பெண்தெய்வ வழிபாடு தோற்றமும் வளர்ச்சியும்
மு. நளினி, இரா. கலைக்கோவன்பதிப்பு: டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம், திருச்சிராப்பள்ளி
ஆண்டு: 2005 /பக்கங்கள்: 248 /விலை: ரூ. 120/தொடர்பிற்கு: 93451 11790
– பெண்தெய்வ வழிபாடு தோற்றமும் வளர்ச்சியும், பிள்ளையார் வழிபாட்டின் தோற்றமும் வளர்ச்சியும் குறித்த இலக்கியம், கல்வெட்டு, சிற்பம் சார்ந்த ஆய்வுக் கட்டுரைகளும் பெண் தெய்வங்களின் தொன்மையான சிற்பங்கள், காலத்தால் முற்பட்ட பிள்ளையார் சிற்பங்கள் எனும் சிற்ப ஆய்வுக் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. கல்வெட்டறிக்கைகள் பதிப்பும் பயன்பாடும், கல்வெட்டுகள் தேடல்-தெளிதல்-பதிப்பித்தல்-சிக்கல்களும் தீர்வுகளும், கோயிற்கலை ஆய்வு நெறிமுறைகள் ஆகிய ஆய்வியல் பதிவுகளும் தலைப்பறை-மத்தளம்-சிரட்டைக் கின்னரி ஆகிய இசைக்கருவிகள் குறித்த ஆய்வுக் கட்டுரையும் உள்ளன. அரும்பாவூர்க் கோயில், சதுர்வேதிமங்கலம் உருத்திரகோடீசுவரர் கோயில் குறித்த புதிய கண்டுபிடிப்புகளுடனான விரிவான பதிவுகளும் பெற்றுள்ள நூல்.