அரிய செய்திகள். தொடர்க நண்பரே.அன்புடன்சொ.வினைதீர்த்தான்.2012/11/20 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
நளவெண்பா
இது என்ன அபூர்வமான நூலா?
இது இல்லை. இதற்கு ஒரு விருத்தியுரை எழுதியுள்ளார் ஸ்ரீ ஆறுமுகஞ் சேர்வை அவர்கள். மதுரை ஜில்லா செம்பூர் வித்வான். இதற்கு உறுதுணை உதவி மதுரை அமெரிக்கன் காலேஜ் தலைமைத் தமிழாசிரியர் ஆ கார்மேகக் கோனாரவர்களும், மதுரை ஸௌராஷ்ட்ர ஹைஸ்கூல் தலைமைத் தமிழாசிரியர் பு சிதம்பர புன்னைவனநாதமுதலியாரவர்கள்.
அச்சிட்டது மதுரை கோபாலகிருஷ்ண கோனாரால் 1929ல். அன்றைய விலை ரூ2ம் எட்டு அணாவும்.
உண்மையிலேயே என்ன அருமையான உரை! எவ்வளவு விஷயங்கள் மாணக்கர்களுக்குச் சொல்கிறார்கள், தமிழ்க் கல்வி அன்று இருந்த நிலை.
புகழேந்திப் புலவரின் வெண்பா கேட்கவா வேண்டும்!
ஒட்டக்கூத்தருக்கும், புகழேந்திக்கும் நடந்த புலமைச் சண்டைகள், ஒட்டக்கூத்தரின் அடாவடித்தனம் எலலாம் முன்னுரையில் கூறுகின்றார்கள். அதுவே ஒரு தமிழ்க்கல்விதான்.
அந்தக் கால அரசனுக்கு இரண்டு புலவர்களுக்கிடையில் மூட்டிவிட்டுக் கவிதை வாங்குவது ஒரு பொழுது போக்கு போலும்!
ஒட்டக்கூத்தரோ புகழழேந்தியைச் சிறையில் போடச் செய்துவிட்டார். ஒரு நாள் பவனி. சிறைச் சாலையின் சன்னலிலிருந்து வேடிக்கை பார்க்கிறார் புகழேந்தி. அரசனோ அவரைக் காட்டி ஒட்டக்கூத்தருக்கு ‘ஓ வித்வானே! அதோ நிற்கும் புகழேந்தி புலமையி மிகச் சிறந்தவரல்லவா!’ என்றார்.
உடனே கூத்தர்,
மான் நிற்குமோ, இந்த வாளரி வேங்கை முன்?
வற்றிச் செத்த கான் நிற்குமோ இவ்வெரியும் தழல் முன்?
கனைகடலின் மீன் நிற்குமோ இந்த வெங்கட் சுறவமுன்?
வீசுபனி தான் நிற்குமோ இக்கதிரோன் உதயத்தில்?
தார்மன்னனே!
என்று பாடினார்.
அரசனை நோக்கிப் புகழேந்தி, ‘மன்னா! இதை நான் வெட்டிப்பாடவா? ஒட்டிப் பாடவா?’ என்றார். ஒட்டிப்பாடுக என்றதும்,
மான் அவன்.
நான் அந்த வாளரி
வேங்கையும் வற்றிச் செத்த கான் அவன்.
நான் அவ்வெரியும் தழலும்.
கனைகடலின் மீன் அவன்
நான் அந்த வெக்கட் சுறவமும்
வீசுபனி தான் அவன்
நான் அக்கதிரோன் உதயமும்.
தார்மன்னனே!
என்று பாடினார் புகழேந்தி.
(தொடரும்)
***
--
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
http://mohanaranganreads.blogspot.in/2012/12/1.html
அதாவது இயற்கை உண்மை ஒன்று தொன்மக் கதையின் வடிவில் வெளியிடப்படுகிறது. என்ன?
ஸத்வம் என்பது வலிமை, அறிவு, உறுதி போன்ற பொருளைத் தருவது -
Sattva -
[L=229730] vital breath , life , consciousness , strength of
character ,
strength , firmness , energy , resolution , courage ,
self-command , good sense , wisdom , magnanimity MBh.
R. &c
http://www.sanskrit-lexicon.uni-koeln.de/monier/
தேவ்
On 11 Dec, 12:36, Subashini Tremmel <ksubash...@gmail.com> wrote:
> அன்புள்ள திரு.ரங்கன்,
>
> இந்தத் தொடரில் முதல் பதிவை மாத்திரம் தான் வாசித்தேன். 1ம் பதிவில்
> வழங்கியுள்ள அனைத்து நூல்களும் நான் கேட்டிராதவை. ஒரே பதிவில் பல நூல்களை
> வழங்கியிருக்கின்றீர்கள்.
>
> அதில் முதலில் வருகின்ற அச்வ சாஸ்த்ரம் என் கவனத்தைக் கவர்ந்தது. ஆங்கில
> சுருக்கம், வண்ணப் படங்களுடனான பதிவு என எல்லாம் இந்த நூலைக் காண ஆர்வத்தை
> அதிகரிக்கின்றன.
>
>
>
> குதிரைகளின் பெருமை, ரைவதர் துதி, குதிரை இறக்கை இழந்த வரலாறு, உடலமைப்பு,
> அங்கங்களின் இலக்கணம், அசுவ இலக்கண வகுப்பு, வயது முறையும் அங்க வகுப்பும்,
> ஆவர்த்தங்கள், சித்திரவர்ணக் குதிரைகள், புண்டிர லக்ஷணங்களும் பலன்களும்,
> புஷ்ப லட்சணம், குதிரை கனைப்பின் பலன், குதிரையின் மணமும் பலனும், குதிரை
> சாயையும் பலனும், நடை இலக்கணம், ஸத்துவ (தன்மை) இலக்கணம், முற்றும் தவிர்க்க
> வேண்டிய தோஷங்கள், கன்னத்தின் நிறமும் பலனும், ஜாதிக் குதிரைகள், வயதறியும்
> வகை, நிற இலக்கணம், அரசனுக்கேற்ற குதிரை, ஆயுள், குதிரை உணர்த்தும்
> பெருங்கேடுகள், குதிரைகளைப் பழக்கும் விதம், குதிரைகளின் நடை, க்திரை ஏற்றம்
> ஆகிய தலைப்புகளில் நூல் குதிரையைப் பற்றித் தெரிவிக்கின்றது.
>
>
>
> இப்பகுதியில் சில கேள்விகள் (தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் கேட்கின்றேன்)
>
> - குதிரை இறக்கை இழந்த வரலாறு என்பது புராணக் கதை முன் வைத்து
> விளக்கப்படுகின்றதா?
> - அங்கங்களின் இலக்கணம் - குதிரையின் உடல் அங்கங்கள் ஒவ்வொன்றின்
> வடிவத்திற்கும் அர்த்தம் சொல்லப்படுகின்றதா? மனித உடலமைப்புக்குச் சாமுத்ரிகா
> லட்சணம் சொல்வோமே.. அப்படி?
> - குதிரை கணைப்பின் பலன் - இதற்கும் கூட பலன் பார்க்கும் பார்வை ஆச்சரியமாக
> இருக்கின்றது. சில உதாரணங்கள் தாருங்கள்.
> - குதிரை சாயையும்... - இதில் சாயை என்பதன் பொருள் என்ன?
> - ஸத்துவ இலக்கணம் - இதில் என்ன விளக்கப்படுகின்றது?
> - முற்றும் தவிர்க்க வேண்டிய தோஷங்கள்- யாருக்கு குதிரைக்கா அதனை
> வளர்ப்பவருக்கா ?
> - குதிரை உணர்த்தும் பெருங்கேடுகள் - இது தெரிந்து கொள்ள ஆர்வத்தைத்
> தருகின்றது. நூலிலிருந்து சில உதாரணங்கள் தாருங்கள்
>
> அன்புடன்
> சுபா
>
> 2012/12/10 Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
>
> >http://mohanaranganreads.blogspot.in/2012/12/1.html
>
> --
> Suba Tremmelhttp://subastravel.blogspot.com-சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!http://subahome2.blogspot.com- ஜெர்மனி நினைவலைகள்..!http://subaillam.blogspot.com- மலேசிய நினைவுகள்..!http://ksuba.blogspot.com- Suba's Musings
வாங்க சுபாஷிணி,2012/12/11 Subashini Tremmel <ksuba...@gmail.com>
அன்புள்ள திரு.ரங்கன்,இந்தத் தொடரில் முதல் பதிவை மாத்திரம் தான் வாசித்தேன். 1ம் பதிவில் வழங்கியுள்ள அனைத்து நூல்களும் நான் கேட்டிராதவை. ஒரே பதிவில் பல நூல்களை வழங்கியிருக்கின்றீர்கள்.அதில் முதலில் வருகின்ற அச்வ சாஸ்த்ரம் என் கவனத்தைக் கவர்ந்தது. ஆங்கில சுருக்கம், வண்ணப் படங்களுடனான பதிவு என எல்லாம் இந்த நூலைக் காண ஆர்வத்தை அதிகரிக்கின்றன.>>>குதிரைகளின் பெருமை, ரைவதர் துதி, குதிரை இறக்கை இழந்த வரலாறு, உடலமைப்பு, அங்கங்களின் இலக்கணம், அசுவ இலக்கண வகுப்பு, வயது முறையும் அங்க வகுப்பும், ஆவர்த்தங்கள், சித்திரவர்ணக் குதிரைகள், புண்டிர லக்ஷணங்களும் பலன்களும், புஷ்ப லட்சணம், குதிரை கனைப்பின் பலன், குதிரையின் மணமும் பலனும், குதிரை சாயையும் பலனும், நடை இலக்கணம், ஸத்துவ (தன்மை) இலக்கணம், முற்றும் தவிர்க்க வேண்டிய தோஷங்கள், கன்னத்தின் நிறமும் பலனும், ஜாதிக் குதிரைகள், வயதறியும் வகை, நிற இலக்கணம், அரசனுக்கேற்ற குதிரை, ஆயுள், குதிரை உணர்த்தும் பெருங்கேடுகள், குதிரைகளைப் பழக்கும் விதம், குதிரைகளின் நடை, க்திரை ஏற்றம் ஆகிய தலைப்புகளில் நூல் குதிரையைப் பற்றித் தெரிவிக்கின்றது.
>>>
இப்பகுதியில் சில கேள்விகள் (தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் கேட்கின்றேன்)
- குதிரை இறக்கை இழந்த வரலாறு என்பது புராணக் கதை முன் வைத்து விளக்கப்படுகின்றதா?
அதாவது ஒரு விதத்தில் ஆம் எனலாம். முன்னாளில் குதிரைகள் இறக்கையுடன் திரிந்ததாகவும் அதனால் மக்களுக்கு அவை பெரிதும் பயனின்றி இருந்ததாகவும், சாலிஹோத்ர ரிஷி என்பவர் அவற்றின் இறக்கைகளை நீக்கிவிட்டதாகவும் கதை செல்கிறது. குதிரைகள் சென்று கேட்டனவாம் -- நாங்கள் யாருக்கும் எந்தக் கெடுதலும் புரியவில்லையே.. ஏன் எங்களுக்கு இந்த நிலைமை என்று. அதற்கு அவர் சொன்னாராம் - ‘நீங்கள் இறக்கையுடன் இருந்தால் யாருக்கும் பயனில்லை. இப்படி இருந்தால் மக்களுக்கு நன்கு பயன்படுவீர்கள். உங்களுக்கும் நல்லது’ - என்று.
அதாவது இயற்கை உண்மை ஒன்று தொன்மக் கதையின் வடிவில் வெளியிடப்படுகிறது. என்ன? Originally when the horses were wild horses they were not useful to men. But when they got domesticated they became the most favoured mode of transport to people. அவைகளின் காட்டுத்தன்மை என்பதை குறிக்க இறக்கைகள் என்ற குறியீடு பயன்படுகிறது.
குதிரை உடலிலிருந்து நல்ல தணலிலிருந்து ஜ்வாலை போல் சிலசமயம் ஒளி எழும்பும். குதிரையின் எல்லா அங்கங்களும் நெருப்பு போல் ஜொலித்தால் ஒரு வருஷ காலம் மழை பெய்யாது.
வியாதி இல்லாத குதிரை மனம் வருந்தி இரையெடுக்காமல் இருந்தால், தண்ணீர் குடிக்காமல் இருந்தால் யஜமானனுக்குத் தீமை உண்டாம்.
குதிரை இடது காலால் பூமியில் அடித்தால் யஜமானன் பிரயாணத்தை தடை செய்வதாம்.
குதிரை இடதுபக்கம் வாலை அசைத்தால் தேசாந்திர யாத்திரையும், வலது பக்கம் அசைத்தால் வெற்றியும் உண்டாகும்.
இதைப் போல் பல.
அன்புடன்சுபா2012/12/10 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>http://mohanaranganreads.blogspot.in/2012/12/1.html
--Suba Tremmelhttp://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!http://ksuba.blogspot.com - Suba's Musings
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
அப்புடீன்னா, நீங்க எல்லோரும் குதிரை இந்திய விலங்கு என்று
சொல்கிறீர்கள்? ஆரியர்கள் வந்த பிறகுதான் ஹயக்கிரீவரே இந்தியாவிற்கு
வந்தார் என்பார் நண்பர் கணேசன் :-))
க.>
வாங்க சுபாஷிணி,
அன்புடன்சுபா
மிக அபூர்வமான ஒரு நூல்
ப்ரின்ஸிபால் சாரநாதன் -- இந்தப் பெயரைக் குறித்துக் கொள்ளுங்கள். இது ஒரு மந்திரப் பெயர்.
தமிழ்நாடு பெற்ற தவப்பயன்களில் ஒன்று இந்தப் பெயர். இந்தியாவின், தமிழ் நாட்டின் கல்வி ஊக்கங்களில் ஒரிஜினல் அக் மார்க் ஊக்கம் என்று சொன்னால் இந்த ப்ரின்ஸிபால் சாரநாதன் என்ற திருப்பெயர் எனலாம்.
துல்லியமான வீணையின் சுநாதம் போன்று அவரது எழுத்துகளின் அடிநாதம் அமைந்திருக்கிறது. ஆங்கிலம் அருமையான நடை. இந்தியனாங்கில இலக்கிய வரலாற்றிலும், தமிழ் இலக்கிய வரலாற்றிலும் ஆதிகாலத்தில், தொடக்க நாட்களில் அதாவது தற்கால இலக்கியம் தொடக்கம் என்று கூசாமல் நவீன இலக்கிய வாதிகள் கூறும் மணிக்கொடிக் காலக் கட்டத்திற்கு முன்னமேயே நவீன இலக்கியம் எழுதிய இலக்கிய வாதி
தமிழில்
வாழ்க்கைச் சிற்பம் -- மூலக்கற்பனை, நெசவு, வர்ணம், சிற்ப ஒருமிப்பு
நம் நாகரிகப் போக்கு, ஆதி கவியின் சிறப்பு, இந்தியத்தாய் I to V, கல்வி பற்றிய எழுத்துகள், சில பேரறிஞர்கள், சுய சரிதம், சமூக முற்போக்கு, கதம்பம்.
பாரதியைப் பற்றிய ஆரம்ப கால விமர்சகர்கள் என்னும் தகவலை மாற்றி எழுத வேண்டும் இவரை வெளிக்கொணர்ந்தால்.
நெடுநாளாக இவரைப் பற்றித் தனி இழை துவங்க வேண்டும் என்பது என் அவா. சீக்கிரம் துவங்குகிறேன்.
மிக அபூர்வமான ஒரு நூல்
ஏன் இதை ‘மிக அபூர்வமான’ என்று சொல்கிறேன் என்று யோசிக்கிறீர்களோ?
ஆம். அபூர்வம் என்றால் முன்னர் இல்லாதது என்று பொருள். நிச்சயம் இந்த நூல் அச்சுலகில் முன்னரே இல்லாதது. 1949ல் நினைவு மலராக வந்தது அப்படியே நின்று போயிருக்கிறது. ஏன் யாரும் இதை நூலாகக் கொண்டு வரவில்லை? தெரியவில்லை. ஒரு வேளை வந்து நான் தான் கவனிக்கத் தவறிவிட்டேனோ அதுவும் புரியவில்லை. மர்மம் வேண்டாம். விஷயத்திற்கு வருகிறேன்.
ப்ரின்ஸிபால் சாரநாதன் -- இந்தப் பெயரைக் குறித்துக் கொள்ளுங்கள். இது ஒரு மந்திரப் பெயர்.
......
மாதிரிக்கு
Lyrics, Poems of Earth and Sky, Krishna - A Lyrical Pastoral, The Spirit of India, Political Sonnets, Occasional Pieces, First Sheaves -- இதெல்லாம் ஆங்கிலக் கவிதை நூல்களின் தொகுப்புகள்.
பிறகு Prose என்னும் பகுதியில் The Sword of Knowledge, Literary Criticism - The Poetry of Francis Thompson, Style in Poetry - I Introduction, II Inward Music, III Coleridge - Pure Romance IV Poetry and Life Coloured Romance;
A Thought on Shakespeare, William Blake and His Poetry; Modern Poetry 1918 - 1940, The Stream of Consciousness, Satire in Greek Drama
Autobiographical writings
தமிழில்
வாழ்க்கைச் சிற்பம் -- மூலக்கற்பனை, நெசவு, வர்ணம், சிற்ப ஒருமிப்பு
நம் நாகரிகப் போக்கு, ஆதி கவியின் சிறப்பு, இந்தியத்தாய் I to V, கல்வி பற்றிய எழுத்துகள், சில பேரறிஞர்கள், சுய சரிதம், சமூக முற்போக்கு, கதம்பம்.
பாரதியைப் பற்றிய ஆரம்ப கால விமர்சகர்கள் என்னும் தகவலை மாற்றி எழுத வேண்டும் இவரை வெளிக்கொணர்ந்தால்.
நெடுநாளாக இவரைப் பற்றித் தனி இழை துவங்க வேண்டும் என்பது என் அவா. சீக்கிரம் துவங்குகிறேன்.
The Principal Saranathan Memorial Volume, Published by The National College, Tiruchirapalli, 1949.
***
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
*
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ஆடியுள் அகல்வானம் அடக்கலொப்ப
>
ஆச்சர்யமான பிரயோகம். கொரியாவில் இலையுதிர்காலத்தைப் பொதுவாய் சொல்வர்.
ஆடிமாத வானை கவனித்துப் பார்த்ததில்லை. இல்லை நான் வைக்யாற்றில்
படுத்தபடி கண்டு ரசித்த வானம் ஆடியுள் அகல்வானமா? என்று இன்று
தெரியவில்லை.
நா.கண்ணன்
Ooops!
of course ஆடி என்றால் கண்ணாடி அல்லவோ!
உதிர் இலை காலத்து வானம் அகலமாகவும், தெளிவாகவும் இருக்கும். வசந்த ருது
கண்ணனின் ராசலீலைக்கும் உகந்த காலம். மனது ஏனோ அங்கே போய்விட்டது.
ஆண்டாள் கண்ணாடியைத் தட்டொளி என்கிறாள். அப்போது ஆடி இல்லையா? சும்மா
தெரிஞ்சுக்கத்தான் இந்தக் கேள்வி.
நா.கண்ணன்
On Dec 20, 5:09 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> 2012/12/20 Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>:
>
> > ஆடியுள் அகல்வானம் அடக்கலொப்ப
>
ஆடி என்றால் கண்ணாடி. முதலில் இளங்கோ அடிகள் பயன்படுத்தியுள்ளார்.
நா. கணேசன்
என்ன வகையான கண்ணாடி (பாதரசம் பூசியதா? பூசாததா?) என்று கண்டு சொன்னால்
அறிவியல் தாகம் தீரும்!
க.>
3-ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட இந்நாடகக் காப்பியத்துக்கு
இணையாய் வேறொன்று அக்காலத்தில், காளிதாசனுக்கு
முன்னமே, எதுவும் இந்தியாவில் இல்லை என்கிறார் ஸ்ரீ நாகசாமி.
கீறல் எதுவும் விழுந்திருக்கான்னு பாக்கதான் பைனாகுலர். தெர்தா?
>> Tolkappiyar and Valluvar jainism are discovered by philology slowly.
>> It takes time. ~ கடுமிமான் கொங்குகிழான்
>
>
> ஆரம்பிச்சிட்டாரய்யா ஆரம்பிச்சிட்டாரு
>
> :-))
>
நாசா கணேச கவசம் என்று ஏதாவது இருக்கிறதா? அதைப்போட்டால் கண்ணு, காதும்
ஒன்றும் கேட்காதாமே? அவர் டிராக்கில்லே வழி தவறாமல் திரும்ப எப்படி
வந்துவிடுகிறார்?! துரை கார்ட்டூன் போட்டு விளக்கினால் உண்டு :-))
க.>
நா. கண்ணனின் ஆடி மாசம் என்ற வியாக்கியானம் பார்க்கக் கிடைத்தது.
இப்பொழுது எனக்குத் தினந்தோறும் சிலப்பதிகாரம், வடமொழி (பஞ்சதந்திரம்,
பரத சாஸ்திரம், ...) பாடம் எடுத்துக்கொள்ளார் ரா. நாகசாமி அவர்கள்.
கலை, கல்வெட்டு, வட-தென் மொழிகளின் தொடர்புகள் எனப் பலவும்
கற்பிக்கிறார்கள்.
நாடகக் காப்பியமாய் முத்தமிழையும் குழைத்துச் செய்த சிலம்பின்
கடைசியில் நூற்கட்டுரை (summary of the book) உள்ளது. அதில்
இந்த உவமை தமிழில் முதலில் வருகிறது அல்லவா? :
”தெரிவுறு வகையாற் செந்தமி ழியற்கையில்
ஆடிநன் நிழலின் நீடிருங் குன்றம்
காட்டு வார்போற் ” - சிலப்பதிகாரம்,
தமிழகத்தில் (= தமிழ்நாடு+ஈழம்+கேரளம்) உள்ள வாழ்க்கையின்
பரந்துபட்ட வழக்காறுகளையெல்லாம், ஒரு பெருமலையை ஓர் ஆடி
பிடித்துக் காட்டுவான்போல், இந்த முத்தமிழ்க் காப்பியம்
காட்டுகிறது எனச் சிலப்பதிகாரத்தை நிறைவு செய்கிறார்கள்.
3-ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட இந்நாடகக் காப்பியத்துக்கு
இணையாய் வேறொன்று அக்காலத்தில், காளிதாசனுக்கு
முன்னமே, எதுவும் இந்தியாவில் இல்லை என்கிறார் ஸ்ரீ நாகசாமி.
--------------------------------------------------
சிலப்பதிகாரம்
நூற்கட்டுரை
குமரி வேங்கடங குணகுட கடலா
ம்ண்டிணி மருங்கிற் றண்டமிழ் வரைப்பிற்
செந்தமிழ் கொடுந்தமி ழென்றிரு பகுதியின்
ஐந்திணை மருங்கின் அறம்பொரு ளின்பம்
மக்கள் தேவ ரெனவிரு சார்க்கும்
ஒத்த மரபின் ஒழுக்கொடு புணர
எழுத்தொடு புணர்ந்தசொல் லகத்தெழு பொருளை
இழுக்கா யாப்பின் அகனும் புறனும்
அவற்று வழிப்படூஉஞ் செவ்விசிறந் தோங்கிய
பாடலும் எழாலும் பண்ணும் பாணியும் (10)
அரங்கு விலக்கே ஆடலென் றனைத்தும்
ஒருங்குடன் தழீஇ உடம்படக் கிடந்த
வரியுங் குரவையுஞ் சேதமு மென்றிவை
தெரிவுறு வகையாற் செந்தமி ழியற்கையில்
ஆடிநன் நிழலின் நீடிருங் குன்றம்
காட்டு வார்போற் கருத்துவெளிப் படுத்து
மணிமே கலைமேல் உரைப்பொருள் முற்றிய
சிலப்பதி காரம் முற்றும்.
நூற் கட்டுரை முற்றும்
--------------------------------------------------------------------------------
நா. கணேசன்
> அடிகளின் வாழ்க்கை எப்படி ஞான நிலைக்கு மலர்ந்தது என்பதை இரண்டாம் பகுதி
> விவரிக்கிறது.
>
> மூன்றாம் பகுதி அடிகளின் நூல்களான திருவாசகம், திருக்கோவையார் ஆகியவற்றைப்
> பற்றிப் பேசுகிறது.
>
> சதசத்து என்று கூறப்படும் ஆன்மா பளிங்கு போன்று சார்ந்ததன் வண்ணமாகத் திகழ்வது
> ஆதலினால் இறைவன் அருளால் ஆன்மாவைத் தன்னைச் சார்ந்து தலைப்பட வழிவகுப்பன்
> என்று கூறி ஆசிரியர் எப்படி அடிகளின் வாழ்க்கை ஞானத்துச் சரியை, ஞானத்துக்
> கிரியை, ஞானத்து யோகம், ஞானத்து ஞானம் என்ற படித்தரங்களில் மலர்ந்து நிறைந்தது
> என்று விவரிக்கும் பாங்கு சிறந்துள்ளது.
இந்த உவமை தெரிந்தது தான். ஆனால், ஸ்ரீ ரங்கனின்
”ஆடியுள் அகல்வானம் அடக்கலொப்ப” என்பதற்கு
இளங்கோ அடிகளின் சிலம்பு ஸம்மரி முன்னோடி.
நீங்கள் காட்டும் குறுந்தொகைப் பாடல் போல
கவிச்சக்கிரவர்த்தி ஜெயங்கொண்டார் இந்தியாவின்
ஒரே லோகாயத நூலில் (ஜெயராசியின் தத்வ உபப்லவ
ஸிம்மத்தை விட்டுவிட்டால்) பயன்படுத்தியுள்ளார்.
குறுந்தொகைப் பாடலை 11 ஆண்டு முன்னர்
ஜெயங்கொண்டார் உவமையுடன் பொருத்திக் காட்டினேன்.
http://www.treasurehouseofagathiyar.net/13000/13006.htm
http://www.treasurehouseofagathiyar.net/12900/12998.htm
http://www.treasurehouseofagathiyar.net/14300/14313.htm
ஆனால், சிலம்பின் நூற்கட்டுரை தான்
ரங்கன் அவர்களின் ”ஆடியுள் அகல்வானம் அடக்கலொப்ப”
என்பதற்குப் பொருந்துவதால் குறிக்கவில்லை.
குறுந்தொகை ஆடிப்பாவையை நினைவூட்டியதற்கு நன்றி.
நா. கணேசன்
Like the dharmic Wheel (அறவாழி) of Mahavira and Buddha,
the wheel of Philology always turns slowly.
For example, agastya and aaNDaaL myths, presence of jAti in Sangam
literature,
Tolkappiyar and Valluvar jainism are discovered by philology slowly.
It takes time. ~ கடுமிமான் கொங்குகிழான்
சந்தேகம்....
விளக்கமுடியுமா?
நான் இதனை கையையும் காலையும் தூக்கினால் அதற்கேற்றவாறு ஆடும் பொம்மலாட்டப் பாவை (ஆடிப் பாவை ) என்று புரிந்து கொண்டேன்.
ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே?
நீங்கள் விளக்குவது கண்ணாடியில் கையையும் காலையும் அசைப்பதற்கு ஏற்றவாறு கை கால்களை அசைத்து பிரதிபலிக்கும் பிம்பப் பாவை என்று பொருள் சொல்கிறீர்கள் (சரியாகப் புரிந்து கொண்டேனா?)
ஏன் பொம்மலாட்டப் பாவை பாவை எனப் பொருள் கொள்ளக் கூடாது என விளக்க வேண்டுகிறேன்.
கழனி மாஅத்து விளைந்துகு தீம்பழம்
பழன வாளை கதூஉ மூரன்
எம்மிற் பெருமொழி கூறித் தம்மிற்
கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவை போல
மேவன செய்யுந்தன் புதல்வன் தாய்க்கே.
"ஆடிப் பாவை” என்று குறுந்தொகையில் இருப்பதால் இப் பொருள்.
உ-ம்: தண்ணாடி - cooling glasses.
பொம்மலாட்டப்பாவை - முன்னாளில் தோற்பாவை -
ஆடுபாவை என்பதுபோல் இருப்பின் தோற்பாவை எனப் பொருள் வரும்.
ஆனால் குறுந்தொகையில் இருப்பது கண்ணாடிப் பிம்பம்.
அப்போது கண்ணாடிகள் வெண்கலத்தால் ஆனவை எனலாம்.
இவ்வகை கண்னாடிகள் ஆறன்முளை என்னும் ஊரில்
இன்றும் (கேரளா) செய்யப்படுகின்றன:
http://aranmulakannadi.org/about/making/
இந்தியாவின் வெண்கல ஆடிகள் மத்திய ஆசியாவில்
புகழ்பெற்றவையாய் 2500 ஆண்டுகள் முன்னரே இருந்துள்ளன.
பேரா. ய. வசில்காப் கட்டுரை (பல ஆயிரம் வருடத்துக்கு முந்தைய
வெண்கல ஆடிகளின் படங்களுடன்)
http://www.laurasianacademy.com/Mirrorscompressed.pdf
உவேசா உரை - குறுந்தொகையில் இப் பாடலுக்கு:
http://www.tamilvu.org/slet/l1200/l1200uri.jsp?book_id=22&song_no=8
நா. கணேசன்
பி.கு. பொம்மலாட்டம் சங்க காலத்தில் இருந்ததா? எனவும்
தெளிவாய் தெரியவில்லை.
> பொம்மலாட்டப்பாவை - முன்னாளில் தோற்பாவை -
> ஆடுபாவை என்பதுபோல் இருப்பின் தோற்பாவை எனப் பொருள் வரும்.
> ஆனால் குறுந்தொகையில் இருப்பது கண்ணாடிப் பிம்பம்.
> அப்போது கண்ணாடிகள் வெண்கலத்தால் ஆனவை எனலாம்.
>
ஆண்டாள் காலம்வரை இவைதான் ஆடிகள்.
ஆனால் இதில் முகம் தெளிவாகத்தெரியுமா? நான் பார்த்ததில்லை. கொரிய
அருங்காட்சியகத்தில் பார்த்த சங்ககால ஆடிகள் முகம் பார்க்க உதவினவா?
என்றே எண்ணத்தோன்றும்!
நா.கண்ணன்
விளக்கம் அளித்ததற்கு அறிஞர்கள் இருவருக்கும் என் நன்றிகள்.
"சங்ககாலத்தில் பொம்மலாட்டம் இருந்ததா?" என்பது பேராசிரியர்க்கு உரிய "எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும் சாமி" கேள்வி.
எனவே இந்தப் பதிலில் நான் திருப்தி அடைந்து விடுகிறேன்.
...தேமொழி
வடமொழி நிகண்டுகளில் சிறந்தது அமரசிம்ஹனின் நிகண்டு. அமரசிம்ஹனின் காலம் கி பி 375 என்பர். சந்திரகுப்த விக்கிரமாதித்யன் (II) சபையை அலங்கரித்த நவரத்தினங்களில் ஒருவர் அமரசிம்ஹன் என்று விக்கியின் கூற்று http://en.wikipedia.org/wiki/Amara_Sinha
ச்லோகங்களில் பொருள் தொகையாக அமைக்கப்பட்ட நிகண்டு இது எனலாம். மூன்று பகுதிகள் கொண்டமையால் திரிகண்டம் எனவும், பெயர்ச்சொற்கள், அவற்றின் எண், பால் முதலிய அடையாளங்களுடன் வகை தொகைப் படுத்துவதால் ‘நாம லிங்க அனுசாஸனம்’ எனவும் வேறு பெயர்களும் உண்டு.
இந்த நூலுக்கு சம்ஸ்க்ருதத்தில் வியாக்கியானங்கள் பெருகியுள்ளன என்பது சொல்ல வேண்டாம். ஆனால் திராவிட வியாக்கியானம் ஒன்றும் 1873 லேயே திருவிசைநல்லூர் மகாலிங்க சாஸ்திரிகள் அவர்களால் எழுதப்பட்டுள்ளது.
நூலும், வியாக்கியானமும் சேர்ந்து பெரிய சைஸ் நூலாக 1873, ஜனவரி மாதம் ஹிந்து பாஷா சங்சீவினி ப்ரஸ், எஸ் திருவேங்கடாசாருலூ, வி ராமசாமி சாஸ்திரி அண்ட் கோ என்பவ்ர்களால் வெளியிடப்பட்டிருக்கிறது.
திருவிசநல்லூர் மகாலிங்க சாஸ்திரிகள் எழுதிய மணிப்ரவாள வியாக்கியானத்தின் பெயர் - லிங்காபட்டீய டீகா ஸர்வஸ்வாதி ஸாரஸங்க்ரஹ ரூபமான குருபால ப்ரபோதிகை என்பதாகும்.
அட்லாஸ் சைஸ் நூலானது 464 பக்கங்களுக்கு வருகிறது. வடமொழி மூலம் முழுவதும் கிரந்தாக்ஷரத்தில் அச்சிடப்பட்டும், தமிழ் மொழிக்கு நடுவில் வரும் வடமொழிப் பதங்கள் கிரந்தாக்ஷரத்திலும், தமிழ்ச் சொற்கள் தமிழிலும் அச்சிடப்பட்ட நூல்.
*
மற்றுமொரு வெளியீடு (50 ஆண்டுகள் கழித்து)
அமரசிம்ஹம் என்னும் நிகண்டு நூல் 1924 ஆம் வருஷம் டி சுவாமிநாத சாஸ்திரி என்பவரால் சாஸ்திர சஞ்ஜீவனி முத்ராக்ஷர சாலை, 313, தங்கசாலைத் தெருவு, மதராஸ் என்னும் முகவரியிலிருந்து வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் சுருக்கமாகத் தமிழில் குறிப்புரை ‘அமரபத கல்பதரு’ என்னும் பெயருடன் தரப்பட்டிருக்கிறது. காமாக்ஷிபுர வாசியான ப்ரஹ்மஸ்ரீ வெங்கடராம சாஸ்திரி அவர்களால் நன்கு பரிசோதிக்கப்பட்டு வெளியிடப்படுவதாய்க் கூறப்பட்டிருக்கிறது.
முன்னுரையில் ஸ்ரீ டி சுவாமிநாத சாஸ்திரிகளால் அழகிய முன்னுரை தமிழில் அளிக்கப்பட்டிருக்கிறது. அதில் அவர் அமரசிம்ஹன் சமணரா அல்லது பௌத்தரா என்னும் கேள்வியை எழுப்பி பௌத்தரே என்று முடிவு கூறுகிறார். அவரது முன்னுரையில் ஒரு பகுதி --
“ஸாராம்சம் - அமரசிம்ஹன் பௌத்த கவியேயாம் என்றும், சிலர் ஜைனமதத்தினெனச் சொல்லினும் பிரமாணங்களால் பௌத்தமதத்தினனே யென ஸ்பஷ்டமாகிறதென்றும், அமரசிம்ஹன் சக கர்த்தாவான விகரமார்க்கனுடைய ஸபையிலிருந்த ஆஸ்தாந பண்டிதனே என்றும், இப்போதைக்கு விக்ரம சகந்தொடங்கி 1962 வருஷங்கள் ஆயின என்றும், ஆதலால் நாமலிங்காநுசாஸனம் இயற்றப்பட்டு 1950 வருஷங்களாவது கடந்திருக்க வேண்டும் என்றும் விளக்கமாகிறது. பிற விஷயங்களை “சரித்ர சிந்தாமணி” எனு நூலில் ஸவிஸ்தாரமாகக் காணலாம்.”
இந்த ‘சரித்ர சிந்தாமணி’ என்னும் நூல் என்னது? யார் எழுதியது? ஆர்வம் உடையோர் முனைக !. கிடைத்தால் பல தகவல்கள் கலந்து கட்டியாகவேனும் கிடைக்கலாம் அன்றோ!
ஸ்ரீ டி சுவாமிநாத சாஸ்திரிகள் அமரகோசம் என்பதற்குப் பெயர்களாக நாமலிங்கானுசாஸநம், அமரம், அமரகோசம், டீகாமரம், பெயரமரம் என்று வழங்கப்பட்டது என்கிறார்.
பெயரமரம் - என்னும் சொல் புழக்கத்தில் இருந்தது என்னும் செய்தி தமிழகத்தில் அமரகோசம் நெடுங்காலமாகப் பயிலப்பட்டு வந்தமையைக் காட்டுகிறதோ!
சாதாரண நூல் சைஸில் உள்ள இந்த வெளியீடு 470 பக்கங்கள் கொண்டு, முதலில் வந்த (?) பெரிய நூல் வெளியிடப்பட்டு (1873) 50 ஆண்டுகள் கழித்து வெளியிடப்பட்டிருப்பது கவனிக்க வேண்டிய ஒன்று.
***
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
*
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
இந்த இழை என்னவாயிற்று? தொடரும் உத்தேசம் இல்லையோ ?சுபா2013/1/7 Subashini Tremmel <ksuba...@gmail.com>
2013/1/6 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
வடமொழி நிகண்டுகளில் சிறந்தது அமரசிம்ஹனின் நிகண்டு. அமரசிம்ஹனின் காலம் கி பி 375 என்பர். சந்திரகுப்த விக்கிரமாதித்யன் (II) சபையை அலங்கரித்த நவரத்தினங்களில் ஒருவர் அமரசிம்ஹன் என்று விக்கியின் கூற்று http://en.wikipedia.org/wiki/Amara_Sinha
ச்லோகங்களில் பொருள் தொகையாக அமைக்கப்பட்ட நிகண்டு இது எனலாம். மூன்று பகுதிகள் கொண்டமையால் திரிகண்டம் எனவும், பெயர்ச்சொற்கள், அவற்றின் எண், பால் முதலிய அடையாளங்களுடன் வகை தொகைப் படுத்துவதால் ‘நாம லிங்க அனுசாஸனம்’ எனவும் வேறு பெயர்களும் உண்டு.
இந்த நூலுக்கு சம்ஸ்க்ருதத்தில் வியாக்கியானங்கள் பெருகியுள்ளன என்பது சொல்ல வேண்டாம். ஆனால் திராவிட வியாக்கியானம் ஒன்றும் 1873 லேயே திருவிசைநல்லூர் மகாலிங்க சாஸ்திரிகள் அவர்களால் எழுதப்பட்டுள்ளது.
நூலும், வியாக்கியானமும் சேர்ந்து பெரிய சைஸ் நூலாக 1873, ஜனவரி மாதம் ஹிந்து பாஷா சங்சீவினி ப்ரஸ், எஸ் திருவேங்கடாசாருலூ, வி ராமசாமி சாஸ்திரி அண்ட் கோ என்பவ்ர்களால் வெளியிடப்பட்டிருக்கிறது.
திருவிசநல்லூர் மகாலிங்க சாஸ்திரிகள் எழுதிய மணிப்ரவாள வியாக்கியானத்தின் பெயர் - லிங்காபட்டீய டீகா ஸர்வஸ்வாதி ஸாரஸங்க்ரஹ ரூபமான குருபால ப்ரபோதிகை என்பதாகும்.என்ன பெயர் இது? இவ்வளவு நீளமாக ..:-))
அட்லாஸ் சைஸ் நூலானது 464 பக்கங்களுக்கு வருகிறது. வடமொழி மூலம் முழுவதும் கிரந்தாக்ஷரத்தில் அச்சிடப்பட்டும், தமிழ் மொழிக்கு நடுவில் வரும் வடமொழிப் பதங்கள் கிரந்தாக்ஷரத்திலும், தமிழ்ச் சொற்கள் தமிழிலும் அச்சிடப்பட்ட நூல்.
*
மற்றுமொரு வெளியீடு (50 ஆண்டுகள் கழித்து)
அமரசிம்ஹம் என்னும் நிகண்டு நூல் 1924 ஆம் வருஷம் டி சுவாமிநாத சாஸ்திரி என்பவரால் சாஸ்திர சஞ்ஜீவனி முத்ராக்ஷர சாலை, 313, தங்கசாலைத் தெருவு, மதராஸ் என்னும் முகவரியிலிருந்து வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் சுருக்கமாகத் தமிழில் குறிப்புரை ‘அமரபத கல்பதரு’ என்னும் பெயருடன் தரப்பட்டிருக்கிறது. காமாக்ஷிபுர வாசியான ப்ரஹ்மஸ்ரீ வெங்கடராம சாஸ்திரி அவர்களால் நன்கு பரிசோதிக்கப்பட்டு வெளியிடப்படுவதாய்க் கூறப்பட்டிருக்கிறது.
முன்னுரையில் ஸ்ரீ டி சுவாமிநாத சாஸ்திரிகளால் அழகிய முன்னுரை தமிழில் அளிக்கப்பட்டிருக்கிறது. அதில் அவர் அமரசிம்ஹன் சமணரா அல்லது பௌத்தரா என்னும் கேள்வியை எழுப்பி பௌத்தரே என்று முடிவு கூறுகிறார். அவரது முன்னுரையில் ஒரு பகுதி --
“ஸாராம்சம் - அமரசிம்ஹன் பௌத்த கவியேயாம் என்றும், சிலர் ஜைனமதத்தினெனச் சொல்லினும்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
ஏன் சமணத்திற்கு மட்டும் இந்த மாதிரி நிலை. எல்லாவற்றிற்கும் நிலைநிறுத்த வேண்டியிருக்கிறது??? . :-(
--
ஏன் சமணத்திற்கு மட்டும் இந்த மாதிரி நிலை. எல்லாவற்றிற்கும் நிலைநிறுத்த வேண்டியிருக்கிறது??? . :-(
அமரகோசம் பதிப்பிகளில் குளறுபடிகள் இருந்திருக்கின்றன. சித்தாமூர் மடத்தில் அமரகோச ஒலைப்பிரதிகள் உண்டு. அவற்றில் இருந்து 1932ல் ஜைன (சமண) பாடல்களைத் தொகுத்திருக்கிறார்கள். இணைப்பில் காண்க.
ஏன் சமணத்திற்கு மட்டும் இந்த மாதிரி நிலை. எல்லாவற்றிற்கும் நிலைநிறுத்த வேண்டியிருக்கிறது??? . :-(
ஐயா,கணேசரு எழுத்தை எதிர்க்க சமணத்தை நையாண்டி செய்வதா?
என் நிலையில் இருந்து யோசித்துப் பார்க்கவேண்டுகிறேன்! (இழைப் பிரிய யானும் ஒரு காரணம். மன்னிக்கவும்)எனக்கு ஒருவரின் எழுத்துப் பிடிக்கவில்லையென்றால், அவர் சார்பு சமயத்தை நையாண்டி செய்து பொது மன்றத்தில் எழுதுவது தகுமா? (தனி ப்ளாகில் எழுதினால் யாரும் ஒன்றும் சொல்வதற்கில்லை :-)
அமரகோசம் சமணருடையது எனும் கருத்து முன்வைக்கப்படுகிறது.
இந்திரனுடைய பெயர்களாக 39 நாமங்கள் அதில் சொல்லப்படுகின்றன.
அதில் 34ம் பெயராக அமைந்திருப்பது ஸஹஸ்ராக்ஷ - ஆயிரங்கண்ணான்.
அரவிந்தாக்ஷ - தாமரைக் கண்ணான் பெயர்ப்பட்டியலில் இல்லை :
--
ஓர் அபூர்வ நூலின் ஆய்வும், அதன் கதையும்( The Earliest Missionary Grammar of Tamil,Fr. Henriques' Arte da Lingua Malabar: Translation, History and analysisBy Jeanne Hein and V S RajamPublished byThe Department of South Asian studiesHarvard University2013.)*16 ஆம் நூற் AD. Joao da Cruz என்னும் இந்திய வியாபாரி, ஒரு கிறித்தவர், கன்னியாகுமரி, தூத்துக்குடி கடற்கரைப் பரப்பைச் சேர்ந்த பரவர்களைக் கிறித்தவ்ர்களாக மாறுமாறு வழிநடத்துகிறார். காரணம்: வாழ்வா சாவா போராட்டம். நாயக்கர்களாலும், பிற பிராந்திய அரசர்களாலும், சேர மன்னர்களின் கை பாண்டிய மன்னர்களை விட வலுத்ததாலும், சண்டையில் வெற்றிக்கு உறுதுணை புரிந்த குதிரைகளை வரவழைத்து உதவிய முஸ்லீம் வணிகர்களுக்குப் பிரதி உபகாரமாக சேர மன்னர்கள், முத்துக்குளிக்கும் பரவர்களாகிய தங்கள் உரிமையை வழிவழியாக மன்னர்களின் காலம் தொட்டு வந்த துறைமுகங்களில் தங்கள் ஆதிக்கத்தை அளிக்கத்தமையாலும் நிர்கதியாகிப் போன பரவர்களுக்கு டா க்ரூஸ் அளித்த வழிகாட்டுதல் பெரும் உதவியாக இருந்தது எனலாம். (நூல் பக்கம் 3)கிட்டத்தட்ட 20,000 பரவர்கள் கிறித்தவ மதத்தைக் கைக்கொள்ளும் நிலை போர்த்துகீசிய நாட்டு மன்னருக்கும், போர்த்துகீசிய கிறித்தவத் தலைவருக்கும் பெரும் வாய்புக்கான கதவுகள் திறந்ததுபோல் இருந்தது. Francis Xavier 1544ல் மிகுந்த முயற்சிக்குப் பின் மதம் மாறிய பரவர்களின் மத்தியில் உண்மையான கிறித்தவ நம்பிக்கைகளைப் பற்றிய தெரிவும், அதன்படியான வாழ்வு முறையும் அமைய வேண்டுமானால் மக்களின் தமிழில் மத நம்பிக்கைகள் போதிக்கப்பட வேண்டும் என்பதை உணர்ந்தார். அதை வலியுறுத்தி அதற்காகத் தங்கள் வாழ்வை அர்ப்பணிக்கும் தொண்டர்கள் முன்வரவேண்டும் என்று அவர் எழுதிய கடிதம் போர்த்துகல் நாட்டில், கோய்ம்ப்ரா என்னும் இடத்தில் 1541ல் நிறுவப்பட்ட கிறித்துவ செமினரியில் சிலரைக் கவர்ந்தது. ஆறு பேர் இந்தியாவை நோக்கிப் பயணமானார்கள். அவர்களில் ஒருவர் Fr Henrique Henriques என்பவர். (நூலின் பக்கங்கள் 1 to 10)இந்த ஹென்ரீக்கு பாதிரியார் பரவர்களின் மத்தியில் வந்து மதப் பிரசாரம் செய்ய முனைந்த போது, மதக் கருத்துகளைத் தமிழில் விளக்க வேண்டி, அந்த காலத்தில் அந்தப் பிராந்தியத்தில் இருந்த பரவர்களின் தமிழ்ப் பேச்சு மொழியைத் தாம் கற்பதற்காக ஒரு மொழியமைப்பு, இலக்கண, சொல்தொடர் கையேடு ஒன்றினைத் தயாரித்தார்.அவருக்கு இங்கு பெரும் இலக்கிய, இலக்கண மரபுகள் வாய்ந்த தமிழ் மொழியைப் பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாது. அந்த மாதிரியான பண்டிதர்கள், புலவர்கள் ஆகியோரிடம் அவருக்குப் பழக்கமும் கிடையாது. அவர் அறிந்தது எல்லாம் தாம் மதப் பிரசாரத்திற்காக வந்து சேர்ந்த பரவர்களின் சமுதாயம். அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டி, கடலில் உள்ள தங்கள் உரிமைகளை நிலத்தில் உள்ள ஆட்சி சக்திகள் பறிக்காத வண்ணம் காத்துக்கொள்ள வேண்டி போர்த்துகீசிய ஆட்சிக்கு உட்பட்ட கிறித்தவ சமுதாயமாக மாறியிருந்த நிலைமை.அப்படிப்பட்ட மக்களின் பேச்சு மொழி எப்படி இருந்திருக்கும்? சொற்களை அந்த மக்கள் அந்தக் காலத்தில் எப்படி ஒலித்திருப்பார்கள்? அன்று ஏதாவது ஒலிப்பதிவுகள் இருந்ததா? இவ்வாறு நாம் அதிசயித்து யோசித்தால், காலத்தில் எந்த விஷயம் எப்படியெல்லாம் எந்த ரூபத்தில் எல்லாம் காப்பாற்றப்பட்டு நமக்கு வந்து சேருகிறது பாருங்கள்!இந்த ஹென்ரிக்கு பாதிரியார் அந்த வேலையைத்தான் செய்திருக்கிறார். அதாவது தாம் தயாரித்த கையேடு நூலில், அந்தக் காலத்து பரவர் சமுதாய மக்கள், அந்தப் பிராந்தியத்தில் எப்படிப் பேசினார்களோ அந்த மொழியை, அப்படியே எப்படி ஒலித்தார்களோ அந்த ஒலிக்குறிப்புகளையும் சேர்த்து எழுத்தில் காப்பாற்றியிருக்கிறார்.அவர் எப்படி அந்த ஒலிக்குறிப்புகளை அப்படியே காப்பாற்றியிருக்க முடியும்? அவர்தாம் போர்த்துகீசியர் ஆயிற்றே! அதுவும் அப்பொழுதுதானே அந்தப் பேச்சு மொழியையே தட்டுத்தடுமாறிக் கற்றுக்கொள்ளத் தொடங்கியிருக்கிறார். தம் காதில் விழுந்த ஒலி ஒன்று, அதைத் தாம் போர்த்துகீசிய பழக்கம் ஏறிப்போன தம் நாவில் ஒலிக்க முயலும்போது ஏற்படும் வினோத மாறுபாடுகள் எல்லாம் இருக்குமே! ஆம். அந்தக் கஷ்டங்கள் எல்லாமும் உண்டு. ஆனால் இத்தனை நடைமுறை கஷ்டங்களுடனும் தயாரிக்கப்பட்ட இந்த கையேடு லத்தீன் இலக்கண வாய்ப்பாடுகளின் முன்மாதிரியில் வகைபடுத்தப்பட்ட தமிழ் வினைச்சொல் கால, இட மாற்றங்கள் என்ற முறையில் மிகுந்த உழைப்பால் தயாரிக்கப்பட்ட ஒன்று.ஒரு விதத்தில் இந்தப் பாதிரியாருக்கு இலக்கியத் தமிழும், தமிழ்ப் புலவர்களின் சகவாசமும் இல்லாதிருந்தது இந்தக் கையேட்டின் சமகால பேச்சு மொழிப் பதிவாக்கம் என்னும் அம்சத்தில் இதன் மதிப்பைப் பெரிதும் கூட்டுவதாய் இருக்கிறது.மேலும் கிறித்தவத் தமிழ் என்ற ஒரு மொழி வகையைப் பற்றிப் பேசாமல் தமிழ் இலக்கிய இலக்கண வரலாறு முழுமை பெறாது. அப்படிப்பார்த்தால் கிறித்தவத் தமிழ் எப்படி ஆரம்பித்திருக்கும், எப்படி அதன் தொடங்கு கணங்கள் இருந்திருக்கும்? என்று யோசிப்பவர்களுக்கு இதைவிடச் சிறந்த ஆவணம், அந்தத் தொடக்க காலத்தை மிக நுண்மையாகவும் மிக அண்மையாகவும் படம்பிடிக்கக் கூடியது வேறு எதுவும் இல்லை எனலாம்.ஹென்ரிக்கு பாதிரியார் தயாரித்த இந்தக் கையேடுதான் ஹார்வேர்டு பல்கலைக் கழக வெளியீடாக வந்துள்ள மேலே நாம் குறித்திருக்கும் நூல்.இரண்டு பெண் திலகங்களான முனைவர்கள் Jeanne Hein, V S Rajam இவர்களின் கூட்டு உழைப்பால் இன்று அழகான நூலாக, ஆங்கில மொழிபெயர்ப்பு, ஆய்வுக் குறிப்புகளுடன் M Witzel அவர்களின் முகவுரையோடு வெளிவந்துள்ள நூல்.ஹென்ரிக்கு பாதிரியார் பற்றிய வாழ்க்கை வரலாறு நூல் ஒன்றை 1977ல் Jeanne அவர்கள் இயற்றினார். அப்பொழுது லிஸ்பனில் உள்ள தேசிய நூலகத்தில் அவர் கண்ணில் பட்டது இந்தக் கையேட்டின் கையெழுத்துப் பிரதி. மைக்ரோ ஃபிலிம் பிரதியைப் பெற்று அவருடைய ஆய்வு தொடர்ந்தது.400 வருஷங்களுக்கு முந்தைய போர்த்துகீஸ் மொழி பற்றிய நுண்புலம் மிக்க அறிஞர்கள் கிடைப்பார்கள். ஆனால் அந்தக் காலத்திய பரவர்கள் சமுதாய தமிழ்ப் பேச்சு மொழி பற்றிய சால மொழிப் புலமை மிக்க ஓர் அறிஞரை எங்கே தேடுவது? இலக்கியத் தமிழுக்கும், இலக்கணத் தமிழுக்கும், பொதுவாக புழங்கு வெளியில் உள்ள பேச்சு மொழி பற்றியும் ஆட்கள் கிடைப்பார்கள். ஆனால் பரவர் சமுதாயத்தின் 16 ஆம் நூற் பேச்சு மொழி?அப்பொழுதுதான் முனைவர் வி எஸ் ராஜம் அவர்களின் தொடர்பு Jeanne அவர்களுக்குக் கிடைத்திருக்கிறது. 1978லிருந்து இரண்டு அறிஞர்களும் தம்முள் செயல்திட்டம் வகுத்துக்கொண்டு நெடும் பணி ஆற்றி வந்திருக்கிறார்கள்.ஆனால் 1982ல் வெளியிடலாம் என்று எல்லாம் முடியும் தருவாயில் ஒரு பெரிய இடர்ப்பாடு. ஹான்ஸ் வெர்லாக் என்பார் எழுதிய நூல் முதல் ஐரோப்பிய தமிழ் இலக்கணம் பற்றியது ஹெய்டெல்பர்க்கில் வெளிவந்தது. இந்தத் துறையோ மிக மிக தனிப்பட்ட துறை. இதில் ஏற்கனவே ஒரு நூல் வந்து உடனேயே மற்றும் ஒரு நூல் அதே விஷயங்களைக் குறித்து என்றால் வெளியிட பதிப்பகமோ, பல்கலைக் கழகமோ செலவிற்கான ஒதுக்கீடு குறித்து தயக்கம் வந்துவிடும். எனவே 27 வருஷங்கள் கிணற்றில் விழுந்த கல்லாயிற்று இருவர்தம் உழைப்பும்.என்ன செய்வது? ஏதோ ஆய்வு என்றால் நாம் கடையில் போய் நூல் வாங்கினால் அல்லது நூலகத்தில் படித்தால் ஆயிற்று என்று நினைக்கிறோம். இல்லையென்றால் கணினியில் அங்கும் இங்கும் காப்பி பேஸ்ட் பண்ணிக் கோப்பில் இட்டுவைத்துக்கொண்டு ‘ஹாய் பாரு ஆய்வு... ஹாய் பாரு ஆய்வு..’ என்று அலட்டிக்கொள்வதுதான் என்றும் பலர் நினைப்பதுண்டு. ஆனால் உண்மையான் ஆய்வு என்பது வியர்வையும், பெருமூச்சும், உறக்கமின்மையும், ஜாலியான பொழுதுகளைத் தியாகம் செய்தலும் என்பதை எத்தனை பேர் உணர்கிறார்கள். பல எதிர்பாராத் காரணங்களால் ஏற்படும் ஏமாற்றம், நிச்சயமற்ற தன்மை இதெல்லாம் எங்கே தெரிகிறது?இந்தக் காலகட்டத்தில் Jeanne அம்மையார் பாவம்! இன்னொரு இடி, Alzheimer’s நோய் என்பதால் தாக்குண்டு பிறரோடு தொடர்பு கொள்ள முடியாத நிலைக்கு ஆளாகிவிட்டார். சரி கையெழுத்துப் பிரதிகள் கெடாவண்ணம் யேல் டிவினிடி ஸ்கூலின் நூலகத்திற்கு அவற்றைப் பராமரிக்குமாறு கொடுத்துவிடலாம் என்று கருதிய அவர் கணவர் Norvin Hein இந்த ஆய்வின் கையெழுத்துப் பிரதியை அப்பொழுது யேலுக்கு வந்த பேராசிரியர் அண்ணாமலை அவர்களிடம் காட்ட, பேராசிரியர் காட்டிய ஊக்கத்தாலும், நூலின் தேவை பற்றிய கணிப்பாலும் உந்தப்பட்டு, மேலும் பல அறிஞர்களிடமும் ஊர்ஜிதம் செய்த பிறகு மீண்டும் வெளியிடும் முனைப்பிற்கு நூல் வந்து சேர்ந்தது.ஆனால் இப்பொழுதோ முனைவர் ராஜம் ஒற்றை ஆளாகத்தான் நூலாக்க தயாரிப்பு, மற்றும் செப்பனிடல் போன்றவற்றைச் செய்ய வேண்டிய நிலை. இருபது வருஷங்களுக்கும் மேல் ஓடிப் போய்விட்டது என்றாலும் தாம் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து திறம்பட நூலை முழுமையாக்கி, பின்னிணைப்புகள், அகரமுதலி ஆகியன சேர்த்து அவர் அளித்த நேர்த்தி, முதல் வாய்ப்பிலேயே ஹார்வேர்டு பல்கலைக் கழகத்தால் வெளியிட ஏற்புக்கு உரித்தாக ஆனது.நூலின் தளமோ 16ஆம் நூற் பரவர் சமுதாயப் பேச்சு மொழி, கன்னியாகுமரி, இராமேஸ்வரம், தூத்துக்குடி பகுதி நெய்தல் நிலம் சார்ந்த சமுதாயம், பழக்க வழக்கம், பேச்சு மொழிக் கூறுபாடுகள், போர்த்துகீசிய கிறித்தவ குருமார்கள் அந்தத் தமிழை வாங்கிக்கொண்டு போர்த்துகீசிய ஒலிகளையும், சொற்களையும் கல்ந்த நிலையில் தாம் வாங்கிப் புரிந்துகொண்ட விதத்தில் ஹென்ரிக்கு பாதிரியாரால் லத்தீன் மொழி இலக்கண கையேடு என்னும் முன்மாதிரியில் செய்யப்பட்ட நூல். போர்த்துகீசிய மொழிக்கே Joao de Barros என்பார் செய்த மொழிக் கையேட்டை மாதிரியாகக் கொண்டு செய்ததுதான் இந்த நூலும். இதன் ஆங்கில ஆக்கம், அதற்கான ஆய்வுக் குறிப்புகள் இப்பொழுது நூலைப் பார்க்கும் பொழுது அதன் கட்டடம், தருவித நேர்த்தி, தரவுகளைச் செம்மையுறக் காட்டியளிக்கும் நுட்பம் இவைதான் நம் கண்ணில் படுகிறது. ஆனால் நூலின் அடித்தளமோ நெடிய உழைப்பு, அயராத ஆய்வு, இயற்கை இடர்ப்பாடுகள், அவற்றையும் தாண்டிக் கனிந்த உள்ளத்து எழுச்சியின் பலன்.Jeanne அம்மையார் குணமடைந்து வந்து இந்த நூலைக் கையில் தொட்டுப் பார்க்கும் அந்த நாள் நன்னாள் என்கிறார் முனைவர் ராஜம். நாமும் கடவுளிடம் பிரார்த்திப்போமாக.ஒரு வரியில் - நன்றி முனைவர் ராஜம் அவர்களே!
***ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்*
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
தேவ்
உ-ம்: தமிழ் அகப் பாடல்கள் பிராகிருதமாக மலயம், தென்றல், சந்தனம் பற்றியும், 1000 தாம்ரைக்கண்ணன் இந்திரன்என்பது பற்றியும் மூல ப்ராகிருத வாக்கியத்துடன் உள்ளது.
Jeanne அம்மையார் குணமடைந்து வந்து இந்த நூலைக் கையில் தொட்டுப் பார்க்கும் அந்த நாள் நன்னாள் என்கிறார் முனைவர் ராஜம். நாமும் கடவுளிடம் பிரார்த்திப்போமாக.

Jeanne Harbison Hein of Bethany; 94 -- BETHANY - Mrs. Jeanne Hein, 94, died peacefully after a long struggle with Alzheimer's disease on Saturday, July 6th at her home in Bethany, CT. Jeanne was born March 17, 1919 in Erie, Pennsylvania. She graduated from Strong Vincent High School with honors in 1936, serving as president of the school's National Honor Society chapter. She graduated from the University of Pittsburgh cum laude in 1940 and earned her Bachelor of Divinity degree from Yale Divinity School in 1954.
Jeanne attended Sarah Hearn Memorial Presbyterian Church as a youth where she was very committed and active within the United Christian Youth Movement and its Pennsylvania chapter. She was nominated as a delegate and attended the World Conference of Christian Youth held in Amsterdam, The Netherlands in July 1939.
She married Stanley Parker Harbison August 2, 1942. As a conscientious objector, and committed pacifist, Stanley was assigned by the Civilian Public Service Program to service in Castaner, Puerto Rico. Jeanne served as Missionary under appointment of the Presbyterian Board of National Missions 1943-48. Stanley and Jeanne administered a hospital and clinic serving the rural poor from 1943-45. Following the war, they continued their service in Guacio, Puerto Rico directed by the Presbyterian Christian Service in San Sebastian, Puerto Rico. With Stanley, she was Co-founder and Co-director of the rural reconstruction project serving the communities in and around Guacio. They also developed a conference center there to serve the churches of Puerto Rico. Returning to the US in 1948, Stanley served as minister of the First Church Christ (Congregational) in East Haddam, CT. He graduated from Yale Divinity School, B.D., June1952. One month later he died from polio.
Jeanne served as Secretary to the Dean and Advisor to Women Students, Yale Divinity School 1954-57. She declined an offer from the Presbyterian Church to accept the post of Secretary of Foreign Missions' Missionary Personnel. She then dedicated herself to the care of her two sons and their great-grandmother.
Following Mr. Harbison's death, in 1959 she married Yale Professor Norvin Hein whom she accompanied with their growing family on year-long sabbaticals in England and India in the early 1960s. While she was never ordained in the Christian Ministry, Jeanne received the Award for Distinction in Lay Ministry from Yale Divinity School in 1992. Jeanne also co-authored, with Rajam Ramamurti, The Earliest Missionary Grammar of Tamil, published by Harvard University Press in 2013 after an effort that spanned some 47 years.
Beyond missionary work and research into the Age of Discoveries, Jeanne's adventurous nature expressed itself in travels to the Yukon, Hudson Bay and the Canadian Maritime provinces. She was also an avid UCONN Huskies Women's basketball fan.
She dedicated much of her time, love and attention to the care of her daughter Margaret who was born with autism. Her tireless advocacy for persons with disabilities made an impact on public policy and programs.
Jeanne is survived by her husband Norvin Hein, her children Stanley and Donald Harbison, Lisa, Chris and Meg Hein, and seven grandchildren.
A Memorial Service will be held at First Church Christ, 511 Amity Road, Bethany, CT on Saturday, July 20, 2013 at 11:00 a.m. A reception will follow at the church. In lieu of flowers donations may be made to the Autism Society http://www.autism-society.org. Arrangements under the direction of Beecher & Bennett, 2300 Whitney Ave., Hamden.