்சி என்று வரும் போது, நம் Mental model களைத் தள்ளி வைத்துவிட்டு, மெய்ப் பொருள் காணுதல் அறிவு என்றவாறு உண்மை காணுதல் நம் கடன். தேவர் சமணர் என்றால் அதில் என்ன பிணக்கு?!!

தெரிந்ததை பகிர்ந்துக் கொள்கிறோம். தெரியாததை தெரிந்துக் கொள்கிறோம். தேவ் ஐயா, ஹரி ஐயா, வினோத் (அவர் சமஸ்கிருத அறிவு வியக்க வைக்கிறது) அவர்களுடைய  பதிவுகளை விரும்பிப் படிப்பவன். நிறைய தெரிந்துக் கொள்கிறேன்.

இரா.பா

2010/7/25 N. Kannan <navan...@gmail.com>

N. Kannan

unread,
Jul 26, 2010, 8:38:40 AM7/26/10
to mint...@googlegroups.com
2010/7/26 Banukumar Rajendran <banuk...@gmail.com>:

> ஆனால், ஆராய்ச்சி என்று வரும் போது, நம் Mental model களைத் தள்ளி
> வைத்துவிட்டு, மெய்ப் பொருள் காணுதல் அறிவு என்றவாறு உண்மை காணுதல் நம் கடன்.
> தேவர் சமணர் என்றால் அதில் என்ன பிணக்கு?!!
>

வள்ளுவர் சமணர்தான் என்று இன்னும் முழுமையாய் நிரூபிக்கப்படவில்லை.
நம்மாழ்வார் போன்ற ஞானிகளே வள்ளுவன் கூறும் அறவாழி அந்தணன் யாரென்று
மறுவாசிப்பு செய்கிறார்கள் என்றால் வள்ளுவன் குறளில் அதற்கான சான்றுகள்
இருக்க வேண்டும். மேலும், வள்ளுவன் வைதீகத்தை எதிர்ப்பவனாகத்
தெரியவில்லை.

சரி, இதுவொரு காலக்கணக்கு! காலத்தைக் கடந்து உண்மை காணும் முயற்சி.

வள்ளுவன் கைப்பட எழுதிய ஓலைச்சுவடி வேண்டும் என்பார் டாக்டர் கலாம்.
இருந்தால் என்ன? நம்மால் நிச்சயம் வாசிக்கமுடியாது (அதாவது இப்போது
சொல்வது போல் பழமையானது குறள் என்றால்!). அப்போது தமிழ் வரி வடிவங்களே
மாறுபட்டு இருந்தன. மழித்தலும் நீட்டலும் வேண்டா! என்று சொன்னவருக்கு
தாடி வைத்துப் பார்ப்பது ஒரு பேஷன்தான்! இல்லையா ;-)

க.>

srirangammohanarangan v

unread,
Jul 26, 2010, 8:44:42 AM7/26/10
to mint...@googlegroups.com
>>தாடி வைத்துப் பார்ப்பது ஒரு பேஷன்தான்! இல்லையா ;-)<<
 
உமக்கு என்னை வம்புக்கு இழுக்கலைன்னா தூக்கம் வராதே!:--)))

Innamburan Innamburan

unread,
Jul 26, 2010, 8:52:17 AM7/26/10
to mint...@googlegroups.com
நான் கூட தாடி வைத்திருந்தேன், சும்மா என் இல்லாளிடம் பணியக்கூடாது
என்று. லாஸ் ஏஞ்செலஸ் அதிகாரிகள் எளிதில் உள்ளே விடவில்லை. அது தான்
போகிறது என்று சென்னையில் வழக்கமாக வாங்கும் காப்பிப்பொடிக்கடையில்,
முதலாளி ஊழியரிடம், 'பாயி ரொம்ப நேரமாகக் காத்திண்டுருக்கார்' என்றாரே
பார்க்கலாம்!

இன்னம்பூரான்

2010/7/26 srirangammohanarangan v <ranga...@gmail.com>:

N. Kannan

unread,
Jul 26, 2010, 9:37:39 AM7/26/10
to mint...@googlegroups.com
நான் கூட குறுந்தாடி வைத்திருக்கிறேன்.(என் வலைப்பக்கம் போனால்
குழந்தையிலிருந்து கிழவன் வரை என்று பரிணாமமே காணலாம் ;-)

என்ன இருந்தாலும் இந்த ரங்கனுக்கு சாக்ரடீஸ்ன்னு நினைப்பு. இவ்வளவு ஆகாது
(தாடியைத்தான் சொல்கிறேன் :-))

க.>

2010/7/26 Innamburan Innamburan <innam...@googlemail.com>:

srirangammohanarangan v

unread,
Jul 26, 2010, 9:41:53 AM7/26/10
to mint...@googlegroups.com
On 7/26/10, N. Kannan <navan...@gmail.com> wrote:
நான் கூட குறுந்தாடி வைத்திருக்கிறேன்.(என் வலைப்பக்கம் போனால்
குழந்தையிலிருந்து கிழவன் வரை என்று பரிணாமமே காணலாம் ;-)

என்ன இருந்தாலும் இந்த ரங்கனுக்கு சாக்ரடீஸ்ன்னு நினைப்பு. இவ்வளவு ஆகாது
(தாடியைத்தான் சொல்கிறேன் :-))

க.>
 
அடப்பாவிங்களா!!  விஷம் கொடுக்கறதுன்னே முடிவு பண்ணிட்டீங்களாய்யா ---)))))

2010/7/26 Innamburan Innamburan <innam...@googlemail.com>:
> நான் கூட தாடி வைத்திருந்தேன்,

N. Kannan

unread,
Jul 26, 2010, 9:47:42 AM7/26/10
to mint...@googlegroups.com
2010/7/26 srirangammohanarangan v <ranga...@gmail.com>:

>
> அடப்பாவிங்களா!!  விஷம் கொடுக்கறதுன்னே முடிவு பண்ணிட்டீங்களாய்யா ---)))))
>>

நீர் நஞ்சுண்ட தேசிகன்! உம்மை அல்ப விஷம் என்ன செய்யும்!?

அத்திம்பேர் உறவு வேறு பலமாக இருக்கிறது (ஓம்! அருணாசலாய நமஹ!)

எல்லாம் விடம் உண்ட கண்டர்கள்!!

க.>

Tthamizth Tthenee

unread,
Jul 26, 2010, 9:49:53 AM7/26/10
to mint...@googlegroups.com
அடப்பாவிங்களா!!  விஷம் கொடுக்கறதுன்னே முடிவு பண்ணிட்டீங்களாய்யா ---)))))

நவீன  சாக்ரடீசுக்கு  விஷமும் அமிர்தமாகும்
 
 நானும் தாடி  வைத்துக்கொள்ளலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்
 
தினமும் சவரம்  கட்டுப்படியாகவில்லை
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
26-7-10 அன்று, srirangammohanarangan v <ranga...@gmail.com> எழுதினார்:

--
மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net

Hari Krishnan

unread,
Jul 26, 2010, 9:49:59 AM7/26/10
to mint...@googlegroups.com

2010/7/26 srirangammohanarangan v <ranga...@gmail.com>

அடப்பாவிங்களா!!  விஷம் கொடுக்கறதுன்னே முடிவு பண்ணிட்டீங்களாய்யா ---)))))

MY heart aches, and a drowsy numbness pains  
  My sense, as though of hemlock I had drunk,  
Or emptied some dull opiate to the drains  
  One minute past, and Lethe-wards had sunk:  
'Tis not through envy of thy happy lot,         
  But being too happy in thine happiness,  
    That thou, light-wingèd Dryad of the trees,  
          In some melodious plot  
  Of beechen green, and shadows numberless,  
    Singest of summer in full-throated ease.

அப்படின்னு கீட்ஸ் சொல்லலியா?  குயிலின சந்தோஷத்தை உணர்ந்து அனுபவித்தால் உண்டான விஷாத பான மயக்கம்?  அனுபவி ராஜ்ஜா அனுபவி!

கொடுக்கறதுதான் கொடுக்கறாங்க....கப்போ பிளேட்டோ....சிஷ்யனை நினைச்சு குடிச்சிட்டா போச்சு....

--
அன்புடன்,
ஹரிகி.

srirangammohanarangan v

unread,
Jul 26, 2010, 10:13:25 AM7/26/10
to mint...@googlegroups.com
ஆஹா! ஹரிகி சரியான ச்மயத்துல வந்து அமுதத்தை நஞ்சென்று சொல்லித் தந்தீரே ஐயா!
 
அப்படியே பாரதி கீட்ஸை ஆவிர்பவிக்கும் இடம் பாரும்.
 
எங்கிருந்து வருகுவதோ? -- ஒலி
யாவர் செய்குவதோ? -- அடி தோழி
 
குன்றினின்றும் வருகுவதோ -- மரக்
கொம்பினின்றும் வருகுவதோ? -- வெளி
மன்றி னின்று வருகுவதோ? -- என்றன்
மதி மருண்டிடச் செய்குதடீ -- இஃது
 
....................................--- அன்றி
இலை யொலிக்கும் பொழிலிடை நின்றும்
எழுவதோ இஃ தின்ன முதைப் போல்
 
பறவை யேது மொன்றுள்ளதுவோ -- இங்ஙன்
பாடுமோ அமுதக்கனற் பாட்டு
மறைவி னின்றிடுங் கின்னர ராதியர்
வாத்தியத்தி னிசை யிதுவோ --அடி 
 
கண்ண  னூதிடும் வேய்ங்குழல் தானடீ 
காதிலே யமுதுள்ளத்தில் நஞ்சு  
 
(பக் 569 பாரதியார் கவிதைகள், சீனி.விச்வநாதன் பதிப்பு) 
 
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 
 
*** 
 
--

N. Kannan

unread,
Jul 26, 2010, 7:13:27 PM7/26/10
to mint...@googlegroups.com
2010/7/26 srirangammohanarangan v <ranga...@gmail.com>:

> கண்ண  னூதிடும் வேய்ங்குழல் தானடீ
> காதிலே யமுதுள்ளத்தில் நஞ்சு
>

யப்பா! மூச்சு முட்டுது!

பாரதியை ஆழ்வார் என்று மத்திய கைலாஷ் ஆலயத்தில் வழிபடுகிறார்கள்! சும்மாவா பின்ன?

க.>

Innamburan Innamburan

unread,
Jul 26, 2010, 9:00:08 PM7/26/10
to mint...@googlegroups.com
திரு.இரா.பா.வின் முதல் இடுகையை ( 18வது) தொடருகிறேன். நேற்று இரவு விஜய்
டி.வி.யில் கல்லையும் கரைத்துவிடும் உருக்கமான நிகழ்வு ஒன்று கண்டேன்.
ஒளி என்று பொருள் படும் பெயரை உடைய ஒரு இளம்பெண், ஒளி அருளும்
இரெத்தினமாக மாறி விடுகிறாள், ஒரு சமணத்துறவியாக. மாறாத புன்னகை. சொகுசு
வாழ்க்கையிலிருந்து, பேரெழிலிலும் பேரெழில் நாடி, கடுந்தவம், வறுமை,
தொண்டு என்று பயணிக்க தொடங்குகிறாள். அங்கு உவகை, அழுகையைச் சார்ந்த
பெருமிதம் என்ற மெய்ப்பாடுகளை கண்டேன். பிறகு எனக்கு உறக்கம் வரவில்லை.
மேலும் எழுத கை வரவில்லை.

இன்னம்பூரான்

2010/7/27 N. Kannan <navan...@gmail.com>:
>

Hari Krishnan

unread,
Jul 26, 2010, 9:44:39 PM7/26/10
to mint...@googlegroups.com

2010/7/27 N. Kannan <navan...@gmail.com>

யப்பா! மூச்சு முட்டுது!

பாரதியை ஆழ்வார் என்று மத்திய கைலாஷ் ஆலயத்தில் வழிபடுகிறார்கள்! சும்மாவா பின்ன?

ஷெல்லிதாசன் என்ற புனைபெயரில் எழுதிய பாரதி, கீட்ஸையும் நிறையப் படித்திருந்தான் என்று அனுமானிக்க இடமிருக்கிறது.  அவனுடைய குயில் பாட்டுக்கும் ஓட் ஆன் எ நைட்டிங்கேலுக்கும் சிற்சில ஒற்றுமைகள் உண்டு.

‘உங் கூவலக் கேட்டா எனக்கு ஹெம்லாக் குடிச்ச மாதிரி ஆகுது‘ன்னு பாடின கீட்ஸை ஆழ்வாராக்கிக் கொரியாவில் கோவில் எதுவும் இல்லையே?  :D

N. Kannan

unread,
Jul 26, 2010, 10:49:03 PM7/26/10
to mint...@googlegroups.com
2010/7/27 Hari Krishnan <hari.har...@gmail.com>:

> ‘உங் கூவலக் கேட்டா எனக்கு ஹெம்லாக் குடிச்ச மாதிரி ஆகுது‘ன்னு பாடின கீட்ஸை
> ஆழ்வாராக்கிக் கொரியாவில் கோவில் எதுவும் இல்லையே?  :D
>

ஹ..ஹா!

இந்த ஆனந்த அநுபூதி தமிழ் பக்தி கலாச்சார வெளிப்பாடு என்று
எண்ணியிருந்தேன். ஆங்கிலேயர்களுக்கு இந்தியத் தாக்கம் இருக்கலாம்.
தூரக்கிழக்கில் உணர்வு பூர்வமாக, ‘அழுவன், தொழுவன்’ என்று ஆனந்தித்து
வழிபாடு செய்வது மிகக்குறைவு. பௌத்தமா? தாவா? ஷிந்தோவா? என்று
தெரியவில்லை. கிறிஸ்தவத்தில் இம்முறை இருக்கிறது. குறிப்பாக காஸ்பல்
முறையில். இஸ்லாமில் சூஃபி முறைகளில் வட்டமிட்டு ஆடிக்களிக்கும் முறை
உள்ளது (குறிப்பாக துருக்கியில் இது பிரபலம்).

பாரதி ஆழ்வார் வழி என நினைத்திருந்தேன். நீங்கள் சொல்வதைப் பார்த்தால்
அது ஆங்கிலத்தாக்கமென்று தெரிகிறது. ஆயினும் அவனிடம் சிற்சில நேரங்களில்
பிரகாசமான உள்ளொளிக் கவிதைகள் பீறிட்டு வெளிப்படுகின்றன. அவன் ஆழ்வாரா?
இல்லையா? என்பது வேறு விஷயம் :-))

க.>

kalairajan krishnan

unread,
Jul 27, 2010, 6:04:41 AM7/27/10
to mint...@googlegroups.com

On 7/23/10, Banukumar Rajendran <banuk...@gmail.com> wrote:

தமிழ் நாட்டு ஜைநர்கள்

-        விஜய நகரம் மகாராஜா கலாசாலையில் சரித்திர போதகாசிரியராகிய ஸ்ரீமான் எம்.எஸ்.இராமசாமி அய்யங்கார் (1920ல் எழுதியது)

திருக்குறளுடைய ஆசிரியர் எந்தமதத்தைச் சார்ந்தவர் என்பது ஒரு பெரிய கேள்வியாகவிருந்து வருகிறது. அவ்வாசிரியர் ஜைநரென்று சில பெரிய வித்வான்கள் உறுதியாகக் கூறுகின்றார்கள். அவர் ஹிந்து தெய்வம் எதையும் வணங்கா திருத்தலும் மலர்மிசை யேகினான், எண் குணத்தான் என்று கடவுளைக் குறிப்பிடுதலுமே அவர் ஜைநர் என்று கூறுவதற்குப் போதுமான ?ஆதாரங்களென்று கருதப் படுகின்றன.

மலர்மிசை ஏகுதல் என்பது இது வினைச் ​சொல்
இந்த வினையைச் ​செயலாற்றுகின்ற அனைவருக்கும் இது பொருந்தும்
 
மலர்மிசை ஏகினான் - என்பது மலர்மிசை ஏகிய அனைத்துத் ​தெய்வங்களையும் (கடவுளரையும்) குறிக்கும் என்றே நினைகிறேன்
 
பூ(மலர்)யில் ​தோன்றிய கடவுளர் அனைவருமே மலர் (தாமரை- பத்ம பீடம்)மீது ஏகியே இருப்பர், 
 
இது பற்றி இன்னும் அதிகமாக சிந்திக்க ​வேண்டியுள்ளது,   தாங்களிடம் இது குறித்து ​மேலதிக கருத்துக்கள் இருந்தால் அறிந்து ​கொள்ள ஆர்வமாக உள்ளேன்
 
அன்புடன்
கி. காளைராசன்
 
ஜைநர்கள் தங்களுடைய ஆசார்யர்களுள் ஒருவரான ஏலாச்சாரியார் என்பவர் குறளை இயற்றியதாக நம்புகிறார்கள். பழைய சிறந்த தமிழ்க்காப்பியங்களுள் ஒன்றாகிய நீலகேசி என்னும் நூலினுடைய உரையாசிரியராகிய சமயதிவாகர வாமன மாமுனிவர் தமது உரையில் திருக்குறளைக் குறிப்பிடும் பொழுதெல்லாம் அதை “எம்மோத்தாதலால்”  (எமது வேதம் ஆகையினால்) என்று எழுதி யிருக்கின்றார். இந்தக் கொள்கை உண்மையானால் ஜைநர்கள் கி.பி. முதல் நூற்றாண்ட்டில் தென்னாட்டில் பிரவேசித்துத் தங்கள் மதத்தைத் தமிழ்ப் பாஷை மூலமாக வெளியிட ஆரம்பித்தனரென்று ஊகிக்கலாம்.

     ஜைநர்கள் பெரிய வித்யார்த்திகளாய் இருந்தது மல்லாமல் புத்தகங்களை எழுதுபவருமாய் இருந்தனர். அவர்கள் நூற்களையும் சாஸ்திரங்களையும் ஸ்வபாவ மாகவே நேசித்து அவைகளை விருத்தி பண்ணும் முயற்சி யுடையவர்கள். தமிழில் ஜைநர்கள் செய்யப் பட்டிருக்கும் நூல்கள் தமிழர்களுடைய ஐஸ்வர்யங்களுள் மிகவும் விலையுயர்ந்தவை. இலக்கண, இலக்கிய விரோதங்களில்லாமல் சமஸ்கிருத சொற்களைத் தமிழ்ச் சொற்களோடு கலந்து உபயோகிக்கும் முறையைக் காட்டியவர்களும் அவர்களே. கன்னட நூற்களும் ஜைநர்களுக்கு ஏராளமாகக் கடன்பட்டிள்ளன. உண்மையில் அவைகளை முதலில் எழுதியவர்களும் இவர்களே. இங்கு (L.Rice) எல். ரைஸ் என்பவர் எழுதுவது கவனிக்கத் தக்கது; அதாவது: “பன்னிரண்டாவது நூற்றாண்டின் மத்தியகாலம் வரையில் கன்னட நூற்கள் முழுமையும் ஜைநர்களுடையவையே. ஜைந நூற்களே பின்னும் நீண்ட காலம் வரையுல் உயர்ச்சி பெற்று வந்தன. கன்னட பாஷையில் மிகப்பழமை யானவையும், அதிக மேன்மை தங்கியவுமான நூற்களேல்லாம் ஜைநர்களுடையனவே” என்பதே. இன்னும், ரவரண்ட் கிட்டல் என்பவரும் இம்மாதிரியே கூறுகிறார்; அதாவது: “ஜைநர்கள் தங்கள் சமூகத்திற்காக எழுதியது மல்லாமல், சாஸ்திரங்களின் மேலுள்ள இச்சையினாலும் அநேக நூற்களை எழுதி யிருக்கின்றனர். சில சமஸ்கிருத நூற்களைக் கன்னடத்தில் பொழிபெயர்த்து மிருக்கின்றனர்.” என்பதே.

     உன்னதமான அஹிம்ஸா விரதம் ஹிந்துவேதாந்த ஆசாரங்களைச் சரிப்படுத்தி இருக்கிறது. ஜைந உபன்னியாசங்கள் காரணமாகப் பிராமணர் மிருகபலியை நிறுத்தி அதற்குப் பதிலாக யாகங்கள் செய்யும் பொழுது மாவினால் மிருகங்கள் செய்து உபயோகப் படுத்து கின்றனர்.

     விக்ரக ஆராதனையும் தேவாலய நிர்மாணமும் தென்னிந்தியாவில் பெரும்பாலும் ஜைநர்களினாலேயே ஏற்பட்டன. சைவகோயில்களில் சந்நியாசிகளைக் கும்பிடுவது ஜைநப் பழக்கத்தில் நின்று நேராகவே கடன் வாங்கப்பட்டிருக்கின்றது. ஜைநர்களா லேற்பட்ட மற்ற எல்லாத் திருத்தங்களை விட மேலானவை, திராவிடர்களுடைய ஞான, நீதி, அபிவிருத்திக்குக் காரணமா யிருந்தனவும், ஜைந கல்விக் கழகங்களுக்கும் பிரசாரங்களுக்கும் போட்டியாக ஏற்படுத்தப்பட்டனவுமான பாடசாலைகளேயாம்.
------
------

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
முனைவர் கி, காளைராசன்
உதவிப் பதிவாளர்
அழகப்பா பல்கலைக்கழகம்
காரைக்குடி - 630 003
தமிழ்நாடு, India.
Dr. K. Kalairajan (Cell: 94435 01912)
Assistant Registrar
Alagappa University
KARAIKUDI -630 003

Tthamizth Tthenee

unread,
Jul 27, 2010, 7:14:08 AM7/27/10
to mint...@googlegroups.com
அனேகமாக  தாமரை மலரில் இருப்பது போன்ற  தோற்றம்  ப்ரும்மனுக்கும், சரஸ்வதிக்கும், லக்‌ஷ்மிக்கும்,
புத்தருக்கும், மஹாவீரருக்கும் 
 
ஒரு ஒற்றுமை  தெரிகிறது
 
முதன் முதலில் மலர் மிசை ஏகியவன்  ஸ்ரீமன் நாராயணனின் நாபிக்கமலத்திலிருந்து அருள் புரியும் ப்ரும்மன்
 
ஆக  பிரும்மனுக்கும்  ஏனைய மலர்மிசை ஏகியவர்களுக்கும்  சாந்தம், படைக்கும் திறன், கருணை, தம் குடையின் கீழ் அனைவரையும்  கட்டிப்போடும் திறமை  ஆகியவைகளில் ஒற்றுமை தெரிகிறது
 
மலர் மிசை ஏகினான்  மாண் அடி சேர்ந்தார்  :
 
என்றால்   ஸ்ரீமன் நாராயணனை  துதிப்போர்க்கு
எல்லா நலமும் கிட்டும்  என்பதாகவும்  இருக்கலாம்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
27-7-10 அன்று, kalairajan krishnan <kalair...@gmail.com> எழுதினார்:

--

kalairajan krishnan

unread,
Jul 27, 2010, 6:38:12 AM7/27/10
to mint...@googlegroups.com
On 7/26/10, N. Kannan <navan...@gmail.com> wrote:
மழித்தலும் நீட்டலும் ​வேண்டா உலகம்
 
இக்குறளில்
எதை மழித்தல்
எதை நீட்டல்
என்று குறிப்பிட வில்லை
 
மழித்தல் என்றதும் என் நினைவிற்கு வருவதெல்லாம் சுன்னத்துக் கலியாணம் தான்
நீட்டல் என்றதும் என் நினைவிற்கு வருவதெல்லாம் காது வளர்த்துக் ​கொள்வதுதான்
 
அன்புடன்
கி. காளைராசன்
 
நான் நி​னைப்பது எல்லாம் முகம்மதியர்கள் மழித்துக் ​கொள்ளும் சுன்னத்துக்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

kalairajan krishnan

unread,
Jul 27, 2010, 7:18:32 AM7/27/10
to mint...@googlegroups.com
On 7/27/10, Tthamizth Tthenee <rkc...@gmail.com> wrote:
அனேகமாக  தாமரை மலரில் இருப்பது போன்ற  தோற்றம்  ப்ரும்மனுக்கும், சரஸ்வதிக்கும், லக்‌ஷ்மிக்கும்,
புத்தருக்கும், மஹாவீரருக்கும் 
 
ஒரு ஒற்றுமை  தெரிகிறது
 
முதன் முதலில் மலர் மிசை ஏகியவன்  ஸ்ரீமன் நாராயணனின் நாபிக்கமலத்திலிருந்து அருள் புரியும் ப்ரும்மன்
 
ஆக  பிரும்மனுக்கும்  ஏனைய மலர்மிசை ஏகியவர்களுக்கும்  சாந்தம், படைக்கும் திறன், கருணை, தம் குடையின் கீழ் அனைவரையும்  கட்டிப்போடும் திறமை  ஆகியவைகளில் ஒற்றுமை தெரிகிறது
 
மலர் மிசை ஏகினான்  மாண் அடி சேர்ந்தார்  :
 
என்றால்   ஸ்ரீமன் நாராயணனை  துதிப்போர்க்கு
எல்லா நலமும் கிட்டும்  என்பதாகவும்  இருக்கலாம்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
வணக்கம்
தாங்கள் கூறுவது மிகவும் சரியாதாக அமையலாம்,
ஆனால் மாணடி-க்கு மட்டும் சரியான விளக்கம் ​கொடுக்க ​வேண்டும்
மாணடியின் ​பொருளைக் ​கொண்டே மலர்மிசை ஏகியவரை நாம் காணமுடியும்

Banukumar Rajendran

unread,
Jul 27, 2010, 11:14:15 AM7/27/10
to mint...@googlegroups.com
ஐயா,
 
//மலர்மிசை ஏகுதல் என்பது இது வினைச் ​சொல்
இந்த வினையைச் ​செயலாற்றுகின்ற அனைவருக்கும் இது பொருந்தும்
//
 
மலர்மிசை ஏகினான் என்பது மலர் மேல் நடந்தான். மலர்மேல் நடந்தவர்கள் அருகனும், புத்தனும். மற்ற கடவுளர்கள் மலர் மேல் நடந்ததாக உரையில்லை. தமிழ் நிகண்டுகள் மற்றும் அல்லாமல் வடமொழி நிகண்டுகளும் அருகனையும், புத்தனையும் “அவ்வாறு சென்றார்கள்” என்று சொல்லும்.
 
//பூ(மலர்)யில் ​தோன்றிய கடவுளர் அனைவருமே மலர் (தாமரை- பத்ம பீடம்)மீது ஏகியே இருப்பர், //
 
:-) உரையாசிரியர்கள் என்ன உரைக்கிறார்கள் என்றுப் பார்க்கவும்.
 
இரா.பா

Banukumar Rajendran

unread,
Jul 27, 2010, 11:17:59 AM7/27/10
to mint...@googlegroups.com
ஐயா,
 
//அனேகமாக  தாமரை மலரில் இருப்பது போன்ற  தோற்றம்  ப்ரும்மனுக்கும், ..//
 
குறள் சொல்வது மலர் மேல் நடந்தவனை. இருப்பவர்களை அல்ல! :-))
 
என் பதிவு:
 
2007ல் எழுதியது! (காளை ஐயாவும் பார்க்க)
 
இரா.பா

On 7/27/10, Tthamizth Tthenee <rkc...@gmail.com> wrote:

Banukumar Rajendran

unread,
Jul 27, 2010, 11:24:01 AM7/27/10
to mint...@googlegroups.com
ஐயா,
 
//
மழித்தலும் நீட்டலும் ​வேண்டா உலகம்
 
இக்குறளில்
எதை மழித்தல்
எதை நீட்டல்
என்று குறிப்பிட வில்லை
//
 
இக்குறள் “கூடா ஒழுக்கம்” என்ற அதிகாரத்தில் கூறப்படுகிறது.
 
மழித்தல்=கொட்டை அடித்தல்
நீட்டல்=முடியை நீளமாக வைத்துக் கொள்ளல்.
 
சமணர்கள்= முடியை பிடுங்குபவர்கள். பெரிய மயிர் பிடிங்கினு நினைப்போ? என்ற சொல்வழக்கு கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
 
இரா.பா

On 7/27/10, kalairajan krishnan <kalair...@gmail.com> wrote:

வினோத் ராஜன்

unread,
Jul 27, 2010, 11:33:23 AM7/27/10
to மின்தமிழ்
//பெரிய மயிர் பிடிங்கினு நினைப்போ? என்ற
சொல்வழக்கு கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். //

Do you mean to imply, the phrase originated as a derogatory term for
the Jainas ?

V

On Jul 27, 8:24 pm, Banukumar Rajendran <banukuma...@gmail.com> wrote:
> ஐயா,
>
> //
> மழித்தலும் நீட்டலும் ​வேண்டா உலகம்
>
> இக்குறளில்
> எதை மழித்தல்
> எதை நீட்டல்
> என்று குறிப்பிட வில்லை
> //
>
> இக்குறள் “கூடா ஒழுக்கம்” என்ற அதிகாரத்தில் கூறப்படுகிறது.
>
> மழித்தல்=கொட்டை அடித்தல்
> நீட்டல்=முடியை நீளமாக வைத்துக் கொள்ளல்.
>
> சமணர்கள்= முடியை பிடுங்குபவர்கள். பெரிய மயிர் பிடிங்கினு நினைப்போ? என்ற
> சொல்வழக்கு கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
>
> இரா.பா
>

> On 7/27/10, kalairajan krishnan <kalairaja...@gmail.com> wrote:
>
>
>
>
>
> > On 7/26/10, N. Kannan <navannak...@gmail.com> wrote:
>
> >> 2010/7/26 Banukumar Rajendran <banukuma...@gmail.com>:

> >> > ஆனால், ஆராய்ச்சி என்று வரும் போது, நம் Mental model களைத் தள்ளி
> >> > வைத்துவிட்டு, மெய்ப் பொருள் காணுதல் அறிவு என்றவாறு உண்மை காணுதல் நம்
> >> கடன்.
> >> > தேவர் சமணர் என்றால் அதில் என்ன பிணக்கு?!!
>
> >> வள்ளுவர் சமணர்தான் என்று இன்னும் முழுமையாய் நிரூபிக்கப்படவில்லை.
> >> நம்மாழ்வார் போன்ற ஞானிகளே வள்ளுவன் கூறும் அறவாழி அந்தணன் யாரென்று
> >> மறுவாசிப்பு செய்கிறார்கள் என்றால் வள்ளுவன் குறளில் அதற்கான சான்றுகள்
> >> இருக்க வேண்டும். மேலும், வள்ளுவன் வைதீகத்தை எதிர்ப்பவனாகத்
> >> தெரியவில்லை.
>
> >> சரி, இதுவொரு காலக்கணக்கு! காலத்தைக் கடந்து உண்மை காணும் முயற்சி.
>
> >> வள்ளுவன் கைப்பட எழுதிய ஓலைச்சுவடி வேண்டும் என்பார் டாக்டர் கலாம்.
> >> இருந்தால் என்ன? நம்மால் நிச்சயம் வாசிக்கமுடியாது (அதாவது இப்போது
> >> சொல்வது போல் பழமையானது குறள் என்றால்!). அப்போது தமிழ் வரி வடிவங்களே

> >> மாறுபட்டு இருந்தன. *மழித்தலும் நீட்டலும் வேண்டா!* என்று சொன்னவருக்கு

> >> தாடி வைத்துப் பார்ப்பது ஒரு பேஷன்தான்! இல்லையா ;-)
>
> >> க.>
>
> > மழித்தலும் நீட்டலும் ​வேண்டா உலகம்
>
> > இக்குறளில்
> > எதை மழித்தல்
> > எதை நீட்டல்
> > என்று குறிப்பிட வில்லை
>
> > மழித்தல் என்றதும் என் நினைவிற்கு வருவதெல்லாம் சுன்னத்துக் கலியாணம் தான்
> > நீட்டல் என்றதும் என் நினைவிற்கு வருவதெல்லாம் காது வளர்த்துக் ​கொள்வதுதான்
>
> > அன்புடன்
> > கி. காளைராசன்
>
> > நான் நி​னைப்பது எல்லாம் முகம்மதியர்கள் மழித்துக் ​கொள்ளும் சுன்னத்துக்
>
> > --
> >> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> >> to visit our Muthusom Blogs at:

> >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,

Banukumar Rajendran

unread,
Jul 27, 2010, 11:45:27 AM7/27/10
to mint...@googlegroups.com
இல்லை வினோத். உயர்த்தியே சொல்லியிருக்கிறார்கள் என்பதுபோல் படுகிறது.!!
 
இரா.பா

"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
It is loading more messages.
0 new messages