பரம்பை (Indian Mesquite tree), அதன் பெயரால் அமைந்த பரம்பைக்குடி - கல்வெட்டு

939 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Oct 18, 2019, 8:04:34 AM10/18/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, appan.ra...@gmail.com, Santhavasantham
இராமநாதபுரம் சேது பர்வதவர்த்தினி நாச்சியார் தர்மத்தால் தமிழ்ப் 
பள்ளிக்கூடம் கட்டின சேதி சொல்லும் கல்வெட்டு (1856).இக்கல்வெட்டு பற்றி
இன்னும் சில செய்திகள் சொல்லவேண்டும்.

  Genuine Tamil scholars of botany have identified the Parambai tree as Indian Mesquite tree. 
விரைந்து பரவும் இயல்பினது இந்த ’இந்திய மெஸ்கிட்’ மரம். பிரிட்டிஷ் காலத்தில்
ரயில்களை ஓட்ட இம்மரத்தின் விறகுகள் மிகுதியும் பயன்பட்ட்ன. வேத காலத்தில்
நல்ல விறகு என்பதால் யஞ்னங்களை தொடங்க, இதன் கட்டைகளைத் தேய்த்து (அரணி)
நெருப்பை உருவாக்கினர்.

பல வகையான நிலப்பரப்புகளிலும் இந்த பரம்பைக்காடுகள் (வடமொழியில் சமிவனம்)
வளரும். வேகமாகப் பரவும். பரம்பு என்று பரம்பை மரத்தை மலையாளத்தில் அழைப்பர்.
பரம்பிக்குளம், ஆழியாறு அணை. தஞ்சை காவேரி டெல்ட்டாவில் பரம்பைக்குடி உள்ளது.
அதே போல, கமல்ஹாசன் ஊரும் பரம்பைக்குடி என்பது மிகப்ப்ழைய பெயர்.
பரம்பை = Indian Mesquite tree. கன்னடத்தில் இதற்கு பெரும்பெ எனப் பெயர் (schwa phenomenon).

தமிழ் வார்த்தைகள் ஆங்கிலத்தில் எழுத வெள்ளோட்டம் விடுகிற காலம் அது:
  Erania Garba Yagee  = இரணிய கற்ப யாஜி.
 Ravekula Vegia Ragonatha = ரவிகுல விஜய ரகுநாத
Sathoopathee = சேதுபதி 
(My thanks to Sri. Appan Rajagopalan (Madurai), Dorai. Sundaram (Kovai) who helped to read some complex words).

Inscription from Parambaikudi (now called as Paramakudi), 1856 CE 

Paramagody Talook School
was erected by the munificent donation
of Erania Garba Yagee Ravekula Vegia
Ragonatha Ranee Sathoopathee Para
vathavurthanee  Nauchiar Ammaul Ze
mindaree of Ramnad on the 6th Sep
tember 1856. Superintended by Mr.
William Boalth Moonsiff of Paramagody.

1   பரம்பைக்குடி தாலுகா பள்ளிக்கூடம்
2   இராமநாதபுரம் ஜமிந்தாரியாகிய மஹா
3   ரா ரா (ராஜ ராஜ) ஸ்ரீ ஹிரண்ணிய கெற்பயாஜி ரவி கு
4   ல விஜைய ரெகுநாத இராணி சேதுபதி
5   பருவதவர்த்தனி நாச்சியாரம்மாள
6   வர்கள் பொருளுதவி யினாலே 18
7   56 வரு. செப்டெம்பர் மீ (மாதம்)  6 தீ (தேதி)யில் பரம்
8   பைக்குடி வகையராத் தாலூகா முன்
9   சீப் மேஸ்ட்டர் வில்லியம் போவாலத்து
10  துரையவர்கள் மேல் விசாரணையின்
11  பேரிற் கட்டப்பட்டது


image.png

nkantan r

unread,
Oct 18, 2019, 9:00:05 AM10/18/19
to மின்தமிழ்
my grouse was calling it as "indian" musquite tree; as i mentioned it is from the outlook that western people / fauna / flora are forerunners to those seen in asia;
the same attitude was shown by branding kalidas as indian shakespear; (the worse part of this is kalidas can be dated around 4-6Ad while shakespeare lived in 16/17 th century!)
these can be the attitude of western scholars but need not be seconded by indians in india or settled outside india;
call this as parambai/ vanni/ kehjRi (or even in sindh dialect as kandi) or what they call in arabic Khofu.

rnk

N. Ganesan

unread,
Oct 20, 2019, 10:16:36 AM10/20/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
On Fri, Oct 18, 2019 at 8:00 AM nkantan r <rnka...@gmail.com> wrote:
my grouse was calling it as "indian" musquite tree; as i mentioned it is from the outlook that western people / fauna / flora are forerunners to those seen in asia;
the same attitude was shown by branding kalidas as indian shakespear; (the worse part of this is kalidas can be dated around 4-6Ad while shakespeare lived in 16/17 th century!)
these can be the attitude of western scholars but need not be seconded by indians in india or settled outside india;
call this as parambai/ vanni/ kehjRi (or even in sindh dialect as kandi) or what they call in arabic Khofu.

rnk
 
எல்லா இந்திய மாநிலப் பெயர்களும், குறுகிய வட்டார வியாபகமே கொண்டவை. இதனால்,
இந்திய மொழிகளில் ஏதோ ஒன்றை எடுத்து அதிலுள்ள பெயரை ஆங்கிலத்தில் எழுத இயலாது.
Its reach will be lot smaller. 

வடமொழியில் பரம்பை மரப் பெயர்கள் முள் ‘கண்டம்’ - காரணமாக அமைந்தவை.  
பரம்பை = கண்டி, சிந்திமொழியில்

ஐராவதம் தமிழ் பிராமி என்று பெயர் கொடுத்ததை எடுத்துக்கொள்ளுங்கள்.
இந்தியா முழுதும் உள்ள கி.மு. நூற்றாண்டு எழுத்துகளின் உயிரிழையை பிராமி என்ற
சொல்லை எடுத்துவிட்டால் போய்விடும். தமிழி தொல்காப்பியர் காலம் (கி.பி. 2-ம் நூற்றாண்டு)
பின்வரும் புள்ளி, ழ, ள, ற எழுத்துகள் அமைந்தபிறகு சொல்லலாம். அப்படி பிராமியில்
இருந்து கிளைக்கும் இலிபிகளைத்தாம் சமண, பௌத்த நூல்கள் குறிப்பிடுகின்றன.
உ-ம்: லலிதவிஸ்தாரம். அதுபோன்றது மெஸ்கிட் என்ற பெயர் பரம்பை/கண்டி/ஜம்மி/வன்னி/சமி
மரத்துக்கு பேராக உலகம் அறிந்தது.

English has its own rhythm, Look at the genus of Mesquites all across the World,
there are 40+ species of Mesquite trees,
https://en.wikipedia.org/wiki/Mesquite
Parambai is one such Mesquite, and Tamil botanists choose that English name
to write in English. Let me give some examples from Madras Tamil Lexicon. கண்டி - சிந்தி மொழியில், தெலுங்கில் ஜம்மி <சம்மி < சமி ..
கன்னடம் : பெரும்பெ, மலையாளம் : பரம்பு, தமிழ் - பரம்பை. https://www.flowersofindia.net/catalog/slides/Khejri%20Tree.html
https://en.wikipedia.org/wiki/Prosopis_cineraria

Prosopis specigera (Parambai) - Salem District Manual, vol. 2 1883
https://books.google.com/books?id=_ZEIAAAAQAAJ&
Also, see Gamble (Flora of Madras Presidency).

சீமைப் பரம்பை ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து வருவது.
Seemai parambai = Prosopis juliflora
https://www.flickr.com/photos/dinesh_valke/2222290893
https://www.flickriver.com/photos/dinesh_valke/2275699043/

பிற பின்!
நா. கணேசன்

சென்னைப் பல்கலைப் பேரகராதி:
 1) அரணி¹ (p. 119) araṇi * அரணி¹ araṇi , n. araṇi. Pieces of pipal or mesquit wood, used for kindling the sacred fire by attrition; தீக்கடைகோல். அரணி யின்புறத் தனலென (பாரத. சம்பவ. 7).
   2) கலிசம் (p. 782) kalicam கலிசம் kalicam , n. Indian Mesquit. See வன்னிமரம். (திவா.)
   3) குலிசம்² (p. 1025) kulicam குலிசம்² kulicam , n. 1. A mineral poison; கற்பரிபாஷாணம். (W.) 2. cf. குலிகம்². South Indian mahua. See இருப்பை. (மலை.). 3. Indian mesquit. See வன்னி. (மலை.)
   4) சமி² (p. 1298) cami சமி² cami , n. šamī. Indian mesquit. See வன்னி. சமியொன்றா லிருங்கழற்பூசனை புரியின் (விநாயகபு. 55, 2).
   5) சிவா (p. 1448) civā சிவா civā , n. šivā. 1. Chebulic myrobalan. See கடுக்காய். (மலை.) 2. Niruri. See கீழாநெல்லி. 3. Indian mesquit. See வன்னி. (மலை.) 4. Worm-killer. See ஆடுதின்னாப்பாளை. (மலை.)
   6) சீனை (p. 1493) cīṉai சீனை cīṉai , n. Indian mesquit. See வன்னி. (மூ. அ.)
   7) தமனி (p. 1755) tamaṉi தமனி tamaṉi , n. cf. tapana-tanayā. Indian mesquit. See வன்னி. (அக. நி.)
   8) பரம்பை (p. 2499) parampai பரம்பை parampai , n. Indian mesquit. See வன்னி. (L.)
   9) பிங்கி¹ (p. 2645) piṅki பிங்கி¹ piṅki , n. perh. piṅgī. Indian mesquit. See வன்னி. (சங். அக.)
   10) பிரியதரிசினி (p. 2703) piriyatariciṉi பிரியதரிசினி piriyatariciṉi , n. priya-daršinī. Indian mesquit tree. See வன்னி. (சங். அக.)
   11) வன்னி¹ (p. 3565) vaṉṉi ...Indian mesquit, m. tr., Prosopis spicigera; மரவகை. வன்னிமரமு மடைப்பளியுஞ் சான்றாக (சிலப். 21, 5). (பிங்.) 4. Ceylon leadwort. See கொடுவேலி. (மலை.) 5. Whirling nut. See தணக்கு, 2. (மலை.) 6. Person of the Vaṉṉiya caste; வன...
   12) ஶமீ (p. 3886) šamī ஶமீ šamī , n. šamī. Indian mesquit. See சமீ².
   13) கலிகம் (p. S202) kalikam கலிகம் kalikam , n. Indian mesquit; வன்னி மரம். (சித். அக.)
 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/936fdfcd-938e-4901-963b-80f042d9f28d%40googlegroups.com.

sundararajan srinivasagam

unread,
Oct 20, 2019, 9:45:32 PM10/20/19
to mint...@googlegroups.com

Samudra Gupta was called Indian Napoleon. What a shame?

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
Oct 20, 2019, 10:23:26 PM10/20/19
to மின்தமிழ்


On Sunday, October 20, 2019 at 6:45:32 PM UTC-7, sundararajan srinivasagam wrote:

Samudra Gupta was called Indian Napoleon. What a shame?


I have not seen this comparison. The time gap is so vast.

--------

But in Fauna and Flora, India-specific names occur and they make sense.
For example, Indian Elephant vs. African Elephant etc. etc.,

NG 

N. Ganesan

unread,
Oct 21, 2019, 11:52:17 PM10/21/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
In Fauna and Flora, India-specific names occur and they make sense.
For example, (1) Indian Elephant vs. African Elephant (2) American Mesquite vs. Indian Mesquite tree etc. etc.,
There at least 40 species of Mesquites all over the world. We need distinction as in Indian tiger vs. Java tiger etc., 

 சங்க இலக்கியம் ஞெலிகோல் எனத் தீக்கடைகோலைக் குறிப்பிடுகிறது {1}. ஒரு மிகப்பழைய முறையாக
வேத மந்திரங்களைப் பாடி பலவகை யாகங்களைச் செய்யும்போது இரண்டு மரக்கட்டைகளைத்
தேய்த்து தீ மூட்டுவர் வேதியர். இதற்கு அரணி எனப்பெயர். நெரிதல் (நெருப்பு) > ஞெலிகோல் [1].
இன்றும் அரணி நெருப்பு கருங்காலி மரக்கட்டை, பரம்பை மரக்கட்டை https://en.wikipedia.org/wiki/Prosopis_cineraria 
இவற்றைத் தேய்த்து எழுப்பப்படுகிறது. தமிழ்ப் பெயர்கள் இவ்விரு மரத்திற்கும் குறிப்பிட்டேன்.
கதிரை என்று கருங்காலிக்கும், சமி/வன்னி என்று பரம்பைக்கும் வடமொழி நூல்களில் இம்மரங்கள்
குறிப்பிடப்படுகின்றன. இரண்டு மரங்களின் இலைகளும் ஒரே மாதிரி இருப்பவை.
பரம்பை மரம் (= சமி மரம்) இதனால் ஹோம குண்டத்தில் நெருப்பில் போடப்படும் பொருட்கள்
சமித்து என்ற பெயரால் வழங்கப்படுகின்றன.

முண்டக உபநிஷதத்தின் பழைய உரையின் மொழிபெயர்ப்பு.  முழு நூலும் இணைத்துள்ளேன்.
அதில் வன்னி (< வஹ்னி) மரம் தமிழில் பரம்பை எனப்படுகிறது.

1.        

2.      The sacred fire, which is required for a Yajna, the sacrifice, is ignited by rubbing “Khadira (Botanical-Acacia catechu Wild (Fam., Leguminosae) Tamil-Karungali, Telugu-Chandra” and Sami (Tamil- parambai/jambu, Telugu- Jammi) wooden logs against each other. In Sanskrit these wooden logs are called araNi. When one churns one log into hollow made in the other rigorously, due to the friction, heat is generated and fire erupts. This fire is considered to be sacred and is used for the yajna. In the same manner, one has to churn his Atma, one of the araNi against the PraNavam, the second araNi. Here churn means meditate. As the meditation continues progressing stage by stage into a serious DhyAna etc, the effulgent Brahman, who is in the Aum and the Atma will emerge and manifest. The meaning is that this meditation, which is practised in the form of churning, should be continued till the Brahman manifests. 


(1) 

ஞெலிகோல்

ump to navigationJump to search
ஞெலிகோலால் தீ மூட்டுதல்

ஞெலி என்னும் சொல் தீப்பற்றி எரிதலைக் குறிக்கும். [1] ஞெலிகோல் என்பது தீக்கடைக்கோல். (sticks for producing fire by friction) இதன் பயன்பாட்டைச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. ஞெகிழ், ஞெகிழி என்னும் சொற்கள் இதனோடு தொடர்புடையன.

  • மாடு மேய்க்கும் இடையன் கையால் முயன்று தீக்கடைக்கோலின் உதவியால் தீ மூட்டினான். அந்த்த் தீயின் உதவியால் காட்டு மூங்கில் துண்டில் துளை செய்து புல்லாங்குழல் செய்தான். அதில் பாலைப்பண் பாடி மேயும் மாடுகளை மகிழ்வித்தான். [2]
  • இடையன் தன் ஞெலிகோலை மழையில் நனையாமல் இருக்கத் தோல் பையில் கலப்பை அதள் போட்டுச் சுருக்கிக்கொண்டான். [3]
  • புலி களிற்றைக் கொன்று உண்டது போக விட்டுவிட்டுச் சென்ற மிச்சத்தைக் காட்டில் வாழும் பழங்குடி மக்கள் கோத்து உப்புக்கண்டம் போட்டு வைப்பார்கள். மிச்சத்தை உப்பு விற்க வரும் உமணர்களுக்கு ஞெலிகோலால் தீ மூட்டிச் சுட்டுத் தருவார்கள். [4]
  • அதியமான் அரண்மனையில் இருக்கும்போது வீட்டுக் கூரையில் செருகி வைத்திருக்கும் ஞெலிகோல் போன்றவன். போருக்குச் சென்றால் அது பற்றவைத்த தீ போன்றவன்.
.

mundakopanishad.docx

N. Ganesan

unread,
Oct 22, 2019, 6:45:38 AM10/22/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
கதிரம் என்னும் கருங்காலி (அ) அசுவத்தம் என்னும் அரைசு - இரண்டும் தாய்த்தெய்வம் கொற்றவைக்கு
உரியவை என்பது இந்திய மரபு. அரைசி என்னும் பெயரே அதனால் ஏற்பட்டது. அரை என்பது அரச மரம் (தொல்காப்பியம்).

பரம்பை என்னும் வன்னி மரம் சிவனுக்கு உரியது. பல சிவ ஸ்தலங்களில் வன்னி (=பரம்பை) மரம் ஸ்தல விருட்சம்.
வன்னி (வஹ்னி) என்னும் வடசொற் பெயர் சங்க காலத்திலே தமிழ்நாட்டில் வந்துவிட்டது. இடுகாட்டில்
விடங்கர் வழிபாடு, முதுமக்கள் தாழிகள் கிடைக்கின்றன. அப்போது வன்னி மரம் குறிப்பிடப்படுகின்றது.
அந்தச் சங்கப் பாடலை விரிவாகக் காண்போம். 

ஞெலிகோல்: வேள்வியில் தீ உருவாக்கும் முறை:
பாஞ்ஞல் கிராமம் (பாலக்காடு) அதிராத்ரம், 1975.
மிக அரிய ரிக்வேத வேள்வி இங்கே தான் இன்னமும் இருக்கிறது
ப்ரிட்ஸ் ஸ்டால் (மறைந்துவிட்டார்), பார்ப்போலா போன்றோர் பதிவு செய்த அதிராத்ரம்
கதிரம் (அ) அரசு கட்டையும், பரம்பை (= சமி/வன்னி, mesquite)  மரக்கட்டையும்
நெரித்து வேள்வித் தீயைத் தொடங்குவர். அரணி என்னும் வேத ஞெலிகோலில்
கதிரம் (பெண்), வன்னி (ஆண்) பாகங்கள் உள்ளன.பாம்பை, கருங்காலி மரங்கள்
ஒரேவிதமான இலைகள் கொண்டவை. 

பரம்பை என்னும் வன்னி மரம் பற்றிய சங்க இலக்கியச் செய்தியும்,
விடங்கர் வழிபாடு இடுகாட்டில் பரம்பையினோடு என்பதற்குப் பொருளும்
பின்னர் காண்போம். தேவாரத்தில் 50 இடங்களில் பரம்பை (=வன்னி) மலர்
சிவன் சூடுவதாக வரும், காரணம் இதுவே.

முதலில், கொற்றவையின் பூசகன் அட்டணங்கால் போட்டு கதிரை (கருங்காலி)
மர வாதில் வீற்றிருந்து வாகனமான புலியை ஏவும் சிந்து முத்திரைகள் பல
கிடைத்துள்ளன. 
 இவை கருங்காலி மரம் என்று ஆய்ந்து முதலில் எழுதியவர்
நியூ யார்க் மாகாண விவசாயியும், தொல்லியல் அறிஞருமான வால்ட்டர் ஃபேர்செர்விஸ்
ஆவார்.

வாலையின் பூசகன் சேலை மரத்தில் கொற்றியின் புலியை ஏவும் காட்சி:
Figure 11. Shaman on the tree and an attentive tiger below,

சேலை - சீலை - உறையைப் பட்டையாக உடுத்த வேலமரங்கள்.
கதிரம் - வடமொழியில் வழங்குவது, கதிரகாமம் - இம்மரங்கள் கொண்ட வனம்.
கதிராமங்கலம் - சோழர் குலதேவதை வனதுர்க்கை கோயில் உள்ள இடம்,
அங்கே, இராஜராஜன் சார்த்திய உடைவாள் இருக்கிறது என்பர்.

தையல் - சிறுபெண் - இது தெரிவது எதனாலென்று உவேசா சொல்லியுள்ளார்:
தையல்நாயகியின் வடமொழிப் பெயர் வாலாம்பிகை - புள்ளிருக்குவேளூரில் (வைத்தீசுவரன் கோயிலில்).
தை - தந்தை, முந்தை, எந்தை, நுந்தை, உந்தை ... - உள்ள சொல், Father/King/God = தை.
12 தமிழ் மாதப் பெயர்களில் உள்ள ஒரே தமிழ்ப்பெயர்: தை - மகர விடங்கருக்கான மாதம்.

விடங்கர் = இலிங்கம், சிவனின் பழமையான கோயில்களில் இன்றும் வழங்கும் பெயர்.
செணில்/சணில் என்னும் முந்துபெயர் (proto-dravidian name for squirrel) அணில் என்று ஆனதுபோல, 
விடங்கர் > இடங்கர் எனச் சங்க இலக்கியங்களில் படிக்கலாகும்.


நா. கணேசன் 

சேலைமரப் பூசாரி தொழும் 
வாலை மயிடனுடன் போர் - ஜல்லிக்கட்டு காட்சி அல்ல என எழுதிய கட்டுரை:

N. Ganesan

unread,
Oct 23, 2019, 4:19:15 AM10/23/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
வேள்விகள் தொடங்க, பரம்பை என்னும் வன்னிக் கட்டையையும்,
அரசு (அ) கருங்காலிக் கட்டையையும்ஞெலிகோலாகக் கடைந்து தீ எழுப்புவது
மரபு. 3500 ஆண்டுகளாய்ப் பதிவாகியுள்ள “அரணி”யால் தீக்கடைதல் இது.
நாலாயிர பாசுர விளக்கங்கள், உபநிஷதங்களைப் பற்றிய உரைகளில்
அரணிக்கு பரம்பை (வன்னி) தவறாது இடம்பெறுகிற மரம் ஆகும்.
முண்டக உபநிஷதத்தில் அரணி என்பதன் விளக்கத்தில் பரம்பை
என்று குறிப்பிடப்படுதலை முன்னர் கொடுத்துள்ளேன்.

அரசு, கருங்காலி (acacia catechu) - தாய்த்தெய்வத்துடன் தொடர்புடையது.
சிந்து முத்திரைகளிலே கருங்காலி மரக் கிளையில் அம்மையின் பூசகன்
அமர்ந்து, கீழே உள்ள புலியை (வாகனத்தை) ஏவுவதைக் காணமுடியும்.
அரச இலைகளால் இயன்ற தோரணத்தின் (கோயிலின்) கீழே அரைசி/கொற்றவை
நிற்கிறாள். இதனை ஹரப்பா முத்திரை காட்டுகிறது.
Prof. Rich Meadow (Harvard University) sent me this picture, what he found in Harappa.
Look at the girl standing under the arch of Arasu (Bodhi) tree leaves:

பரம்பை மரம் போர், இறப்பு இவற்றுடன் தொடர்புடையது. விஜயதசமியின் போது
மன்னர்கள் பரம்பை மரத்தை வணங்குவர். பரம்பை என்பதற்குப் பதிலாக,
வன்னி என்ற வடசொல்லை சங்க இலக்கியம் ஆள்கிறது. போர் வர்ணனை (புறப்பாடல்),
முதுமக்கள் தாழி இடும் காடு (பதிற்றுப்பத்து) - இரண்டு இடங்களிலே இந்த வன்னி
என்னும் பரம்பை மரத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளனர். மழுவாள் நெடியோன்
என்னும் வருணன் இறத்தலுக்கு அதிபதி தெய்வம். அவனது மழுவாள் நெடியோன்
வடிவத்தைப் பெருஞ்சிற்பமாக முதுமக்கள் தாழி உள்ள இடங்களில் நாட்டி வழிபாடுகள்
வன்னி மன்றத்தில் நடந்துள்ளன. விடங்கர் வழிபாட்டின் அமிசமாக இருந்த
வன்னி தேவார காலத்தில் சிவன் அணியும் முக்கியமான மலராக ஆகிவிட்டது.
ஏராளமான சிவ ஸ்தலங்களில் பரம்பை (= வன்னி, வடசொல்) ஸ்தல வ்ருக்ஷம் .
 
பரம்பை - வன்னி மரம் (அ) சமி மரம். நூற்றுக்கணக்கான ஆவணங்களில் பார்க்கலாம்.
அருணகிரிநாதர் சித்த வைத்தியம் பற்றி ஓர் அரிய வகுப்புப் பாடியுள்ளார்.
சித்துவகுப்பு. அரிய உரை தணிகைமணி வ. சு. செங்கல்வராயபிள்ளை அருளினார்.

அகில்ப ரம்பை காரை துடரி தும்பை சூரை
அலரி சம்பு நாவல் மருது சிந்து வாரம்  ...... 13
(அருணகிரிநாதர் சித்துவகுப்பில் பரம்பை மரம் பற்றிக் குறிப்பிடல்).

பரம்பை - 13: இது ‘வன்னி மரம்’. இதனால் ‘வளிசன்னி, முப்பிணி, நஞ்சு, சொறி நீங்கும். ‘வாத சந்தி தோடமறும் ...’ விடமும் கபமும் சொறியும் போம்’ - (அ.கு.)
(தணிகைமணி வ.சு.செ., முருகவேள் பன்னிரு திருமுறை, தொகுதி 4, பக்கம் 527 இணைத்துள்ளேன்.)

நா. கணேசன்














































































N. Ganesan

unread,
Oct 23, 2019, 7:12:11 PM10/23/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
In Fauna and Flora, India-specific names occur and they make sense.
For example, (1) Indian Elephant vs. African Elephant (2) American Mesquite vs. Indian Mesquite tree etc. etc.,
There at least 40 species of Mesquites all over the world. We need distinction as in Indian tiger vs. Java tiger etc., 

குதிரை, சிங்கம் போல சுவல் கொண்டது கேழல்பன்றி = Indian wildboar.  https://en.wikipedia.org/wiki/Indian_boar

Look at some plants growing in India named as Indian XYZ https://www.biodiversityofindia.org/index.php?title=Family-wise_list_of_plants


Indian mesquite is called Parambai in Tamil and also Vanni < Vahni sanskrit. Also called shami tree in Sanskrit.

Working Plans Sanctioned by the Board of Revenue


NG
 

N. Ganesan

unread,
Oct 23, 2019, 8:49:45 PM10/23/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
ஆரிய மொழிகளில் இரு சொற்கள் - ஆய்வு:

பரம்பை மரம் பஞ்சாபி மொழியில் ஜண்ட மரம் எனப்படுகிறது:
CDIAL 5092 *jaṇṭa ʻ a kind of tree ʼ.
L. P. jaṇḍ m. ʻ Prosopis spicigera ʼ, jaṇḍī f. ʻ a small variety ʼ; H. jã̄ṭ m. ʻ P. spicigera ʼ.
இச் சொற்பிறப்பு வெள்ளிடைமலை. சம்ஸ்கிருத அறிஞர் யாரும் சொல்லலை.
கண்ட ‘முள்’ (மொஹஞ்சதாரோ உள்ள சிந்து மாகாணத்தில் பரம்பை/வன்னி மரப்பெயர்)  
கண்டி > சண்ட > ஜண்ட.     [...]
(கடுகடு - கடுப்பு - கண்டை - சண்டை. சண்டாள என்ற உபநிஷதச் சொல் த்ராவிடம் என்பர்.)

மஞ்சரி - பரம்பை மலர்க்கொத்துக்கு முதலில் வந்திருக்கிறது.
மஞ்சள் என்பது அத தமிழ் தாதுமூலம்.

CDIAL 9716 mañjari -- , ˚rī -- f. ʻ cluster of blossoms ʼ MBh., mañjara- n. lex., mañjarī -- f. ʻ a partic. tree ʼ lex.
Pa. mañjari -- , ˚ikā -- f. ʻ branching flower -- stalk, sprout ʼ; Pk. maṁjarī -- , ˚riā -- f. ʻ new tender sprout ʼ; S. mañaru m. ʻ a kind of earring ʼ; Lmiñjar f. ʻ flower of Prosopis spicigera ʼ; Mth. majar ʻ cluster of blossoms (esp. of mango) ʼ; H. mañjarmañjrī f. ʻ cluster of blossoms ʼ, mãjrānā ʻ to blossom ʼ, G. mã̄jar n., M. mãjirī f.; -- Si. mädiri -- ya ʻ name of a tree ʼ, kaḷu -- m˚ ʻ Diospyros oppositifolia ʼ.

பரம்பை மர மலர் மஞ்சரி:
(இவ்வாறு இருப்பதனால் சரக் கொன்றையும் சிவனுக்கு விருப்பமான மஞ்சரி ஆயிற்று).
பரம்பை/வன்னி/சமி
10.jpg

N. Ganesan

unread,
Oct 25, 2019, 7:53:06 AM10/25/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, appan.ra...@gmail.com, ranga...@gmail.com, Parthasarathy Ranganathan
பரம்பை என்ற தூயதமிழ்ப் பெயர் இருக்க, ஏன் சங்கத் தமிழில் இருமுறை போர், பிண்டம், இறப்பு தொடர்பாக
“வன்னி” (< வஹ்னி) என்று பரம்பை மரத்திற்கு 2000 ஆண்டு முன்னர்  பயன்படுத்தியுள்ளனர் எனப் பார்ப்போம்.

(1) ‘மன்னர் மறைத்த தாழி
      வன்னி மன்றத்து விளங்கிய காடே.” - - பதிற்று : 44 : 22-23.

(2) பொருந்தாத் தெவ்வர் அரிந்த தலை அடுப்பின், 
கூவிள விறகின் ஆக்கு வரி துடுப்பின், 
ஆனா மண்டை வன்னிஅம் துடுப்பின், 
ஈனா வேண்மாள் இடம் துழந்து அட்ட 
மா மறி பிண்டம் வாலுவன் ஏந்த, (புறம் 372)

பிணங்களின் தலைகள் அடுப்பாகக் கூவிளம் விறகு கொண்டு பேய்கள் பற்ற வைக்கும். அதில் வரிக்குடல்கள் மிதக்கும் மண்டை ஒட்டை அகப்பையாகவும், வன்னி மரத்தின் கொம்பு அதில் செருகப் பட்ட காம்பாகவும் பேய் மகள் துழந்து அட்ட இறைச்சி உணவினைப் பேய் மடையன் கொற்றவைக்குப் படைக்கிறான்.   வன்னி = நெருப்பு. அக்கினி ரூபமானது வன்னி மரம். போர் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கும்,
கொற்றவையின் பிண்ட வேள்விக்கும் ஆன சிலேடைப் பாட்டு இது.

பிண்டம் கொடுத்தல், முதுமக்கள் தாழி இடும் காடு - இந்த வர்ணனைகளில் “வன்னி” என்ற
வடசொல் பயனாவது ஆழ்ந்து சிந்திக்கத் தக்கது. வருணனின் இடம் வன்னி மன்றம் ஆகிய இடுகாடு,
வருணன் மனையாள் என்றிருந்த கௌரிக்கான களவேள்வி என இரு சங்கப் பாடல்களில் மட்டும்
வன்னி என்னும் பரம்பை மரம் வருதல் காண்க. இவ்விரு பெருந்தெய்வங்களுக்கு மட்டும்தான்
அவர்களின் அடையாளங்களாக சுறா, பெண்ணெருமை கோடுகள் நட்டு வழிபாட்டைப்
பொதுமக்கள் நடாத்தியுளர் என்பதும் சங்க இலக்கியங்கள் தரும் செய்தி.

வட நாடு, தென்னாடு தொடர்பான நீண்ட வரலாறு இது. வடக்கே இருந்து கண்ணபிரான் தலைமையில்
பதிணென் வேளிர் குடிகளும் மக்களும் தமிழகம் வந்தடைந்தனர் என்னும் சங்க கால மரபுச் செய்திகளும்,
அகத்தியன் வந்தடைந்ததும் ஆன மரபு வரலாற்றை விளக்குவதான செய்திகள் “வன்னி” என்ற பெயரிலும்
இருக்கிறது. தமிழ் இலக்கியங்களிலே விடங்கர்/இடங்கர் என்ற அரிய சொல் வழங்கிவருகிறது.
இடங்கர் என்ற சொல்லே சங்க இலக்கியத்தில் இருப்பினும், பிற்கால தமிழ் இலக்கியங்களில் உள்ள
விடங்கர் என்ற சொல்லில் இருந்து பிறந்ததாகவே கொள்ள வேண்டும். விடங்கர்/இடங்கர் - லிங்க வழிபாடு
அமையக் காரணமான கங்கை முதலை. நகர் என்று வடநாட்டிலே வழங்குவது. சம்ஸ்கிருதத்தில் மொழியறிஞர்கள்
இவ்வாறு பல சொற்களைக் காட்டுவர் (உ-ம்: சுலோகம்). வன்னி என்று பரம்பை மரத்தின் பெயரால்
அமைந்தது வன்னியூர் என்னும் தேவார ஸ்தலம். அழகிய சிறுகோவில். இன்று வன்னியூர் > அன்னியூர்
ஆகிவிட்டது. அதேபோல, விடங்கர் (Proto-Dravidian) > இடங்கர். விடங்கர் = முதலை, பின்னர் இலிங்கம்.
இது பற்றி மேலும் அறிய, பக்கம் 11, 12 (பிடிஎப் கோப்பு எண்கள்) ஆய்வுக் கட்டுரை படிக்கவும்:
https://archive.org/details/IVCReligionInIronAgeTamilNaduByNGanesan-2016-16thWSC/page/n9

நெடியோன் என்று 3 இடங்களில் குறிப்பிடப்படும் வருணன்:

நெடியோன் என்று மால், முருகன் போன்ற தேவதைகளுக்குத் தமிழிலே வழங்கினாலும்,
சங்கப் பாடல்கள் மூன்றிலே அப்போது பெருந்தெய்வமாக விளங்கிய வருணன்
நெடியோன் என வணங்கப்பட்டுள்ளான். தெளிவு கருதி, வருணன் என்ற சொல்லையே
தொல்காப்பியர் ஆள்கிறார். நெடியோன் என்று குறிப்பிட்டால் அவர் காலத்திலே (கி.பி. 2-ம் நூற்றாண்டு,
ஐராவதம் மகாதேவன்) கூட மறைந்துவரும் வருணன் எனத் தெளிவாக்கிவிடுகிறார்.
தொல்காப்பியருக்கும் 1000 ஆண்டுகள் முன்னரே வருணன் என்னும் பெருந்தெய்வம் 
தமிழ்நாட்டுக்கு வட நாட்டில் இருந்து வேளிர் வருகையால் அறிமுகம் ஆகிவிடுகிறது.
http://www.tamilvu.org/slet/lA100/lA100pd2.jsp?bookid=249&pno=43

ஐந்திணைத் தெய்வம்

“மாயோன் மேய காடுறை யுலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே”

(அகத். 5)

என்பது தொல்காப்பியம். வருணன் என்று வரும் ஒரே இடம் தொல்காப்பியம் தான். 
சங்க இலக்கியத்து ஏனை இடங்களில் “நெடியோன்” என்றே தமிழ்ப்பெயர் சூட்டி வருணனைத்
தமிழ்ச் சான்றோர் பாடியுள்ளனர்: 
(1)  மதுரைக் காஞ்சி வருணனை ஐம்பூதங்களுக்கும்
அதிதேவதையாகப் பாடும்போது, “மழுவாள் நெடியோன்” என்று குறிப்பிடுகிறது.
இந்த மழுவாள் நெடியோனுக்கு முக்கிய தொல்லியற் சான்று வட இந்தியாவின்
கங்கை-யமுனை நதிக்கரையில் இருந்து வருகிற ‘Anthropomorphic Axe" எனத்
தொல்லியலில் சுட்டப்பெறும் தென்னிந்தியாவின் மெகாலித்திக் காலப்
பெருஞ்சிற்பங்கள். உடையார்நத்தம், மோட்டூர், சித்தன்னவாசல், ... உள்ளவை.
இன்று தொல்லியல் நிபுணர்கள், வடக்கே வெண்கலத்திலும், தமிழ்நாட்டில்
கல்லில் பெரிதாகவும் உள்ளவற்றை  ‘Anthropomorphic Axe"  என்பர். இதற்கான
இந்திய மொழிகளிலே உள்ள பெயர் “மழுவாள் நெடியோன்” என்று தமிழ்ச்
சங்க இலக்கியங்களிலே தான் இருக்கிறது என்பதனை அவர்கள் அறிந்து
வடநாட்டு ‘மழுவாள் நெடியோன்’ செப்புப் படிமங்களிலே ப்ராஹ்மி எழுத்தின் தோற்றங்கள்
இருக்கின்றன. பொருந்தல், கொடுமணல், கீழடி போன்றவற்றில் உள்ள வட இந்திய பெயர்களுக்கு
(ஸாதன், திஸன், குவிரன், அவதி, ....) உண்டான ப்ராமிக்கு 5 (அ) 6 நூற்றாண்டுகள்
முந்தையவை இந்த எழுத்துகள் என்பதையும் ஆய்வில் கொள்ளவேண்டும்.

(2) பரன்குன்று - இப்போது பரங்குன்று (வன்சிரம் > வஞ்சிரம் போல) - பரன் = இறைவன் என்பதற்கான வடசொல்.
இங்கே மிக அழகிய தமிழ் பிராமி கல்வெட்டு குளக்கரையில் கிடைத்துள்ளது 
“மூ நாகரா, மூ சக்தி” என்று தமிழும், வடசொற்களும் கலந்த கல்வெட்டு.
பாண்டியர்கள் இங்கே யாகங்கள் வேட்டபோது எழுந்த கல்வெட்டு ஆதல் வேண்டும்.
பாண்டியர் என்ற சொல்பிறப்பை பாணிநீயத்தின் உரைகாரர் பதஞ்சலி (கி.மு. 150)
என்ன சொல்கிறார் என்று பார்த்தால், பேரா. கண்மணி துவராபதி - பாண்டியர்
பற்றிய கேள்விக்கு விடைகிட்டும். கலைக்களஞ்சியம் ஆசிரியர் ம. பெ. தூரன்
அவர்கள் குலப்பெயர், வேளிர் வருகை பற்றிக் குறிப்பிடும் செய்திகளைப் பின்னர் பார்ப்போம்.
தூரன் பற்றி இளைஞர்கள் அறிய:

வளம்கெழு முசிறி ஆர்ப்பெழ வளஇ,

அருஞ்சமம் கடந்து படிமம் வவ்விய

நெடுநல் யானை அடுபோர்ச் செழியன்

கொடிநுடங்கு மறுகின் கூடற் குடாஅது,

பல்பொறி மஞ்ஞை வெல்கொடி உயரிய, 15

 

ஒடியா விழவின்நெடியோன் குன்றத்து,

வண்டுபட நீடிய குண்டுசுனை நீலத்து

எதிர்மலர்ப் பிணையல் அன்ன இவள்

அரிமதர் மழைக்கண் தெண்பனி கொளவே. 19                      

                                                         - எருக்காட்டூர் தாயங்கண்ணனார்  (அகம்-149)


 திருப்பங்குன்றத்து மிகப் பழைய தமிழ் பிராமிக் கல்வெட்டால்
நெடியோன் குன்றம் என்பது வருணனுக்காக இட்ட பெயர் என்பது வெளிச்சம் அடைகிறது.
சில நூற்றாண்டுகள் சென்ற பின்னர், வருணனுக்கான பொருள்கள், அடையாளங்கள்
சிவனுக்கு மாறிவிட்டன. உ-ம்: இந்தியாவில் முதல் லிங்கம் குடிமல்லத்தில்
வருண விடங்கராக உள்ளது. பின்னர் இந்த விடங்கர் சிவன் என்றபெயரில்
வணங்கப்படுகிறார். இறப்பின் அதிதெய்வம் வருணன் எனக் காட்ட வன்னி (< வஹ்னி = அக்கினி)
என்னும் பரம்பை மலரைச் சிவன் சூடுகிறார். கையில் மழு - வருணனின் சின்னம் -
இல்லாத சிவ வடிவங்களைத் தென்னாட்டில் காணவியலாது. 

முருகன்/கார்த்திகேயன் வானவியல் புராணங்கள் வட நாட்டில் இருந்து வந்து, கந்தன் மகனாக  
சிவபெருமானோடு இயைக்கப்படுகின்றன.
அப்போது பழைய பெயர் “நெடியோன் குன்றம்” . அதிலே முருக வழிபாடு நடந்ததைப்
பாடும் பாடலைத் தாயங்கண்ணனார் எழுதியுள்ளார். இன்றும் பழைய முருகன் தலங்கள்
பல சிவஸ்தலங்களே. வன்னி சூடும் நெடியோன் வருணன். அவனுக்கிருந்த நெடியோன்குன்றம்.
வன்னி கர்ப்பன் (அக்கினி குமரன்) - என முருகனுக்கு முக்கியமான பெயர் அமைந்துள்ளது ஓர்க.

(3)   இதே நெடியோனுக்கு முதுகுடுமிப் பெருவழுதி அசுவமேத யாகங்கள் எடுத்தமை
தமிழ் ப்ராமியில் தன் பெயர் பொறித்து வெளியிட்ட நாணயங்களாலும்,
புறப்பாடலில் குமரி முனையில் இந்த நெடியோனுக்கு விழாச் செய்துள்ளான்
என்று கூறுவதாலும் தெரிகிறது. முதுகுடுமிப்பெருவழுதி பாடலில் இடம்பெறுவது "முந்நீர் விழவின் நெடியோன்" 
= கடலுக்குரிய தலைவன் = வருணன்; அவனுக்குரிய விழா; தெய்வம் பராவல் .
சங்க இலக்கிய காலத்தை நிர்ணயிக்கும் முக்கியமான காசுகள் முனைவர் ரா. கிருஷ்ணமூர்த்தியால்
கண்டறியப்பட்டன. முக்கியமான அவரது கண்டுபிடிப்பு: விடங்கர் வழிபாடு நிகழ்த்தி,
அசுவமேத யாகஞ்செய்து, “பெருவழுதி” என்று தன் குலப்பெயரை பிராமியில் பொறித்து வெளியிட்ட
நாணயங்கள். முனைவர் ரா. கிருஷ்ணமூர்த்தி Fellow, Royal Numismatics Society. (FRNS, England)
- தமிழர்களில் இம் மாண்பை அடைந்தவர் இவர் ஒருவரே. சென்னைப் பல்கலையில்
விடங்கர் (வருணன்) வழிபாடு பற்றி நான் ஆற்றிய ஆய்வுரையில் கலந்துகொண்டு
அரிய செய்திகளை வழங்கினார்கள். அதுபோது எடுத்த ஒளிப்படங்கள் பகிரலாம்.

கீழடி என்பது மதுரை அன்று. இதற்கு முக்கிய ஆதாரம் கூடல் என்ற பெயர் என்றும்,
கூடல் அழகரைப் பற்றிய சங்கப் பாடல் (பரிபாட்டு)ம், ஆழ்வார் பாசுரங்களும்
தந்து எழுதினேன். கூடல் இழைத்தல் என்பது சிறுபெண்கள் விளையாட்டு.
கிருதமாலை ஆறும், வையை ஆறும் கூடல் இழைக்கிற இடம் ஆதலின் 
கூடல் என்றே பழந்தமிழர் அழைத்தனர். பின்னர் பெருநகரம் ஆகி,
நான்மாடக் கூடல் ஆனது. வடநாட்டுப் பெயரான மதுரை இன்று நிலைபெற்றுவிட்டது.
மதில்/மதிர் > மதிரை > மதுரை. வட மதுரை, கூடற் தென் மதுரை - இரண்டுக்கும்
தாதுவேர் மதிர் ‘wall' என்பதாகலாம். கூடல் அழகர் கோவில் பெரியாழ்வாரோடு 
மிகுந்த தொடர்புகொண்டது. கூடல் புராணத்திலே, நம்மாழ்வார் சங்கம்
வென்ற செய்தி இருக்கிறது. ஸ்ரீவைஷ்ணவர்களால் மறக்கப்பட்ட அகவல் இது.
காரணம் சங்க கால சமயமான வருணன் பற்றிய செய்திகள் பொதிந்த அகவல்.

பாண்டிய ராசா முன்னிலையில் மதுரை நான்மாடக் கூடலில் சங்கப் புலவரை
நம்மாழ்வார் வெற்றிகொண்ட அகவல் கிடைத்துள்ளது. பல ஆண்டு முன்னர்
இரா. இராகவையங்கார் எழுதிய உரையுடன் இந்த அரிய அகவலை
மின்தமிழ் இ-புக்ஸ் தொகுப்பிற்கு அளித்தேன். ஸ்ரீ நாராயணையங்கார் எழுதின
தமிழ் உரையும் இருக்கிறது.

10 ஆண்டு முன்னே,

நம்மாழ்வார் அகவல் இது தான்:

”அண்ட கோளத்து ஆரணு வாகிப்
பிண்டம் பூத்த பேரெழில் ஒருமை
ஈருயிர் மருங்கில்  ஆருயிர் தொகுத்து
நித்திலத்து அன்ன வெண்மணல் பரப்பில்
வேரும் வித்தும்  இன்றித் தானே
தன்னிலை அறியாத் தொல்மிகு பெருமரம்
மூவழி முப்பழம் முறைமுறை தருதலின் இன்னே
என்றுண்டு ஒண்சுவை தருவது மற்றது
கல்லின்  எழுந்து கடலின் அழுந்தி
அறுகால்  குறவன் நீரற விளைக்கும்
செறிபொழில் குப்பை தருகண் பொன்றுவித்து
அறுகோட்டு ஆமா விளைக்கும் நாடன்
அவனே தலையிலி; அவன்மகள் முலையிலி;
தானும் ஈனாள் ஈனவும் படாஅள்
எழுவர் மூவர் சிறுவரைப் பயந்தனள்
அவள் இவள் உவள் என அறிதல்
துவளறு காட்சிப் புலவரது கடனே.”

இந்த அகவலில் வேத காலத்தில் அசுரர்களில் பெரிய அசுரன் ஆகிய
வருணன் என்னும் பெருந்தெய்வ வர்ணனை இருக்கிறது. கீழடி போன்ற
தொல்லியல் ஆய்வுகளைக் கொண்டு இவ்வகவலை விளக்க முடியும்.
வேத காலத்து யக்ஞங்கள் யாருக்காக நடந்தன என
நம்மாழ்வார் என்னும் வேளிர் பாடியிருக்கிறார் எனலாம். அது பின்னர்.

------------------

எருமைக்கு வேதத்தில் வழங்கும் கௌர- என்ற பெயரே கோடு என்ற சொல்லுடன் தொடர்புடையது. கவரி மாவின் பெயர்: கவரி < கவடி << கோடு. http://nganesan.blogspot.com/2017/11/kavarimaa-tirukkural-conference-2017.html

இவ்வாறு, கோடு மாட்டுக்கும், எருமைக்கும் தொடர்புடையது எனினும், கோவினம் என்று ஸம்ஸ்கிருதச் சொல்லால் மாடுகளையும், கோட்டினம் என்று தமிழ்ப் பெயரால் எருமைகளையும் கலித்தொகை குறிப்பிடுகிறது. இந்தியாவின் பழைய சமய் நெறிகளில் எத்தனையோ கடவுளர் உண்டு. எனினும், திணைமாந்தர்கள் கோடுகளை வைத்து, வணங்கும் பெருந்தெய்வங்கள் இரண்டு தான். (1) சுறாக் கோடு கொண்டு பூசிக்கும் வருணன் (2) அவன் மனை கௌரி/கொற்றவை எருமைக்கோட்டை வைத்து புதுமணல் பரப்பி, மணவறை சோடித்து நிகழும் கலியாணச் சீர்களில் வழிபடுவதை முல்லைக்கலிப் பாட்டு அறிவிக்கிறது. முதலாகுபெயருக்குச் சிறந்த உதாரணம் இச்செய்யுள். இந்தப் பாவை வழிபாடு பற்றி ஏனை விவரங்கள் திருமணத்தை விவரிக்கும் இரண்டு அகநானூற்றுப் பாடல்களால் விளங்குகிறது. சைவர், வைணவர், சமணர் பாடிய பாவைப்பாடல்களுக்கு இக் காத்யாயனி வழிபாடே அடிப்படை. திருப்பரங்குன்றில் கிடைத்துள்ள தமிழ் ப்ராமிக் கல்வெட்டு வருணன் - கௌரி ஜோடியைக் குறிப்பிடும் முதல் கல்வெட்டாகும். பிற்கால வருணனுக்கான சிந்துவெளி எழுத்து (மகர விடங்கர்) இப்போது கீழடி இரண்டு பானையோடுகளில் கிடைத்துள்ளது. ஏற்கெனவே, செம்பியன் கண்டியூர் (கல் கோடரி), சாணூர், சூலூர், தாய்லாந்து தேசம் - எனத் தமிழர் செய்த கலங்களில் குறியீடாக சங்க காலத்தில் எழுதியுள்ளனர்.

வன்னி மலரை விரும்பிச் சூடுபவர் சிவபெருமான்.

கோடலர் வன்னி தும்பை கொக்கிற கலர்ந்த கொன்றை
ஏடமர் சடையர் போலும் இன்னம்ப ரீச னாரே. (அப்பர்)

அலர்ந்த வன்னி இண்டை கொண்ட சிவன் (சம்பந்தர்)

Anthropomorphic Axe என்று தொல்லியலாளர் அழைக்கும் ‘மழுவாள் நெடியோன்’ சிற்பத்தை தெற்குப் பார்த்து 
மெகாலித்திக் கால இடுகாடுகளில் நிறுத்தியுள்ளனர். இது வட இந்தியாவில் இருந்து வந்த விடங்கர் (வருணன்)
வழிபாட்டின் கால்கோள். தென்னிந்தியாவின் முதல் சிற்பம் இதுவே. பிணங்கள் வடக்கே பார்த்து நிறுவியுள்ளனர்.
வடக்கு இருத்தல் - சமண துறவியர் இறக்கும் முறை. சிந்துவெளியிலும் வடக்கே பார்த்து சவங்கள் வைக்கப்பட்டுள்ளன.
தென்புலத்தார் என திருக்குறள் குறிப்பிடும். தெற்கு இறப்பின் திசை எனப் பல சமயங்களில் கொள்கை.
அந்த மெகாலித்திக் இடுகாடுகளில் வன்னி/பரம்பை மரங்கள் சங்க இலக்கியத்தில் பதிவாகிறது.
எனவே, வருணன் (விடங்கருக்கு) சிறப்பாக இருந்த பரம்பை மலர், வருணன்  சிவபெருமானாக பரிணாம
வளர்ச்சி ஹிந்து சமயத்தில் அடைகிறபோது, வருணனின் வேதகால மழு/பரசு, இலிங்கம் (குடிமல்லம்),
வன்னி (இடுகாட்டின் பரம்பை தாவர்ம்) எல்லாம் சிவனுக்கு ஏற்புடையதாக ஆகிறது. இன்று பார்த்தால்,
சிவன் லிங்கமாகவும், தேவாரத்தில் ஏராளமாக வன்னியும், அதே போல் உள்ள கொன்றை சூடுவதும்,
தவறாமல் மழு ஏந்தி இருப்பதும் சிவன் கி. மு. 800 - கி.பி. 200 வரை வருணன் என்னும் நெடியோன் ஆக
இருந்த நிலைமையைக் காட்டி நிற்கும் அடையாளங்கள் ஆகும்.

ஒழுகை உய்த்த கொழு இல் பைந்துணி
வைத்தலை மறந்த துய்த்தலைக் கூகை
கவலை கவற்றும் குராலம் பறந்தலை
முரசுடைத் தாயத்து அரசு பல ஓட்டித்,  20
துளங்கு நீர் வியல் அகம் ஆண்டு இனிது கழிந்த
மன்னர் மறைத்த தாழி,
வன்னி மன்றத்து விளங்கிய காடே.

Pathitruppathu 44, Poet: Paranar, King: Kadal Pirakōttiya Chenguttuvan, 

துய்த்தலைக் கூகை – soft headed owl, a fuzzy headed owl, கவலை கவற்றும் – cries out sadly, குராலம் – female owl, பறந்தலை – cremation grounds, முரசுடை – having drums, தாயத்து – with rights, அரசு பல ஓட்டி – vanquished a few kings, துளங்கு நீர் வியல் அகம் – moving waters surrounded world, ஆண்டு – rule, இனிது கழிந்த – sweetly passed, மன்னர் மறைத்த தாழி – huge burial urns (clay pots) in which kings are buried, வன்னி மன்றத்து – in the common areas with vanni trees, Prosopis spicigera, Indian mesquite, விளங்கிய காடே – bright forest (காடே – ஏகாரம் அசை நிலை, an expletive) 

In your country, which has flourished in this earth surrounded by
the swaying oceans, your victorious ancestors, who vanquished
many kings owning drums and lived sweet lives, are buried in the
cremation grounds with vanni trees, where a female owl with a
fuzzy crown hoots pitifully, since her mate forgot where he hid
the fatless meat pieces he had picked. 
    17-23. கொழுவில்..........காடே.

    உரை: கொழுவில் பைந்துணி-கொழுமை யில்லாத பசிய இறைச்சித் துண்டத்தை; வைத்தலை மறந்த துய்த்தலைக் கூகை- வைத்த இடத்தை மறந்தொழிந்த உச்சிக் கொண்டையை யுடைய கூகையை; கவலை கவற்றும்-கவலையுறுவித்து வருத்தும்; குரால் அம் பறந்தலை-கூகைப் பெடைகளையுடைய சுடுகா.ட்டிலே; முரசு டைத் தாயத்து அரசு பல ஓட்டி-முரசினையுடைய வழிவழியாக உரிமையுற்று வரும் அரசர் பலரை வென்று; துளங்கு நீர் விய லகம் ஆண்டு-அசைகின்ற கடல் சூழ்ந்த பரந்த நிலவுலகத்தை ஆட்சி புரிந்து; இனிது கழிந்த மன்னர்-தம் வாழ்நாளை இனிது கழித்திறந்த வேந்தரை யிட்டுப் புதைக்கும்; வன்னி மன்றத்து விளங்கிய காடு-வன்னி மரம் நிற்கும் மன்றத்தால் விளக்கமுற்ற இடுகாட்டின்கண்; தாழி-மட்குடமானது; காணிலியர்-நின் யாக்கையாகிய நோய்தபு நோன்றொடையினைக் காணாதொழிவதாக எ-று
    குரால், கூகைப்பெடை. அலையால் அலைப்புண்பதுபற்றிக் கடலை, "துளங்குநீர்" என்றார். தாழி, மன்னர் இறந்தவழி அவர் உடலை மண்ணாற் செய்த பானைக்குள் வைத்துப் புதைப்பது பண்டையோர் மரபு. இதனை முதுமக்கட் டாழி யென்றும் வழங்குப. "வளவன் தேவருலக மெய்தின னாதலின், அன்னோற் கவிக்கும் கண்ணகன் தாழி" (புறம் 228) என வருதல் காண்க. காடு தாழி காணிலியர் என முடித்தலு மொன்று. வன்னி மன்றம், சுடலை நோன்பிகள் மடையிட்டுப் பரவுமிடம் என்று மணிமேகலை கூறும்;”சுடலை நோன்பிகள்ஒடியா வுள்ளமொடு, மடை தீ
    யுறுக்கும் வன்னி மன்றம்" (மணி 6: 86) என்பது காண்க. பழைய
    வுரைகாரர், "வன்னி மன்ற மென்றது, அக்காட்டில் வன்னி மரத்தை யுடைய இடத்தினை" யென்றும், "அதுதான் பிணத்தொடு சென்றார் எல் லாரு மிருந்து மன்று போறலின், மன்றெனப்பட்டது" என்றும், "விளங் கிய காடென்றது, தன் தொழிலில் விளங்கிய காடென்றவாறு" என்றும் கூறுவர் (ஔவை துரைசாமிப்பிள்ளை)
ஆக, வன்னி என்ற வடமொழிப் பெயர்கொண்ட வன்னி மரம் இறந்தோரைப் புதைக்கும், எரிக்கும் காடுகளோடு தொடர்புடையது. வருணன் 
இறத்தலுக்கு அதிதெய்வம். சங்க காலத்தில் விடங்கர் சிற்பம் நாட்டிய, வன்னி மரங்கள் கொண்ட மன்றத்தே மக்கள் கூடி தென்புலத்தோரின் 
ஈமச் சடங்குகள் செய்த செய்திகளைத் தொகுத்துப் பார்த்தால் வன்னி என்னும் பரம்பையும், அதுபோன்ற கொன்றையும் சிவனுக்கு விசேடம்
ஆதலை இந்திய சமய வரலாற்றில் விளங்கும்,

நா. கணேசன்

இரா.ச. இமலாதித்தன்

unread,
Dec 18, 2019, 11:42:11 PM12/18/19
to mint...@googlegroups.com
நாகப்பட்டினத்தை சுற்றியுள்ள ஏழூர்களில் உள்ள சிவாலயங்கள் சப்த விடங்கர் தலங்களாக கூறப்படுகின்றன.

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
https://www.vikatan.com/spiritual/temples/133924-sapthavidanga-temples-of-lord-shiva-exclusive-deal  
https://www.vikatan.com/spiritual/temples/83101-worship-of-saptha-vitanka-temples  
http://www.kungumam.co.in/APArticalinnerdetail.aspx?id=2293&id1=50&id2=18&issue=20141116  

திருவாரூர் - தியாகராசப்பெருமான்
திருநள்ளாறு - நாகவிடங்கர்
நாகைக்காரோணம் - சுந்தரவிடங்கர்
திருக்காராயில் - ஆதிவிடங்கர்
திருக்குவளை - அவனிவிடங்கர்
திருவாய்மூர் - நீலவிடங்கர்
வேதாரண்யம் - புவனிவிடங்கர்

விடங்கம் என்றால் உளியால் செதுக்கப்படாத மூர்த்தி என்று பொருளும் கூறப்பட்டிருக்கிறது. மேற்சொன்ன ஏழு விடங்கர் தலங்களுக்கும் வருணனுக்கும் தொடர்புண்டா?


- இரா.ச. இமலாதித்தன்

 

kanmani tamil

unread,
Dec 20, 2019, 12:37:04 AM12/20/19
to mintamil, vallamai
பரம்பிக்குளம் என்ற இடப்பெயர் இம்மரத்தின் பெயர் அடிப்படையில் உருவானதாக இருக்குமா?

இன்னொரு ஐயம்;
"திரிகாய் விடத்தரொடு காருடை போகி"- பதிற்றுப்பத்து - 13
வேந்தன் அழித்த வயலும் ஊரும் பாழாகி 'திரிகாய் விடத்தர்' வளர்ந்து வழிப்போக்கர்க்கு அச்சம் விளைத்தது.
நீங்கள் காட்டியுள்ள சுட்டி screw போல் திருகிய நெற்றுக்களைக் காட்டுகிறதே; பரம்பை விஷம் பொருந்தியதா?
பதிற்றுப்பத்து சொல்லும் காட்டுமரம் விஷம் பொருந்தியது என்று பாடல் சுட்டுகிறது.
 இரண்டும் ஒன்றா ?
சக 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CALo8RDuj7t%3DcFoJSaHZw597C%2Bec4rYyJ0jNqT-CQxiwtKeVZRA%40mail.gmail.com.
Reply all
Reply to author
Forward
0 new messages