கல்வெட்டு ஆய்வாளர் முனைவர் சு.ராசகோபால் மறைந்தார்

17 views
Skip to first unread message

தேமொழி

unread,
Jul 2, 2026, 11:04:51 AM (6 days ago) Jul 2
to மின்தமிழ்
தமிழ் மரபு அறக்கட்டளையின் ஆழ்ந்த அஞ்சலி🙏🏽


Rajagopal Archeologist.jpg
கல்வெட்டு ஆய்வாளர் முனைவர்  சு.ராசகோபால் மறைந்தார் 

கல்வெட்டு அறிஞர் திரு.சு.இராசகோபால் இன்று மதியம் காலமானார்.

வயது 76- என்றாலும்  இளைஞர்களோடு உடனிருந்தார். கல்வெட்டுக் கல்வி பயிற்றுநர் பணி அவருக்கு மகிழ்வானது.

தொல்லியல் கழகத்தின் 'ஆவணம்' இதழாசிரியராக இந்த ஆண்டு இதழ் வரை பணியாற்றியவர்.
 
சென்ற ஆண்டு நிர்வாகக்குழுவில் இந்த ஆண்டோடு ஆவணப்பணியிலிருந்து விடுபடுகிறேன் என்று ஏன் சொன்னரோ? அகவை முதிர்வில் எம் நண்பர்கள் குழாமிலிருந்து பலரை இயற்கை விடுக்கிறது.

அன்பானவர்.கற்பித்தலில் ஆர்வமுடையவர்.
தமிழகத் தொல்லியல் துறையில் 33 ஆண்டுகாலம் பணியாற்றியவர்.

இருபத்தி ஒன்பது நூல்கள் 66 மேலான ஆய்வுக்கட்டுரைகள் வழங்கியவர்.
"திசையாயிரம்" எனும் தலைப்பில் இவருக்கானப் பணிப்பாராட்டுநூலை,  பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மையம் சென்ற ஆண்டு வெளியிட்டுள்ளது.

கல்வெட்டுத்துறைக்கு இவரது மறைவு பேரிழப்பாகும்.
இவரின் இறுதி நிகழ்வுகள் சென்னையில் நடைபெறுகிறது.

ஆழ்ந்த அஞ்சலி.

-ராஜாராம் கோ மகன்

தேமொழி

unread,
Jul 2, 2026, 4:00:29 PM (5 days ago) Jul 2
to மின்தமிழ்
Rajagopal Archeologist.jpg

இறுதிச் சடங்கு அறிவிப்பு

தமிழகத் தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் துறையின் மூத்த கல்வெட்டாய்வாளரும், தொல்லியல் ஆய்வுலகில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியவருமான முனைவர் சு. ராஜகோபால் அவர்கள் மறைவையொட்டி, அவருடைய இறுதிச் சடங்கு வருகிற சனிக்கிழமை காலை 10.00 மணியளவில், திருவொற்றியூர் தேரடி மெட்ரோ நிலையம் அருகிலுள்ள நகரத்தார் விடுதியில் நடைபெறவுள்ளது.

அவரது உறவினர்கள், நண்பர்கள், மாணவர்கள், தொல்லியல் ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலதிக தகவல்களுக்கு:
முத்துவீரப்பன் – 94441 15626.

ஆழ்ந்த இரங்கலுடன்,
Archaeological Tamil Channel.
https://whatsapp.com/channel/0029VafcSUo6xCSS6sI1C81u
Reply all
Reply to author
Forward
0 new messages