வ.உ.சிதம்பரனார்—தமிழ் மற்றும் சமுதாயப் பணி

3 views
Skip to first unread message

தேமொழி

unread,
Nov 17, 2025, 11:12:22 PM (4 hours ago) Nov 17
to மின்தமிழ்
வ.உ.சிதம்பரனார்—தமிழ் மற்றும் சமுதாயப் பணி

voc.jpg

வ.உ.சிதம்பரனார் (1872 - 1936)

அறிமுகம்
வ.உ.சி அவர்கள் பிறந்த இடம் ஒட்டப்பிடாரம் (தூத்துக்குடி மாவட்டம்) வாழ்க்கைத் துணை வள்ளி அம்மையார்(1885 -1900), மீனாட்சி அம்மையார், பிள்ளைகள் உலகநாதன், ஆறுமுகம், சுப்பிரமணியன், வாலேசுவரன், ஞானம்பிகை, வேதவல்லி, ஆனந்தவல்லி, மரகதவல்லி.வ. உ. சி என்றழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் (செப்டம்பர் 5 1872 – நவம்பர் 18 1936) ஒரு இந்தியா விடுதலைப் போராட்ட வீரர். பிரித்தானியக் கப்பல்களுக்குப் போட்டியாக முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர். இவர் தொடங்கிய சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே கடல்வழிப் போக்குவரத்தை மேற்கொண்டது. பிரித்தானிய அரசால் தேசத்துரோகியாகக் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். அவரது வழக்கறிஞர் உரிமமும் பறிக்கப்பட்டது.

தமிழ் மற்றும் சமுதாயப் பணி
வ.உ.சி அவர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார். வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர், சுதந்திரப் போராட்ட வீரர் எனும் பன்முகத் தன்மை பெற்றிருந்தார். இவரது அரசியல் வாழ்க்கை உயர்ந்த ஒழுக்கமும், நேர்மையும், ஆற்றலும் நிறைந்ததாக இருந்தது. அவர் அன்பு, தைரியம், வெளிப்படையான குணம் இவற்றை உடையவராக இருந்தார்.தமிழ் மொழியில் உள்ள அநேக இலக்கியங்களைப் படித்து அவற்றைப் பற்றி கட்டுரைகளையும், செய்யுள்களையும் எழுதியுள்ளார்,ஆங்கில நூல்களை மொழிபெயர்த்துள்ளார். விடுதலைப் போராட்டம் குறித்தும் தமிழ் இலக்கியங்கள் குறித்தும் நண்பர்களுடன் விவாதிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். வ.உ.சி. 1892- ஆம் ஆண்டு பால கங்காதர திலகர் அவர்களின் ஆற்றல் மிகுந்த, வீரம் செறிந்த எழுத்தால் கவரப்பட்டு திலகரின் சீடரானார்.இவர் தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டதோடு மற்றவர்களையும் பங்கு கொள்ளச் செய்தார். ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்த்துப் போராடினார். அவர்களின் கொடூரமான சட்டங்களைப் பற்றி மக்களிடையே வீர உரையாற்றினார்.

படைப்புகள்:
மெய்யறிவு
சுயசரிதை

பதிப்பித்தவை:
திருக்குறள்(மணக்குடவர் உரை)
சிவஞான போதம்
தொல்காப்பியம்- சொல்லதிகாரம், பொருளதிகாரம்(இளம்பூரணம்)

மொழிபெயர்த்தவை:
ஜேம்ஸ் ஆலனின் மனம்போல் வாழ்வு
அகமே புறம்
சாந்திக்கு மார்க்கம்
வலிமைக்கு மார்க்கம்

நன்றி:
அண்ணா நூற்றாண்டு நூலகம்
செந்தமிழ்சிற்பிகள்: வ.உ.சிதம்பரனார் (1872 - 1936)
https://www.annacentenarylibrary.org/pages/view/35.%20வ.உ.சிதம்பரனார்

______________________________________________

‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ.சிதம்பரனார் (1872-1936) அவர்களின் சிறப்பு இணையப் பக்கம்
பார்க்க :  https://www.tamildigitallibrary.in/voc/

இது ஓர் அருமையான தகவல் சுரங்கம் 

வ.உ.சி. நூல்கள்

வ.உ.சி. படைப்புகள்
வ.உ.சி. பதிப்புகள்
வ.உ.சி. உரை எழுதிய நூல்கள்
வ.உ.சி. மொழியாக்கங்கள்


வ.உ.சி. பற்றிய நூல்கள்


வ.உ.சி. குறித்து ஆய்வு செய்ய விரும்புவோருக்கு உதவக்கூடிய தளம்.  அவர் எழுதிய, அவர் குறித்த பல நூல்கள், ஒளிப்படங்கள் என நல்லதொரு பாராட்டிற்குரிய முயற்சி, சிறப்பு.  


‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ.சிதம்பரனார் (1872-1936) அவர்களின் சிறப்பு இணையப் பக்கம்
பார்க்க :  https://www.tamildigitallibrary.in/voc/

தேமொழி

unread,
12:49 AM (3 hours ago) 12:49 AM
to மின்தமிழ்
voc.jpg
☝️17.11.1936ல்  வ.உ. சிதம்பரனார் பற்றிய தினமணி பத்திரிக்கை செய்தி
​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​----------------​​​​​​​​​​
Reply all
Reply to author
Forward
0 new messages