தமிழில் உள்ள சொற்களையும் அவற்றின் பொருளையும் தெரிந்துகொள்ள தமிழர்கள் உருவாக்கியவை நிகண்டுகள் ஆகும்.
இவை, தெய்வப்பெயர்கள், மக்கள் பெயர்கள், மரப்பெயர்கள், விலங்குப் பெயர்கள் என்ற பல்வேறு தலைப்புகளில் சொற்களைப் பற்றிய நூற்பாக்களைத் தருபவை.
இந்த நூற்பாக்கள் செய்யுள் வடிவில் உள்ளவை.
கிறிஸ்தவ மதத்தைப் பரப்ப, தமிழ்நாட்டுக்கு வந்த பாதிரிமார்கள் தமிழ் கற்க விரும்பியபோது அவர்களுக்கு இந்த நிகண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
------------------------------------------------------------
(இப்போது, ஆசிரிய நிகண்டு என்ற தலைப்பில் தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகம் வெளியிட்டுள்ள
புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள முகவுரையின் ஒரு பகுதியை அப்படியே கீழே தருகிறேன்.)
-------------------------------------------------------------
நிகண்டு கற்காமலே சொற்பொருள் தெரிவான்
வேண்டிய சூழ்நிலை, உலக நாடுகளினின்றும் தமிழ்நாடு போந்த பாதிரியார்களுக்கு ஏற்பட்டது. தமிழ் கற்பதற்குச் சொற்களின் ( அகரவரிசையில் ) பொருள் தெரிவது இன்றியமையாததாயிற்று.
அதுகாலை கி.பி.1679ல் ப்ரொஇன்சா” என்ற பாதிரியாரால் முதன் முதலில் “தமிழ் போர்ச்சுகீசிய அகராதி” இயற்றப்பட்டது. இது மறைந்துபோய்விட்டது.
மேல் நாட்டுப் பாதிரிமார்களுள் தலை சிறந்தவரும்
தமிழன்புடையவருமானவர் “வீரமாமுனிவர்” ஆவர்.
இவரது இயற்பெயர் “கொன்ஸ்டான்ஸ் ஜோசப் பெஸ்கி:
(Contanzo Giuseppe Beschi) ஆகும்.
“கொன்ஸ்டான்ஸ்” என்பதற்கு இத்தாலி மொழியில் தைரியம்” என்று பொருள்.
1710-ல் இவர் தமிழ்நாடு வந்ததும் தனது பெயரைத்
“தைரியநாதர், என்று வழங்கினார்.
தமிழில் புலமைபெற்ற இவரை வீரமாமுனிவர்
என்று மதுரைத் தமிழ்ச் சங்கத்தார் அழைத்தனர்.
இத்தகு சிறப்புடைய இவரால் தமிழ்-லத்தீன் அகராதி ஒன்றும், போர்ச்சுக்கீசியம் --தமிழ்--லத்தீன் அகராதி ஒன்றும், சதுரகராதி ஒன்றும் ஆக மூன்று அகராதிகள் இயற்றப்பட்டன. இவற்றுள் கி. பி. 1792-ல் இயற்றிய தலைசிறந்த அகராதி சதுரகராதியாகும்.
பெயரகராதி, பொருளகராதி, தொகையகராதி, தொடையகராதி என்னும் நான்கு வகைப்பட்ட அகராதிகள் உள்ளதால் இது “சதுரகராதி” எனப் பெயர் பெற்றது.
இப்போதுள்ள தமிழ் அகராதிகளில் இதுவே காலத்தால் முற்பட்டது,
பின்னர் ஆங்கிலத்தில் கி, பி. 1755-ல் டாக்டர்
ஜான்சன் ஒரு அகராதி இயற்றினார், பிறகு கி. பி. 1779-ல்
“பெப்ரிஷீயஸ்'; ப்ரெய்டு ஹெப்டு' என்னும் இரண்டு
செர்மானியப் பாதிரியார்கள் தமிழ்-ஆங்கில அகராதி ஒன்றைத் தோற்றுவித்தனர்.
கி. பி. 1842ல் யாழ்ப்பாண சந்திரசேகர பண்டிதரால் இயற்றப்பட்ட அகராதி ஒன்று ஸ்பால்டிங் பாதிரியாரால் வெளியிடப்பட்டது. கூடியமட்டில் எல்லாச் சொற்களையும் உள்ளடக்கிக் கொண்டிருக்கும் இதனை யாழ்ப்பாண அகராதி: என்றழைத்தனர்.
கி.பி.1890ல் டாக்டர்*ராட்லர்” என்பவர் தமிழ்-ஆங்கில
அகராதி ஒன்றைத் தொகுத்தார்.
கி. பி. 1842-ல் “அச்சிங்ஸ் பாதிரியார் ஆங்கிலத்-தமிழ் அகராதி ஒன்றை இயற்றினார்.
இதன்பிறகு கி. பி. 1882-ல் *இராமானுசக் கவிராசர் முதலான முதுபெரும்புலவர்கள் பலரால் தொகுக்கப்பட்ட தமிழ்-ஆங்கில அகராதி ஒன்றினை *வின்ஸ்லோ” என்பார் வெளியிட்டார்.
அகராதிகளில் இதுவே மிகப்பெரிய அகராதியாகும், இவ்வகராதியில் 67,452 செற்கள் உண்டெனத் தெரிகின்றது. அதன்பின் கி.பி, 1867-ல் நாகையி
லிருந்து “ஆர், பி, குரி” எனும் பாதிரியார் தமிழ்-லத்தீன்
அகராதி ஒன்றைத்திரட்டினார். பிறகு கி. பி, 1897-ல்
தரங்கம்பாடியினின்றும் ஒரு அகராதி தோன்றியது.
மேற்கூறிய அகராதிகளின் இடையேயும், பின்னரும்
பல அகராதிகள் தோன்றின.
ஆயினும் மொழியகராதி *எனப் பெரிதும்
பாராட்டப்பட்டது பெஸ்கி எனப்படும் வீரமாமுனிவர்
இயற்றிய *சதுரகராதி* யேயாம்,
நன்றி - தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகம்