You do not have permission to delete messages in this group
Copy link
Report message
Show original message
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
to tamilvalar...@googlegroups.com
வணக்கம்,
ஒவ்வொரு மாதமும் தமிழ் வளர்ச்சிக் கழகத்தில் நடைபெறும் சொல்புதிது கூட்டத்தில் புதிய கலைச்சொற்களைப் பரிந்துரைத்து வருகிறோம். நேற்று நடைபெற்ற நவம்பர் மாதக் கூட்டத்தில் இறுதி செய்யப்பட்ட சொற்கள் கீழே உள்ளன.
Brownfield project
தாளடித் திட்டம்
Greenfield project
முதலடித் திட்டம்
Aironox
உடை மிடுக்கி
Aerofoot
காற்று நடைக் காலணி
Invisacook
மறை அடுகலன்
Water walking shoes
நீர்மிசைக் காலணி
Grow bag
பயிர் வளர்ப்புப் பை
Air taxi / Flying taxi
வாடகை வானுந்து
Air car
வானுந்து
Zeptosecond
நுண்ணொடி
Wind farm / Wind park
காற்றாலைப் பண்ணை/ பூங்கா
Cyber fraudster
இணைய மோசடிக்காரர்
Global governance
புவி ஆளுகை
Rapid Stroke Response Team
பக்கவாத மருத்துவ விரைவுக் குழு
Fast Breeder Test Reactor
அணுமின் விரைவாக்க உலை
Intraday trading
நாள் பங்கு வணிகம்
Combo
சேர்க்கை
OTT
இணையப் படத் தளம் (இபத)
White colar terrorism
அறிவுக் கயவர் பயங்கரவாதம்/வன்முறை
Plastic surgeon
மெய்சீர் (அறுவை) மருத்துவர்
Deep-sea mining
ஆழ்கடல் சுரங்கப்பணி
Digital connectivity
இணையத் தொடர்பு
Digital infrastructure
இணையக் கட்டமைப்பு
Assistive Technology
மாற்றுத் திறன் தொழில்நுட்பம்
Down Jacket
இறகுபொதி மேலுடை
Bomber Jacket
கவச மேலுடை
Pufer Jacket
புடைப்பு மேலுடை
Varsity Jacket/Leterman Jacket
அடையாள மேலுடை
Hoodie Jacket
தொப்பி மேலுடை
Legging
காலொட்டு உடை
மேலும் அறிய இங்கே செல்லலாம். புதிய சொல் கேள்விகளயோ பரிந்துரைகளையோ இந்த மடற்குழுவிலோமுகநூல் பக்கத்திலோ கேட்கலாம்.