தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பக நூல்கள் 📚📚📚

260 views
Skip to first unread message

தேமொழி

unread,
Jul 9, 2025, 11:28:22 PM7/9/25
to மின்தமிழ்

books 2025.jpg
நூல்கள் நமக்கு என்றும் புதிய தகவல்களை வழங்கிக் கொண்டேயிருக்கின்றன.

தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகம் வரலாற்று ஆர்வலர்களுக்காக ஏராளமான ஆய்வு நூல்களை வழங்குகின்றது.
இணையம் வழி வாங்கி வாசிக்க...
https://www.commonfolks.in/books/tamil-heritage-foundation

தேமொழி

unread,
Aug 9, 2025, 1:11:25 AM8/9/25
to மின்தமிழ்
Subashini Thf is with Iraivani Vani and 
5 others
.

Vinnai Nokki - Book Cover.jpeg

வெள்ளி விழா ஆண்டில் தமிழ் மரபு அறக்கட்டளை - அறிவிப்பு
தமிழ் மரபு அறக்கட்டளையின் பதிப்பகம் 2019 ஆம் ஆண்டு ஜெர்மனியில் திருவள்ளுவருக்கு இரண்டு ஐம்பொன் சிலைகள் வைக்கப்பட்ட அதே வேளையில் தொடங்கப்பட்டது.
இதுவரை வரலாற்று ஆய்வு நூல்கள் 35 இந்த பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ளன.
வரலாற்று ஆய்வுகளில் ஆர்வமுள்ள பொதுமக்களுக்காகவும் ஆய்வு மாணவர்களுக்காகவும் தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகம் தரம் வாய்ந்த ஆய்வு நூல்களை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றோம்.
அந்த வகையில் 24.8.2025 (ஞாயிறு) வெள்ளி விழா கருத்தரங்க நிகழ்வில் வெளியிடப்பட உள்ள 10 புதிய நூல்களைப் பற்றிய அறிவிப்புகளை ஒவ்வொன்றாக பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.
நூல்: விண்ணை நோக்கி - இலக்கியத்தில் அறிவியல் செய்திகள்
நூலாசிரியர்: முனைவர் தேமொழி
தமிழ் இலக்கிய சான்றுகளுடன் வானியல் ஆய்வுகளை மேற்கொள்கின்ற கட்டுரைகள் அடங்கிய அறிவியல் தமிழ் நூல் இது.
இந்த நூலை வெள்ளி விழா கருத்தரங்க நிகழ்வில் நூல் வெளியீட்டிற்கு பின்னர் நேரடியாகவும் இணையம் வழியாகவும் பெறலாம்.
- தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகம்

தேமொழி

unread,
Aug 10, 2025, 10:37:16 PM8/10/25
to மின்தமிழ்
Subashini Thf is with Iraivani Vani and 
5 others
.
Tamil Valasai - Book Cover.jpeg
வெள்ளி விழா ஆண்டில் தமிழ் மரபு அறக்கட்டளை - அறிவிப்பு - 2
தமிழ் மரபு அறக்கட்டளையின் பதிப்பகம் 2019 ஆம் ஆண்டு ஜெர்மனியில் திருவள்ளுவருக்கு இரண்டு ஐம்பொன் சிலைகள் வைக்கப்பட்ட அதே வேளையில் தொடங்கப்பட்டது.
இதுவரை வரலாற்று ஆய்வு நூல்கள் 35 இந்த பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ளன.
வரலாற்று ஆய்வுகளில் ஆர்வமுள்ள பொதுமக்களுக்காகவும் ஆய்வு மாணவர்களுக்காகவும் தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகம் தரம் வாய்ந்த ஆய்வு நூல்களைத் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றோம்.
அந்த வகையில் 24.8.2025 (ஞாயிறு) வெள்ளி விழா கருத்தரங்க நிகழ்வில் வெளியிடப்பட உள்ள 10 புதிய நூல்களைப் பற்றிய அறிவிப்புகளை ஒவ்வொன்றாக பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.
நூல்: தமிழ் வலசை
நூலாசிரியர்: முனைவர் சிவ இளங்கோ
வரலாறு, ஐரோப்பியத் தமிழ் ஆய்வுகள் கொண்ட செய்திகளைத் தமிழ் இலக்கிய சான்றுகளுடன் வழக்குகின்ற தமிழ் நூல் இது.
இந்த நூலை வெள்ளி விழா கருத்தரங்க நிகழ்வில் நூல் வெளியீட்டிற்குப் பின்னர் நேரடியாகவும் இணையம் வழியாகவும் பெறலாம்.

தேமொழி

unread,
Aug 11, 2025, 11:18:53 PM8/11/25
to மின்தமிழ்
Subashini Thf
Manimekalai  book.jpeg
வெள்ளி விழா ஆண்டில் தமிழ் மரபு அறக்கட்டளை - அறிவிப்பு - 3
தமிழ் மரபு அறக்கட்டளையின் பதிப்பகம் 2019 ஆம் ஆண்டு ஜெர்மனியில் திருவள்ளுவருக்கு இரண்டு ஐம்பொன் சிலைகள் வைக்கப்பட்ட அதே வேளையில் தொடங்கப்பட்டது.
இதுவரை வரலாற்று ஆய்வு நூல்கள் 35 இந்த பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ளன.
வரலாற்று ஆய்வுகளில் ஆர்வமுள்ள பொதுமக்களுக்காகவும் ஆய்வு மாணவர்களுக்காகவும் தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகம் தரம் வாய்ந்த ஆய்வு நூல்களைத் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றோம்.
அந்த வகையில் 24.8.2025 (ஞாயிறு) சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் வெள்ளி விழா கருத்தரங்க நிகழ்வில் வெளியிடப்பட உள்ள 10 புதிய நூல்களைப் பற்றிய அறிவிப்புகளை ஒவ்வொன்றாக பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.
நூல்: மணிமேகலையின் பௌத்தப் பேரறம்
நூலாசிரியர்: பேராசிரியர் முனைவர் அரங்கமல்லிகா
பௌத்த காப்பியமான மணிமேகலை, வெளிப்படுத்துகின்ற அறக்கருத்துகளையும் அதனை முன்னெடுத்துச் செல்லும் மணிமேகலையின் குணங்களையும் புதிய பார்வையில் அறிவுத்தளத்தில் இந்நூல் முன்வைக்கின்றது.

தேமொழி

unread,
Aug 15, 2025, 2:20:03 AM8/15/25
to மின்தமிழ்
Subashini Thf is with Iraivani Vani and 
6 others
.
R.Balakrishnan IAS- IVC Book.jpeg

வெள்ளி விழா ஆண்டில் தமிழ் மரபு அறக்கட்டளை - அறிவிப்பு - 4
தமிழ் மரபு அறக்கட்டளையின் பதிப்பகம் 2019 ஆம் ஆண்டு ஜெர்மனியில் திருவள்ளுவருக்கு இரண்டு ஐம்பொன் சிலைகள் வைக்கப்பட்ட அதே வேளையில் தொடங்கப்பட்டது.
இதுவரை வரலாற்று ஆய்வு நூல்கள் 35 இந்த பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ளன.
வரலாற்று ஆய்வுகளில் ஆர்வமுள்ள பொதுமக்களுக்காகவும் ஆய்வு மாணவர்களுக்காகவும் தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகம் தரம் வாய்ந்த ஆய்வு நூல்களைத் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றோம்.
அந்த வகையில் 24.8.2025 (ஞாயிறு) சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் வெள்ளி விழா கருத்தரங்க நிகழ்வில் வெளியிடப்பட உள்ள 10 புதிய நூல்களைப் பற்றிய அறிவிப்புகளை ஒவ்வொன்றாக பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.
நூல்: Ancient Tamil Corpus: A key to understand the Indus Riddle
(An interview with Indus Scholar R. Balakrishnan)
நூலாசிரியர்: Tamil Heritage Foundation Pathippagam
"சங்க இலக்கியம் எனும் சிந்துவெளி திறவுகோல்" என்ற பெயரில் கடந்த ஆண்டு. சிந்துவெளி ஆய்வுக் கருத்தரங்கு சிறப்பு வெளியீடாக வந்த நூலின் ஆங்கில மொழியாக்கம் இது.

தேமொழி

unread,
Aug 15, 2025, 2:17:56 PM8/15/25
to மின்தமிழ்
Subashini Thf is with Iraivani Vani and 
5 others
.

Kannan Book.jpeg

வெள்ளி விழா ஆண்டில் தமிழ் மரபு அறக்கட்டளை - அறிவிப்பு - 5
தமிழ் மரபு அறக்கட்டளையின் பதிப்பகம் 2019 ஆம் ஆண்டு ஜெர்மனியில் திருவள்ளுவருக்கு இரண்டு ஐம்பொன் சிலைகள் வைக்கப்பட்ட அதே வேளையில் தொடங்கப்பட்டது.
இதுவரை வரலாற்று ஆய்வு நூல்கள் 35 இந்த பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ளன.
வரலாற்று ஆய்வுகளில் ஆர்வமுள்ள பொதுமக்களுக்காகவும் ஆய்வு மாணவர்களுக்காகவும் தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகம் தரம் வாய்ந்த ஆய்வு நூல்களைத் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றோம்.
அந்த வகையில் 24.8.2025 (ஞாயிறு) சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் வெள்ளி விழா கருத்தரங்க நிகழ்வில் வெளியிடப்பட உள்ள 10 புதிய நூல்களைப் பற்றிய அறிவிப்புகளை ஒவ்வொன்றாக பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.
நூல்: செம்மொழியும் மின்தமிழும்
நூலாசிரியர்: பேராசிரியர் முனைவர் நா. கண்ணன்
2010 ஆம் ஆண்டு கோவை நகரில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது செம்மொழி மாநாடு. இந்த மாநாட்டை ஒட்டி பேராசிரியர் நா கண்ணன் அவர்கள் எழுதிய பதிவுகளின் தொகுப்புகளும் அதனை ஒட்டி எழுந்த கலந்துரையாடல்களின் தொகுப்பும் அடங்கிய ஒரு நூல் இது.

தேமொழி

unread,
Aug 15, 2025, 10:40:09 PM8/15/25
to மின்தமிழ்
Subashini Thf is with Iraivani Vani and 
5 others
.

suba book -1.jpeg
வெள்ளி விழா ஆண்டில் தமிழ் மரபு அறக்கட்டளை - அறிவிப்பு - 6
தமிழ் மரபு அறக்கட்டளையின் பதிப்பகம் 2019 ஆம் ஆண்டு ஜெர்மனியில் திருவள்ளுவருக்கு இரண்டு ஐம்பொன் சிலைகள் வைக்கப்பட்ட அதே வேளையில் தொடங்கப்பட்டது.
இதுவரை வரலாற்று ஆய்வு நூல்கள் 35 இந்த பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ளன.
வரலாற்று ஆய்வுகளில் ஆர்வமுள்ள பொதுமக்களுக்காகவும் ஆய்வு மாணவர்களுக்காகவும் தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகம் தரம் வாய்ந்த ஆய்வு நூல்களைத் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றோம்.
அந்த வகையில் 24.8.2025 (ஞாயிறு) சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் வெள்ளி விழா கருத்தரங்க நிகழ்வில் வெளியிடப்பட உள்ள 10 புதிய நூல்களைப் பற்றிய அறிவிப்புகளை ஒவ்வொன்றாக பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.
நூல்: மக்கள் வரலாறு: தொகுதி - 1
நூலாசிரியர்: முனைவர் க. சுபாஷிணி
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் வரலாற்று பாதுகாப்பு, விழிப்புணர்வு மற்றும் ஆய்வுப் பாதையில் தொடக்கம் முதல் நிகழ்த்தப்பட்ட பல்வேறு பயணங்கள், சந்திப்புகள், ஆவண பதிப்புகள், நிகழ்வுகள், திட்டங்கள், கலந்துரையாடல் பற்றிய தொகுப்பின் முதல் தொகுதி. 180 பக்கங்கள் கொண்ட ஒரு நூல்.

தேமொழி

unread,
Aug 17, 2025, 12:42:15 AM8/17/25
to மின்தமிழ்
Subashini Thf is with Iraivani Vani and 
4 others
.

Sundar Bharadwaj Book.jpg

வெள்ளி விழா ஆண்டில் தமிழ் மரபு அறக்கட்டளை - அறிவிப்பு - 7
தமிழ் மரபு அறக்கட்டளையின் பதிப்பகம் 2019 ஆம் ஆண்டு ஜெர்மனியில் திருவள்ளுவருக்கு இரண்டு ஐம்பொன் சிலைகள் வைக்கப்பட்ட அதே வேளையில் தொடங்கப்பட்டது.
இதுவரை வரலாற்று ஆய்வு நூல்கள் 35 இந்த பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ளன.
வரலாற்று ஆய்வுகளில் ஆர்வமுள்ள பொதுமக்களுக்காகவும் ஆய்வு மாணவர்களுக்காகவும் தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகம் தரம் வாய்ந்த ஆய்வு நூல்களைத் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றோம்.
அந்த வகையில் 24.8.2025 (ஞாயிறு) சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் வெள்ளி விழா கருத்தரங்க நிகழ்வில் வெளியிடப்பட உள்ள 10 புதிய நூல்களைப் பற்றிய அறிவிப்புகளை ஒவ்வொன்றாக பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.
நூல்: Llife and Achievements of Choza Emperor RajaRaja I - Redefined
நூலாசிரியர்: Sundar Bharadwaj
@Siva Phada Sekaran
ஆங்கிலத்தில் வெளிவரும் இந்த நூல் தமிழ்நாட்டின் மாபெரும் பேரரசாக வரலாற்றில் தடம் பதித்திருக்கும் ராஜராஜனின் வாழ்க்கை மற்றும் அம்மண்ணனது சாதனைகளைச் சான்றாதங்களுடன் முன்வைக்கும் ஒரு சிறந்த நூல்.
இந்த நூலை வெள்ளி விழா கருத்தரங்க நிகழ்வில் நூல் வெளியீட்டிற்குப் பின்னர் நேரடியாகவும் இணையம் வழியாகவும் பெறலாம்.
- தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகம்

தேமொழி

unread,
Aug 18, 2025, 1:00:00 PM8/18/25
to மின்தமிழ்
Subashini Thf is with Iraivani Vani and 
5 others
.
Kural Themozhi Book.jpeg
வெள்ளி விழா ஆண்டில் தமிழ் மரபு அறக்கட்டளை - அறிவிப்பு - 8
தமிழ் மரபு அறக்கட்டளையின் பதிப்பகம் 2019 ஆம் ஆண்டு ஜெர்மனியில் திருவள்ளுவருக்கு இரண்டு ஐம்பொன் சிலைகள் வைக்கப்பட்ட அதே வேளையில் தொடங்கப்பட்டது.
இதுவரை வரலாற்று ஆய்வு நூல்கள் 35 இந்த பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ளன.
வரலாற்று ஆய்வுகளில் ஆர்வமுள்ள பொதுமக்களுக்காகவும் ஆய்வு மாணவர்களுக்காகவும் தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகம் தரம் வாய்ந்த ஆய்வு நூல்களைத் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றோம்.
அந்த வகையில் 24.8.2025 (ஞாயிறு) சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் வெள்ளி விழா கருத்தரங்க நிகழ்வில் வெளியிடப்பட உள்ள 10 புதிய நூல்களைப் பற்றிய அறிவிப்புகளை ஒவ்வொன்றாக பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.
நூல்: வள்ளுவர் குறள் ஆத்திச்சூடி வகையில்
தொகுப்பாசிரியர்: முனைவர் தேமொழி
அகர வரிசையில் தேர்ந்தெடுக்கப்பட்ட திருக்குறள் செய்யுட்களுக்கு ஆத்திசூடி வகையில் சுருங்கச் சொல்லும் விளக்கங்களுடன் தொகுக்கப்பட்ட ஒரு நூல்.

தேமொழி

unread,
Aug 20, 2025, 2:52:41 PM8/20/25
to மின்தமிழ்
Subashini Thf

suba book 2.jpg

வெள்ளி விழா ஆண்டில் தமிழ் மரபு அறக்கட்டளை - அறிவிப்பு - 9

தமிழ் மரபு அறக்கட்டளையின் பதிப்பகம் 2019 ஆம் ஆண்டு ஜெர்மனியில் திருவள்ளுவருக்கு இரண்டு ஐம்பொன் சிலைகள் வைக்கப்பட்ட அதே வேளையில் தொடங்கப்பட்டது.
இதுவரை வரலாற்று ஆய்வு நூல்கள் 35 இந்த பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ளன.
வரலாற்று ஆய்வுகளில் ஆர்வமுள்ள பொதுமக்களுக்காகவும் ஆய்வு மாணவர்களுக்காகவும் தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகம் தரம் வாய்ந்த ஆய்வு நூல்களைத் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றோம்.
அந்த வகையில் 24.8.2025 (ஞாயிறு) சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் வெள்ளி விழா கருத்தரங்க நிகழ்வில் வெளியிடப்பட உள்ள 10 புதிய  நூல்களைப் பற்றிய அறிவிப்புகளை ஒவ்வொன்றாக பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.
நூல்:  மக்கள் வரலாறு: தொகுதி - 2

நூலாசிரியர்:  முனைவர் க. சுபாஷிணி

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் வரலாற்று பாதுகாப்பு,  விழிப்புணர்வு மற்றும் ஆய்வுப் பாதையில் தொடக்கம் முதல் நிகழ்த்தப்பட்ட பல்வேறு பயணங்கள், சந்திப்புகள், ஆவண பதிப்புகள், நிகழ்வுகள், திட்டங்கள், கலந்துரையாடல் பற்றிய தொகுப்பின் முதல் தொகுதி. 235 பக்கங்கள் கொண்ட ஒரு நூல்.

இந்த நூலை வெள்ளி விழா கருத்தரங்க நிகழ்வில் நூல் வெளியீட்டிற்குப் பின்னர் நேரடியாகவும் இணையம் வழியாகவும் பெறலாம்.

- தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகம்

தேமொழி

unread,
Aug 22, 2025, 3:41:54 PM8/22/25
to மின்தமிழ்
Subashini Thf is with Pappa and 
4 others
.
suba book 3.jpg

வெள்ளி விழா ஆண்டில் தமிழ் மரபு அறக்கட்டளை - அறிவிப்பு - 10
தமிழ் மரபு அறக்கட்டளையின் பதிப்பகம் 2019 ஆம் ஆண்டு ஜெர்மனியில் திருவள்ளுவருக்கு இரண்டு ஐம்பொன் சிலைகள் வைக்கப்பட்ட அதே வேளையில் தொடங்கப்பட்டது.
இதுவரை வரலாற்று ஆய்வு நூல்கள் 35 இந்த பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ளன.
வரலாற்று ஆய்வுகளில் ஆர்வமுள்ள பொதுமக்களுக்காகவும் ஆய்வு மாணவர்களுக்காகவும் தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகம் தரம் வாய்ந்த ஆய்வு நூல்களைத் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றோம்.
அந்த வகையில் 24.8.2025 (ஞாயிறு) சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் வெள்ளி விழா கருத்தரங்க நிகழ்வில் வெளியிடப்பட உள்ள 10 புதிய நூல்களைப் பற்றிய அறிவிப்புகளை ஒவ்வொன்றாக பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.
நூல்: மக்கள் வரலாறு: தொகுதி - 3
நூலாசிரியர்: முனைவர் க. சுபாஷிணி
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் வரலாற்று பாதுகாப்பு, விழிப்புணர்வு மற்றும் ஆய்வுப் பாதையில் தொடக்கம் முதல் நிகழ்த்தப்பட்ட பல்வேறு பயணங்கள், சந்திப்புகள், ஆவண பதிப்புகள், நிகழ்வுகள், திட்டங்கள், கலந்துரையாடல் பற்றிய தொகுப்பின் முதல் தொகுதி. 214 பக்கங்கள் கொண்ட ஒரு நூல்.

தேமொழி

unread,
Aug 24, 2025, 2:08:24 PM8/24/25
to மின்தமிழ்

நன்றி : தீக்கதிர் நாளிதழ்

new year book.jpg
நீண்ட கால சர்ச்சைக்கு அறிவியல் பதில்

— எம்.ஜே.பிரபாகர்
Muthusamy Jeya Prabakar 

தமிழ்ப் புத்தாண்டு எப்போது கொண்டாடப்பட வேண்டும் என்ற நீண்ட கால சர்ச்சைக்கு அறிவியல் அடிப்படையில் தீர்வு காணும் முயற்சியே முனைவர் தேமொழியின் "தமிழ்ப் புத்தாண்டு - சர்ச்சைகளும் தீர்வுகளும்" என்ற நூல். சித்திரை மாதம் என்று சொல்பவர்களும், தை மாதம் என்று வலியுறுத்துபவர்களும் நீண்ட காலமாக முரண்பட்டு வரும் இந்தப் பிரச்சினைக்கு ஆவணங்கள் அடிப்படையில் தெளிவான விளக்கம் அளிக்கிறார் ஆசிரியர்.

பன்னிரண்டு கட்டுரைகளின் வழியாக அறிவியல் சார்ந்த தனது கருத்துக்களை முன்வைக்கும் ஆசிரியர், மனிதர்களின் வாழ்வில் காலம் என்ற அம்சத்தை அளந்து பிரித்தறிய உதவும் கருவியாக நாட்காட்டி இருப்பதை விளக்குகிறார். தமிழர்கள் உட்பட இந்தியப் பகுதியில் பல சமூகங்கள் சூரிய இயக்கத்தோடு சேர்ந்து இயங்கும் சூரிய-சந்திர நாட்காட்டிகளை உருவாக்கிய வரலாற்றை எளிய தமிழில் விவரிக்கிறார்.

சங்க காலத்தில் தமிழர்கள் புத்தாண்டு கொண்டாடியதற்கான சான்றுகள் இல்லை என்ற தனது கண்டுபிடிப்பை ஆசிரியர் தைரியமாக முன்வைக்கிறார். சித்திரையிலோ தையிலோ தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்பட்டதற்கான எந்த வரலாற்று ஆதாரமும் இல்லை என்பதை பல்வேறு ஆவணங்களின் அடிப்படையில் நிரூபிக்கிறார்.

ஆவணி மாதம் -
உண்மையான தொடக்கம் பழந்தமிழரின் புத்தாண்டு ஆவணி மாதமே என்பதை பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் நிறுவுகிறார் ஆசிரியர். வரலாற்று ஆவணங்களான நிகண்டுகள் "ஆவணியே ஆதி" என்று தெரிவிப்பதை சான்றாக முன்வைக்கிறார். இந்தக் கண்டுபிடிப்பு தமிழ் வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமைகிறது.

தனது ஆய்வுகளை முன்வைத்தாலும், ஆசிரியர் எந்த வழக்கத்தையும் மாற்றிக் கொள்ளச் சொல்லவில்லை. தைப்புத்தாண்டு என்று சொல்பவர்களையும், சித்திரைதான் புத்தாண்டு என்று சொல்பவர்களையும் அவர்களின் கொண்டாட்டத்தை மாற்றிக்கொள்ளுமாறு கேட்கவில்லை. வரலாற்று உண்மையைஅறிந்துகொண்டாலே போதும் என்ற நிலைப்பாடு எடுக்கிறார்.

தமிழகச் சட்டமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர்கள் டாக்டர் கலைஞர் கருணாநிதி மற்றும் செல்வி ஜெயலலிதா தெரிவித்த உரைகளையும் ஆதாரமாக வழங்குவது நூலின் நம்பகத்தன்மையை அதிகரிக்கிறது.

அம்பேத்கரின் "உண்மைதான் வரலாற்றின் தாய்" என்ற கூற்றை மேற்கோள் காட்டி, வரலாற்று ஆய்வாளர் உண்மைக்குமட்டுமே உண்மையானவராக இருக்க வேண்டும் என்ற நெறியை வலியுறுத்துகிறார். இது நூல் முழுவதும் பகுத்தறிவு சிந்தனையை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது.

தமிழ்வரலாறு மற்றும் பண்பாடு குறித்து ஆர்வம் உடையவர்கள் அனைவரும் வாசிக்க வேண்டிய அற்புதமான நூல். அமெரிக்க வாழ் தமிழரான முனைவர் தேமொழியின் இந்த ஆய்வு. தமிழ் அறிஞர்களுக்கு வழிகாட்டும் விளக்கு மாதிரி செயல்படும். பண்டைய கால நாட்காட்டிகளைப் பற்றிய அறிவியல் பூர்வமான விளக்கங்கள் வாசகர்களின் அறிவைச் செழுமைப்படுத்தும்.

நூல்: தமிழ்ப் புத்தாண்டு -சர்ச்சைகளும் தீர்வுகளும்
நூலாசிரியர்: முனைவர் தேமொழி
வெளியீடு: தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகம் - 2024
விலை: ரூபாய் 250/-
தொடர்புக்கு:
email: myth...@gmail.com
நூல் கிடைக்குமிடம்: https://www.commonfolks.in/books/d/tamil-putthandu-sarchaigalum-theeervugalum

தேமொழி

unread,
Sep 3, 2025, 9:25:56 PM9/3/25
to மின்தமிழ்
வெள்ளிக்கிழமை சென்னையில் நமது அண்மைய வெளியீடுகளில் ஒன்றான 
மணிமேகலையின் பௌத்த பேரறம் நூல் வெளியீடு மற்றும் திறனாய்வு..

bowttham manimaekalai book.jpeg
Manimegalai Bowthapaearam.jpg
______________________________________________________________________

தேமொழி

unread,
Sep 6, 2025, 4:08:16 AM9/6/25
to மின்தமிழ்
மணிமேகலையின பௌத்தப் பேரறம்
எழுத்தாளர் பேராசிரியர் முனைவர் அரங்கமல்லிகா நூல் அறிமுக விழா
https://www.youtube.com/watch?v=DXdmgpxwWpA

manimaekalai.jpg

Manimegalai Bowthapaearam.jpg

---------

தேமொழி

unread,
Sep 6, 2025, 5:00:43 AM9/6/25
to மின்தமிழ்
makkal varalaru.jpeg
மக்கள் வரலாறு - நூல் தொகுப்பு
 
தொகுதி 1,2,3 ஆகியவை இணைந்த வகையில் புத்தகப் பெட்டியும் இணைந்த வகையில் வருகின்ற தமிழ் மரபு அறக்கட்டளையின் வெள்ளி விழா சிறப்பு வெளியீடு இப்போது விற்பனைக்குத் தயாராகி உள்ளது.

வெள்ளி விழா ஆண்டில் இந்த நூல் தொகுப்பின் விலை இந்திய ரூபாய் 800 மட்டுமே.
ஏறக்குறைய 800 பக்கங்களை கொண்ட இந்த நூல் தொகுப்பினை எளிதாக நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்.

இந்த நூல் தேவைப்படுபவர்கள் கீழ்காணும் எண்ணில் இன்று விரைந்து தொடர்பு கொள்க.

+91 89397 65651

தேமொழி

unread,
Sep 20, 2025, 3:36:23 AM9/20/25
to மின்தமிழ்
மணிமேகலையின் பௌத்தப் பேரறம் : அரங்கமல்லிகா

முனைவர் பா.ஜம்புலிங்கம்,
உதவிப்பதிவாளர் (பணிநிறைவு).
தமிழ்ப்பல்கலைக்கழகம்,
தஞ்சாவூர் 613 010
www.ponnibuddha.blogspot.com

நூலில் வெளியான என்னுடைய வாழ்த்துரை

Manimegalai Bowthapaearam.jpg
வாழ்த்துரை

பேரா. அரங்கமல்லிகா படைத்துள்ள மணிமேகலையின் பௌத்தப் பேரறம் என்ற இந்நூல் பல்லுயிர் ஓம்பும் பௌத்தம், மணிமேகலையின் அறிவாளுமை, மணிமேகலையின் பௌத்தப் பேரறம், நவீனத்துவமும் பௌத்தப்பேரறமும், அமுதசுரபி–அன்பு-கருணை, பௌத்தமும் பாதவழிபாடும், புத்தக்காஞ்சியும் போதி அறமும், சீலமும் தானமும், ஆன்மாவும் மறுபிறப்பும், பௌத்தம் காட்டும் ஈஸ்வரம், பௌத்தத்தில் பெண் தொன்மம், இறைகாக்கும் இந்திரவிழா என்னும் 12 கட்டுரைகளைக் கொண்டுள்ளது.

மணிமேகலை என்றாலும் பௌத்தம் என்றாலும் அறம் என்ற சொல் இயல்பாக நினைவிற்கு வந்துவிடும். அவ்வாறான பிணைப்பைக் கொண்ட பேரறத்தைப் பற்றி இலக்கியம், வெளிநாட்டவர் குறிப்புகள், அறிஞர்களின் நூல்கள் போன்ற சான்றுகளைக் கொண்டு உரிய மேற்கோள்களுடன் பன்னோக்கில் விவாதித்துள்ள ஆசிரியர் மணிமேகலைக் காப்பியத்தின் சிறப்பையும், பௌத்தத்தின் சிறப்பையும் நுணுக்கமாக அணுகியுள்ளார். இந்நூலிலிருந்து சில பகுதிகளைக் காண்போம்.

“அறத்தையே மனித மனமானது நாடி அடையவேண்டும். அதற்கு அடங்கா மனமானது அடங்கும் வகையில் மனிதர்களாகிய நாம் அன்பு, இரக்கம், கருணை ஆகிய நல்ல பண்பாட்டுத் தளத்தில் செலுத்தி இயங்குவோமேயானால், மனிதர்களை எந்தத்தீய சக்தியும் நெருங்காமல் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம். அவ்வாறு தன்னையும் தான் சார்ந்த சமூகத்தையும் காப்பது எதுவோ அதுவே அறம் எனல் தகும்.” (கட்டுரை 1)

“மணிமேகலை காப்பியத் தலைவியான மணிமேகலையின் அறிவானது விசாலமாகி அறவண அடிகளின் துணையுடன் பௌத்தத்தைப் பற்றிக்கொண்டதற்கான காரணங்களை ஆய்வுசெய்யும் வகையில், பல் வேறுபட்ட சமய மதிப்பீடுகளை அறிந்துகொள்ள அவளுடைய பௌத்த ஞானமே உறுதுணையாக அமைந்திருக்கிறது. அந்தவகையில், காப்பியங்கள் படைத்திருக்கக்கூடிய பெண் கதாபாத்திரங்களில் மணிமேகலையே அறிவைக் கடந்து ஞானத்திலும் பேராளுமை மிக்கவளாகத் திகழ்கிறாள்.” (க.2)

“பெண்கள் துறவு மேற்கொள்வது குறித்துச் சிறப்பான கருத்துக்களை மணிமேகலை கூறினாலும் பெண்களுக்கான அறம் சார்ந்த உரைகள் யாவற்றையும் எடுத்துக் கூறுகிறது மணிமேகலை…. காமத்தால் அலையுறும் மனதை அடக்குவதற்குரிய கட்டுப்பாட்டை ஐம்புலன்களால் அடக்கி, பிறருக்கு எடுத்துக்காட்டாக வாழவேண்டும் என்ற கருத்தானது பௌத்த மெய்யறமாகக் கருதப்படுகிறது.” (க.3)

“சமூக அறிவியல் கண்ணோட்டத்தில் பௌத்தம் என்பது தனிமனித ஒழுக்கத்தை ஒரு கொள்கையாகவும், வாழ்வியல் மரபாகவும் கட்டமைத்து, அதனைச் செவ்வனே நடைமுறைப்படுத்துவதை அறமாகக் கொண்டுள்ளது… பௌத்தம் கலாச்சாரக் கட்டுப்பாட்டு மடமைகள் நிறைந்த மதமும் அல்ல, மார்க்கமும் அல்ல.” (க.4)

“மணிமேகலை காப்பியம் தெய்வத்தின் அருளுக்கும் அறிவின் உயர்வுக்கும் இடையே இட்டு நிரப்பும் ஒரு கற்பனையாக அமுதசுரபியை வைத்திருப்பதனால் இது ஒரு மீமெய் கற்பனையாக மாறுகிறது. இந்த மீமெய் கற்பனைதான் கருணை என்னும் விழுமியத்தை அழுத்தமாகச் சொல்லிச் செல்கிறது.” (க.5)

“சமண சமயத் துறவியர் உண்ணா நோன்பிருந்து மாண்ட இடங்களில் கல்வெட்டுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை நிசீதிகை கற்கள் என அழைக்கின்றனர்….மணிமேகலையில் புத்தரின் பாதத்தைப் பீடமாக அமைத்து வழிபடும் மரபு உறுதிப்படுத்தப்படுகின்றது.” (க.6)

“பெரும்பாலும் காஞ்சியிலிருந்து சென்ற பௌத்தத் துறவிகள் மஹாயான பௌத்தத்தை முன்னெடுத்தார்கள்….நூறு முறை சென்றாலும், நூற்றியோராவது முறை நமக்கென கருத்துகளை அள்ளித்தரும் வரலாற்றுச் சிறப்புமிக்க நகரே காஞ்சிபுரம் ஆகும். முத்தி தரும் அறச்சான்றோர்கள் நிறைந்த நகர் மட்டுமல்லாது, பேரெழில் கூட்டும் இயற்கையழகுக்கு முதன்மையானது காஞ்சிபுரமேயாகும்.” (க.7)

“தவசீலத்தைப் பெற்றவர்களின் அறநெறியால் வந்த பொருளானது, தான் சார்ந்திருக்கின்ற அனைவருக்கும் பயன்படும் தன்மை பெற்றப் பொருளாகவும், தானம் தவமிரண்டும் தங்கி வாழும் வாழ்க்கையை நிலைநாட்டும் பொருளாகவும் அமையும்.” (க.8)

“புத்தரின் கோட்பாட்டின்படி உடலும் உயிரும் ஒன்றையொன்று தொடர்புடையதாயினும், உயிரே ஆன்மாவாகச் செயல்படுகிறது. அது வடிவமற்றது. அது ஒருமுறை பிரிந்துவிட்டால் மீண்டும் பிறப்பதில்லை. எனவே மறுபிறப்பு என்பது இல்லை என்றே எடுத்துரைக்கிறார்.” (க.9)

“பௌத்தம் தனது கொள்கையில் கடவுள் கோட்பாட்டை அறவே மறுக்கிறது. மேலும், அறநெறியில் நின்று மக்களுக்காகச் சேவை செய்யும் ஆற்றல் பெற்றவர்கள் மனிதர்களில் தெய்வீக நிலையை அடையலாம் என்னும் கருத்தை வலியுறுத்துகிறது.” (க.10)

“தெய்வத்தன்மைப் பொருந்திய மணிமேகலையின் நிலையானது தமிழ்ச் சமூகத்தில் பௌத்த அறம் ஏற்றப் பெண்களை நினைவுபடுத்துகின்றது. மணிமேகலாத் தெய்வம் தொடங்கிப் பல்வேறு தெய்வங்களின் வரலாறுகள் காப்பியம் முழுவதுமாகப் பேசப்பட்டு இருக்கின்றன.” (க.11)

“இந்திர விழா நடக்க வேண்டியது இந்திரனை மட்டுமல்ல, சதுக்கப்பூதத்தை மகிழ்ச்சியுறச் செய்வதாகவும், ஆன்ம அமைதிப்படுத்துவதாகவும் உள்ளது. பௌத்த மதம் சொல்லும் ஒழுக்கச் சீலங்களை மக்கள் கடைப்பிடிக்க வேண்டியிருப்பதைச் சதுக்கப்பூதம் கவனித்துக்கொள்கிறது. மேலும், இந்திர விழா இயற்கையின் கொடைக்கான நன்றி விழாவாகவும் மணிமேகலை குறிப்பிடுகிறது.” (க.12)

ஒவ்வொரு உட்தலைப்பையும் ஒட்டி ஆசிரியர் நிறுவியுள்ள கருத்துகள் அந்தந்த தலைப்பிற்குச் சிறப்பு சேர்க்கிறது. முந்தைய வரலாற்றறிஞர்களின் கூற்றுகளைத் தேடி, பிற சான்றுகளையும் இணைத்து, உரிய இடத்தில் மிகவும் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் நிறுவியுள்ள நூலாசிரியரின் பெருமுயற்சி பாராட்டத்தக்கதாகும். அறம், ஆன்மா, சீலம், மறுபிறப்பு, தானம் உள்ளிட்ட பல சொற்களுக்கு அரிதின்முயன்று அதற்கான விளக்கங்களை பல ஒப்புமைகளோடு ஆராய்ந்துள்ளார்.

ஏகாம்பரநாதர், கச்சபேஸ்வரர், காமாட்சியம்மன் கோயில்களில் உள்ள புத்தர் சிற்பங்கள், கருக்கினில் அமர்ந்தாள் கோயில் உள்ளிட்ட கோயில்களில் உள்ள புத்தர் சிலைகளைப் பற்றி நூலாசிரியர் விவாதிக்கும்போது காஞ்சிபுரத்தில் இந்த மூன்று கோயில்களில் நான் பார்த்த புத்தர் சிற்பங்களும், புத்தர் சிலைகளும் நினைவிற்கு வந்தன. அத்துடன் சோழ நாட்டில் நான் பார்த்த 60க்கும் மேற்பட்ட புத்தர் சிலைகளும், பூம்புகாரிலுள்ள புத்த பாதமும், புத்த விகாரையின் எச்சங்களும், பெருஞ்சேரி, புத்தமங்கலத்திலுள்ள புத்தர் கோயில்களும் நினைவிற்கு வந்தன.

சுமார் 2500 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்திற்கு நம்மை அழைத்துச் சென்று, அங்கிருந்து பௌத்தம் பற்றிய ஒரு பறவைப்பார்வையைத் தர ஆரம்பித்து, தொடர்ந்து பயணித்து பல சான்றுகள் மூலமாக இன்றைய சூழலுக்குப் பொருந்தி வரும் நிலை வரை விவாதித்து, தற்காலத்தில் பௌத்தமானது கலை, சமயம், பண்பாடு என்ற பல்வேறு தளங்களில் ஏற்படுத்தியுள்ள பெரும் தாக்கத்தை வெளிப்படுத்தியுள்ள விதம் போற்றத்தக்க வகையில் அமைந்துள்ளது. நல்ல பொருண்மையைத் தெரிவு செய்து அதனடிப்படையில் ஓர் அரிய நூலைப் படைத்துள்ள ஆசிரியருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

நூல் : மணிமேகலையின் பௌத்தப் பேரறம்
ஆசிரியர் : அரங்கமல்லிகா
பதிப்பகம் : தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகம்
பதிப்பாண்டு : ஆகஸ்ட் 2025
விலை : ரூ.300

Reply all
Reply to author
Forward
0 new messages