மேற்கு வானம் செக்கச் சிவந்திருந்த மாலைப்பொழுது.
எறுழியில் (office) அமர்ந்து கணினியில் வேலைபார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது எனது சீர்நவிக்கு அழைப்பு வந்தது. நண்பர் அழைத்திருந்தார்.
சொல்லு நண்பா நல்லாருக்கியா – இது நான்.
ம். நல்லாருக்கேன். நீ?
ம். நல்லாருக்கேன். என்ன சேதி?
ஒன்னுல்ல. வைரசுக்கும் பாக்டீரியாவுக்கும் தமிழ்ல என்ன கலைச்சொல் படைச்சிருக்காங்கனு தெரியனும்.
சரி. தேடிப்பாத்துட்டு சொல்றேன். கிடைக்காட்டி புதுசா வச்சிரலாம்.
பேசிவிட்டு இணையத்தில் தேடியதில், வைரசுக்கும் பாக்டீரியாவுக்கும் தீநுண்மி, நுண்ணுயிரி போன்ற சொற்களே கிடைத்தன. இவையெல்லாம் பொருத்தமாகத் தோன்றவில்லை. எனவே புதிய சொற்களைப் படைக்கலாம் என்று முடிவுசெய்தேன்.
வைரச் மற்றும் பாக்டீரியாவில் வைரச் பெரும்பாலும் அழிவையே தருவதாகும். கணினி சார்ந்த வைரசாக இருந்தாலும் நோய் சார்ந்த வைரசாக இருந்தாலும் மிக நுட்பத்தன்மை கொண்ட இவற்றில் பெரும்பான்மை அழிவையே தருவதாக இருக்கின்றன. அழிவைத்தருவதும் நுட்பத்தன்மையும் வைரசுக்குரிய முதன்மை பண்புகளாக இருப்பதால் இவ் இரண்டின் அடிப்படையில் பெயர் வைக்க முடிவு செய்தேன்.
தமிழில், வீ என்றால் அழிவு என்ற பொருளுண்டு. அயிர் என்றால் நுண்மை என்ற பொருள் உண்டு. அழிவைத் தருகின்ற நுண்ணிய பொருள் என்ற பொருளில் இரண்டையும் இணைத்து இ என்ற விகுதியையும் சேர்த்ததில் கீழ்க்காணும் சொல் கிட்டியது.
வீ + அயிர் + இ = வைரி
வைரி என்ற சொல்லுக்குப் பகைவன் என்ற பொருள் ஏற்கெனவே அகராதியில் இருப்பதும் இப்பெயருக்குப் பொருத்தமாகத் தோன்றியது. இதன் அடிப்படையில்,
VIRUS = வைரி
VIRAL = வைரிய
VIRALITY = வைரியம்
VIRULENT = வைரித
VIRULENCE = வைரிதம்
VIRUCIDE = தெவ்வைரி = வைரியை எதிர்த்து வேலைசெய்வது.
ANTIVIRUS = தெவ்வைரி = வைரியை எதிர்த்து வேலைசெய்வது.
அடுத்ததாக, பாக்டீரியாவை எடுத்துக்கொண்டால், அதுவும் வைரசைப் போல ஒரு நுண்ணுயிரி (MICROBE) தான். ஆனால் பாக்டீரியாக்களில் பல நன்மைகளைச் செய்பவை. பால், தயிர், மோர், ஆகியவை புளித்துப் போவதற்குப் பாக்டீரியாக்களே காரணம். இவை உணவுப் பொருட்களைச் சிறுசிறு கூறுகளாகப் பகுத்து உண்ணும் தன்மை கொண்டவை. பகுத்து உண்ணுதல் வினையே இவ் உயிரிகளின் அடிப்படைப் பண்பாக இருப்பதால் பகுத்தல் மற்றும் ஆர்த்தல் (உண்ணுதல்) வினைகளை இணைத்து அவற்றுடன் இ கார விகுதி சேர்த்து கீழ்க்காணுமாறு பெயர் வைக்கலாம்.
பகு + ஆர் + இ = பகாரி
மேற்காணும் புதிய சொல்லின் அடிப்படையில்,
BACTERIA = பகாரி
BACTERIAL = பகார்
BACTERIOPHAGE = பகார்வைரி
BACTEROIDES = பகாரியன்
BACTERIOCIN = பகாரழல் ( அழல் = நச்சு )
BACTERIOCIDE = பகாரினை ( நைத்தல் = அழித்தல் )
ANTIBACTERIAL = பகாரினை