சங்க இலக்கியங்களுக்கான பாடல் – தேடல் முடிப்பு

30 views
Skip to first unread message

Pandiyaraja

unread,
Jun 22, 2024, 4:43:43 AM (8 days ago) Jun 22
to மின்தமிழ்

அன்புடையீர்,

சங்க இலக்கியங்களுக்கான பாடல் – தேடல் பகுதியின் மூன்றாம் கட்ட அமைப்பு முடிவுற்றது.

முதல் கட்டத் தேடல் – பாடல் முதல் அடி வழி - அகரவரிசையில்

ஏறக்குறைய 2400 சங்கப் பாடல்களை, அவற்றின் முதல் அடியை வைத்துத் தேடிக் கண்டுபிடிக்கும் முறை.

அகல் அறை மலர்ந்த அரும்பு முதிர் வேங்கை

என்ற அகநானூற்றுப் பாடல் 105 முதல்

வையை வரு புனல் ஆடல் இனிது-கொல்

என்ற பரிபாடல் திரட்டு பாடல் 13 வரை, அனைத்துப் பாடல்களுக்கும் அவற்றின் முதல் அடிகளைப் பாடல்களுடன் இணைப்பு உண்டாக்கி, அவற்றை அகர வரிசையில் அடுக்கிக் கொடுத்திருக்கும் பகுதி இது. இது ஏற்கனவே செய்து முடிக்கப்பட்டது.

இரண்டாம் கட்டத் தேடல் – பாடல் ஆசிரியர் பெயர் வழி – அகரவரிசையில்

400 – க்கும் மேற்பட்ட சங்கப் புலவர்களை, அவர்கள் எழுதிய பாடல்களுடன் அகர வரிசையில் தொகுத்தது.

அகம்பன் மாலாதனார்  என்ற  நற்றிணை 81-ஆம் பாடல் ஆசிரியர் முதல் .வேம்பற்றூர் குமரனார் என்ற அகநானூறு 157-ஆம் பாடல் ஆசிரியர் வரை, இந்தப் பெயர்களை அகர வரிசையில் அடுக்கி, அப் பெயர்களுடன் அவர்கள் எழுதிய பாடல்களுடன் இணைப்புக் கொடுத்திருக்கும் பகுதி இது. இதுவும் ஏற்கனவே செய்து முடிக்கப்பட்டது. 

மூன்றாம் கட்டத் தேடல் – பாடலின் திணை வழித் தேடல் – திணைகளின் மரபு வரிசையில்.

குறிஞ்சி, முல்லை, மருதல், நெய்தல், பாலை எனச் சங்கப் பாடல்களின் அகத்திணைகள் ஐந்து.

வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை எனச் சங்கப் பாடல்களின் புறத்திணைகள் 12

சங்கப் பாடல்கள் அனைத்தையும், அவற்றின் திணைப் பெயர்களின் முறையில் தொகுத்து, அவற்றை அவ்வவ் திணைப் பெயர்களுடன் இணைப்புக் கொடுத்திருக்கும் பணி இது.

இதிலும் இரண்டு வழிகள் பின்பற்றப்பட்டுள்ளன. காட்டாக, மருதம் என்ற திணையை எடுத்தால், இவ்வகைப் பாடல்கள் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலி, அகம் என்ற எல்லா நூல்களிலும் இடம் பெறும். எனவே இந்த நூல்கள் வாரியாக மருதத்திணைப் பாடல்களைத் தொகுப்பது.

அடுத்து, இந்த மருதப் பாடல்களைப் பல புலவர்கள் பாடியிருப்பார்கள். அவர்களின் பாடல்கள் இந்த எல்லா நூல்களிலும் காணப்படும். எனவே ஒரு குறிப்பிட்ட புலவர் பாடியுள்ள மருதப் பாடல்களை எல்லா நூல்களிலிருந்தும் தொகுப்பது. இது ஆசிரியர் வாரியாக ஒவ்வொரு திணைப் பாடல்களையும் தொகுப்பது.

இவை ஒரே பக்கத்தில் இரண்டு பத்திகளாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

இடது பக்கம் உள்ள மருதம் என்ற பெயரைச் சொடுக்கினால், நற்றிணை, குறுந்தொகை போன்ற ஒவ்வொரு நூலிலிருந்தும் எல்லா மருதத்திணைப் பாடல்கள் இடது பத்தியில் கொடுக்கப்பெறும்.

வலது பக்கம் உள்ள மருதம் என்ற பெயரைச் சொடுக்கினால், அஞ்சில் அஞ்சியார், அழிசி நச்சாத்தனார் என அகர வரிசையில் மருதம் பாடிய எல்லாப்  புலவர்களின் பாடல்கள் வலது பத்தியில் கொடுக்கப்பெறும்.

இப்போது, சங்க இலக்கியங்களைத் தேடிப் பிடிக்க ஆறு முறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

1.   சங்க இலக்கியம் பகுதி மூலம் – காட்டாக, குறுந்தொகை 78 வேண்டுமென்றால், சங்க இலக்கியம் பகுதியில், குறுந்தொகை என்பதைச் சொடுக்கி, பின்னர் 51-100 என்பதைச் சொடுக்கினால் குறுந்தொகை 51 முதல் 100 வரையுள்ள பாடல்கள் கிடைக்கும். இவற்றில் தேவையானதைப் பெறலாம்.

2.   சங்க இலக்கியம் ஒரு சொல் மூலம் – காட்டாக, திதலை என்ற சொல் வரும் இடங்கள் வேண்டும் என்றால், சங்க இலக்கியத் தொடரடைவுப் பகுதியில் தி என்ற எழுத்தைச் சொடுக்கி, வருகின்ற தி-முதல் சொற்களில் திதலை என்பதைச் சொடுக்கினால், சங்க இலக்கியத்தில் திதலை என்ற சொல் வரும் எல்லா அடிகளும் கிடைக்கும்.

3.   சங்க இலக்கியம்: பாடல் – தேடல் பகுதியைச் சொடுக்கினால் பாடல் முதல் அடி – அகர வரிசையில் என்பதன் கீழ் வரும் பகுதியில் தேவையான பாடல் முதல் அடியைச் சொடுக்கினால் அப் பாடல் முழுதும் கிடைக்கும்.

4.   இதே பகுதியில் பாடல் ஆசிரியர் – அகர வரிசையில் என்பதனைச் சொடுக்கினால் வரும் பெயர்களில் தேவையான ஆசிரியர் பெயரைச் சொடுக்கினால் அவர் எழுதிய பாடல்கள் அனைத்தும் கிடைக்கும்.

5.   இதே பகுதியில் பாடல் திணை – மரபு வரிசையில் என்பதனைச் சொடுக்கினால் வரும் திணைப் பெயர்களில் நூல் வாரியாக என்ற பகுதியில் தேவையான திணையைச் சொடுக்கினால் நூல் வாரியாக அந்தத் திணைப் பாடல்கள் கிடைக்கும்.

6.   இதே பகுதியில் பாடல் திணை – மரபு வரிசையில் என்பதனைச் சொடுக்கினால் வரும் திணைப் பெயர்களில் ஆசிரியர் வாரியாக என்ற பகுதியில் தேவையான திணையைச் சொடுக்கினால் ஆசிரியர் வாரியாக அந்தத் திணைப் பாடல்கள் கிடைக்கும்.

இனியும் ஒரு முறை உண்டு என்கிறார் ஓர் அம்மையார். அது பாடல் கூற்று வழியில் பாடலைத் தேடுவது. அதாவது, நற்றாய் கூற்று, செவிலி கூற்று, தோழி கூற்று, தலைவன் கூற்று, தலைவன் கூற்று என்ற முறையில் சங்கப் பாடல்களைத் தொகுத்துத் தேடுவது. இந்த முறை அகத்திணைப் பாடல்களுக்கே பொருந்தும். எனவே இந்த முறை இந்த முறை எடுத்துக்கொள்ளப்படவில்லை. அடுத்த முறை இந்த முறையை நேரம் அமைந்தால் பார்க்கலாம் என்றிருக்கிறேன்.

சங்கப் பாடல்களைக் கிண்டிக் கிழங்கெடுக்க நினைப்பவர்களுக்கு – கிழங்கு உங்கள் மேஜையின் மேல்.

எடுத்து, அறுத்துச் சமைத்து உண்டு மகிழுங்கள்.

இனி அடுத்த பணியை முடித்து, அந்தச் செய்தியுடன் சந்திக்கிறேன்.

நன்றி,

ப.பாண்டியராஜா

 

 

  

 

 

தேமொழி

unread,
Jun 22, 2024, 2:06:35 PM (8 days ago) Jun 22
to மின்தமிழ்
ஐயா, மிக்க மகிழ்ச்சி.  
மரம் நாட்டு வைத்து வளர்த்துவிட்டீர்கள். 
இனி கனிகளைப் பறித்து பயன் பெறுவோம். 
அள்ள அள்ளக் குறையாத கருவூலம் கையில். 
நன்றி ஐயா. 
அன்புடன் 
தேமொழி 

தேமொழி

unread,
Jun 22, 2024, 2:21:08 PM (8 days ago) Jun 22
to மின்தமிழ்
*நட்டு 
தட்டுப்பிழை 

Pandiyaraja Paramasivam

unread,
Jun 22, 2024, 10:05:21 PM (8 days ago) Jun 22
to mint...@googlegroups.com
மிக்க நன்றி, அம்மா!
அன்புடன்,
ப.பாண்டியராஜா

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/f2fe2856-7cfa-4784-9a03-390203d85e9dn%40googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages