help me please,

7 views
Skip to first unread message

kamaladevi aravind

unread,
Feb 16, 2009, 8:31:10 PM2/16/09
to minT...@googlegroups.com
நான் என்னஏப்பை சாப்பைன்னு நினைச்சுக்கினியாடா?--ஏப்பை சாப்பை என்றால் என்ன?
உன்னோட கோக்கு மாக்கு, வேலையெல்லாம் எங்கிட்டே வச்சுக்க வேணாம்?--கோக்கு மாக்கு என்றால் என்ன?
நான் அரிசி கொண்டு வருவேனாம், நீ உமி கொண்டு வருவாயாம், ஊதிஊதி திம்போமாம், -- என்றால் என்ன?
அன்பு கூர்ந்து உதவவும்.
கமலம்


வேந்தன் சரவணன்

unread,
Feb 16, 2009, 10:22:13 PM2/16/09
to minT...@googlegroups.com
கமலம்
 
ஏப்பைசாப்பை என்பது எளிதில் ஏமாற்றிவிடக் கூடிய ஒரு கோமாளியைக் குறிக்கும்.
கோக்குமாக்கு என்பது சிக்கலில் மாட்டிவிடுவது. 
அரிசி சோறாக்க, உமி அடுப்பெரிக்க. அடுப்பில் உமியைப் போட்டு வாயால் ஊதினால் (முதலில் பற்றவைக்கவேண்டும்)தீ வளரும். அந்தத் தீயில் சோறாக்கித் தின்ன அழைக்கிறார்.
 
சரி, யார் இதை எல்லாம் உங்களிடம் சொன்னது?
 
எச்சரிக்கையாக இருங்கள்.
 
அன்புடன்,
 
பொன்.சரவணன்
பெங்களூர்.

 
2009-02-17 அன்று, kamaladevi aravind <gokul...@yahoo.com> எழுதினார்:

Tirumurti Vasudevan

unread,
Feb 16, 2009, 10:27:38 PM2/16/09
to minT...@googlegroups.com
saravaNan
துரியோதன பார்வை இல்லை உமக்கு!
சாதாரணமாக வேற படிதான் பொருள். நான் கேள்வி பட்டது அரிசி இல்லை அவல்.

திவா

2009/2/17 வேந்தன் சரவணன் <vaen...@gmail.com>:
> கமலம்
>

வேந்தன் சரவணன்

unread,
Feb 16, 2009, 10:29:51 PM2/16/09
to minT...@googlegroups.com
திவா
 
அதென்ன துரியோதன பார்வை?
 
சற்று விளக்குங்களேன்.
 
அன்புடன்,

 
2009-02-17 அன்று, Tirumurti Vasudevan <agni...@gmail.com> எழுதினார்:

kamaladevi aravind

unread,
Feb 16, 2009, 10:31:20 PM2/16/09
to minT...@googlegroups.com
யாருமே என்னிடம் சொல்லவில்லை. அரிய நூல் ஒன்றை ஆய்வுக்கு தெறிவு செய்துள்ளேன்
புதிய எழுத்தாளர். அதிகம் எழுதியவரும் கூட அல்ல. ஆனால் இலக்கிய த்தில் உருவகம் அபாரமாய் விழுந்துள்ளது.
 அண்மைய காலத்தில் எங்குமே படித்திராத புதுமை.
இந்த எழுத்தை அறிமுகம் செய்யவேண்டுமென்று தோன்றியது. ஆனால், கதை மாந்தர்களின் தமிழ்
சில இடங்களில் புரியவில்லை.
புத்தகத்தமிழ் தான் எனக்கு பரிச்சயம் .
நன்றி
கமலம்


From: வேந்தன் சரவணன் <vaen...@gmail.com>
To: minT...@googlegroups.com
Sent: Tuesday, February 17, 2009 11:22:13 AM
Subject: [MinTamil] Re: help me please,

Tirumurti Vasudevan

unread,
Feb 16, 2009, 10:36:08 PM2/16/09
to minT...@googlegroups.com
தெரிஞ்சு கொண்டே கேக்கறீங்க?
கண்ணன் தருமரை கூப்பிட்டு உலகத்திலே கெட்ட மனுஷன் யார் இருக்கான்னு
பாத்து வா ன்னார்.
அதே போல துரியோதனனை பாத்து நல்ல மனுஷன் யார்ன்னு பாத்து வா ன்னார்.
தருமர் போய் வந்து யாருமே கெட்டவங்க இல்லைனார்.
துரியோதனன் திரும்பி வந்து யாருமே நல்லவங்க இல்லைனார்.
அதான் பார்வை!

திவா

2009/2/17 வேந்தன் சரவணன் <vaen...@gmail.com>:

kamaladevi aravind

unread,
Feb 16, 2009, 10:36:24 PM2/16/09
to minT...@googlegroups.com
இந்த எழுத்தாளரின் கதையில் அரிசி கொண்டு வருவேன் என்றுதானே காண்கிறேன்.
நிங்ஙள் எப்படிக் கூறுகிறீர்கள். புரியவில்லையே.
கமலம்----- Original Message ----
From: Tirumurti Vasudevan <agni...@gmail.com>
To: minT...@googlegroups.com
Sent: Tuesday, February 17, 2009 11:27:38 AM
Subject: [MinTamil] Re: help me please,

S Subramanian

unread,
Feb 17, 2009, 8:46:49 PM2/17/09
to minT...@googlegroups.com
It is not arisi and umi but aval and umi. The saying goes as "nI aval koNDu vA, nAn umi koNDu varugirEn. iraNDaiyum nanRAgak kalandu aLLi eDuttu Udhi Udhi iraNDu pErum thinbOm". As you see this is a one-sided deal--one person cheating the other. The proposition appears to make equal (?) contribution while in fact it is a deception.
Subramanian

2009/2/16 kamaladevi aravind <gokul...@yahoo.com>

Geetha Sambasivam

unread,
Feb 24, 2009, 3:24:14 AM2/24/09
to minT...@googlegroups.com
கமலம்,
ஏப்பை, சாப்பை என்றால் - ஏமாந்தவன் இல்லை என்ற அர்த்தத்தில் சொல்லப் படுகின்றது.
 
கோக்கு, மாக்கு வேலை - ஏமாற்றுவது, பொய் சொல்லி ஏமாற்றுவது, பொய்யை நிஜம் போல் சொல்லி ஏமாற்றுவது
 
நான் அரிசி கொண்டு வருவேனாம், நீ உமி கொண்டு வருவாயாம்- இது கொஞ்சம் தப்பாச் சொல்லி இருக்கீங்க,
 
சரியானது நான் உமி கொண்டு வருவேன், நீ அரிசி கொண்டு வருவே, அல்லது அவல் கொண்டு வருவே, இரண்டு பேரும் ஊதி, ஊதிச் சாப்பிடுவோம்= நான் என்னுடைய பங்காக எதுவும் செய்ய மாட்டேன், ஆனால் செய்யும் வேலையின் பாராட்டோ, லாபமோ எதுவாய் இருந்தாலும், நல்லவையில் எனக்கும் பங்கு உண்டு. ஆனால் அதற்காகக் கஷ்டப் படவேண்டியது நீ மட்டுமே என எதிராளியை மறைமுகமாய்ச் சுட்டுவதற்கே = அதுக்குத் தான் நீ அவல் கொண்டுவா என்று சொல்லப் படுகின்றது.

2009/2/17 kamaladevi aravind <gokul...@yahoo.com>

kamaladevi aravind

unread,
Feb 24, 2009, 7:38:15 PM2/24/09
to minT...@googlegroups.com
கீதா,
இது ஞான் கண்டு பிடித்த வரிகளல்ல. சிங்கையில் வாழும் தமிழர்கள் யாருமே இப்படிப்பேசுவதில்லை, என்று தமிழறிஞர் ஒருவர் கூறினார்.
ஞான் தெறிவு செய்த சிறுகதையில்
அரிசி  கொண்டு வருவேன் நீ, உமி கொண்டு வருவாயாம் என்றுதான் உள்ளது.
இத்தனைக்கும் கிராமிய ச்சூழலில் வாழ்ந்த எழுத்தாளர், அவர் தப்பிதமாய் எழுதிய காரணம் எனக்குப்புரியவில்லை.
ஆனாலும் இச்சிறுகதையை ஞான் தேர்வு செய்துள்ளென்.     [அந்த உவமானைத்தை எடுத்துவிட்டு, ]
அவ்வளவு அருமையாக கதைப்பின்னலை வடிவமைத்துள்ளார். மலையாள இதழில் ஞான் எழுதிவரும் தொடர்கட்டுரையின் தமிழாக்கம் எண்டெ வலைப்பதிவில் உள்ளது.
கீதா, மொழிபெயர்ப்பில் உள்ள பெரும் விஷயம், முதலில் மொழியை அப்படியே நாம் உள்வாங்கிக்கொள்ளவேண்டியது. அப்படி உள்வாங்கவேண்டுமாயின் அவர்களின் , மொழியாடல் தெளிவாயிருக்கவேண்டும் .மூன்று தலைமுறைக்கதைகளை ஆய்வு செய்யும்போது, அவர்களின் வீச்சு அபாரம். ஆனால் சல்லோ, பில்லோ என்றுள்ள  வசனங்கள் தான் தலை சுற்ற வைக்கிறது.
 இதை இன்றைய பல எழுத்தளர்கள் ஏனோ மறந்துபோகிறார்கள்.
மின்தமிழில் உதவிய நிங்ஙள் அனைவருக்கும் நன்றி
கமலம்From: Geetha Sambasivam <geetha...@gmail.com>
To: minT...@googlegroups.com
Sent: Tuesday, February 24, 2009 4:24:14 PM

Subject: [MinTamil] Re: help me please,

Va.Mu.Se. Kavi Arasan

unread,
Feb 24, 2009, 7:56:12 PM2/24/09
to minT...@googlegroups.com
கமலம் 

நீங்கள் கூறிய தொடர்களில் சில  என் தந்தையார் ’சிவ தாண்டவம்’  ஆடும் போது பயன்படுத்துவார்.
 
அவர் சாந்தமானவுடன்  ”ஆசுகவியே”  நீங்கள் கோபத்தில் எமக்குச் செய்த அர்ச்சனைகள் எந்த இலக்கியத்தில் கண்டெடுத்தீர்கள் என்பதற்கு அவரின் பதில் என் பெற்றோர் எனக்குச் செய்த அர்ச்சனைகளில் சில மகனே என்பதே.....
 
நீங்கள் கூறிய மூன்றும் “கிராமியச் சூழலில்”  வெகுவாகப் பயன்படுத்தப் படுகின்றன.   1960-70களில் இருந்த முகவை மாவட்டத்தில் இந்தப் பயன்பாடு அதிகமாக இருந்ததாகவும் அறிகின்றேன்.
 
காலச் சூழலில் அது மாற்றப் பட்டதா என்பதறியோம்.
 
அன்புடன்
.கவி.
 
--- On Tue, 2/24/09, kamaladevi aravind <gokul...@yahoo.com> wrote:

Geetha Sambasivam

unread,
Feb 24, 2009, 7:58:47 PM2/24/09
to minT...@googlegroups.com
//1960-70களில் இருந்த முகவை மாவட்டத்தில் இந்தப் பயன்பாடு அதிகமாக இருந்ததாகவும் அறிகின்றேன்.//
 
தென் மாவட்டங்களில் இப்போதும் புழக்கத்தில் இருக்கின்றன.

2009/2/25 Va.Mu.Se. Kavi Arasan <kavia...@yahoo.com>
Reply all
Reply to author
Forward
0 new messages