1. இணைய உரை 07 தமிழ்க்காப்புக்கழகம், புது தில்லி, 09052026 +++ 2.சட்டச் சொற்கள் விளக்கம் 1056-1060: இலக்குவனார் திருவள்ளுவன் +++ 3.வெருளி நோய்கள் 1381 -1385: இலக்குவனார் திருவள்ளுவன்

5 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
May 7, 2026, 6:35:56 PM (2 days ago) May 7
to thiru thoazhamai, Thamizh Pavai, ara...@aol.com, Akar Aadhan, Paramasivam Marudanayagam, Casmir Raj, Vani Aravanan, pthang...@gmail.com, Bala subramanian, Anna Centenary Library Librarians, wsws sl, Raju Krishnaswamy, விவேக் பாரதி, Lalitha Sundaram, vidya chandran chandran, kalvet...@gmail.com, Neethi Vallinayagam, Sampath Singara, Kumanan K.b. Kanji, madhiyazhagan subbarayan, LION.R. MOURALY, Kandaih Mukunthan, Office, kandasamy santharupi, Tamil Mar Laie, Palanichamy V, HAMIDIA BROWSING CENTRE, raman kannusamy, பூங்குழலி Poonkuzhali, annac...@yahoo.co.in, Karunkal kannan, Solidarity For Malayagam, Manimekalai Prasuram, pandian M.T, Dr. Namadhu MGR, CHERALATHAN A, msvoimaie...@gmail.com, dgvcmut...@gmail.com, Kirubanandan Srinivasan, jainol...@gmail.com, Jeeva Kumaran, mega digital4, mohan raj, Swathi Swamy, Senthilnarayanan Arunachalam, Chitraleka V, Dr Seenivasan Sappani, Rajan Krishnan, Umarani Pappusamy Mysore, Guberan Rajan, Dr. Ku.Muthukumar

இணைய உரை 07 தமிழ்க்காப்புக்கழகம், புது தில்லி, 09052026

 


ஃஃஃ    அகரமுதல     இலக்குவனார் திருவள்ளுவன்      08 May 2026      


தமிழ்க்காப்புக் கழகம், புது தில்லிக் கிளை

இணைய அரங்கு உரை 07

நாள்: சித்திரை 26, 2057 / 09.05.2026

இணைப்பிற்கு : https://meet.google.com/htz-tfer-zpz

தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன்

சிறப்புரை: 

முனைவர் அறவேந்தரன், சவகர்லால் நேரு பல்கலைக்கழகம்

நெறியாள்கை : புத்தேரி தானப்பன்

பிற அழைப்பிதழில் உள்ளவாறு

+++

சட்டச் சொற்கள் விளக்கம் 1056-1060: இலக்குவனார் திருவள்ளுவன்



(சட்டச் சொற்கள் விளக்கம் 1051-1055 தொடர்ச்சி)

1056. Appropriate allocation     உரிய ஒதுக்கீடு
உரியவாறு ஒதுக்கீடு செய்தல்


சட்டப்பணிகள் ஆளாண்மைச் சட்டம்1987, பிரிவு 4இல்(S. 4(c) LSAA,1987 – Section 4 in The Legal Services Authorities Act, 1987) தம் முடிவிற்கேற்ப நிதிகளைப் பயன்படுத்தவும் மாநில அதிகாரர்களுக்கும் மாவட்ட அதிகாரர்களுக்கும் உரியவாறு நிதி ஒதுக்கீடு செய்வது குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

authority என்பது அதிகாரம் உள்ள அமைப்பு. அதிகாரி என்றும் குறிப்பிடுவர். அதிகாரம் உள்ள ஆளை அதிகாரன் என்று முன்னர்க் குறிப்பிட்டுள்ளனர். அதிகாரம் உள்ளவர்களைக் குறிப்பதாயின் அதிகாரர்கள் எனலாம். அதிகாரம் உள்ள ஆளுமை அமைப்பைக் குறிப்பதாயின் ஆளாண்மை எனலாம்.
1057. Appropriate authorityஉரிய ஆளாண்மை
உரிய அதிகார அமைப்பு
உரிய அதிகாரி


உரிய அதிகாரன் ஊர், நகரம், அல்லது நாட்டின் ஆளுகைக் குழுவே தக்க ஆளாண்மையாகும்.  
விதிமீறல் தொடர்பில் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பில் அதிகாரம் மிக்க அமைப்பு இதன் தொடர்பில் தக்க ஆளாண்மையாகும்.
காண்க: Appropriate
1058. Appropriate case   பொருத்தமான வழக்கு
உரிய நேர்வு
தக்க நேர்வு
உகந்த நேர்வு  

வாதுரையின் பொழுது முன் நிகழ்வைக் குறிப்பதாயின் பொருத்தமான வழக்கையே குறிப்பிட வேண்டும். தொடர்பில்லாத வழக்கைக் குறிப்பின் நீதிமன்றத்தால் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.

காண்க: Appropriate
1059. Appropriate forum  தக்க அமைப்பு
உரிய அமைப்பு
உகந்த அமைப்பு


அதிகாரம் செலுத்துவதற்குரிய அல்லது அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்குரிய அல்லது நிதியைப் பயன்படுத்துவதற்குரிய அல்லது வழக்கைத் தொடுப்பதற்குரிய அல்லது வழக்கை எதிர்கொள்வதற்குரிய தக்க அமைப்பு.
1060. Appropriate government   உரிய அரசு

ஒரு நாட்டை அல்லது மாநிலத்தை ஆளுவதற்கு முறைப்படியான அதிகாரம் படைத்த அரசு.

மரணத்தண்டனையைச் செயற்படுத்துவதற்கு அல்லது மரணத்தண்டனைய மன்னித்துக் குற்றவாளியின் தண்டனையைக் குறைப்பதற்கு அல்லது நீக்கி விடுதலை செய்வதற்கு அல்லது பிற தண்டனைகளை மாற்றுவதற்கு அல்லது நீக்குவதற்கு அதிகாரம் உள்ள அரசு

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

++

வெருளி நோய்கள் 1381 -1385: இலக்குவனார் திருவள்ளுவன்



(வெருளி நோய்கள் 1376 -1380: தொடர்ச்சி)

வெருளி நோய்கள் 1381 -1385

  1. தொலைக்காட்சி வெருளி – Proscriptiophobia / Shijiphobia / Televisiophobia

வணிக முறையிலான தொலைக்காட்சி மீதான அளவுகடந்த பேரச்சம் தொலைக்காட்சி வெருளி.
வணிக ஆதாயத்திற்காகப் பொய்யான செய்திகளைப் பரப்பி நம்ப வைப்பார்கள் என்பதுபோன்ற உணர்வுகளால் தொலைக்காட்சி மீது அளவுகடந்த வெறுப்பும் அச்சமும் கொள்வர்.
காண்க: தொலைக்காட்சி நிகழ்ச்சி வெருளி(TVshowphobia)
00

  1. தொலைபேசி மணி வெருளி -Telephonophobia

தொலைபேசி மணி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தொலைபேசி மணி வெருளி.
தொலைபேசி மணியைப் பேரிடர்(அபாய) மணியாக எண்ணிப் பேரச்சம் கொள்வோரும் உள்ளனர்.

தொலைப்பேசி மணி என்றும் குறிப்பர்.
காண்க: Telephonobia
00

  1. தொலைபேசி வெருளி -Telephonobia

தொலைபேசியில் ஒருவரை அழைப்பதற்கு அல்லது தொலைபேசியில் பிறரிடம் இருந்து அழைப்பு வருவது குறித்து வரம்பு கடந்த பேரச்சம் கொள்வது தொலைபேசி வெருளி -Telephonobia.
சிலர் தொலைபேசி மணி அடித்ததுமே அலறி அடித்துக் கொண்டு எடுப்பர். சிலர் தவறான அல்லது துன்பமான அல்லது தோல்விபற்றிய அல்லது இழப்பு பற்றிய செய்தி வருமோ எனக் காரணமின்றி அஞ்சுவர்.
நிலை பேசி அல்லது நிலப்பேசி இல்லாமல் அலைபேசி குறித்த பேரச்சம் அலை பேசி வெருளி(Nomophobia) எனக் குறிக்கப் பட்டுள்ளதுபோல்தான் இதுவும்.
பேச்சு தொடரல்பான பேரச்சம் உள்ளவர்களுக்கும் தொலைபேசி வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.

தொலைப்பேசி வெருளி என்றும் குறிப்பர்.


00

  1. தொலைப்பு வெருளி – Respraeterphobia

பொருள்களைத் தவறவிடுவது தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தொலைப்பு வெருளி.
பணம், நகை, சான்றிதழ்கள், முதன்மையான கோப்புகள் போன்றவற்றைப் பயணத்தில் அல்லது இடப் பெயர்வு நேரத்தில் அல்லது வீட்டிற்குள்ளேயே அல்லது அலுவலகத்திற்குள்ளேயே தொலைத்து விடுவோம் என்ற அளவுகடந்த பேரச்சம் கொள்வர்.
00

  1. தொலைவு வெருளி – Apostasiphobia

தொலைவு குறித்த வரம்பற்ற பேரச்சம் தொலைவு வெருளி.
Apostasi என்னும் கிரேக்கச் சொல்லிற்குத் தொலைவு எனப் பொருள்.
தொலைவிடப் பயணங்கள், பிள்ளைகள் அல்லது குடும்பத்தினர் தொலைவில் இருத்தல் போன்ற காரணங்களால் தொலைவு குறித்த பேரச்சம் வருகிறது.
சாலைவெருளி(Hodophobia) உள்ளவர்களுக்குத் தொலைவு வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.
00


(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 3/5

000





--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Reply all
Reply to author
Forward
0 new messages