வட்டார வழக்கு: வேலூர் /திருவண்ணாமலை பேச்சு வழக்கு

435 views
Skip to first unread message

நரசிங்கபுரத்தான்

unread,
Oct 9, 2017, 11:23:06 PM10/9/17
to mintamil

மின் தமிழ் அறிஞர்களுக்கு வணக்கம் .

மின்  தமிழில்  ஏற்கனவே 

வட்டார வழக்கு: திருநெல்வேலி பேச்சு வழக்கு

எனும் இழை பார்த்தேன் .
சமீபத்தில்  நெல் வேய்த்தல்    எனும் சொல்குறித்து எழுதியது மேலும் பல பேச்சு வழுக்கு சொற்களை தொகுக்கும் எண்ணத்தை அளித்தது .

பல்லவர்  / சோழர் /  பாணர் /சம்புவராயர் / ஓய்சாளர்  / விஜயநகர அரசு  /சுல்தான்கள்  /மராட்டிய அரசு / நவாப் 

என பல்வேறு அரசாட்சிகளின் விளைவும் ஆந்திர  /கர்நாடக  எல்லையில் இருப்பதாலும் வட்டார தமிழ் கலவையாகவே உள்ளது .



வேய்த்தல் - நெல் வேக வைய்த்தல் 
 அறபார்த்தால் - அறுவடை 
அண்டை வெட்டுதல் - வரப்பின் ஓரம் வெட்டுதல் 
 கடை மடுக்குதல் - ஆடுகளை இரவில் வயலில் தங்க வைத்து உரமாக்குதல் 
 கேவுரு - கேழ் வரகு 
 கலக்காய் - வேர் கடலை 
 மாங்காய் பெத்தை - மாங்காய் துண்டு 
 மானாவாரி - வானம் வாரி  ( மழை நீர் மட்டும் )
கழிநாட்டு தண்ணீர்  - மாட்டுக்கு வைக்கும் நீர் (சமையல் கழிவு நீர் )
நீச்ச தண்ணீர் - அரிசி வடித்த நீர் 
மம்டி - மண் வெட்டி 
தொறடு - முறுக்கை காய் அறுக்கும் கொக்கி 
கல்லோட்டு - களை வெட்டி 
பிரி விடுதல்  - வைக்கோல் கொண்டு கயிறு போல் திரித்தல் 
வெக்கி - வைக்கோல் 
உரை - தானியங்களை சேமிக்கும் பெட்டி 
பரனை - பரண் 
பிரமனை - பானை அடியில் விழாமல் வைய்க்கப் படும் ஓர் வளையம் 
நோம்புதல் - கேழ்வரகில் இருந்து கல் எடுத்தல் 
புடைத்தல் - அரிசி ,பருப்பில் கல் நீக்குதல் 
அருவாமனை - அரிவாள் 
ஆய்ப்ப - கரண்டி 
கல் சட்டி - பருப்பு கடைய தேவையான சட்டி 
மாவு ருப்புதல் - இட்லி மாவு அரைத்தால் 
கருக்கு மட்டை - பனை மட்டை 
குடு கட்டை - பனம் காய்  கூடு 
சம்சாரி - இல்லான் 
பொம்னாட்டி- இல்லாள் 
ஆச்சா - முடிந்ததா 
கருக்கல் - கார் வானம் 
ஜாட்டி - சாட்டை 
மரக்காய் - நெல் அளவிடும் அளவுகோல் 
ஜோபி - சட்டைபை 
குட் டை - துண்டு 
சீதளம் - ஜல தோஷம் 
முண்டகலப்பை - முனை மங்கிய கலப்பை ( பொதுவாக அறிவிலி என திட்ட )
மக்கிளி - மக்கு ( மற்கலி கோசலர் அழிப்பினால் வந்தது )

தொடரும்.....


சுரேஷ்குமார் 








Suba

unread,
Oct 10, 2017, 3:56:07 AM10/10/17
to மின்தமிழ்
தொடருங்கள்.

தொகுப்பாக்கி இணைத்து வைப்போம்

சுபா

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Dr.K.Subashini
http://www.subaonline.net - எனது பக்கங்கள்
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி


 

நரசிங்கபுரத்தான்

unread,
May 3, 2018, 8:24:17 PM5/3/18
to mintamil
தொடர்ச்சி 




ஜோடுதால் - சொம்பு 
தேவுசா - தண்ணீர் சேகரிக்கும்கலன் 
அண்டா -  சேகரிக்கும்கலன்  பெரியது 
தோண்டி -தண்ணீர் சேகரிக்கும் சிறிய கலன் 
சீசா -கண்ணாடி குடுவை 
மாடத்தாள் - மாடம் 
எருமட்டை - வரட்டி
கோணி - சாக்குப்பை 
ஜமக்காலம் -விரிப்பான்
துப்புட்டி -போர்வை 
ஈறுகோலி - பேன் எடுக்கும் சீப்பு 
சீமாட்டு - தலையில்  எடை தூக்கும் முன் வைக்கும் மடிக்கப்பட்ட துண்டு 
தொட்டிலில் போடுதல் - குழந்தைக்கு பெயரிடும் நிகழ்வு 
புட்டு சுத்துதல் - பூப்பெய்தல் 
ஒப்பு தாம்பாளம் - நிச்சயதார்த்தம்  ( எளிய முறையில்)
நிச்சய தாம்பாளம் -நிச்சயதார்த்தம்
முகூர்த்தம் - திருமணம் 
காரியம் - இறந்தவருக்கு செய்யும் சடங்கு
ஒரகுத்தி - கணவனின் சகோதரன் மனைவி 

சுரேஷ்குமார் 
தென்கொரியா 

தேனீ

unread,
May 5, 2018, 8:25:23 AM5/5/18
to மின்தமிழ்
நன்றி திரு. சுரேஷ்.

இச்சொற்களை எங்கள் மூதாதையர் கிராமங்களில் பயன்படுத்துவதைக் கண்டுள்ளேன்.

தங்கள் பதிவினால் அச்சொல் குறிக்கும் பொருளை புரிந்து கொள்வது சுலபமாக உள்ளது. நன்றி.

நரசிங்கபுரத்தான்

unread,
May 8, 2018, 8:26:46 PM5/8/18
to mintamil
நன்றி உயர்திரு தேனீ ஐயா 
Reply all
Reply to author
Forward
0 new messages