செக் நாட்டுத் தமிழறிஞர் கமில் சுவலபில் (1927 - 2009) czech மொழியில் மொழிபெயர்த்த திருக்குறள் படியை தேடிவருகிறோம். உங்கள் எவரிடமாவது இருந்தால், எங்கு கிடைக்கும் என்பதை அறிந்து தெரிவித்தால் Thirukkural Translations in World Languages திட்டத்திற்கு உதவியாக இருக்கும்.
(1955o) „Z Tirukkuralu“ (translations into Czech) NO (10) 5,69.
ஒரு மொழிபெயர்ப்பு வெளிவந்துள்ளது. பயன்பாட்டில் இல்லை, அட்டைப்படம் கூட இணையத்தில் கிடைக்கவில்லை. ஆறு ஆண்டுகளாக தொடர்ந்து தேடிவருகிறோம்... ஒவ்வொரு திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல் தொகுப்பிற்குப் பின்னும் ஒரு பெரிய தேடல் கதை உள்ளது.. ஆவணப்படுத்துவோம்.
ஒரு முறையான கட்டமைப்பு உருவாகி இதுவரை எதையும் தொகுக்காத நிலையில், திருக்குறளுக்கு முதன்முறை ஒருங்கிணைப்பு , தொகுப்பு குறித்து சிந்திப்பதால் , இவ்வளவு உழைப்பு தேவைப்படுகிறது. அனைத்தையும் தொகுத்தாகிவிட்டது. இன்னும் நான்கு நூல்கள் மட்டுமே மீதம் உள்ளது.