விவாதங்களின் அடைப்படையில் என் மனதில் தோன்றியிருக்கும் எண்ணங்கள் ஓரளவு தெளிவு அளிக்கின்றன. அதனால், ஒரு புதிய இழை.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
Tiru. Sathish Kumar, Here is my understanding of the use of Or. It can be used whenever the meaning "Unique" is necessary. ~NG
ஒரு, ஓர் : தமிழில் பயன்பாடு
பொதுவாக, ஒரு என்பது உயிர்மெய் முதலாக உள்ள சொற்களுக்கும், ஓர் என்பது உயிர் முதலாக உள்ள சொற்களுக்கும் பயன்படும் என்று சொல்வர். இதற்கு எண்ணுப்பெயர்களின் முன் ஒரு, ஓர் என்பன எங்கே வரும் என்னும் தொல்காப்பிய, நன்னூல் நூற்பாக்களை சான்றாகக் காட்டுவர். ஆனால், முக்கியமான இடங்களில் ஓர் என்னும் பயன்பாடு உண்டு.
ஓர் என்ற சொல் “Unique" என்ற பொருளில் சொல்லணும் என்றால் பயன்படுத்தலாம். உ-ம்: ஸ்ரீ இராமபிரான்: ஓர் இல், ஓர் சொல், ஓர் வில்.
ஒப்பிலாத, தனிச்சிறப்பு வாய்ந்த, Unique என்ற பொருள்கள் வரும் இடங்களில் “ஓர்” எனப் பாவிக்கலாம்.
இதனைச் சங்க இலக்கியத்துக்கு உரையெழுதும்போது நச்சினார்க்கினியர் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்:
ஓர் = ஒப்பில்லாத - கலித்தொகைச் செய்யுளும், நச்சினார்க்கினியர் உரையும்:
கலித்தொகை
104 - முல்லைக்கலி:
மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின்
எனத் தொடங்கும் பாடலில்,
“அவ்வழி
முள்ளெயிற் றேஎரிவளைப் பெறுமிதோர்
வெள்ளேற் ரெருத்தடங்கு வான்”
நச்சினார்க்கினியர்
உரை:
”அவ்விடத்து இந்த *ஒப்பில்லாத*
வெள்ளிய ஏற்றின்
கழுத்திலே கிடக்குமவன் கூரிய எயிற்றினையும் அழகினையுமுடைய
இவளைக் கூடும். எ-று.”
பாரதியார்
எழுத்துக்களில் பார்த்தால் விளங்கும்:
(1) நல்லதோர் வீணை செய்தே ...
(2)http://www.lakshmansruthi.com/tamilbooks/bharathiar/bharathi-
III39.asp
”சக்திவெள்ளத்திலே ஞாயிறு ஓர் குமிழியாம். [...]
சக்திக்கடலிலே ஞாயிறு ஓர் நுரை.”
2012 mail :
https://groups.google.com/forum/#!topic/santhavasantham/vqC1PB3RgGw%5B176-200%5D
திருவள்ளுவர் ஒப்பில்லாத (Unrivalled, Unique) என்ற பொருள் வரும் இடங்களில் “ஓர்” என்றே எழுதியுள்ளார். “ஒரு” என்று அங்கே பெய்திருந்தாலும் குறள்வெண்பா இலக்கணம் பிறழ்வதில்லை. எனவே, ஒரு வேண்டாம் ஓர் தேவை என்று பயன்படுத்துகிறார்.
(1)
http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0645.aspx
சொல்லுக
சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லும்சொல் இன்மை அறிந்து
இக் குறளிலே “பிறிதொருசொல்” என்றாலும் யாப்பு சரியே. ஏன் ஓர்சொல் என்கிறார்.
ஓர் சொல் = Unique Word சொல்லுக. அதற்கு ஒத்த சொல் இன்மை அறிந்து என்கிறார் வள்ளுவர்.
இதனை மறைந்துபோன குறளின் ஓருரையிலே அதன் ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறார்
என்று தெரிகிறது. பரிமேலழகர் உரையினால்.
''பிறிதோர் சொல்' என்பதற்கு ஒத்த சொல் என்றும் 'வெல்லும் சொல்' என்பதற்கு மிக்க சொல் என்றும் பொருள் கூறி, ஒத்த சொல்லும் மிக்க சொல்லும் உண்டாகாமல் சொல்லைச் சொல்லுக என்று பொருள் கூறுவாரும் உளர்' எனப் பரிமேலழகர் தனது உரையில் குறித்துள்ளார். இவர் யாரென்று தெரியவில்லை.
Tell words that are Unique, make sure there are no other words equal or better than the chosen words - என்பது இக் குறளின் பொருள் எனக் கருதுகிறேன். இது அழிபட்ட உரையினால் விளங்குவது,
(2)
கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்.
கிளைஞரை நீட்டி அளப்பது ஓர் கோல் - ஒருவனுக்குக் கேடு என்பது தன் நட்டாராகிய புலங்களை எஞ்சாமல் அளப்பதோர் கோல்; கேட்டினும் ஓர் உறுதி உண்டு - ஆகலின் அதன்கண்ணும் அவனால் பெறப்படுவதோர் நல்லறிவு உண்டு. (தத்தம் நட்பெல்லைகள் சுருங்கியிருக்கவும் செல்வக்காலத்துப் புறத்துத் தோன்றாமல் போந்தார், பின் கேடு வந்துழிச் செயல் வேறுபடுதலின், அக்கேட்டால் அவை வரையறுக்கப்படும் என்பதுபற்றிக் கேட்டினைக் கோலாக்கியும்,அதனால் அவரை அளந்தறிந்தால் ஆவாரையே கோடலின், அவ்வறிவை 'உறுதி' என்றும் கூறினார். கிளைஞர்: ஆகுபெயர், இஃது ஏகதேச உருவகம். இவை நான்கு பாட்டானும் ஆராயுமாறும், ஆராய்ந்தால் நட்கப்படுவார் இவர் என்பதூஉம் கூறப்பட்டன. ) - பரிமேலழகர்
இங்கே, “ஓர் கோல்” என்றார். ஒரு கோல் என்றாலும் குறள்வெண்பா தான்.
ஓர் கோல் = unique/suitable yardstick/measure/instrument என்ற பொருள் வருதல் காண்க.
(3)
ஏவவுஞம் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவும்ஓர் நோய்.
ஏவவும் செய்கலான் - புல்லறிவாளன் தனக்கு உறுதியாயவற்றை அறிவுடையார் சொல்லா நிற்கவும் செய்யான்; தான் தேறான் - அதுவன்றித் தானாகவும் இவை செய்வன என்று அறியான்; அவ்வுயிர் போமளவும் ஓர் நோய் - அவ்வுயிர் யாக்கையின் நீங்குமளவும் நிலத்திற்குப் பொறுத்தற்கு அரியதொரு நோயாம். (உயிர் தான் உணர்தல் தன்மைத்தாயிருந்தும், நின்ற யாக்கைவயத்தான் மருளல் தன்மைத்தாய் வேறுபடுதலின், 'அவ்வுயிர்' என்றும், அதன் நீங்கிய பொழுதே அதற்கு இரண்டனுள் ஒன்று கூடுதலின் 'போமளவும்' என்றும். குலமலை முதலிய பொறுக்கின்ற நிலத்திற்குப் பாவயாக்கை பெரும் பொறையாய்த் துன்பம் செய்தலின் 'ஓர் நோய்' என்றும் கூறினார்.) – பரிமேலழகர்
”ஓர் நோய்” என்று புல்லறிவனைக் குறித்தார். Unique என்ற பொருள் இங்கேயும் உண்டு,
அரிசோனா சு. மகாதேவன் ஒரு, ஓர் வேறுபாட்டை அழகாக விளக்கியுள்ளார்:
https://groups.google.com/forum/#!msg/vallamai/QFlvL0udkME/41twyPDBBAAJ
2017-05-07 12:33 GMT-07:00 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:
//நண்பார் அரிசோனன்,
ஒரு அரிசோசனன் என்று புனைபெயர் இருப்பது இலக்கணப் பழுது. ஓர் அரிசோனன் என்பதே செம்மை இலக்கணம்.//
இது பலமுறை எனக்கு வைக்கப்பட்ட கேள்விதான். அவர்களுக்கு கொடுத்த விளக்கத்தையே இங்கு பகிர்கின்றேன்.
ஆங்கிலத்தில் உயிரெழுத்தில் துவங்கும் சொற்களுக்கு முன் a என்பது anஆகத் திரியும். அதுபோலவே, தமிழிலும் உயிரெழுத்தில் துவங்கும் சொற்களுக்கு முன் 'ஓரு' என்னும் குறிப்பீடு "ஓர்" ஆக மருவும். இது இலக்கணம்.
ஆனால் an ஆப்பிள் என்பதற்கும், one ஆப்பிள் என்பதற்கும் வேறுபாடுண்டு. பலவிதமான பழங்கள் -- ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப்பழம், மாம்பழம் --- இருக்கின்றன. ஆப்பிளை சுட்டிக்காட்டி, அது என்னவென்று கேட்டால், It is an apple என்று ஆங்கிலத்திலும், அது ஓர் ஆப்பிள் என்று தமிழிலும் பதில்வரும்.
ஒருகூடையில் பல ஆப்பிள்கள் உள்ளன. அதில் எனக்கு நீங்கள் ஒன்றைக்கொடுக்க விரும்புகிறீர்கள். அப்பொழுது நீங்கள் அருகிலிருக்கும் உங்கள் மகளிடம், Give him one apple, என்றோ, அவருக்கு ஒரு ஆப்பிளைக் கொடு என்றோ சொல்வீர்கள், ஓர் ஆப்பிளைக் கோடு என்று சொல்லமாட்டீர்கள்.
அதே பொருள்தான் எனது புனைபெயரில். பல இலட்சக்கணக்கான அரிசோனாவாழ் மக்களில் நானும் ஒருவன். எனவே தான் One Arizonan என்றபொருள் வரும்படி, ஒரு அரிசோனன் என்ற பெயரை -- நான் அதிகநாள் வசித்துவரும் மாநிலத்தைக் குறிக்கவேண்டி -- புனைந்துகொண்டேன். எனவே, இது இலக்கணப் பிழையல்ல. இலக்கணமறிந்து புனைந்துகொண்ட பெயரே!
பல மாநிலத்து மக்கள் நடுவில் நானிருக்கும்போது என்னைத் தனித்துக்காட்டவேண்டி நீங்கள், "இவர் ஓர் அரிசோனன்" என்று சுட்டலாம். இலட்சக்கணக்கான அரிசோனர்கள் நடுவில் நான் "ஒரு அரிசோனன்"தான்!
அவ்வளவே!
-----------------
ஆங்கிலத்தில் a, an வேறுபாட்டை அளவுக்கதிகமாக தமிழில் ஒரு, ஓர் என்பது போன்ற விதிகளில் ஏற்றுகிறோமோ என்ற ஐயம் எனக்குண்டு.
நா. கணேசன்
(1) செய்யுள்களில் ஒர் (குறில் ஒ) என்றும், ஓர் (நெடில் ஓர்) என்றும் பிரிப்பதுண்டு: உ-ம்: தேவாரம். தி. வே. கோபாலையர்
http://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/INDEX.HTM
இதனில் ஒர், ஓர், ஒரு பகுப்பு பார்க்கவும். அது போலக் கம்பனும் செய்திருப்பார். அவ்வாறு பகுப்பு உண்டா என எனக்குத் தெரியாது.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
Tiru. Sathish Kumar, Here is my understanding of the use of Or. It can be used whenever the meaning "Unique" is necessary. ~NG


"இலக்கணத்தில் சொல்லியிருக்கிறது என்பதற்காக
" வேறு பலமான காரணங்கள் இருந்தும் கூட
அவசியம் கருதி ஒரு மாற்றத்தைச் செய்யவோ,
ஏற்கவோ, பக்குவம் பெறாவிட்டால்
ஒரு மொழியும் வளர்ச்சியும் முடங்கிப் போகும்."
ஜெயகாந்தன்........ எண்ணிப் பார்க்கத் தக்கது.
விரிவான விளக்கத்திற்கு நன்றி திரு கணேசன்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
rnk
புலமைக்குப் பாராட்டுசண்முகம்
என்னவோர் விளக்கம்!
rnk
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.