எனக்கு நம்பிக்கை இல்லை ஐயா.
இது பிற்காலம் - சரஸ்வதி மகால் ஓலையில் இருந்தது. அதைப் படித்து ஒருவர் மனனம் செய்து வைத்திருந்தார். அவரை எழுத வைத்து வெளியான நூல் என்பது கட்டுக்கதைபோல இருக்கிறது.
1. ஐந்திரம் என்ற நூல் இருந்திருந்தால் இலக்கியங்களில் எவரேனும் குறிப்பிட்டிருப்பர்
2. பிற இலக்கியங்களில் ஐந்திரம் வரிகள் மேற்கோள்களாகக் கொடுக்கப்பட்டு இருந்திருக்கும்.
இந்த இரண்டும் முறைகளும் வரலாறு நெடுகிலும் தமிழறிஞர் கண்களில் தட்டுப்படாமல் இருந்திருக்காது ...
இலக்கியத் தமிழறிந்தவர், தமிழ் ஆய்வாளர், பேராசிரியர் ஆன நீங்கள் நீங்கள் அறிந்திருந்தால் சொல்லுங்கள்
அந்த ஓலைச் சுவடிகளாவது இருந்தால் காட்டட்டும், கார்பன் டேட்டிங் செய்து படி எடுக்கப்பட்டு எழுதப்பட்டிருந்த ஓலை எக்காலம் என தொடக்கப்புள்ளி வைக்கலாம்
அர்த்த சாஸ்திரம் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள், அதுவும் தஞ்சை மகாலிலிருந்தது கிடைத்தது என்று ஒருவர் சொல்லி வெளிப்பட்டது என்றும் படித்த நினைவு.
நம்பிக்கை வரவில்லை