சொல்லுங்கய்யா சொல்லுங்க உலகத்தில் அதிபுத்திசாலியான பறவை எது

53 views
Skip to first unread message

இம்சை அரசு

unread,
Jan 31, 2014, 11:45:36 AM1/31/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்
இயற்கையியலார் உலகில் அதி புத்திசாலியான விலங்கினங்களைத் தரவரிசைப் பட்டியலிட்டபோது மூன்றாமிடத்தைப் பிடித்த பறவை

நம் காக்கையார்தான்

நாகரிக உலகத்தில் தன்னைத் தயார்படுத்திக் கொண்டு புதியன கற்று வாழத்தெரிந்த காக்கைகள் பற்றி


இம்சை

டிஸ்கி: சங்கம் 4 -ல் கேள்விப்பட்ட செய்தி


துரை.ந.உ

unread,
Jan 31, 2014, 12:18:48 PM1/31/14
to வல்லமை, மின்தமிழ்
Inline image 1வாழ்க ஐயா ..இவங்க அறிவுத்திறமையை பற்றி எங்கிட்டே ஒரு தொகுப்பே இருக்கு ..
அனுமதித்தால் இங்கே வழங்கலாம் ..


2014-01-31 இம்சை அரசு <radius.co...@gmail.com>:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/
0 0 crow.gif

Megala Ramamourty

unread,
Jan 31, 2014, 12:31:44 PM1/31/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்
சந்தேகத்திற்கிடமில்லாமல் காக்கைக் குடும்பத்தைச் சேர்ந்த பறவைகளே, பறவைகள் சமுதாயத்தில் அறிவுஜீவிகளாகத் திகழ்கின்றன.

Many researchers believe that the most intelligent birds are found in the Corvid (informally crow) family (ravens, crows, magpies and jays). These social birds show advanced problem-solving skills, both in the lab and in the wild.

மிகவும் புத்திசாலியாகக் கருதப்படும் 10 பறவைகள் குறித்து அறிய http://theknowledgenow.blogspot.com/2013/03/list-of-smartest-birds-guide-to-avian.html.

அது சரி....'Be innocent (or harmless) as doves' என்று பைபிளில் ஒரு வாசகம் வருகின்றதே. அதுங்க அம்புட்டு அப்பாவிங்களா? (எங்கள மாதிரி!!)

https://www.youtube.com/watch?v=4fL5GLsmtSk

அன்புடன்,
மேகலா




2014-01-31 தேமொழி <them...@yahoo.com>:




சிறுவயதில் படித்த கதையே நினைவிற்கு வருகிறது

Natrajan Kalpattu Narasimhan

unread,
Jan 31, 2014, 8:59:39 PM1/31/14
to வல்லமை, மின்தமிழ்
பறவைகள் ஒவ்வொறும் ஒரு விதம்.  அவை ஒன்றுக்கு ஒன்று சளைத்தவை அல்ல.  அதை கூர்ந்து பார்ப்பவர்களுக்குதான் தெரியும் அவற்றின் புத்தி கூர்மை பற்றி.  உலகிலேயே அதி புத்திசாலி மனிதன் யார் என்று சொல்ல முடியுமா?  அது போலத்தான் பறவைகளும்.  இது எனது அனுபவம்.

காகத்திற்கு அசாத்திய அறிவு உண்டு.  ஞாபக சக்தி உண்டு.  இதோ இந்தப் பறவையின் திறமையைப் பாருங்கள்:

http://www.youtube.com/watch?v=VjE0Kdfos4Y


தூக்கணாங் குருவிக்கு என்ன குறைச்சல்?  இதைப் படியுங்கள்:


சிட்டுக் குருவி போன்றிருக்கும் இப் பறவையின் வாழ்க்கையைக் கூர்ந்து கவனித்தால் பல ஆச்சரியம் அளித்திடும் விஷயங்கள் வெளி வரும்.  கூட்டமாக வாழ்ந்திடும் குணம் கொண்டவை இவை.  ஒரே மரத்தில் பல பறவைகள் தங்கள் தொங்கிடும் கூடுகளை அமைத்திடும்.

 

இந்தப் பறவை நெல், சோளம் போன்ற தாவரங்களின் இலையை நார் நாராகக் கிழித்துத் தன் கூட்டினை நெய்து கட்டும்.  நீர் நிலைகளுக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கும் கிளைகளில் இருந்து அழகான பந்து போன்ற கூடுகளுக்கு நுழைவு வாயில் கவிழ்த்துப் பிடித்த நாதசுரம் போன்று கீழ்ப் பக்கம் தொங்கிடும்.


Inline image 1 

 

கூட்டினைக் கட்டுவது ஆண் பறவை.  அது பாதி கட்டி முடித்திருக்கும் கூட்டின் மீதமர்ந்து தன் இறக்கைகளைப் பட பட வென்று அடித்துக் கொண்டு கீச்சிடும் ஒரு பெண் பறவையின் கவனத்தை ஈர்த்திட.  பெண் பறவை வந்து பார்த்து, வீட்டின் தரம் பிடித்து, கூடி வாழ சம்மதித்து, கூட்டிற்குள்ளே குஞ்சுகள் வாழ்ந்திட பஞ்சு மெத்தை தயார் செய்ய ஆரம்பித்த  உடனே ஆண் பறவை அருகிலேயே மற்றொரு கூட்டினைக் கட்டி இரண்டாம் தாரம் தேடிடும்!  தாரம் இரண்டோடு நிற்குமா என்பதும் நிச்சயமில்லை!


இதோ இந்த ஆள் காட்டிக் குருவியின் புத்திசாலித் தனத்திற்கு என்ன குறைச்சல்?  படியுங்கள் இதையும்:


ஆள் காட்டிக் குருவிகள் முட்டையிட்டுக் குஞ்சு பொரிப்பது மரக் கிளிகளிலோ அல்லது மரப் பொந்துகளிலோ கூடு கட்டி அல்ல, தரையில் தான். தரையில் கூடு என்றவுடன் ஏதோ தேன் சிட்டு,  தையல்காரக் குருவி, தூக்கணாங்குருவி போல நன்றாகக் கூடு கட்டியிருக்கும் என்று நினைக்காதீர்கள்.  தரிசல் நிலங்கள், வயல் வெளிகள், ஆறு குளங்களில் நீர் வற்றிய இடங்கள் இவற்றில் சிறிய கற்கள் பலவற்றை ஒரு குழிவான தட்டு போல சேகரித்து அவற்றின் நடுவே முட்டை இடும்.

 

இக்குருவி இடும் புள்ளிகள் கொண்ட முட்டைகளின் நிறம் சற்று ஆச்சரியம் அளிக்கக் கூடியது.  சுற்றுப்புர நிலத்தின் நிறத்திற்க்கு ஏற்ப செம்மண் கலரிலோ ஸ்லேட் கலரிலோ இவை இருக்கும்.  அப்படி இருந்தால் தானே எதிரிகளின் கண்களில் இம்முட்டைகள் சட்டென்று தென்படாது ?

 

பறவைகளின் முட்டைக்கு ஓடு உண்டாவதோ அந்த ஓட்டிற்கு நிறம் தீர்மானிக்கப் படுவதோ முட்டைகள் ஜனன உருப்பிலிருந்து கிளம்பிக் கீழ் இறங்கி வெளிவரும்போது கடைசியாக நிகழும் ஒரு சம்பவமாம்.  இந்தப் பறவைகளுக்கு கூடு இருக்கும் நிலத்தின் நிறத்தைக் கண்டறிந்து அதற்கேற்ப முட்டையின் நிறத்தை மாற்றும் சக்தி இருக்க வேண்டும்.

 

ஆள்காட்டிக் குருவி தனது முட்டைகளை எப்படி மிகக் கவனமாக காப்பாற்றிக் கொள்கின்றன என்று பாருங்கள்.

 

ஓரு பறவை அடைகாத்துக் கொண்டிருக்கும் போது மற்றொரு பறவை சற்றே உயரமான இடத்தில் நின்று கொண்டிருக்கும்.  ஆடு மாடுகளோ, மனிதர்களோ தரையில் உள்ள முட்டைகளை நோக்கி நடந்தால், காவல் காக்கும் பறவை, கிரக்...கிரக்... என சன்னக் குரலில் அபாய ஒலி எழுப்பும்.  உடனே அடைகாத்துக் கொண்டிருக்கும் பறவை எழுந்திருக்காமல் குனிந்தபடியே சிறிது தூரம் நடந்து சென்று பின் இரு பறவைகளுமாக ஆகாயத்தில் கிளம்பி கூட்டை நோக்கி நடப்பவரை / நடப்பதை விமானம் தாக்குவது போலத் (dive bombing) தாக்குதல் செய்யும்.  அவ்வாறு செய்யும் போது, ஆங்கிலத்திலே “Did you do it?  Did you do it?” என்று கேட்பது போன்ற ஒலியினை எழுப்பும் ஆதலால் இப்பறவைகளை Did you do it bird’ என்று சிலர் வேடிக்கையாக அழைப்பார்கள்.  இப்போது புரிகிறதா இந்தக் குருவியை ஏன் ஆள்கட்டிக் குருவி என்று பலரும் அழைக்கிறார்கள் என்பது?


Inline image 3

(கருப்பு வெள்லை படம் ந.க.)


இதோ இந்த காட்விட் பறவையின் புத்திசாலித் தனத்திற்கு என்ன க்ஜுறைச்சலாம்?


சமீப காலம் வரை வலசை போகும் போது உலகிலேயே அதிக தூரம் சுமார் 3,000 மைல்கள் (4,800 கிலோ மீடர்கள்) ஒரே மூச்சில் நிற்காமல் பறந்து செல்வதற்கான சான்றிதழ் பெற்ற பறவை கல் பொறுக்கி என்று தமிழ் நாட்டில் அழைக்கப் படும் கோல்டன் ப்ளோவர் (Golden Plover) ஆகும். 

 

கல் பொறுக்கி வட அமெரிக்காவின் வட பகுதி, வட ஐரோப்பா, வடக்கு ஆசியா போன்ற இடங்களில் இனப் பெருக்கம் செய்து பின் கடல் உறையும் குளிர் நாட்கள் வந்தவுடன் தெற்கு நோக்கிப் பறக்கிறது.

  

              Inline image 4Inline image 5

                         கல்பொருக்கி ஆண் பறவ                         கல்பொருக்கி பெண் பறவை

 

இந்தப் பறவையை தமிழ் நாட்டில் தஞ்சை ஜில்லாவில் உள்ள கோடியக்கரையிலும் (Point Calimere) மற்றும் சுற்றுப் புறங்களிலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் காணலாம்.

 

இந்தப் பறவைக்கு கல் பொறுக்கி என்ற பெயர் ஏன் வந்தது தெரியுமா?  இது கடற்கரையில் உள்ள சிறு கற்களைத் தள்ளி அதனடியில் கிடைக்கும் புழு பூச்சிகளைத் தின்னும்.


சென்ற ஆண்டு செப்டம்பர் வரை முதல் இடத்தில் இருந்த கல் பொருக்கியை கவிழச் செய்தது மூக்கான் என்று தமிழ் நாட்டில் அழைக்கப்படும் காட்விட் (godwit) இந்தப் பறவை சாதித்து இருப்பது என்ன என்று பாருங்கள்.


Inline image 6

(மூக்கான்)

 

ந்யூசிலாந்தில் வடக்குத் தீவில் உள்ள மிராண்டா என்ற ஊரில் பிப்ரவரி, 2007ல் சிறிய ரேடியோ மின் அலை பரப்பி பொருத்தப் பட்ட சில பறவைகளில் ஒரு பெண் மூக்கானும் இருந்தது. 

 

E-7 என்று பெயர் கொடுக்கப் பட்ட இதன் போக்கு வரத்து செயற்கைக் கோள் மூலம் கண்

காணிக்கப் பட்டது.                 .        

                       

மார்ச் 17ம் தேதி மிராண்டாவிலிருந்து கிளம்பிய மூக்கான் எங்கும் தரையிறங்காமல் 6,300 மைல் தூரத்தில் சீனாவில் உள்ள யாலு ஜியாங் என்ற இடத்தை 8 நாட்களில் அடைந்தது.  5 வார ஓய்வுக்குப் பின் அங்கிருந்து கிளம்பிய மூக்கான் 5 நாட்களில் 4,500 மைல் தூரத்தில் உள்ள மேற்கு அலாஸ்காவின் யூகான்-குஷாக்வின் முகத்துவார பிரதேசத்தை அடைந்தது.  இந்த இடம் தான் அது இனப் பெருக்கம் செய்யும் இடம்.

 

பின்னர் ஆகஸ்ட் 29ம் தேதி கிளம்பி வேறு பாதயில் 7,200 மைல் தூரம் ஒரே மூச்சில் பறந்து எட்டரை நாட்களில் ந்யூசிலாந்தின் மிராண்டாவை மீண்டும் அடைந்தது.


Inline image 7

 

மூக்கான்களை கோடியக்கரையிலும் நவம்பர் முதல் பிப்ரவரி வரை காணமுடியும்.


இப்போது சொல்லுங்கள் பறவைகளில் ஒன்றை முத்திசாலி என்றும் மற்றொன்றை முட்டாள் என்றும் சொல்ல முடியுமா என்று.



2014-01-31 Megala Ramamourty <megala.r...@gmail.com>:



--

இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/

நடராஜன் கல்பட்டு


எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி

வேறொன் றறியேன் பராபரமே


Golden plover-male.JPG
Weaver bird colony.jpg
Bird migration-09.png
Golden plover female.JPG
Lapwing 2-23-11-10.jpg
Godwit.JPG

Megala Ramamourty

unread,
Feb 2, 2014, 4:30:33 PM2/2/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்
பாம்புகளைப் பற்றிய தகவல்கள் மிகவும் சுவாரஸ்யம் கல்பட்டு ஐயா.
நீங்கள் குறிப்பிடுவதுபோல் மனித வாழ்விலும் அவை பின்னிப் பிணைந்தவையே. :-)

ஜாதகத்தில்கூட மற்ற கிரகங்களைவிட ’சாயா கிரகங்கள்’ (the shadow planets) என்று அழைக்கப்படும் ராகு, கேது எனும் இரண்டு பாம்புகளுக்கு அல்லவோ மனிதன் நடுநடுங்குகிறான். இவ்விரு பாம்புகளுக்கும் வேறுவேறு குணங்கள், நிறங்கள் சொல்லப்படுகின்றன. ராகு (கரும்பாம்பு?) போகத்தைத் தருவான்; கேது (செம்பாம்பு?) ஞானத்தைத் தருவான் என்கிறார்களே...இதெல்லாம் உண்மையா?
(அருமைத் தோழி தேமொழிக்கு விடை தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். ஏனென்றால் ஏற்கனவே ’ஆண்டவன் கட்டளை’யில் நாயகன் காதலில் தோற்றதற்குக் கேது தசை காரணமாக இருக்குமோ என்று ஆராய்தவராயிற்றே!!) :-)

இன்னொரு வேண்டுகோள்: நம் பேராசிரியரைப் பார்த்தால் பயந்த சுபாவமாகத் தெரிகிறது; அவர் வீட்டிற்கு ’மெட்யுஸா’வை மாறுவேடத்தில் அனுப்பவேண்டாம்..பாவம்!!


அன்புடன்,
மேகலா



2014-02-01 தேமொழி <them...@yahoo.com>:


ஆமாம், பேராசிரியர் வீட்டிற்கு மெட்யுசாவை மாறுவேடத்தில் அனுப்பலாம்.
:-)))


.... தேமொழி







On Saturday, February 1, 2014 8:51:28 PM UTC-8, Natrajan Kalpattu Narasimhan wrote:

2014-02-02 தேமொழி <them...@yahoo.com>:

இன்றிரவு நாகராஜன் உங்கள் கனவில் தோன்றி உங்களைப் பயமுறுத்துவாராக.

எப்படி?  இணைப்பில் உள்ளது போலவா?

 


--

இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/

நடராஜன் கல்பட்டு


எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி

வேறொன் றறியேன் பராபரமே


பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Feb 2, 2014, 6:45:07 PM2/2/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்
////இதைப் படித்துவிட்டு பார்வதி வந்து பதிலாக மோனாலிசா போல ஒரு மர்மப்புன்னகையை பதிலளிப்பார்கள்.  ////


அட ராமா!..நானே முடியாம சிவனேன்னு இருந்துட்டு அப்பப்போ தான் வாரேன்!..அதுக்கே இப்படி சாத்தினா எப்படி?

பேராசிரியர் பாரபட்சமே இல்லாம என்னயும் சாத்துவார்னு நாங்க இருவரும் பங்கு பெறுகிற இழைகளப் பாத்தாலே தெரியுமே!!!!.. என்னவோ இல்லாத ஊருக்கு இலுப்பப் பூ சர்க்கர மாதிரி ஒர்ர்ரேஏஏஏ வாட்டி நான் கேட்டத போட்டாரு.. அதுக்கு முன்னாடி எத்தன வாட்டி  நீங்க கேட்டதப் போட்டுருப்பாருன்னு நேயர் விருப்பம் இழைல பாருங்க....அத எல்லாம் மறக்கலாமா...நியாயமா சொல்லுங்க..

சங்கம் 4 ல பிஸியா இருக்காருன்னு நினைக்கறேன்...தாமதமா இல்லாட்டியும் தப்பாம பதில் வரும்.. சிந்தாமணி எனக்கும் ரெண்டு நாள் கழிச்சு தான் வந்திச்சு...

/////ஒரே ஊர் என்று பரிவில் உள்ள செல்லம் பார்வதி கேட்டவுடன்
சிரமப்பட்டு இணையத்தில்  தேடி அவருடைய செல்லக்குட்டி வெள்ளக்கட்டிக்கு 
பாரு பாரு  நல்லா பாரு பயாஸ்கோப்பு படத்தப் பாரு என்று உடனே சுட்டி கொண்டு வந்து கொடுக்கிறார்.////

மர்மப்புன்னகையெல்லாம் இல்ல..இதப் படிச்சிட்டு ரொம்ப நாளக்கப்புறம் நல்லா சிரிச்சேன்!....இதுக்காக உங்களுக்கு ஸ்பெஷல் நன்றி சொல்லணும்.. மேகலாவுக்கு நான் யார் செல்லம்னு நல்லாவே தெரியும்.. எங்கக்கா ஊருக்குப் போயிருக்காங்க.. இன்னிக்கு வந்துருவாங்கன்னு நினைக்கறேன்..
 


அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

Subashini Tremmel

unread,
Feb 3, 2014, 8:28:38 AM2/3/14
to மின்தமிழ், Subashini Tremmel

2014-02-02 Megala Ramamourty <megala.r...@gmail.com>:
..

இன்னொரு வேண்டுகோள்: நம் பேராசிரியரைப் பார்த்தால் பயந்த சுபாவமாகத் தெரிகிறது; அவர் வீட்டிற்கு ’மெட்யுஸா’வை மாறுவேடத்தில் அனுப்பவேண்டாம்..பாவம்!!

மேகலா- நம் பேராசிரியர் என்ன செய்தார். எதற்காக அவர் வீட்டிற்கு மெட்யூஸாவை அனுப்பும் திட்டம். எனக்கு விஷயம் முழுதாகப் புரியவில்லையே. நான் இந்த இழையை வாசிக்கவில்லையோ?? :-(
ஆனால் உண்மையிலேயே அவர் பாவம் தான். நான் நேரில் பார்த்திருப்பதால் உறுதியாகச் சொல்லலாம். ஏதாவது அனுப்பி வைத்து பயம் கொடுத்து விடாதீர்கள். :-)
சுபா
 

அன்புடன்,
மேகலா



2014-02-01 தேமொழி <them...@yahoo.com>:


ஆமாம், பேராசிரியர் வீட்டிற்கு மெட்யுசாவை மாறுவேடத்தில் அனுப்பலாம்.
:-)))


.... தேமொழி







On Saturday, February 1, 2014 8:51:28 PM UTC-8, Natrajan Kalpattu Narasimhan wrote:

2014-02-02 தேமொழி <them...@yahoo.com>:

இன்றிரவு நாகராஜன் உங்கள் கனவில் தோன்றி உங்களைப் பயமுறுத்துவாராக.

எப்படி?  இணைப்பில் உள்ளது போலவா?

 


--

இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/

நடராஜன் கல்பட்டு


எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி

வேறொன் றறியேன் பராபரமே


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

Subashini Tremmel

unread,
Feb 3, 2014, 8:30:42 AM2/3/14
to மின்தமிழ், Subashini Tremmel


2014-02-03 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>:
நன்றாக நானும் சிரித்தேன். மேகலா  சாதாரண ஆள் இல்லை தான். நன்கு காமிடி செய்கின்றீர்கள் :-)

சுபா


அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.


2014-02-03 தேமொழி <them...@yahoo.com>:
     

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Feb 5, 2014, 12:54:17 AM2/5/14
to mintamil, vallamai
பேராசிரியருக்கு வணக்கம்.

அதிபுத்திசாலியான பறவையாகக் காகம் காட்டப்பட்டிருந்தாலும்,
காக்கையைக் கரிச்சான் குருவி வென்று விடும்.
எனவே என்னதான் புத்திசாலியாக இருந்தாலும், வெல்வது காக்கை அல்ல! கரிச்சான் குருவியே ஆகும்.
இதனால் பறவைகளில் “வலியை“ என்ற பெயர் கரிச்சான் குருவிக்கு உண்டு.

Inline image 1

இந்தப் பறவை கரிச்சான்குருவி யென்றும், கரிக்குருவி யென்றும் அழைக்கப்படுகிறது.
முன்காலத்தில் இந்தக் குருவியைக் காகம் உட்பட மற்றைய பறவைகள் பெரிதும் துன்புறுத்தியுள்ளன.
இக்குருவியும் மதுரை சோமசுந்தரேசுவரரிடம் வரம் வேண்டி வலிமை பெற்றுள்ளது.  அதுமுதல் எல்லாப் பறவைகளையும் எளிதில் வெல்லும் வல்லமையைப் பெற்றுள்ளது.

எனவே கரிக்குருவியே எல்லாப் பறவைகளில் வலியது ஆகும்.

அன்பன்
கி.காளைராசன்

வாசிக்கப்பட்டவை..........
2294
வலியை என்பது என் மரபினுக்கு எலாம் 
பொலிய வேண்டும் எப்போதும் நீ சொன 
ஒலிய மந்திரம் ஓதி ஓதி நாங் 
கலியை வெல்லவும் கருணை செய்கென.
 
2293
ஆவது ஆக என்று அமரர் நாயகன் 
மூ எழுத்தினான் முடிந்த அம்மனு 
தாவி தெய்வதம் இருடி சந்தமோடு 
ஓவில் ஓசை மூன்று ஒடு தெருட்டினான்.

2294
குரு மொழி பயின்று முள் வாய்க் குருவி தன் குலனும் தன் போல் 
அரு மறை முதல்வன் ஈந்த ஆற்றலால் பறவைக்கு எல்லாம் 
பெருமை சால் வலியான் என்னும் பெயரவாய் உலகின் மன்னக் 
கருமணி கண்டன் செம்பொன் கனை கழல் அடி சேர்ந்த அன்றே.
download.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages