--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
அனைத்து அரசியல், அதிகாரிகளின், அறிவிப்புகளும், விசாரனை முடிவுகளும், தாங்களின் முதல் வாக்கியத்தை வைத்தே ஆரம்பிக்கும்.
வாழ்த்துக்கள்.
---
அமைதியாகச் சென்றாேரை
யார் கட்டுப்படவில்லை,
ஏன் அமைதியைக் கட்டுப்படுத்த வேண்டும்?
அந்த வேனில் உள்ள நச்சுக்கும்பல் அப்பாவி மக்களை சுட்டுக் காெள்ளும் வரை மக்கள் அமைதியில் உணர்வுக்களம் கண்டனர். வேனில் இருந்தாேர் காவல்துறை எனக் கூறினால் தவறு. சீருடை இல்லாமல் எதிரி நாட்டு மக்களை, வாகனத்தில் மீது ஏறி சுடுவதை பாேன்று என்ன சாெல்ல?
பிரிட்டீஸார் கூட தரையில் இருந்தே தாக்குதல் நடத்தியதாக செய்தி.
---
எறும்பு கடித்தால் என்ன செய்வீர்?
மனிதனைக் காெலை செய்ய வண்டியின் மீது ஏறி நின்று சுட்டனர். மக்களைக் காெண்டனர் பின்னர் தங்களச் சுடப் பயன் பயன்படுத்திய வாகனத்தை கவிழ்த்தனர். எறும்பையும், வாகனத்தையும் ஒப்பீடு செய்யுங்கள்.
மண்டையை கையைக் காலை உடைக்கும் நாயை என்ன செய்வீர் ஐயா?
மற்றாெரு காணாெலியை பாருங்கள், ஒருவர் சாகத் துடித்துக் காெண்டு உள்ளார்? காலும்,கையும், தலையும் மட்டும் துடிக்குது. என்ன செய்வீர்?
"நடிக்காதே பாே" என ஒரு காட்டுமிராண்டி கூறுகிறான். இவனையும் பாேலீஸ் எனக் கூறுகிறீரா, இ அவர்களே?
ஜெயபாரதன் ஒரு வரி கூறினார்,
Nobody can stop it's installation.
That nobody is உயிருக்குப் பாேராடும் நபர். அத்தருணத்திலும் காப்பாற்று எனக் கூட மூளையில் உதிக்காத மடயர்களை என்ன சாெல்லீர்? பாேலீஸ்!
சபாஷ்; இ. வாழ்த்துக்கள்.
---
The shooting done up from the polish van. Without uniform polish
---
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு. -355
..
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு. -423
---
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
The Tamil Nadu Pollution Control Board (TNPCB) has ordered the closure of Sterlite Copper Smelter plant in Thoothukudi with immediate effect and disconnected electricity supply to the unit early on Thursday.
Orders to close the plant were issued by the Chairman of the TNPCB on Wednesday. The power supply to the unit was disconnected at 5.15 a.m. on Thursday, sources said.
In its orders, the TNPCB said that during inspections undertaken by its officials on May 18 and 19, it was found that “the unit was carrying out activities to resume its production operations.”
The Hindu explains: Sterlite protests
Following this, the Joint Chief Environmental Engineer, Tirunelveli, recommended disconnection of electricity supply to the plant.
The TNPCB ordered the closure and disconnection of electricity supply under provisions of Section 33A of the Water (Prevention and Control of Pollution) Act, 1974, and Section 31A of Air (Prevention and Control of Pollution) Act, 1971.
The Board took cognisance of the application made by Vedanta Ltd. seeking renewal of the Consent To Operate (CTO) and the rejection of the application in April by the Board for non-compliance of certain conditions under the previous CTO.
12 protesters died in police firing in the last two days in Thoothukudi. On Wednesday evening, the Tamil Nadu government invoked a “public emergency” and asked internet service providers to cut off internet services for 5 days in Thoothukudi, Tirunelveli and Kanniyakumari districts, to prevent spread of provocative messages on social media by anti-social elements.
--
25/05/2018
https://www.vikatan.com/news/tamilnadu/125904-a-request-to-police-department-by-a-common-man.html
தமிழக வரலாற்றில் கடந்த இரண்டு நாள்களுமே கறுப்பு தினங்களாகப் பதிவு செய்யப்படும். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 13 பேர் பலியாகியிருக்கிறார்கள். தாங்கள் வாழும் நிலத்தை, சுவாசிக்கும் காற்றை, குடிக்கும் தண்ணீரை அதிகாரத்தின் பிடியிலிருந்து மீட்க முயன்றவர்களுக்கு இந்த அரசு துப்பாக்கிக் குண்டுகளை பதிலாகத் தந்திருக்கிறது.
அரசு கொடுத்த வேலையை கடமை தவறாமல் செய்து முடித்திருக்கிறார்கள் காவல்துறையினர். நேற்று முன்தினம் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பற்றிய செய்தி வெளியாகி, அந்த வீடியோ வைரல் ஆனது. வெறிபிடித்த வேட்டையர்களைப் போலத் துப்பாக்கிகளை தூக்கிக் கொண்டு மக்களைத் தேடும் காவலர்களுக்கு மனச்சாட்சி கொஞ்சமாவது இருக்குமா என்பது சந்தேகம்தான். வண்டியின் மேலே இருந்த ஒருவர் துப்பாக்கியை மற்றொருவரிடம் ஒப்படைக்கும் போது கீழே ``கமான் டா அடிடா... ஒருத்தனாவது சாவனும்" என்று கீழே நிற்கும் காவலர் ஒருவரின் குரல் கேட்கிறது. இவ்வளவு வன்மம் மனதில் இருக்கும் ஒருவரால் எப்படிச் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற முடியும்? துப்பாக்கியால் உயிரைப் பறிக்கும் அளவுக்கு அவர்கள் என்ன தவறு செய்தார்கள்? தங்களுக்கான உரிமையை அவர்கள் கேட்பது மரணத்தைக் கொடுக்கும் அளவுக்குத் தவறு என்று சட்டத்தில் எங்காவது குறிப்பிடப்பட்டிருக்கிறதா ?
போராட்டத்தின் போது நடைபெற்ற தடியடி காட்சிகளையும், அதன் பின்னரான துப்பாக்கிச் சூட்டின் காட்சிகளையும் பார்க்கும்போது காவல்துறையினர் எப்பொழுது மனிதர்களை வேட்டையாடும் வேட்டைக்காரர்களாக மாறினார்கள் என்றே தோன்றியது. கூடவே எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய `எனது இந்தியா' புத்தகத்தின் சில பக்கங்களும் நினைவில் வந்து சென்றது. `புலியின் கேள்விகள்' என்ற அந்தப் புத்தகத்தில் இருக்கும் பகுதியைச் சிலர் படித்திருக்கக் கூடும்
``வேட்டை என்பது சாகச விளையாட்டா... அல்லது உயிர்க்கொலையா பசிக்காக மிருகங்களைக் கொல்வது வேறு, பெருமை அடித்துக் கொள்ள மிருகங்களைக் கொல்வது வேறு இல்லையா ? ஆட்சியில் இருக்கும் மன்னர்களே வேட்டை ஆடுவது சரிதானா ? "
இப்படிப் பல கேள்விகளுடன் தொடங்கும் அந்தப் பக்கங்கள் அதற்கு பதிலாகச் சில சம்பவங்களைப் பதிவு செய்கிறது.
ஆங்கிலேயர்களால் அடிமைப்படுத்தப்பட்டுக் கிடந்த அன்றைய இந்தியாவுக்கு ஐந்தாம் ஜார்ஜ் முடி சூட்டிக்கொள்ள விரும்புகிறார். 1911-ம் வருடத்தில் பதவியேற்றுக் கொள்கிறார். அவருக்கு வேட்டையாடுவது பிடித்த பொழுதுபோக்கு. அதற்காக இமயமலையின் அடிவாரப் பகுதி ஒன்றில் முகாம் அமைக்கப்படுகிறது. மன்னர் அடர்ந்த காட்டினுள்ளே புலி வேட்டைக்குச் செல்கிறார். ஆனால், அவர் வெறுங்கையோடு செல்லவில்லை. கூடவே 14,000 ஆட்கள் 300 யானைகள், சிங்கிள் பேரல், டபுள் பேரல் துப்பாக்கிகள் என ஒரு படையே கிளம்பிச் சென்றது. யானைகளை வைத்து புலிகளைச் சுற்றி வளைத்து வேட்டையாட மன்னர் விரும்பினார். முதல் நாள் 300 யானைகள், அதை ஓட்டிச்செல்லும் ஆட்கள், வழிகாட்டிகள், கிராமவாசிகள் எனப் பலர் காட்டுக்குள் சென்றார்கள். புலி பதுங்கியிருந்த இடத்தை யானைகள் சுற்றி வளைக்க புலி சீற்றத்தில் பாய்ந்தது.
யானைகளின் மீது அமர்ந்திருந்த வீரர்கள் ஈட்டியால் புலியைத் துரத்தி மன்னரின் முன்னால் போகும்படி செய்தார்கள். தங்கச் சிம்மாசனம் கொண்ட அம்பாரியில் யானையின் மீது அமர்ந்திருந்த மன்னர் துப்பாக்கியால் அவரின் முன்னால் பாய்ந்து வந்த புலியைச் சுட்டுக் கொன்றார். இப்படி ஐந்தே நாள்களில் 39 புலிகளை அவர் வேட்டையாடியிருந்தார். இதற்கு உதவியதற்காக நேபாள மன்னருக்கும் உடன் வந்த 14,000 பேருக்கும் சன்மானங்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன. அதாவது சொன்ன வேலையைச் செய்ததற்காக அடிமைகளுக்கு அவர் அளித்த வெகுமதி.
நேற்றைக்கு நடந்த சம்பவம் கூட இதைப்போல ஒரு வேட்டைதான். என்ன ஒரு வித்தியாசம் இங்கே புலிகளுக்குப் பதிலாக மனிதர்கள் வேட்டையாடப்பட்டிருக்கிறார்கள். வேட்டையின் போது காட்டுக்குள் என்ன நடக்கிறதென்றே தெரியாமல் மிரண்டு பாயும் விலங்குகள் மீது எப்படிச் சுடுவார்களோ அதைப்போல அப்பாவி பொதுமக்களை நோக்கிச் சுட்டிருக்கிறார்கள்.
யானைகளுக்குப் பதிலாக இங்கே காவல்துறையினரின் வாகனங்கள், சக்தி வாய்ந்த துப்பாக்கிகள், சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் அதிகாரம் படைத்தவர்கள் எனக் காலம் மாறியிருக்கிறதே தவிர காட்சிகள் இன்னும் அப்படியேதான் இருக்கின்றன. அன்றைக்கு இருந்த அதே அதிகாரம்தான் இன்றைக்கும் உயிர்களைச் சுட்டு வீழ்த்தியிருக்கிறது.
நேற்றைக்குத் துப்பாக்கிக் கையில் கிடைத்தவுடன் ஏதோ மெரினாவில் பலூன் சுடும் துப்பாக்கிக் கிடைத்த குழந்தையின் குதூகலத்துடன் காவலர்கள் கிளம்புவதை வீடியோவில் பார்க்க முடிகிறது. அவர்கள் சுடும் ஒவ்வொரு குண்டும் ஒருவனின் உடலைத் துளைக்கும் என்பது தெரிந்தும் கூடச் சிறிதும் தயக்கமின்றி துப்பாக்கியின் விசையை அழுத்தியிருக்கிறார்கள். அந்த வாகனத்தின் மீது நின்று கொண்டு சுடும்போது குண்டு இடுப்புக்கு மேல்தான் தாக்கும் என்பதைத் தெரிந்துகொண்டுதான் சுட ஆரம்பித்தீர்களா... நீங்கள் சுட விரைந்தது மனித உயிர்கள் என்பதை அந்த நொடியில் அறிந்திருந்தீர்களா? உங்கள் கையில் வைத்திருக்கும் லத்திகளும், கண்ணீர்ப் புகை குண்டுகளும் தவறு செய்தவர்களைத்தான் தண்டிக்க வழங்கப்பட்டது என்பதை எந்தக் கணத்திலாவது உணர்ந்திருக்கிறீர்களா ?
நேற்று உங்கள் துப்பாக்கியிலிருந்து சாதாரணமாக ஒரு தோட்டா பாய்ந்ததாக நீங்கள் நம்பலாம். ஆனால், அந்தத் தோட்டா உண்மையில் யாருக்காகப் பாய்ந்தது என்பது உங்களுக்குத் தெரியுமா? அதன் பின்னால் இருக்கும் அரசியல் உங்களுக்குப் புரியுமா? நீங்கள் எத்தனை அறிக்கை வேண்டுமானாலும் விடுங்கள், எத்தனை சாட்சிகளை வேண்டுமானாலும் சமர்ப்பியுங்கள், எங்களைத் தற்காத்துக் கொள்ளத்தான் சுட்டோம் எனக் கூறுங்கள். இது போல ஆயிரம் காரணங்கள் நீங்கள் கூறினாலும் அந்தத் தோட்டா யாருக்காக உயிர்ப் பலி வாங்கியது என்பதை மட்டும் யோசித்துப் பாருங்கள்.
காவல்துறை இது போன்ற அத்துமீறல்களில் ஈடுபடும் போதெல்லாம் வழக்கம் போல் அவர்களால் ஒரு சப்பைக்கட்டு கட்ட முடிகிறது ``நாங்கள் என்ன செய்ய முடியும்? எங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையைத்தானே செய்தோம்`` சட்டமும், நீதியும் எங்கள் கண்களுக்கு எப்போதும் தெரியாது. கொடுக்கப்பட்ட வேலையைச் செய்வதற்குத்தான் பழக்கப்படுத்தப் பட்டிருக்கிறோம் என்ற வார்த்தைகளை சொல்வதற்கு உண்மையில் நீங்கள் வெட்கப்பட வேண்டும்.
எஜமானன் எதைச் சொன்னாலும் செய்வேன் என்பதற்குப் பெயர் என்னவென்று தெரியுமா? வரலாறு அதை எப்படிப் பதிவு செய்திருக்கிறது என்பதனை அறிவீர்களா.. நீங்கள் வேலை செய்ய வேண்டியது மக்களுக்காகத்தானே தவிர ஒரு போதும் அதிகாரங்களுக்கு அல்ல. ஆனால் இங்கே நடப்பதோ தலைகீழாக இருக்கிறது. அது அமெரிக்காவோ, சீனாவோ, கூடங்குளமோ, தூத்துக்குடியோ அதிகாரத்தில் இருப்பவர்கள் மக்களை ஒடுக்குவதற்குக் காவல்துறையைத்தான் ஏவுகிறார்கள். காவல்துறையும் தயங்காமல் தங்கள் கைகளைக் கொண்டு மக்களின் கழுத்தை நெறிக்கிறது. உங்களைச் சொல்லியும் குற்றமில்லை. பாவம் நீங்கள் கொடுத்த வேலையைச் செய்யத்தானே பழக்கப்படுத்தப் பட்டிருக்கிறீர்கள். சட்டத்தை மீறி எத்தனையோ விஷயங்களை உங்களால் செய்ய முடிகிறதே. அப்படியே ஏன் நீங்கள் செய்யும் வேலைக்குப் பொருத்தமாக உங்களின் பெயரை ஏவல்துறை என்று மாற்றிக் கொள்ளக் கூடாது ?
இதேபோல காவல்துறை கூறும் மற்றொரு விஷயம் எங்களை தற்காத்துக் கொள்ளத்தான் சுட்டோம் என்பது. எவ்வளவு பெரிய பொய். நீங்கள் உண்மையாகவே அப்படி நினைத்திருந்தால் சீருடையைக் கழற்றி வைத்து விட்டு மக்களுடன் இணைந்தல்லவா போராடியிருக்க வேண்டும். ஏனென்றால் அவர்கள் நீங்கள் வாழும் நிலத்துக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் சேர்த்துத்தானே நியாயம் கேட்டார்கள். இது போன்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் அடக்குமுறைகளும் வரலாற்றில் பல முறை நிகழ்ந்திருக்கின்றன. அதை ஆராய்ந்தால் ஒரு விஷயம் மட்டும் தெளிவாகத் தெரிகிறது. இதுபோன்ற நேரத்தில் உங்கள் துப்பாக்கிகள் தீயவர்களின் பக்கமாகத் தவறுதலாகக் கூட திரும்பாதவாறு பார்த்துக்கொண்டீர்கள். அதற்கு மாறாக தங்கள் உரிமையைக் கேட்டுப் போராடிய சாமானிய மக்களின் இதயத்தைத்தான் நீங்கள் செலுத்திய தோட்டாக்கள் துளைத்திருக்கின்றன.
இவையெல்லாம் முடிந்த பிறகு உங்கள் வீட்டில் போய் என்ன சொல்வீர்கள் பத்துப் பேரை சுட்டுக் கொன்று விட்டோம் என்றா? நீங்கள் செய்த பாவத்திற்காக உங்களுக்குப் பதவிகளும், பதக்கங்களும் காத்திருக்கக்கூடும். ஆனால், யார் அங்கீகரித்தாலும், யார் மன்னித்தாலும் உங்கள் மனசாட்சி எப்போதும் நீங்கள் செய்த பாவத்தை மன்னிக்கப் போவதில்லை. (மனசாட்சி எல்லாம் உங்களைப் போன்றவர்களுக்கு இல்லை எனத் தெரியும், இருந்தும் சொல்கிறோம்) குறைந்தபட்சமாக அடுத்த முறை மக்களின் போராட்டங்களைப் பார்க்கும் போது நீங்கள் அணிந்திருக்கும் சீருடை முதல் கையில் வைத்திருக்கும் ஆயுதங்கள் வரை மக்களின் வரிப் பணத்தில் வாங்கப்பட்டதுதான் என்பதையாவது நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் காப்பாற்ற வேண்டியது உங்கள் முன்னால் நிற்கும் மக்களைத்தானே தவிர முதுகுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டிருப்பவர்களை அல்ல என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். ஏனென்றால் உண்மை ஒருபோதும் முதுகுக்குப் பின்னால் ஒளிந்து கொள்ளாது.
அது எப்படி ஒரே பின்னனி கொண்ட ஒரு சிலரால் ஒரே மாதிரி சிந்திக்க முடிகிறது..??🤔🤔🤔
2018-05-23 7:11 GMT+02:00 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>:
உயிரிழப்பு இல்லாமல் போராட்டத்திற்குத் தீர்வு காண வழியில்லையா?~ நிச்சியம் உண்டு. போலீஸ் வண்டியை கவிழ்க்கக்கூடாது. போலீஸ் மீது கல் எறியக்கூடாது. போராட்டம் வேறு திட்டமிட்ட வன்முறை வேறு.இ
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
கழுகார் நுழைந்ததும், தூத்துக்குடி தொடர்பான கட்டுரைகளை வாங்கி மொத்தமாகப் படித்துப் பார்த்துவிட்டு நிமிர்ந்தார். ‘‘இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பந்தமாக அதிர்ச்சிகரமான செய்திகள் வரத் தொடங்கியுள்ளன” என்றார்.
‘‘அவை என்ன?”
‘‘போர்க்களத்தில்தான் பதுங்கு குழிக்குள் படுத்துக்கொண்டு துப்பாக்கியால் சுடுவார்கள். அப்படித்தான் தூத்துக்குடியில் வேனில் ஏறிப் படுத்துக்கொண்டு பாதுகாப்பாக ஊர்ந்து போய் சுட்டிருக்கிறார்கள். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு இடுப்புக்கு மேலேயே குண்டுகள் பாய்ந்திருக்கின்றன. போலீஸ் நண்பர் ஒருவர். ‘Center Mass பற்றி விசாரியுங்கள்’ என க்ளூ கொடுத்தார். அதுபற்றி விசாரித்தேன். தூத்துக்குடியில் துப்பாக்கிகளைக் கையாண்டவர்களுக்கு ‘ஆபரேஷன் Center Mass’ தகவல் போய்ச் சேர்ந்திருக்கிறது என்று சொல்கிறார்கள்.
‘‘அது என்ன Center Mass?’’
‘‘துப்பாக்கியால் சுடும் பயிற்சி அளிக்கும்போது துப்பாக்கியின் வகைகள், ரேஞ்ச், தோட்டாக்கள் பற்றியெல்லாம் பாடங்கள் நடத்தப்படும். அதில், Center Mass பற்றியும் விளக்குவார்கள். கலவரத்தை அடக்குவதற்காகச் சுட வேண்டுமென்றால், காலில்தான் சுடுவார்கள். ஆனால், Center Mass என்பது வேறுவகைத் தாக்குதல். அதாவது, தோட்டாக்களுக்குச் சேதாரம் இல்லாமல் உயிரை எடுக்கும் தாக்குதல் இது. எங்கு சுட்டால் இலக்கு தவறாதோ, உயிர் உடனே போகுமோ, அங்கே சுடுவது. வயிற்றுக்கு மேலே இருக்கும் உடல்பகுதிதான் அகலமானது. உயிர் காக்கும் உறுப்புகள் இங்கேதான் உள்ளன. இந்த இடங்களைக் குறிவைத்துச் சுடுவதைத்தான், Center Mass எனப் பயிற்சியில் குறிப்பிடுவார்கள். அதாவது, உடலின் மத்தியில் அகன்று இருக்கும் பகுதியில் சுடுவது. துப்பாக்கி சுடும் பயிற்சியில் இதற்காக வைக்கப்படும் மனித உருவங்களில், தலையிலும் மார்பிலும் சுட வைப்பார்கள். தூத்துக்குடியில் பலரும் இந்த இடங்களில் குண்டு பாய்ந்தே இறந்துள்ளனர். ‘இப்படித்தான் சுட வேண்டுமென அவர்களுக்கு உத்தரவு போயுள்ளது’ என்கிறார்கள் போலீஸ் வட்டாரத்தில்.’’
‘‘இப்போதுகூடத் துப்பாக்கிச்சூடு பற்றித் தனக்குத் தெரியாது என்ற தொனியிலேயே முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகிறாரே?”
‘‘எடப்பாடி சொல்வதில் ஓர் உள்ளர்த்தம் உள்ளது. 100 நாள்கள் தூத்துக்குடியில் போராட்டம் நடந்தபோது, ஒவ்வொரு நாளும் முதல்வருக்கு உளவுத்துறை ரிப்போர்ட் அனுப்பிக் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் போலீஸ் உயரதிகாரிகள் முதல்வரைச் சந்தித்து, ‘தூத்துக்குடியில் நிலைமை மோசமாகிக் கொண்டிருக்கிறது. விரைந்து முடிவெடுங்கள்’ என்றனர். அவரோ, ‘இதில் நான் முடிவெடுக்க ஒன்றும் இல்லை. தலைமைச் செயலாளரிடம் பேசி, நீங்களே முடிவெடுங்கள்’ என்று சொல்லிவிட்டார். மத்திய உள்துறை அமைச்சகம் பல விஷயங்களை நேரடியாக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனைத் தொடர்புகொண்டுதான் தெரிவிக்கிறது. அவர், அந்தத் தகவலை முதல்வரிடம் சம்பிரதாயத்துக்குத் தெரிவித்துவிட்டு நடவடிக்கை எடுக்கிறார். இதனால்தான், முதல்வர் இதிலிருந்து கழன்றுகொண்டார். அந்த அடிப்படையில்தான் முதல்வர், ‘எனக்குத் துப்பாக்கிச்சூடு பற்றி எதுவும் தெரியாது’ என்று குறிப்பிட்டார்.’’
‘‘போலீஸ் தரப்பில் எங்கு ஓட்டை விழுந்தது?”
‘‘அண்மையில், ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டம் நடத்தினார்கள். அதில் கலந்துகொள்ள தமிழகம் முழுவதுமிருந்து ஊழியர்களை ரகசியமாகத் திரட்டினர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வருவதற்கு ஏற்பாடு செய்தனர். இதை எப்படியோ மோப்பம் பிடித்தார், தமிழகத்தின் உள்நாட்டுப் பாதுகாப்பைக் கவனிக்கும் உளவுப்பிரிவு ஐ.ஜி-யான ஈஸ்வரமூர்த்தி. அவரே உட்கார்ந்து ஸ்கெட்ச் போட்டு, போராட்டக்காரர்கள் கிளம்பும் இடத்திலேயே அவர்களுக்கு ‘செக்’ வைத்து வரவிடாமல் தடுத்தார். கடைசியில் சில ஆயிரம் பேர்தான் சென்னைக்கு வரமுடிந்தது. அவர்களைச் சென்னை போலீஸ் ஈஸியாகக் கையாண்டது. அதுவே, கூட்டம் ஒரு லட்சத்தைத் தாண்டியிருந்தால், சென்னை போலீஸ் தடுமாறிப்போயிருக்கும். அதற்குக் காரணமான ஈஸ்வரமூர்த்தி இப்போது ஹைதராபாத் போலீஸ் அகடமியில் சிறப்புப் பயிற்சிக்காகச் சென்றுவிட்டார். ‘அவர் இருந்திருந்தால் இப்படி ஆகியிருக்காது’ என்கிறார்கள். மார்ச் மாத இறுதியில் தூத்துக்குடியில் கடையடைப்பு நடந்தபோது, ஒரு பொதுக்கூட்டம் நடந்தது. அப்போது எதிர்பாராத கூட்டம் கூடியது. அதைப்பார்த்த மத்திய உளவுத்துறையினர், சில நாள்களுக்கு முன்பு தூத்துக்குடி எஸ்.பி மகேந்திரனிடம் போய், ‘100-வது நாள் போராட்டத்தில் கூட்டம் லட்சத்தைத் தாண்டலாம்’ என எச்சரித்தார்களாம். ஆனால், எஸ்.பி அலட்சியம் காட்டினார் என்கிறார்கள்.’’
‘‘போராட்டம் இந்த அளவுக்குக் கோரமான முடிவுக்குப் போக என்ன காரணம்?”
சில கார்ப்பரேட் நிறுவனங்கள் சேர்ந்து, ‘இந்தப் போராட்டங்களை விரைவில் முடியுங்கள்’ என்று மத்திய அரசுக்கு நிபந்தனை விதித்துள்ளார் களாம். ‘இதுபோன்ற போராட்டங்கள் நீடித்தால், அடுத்து வரப்போகும் திட்டங்களுக்கு இதைவிட எதிர்ப்பு எழும். அதனால், போராடும் மக்களுக்கும் போராட்டத்தை ஒருங்கிணைக்கும் இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இப்போதே மரண பயத்தைக் காட்டிவிட வேண்டும்’ என்பது மத்திய உள்துறையின் உத்தரவாம். ‘அதன்பிறகுதான் துப்பாக்கிச்சூடுக்கான திட்டங்கள் தீட்டப் பட்டன’ என்கிறார்கள். போராட்டத்தை ஒருங்கிணைப்பவர்கள் யார், தேவாலயங்களில் முக்கிய ஸ்தானத்தில் இருப்பவர்கள் யார், யாரைச் சுட்டுக்கொன்றால் போராட்டத்தை ஒடுக்க முடியும் என்ற விவரங்கள் துல்லியமாக எடுக்கப்பட்டன. அதன் அடிப்படையில், போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்கள் சிலர் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.’’
‘‘உண்மையில் தூத்துக்குடியில் உயிர்ப்பலிகள் எத்தனை?’’
‘‘அதிகாரப்பூர்வ கணக்கு இப்போதுவரை 13 என்று சொல்லப்படுகிறது. ஆனால், உள்விவரங்களை அறிந்தவர்கள் அது இரண்டு மடங்கைத் தாண்டும் என்கிறார்கள். ‘கலெக்டர் அலுவலகத்தில் நடந்த போராட்டத்தில் தாக்கப் பட்டுச் சிலர் உயிரிழந்துள்ளனர். அந்தச் சடலங்கள் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு ரகசியமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இப்போது தூத்துக்குடியில் யாராவது காணாமல் போய்விட்டதாகப் புகார் வந்தால், அப்படி புகார் செய்ய வருபவர்களை உடனடியாகப் பாளையங்கோட்டையில் போய்ப் பார்க்குமாறு அனுப்புகிறது தூத்துக்குடி போலீஸ்’ என நமக்கு நெருக்கமான சோர்ஸ் ஒருவர் சொன்னார். போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியபோது திரேஸ்புரம் பகுதி மக்கள் சிலர் கூட்டமாக போலீஸ் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அந்த இடத்தில் எண்ணிக்கையில் குறைவாக இருந்த போலீஸார், உடனடியாக வாகனத்தில் ஏறித் தப்ப முயன்றுள்ளனர். அந்த வாகனத்தைப் பொதுமக்கள் மறித்துள்ளனர். ஆனால், அவர்களை அந்த வேனை வைத்தே ஏற்றிக் காயப்படுத்தியுள்ளது போலீஸ். அப்படி அடிபட்டவர்கள் சிலரை அள்ளிக் கொண்டுபோய் மருத்துவமனையில் போட்டுள்ளனர். ஆனால், அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் யாரையும் அங்கே போலீஸ் நெருங்கவிடவில்லை. அதனால், அவர்களில் இறந்தவர்கள் யார், காயமடைந்த வர்கள் யார் என்ற விவரமும் வெளியாகவில்லை. அதுபோல, திரேஸ்புரம் பகுதியில் ஒவ்வொரு வீடாக நுழைந்து போலீஸ் தாக்குதல் நடத்துகிறது. வெளியில் வீடு பூட்டியிருந்தாலும், பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து ஆட்கள் இருக்கிறார்களா என்று சோதனையிடும் போலீஸ், அந்த வீட்டைச் சூறையாடிவிட்டுத்தான் வருகிறது.”
‘‘கன்னியாகுமரி, திருநெல்வேலி பகுதிகளிலும் கடும் கெடுபிடிகள் காட்டப்படுவதற்கு என்ன காரணம்?’’
‘‘முதன்மைக் காரணம், இந்தப் போராட்டம் அந்தப் பகுதிகளுக்குப் பரவிவிடக்கூடாது. சாதி, மத அடிப்படையில் இறுக்கமான கட்டமைப்பைக் கொண்ட அந்த மாவட்டங்களில் சாதிய ரீதியாகவும், மத அடிப்படையிலும் இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவு கிடைத்துவிடக் கூடாது. அதுபோல, சாகர்மாலா திட்டத்துக்கு இப்போதே கன்னியாகுமரியில் எதிர்ப்புக் கிளம்பிப் பிரச்னையாகிக்கொண்டிருக்கிறது. அந்தப் போராட்டக்காரர்களுக்கும் இந்தக் கலவரத்தைச் சாக்காக வைத்தே உயிர் பயத்தைக் காட்டிவிட வேண்டும் என்பதுதான் போலீஸின் திட்டம்” என்றபடி கழுகார் பறந்தார்.
‘‘இது நாடுதானா? இவரு என்ன எடப்பாடியா, ராஜபக்சேவா? என்னய்யா அப்படிக் கேட்டுட்டோம்... அந்த ஸ்டெர்லைட்ட மூடுங்கன்னு சொன்னோம். அதுக்கு இத்தனை கொலையா? அதுவும் இந்தப் பொண்ணு ஜான்சிக்கும் போராட்டத்துக்கும் என்ன சம்பந்தம்? அது புள்ளைங்களுக்கு மீன் குழம்பு ஆக்க, மீனை வாங்கிட்டு ஆட்டோவுலருந்து இறங்கியிருக்கு. பொட்டுன்னு ஒரு சத்தம். அவ்வளவுதான். மூளை சிதறி தரையில விழுந்துடுச்சு. மூணு பொட்ட புள்ளைங்களும், சின்னப் பொடியனும் இனி என்ன செய்வாக? ஏலே... நீ எவ்வளவு துட்ட வேணா குடு. அது அந்தத் தாய்க்கு ஈடாகுமால? எடப்பாடிய நான் கேக்கன்... மூளைய நீ ஒட்ட வெச்சுத் தருவியா? அந்த உயிரக் கொடுக்க முடியுமா உன்னால? உனக்கு யாரு கொடுத்த உரிமை இது? சொல்லுங்க... நீங்க சொல்லுங்க... எங்க மக்களச் சுட போலீஸுக்கு யாரு உரிமை கொடுத்தது? பாவிப் பய இப்படிச் செஞ்சுபுட்டானே... ஐயோ மாதா தாயே!”
மூதாட்டி பெலிக்கானா, போலீஸ் தடியடியில் ரத்தக் காயங்களுடன் வீங்கிப்போயிருந்த தன் கைகளை மார்பில் அடித்துக்கொண்டு அரற்றிக் கொண்டிருக்கும்போதே, நம் கைகளைப் பிடித்து அழைத்துப் போனான் அந்தச் சிறுவன்.
“ண்ணா... இங்கப் பாருண்ணா. இங்கதான் ஜான்சி அக்காவோட மூளை சிதறிக் கிடந்துச்சு” என அவன் காட்டிய இடத்தில் ரத்தக் கறை அப்படியே இருந்தது. ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்தன. தன் குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய அச்சமும் ஏக்கமுமாக ஜான்சி சடலமாக விழுந்துகிடந்த காட்சி, அந்தச் சிறுவனுக்கு மனக்கண்ணில் வந்து போயிருக்க வேண்டும். ஓங்கிக் குரலெடுத்து அழ ஆரம்பித்தான்.
தூத்துக்குடி மாநகரின் ஒவ்வொரு தெருவிலும் இப்படி ரத்தம் தெறித்த கதைகள் நிறைந்து கிடக் கின்றன. ரத்தம் தெறித்த கறைகளும் படிந்திருக்கின்றன. அவை இன்னும் பல ஆண்டுகளுக்கு நிறம் மாறாமல் அப்படியேதான் இருக்கும்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்துவந்த போராட்டம் 100-வது நாளை எட்டியது. அதன் பொருட்டு, மே 22-ம் தேதி ‘அறவழியில் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை’ என்ற அறிவிப்புடன் போராட்டத்தைத் தொடங்கிய ஆயிரக்கணக்கான பொதுமக்களில் பலர் இன்னும் வீடு திரும்பவில்லை. பலர் இனி நிர்ந்தரமாக வீடு திரும்பப் போவதுமில்லை. தங்கள் வளத்தையும் உயிரையும் உறிஞ்சும் ஒரு தனியார் நிறுவனத்துக்கு எதிராகப் போராடிய பொதுமக்கள்மீது துப்பாக்கிச்சூடு நடத்தி, பல பேரைக் கொன்று, பல பேரை முடமாக்கி, சுதந்திர இந்தியாவில் புதியதொரு ‘வரலாற்றை’ படைத்திருக்கிறது தமிழகக் காவல்துறை.
அமைதியான முறையில்தான் போராட்டம் தொடங்கியிருக்கிறது. ஆனால், இத்தனை மக்கள் கூடுவார்கள் என்பதைக் காவல்துறை எதிர்பார்க்க வில்லை. போராட்டத்தைத் தடுத்துக் கூட்டத்தைக் கலைத்திட காவல்துறைத் தொடர் முயற்சிகளை எடுக்கத் தொடங்குகிறது. அது கொஞ்சம் கொஞ்சமாகக் கலவரமாக மாறத் தொடங்குகிறது. காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தத் தொடங்கவும், அது உச்சத்தை எட்டுகிறது. இப்போதுவரை துப்பாக்கிச்சூடு எதன் அடிப்படையில் நடத்தப்பட்டது, யார் தந்த அனுமதியின் பேரில் நிகழ்த்தப்பட்டது என்பதற்கான பதில்கள் கிடைக்கவில்லை.
தூத்துக்குடி போராட்டத்தின் ஒவ்வொரு நிலையிலும், ஒவ்வொரு இடத்திலும், வன்முறையை ஆயுதமாக ஏந்தி, மூர்க்கத்தனமாகக் காவல்துறை செயல்பட்டது என்பதற்குப் பல ஆதாரங்களும் ரத்தச் சாட்சிகளும் இருக்கின்றன. திரேஸ்புரம் ஜான்சி ராணியின் கதை, மொத்த நிகழ்வில் சிறுதுளி மட்டுமே.
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில், கலவரத்தில் பாதிக்கப்பட்ட பல நூறு பேர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதில் சிவக்குமாரின் கதை இது.
‘‘கலவரத்துல ஊரே பத்திக்கிட்டு எரியுது. அங்கங்க போலீஸ்காரங்க துப்பாக்கியால சுடுறாங்கன்னு பீதி பரவிக் கிடக்கு. குண்டுச் சத்தம் கேட்டுக் குலையே நடுங்கிப் போகுது. எனக்குப் பால் வியாபாரம். கறந்த பாலை விக்கலைன்னா கெட்டுப் போயிரும். அதனால துணிஞ்சு வீட்டைவிட்டு வெளியில வந்தேன். ஆனா, நிலவரத்தைப் பார்த்து கலக்கமாயிட்டு. எப்படியாவது வீடு போய்ச் சேர்ந்தா போதும்ன்னு போய்க்கிட்டிருக்கேன். மதியம் 2.30 மணி இருக்கும். ஒரு இடத்துல போலீஸ்காரவ பத்து பேர் இருந்தாங்க. ஏதோ தீவிரவாதியைப் பிடிச்ச மாதிரி அப்படியே என்ன சுத்து போட்டாவுக. என் வண்டிய கீழ இழுத்துப் போட்டு, பால் கேனை மிதிச்சு, மொத்தப் பாலையும் ரோட்ல கொட்டிட்டு, எங்கிட்ட திரும்புனாவ. அடின்னா அடி சார்... அடிச்ச அடியில குச்சி மொத்தமா பிஞ்சு போச்சு. அப்புறம் ஒரு இரும்பு கம்பிய எடுத்து அடிச்சாவ. கை மொத்தமா காலியாயிட்டு. வலி உசுரு போகுது. துடிச்சுக் கிடக்கன்.
அந்த நேரத்துல என் பாக்கெட்லருந்து செல்போனை எடுத்தாரு ஒரு போலீஸ்காரரு. அதத் திரும்பக் கேட்டதுதான்... அதுக்கும் ஒரு அடி அடிச்சானுவளே. ஐயோ சாமி. அங்கனயே செத்துருவம்னு பயந்தேன். எந்தச் சாமி காப்பாத் துச்சுன்னு தெரியில... மொடமா கிடந்தாலும், இப்ப உயிராவது மிச்சமிருக்கு. என் நண்பன் ஒருத்தன்... சுகுமார்னு பேரு. போராடவெல்லாம் போகல அவன். பயந்த சுபாவம். ரோட்ல ஓரமா போன அவன் மேல ஷூட்டிங்க போட்டானுவ. இப்போ திருநெல்வேலி ஆஸ்பிட்டல்ல கிடக்கான். வயித்துக்குக் கீழ, தொடைக்கு மேல குண்டு தொலைச்சிடுச்சு. பிழைப்பானான்னு தெரியில. இவங்க வெளியில சொல்ற கணக்கெல்லாம் கம்மி... கொள்ளைப் பேர கொன்னு போட்ருக் கானுவ. அந்தக் கணக்கு யாருக்கும் தெரியாது. நாங்க என்னய்யா பண்ணோம்? என்ன குத்தத்த பண்ணிட்டோம்?’’ என்று கண்ணீருடன் கேட்கும் சிவக்குமாருக்கு யாரிடமும் பதில் இல்லை.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எல்லோருமே சாமானிய மக்கள். இரக்கமற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த, மிருகத்தனமான தாக்குதலில் படுகாயமடைந்த பெரும்பாலானவர்கள் தினக்கூலிகள் மற்றும் வாரக் கூலிகள். திடீரெனத் தங்கள் வாழ்வில் ஏற்பட்ட இந்தக் கொடூர சம்பவத்தால், பலரின் குடும்பங்களும் நிலைகுலைந்து போயிருக்கின்றன.
தூத்துக்குடியில் ரத்தம் குடித்த போலீஸாரின் ரத்தத் தாகம் தீர்ந்ததாகத் தெரியவில்லை. துப்பாக்கிச்சூடு தொடர்ந்து நடக்கிறது. மக்களை அத்தியாவசியத் தேவைகளுக்காகக்கூட வீதிக்கு வரவிடாமல், எதிரிகள் போன்று அடித்து விரட்டுகிற கொடுமையும் நடக்கிறது. கிராமம் கிராமமாகச் சென்று தேடுதல் வேட்டையும் நடக்கிறது. சிலர் சட்டத்திற்குப் புறம்பாகக் கைது செய்யப்பட்டு போலீஸாரின் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டும் வருகின்றனர்.
கலவரத்தின் இரண்டாம் நாள். முதல் நாள் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் அதுவரை இறந்திருந்ததாகச் சொல்லப்பட்டது. பாதிக்கப் பட்டவர்களைச் சந்திக்க பல அரசியல் கட்சித் தலைவர்களும் தூத்துக்குடி அரசு மருத்துவ மனைக்கு வந்துகொண்டிருந்த சமயம். இறந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனை செய்யப்படுவதை அறிந்து மக்கள் அங்கு கூடியிருந்தனர். வந்திருந்த தலைவர்களிடம் தங்கள் குறைகளை மக்கள் கூறிக் கொண்டிருந்தனர். தலைவர்கள் அங்கிருந்து நகர்ந்ததும், மக்களை அப்புறப்படுத்த காவல்துறை நினைத்தது. ஆனால், மக்கள் கூட்டம் கலையவில்லை. முதல் வரிசையில் இருக்கும் காவலர்கள், தங்களுக்குப் பின்னால் இருக்கும் காவலர்களுக்கு ரகசியமாக சிக்னல் செய்கிறார்கள். உடனே அவர்கள், கூட்டத்தில் காவல்துறைக்கு எதிராகக் கோஷம் போடுபவர்களைத் தங்கள் மொபைலில் படம் பிடிக்கிறார்கள்.
சில நிமிடங்கள். காவல்துறை தடியடியைத் தொடங்குகிறது. குறிப்பாக, தங்கள் மொபைலில் படம் பிடித்தவர்களைக் குறிவைத்துத் துரத்துகிறது ஒரு போலீஸ் கூட்டம். ஏதோ ஓர் இடத்தில் அவர்களை முடக்குகிறார்கள். எங்கே அடி விழுகிறது, எத்தனை பேர் அடிக்கிறார்கள் என்ற கணக்கெல்லாம் இல்லாத காட்டு மிரண்டித்தனமான தாக்குதல். ஓர் இடத்தில் 16 வயது சிறுவனைச் சூழ்ந்துகொண்டு 10 காவலர்கள் தாக்குகிறார்கள். இந்தச் சூழல் சற்றும் புரியாமல் அப்பாவித்தனமாகத் தன் வாகனத்தில் அந்தச் சாலையைக் கடக்கும் ஒருவரை இழுத்துப் போட்டு அடிக்கிறார்கள். திடீரெனத் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்கிறது.
ஒரு காவல்துறை உயரதிகாரி வந்து, ‘‘யார்மீதோ இருக்கும் கோபத்தை ஏன் சிறுவனிடம் காட்டுகிறீர்கள்?” என்று கோபத்துடன் அந்தக் காவலர்களிடம் சொல்லிவிட்டு நகர்கிறார். அந்தச் சிறுவனை அடித்துக்கொண்டிருந்த காவலர் கூட்டம் அதன்பிறகே ஓய்ந்து நகர்கிறது. அடித்த அடியில் ரத்தம் ஒழுக, ரோட்டோரத்தில் நகர முடியாமல் சுருண்டு கிடந்தான் அந்தச் சிறுவன். இதற்கான முழு வீடியோ ஆதாரம் விகடனிடம் இருக்கிறது.
இந்தச் சம்பவம் நடந்து ஒரு மணி நேரத்துக் குள்ளாகவே, அரசு மருத்துவமனைக்கு மிக அருகிலிருக்கும் அண்ணா நகர் பகுதியில், மதிய உணவுக்கு வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த 22 வயது இளைஞன் காளியப்பனைச் சுட்டு வீழ்த்தியது காவல்துறை. உடனடியாகக் காளியப்பனின் சடலம் பிணவறைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அவருக்கு என்ன ஆனது என்பதே தெரியாமல், பதற்றத்துடன் அரசு மருத்துவமனைக்கு வந்தது அவரின் குடும்பம். மருத்துவமனை முழுவதும் நூற்றுக்கணக்கான காக்கிகளால் நிறைந்திருக்க, பல மணி நேரம் என்ன நடக்கிறது என்பதே அவர்களுக்குப் புரியவில்லை. கோபத்தை மனதுக்குள் புதைத்துக்கொண்டு, பரிதவிப்புடன் காளியப்பனைத் தேடிய அவர்களுக்கு யாரும் சரியான விளக்கத்தைக் கொடுக்கவில்லை. நீண்ட நேரம் கழித்து அவர்களுக்கு “காளியப்பனுக்கு வயிற்றுப் பகுதியில் குண்டு பாய்ந்திருக்கிறது. மருத்துவமனைக்குக் கொண்டுவருவதற்கு முன்பே அவர் இறந்துவிட்டார்’’ என்ற தகவல் தெரிவிக்கப்பட்டது. மொத்தக் குடும்பமும் போலீஸ்காரர்களின் கூட்டத்துக்கு நடுவே புகுந்து அமைதியாகப் பிணவறையை நோக்கி நடந்தது. பிணவறையின் வாசலைத் தொட்டதும், எவ்வளவு கட்டுப்படுத்தியும் முடியாமல் வெடித்துவிட்டார் காளியப்பனின் அம்மா, ‘‘ஐயோ விஜி... (காளியப்பனின் செல்லப் பெயர்) சாப்பிடத்தானடா வர்றேன்னு சொன்ன. இங்க வந்து என்னடா பண்ற? வந்துட்றா விஜி... போயிடலாம். வந்துட்றா... ஐயோ!” என்று அவர் கதறிய கதறலில் அங்கிருந்த சில பெண் போலீஸாரே கண்ணீர் விட்டனர். சற்றுத் தள்ளி நின்று கொண்டிருந்த சில போலீஸார் துப்பாக்கிகள் ஏந்திய நிலையில் ஏதோ சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள்.
அவர்களை நோக்கிப் பெரும் குரலெடுத்து கத்தினார் காளியப்பனின் அண்ணன். “அரக்கனுங்களா... எங்கள மட்டும் எதுக்குடா விட்டு வச்சிருக்கீங்க? அந்தத் துப்பாக்கிய எடுத்து சுடுங்கடா... சுட்டு இதோ இங்கேயே என் தம்பி பக்கத்துலயே என்னையும் போட்டுடுங்கடா. என்னடா பாவம் பண்ணோம் நாங்க? எதுக்குடா இத்தன உசுர கொன்னீங்க? ஸ்டெர்லைட்டு கேன்சர் கொடுத்துக் கொல்றான்... நீங்க துப்பாக்கியை வச்சு கொல்றீங்க. அதுக்கு ஒரேயடியா எங்க மொத்த ஊரையும் குண்டு போட்டு அழிச்சிடுங்க...” என்று அவர் கோபமும் ஆற்றாமையுமாகக் கதறியது, மயான அமைதியுடன் இருந்த மருத்துவமனையின் அத்தனை திசைகளிலும் எதிரொலித்தது.
அந்தக் கதறல், சென்னையில் பூப்புனித நீராட்டு விழாவில் பங்கேற்ற முதல்வருக்கும் துணை முதல்வருக்கும், மங்கள இசையைக் கடந்து காதுகளில் நிச்சயம் விழுந்திருக்க வாய்ப்பில்லை.
- இரா.கலைசெல்வன், தமிழ்ப்பிரபா
ஓவியம்: பிரேம் டாவின்சி
படங்கள்: எல்.ராஜேந்திரன், ஏ.சிதம்பரம், ஆர்.எம்.முத்துராஜ்
தமிழகத்தை மாற்ற வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்?!
விசக்கிருமிகள் பற்றியும் சமூகவிராேதிகள் பற்றியும் இவர் பேசுகிறார்.
What is anil agarval saying¿,
tamil translation powered¡! by dinamalar.
https://m.youtube.com/watch?v=V6aM41BYNTU
---
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை. 555
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
ரஜினி பேசப்பேச அவரது தெளிவற்ற சிந்தனை தான் வெளிப்படுகின்றது.
வெளியூரிலிருந்து முதலீடு செய்வோர் வரமாட்டார்கள் எனச் சொல்வது மக்களிடையே ஒரு வகையான பீதியைக் கிளப்பும் நடவடிக்கை போலுள்ளது.
முதலில் உள்ளூரில் வாழ்கின்ற ஒவ்வொரு தமிழ்க்குடிமகனுக்கும் சுகாதாரமான ஆரோக்கியமான வாழ்விடம் இருக்க வேண்டியது தானே அவசியம். திரு.ரஜினிகாந்திற்கு இந்த அடிப்படை செய்தியை அவரது ஆலோசனைக் குழு சொல்லவில்லையா??
இவர் யாரையெல்லாம் சமூக விரோதிகள் எனக் குறிப்பிடுகின்றார்? தூத்துக்குடி மக்களின் நலனுக்காகப் போராடுபவர்களையா?
உண்மை தோற்காது. எனினும் அது சிக்கி தவிக்கும் காலகட்டத்தில் நாம் வலுவிழுந்து விட சாத்தியம் அதிகம்.அனில் அகர்வால் சொல்வதில் இருக்கும் பொருளுக்கு இனம் கண்டு, மின் தமிழர்கள் எழுதினால், நாட்டுக்கு நலம்.இன்னம்பூரான்
சுபா அவர்களே,
இவ்விழையின் ஆரம்ப வாக்கியமான "நச்சுக்கும்பலின்" என்பதைத்தான், ரஜினி அவர்கள் சமூகவிராேதிகள் என்கிறார் பாேலும்.
பார்வை ஒன்று, வார்த்தைகள்தான் வேறு.
ரசினியைப் பார்த்து, "இவர் யாரையெல்லாம் சமூக விரோதிகள் எனக் குறிப்பிடுகின்றார்? தூத்துக்குடி மக்களின் நலனுக்காகப் போராடுபவர்களையா?" கேட்கின்ற அதே வேளையில், இழையின் ஆரம்ப வாக்கியத்துக்கும் தாங்கள் பாெருள் காேர வேண்டும், அல்லவா!
---
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை. 555
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/J0u_8w3HbwM/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
சுபா அவர்களே,
இவ்விழையின் ஆரம்ப வாக்கியமான "நச்சுக்கும்பலின்" என்பதைத்தான், ரஜினி அவர்கள் சமூகவிராேதிகள் என்கிறார் பாேலும்.
பார்வை ஒன்று, வார்த்தைகள்தான் வேறு.
ரசினியைப் பார்த்து, "இவர் யாரையெல்லாம் சமூக விரோதிகள் எனக் குறிப்பிடுகின்றார்? தூத்துக்குடி மக்களின் நலனுக்காகப் போராடுபவர்களையா?" கேட்கின்ற அதே வேளையில், இழையின் ஆரம்ப வாக்கியத்துக்கும் தாங்கள் பாெருள் காேர வேண்டும், அல்லவா!
---
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை. 555
On Jun 1, 2018 1:19 PM, Suba <ksuba...@gmail.com> wrote:
--ரஜினி பேசப்பேச அவரது தெளிவற்ற சிந்தனை தான் வெளிப்படுகின்றது.
வெளியூரிலிருந்து முதலீடு செய்வோர் வரமாட்டார்கள் எனச் சொல்வது மக்களிடையே ஒரு வகையான பீதியைக் கிளப்பும் நடவடிக்கை போலுள்ளது.முதலில் உள்ளூரில் வாழ்கின்ற ஒவ்வொரு தமிழ்க்குடிமகனுக்கும் சுகாதாரமான ஆரோக்கியமான வாழ்விடம் இருக்க வேண்டியது தானே அவசியம். திரு.ரஜினிகாந்திற்கு இந்த அடிப்படை செய்தியை அவரது ஆலோசனைக் குழு சொல்லவில்லையா??
இவர் யாரையெல்லாம் சமூக விரோதிகள் எனக் குறிப்பிடுகின்றார்? தூத்துக்குடி மக்களின் நலனுக்காகப் போராடுபவர்களையா?
சமூக விரோதிகளை அடக்கவில்லையென்றால் தமிழகத்துக்கே ஆபத்து - ரஜினிகாந்த்
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/J0u_8w3HbwM/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
1.துப்பாக்கிச் சூடு எந்த முறையான அனுமதியும், எச்சரிக்கையும் இன்றி நடத்தப்பட்டுள்ளது. அருகில் உயர் அதிகாரிகள் யாரும் இல்லை என்பதைக் காரணம் காட்டி இன்று இரண்டு துணைத் தாசில்தார்கள் சுடுவதற்கு ஆணையிட்டதாக ஒப்புதல் அளித்துள்ளதாக FIR தயாரிக்கப்பட்டுள்ளது. 22-05-2018 ல் தூத்துக்குடி (சிப்காட்) காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள FIRல் (எண் 191/2018) தனி துணைவட்டாட்சியர் (தேர்தல்) சேகர் என்பவர் சுடுவதற்குத் தான் ஆணையிட்டதாகக் கூறியுள்ளார். அதே நாளில் தூத்துக்குடி (வடக்கு) காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள FIRல் (எண் 219/ 2018) துணை வட்டாட்சியர் கண்ணன் என்பவர் சுட ஆணையிட்டதாக ஒப்புதல் அளித்துள்ளார். மே23 அன்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டிற்கு தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட FIRl (எண் 312/2018) சுடுவதற்கு ஆணையிட்டடது தூத்துக்குடி கோட்டக் கலால் அலுவலர் சௌ. சந்திரன். நூறு நாட்கள் போராட்டத்திற்குப் பின்னர் திட்டமிட்ட ஒரு பேரணியில், மக்கள் தடையை மீறிப் பேரணி நடத்திக் கைதாவது என முடிவு செய்துள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் அங்கு இல்லாமல் போனது என்பதெல்லாம் மேல்மட்டத்தில் முன்கூடித் திட்டமிட்ட ஒரு செயல் என நாங்கள் கருதுகிறோம்.
2. கார்பொரேட் தொழில் முயற்சிகளுக்கு எதிராக பாதிக்கப்பட்ட மக்கள் போராடி அவற்றை நிறுத்துகிற முயற்சிகள் இனி எங்கும் ஏற்படக் கூடாது எனப் பாடம் ஒன்றைக் கற்பிக்கும் நோக்குடன் இந்தத் துப்பாக்கிச் சூடு மிகவும் தீர்மானிக்கப்பட்டு நடத்தப்பட்டுள்ளது. அப்போது பதவியிலிருந்த ஆட்சியர் அன்று தலைமையகத்தில் இல்லாமல் போனது என்பதெல்லாம் இப்படியான துப்பாக்கிச் சூட்டை ஒட்டி முன் கூட்டித் திட்டமிட்ட நடவடிக்கைதான். மத்திய அரசின் ஒப்புதலும் இதற்கு இருந்துள்ளது. தேவையானால் படைகளை அனுப்பத் தாங்கள் தயார் என மத்திய உள்துறைச் செயலர் கூறியுள்ளது குறிப்பிடத் தக்கது.
3. அந்த வகையிலேயே மே 22 அன்று காலையில் கூடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. வழக்கமான போலீஸ் சீருடையில் இல்லாமல் வேறு சீருடையுடன் கூடிய, மக்களைக் கொலை செய்வதற்கெனவே பயிற்சி அளிக்கப்பட்ட, படையினர் அங்கு ஸ்னிப்பர் துப்பாக்கிகளுடன் நிறுத்தப்பட்டு இருந்தனர். அவர்கள் மக்களைக் குறி பார்த்துச் சுட்டுள்ளனர், மக்களைக் கண்காணிப்பதற்கெனக் குட்டி விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மக்களை ஏதோ எதிரி நாட்டு ஆயுதம் தாங்கிய படையினர் என்பதைப் போலக் கையாண்டுள்ளனர்.
4. போலீஸ் கையேட்டிலுள்ள துப்பாக்கிப் பிரயோகத்திற்கான முன்னெச்சரிக்கைகள் எதையும் மேற்கொள்ளாமல் இப்படிப் 13 பேர்கள் இன்று கொல்லப்பட்டுள்ளனர். சிலர் நிரந்தர முடமாக்கப்பட்டுள்ளனர். அப்பாவிகள் வீடுகளில் சென்று கைது செய்யப்பட்டு யாருக்கும் சொல்லாமல் வல்லநாடு காவல்துறை பயிற்சியகத்தில் அடைத்து வைத்துத் துன்புறுத்தப்ப பட்டுள்ளனர். நீதிமன்றம் தலையிட்டு விளக்கம் கோரியபோது பதிலளிக்க இயலாமல் திணறியுள்ளனர். நீதிமன்றத் தலையீட்டிற்குப் பின்னரே அவர்கள் சொந்த ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
5. மக்கள் மத்தியில் சீருடை இல்லாத காவலர்கள் ஏராளமானோர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். கல்லெறிதல், வாகனங்களுக்குத் தீ மூட்டல் முதலானவற்றில் இவர்களின் பங்கு உள்ளது என மக்கள் வைக்கும் குற்றச்சாட்டில் உண்மை உள்ளது. ஆட்சியர் அலுவலகம் உள்ளே மக்கள் நுழைவதற்கு முன்பாகவே தீப்புகை எழும்பியுள்ளது..
6. மக்கள் முன்கூட்டித் திட்டமிட்டுக் கலவரம் செய்யும் நோக்கில் சென்றனர் என்கிற குற்றச்சாட்டில் எந்த ஆதாரமும் இல்லை. அப்படிக் கலவரம் செய்யச் செல்கிறவர்கள் பிள்ளை குட்டிகளுடன் சென்றிருக்க மாட்டார்கள். எடுத்துக்காட்டாக. கொடூரமாக மண்டையில் சுட்டுக் கொல்லப்பட்ட 17 வயது பள்ளி மாணவி ஸ்னோலின் தன்குடும்பத்துடன் அங்கு சென்றுள்ளார். ஸ்னோலினுடைய தாய் மட்டுமின்றி அவரது அண்ணன் மனைவி தனது 2 வயது மற்றும் 6 மாதக் குழந்தையுடன் அங்கு வந்துள்ளார்.
7. தீவிரவாதிகள் மற்றும் சமூக விரோதிகள் மக்களுடன் கலந்து உள்ளே சென்றனர் என்பதையும் நாங்கள் ஏற்கவில்லை. “மக்கள் அதிகாரம்” என்கிற அமைப்பின் உறுப்பினர்கள் கூட்டத்தில் இருந்தனர் என்ற போதிலும் அவர்கள் தீவிரவாதிகளோ ஆயுதம் தாங்கிப் போராடுபவர்களோ அல்லர். அவர்கள் மிகவும் வெளிப்படையாக இயங்கி சமூக அநீதிகளைத் தட்டிக் கேட்கும் ஒரு அமைப்பினர். அவர்களில் ஒருவரான தமிழரசனைக் குறி பார்த்துப் போலீசார் சுட்டுள்ளனர். தீவிரவாதிகள் கூட்டத்தில் இருந்தனர் எனச் சொல்வதற்காகவே அப்படி அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
8. திரேஸ்புரத்தில் மாலை மூன்று மணி அளவில் அருகிலுள்ள மகள் வீட்டிற்கு மீன் விற்றுக்கொண்டிருந்த ஜான்சி என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இன்று 5 பேர்கள் உடல் பிரேத பரிசோதனைக்காக அவர்களின் குடும்பத்தார்களுக்கு சம்மன் அனுப்பப் பட்டுள்ளபோது அவர் பெயர் வினிதா என்று குறிப்பிடப் பட்டுள்ளது (தினத்தந்தி, நெல்லைப் பதிப்பு, 28-05-2018, பக்.2). காவல்துறையின் ஏராளமான முறை மீறல்களுக்கு இது ஒரு எடுத்துக்காட்டு. மக்கள் கல்லெறிந்தது, அரசுச் சொத்துக்களை எரித்தது முதலான குற்றச்சாட்டுகள் ஆக்கியவற்றிற்கான FIR ம், காவல்துறையினர் சுட்டுக் கொன்றதற்கான IPC 176 பிரிவிலான FIR ம் தனித் தனியே போடப் பட்டிருக்க வேண்டும். இப்படியான போளீஸ் துப்பாக்கிச் சூடுகளில் மக்கள் கொல்லப்படும்போது அந்த அதிகாரிகள் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டு அவர்கள் மீது கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட வேண்டும் என்கிற உச்சநீதிமன்ற ஆணை நிறைவேற்றப்பட வேண்டும்
9. இரண்டு நாள் முன்னர் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ஆட்சியர் கடலோர மக்களுக்கு எனத் தனியாகவும், வணிகர்களுக்கென தனியாகவும் அமைதிக் கூட்டங்களை நடத்தியுள்ளார். இது இன்று போராடும் மக்களை கிறிஸ்தவர்கள் எனவும் இந்துக்கள் எனவும் பிரிக்கும் மதவாத சக்திகளுக்குத் துணை போகும் ஒரு முயற்சி. எல்லா தரப்பு மக்களும் தம்மைப் பாதிக்கும் ஒன்றை எதிர்த்து ஒன்று சேர்ந்துள்ள நிலையில் அந்த ஒற்றுமையைச் சிதைப்பதற்காக மேற்கொள்ளப்படும் இம்முயற்சியை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
10. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூ இழப்பீடு தர வேண்டும். அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அவரின் தகுதிக்கு ஏற்ற நிரந்தர அரசுப் பணி அளிக்கப்பட வேண்டும். காயம்பட்டவர்களுக்கு ரூ 20 இலட்சம் இழப்பீடு அளிப்பதோடு முழு மருத்துவச் செலவையும் அரசு ஏற்க வேண்டும். இது தொடர்பாக மக்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெற வேண்டும். சம்பவம் அன்று பதவியில் இருந்த ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் தற்காலிகப் பணி நீக்கம் நீக்கம் செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். ஓய்வுபெற்ற நீதிபதியின் தலைமையிலான விசாரணை ஆணையம் கலைக்கப்பட்டு பதவியிலுள்ள உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். ஸ்னிப்பர் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டது, சீருடை இல்லாதோர் சுடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது, குறிப்பான இயக்கத்தினர் குறி வத்துச் சுடப்பட்டுள்ளனர் எனும் குற்றச்சாட்டு ஆகியன விசாரணையில் உள்ளடக்கப்பட வேண்டும்.
11.எல்லாவற்றிற்கும் காரணமான ஸ்டெர்லைட் ஆலை உடனடியாகவும் நிரந்தரமாகவும் மூடப்பட வேண்டும்,
12. தூத்துக்குடி அரசுமருத்துவ மனை மருத்துவர்கள் வழக்குரைஞர்கள் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகச் சிறப்பாகப் பணியாற்றியுள்ளனர். அவர்களுக்கு எங்கள் பாராட்டுக்கள்.
_________________________________________
மனித உரிமை அமைப்புகளுக்கான தேசியக் கூட்டமைப்பு (NCHRO)
__________________________________________
பேரா.அ.மார்க்ஸ், ரெனி அய்லின், மூத்த வழக்குரிஞர் ப.பா.மோகன், வழக்குரைஞர் என்.எம்.ஷாஜகான், வழக்குரைஞர் சென்னியப்பன், வழக்குரிஞர் உதயணன், நெல்லை அஹமது நவவி, கடலூர் இரா.பாபு,வழ. என்.கே நஜ்முதீன், தூத்துக்குடி அப்துல்காதர், வழ. மதுரை அப்துல் காதர், வழ. பி.பொன்ராஜ்
தேசிய மனித உரிமை அமைப்புகளுக்கான கூட்டமைப்பு, தமிழ் மாநில அமைப்பு, (National Confederation of Human Rights Organisations (NCHRO), H.O: New Delhi) (தொடர்புக்கு: என்.எம்.ஷாஜகான், 18, ஏ, சுங்கம் பள்ளிவாசல் தெரு, மதுரை-01 09443977943).
அப்படியே யாருவாது அந்த துப்பாக்கி வைச்சு இருந்த மஞ்ச சட்டைக்காரனையும், கருப்புச் சட்டக்காரனையும் zoom பன்னி போட்டோ போடுங்கப்பா...
நாய் புடிக்கிற வேனுல ஓடி ஓடி ஏறுனவன்களயும் போட்டாே போடுங்கப்பா.
காணொளில, இவரு சமுகவிராேதிகளையும், நச்சுக்கும்பலையும் பத்தி ஒரு வார்த்த கூடச் சொல்லையே!
இந்த ரெட்டக்குழலு துப்பாக்கிகள்னு சொன்னதுக்கு அர்த்தம் இப்பதான் புரியுது.
வரும் வருடங்களில் மக்கள் உருவாக்கும் ஆப்புகளுக்கு பதம் தீட்டும் காலம் வெகு தொலைவில் இல்லை.
இன்றே கூட வள்ளுவரின் வரிகளில் சொன்னால் கொடுங்காேன்மை வீழலாம்.
---
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை. 555
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/J0u_8w3HbwM/unsubscribe.
> To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
நச்சுக்கும்பலின் ஊடுருவல் + உளவுத்துறையின் மெத்தனம் + காவல்துறையின் பொறுப்பற்றத்தனம் = அப்பாவி மக்கள் உயிரிழப்பு
நான் கூறிய நச்சுக் கும்பல் - மக்களின் அமைதியானப் போராட்டத்தை வன்முறைப் போராட்டம் எனக் காட்டும் நோக்கில் அவர்கள் இடையே புகுந்தவர்கள்.இவர்கள் யாரால் அனுப்பி வைக்கப்பட்டிருக்கக் கூடும் என்பது ஆளாளுக்கு வேறுபடுவது தெரிகிறது.யாருக்கு இந்தப் போராட்டம் வன்முறையாக மாறி உயிரிழப்பு ஏற்பட்டால் ஆதாயம், அவர்களின் ஊடுருவல்.Who has the vested interest in a violent outcome of a peaceful demonstration?யார் போராட்டம் தோல்வியடைய வேண்டும், மக்களுக்குப் போராட்டம் குறித்த எண்ணமே எழக்கூடாது என்று விரும்புவார்கள்?
நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர செய்யப்பட்டதாகத் தெரியவில்லை . திட்டமிட்டு குறி பார்த்து சுடப்பட்டுள்ளனர் .மக்களாட்சியிலும் ஜாலியன் வாலாபாக்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/431206af-23a7-4679-a3f0-27cd70ae8bd1n%40googlegroups.com.