நண்பர் மணிவண்னன் அவர்களின் கருத்தும் கிடைக்கப் பெற்றது.
தமிழ் உலகம் குழுவில் கிடைத்தது. தங்களின் பார்வைக்கும் வைக்கிறேன்.
கருத்தோடும் எனக்கு உடன்பாடுதான்.
---------- Forwarded message ----------
From:
Mani Manivannan <
mmani...@gmail.com>
Date: 2008/3/9
Subject: Fwd: [tamil-ulagam] Fwd: இதயம் என்பது தமிழ்ச்சொல்லா?
To: Tamil Ulagam <
tamil-...@yahoogroups.com>
Cc: Elangovan N <
nela...@gmail.com>
FYI
---------- Forwarded message ----------
From: ilakkuvanar maraimalai <marai...@yahoo.com>
Date: Mar 9, 2008 12:28 PM
Subject: Re: [tamil-ulagam] Fwd: இதயம் என்பது தமிழ்ச்சொல்லா?
To: Mani Manivannan <mmani...@gmail.com>
மணிவண்ணனுக்கும் இளங்கோவனுக்கும் ஏனைய நண்பர்களுக்கும்,
வணக்கம்.
'இதயம்' என்பது குறித்த விவாதம் துடிப்புடன் அமைந்துள்ளது.
இளங்கோவனார் குறித்ததுபோன்றே இதயம் என்பதனைத் தமிழ்ச்சொல்
என்றே கொண்டு வழங்கியும் வருவோம்.அஃது பற்றிய சான்றாதாரங்களைப் பின்னர் பார்த்துக் கொள்ளலாம்.
இச் சொல்லின் அழகைக் காண்போம்.
இதம்+அயம்=இதயம்
இதமான் சூழ்நிலை,இதமான பணிநிலை,இதமான உணவு ஆகிய
இதம் + அயம்=இரும்பு
இரும்புச்சத்து நிறைந்த உணவு
இவை இரண்டுமே இதயத்தை வலிவுடன் நெடுநாள் வாழ்விப்பன.
இக் கருத்தினை ஒருமுறை உரையாடிக் கொண்டிருந்தபோது
மறைந்த டாக்டர்.சிற்சபை என்னிடம் கூறினார்.(இவர் என் தந்தையாரின் நண்பர்.அறிஞர் அண்ணாவின் மருத்துவர்.)
ஆனால் இக்கருத்து வேர்ச்சொல்லியலுடன் தொடர்பற்ற கருத்து.
யாரோ ஒரு சித்த மருத்துவர் பல நூற்றாண்டுமுன்னர் இச்சொல்லை
உருவாக்கியிருக்கலாம்,இந்த அடிப்படையில்.
சிற்சபையின் கருத்தை உன்னிப்புச்சொல்லியல்(Guessing Etymology)
என்று மொழியியலாளர் புறந்தள்ளிவிடுவர்.
ஆனால் கலைச்சொல்லுக்கு வேண்டிய இலக்கணத்துடன் இச்சொல் உருவாக்கப்பட்டுள்ளது என்னும் கருத்தை மறுத்தல் கடினம்.
இளங்கோவன் கூறியதுபோல் இறை என்பதற்கு
இதயம் என்று பொருள் இல்லை,
இறை நொந்தது= சற்றே வலித்தது எனப் பொருள்படும்.
coronaria thrombosis எப்படி நிகழும் என்பதனை இப்பாடல்வழிப் படம்பிடித்துக் காட்டுகிறார் திருமூலர்.
ஊசி குத்தியது போல் மெல்ல வலிக்கும்;பின்னர் ஆளை வீழ்த்திவிடும்.
(இங்கே மிகவும் இதமான சூழல் நிலவுவது காட்டப்பட்டு அத்தகைய
சூழலிலும் மாரடைப்பு நிகழலாம் என எச்சரிக்கிறார்.
வீட்டு உணவை உண்டு,இல்லத்தரசியுடன் இனிது துயிலும் நிலையிலும்
இந்நோய் தாக்கும் என்பதனை வலியுறுத்துகிறார்.)
16-3-08 திருச்சி பாரதிதாசன் பல்கலை.
17-3-08 புதுவை மையப் பல்கலை.
என இரு கருத்தரங்குகள்-
எழுத்துரையில் முனைந்துள்ள சூழலில் (அடிக்கடி )மடல் வரையா மணிவண்ணனாரின் மடல் கண்டு நின்றுவிட்டேன்.
23-3-08 -ஆம் நாளுக்குப் பிறகு சென்னை மீண்டதும் விரிவாக
இச்சொல்லின் வழக்காறு குறித்து எழுதுவேன்.
அன்புடன்,
anbu naNbar elango,
We need better citation than Thirumanthiram alone to establish this. Hrdaya is cited in upanishads and one of the meanings is as in Thirumanthiram that you have quoted. So, that alone is insufficient to establish this.
Also, it is vital to compare notes with other Dravidian languages and other citations in Tamil itself. Similarly, one can look at other Indo European languages for evidence that a word belongs to a different family.
Hrdaya may be a loan word in Sanskrit as it does not seem to be in other IE languages. But one needs to search very carefully before concluding.
Similarly, Tamil Lexicon and DEDR need to be consulted for evidence that it is not a loan word in Dravidian/Tamil. Unfortunately, there are no better scholarly resources available for Dravidian/Tamil that are universally respected.
Otherwise, these kinds of speculations are just "folk etymologies" that might make one feel good but meaningless in the long run.
Anbudan,
Mani
On 3/8/08, Elangovan N <nela...@gmail.com> wrote:
---------- Forwarded message ----------
From: Elangovan N <nela...@gmail.com>
Date: 2008/3/7
Subject: Re: [MinTamil] இதயம் என்பது தமிழ்ச்சொல்லா?
To: minT...@googlegroups.com
ஐயா, தேளை என்ற சொல்லை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி.
எனக்கு வேறு ஒரு கருத்து உண்டு,
இதயம் என்ற சொல் வடசொல் அல்ல.
அது இறையம் என்பதன் மரூவு ஆக இருக்கலாம் என்று அறியமுடிகிறது.
இறையம் --> இதையம் --> இருதயம் என்று மாறி
வடமொழிக்குப் போய் பின்னர் அங்கிருந்து
நமக்கே வந்திருக்கிறது ;-)
திருமந்திரச் செய்யுள் ஒன்று நமக்கு சான்று சொல்கிறது.
அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார்
இடப்பக்கமே இறை நொந்தது என்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே.
...திருமந்திரம்:த1:யாக்கைநிலையாமை:பாடல்148
"இப்பதான் வந்தாரு, நல்லா சாப்பிட்டுவிட்டு
எல்லாத்துக்கிட்டேயும் நல்லா பேசிக்கிட்டிருந்தாரு,
இலேசா நெஞ்சை வலிக்குதுன்னாரு - படுத்தாரு
அப்படியே போய்ட்டாரு" என்று நாம் அடிக்கடி
கேள்விப்படுகிற நிகழ்வைச் சொல்கிற பாடல் இது.
இதில் "இடப்பக்கமே இறை நொந்தது"
என்ற சொற்கள் கவனிக்கப் படவேண்டியவை.
இறைவன் எல்லா உயிர்களிலும் இருக்கிறான்.
இறைவனே உயிர்களின் இயக்கம். அந்த இயக்கம்
நடைபெறுவது இறையத்தில். அந்த இறையம் நின்றால்
அதாவது இறைவன் வெளியேறினால் அது வெறும் உடலாகி விடுகிறது.
இறைவன் எங்கு குடியிருக்கிறான் என்றால்
எல்லோரும் "நெஞ்சில் குடியிருக்கிறான்" என்றுதான்
சொல்வார்கள்.
இன்னொரு பொருளும் இதற்கு ஏதுவாகவே இருக்கிறது. இறைத்தல் என்றால் நீரை அள்ளி
அல்லது முகந்து இறைப்பது/வீசுவது.
இறை என்ற கருவி செய்யும் வேலையும் அதே. குருதியை இழுத்து/அள்ளி பல
இடங்களுக்கும் தள்ளி/வீசி விடுவதே அதன் தொழில்.
ஆகவே, இறை யோடு, அம் விகுதி சேர்ந்து
இறையம் ஆகிறது.
இறை என்றால் முக்கியமான, உயர்ந்த என்ற பொருள்களும் உண்டு. உடல் உறுப்புகளில்
இறை
என்பது ஒரு அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்த
உயர்ந்த உறுப்பு.
ஆகவே திருமூலர் சொல்லே மிகச் சரியாக இருக்கிறது. இதயம் என்பது நமது சொல்.
இதன் மருவலை நீக்கி இறையம் என்று புழங்க வேண்டும். வடமொழிக்கு தமிழ் தந்த
கொடைகளில் இதுவும் ஒன்று.
"மந்தணம்" என்ற இன்னொரு சொல்லும் இந்தச் செய்யுளில் ஆயவும் கவனிக்கவும்
வேண்டியது.
இது ஒரு அருமையான சொல். இதைப் பயன்படுத்த வேண்டும். இது குறித்து சில
சான்றுகளைப் பார்க்க வேண்டியுள்ளது. வாய்ப்பு கிடைக்கும்போது பகிர்ந்து
கொள்கிறேன்.
அடசல் என்பது சோற்றைக் குறிக்கும் அருமையான சொல். இதன் புழக்கம் இன்றும் நாம்
கேள்விப் பட்டுவருகிறோம்.
அன்புடன்
நாக.இளங்கோவன்
பி.கு : "இதயம்/இறையம் அவகளுது அல்ல நம்மளுது"ன்னு சாலமன் பாப்பையா மாதிரி
சொன்னாக்க, தனித்தமிழ்நாடு கேட்கிறாங்கடோய் என்று யாரும் பீதியடைய வேண்டாம்
என்று கேட்டுக் கொள்கிறேன் ;-)))))) நாட்டிலே பலர் குழம்பிப் போய்
திரிறாங்கய்யா; சிரிப்பு சிரிப்பா வருது ;-))))))
2008/3/7 செல்வா <c.r.sel...@gmail.com>:
விக்சனரி மடற்குழுவில் சிவகுமார் என்பவர் ஒரு கேள்வி கேட்டார் அதற்கு
> மறுமொழியாக நான் இட்டது இங்குள்ள சிலருக்கும் அறிய ஆர்வம் இருக்கக்கூடும்
> என்பதால் இன்கே இடுகின்றேன்.
> இரவா போன்றவர்கள் இன்னும் எடுத்துக்காட்டுகள் தரக்கூடும்.
>
> அன்புடன்
> செல்வா
> மார்ச் 7, 2008
> ____
> On Mar 7, 8:56 am, Sivakumar <sivakumar...@gmail.com> wrote:
>
> > இதயம் - ஹ்ருதயம் என்பதன் திரிபா? இதயம் என்பதைக் குறிக்க வேறு
> > தமிழ்ச்சொற்கள் உள்ளனவா?
>
> தமிழில் பொதுவாக அறிந்த சொற்கள் நெஞ்சு, நெஞ்சாங்குலை, ஈரற்குலை. இது
> தவிர * செப்பம் * என்றும் ஒரு சொல் உண்டு. ஈரல் என்ற சொல் பொதுவாக உடலில்
> உள்ளுருப்புக்கான சொல் [கல்லீரல் = liver, மண்ணீரல் = spleen, வெள்ளீரல்
> = நுரையீரல் = lung], ஆனால் ஈரற்குலை என்பது நெஞ்சாங்குலை எனப்படும்
> இதயத்தைக் குறிக்கும். செப்பம் என்னும் சொல் பிங்கல நிகண்டில்
> குறிபிடப்படும் சொல் (சிவப்பாக செப்பு போல் இருப்பதாலும், லப்-டப் என்று
> ஒலிப்பதாலும், செப்புவதாலும், செப்பம் எனப் பெயர் பெற்றிருக்கலாம்).
> நெஞ்சாங்குலையைப் பற்றிச் சொல்லும் பொழுது தமிழில் உள்ள கலைச்சொல்லாகிய
> தேளை என்பதைப் பற்றிச் சொல்ல வேண்டும். தேளை என்றால் லப்-டப் என்று
> ஒலிக்கும் செஞ்சாந்துடிப்பை (இதயத் துடிப்பை)க் குறிக்கும். தேளை என்பது
> விட்டு விட்டு ஒலிக்கும் இதயத்துடிப்பைச் சுட்டும் அருமையான சுருக்கமான
> கலைச்சொல். எடுத்தாள வேண்டியது நமது கடமை.
>
> செல்வா
> ________
maraimalai ilakkuvanar
52/3 Soundarya colony
Annanagar western extension
CHENNAI-TAMILNADU STATE
INDIA-600101
Be a better friend, newshound, and know-it-all with Yahoo! Mobile. Try it now.